எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் -6

6


அவ உயிரோட வந்ததே போதும்னு தான் அப்போதைக்கு நினைச்சேன்.


ஆனா அதன் பிறகு தான் ஏன் வந்தான்னு கவலைபடற அளவுக்கு சோதனைகள் வந்தது.


பழசு எல்லாமே மறந்து போய் குழந்தை மாதிரி மீண்டு வந்தா..?


நான் தான் அவளோட அம்மானு அவளை நம்ப வைக்கவே நான் படாதபாடு பட்டேன்.


கடைசியில் என்னை அம்மானு கூப்பிட ஆரம்பிச்சா.. யாரைப் பார்த்தாலும் பயம்.. சரியா பேச வரலை.. டாக்டர்கிட்ட ஏன் இப்படின்னு கேட்டதற்கு.. அவளுக்கு நடந்த பயங்கரத்துல இருந்து மெது மெதுவாதான் வெளியே கொண்டு வர முடியும்.. அதுக்கு நிறைய செலவாகும் உங்களால் செலவு பண்ண முடியும்னா சொல்லுங்க நான் சில மருத்துவர்களை பரிந்துரைக்கறேன்.


அவங்களை போய் பாருங்க சீக்கிரமா குணமாகி வந்திடுவான்னு சொன்னாரு என் கிட்ட அவ்வளவு பணம் இல்லை அதனால என்னால அவளுக்கு முழுசா வைத்தியம் பார்க்க முடியல.. கையில இருந்த கொஞ்ச பணத்தை வைத்து வைத்தியம் பார்த்தேன்.. பிறகு விட்டுட்டேன்.


கையில் பணம் இருப்பு குறையவும் சாப்பாட்டுக்கு பிரச்சனை ஆயிடுச்சு வேலைக்கு போக வேண்டிய கட்டாயம் எனக்கு தெரிஞ்சுது எல்லாம் காட்டு வேலை தான் அவளை கூட்டிட்டு ஆரம்பத்துல வேலைக்கு போனேன்.


ஆனா அவ அங்க எல்லாத்தையும் பாத்து பயந்து கத்தி என்னை வேலை பார்க்க விடாமல் வீட்டுக்கே கூட்டிட்டு வந்துடுவா.


சரி வீட்ல விட்டுட்டு வேலைக்கு போலாம்னு பார்த்தா வீட்டு பேர்ல கடன் கொடுத்தவனும், சாராயகடையில் கடன் கொடுத்தவனும் கூட்டு சேர்ந்துகிட்டு என் பொண்ணு கிட்ட மறுபடியும் வம்பு பண்ணிருக்கானுங்க.


அவனுகளை பார்த்ததுமே இவ பயங்கரமா கத்த ஆரம்பிச்சிட்டா அக்கம்பக்கத்துல இருந்தவங்க அவனுகளை விரட்டிவிட்டு என் பொண்ணை காப்பாத்தி எனக்கு தகவல் சொல்லி அனுப்பினாங்க.


உயிரைக் கையில் புடிச்சுகிட்டு ஓடி வந்து பார்த்தேன்.


அப்போ தான் எனக்கே தெரிந்தது ..அவனுக்கு ரெண்டு பேரும்தான் ஸ்கூல் முடிச்சு வெளிய வந்த பிள்ளையை தூக்கிட்டு போயி காயப்படுத்தி தப்பா நடந்துக்க முயற்சி பண்ணின விஷயம்.


அவனுக கிட்ட போய் நியாயம் கேட்டா என்னை அடிச்சு விரட்டிட்டாங்க இந்த ஏழையால என்ன பண்ண முடியும்.. அழுதுகிட்டே வந்துட்டேன்.


எப்படி இருந்தாலும் உன் பொண்ணை முதல்ல அனுபவிக்க போறது நாங்க தான்..வாங்கின கடனுக்கு உன் பொண்ணை தூக்கியே தீருவோம் கடன் முடியற வரைக்கும் வச்சிட்டு தான் உன்கிட்ட கொடுப்பேன்னு என்கிட்ட சவால் விட்டாங்க எனக்கு பயம் வந்திடுச்சி.


வயசு பொண்ணை‌ எத்தனை நாள் வீட்ல வச்சி பாதுகாக்க முடியும்.. இவ தெளிவா இருந்தா கூட நம்பி விட்டுட்டு போகலாம் இவளுக்கு யாரு வீட்டுக்கு வராங்க யார் போறாங்க என்கிறது கூட தெரியாது யாராவது ஏதாவது பண்ணி வச்சா கூட அவளுக்கு என்ன நடந்ததுன்னு சொல்ற அளவுக்கு கூட விவரம் பத்தாது.


