எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 09

admin

Administrator
Staff member

அத்தியாயம் 9​

வெறும் டிபார்ட்மெண்ட் ஈவெண்ட் என்று எவருமே சொல்ல முடியாத அளவிற்கு சிறப்பாக செய்து இருந்தனர் அகரனின் ஈவெண்ட் டீம். வேளாளர் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரி.. வேளாளர் கலை மற்றும் அறிவியல் கல்லூரி, வேளாளர் மகளிர் கல்லூரி என்று மொத்தம் மூன்று கல்லூரிகளும் ஆச்சரியப்படும் அளவிற்கு இருந்தது அக்னி தலைமையில் நடந்த டிபார்ட்மெண்ட் ஈவெண்ட்.​

இதில் ஈவென்ட் ஆர்கனிஷின் உழைப்பு பாதி என்றால் மீதி அக்னியின் உழைப்பு மட்டுமே... காலையில் புட் கோர்ட்டில் ஆரம்பித்து மாலையில் டிஜே வரைக்கும் கலக்கி இருந்தனர்.​

கல்லூரி ஈவெண்ட் பொறுப்பை அரவிந்தனிடமே ஒப்படைத்து விட்டான் அகரன். எப்படி செய்திருக்கிறான் என்ற மேற்பார்வைக்கு கூட கல்லூரி வரவில்லை. அது தம்பியின் மீதிருந்த நம்பிக்கையாலா? இல்லை அக்னியைப் பார்க்கவேக் கூடாது என்ற எண்ணத்திலா? ஏதோ ஒன்று அவன் கல்லூரி பார்க்கமே எட்டிப் பார்க்கவில்லை.​

மூன்று கல்லூரியின் தலைமை ஆசிரியர்களும் அரவிந்தனைப் பாராட்டி விட்டு சென்றாலும் அண்ணனின் வாய்மொழி கேட்க ஆசைக் கொண்டவன் அகரனை கல்லூரிக்கு அழைத்தான். அவனது நச்சரிப்பை தாங்க முடியாதவனாய் இரவு டிஜே மியூசிக்கு மட்டும் வருவதாய் கூறி இருந்தான் சொன்னது போலவே டிஜே பார்டிக்கு வந்திருந்தான்.​

பச்சை, நீலம், சிவப்பு நிற வண்ண விளக்குகளின் ஒலியிலும் இரவின் இதத்திலும், டிஜேயின் அதிரடி பாடல்களிலும், மாணவர்களின் ஆட்டத்திலும் களைக்கட்டியது அவ்விடம்.​

மொத்தமாய் அனைத்தையும் கவனித்தப்படி வந்தவன் கண்கள் தானாகவே மின் விளக்கின் ஒளியில் இடைத் தாண்டிய கேசத்தை ஒற்றைக் கையால் கோதியப்படி அமர்ந்திருந்தவளின் மீது விழுந்தது.​

எத்தனை கம்பீரம், எத்தனை நிமிர்வு பெண்ணிடத்தில். இருந்தும் ஏதோ ஓர் எச்சரிக்கை உணர்வோடும், கலக்கத்தோடும் அமர்ந்து இருப்பது போல் தோன்றியது அகரனுக்கு.​

ஆம் உண்மையாகவே எச்சரிக்கை உணர்வோடு தான் அமர்ந்து இருந்தாள். அக்னி தலைமையில் நடக்கும் ஈவெண்ட் மட்டுமல்லாமல் இரவு நேரத்தில் நடக்கும் ஈவெண்ட் என்பதாலேயே அத்தனை எச்சரிக்கையாய் இருந்தாள்.​

இதுநாள் வரையிலும் கல்லூரியில் இரவு நேரங்களில் எவ்வித விழாக்களும் நடைபெற்றது இல்லை. இம்முறை அக்னியின் வேண்டுகோளுக்கு இணங்க இரவு பத்து மணி வரை மட்டுமே ஈவெண்ட் நடக்க ஒப்புக் கொண்டிருந்தனர்.​

தற்போது வரையிலும் சரியாக தான் அனைத்தும் சென்று கொண்டிருக்கிறது. இன்னும் அரைமணி நேரம் மிதம் இருக்கிறதே அந்த நிமிடங்கள் சரியாக செல்ல வேண்டுமே என்ற எண்ணம் அவளையும் மீறி மனதில் எழுந்து கொண்டே இருந்தது.​