அதனால தான் என் தம்பி அவன் வீட்டுக்குள்ள என்னை சேர்த்தலன்னாலும் பரவால்ல என் பொண்ணுக்கு ஒரு அடைக்கலம் கொடுத்தா போதும்னு நேரா அங்க வந்துட்டேன்.உமையாளை‌ பாதுகாப்பான இடத்துல விட்ட பிறகு தான் நிம்மதியா இருக்கேன் .


அத்தை உன்கிட்ட கேக்குறது ஒன்னே ஒன்னு தான் கடைசி வரைக்கும் என் பொண்ணுக்கு ஓரு அடைக்கலம் மட்டும் கொடுப்பா..


உரிமை இருக்கிற அத்தை பெண்ணா வேண்டாம் உன் வீட்டு வேலைக்காரியா இருந்தாலே போதும் அவ பாதுகாப்பா மானத்தோட உயிர் வாழ்ந்த அதுவே எனக்கு போதும்..என கையெடுத்து கும்பிட்ட படி கேட்டார்.


முதல்ல கையை இறக்குங்க அத்தை எனக் கோபமாக அவர் கைகளை இறக்கி விட்டவன் முதல்ல நான் கேட்கிறதுக்கு பதில் சொல்லுங்க.


அவனுக்கு ரெண்டு பேரும் தான் உமையாள் கிட்ட தப்பா நடந்துக்கிட்டாங்கன்னு உங்களுக்கு யார் சொன்னது..?


அவனுகளே தான் சொன்னது.. அன்னைக்கு தப்பிச்சிட்ட இன்னைக்கு மாட்டிகிட்டியானு சொல்லி இருக்காங்க அதை அக்கம் பக்கத்தில் இருக்கிறவங்க கேட்டுட்டு என்கிட்ட சொன்னாங்க.


நீங்க ஏன் போலீஸ் ஸ்டேஷன் போகல..?


அவனுக்கெல்லாம் பெரிய ஆளுங்கப்பா அவர்களை மீறி என்னால என்ன பண்ண முடியும்..? நான் போலீஸ்,கேஸ்னு போனா என் முன்னாடியே உமையாளை தூக்கிட்டு போயிடுவாங்க..


அதும்மில்லாம கை நீட்டி வேற மாமா காசு வாங்கிட்டாரு.. அதை உடனே குடுன்னு வந்து நின்னா நான் எங்க போவேன்.


அதுக்காக வீட்டு பொண்ணை விட்டு குடுப்பீங்களா..?கோபத்தில் முகம் சிவந்தது.


அய்யோ என பதறியபடி காதுகளை மூடிக்கொண்டவர் நான் அந்த அர்த்தத்தில் சொல்ல வரல கதிர் அவங்களை மீறி என்னால எதுவும் செய்ய முடியாது அதைத்தான் சொல்ல வந்தேன் .


அது நேத்து வரைக்கும் அத்தை இப்போல இருந்து அப்படி கிடையாது நாளைக்கு காலையிலேயே அவர்களை நான் பாக்கணும்னு சொல்லுங்க அவங்களோட கணக்கா மொத்தமா செட்டில் பண்ணறேன்னு சொல்லிடுங்க அதை சொல்லும் பொழுது அவனது பற்கள் அரைப்பட்டது.


மறுநாள் காலை விடிந்த உடனேயே கதிரில் கட்டாயத்தின் பெயரில் வள்ளி கடன் கொடுத்தவர்களுக்கு தகவல் சொல்லி அனுப்பினார்.


அவர்களும் ஆள் அம்பாரிகளுடன் வள்ளியின் வீட்டிற்கு வந்தனர்.


அதற்கு முன்பாகவே உள்ளூர் காவல் நிலையம் சென்றவன் உமையாள் பற்றிய விஷயங்களையும் தனது மாமனின் மர்ம மரணத்தை பற்றிய விஷயங்களையும் கூறி முறைப்படி எஃப் ஐ ஆர் பதியம்படி கேட்டுக் கொண்டான்.


அவன் சந்தேகப்படும் நபர்கள் ஊரில் பெரிய ஆட்கள் அதனால் காவல் நிலையத்தில் பதிவு செய்ய பயந்தனர் ஆனால் கதிரோ அவனது பின்புலத்தைப் பற்றி கூறியவன் அடுத்த நிமிஷமே கமிஷனர் அலுவலகத்திற்கு அழைத்து விட்டான்.. அத்தோடு இல்லாமல் மாவட்ட கலெக்டருக்கும் அழைத்து நிலவரத்தை தெரிவித்து விட்டான்.. அந்தப் போலி பெரிய மனிதர்கள் கைது செய்யப்படும் போது ஏதாவது பிரச்சனை வந்தால் நான் பார்த்துக்கொள்கிறேன் என அவர் உறுதியளிக்கவும் வேறு வழி இல்லாமல் அவர்கள் வழக்கு பதிவு செய்தனர்.


பிறகுதான் வள்ளி கூட்டி இருக்கும் பஞ்சாயத்திற்கு வந்தான்.பணம் கொடுத்தவர்கள் என்று சொல்லிக்கொண்டவர்கள் ஒரு பத்திரத்தை காண்பித்து இத்தனை பணம் உன் மாமன் வாங்கி இருக்கிறான் அதற்கான சாட்சி அவராகவே சுயநினைவுடன் எங்களுக்கு எழுதிக் கொடுத்த இந்த பத்திரம் என காண்பித்தார்கள்.


அதை கையில் வாங்கி பார்த்தவன் அதில் பெரியத்தொகை இருக்கவும் அத்தையை பார்த்து இந்த அளவு வாங்கி இருப்பார்ன்னு நினைக்கிறீர்களா? என கேட்டான்.


தெரியலையே கதிர் அவர் கொஞ்சம் ஊதாரி தான் வாங்கியிக்க வாய்ப்பிருக்கு என உண்மையை ஒத்துக் கொண்டார் பத்திரத்தை காண்பித்தவர்களுக்கோ எதிலோ ஜெயித்து விட்ட மனப்பாங்கு திமிருடன் என்ன பட்டணத்து தம்பி நாங்கல்லாம் சொன்னா நம்ப மாட்டீங்களோ..?என நக்கலாக கேட்டான்.


மற்றோருவனோ நாங்க பணத்த வசூல் பண்றதுல வேணும்னா கொஞ்சம் முன்ன பின்ன இருப்போம் ஆனால் கொடுத்த காசுக்கு என்னைக்குமே பொய் கணக்கு எழுதினது இல்ல என்று தெனாவட்டாக கூறினான்.


சரி என்பது போல தலையசைத்த கதிர் நல்லது என்றான்.


பிறகு அவர்கள் கேட்ட தொகையை செக்காக எழுதி அவர்களது கையில் கொடுத்தான் .


இது என்னோட பர்சனல் அக்கவுண்டில் இருந்து கொடுக்கிற செக் பத்து மணிக்கு மேல தாராளமா பேங்க்ல போய் எடுத்துக்கலாம் என்று சொல்லவும் சந்தோஷமாக அந்தச் செக்கை கையில் வாங்கியவன் செக் பவுன்ஸ் ஆயிடாதே அப்படி ஆச்சு இடம் தேடி வந்து அடிப்போம் என்று கோபமாக உரைத்தபடியே அந்த செக்கை வாங்கி சட்டை பையில் பத்திரப்படுத்தினான்.


அதுவரை பொறுமையாக வேடிக்கைப் பார்த்த கதிர் அடுத்த நொடியே அவனின் கையை பிடித்து வேகமாக பின்பக்கம் முறுக்கி கையை உடைத்தாள்.


தடுக்க வந்த மற்றொருவனையும் அடுத்த கையால் அதேபோல் செய்ய கூட்டமே ஸ்தம்பித்தது.


கூட வந்த ஆட்கள் கதிரை அடிக்க பாயவும் இரண்டு கைகளிலும் இருவரது கைகளையும் முறுக்கிப் பிடித்திருந்தவன் எவனாவது பக்கத்துல வந்தீங்க இவனுக்கு ரெண்டு பேரும் உயிரோடு இருக்க முடியாது என்று கர்ஜித்தவன்.. எல்லாரும் பின்னாடி போங்கடா இது எனக்கு இவனுங்களுக்கும் இருக்கிற கொடுக்கல் வாங்கல் பிரச்சனை கணக்கை முடிக்கனும்னு முடிவு பண்ணிட்டா எல்லாத்தையும் முழுசா செட்டில் பண்ணிடனும் எதுவும் குறை வச்சிக்க கூடாது என்று பற்களை கடித்தபடி பேசியவன் இருவரையும் பின்பக்கமாக உதை விட்டு கீழே தள்ளி விட்டான்.