இங்கு அவளது முகத்தில் தெரிந்த கலக்கத்தை பார்த்தவனுக்கு 'அவளிடம் என்னவென்று கேட்போமா...' என்ற எண்ணம் தோன்றியது.​

அதே கணம் அன்றைய அவளது பேச்சு நினைவு வந்து தொலைக்க, மனதில் எழுந்த எண்ணத்தை அப்படியே புதைத்து விட்டு அரவிந்தை அழைத்து அவளிடம் விசாரிக்க கூறினான்.​

அகரனை மேலிருந்து கீழாகப் பார்த்தவன் "எனக்கு அப்படி ஒன்னும் தெரியலையே உனக்கு மட்டும் எப்படி தெரியுது..." எனக் கேட்டான்.​

"அநாவசியமா கேள்விக் கேட்காம சொன்னதை செய்..." என்றவனை விசித்திரமாக பார்த்துவிட்டு அக்னி பெண்ணை நோக்கி நடந்தான்.​

"ஹாய் மிஸ் வாவ் கேர்ள். இன்னைக்கு ஏன் நிலாவே வரல தெரியுமா..." ஆர்ப்பாட்டமாக கேட்டபடி அவளுக்கு முன்னிருந்த இருக்கையில் அமர்ந்தான் அரவிந்த்.​

"ஹாய்...அரவிந்த்..." என்றவள் அவனது அநாவசியக் கேள்வியை ஸ்கிப் செய்துவிட்டு "தேங்க்ஸ் அரவிந்த். ரொம்ப செக்யூரா கொண்டு போறீங்க அண்ட் நாங்க எதிர்பார்த்ததை விட சூப்பரா பண்ணிட்டீங்க. தேங்க்ஸ் அ லாட்..." என்றாள் மெல்லிய புன்னகையோடு.​

அவளது பேச்சில் நெஞ்சில் கை வைத்து "அண்ணாவோட கைட் இல்லாம நானே பண்ண போற என்னோட ஃபர்ஸ்ட் வொர்க்ன்னு உங்ககிட்ட சொல்லியும் என்னை நம்பி இந்த ஈவெண்ட்டை குடுத்தீங்க. அதுக்காக நான் தான் தேங்க்ஸ் சொல்லணும் மிஸ் வாவ் கேர்ள்..." என்றான்.​

முகத்தில் மாற புன்னகையோடு​

"அது, உங்க அண்ணாக்கு தான் நீங்க தேங்க்ஸ் சொல்லணும் அரவிந்த். அவர் தான் உங்களை நம்பி வொர்க் குடுத்து இருக்கார். அண்ட் இதுல என்ன மிஸ்டேக் வந்திருந்தாலும் நான் உங்க அண்ணாவை தான் கேட்டு இருப்பேன். உங்களை கேட்டு இருக்க மாட்டேன்..." என்றாள்.​

"இருந்தாலும் நீங்க வேண்டாம்னு சொல்லிருந்தா அண்ணா என்னை மட்டுமே பார்க்க சொல்லிருக்க மாட்டான். சோ உங்களுக்கு தேங்க்ஸ்." என்றான் சிரிப்போடு. அவனது நன்றியை ஏற்றுக் கொண்டவளாய் இமை மூடி திறந்தாள்.​

அக்கணம் அரவிந்தின்​

அலைபேசி குறுஞ்செய்தி வந்ததற்கான அறிகுறியாய் மின்னி மறைந்தது. அகரன் தான் கோப எமோஜியை அனுப்பி இருந்தான்.​

'இந்த ஆன்டி ஹீரோ தொல்லை தாங்க முடியல டா சாமி...' மனதில் புலம்பிக் கொண்டே​

"ஆமா, இன்னைக்கு ஏன் நிலா வரல தெர்மா..." என ரகமாய் கேட்டான். அவன் விடப் போவதில்லை என்று நினைத்தவள் ஏன் என்பதை போல் புருவத்தை உயர்த்தி கேள்வியாக பார்த்தாள்.​