பிறகு இரு கைகளாலும் இருவரையும் தூக்கி நிறுத்தியவன்

ஏண்டா கொடுத்த காசு வரலைன்னா வீட்ல இருக்குற பொண்ணு மேல கை வைப்பீங்களா..?


பணத்தை வசூல் பண்றதுக்கு உங்களுக்கு வேற வழி தெரியல ஈனப்பிறவிகளா..?


எவ்வளவு தைரியம் இருந்தால் என் வீட்டு பொண்ணு மேலையே கை வைத்திருப்பீங்க இந்த கைதானடா என்று மற்றொரு கையையும் உடைத்து விட்டான்.. அவர்கள் வலியில் துடிக்க அவனது தாண்டவத்தை பார்த்து யாருமே அருகில் வரவில்லை.

அசால்டாக இருவரையும் சமாளித்தான்..பக்கத்தில் யார் சென்றாலும் அவர்களுக்கும் இதே நிலை எனப் புரிந்தவர்கள் பயந்து கொண்டு வேடிக்கை மட்டுமே பார்த்தனர்.


ஸ்கூல் போற பொண்ணுகிட்ட உங்க ஆம்பளை தனத்தை காட்டுனீங்கல்ல இப்போ நான் வந்திருக்கேன் என்கிட்ட காட்டுங்கடா உங்களோட வீரத்தை என மேலும் அவர்களை அடித்தான்.


என் வீட்டு பெண்ணை ஒரு தடவை கொலை முயற்சி பண்ணி இருக்கீங்க இன்னொரு தடவை வீட்டுக்கே வந்து உங்க திமிரை காமிச்சு இருக்கீங்க.. உங்களை சும்மா விட்டுட்டு போனா நாளைக்கு அவ தெளிவான பிறகு என்னை ஆம்பளைன்னு மதிக்க மாட்டா என்று அவர்கள் இருவரையும் உதைத்து தள்ளியவன் அவர்களின் வேட்டியை கழட்டி இருவரையும் கட்டி நடுரோட்டிலேயே போட்டு ஊரை வேடிக்கை பார்க்க வைத்தான்.


இனிமேல் இவன்களை மாதிரி எவனாவது பணத்திற்காக பொண்ணுங்க மேல கை வைச்சிங்க உங்களுக்கும் இதான் கதி.. கொடுத்த பணத்தை வசூல் பண்ண ஆயிரம் வழி இருக்கு.. அதைவிட்டுவிட்டு பெண்ணை அசிங்கப்படுத்தி தான் வசூல் பண்ணுவீங்கன்னா நீங்க மனுஷங்களே இல்லடா..என்று உரைத்தவன் காவல் நிலையத்திற்கு அழைத்துவிட்டு அவர்களின் வரவிற்காக காத்திருக்க ஆரம்பித்தான் .


அதுவரை ஊரில் உள்ள எளிய மக்களுக்கு பணத்தை கொடுத்து ஏய்த்துக் கொண்டிருந்த இரண்டு பேரும் ஜட்டியுடன் ரோட்டில் கிடக்க ஊரே அவர்களை வேடிக்கை பார்த்தது.. ஒரு ஜனம் கூட அவர்களுக்கு உதவ வரவில்லை.


அந்த இரண்டு பேருக்குமே வயது முப்பதிற்குள் தான் இன்னும் திருமணம் ஆகவில்லை ஒருவனுக்கு திருமணம் நிச்சயம் செய்யப்பட்டிருக்கிறது மற்றொருவனுக்கு பெண்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் இனி அவர்களுக்கு என்றுமே திருமணமாகப் போவதில்லை அதே போல் ஊர்மக்கள் முன்பு போன மானமும் திரும்பி வரப்போவதுமில்லை.


தரையில் கிடந்து அவமானத்தில் துடித்தார்கள்


வள்ளி தனது தம்பியின் மகனை பிரம்மிப்புடன் பார்த்துக் கொண்டிருந்தார்.


நேற்று இரவு சாதாரணமாக தன்னிடம் பேசிய அப்பாவி மருமகனா இவன் என ஆச்சரியம் காட்டினார்..கதில் நல்ல உயரம் அதற்கேற்ற கம்பீர தோற்றம்.. தினமும் உடற்பயிற்சி செய்வதால் கட்டுமஸ்தான உடல்வாகை கொண்டவன்.


ஆனாலும் முகம் மட்டும் சாந்தமாக இருக்கும்.. பார்வை மட்டுமே ஆராய்ச்சி செய்யுமே தவிர யாரையும் அச்சப்படுத்தாது சென்னையில் நல்ல குடும்பத்தில் நல்ல சூழலில் வளர்ந்ததால் எந்த வம்பு தும்புக்கும் போகாதவன்.


தானாகவே வந்தாலும் விலகிச் செல்பவன் அதற்காக தன் வீட்டுப் பெண்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் பார்த்துக்கொண்டு மௌனம் சாதிக்கும் அளவிற்கு ஆண்மை அற்றவன் கிடையாது என்பதை ஊர் முன்பும் அத்தையின் முன்பும் நிரூபித்துக் கொண்டிருக்கிறான்.


கருப்பு நிற பேண்ட், பளிச் வெள்ளை சட்டை அணிந்திருந்தவன் இரண்டு பட்டனை கழட்டி விட்டிருக்க முழுக்கை சட்டையை கை முட்டி வரை மேல இழுத்து விட்டுக்கொண்டு கையில் உருட்டு கட்டையுடன் நாற்காலியில் கால் மீது கால் போட்டு கம்பீரமாக அமர்ந்திருந்தவனின் தோற்றம் தன் மக்களுக்கு ஒரு பிரச்சனை என்றால் முன் நின்று போராடும் போராளி போல இருந்தது.


வள்ளிக்கு மட்டுமல்ல அந்த ஊருக்கே அவன் ஒரு ஐய்யனாராக காட்சி கொடுத்துக் கொண்டிருந்தான் என்றால் மிகையாகாது.


சற்று நேரத்தில் காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு வந்து கூட்டத்தை கலைத்துவிட்டு சம்பந்தப்பட்டவர்களை கைது செய்தனர்.


விசாரணைக்கு நீங்களும் வர்றது போல இருக்கும் என சம்பிரதாயமாக கூறினார்கள்.


அவர்களுக்குத் தெரியும் கண்டிப்பாக இந்த இருவர் மீதும் சட்டப்படி நடவடிக்கை எடுக்காவிட்டால் கதிர் விடப்போவதில்லை அதனால் எதற்கு வம்பு சிறிய அளவு ரவுடிகளுக்கு பயந்து கொண்டு கதிர் போன்ற ஆளுமையான மனிதனைப் பகைத்துக் கொள்ள அவர்கள் என்ன முடிடாளா..?


எந்த இடத்தில் அதிக பசை‌ உள்ளதோ அந்த பக்கம் சாய்வது கொள்வது தான் புத்திசாலித்தனம் என காவலர்களும் நினைத்தனர்.


அதுவரை பயந்து மரியாதை கொடுத்துக் கொண்டிருந்த இருவரையும் மரியாதை இல்லாமல் நடத்தியபடி அழைத்துச் சென்றனர்.


ஒரு வழியாக பிரச்சனை முடிந்தது ஊரில் அதுவரை நாட்டாமை செய்து கொண்டிருந்த இரு நரிகளை பாடையில் ஏற்றி பல்லக்கில் அனுப்பியாகிவிட்டது.


வள்ளி அப்பாடா என நெஞ்சில் கைவைத்து நிம்மதி பெருமூச்சு விட்டார் பிறகு கதிரின் அருகில் வந்து அப்பா கொஞ்ச நேரத்துல சுடலைமாடன் வேட்டைக்கு போற மாதிரி ஆக்ரோஷமா ஒரு ஆட்டம் போட்டு முடிச்சிட்ட..


இந்த ஊரு இப்போதைக்கு இதை‌ மறக்காது இன்னும் பல தலைமுறை உன் வீரத்தை பத்தி பேசிக்கிட்டே இருக்கும் என்று சொன்னவர்.


நீ ரொம்ப நல்லா இருக்கணும் கதிர்.. என் தம்பி எனக்காக எதுவுமே செய்யலையே என்கிற வருத்தத்தை ஒரே நிமிஷத்துல போய்கிட்ட இனிமே உமையாள் இங்க இருக்கிறதால எனக்கு எந்த பயமும் வராது.


அங்கிருந்து உங்க யாரையும் அவளும் கஷ்டப்படுத்த வேண்டாம் நானே வந்து உமையாளை‌ அழைச்சிக்கிறேன்.


இந்த தடியனுகனால தான் பிரச்சனை ..அதையும் நீ சரி செஞ்சிட்ட.

இனி என் பொண்ணுக்கு எந்த பிரச்சினையும் இல்லை என்று சந்தோஷமாக கூறினார்.


கதிருக்கு அப்பொழுதுதான் உமையாள் சொன்ன விஷயம் ஞாபகத்திற்கு வந்தது.


ஊர்ல இப்படி தான் அந்த அண்ணா சாக்லேட் கொடுத்து..!!! என அவள் சொன்னது நினைவிற்கு வந்தது .


அத்தை எனக்கு ஒரு விஷயம் சொல்லுங்க நீங்க வேலைக்கு போகும்போது உமையாள் இங்க தனியா இருப்பா அந்த சமயத்துல வீட்டுக்கு யாராவது வந்து போவாங்களா..?


என் வீட்டுக்கு யாரு வர போறாங்க உமையாள் வீட்டில் இருப்பது போல இருந்தா அக்கம்பக்கத்து வீட்டுக்காரங்க கிட்ட சொல்லிட்டு போவேன் என்றவர்.


தீடிரென .

ஹான் பக்கத்து வீட்டுல ஒரு தம்பி இருக்காரு எனக்கு அப்பப்போ ஏதாவது சின்ன சின்ன உதவி செய்வார்.

பல சமயத்துல உமையாள் தனியா இருந்தா அவளை பாத்துக்கனும்னு வேலைக்கு கூட போகமாட்டான்..நல்ல பையன்.. நான் பெறாத பிள்ளை மாதிரி என் வயிற்றில் பிறந்திருந்தா கூட இப்படி ஒரு தங்கமான பையனை‌ பார்த்திருக்க முடியாது என பெருமை பேசினார்.


அந்த தங்கத்தை நான் கொஞ்சம் பார்க்கணுமே என கேலி போல கூறினாலும் அதில் உறுதி இருந்தது.


சற்று நேரத்திற்கெல்லாம் பின் இருபதுகளில் இருக்கும் ஒரு இளைஞன் வேகமாக கதிரை சந்திக்க வந்தான்.


முகத்தைப் பார்த்தால் அப்பாவி போல தெரிந்தது ஆனால் அந்தக் கண்களில் விஷமம் நிறைந்து கிடந்தது.


தொழிலில் எத்தனையோ ஜாம்பவான்களை சந்தித்த கதிருக்கு அந்த தங்கத்தை எடை போட அதிக நேரம் எல்லாம் ஆகவில்லை பசித்தோல் போர்த்திய புலி என்பதை நொடியில் உணர்ந்து கொண்டான்.


வாங்க மிஸ்டர் தங்கம் என ஆர்பாட்டமாக வரவேற்றவன்.. என் அத்தை உங்களை ஆகா ஓகோனு புகழ்றாங்க அதைக் கேட்டதுமே எனக்கு உங்களை பாக்கணும்னு ஆர்வம் நொடியில் பத்திக்கிச்சு இப்போ திருப்தி ஆயிடுச்சு என எள்ளலாக கூறினான்.


கதிர் நிஜமாகவே புகழ்கிறான் என நினைத்து சிலிர்த்தவன் நான் அப்படி என்ன சார் பண்ணிட்டேன் நீங்க பண்ணினதை தான் ஊர் பூரா பேசிட்டு இருக்காங்க இத்தனை நாள் எங்க ஊருக்குள்ள ரவுடித்தனம் பண்ணிட்டு இருந்தவங்களை ஒரே நாளில் அடக்கி ஸ்டேஷன்ல உட்கார வச்சுட்டீங்களே பலே சார் நீங்க என்ன இருந்தாலும் பட்டணத்துக்காரங்களுக்கு இருக்கற தைரியம் எங்களை மாதிரி கிராமத்துக்காரங்களுக்கு வர்றதில்லை என ஜால்ரா தட்டினான் .


இருவர் பேச்சிலும் கலந்து கொள்ள விரும்பாத வள்ளி நீங்க பேசிட்டு இருங்க நான் குடிக்க ஏதாவது எடுத்துட்டு வரேன் என உள்ளே நகர போனார்.


அவரை தடுத்து நிறுத்திய கதிர் அத்தை நாங்க இன்னும் முக்கியமான விஷயம் பேசவே ஆரம்பிக்கல அதை உங்க முன்னாடி பேசினா தான் ரொம்ப சரியா இருக்கும் என்றவன்..அப்படித்தானே மிஸ்டர் தங்கம் என கேட்கவும்.


சார் என் பெயர் சபரி எனத்திருத்தினான்.


ஓ சரி சரி இப்ப சொல்லுங்க சபரி அழுத்தமான குரலில் பேசினான்.


சார் நீங்க தான் எதோ முக்கியமா பேசணும்னு சொன்னீங்க..


ய்யா..என்றவன் முகத்தை கடினமாக்கிக்கொண்டு உமையாளுக்கு அடிக்கடி சாக்லேட் வாங்கி தருவீங்களாம் எனக்கெல்லாம் வாங்கி தரமாட்டீங்களா.. வார்த்தைகள் கூர்மையாக வெளி வந்தது.


முகம் வெளிற வார்த்தை திணறியது..சார் என்ன சார் ..ஏதேதோ பேசறீங்க என்ற படி பின்னால் நகர்த்தவன் ம்மா நான் போறேன் என வெளியேற முயற்சித்தான்.

வள்ளிக்கு ஒன்றுமே புரியவில்லை.


டேய் நில்லுடா கதிரின் குரல் கட்டளையாக ஒலித்தது.


அந்தக் குரலை தாண்டி செல்லும் தைரியம் சபரிக்கு வரவில்லை அப்படியே அசையாமல் நின்று விட்டான் முகம் வேர்த்து கொட்ட உடல் நடுங்க அவனது நடுக்கத்தை வெளிக்காட்டாமல் இருக்க பெரும்பாடு பட்டான்.


நான் கேட்டதுக்கு பதில் சொல்லிட்டு போ உமையாளுக்கு மட்டும் தான் சாக்லேட் வாங்கி தருவியா? ஏன் எனக்கெல்லாம் சாக்லேட் வாங்கி தரமாட்டியா எனக்கேட்டவன்..


நெற்றியில் கை வைத்து யோசித்தபடியே ஓஓஓ மறந்தே போயிட்டேன்.. உமையாள் தாவணி போட்டிருப்பா நான் பேண்ட் சர்ட்ல போட்டு இருக்கேன் நான் வேணும்னா ரெண்டு பட்டனை‌ கழட்டி காண்பிக்கவா என சட்டை பட்டனை கழட்டவும் அப்படியே கதிரின் காலில் விழுந்து விட்டான்.


சார் மன்னிச்சிடுங்க சார் ஏதோ தெரியாம என்று கெஞ்சவும் .


சட்டையை பிடித்து தூக்கி நிறுத்தியவன் என்னடா தெரியாம என கன்னத்தில் மாறி மாறி அறைவிட்டவன் .


இந்த கைதான..தாவணியை‌ விலக்கிச்சி..என முறுக்கியவன்..அவனது கதறலை காது கொடுத்து கேட்கவேயில்லை.. கதிரின் சத்தம் கேட்டு மீண்டும் வள்ளியின் வீட்டு வாசலில் கூட்டம் கூடியது.


சார் எல்லாரும் வேடிக்கை பாக்குறாங்க சார்.. ப்ளீஸ் சார்.. விட்டுட்டு சார்.. இனி பண்ண மாட்டேன் என வலிக்கு நடுவே மீண்டும் கதிரிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான் சபரி.


பாக்கட்டும் நல்ல வேடிக்கை பார்க்கட்டும் அப்போதான் உன்னை மாதிரி ஆளுகளை எல்லாம் வீட்டுக்குள்ள விடக்கூடாது என்கிற விஷயம் பெண் பிள்ளையை பெத்து வச்சிருக்கறவங்களுக்கு புரியும்.


யாருக்கும் தெரியக்கூடாது..! அவங்க என்ன நினைப்பாங்க..! இவங்க என்ன நினைப்பாங்கன்னு வீட்டுக்குள்ளேயே மூடி வச்சா வீட்டுக்கு ஒருத்தன் உன்னை மாதிரி கேடுகெட்ட வேலையை‌ பண்ணிக்கிட்டே தான் இருப்பான் என்று சொன்ன கதிர் அடுத்த நொடி அவனது ஐந்து விரலையும் இவனது விரலால் கோர்த்து பின் பக்கமாக வளைக்க ஆரம்பித்தான்.


இந்த விரல் தானே சில்மிஷத்துல ஈடுபட்டுச்சி..


ஆஆஆஆ..


கத்து..நல்லா கத்து..சத்தம் பத்தாது..என்று சிரித்தவன் வீட்டு பொண்ணை உன்

பாதுகாப்புல விட்டுட்டு வேலைக்கு போறாங்கன்னா எவ்வளவு நம்பிக்கை வச்சிருப்பாங்க..?


அந்த தாய்க்கு நீ என்னடா பண்ணின..தான் யாருன்னு தெரியாதவகிட்ட சாக்லேட் கொடுத்து தப்பா நடந்துக்க முயற்சி பண்ணியிருக்க..


அவளுக்கு அதை சரியாக சொல்ல கூட தெரியல .. அந்த தைரியத்துல தான நீ உன் சபலத்தை வெளிகாட்டிருக்க..?


நீ பண்ணின காரியம் அவ மூலமா வெளியே வராது என்கிற தைரியம் தானே‌‌ உன்னை அப்படி செய்ய வைத்தது.. அவளுக்காக நான் வந்து இருக்கேன் இப்போ காட்டு உன் தைரியத்தை..!


சபரி..உண்மை என்னைக்கு இருந்தாலும் வெளியே வந்து தான் தீரும் புரியுதா என்று அவனது விரல்களை விட்டவன்.. பின்புறமாக தள்ளியும் விட்டான்.


கையும் விரல்களும் ஒன்று சேர உடைய தொங்கிப்போன கையை‌ தூக்க முடியாமல் தரையில் கிடந்தவனை அருவருப்பாக பார்த்தபடியே வள்ளியிடம் சென்ற கதிர்


அத்தை இப்போ இங்க என்ன நடந்ததுன்னு கொஞ்சமாவது புரியுதா என கூர்மையாக கேட்டவன்.


நக்கலாக

இனி நீங்க பெறாத பத்திரமாத்து தங்கத்துக்கு நீங்க பார்த்து என்ன கொடுத்தாலும் எனக்கு சந்தோஷமே என்று நகர்ந்து கொண்டான்.


வள்ளிக்கு வந்ததே கோபம் வீட்டு சுவற்றில் மாட்டி இருந்த முறத்தை எடுத்து சபரியை சாத்த தொடங்கினார்.


ஏண்டா பாவி பாவி உன்ன நம்பி என் பொண்ணை விட்டுட்டு போனா நீ அவகிட்ட உன் வக்கிரத்தை காட்டிருக்க.


இதுல தங்கச்சி.. பாப்பான்னு வேற உருகறது.


அதுக்கு எல்லாம் அர்த்தம் என்னன்னு தெரியுமாடா உனக்கு என்று‌ கை வலிக்கும் வரை அடித்து அவனை விரட்டி விட்டார்.


வேடிக்கை பார்த்த ஜனமெல்லாம் சபரியின் செயலைக் கண்டு காரி உமிழ்ந்தனர் ஊருக்குள்ள ரொம்ப யோக்கியன் மாதிரி நடந்துகிட்டு என்ன வேலை பார்த்து இருக்கான் பாருங்க இந்த காலத்துல எந்த புத்துக்குள்ள எந்த பாம்பு இருக்குன்னே தெரியலை..எவனையும் நம்பி வீட்டுக்குள்ள மட்டும் சேர்த்துக்க கூடாது என அதுவரை ஊரில் சபரி வாங்கி வைத்திருந்த நல்ல பெயரை நொடியில் போகும் படி செய்தான் கதிர்


வீட்டிற்குள் மூலையில் அமர்ந்தபடி வள்ளி புலம்பத்தொடங்கினார்.


கிளிக்கு காவலா கருநாகத்தை வச்சிட்டு நான் வெளியே போயிருக்கேன் நல்லவேளை கருநாகம் என் வீட்டு கிளியை முழுசா முழுங்குறதுக்கு முன்னாடி காப்பாத்திட்டேன்.. எப்படியோ நீ கண்டுபிடிச்சதனால இந்த அயோக்கியனை பத்தின விஷயம் இன்றைக்காவது தெரிந்தது இல்லன்னா என்னைக்குமே தெரியாமலே போயிருக்கும் என்று அழுதார் .


அவர் அருகில் வந்தவன் அத்தை யாரை வேணாலும் வீட்டுக்குள்ள விடலாம் ஆனால் அவங்க மேல எப்பவும் ஒரு கண்ணை வச்சுக்கணும் நாம அவங்க மேல வைக்கிற அதிக நம்பிக்கைனால மத்த விஷயங்களை கவனிக்க தவறிடறோம்.


நீங்க அவனை உமையாளோட பாதுகாப்புக்கு விட்டதோ நம்பினதோ தவறு கிடையாது.. கொஞ்சம் கூடுதல் கவனத்தை உமையாள் மேல வைத்து இருந்திருக்கனும்.


அவ கூட நீங்க அதிகமா பேச்சி குடுத்திருந்தா அவளே உங்களுக்கு புரிய வச்சிருப்பா..சரி விடுங்க நடந்ததெல்லாம் நடந்துப்போச்சி.

இனி அதைப்பற்றி பேச வேண்டாம்.


இனி நடக்க போறதை பாக்கனும் இல்லையா அதனால என் கூட ஊருக்கு கிளம்புங்க என்றான்.
 
Top