"ஏன்னா? அதுக்கு ரீப்லேஷ்மெண்ட் தான் நீங்க இருக்கீங்களே..." எனக் கூற, 'நீ இதைத்தான் கூறுவாய் என்று எதிர்பார்த்தேன்..' என்பது போல் பார்த்தாள்.​

பாவையின் பார்வையில் சத்தமாக சிரித்தவன் "ஹாஹா... உண்மை சில நேரம் கசக்குமாம் வேற வே இல்ல நீங்க அதை ஏத்துக்க தான் வேணும். அண்ட் உண்மையாவே உங்க ஃபேஸ் இன்னைக்கு நிலவை போல தான் இருக்கு. அதுல இருக்கிற கலங்கக்தை போலவே உங்க முகத்திலயும் ஒரு கலக்கம் நல்லாவே தெரியுதாம் என்னவாம்..." கேட்டான்​

"பார்ரா, யாருக்கு அப்படி தெரியுதாம்..." .​

"வேற யாரு, என் அண்ணன் தான் சொன்னான். அண்ட் அவன் தான் உங்ககிட்ட கேட்டுட்டு வர சொன்னான், சரி சொல்லுங்க என்னாச்சு..."எனக் கேட்டு சரியாக அகரனையும் கோர்த்து விட்டான்.​

இத்தனை நேரம் சென்டி மீட்டரில் விரிந்த மங்கையின் இதழின் சிரிப்பு மில்லி மீட்டர் அளவிற்கு குறைந்து போக அரவிந்தை அமைதியாக பார்த்தாள்.​

அவளது அமைதியில் "என்கிட்ட சொல்ல விருப்பம் இல்லைன்னா என் அண்ணாகிட்டயே சொல்லுங்க எனக்கு ஒரு பிரச்சனையும் இல்லை மிஸ்..." என்றவன் அவளது பதிலை எதிர்பார்க்காமல் தூரத்தில் மற்ற ஆசிரியர்களுடன் பேசிக் கொண்டிருந்த அகரனை அழைத்தான்.​

"இவனை..." என்று பல்லைக் கடித்தாலும் அடுத்த நிமிடம் அவர்களிடம் வந்திருந்தான்.​

"அந்த நிலவுல தெரியற கலங்கம் உங்க முகத்துலையும் தெரியுது அது என்னனு எங்க அண்ணன் கேட்க சொன்னான், சொல்லுங்கன்னு கேட்டேன். அவங்க என்கிட்ட சொல்ல மாட்டாங்களாம். அந்த நிலவுல கலங்கம் இருக்குன்னு கண்டுபிடிச்ச உன்கிட்ட தான் சொல்லுவாங்களாம் என்னனு நீயே கேட்டுக்க..." என்றவனை நேரடியாக முறைத்தவன் அக்னியை பார்த்தான்.​

' உனக்கெல்லாம் பதில் சொல்ல வேண்டுமா...' என்பதை போல் அலட்சிய பார்வையை வீசிவிட்டு திரும்பிக் கொண்டாள்.​

அதில் கடுப்பானவன் "அமாவாசை நிலவுக்கு கலங்கம் வரது அதிசயமா இருந்துச்சு சோ கேட்க சொன்னேன். பட் இப்ப..." அலட்சியமாக தோளை குலுக்கி "எனக்கு கேட்க விருப்பம் இல்லை..." என்று கூறியவன் அவ்விடத்தை விட்டு நகரவும்​

"அமாவாசை அன்னைக்கு நிலவை தேடினவன் கண்ணுல கொள்ளியை வைச்சா எல்லாம் சரியா போய்டும்..." என்ற அரவிந்த்தின் குரல் கேட்கவும் சரியாக இருந்தது.​

சட்டென திரும்பி அரவிந்தை முறைந்தவன் வேக நடையோடு அங்கிருந்து நகர்ந்தான். "ஐயோ கோபமா போறானே..." என்று பதறியவன் அக்னியிடம் தலையாட்டிவிட்டு அகரனின் பின்னால் ஓடினான்.​

"அண்ணா டேய் நில்லு டா..." அழைத்தவன் அடுத்த நிமிடத்தில் அகரனின் முன் நின்றான்.​

ஓடி வந்ததில் மூச்சு வாங்கியவனாய் "நானும் ஊட்டில இருந்தே உன்னையும், அவங்களையும் கவனிச்சிட்டு தான் இருக்கேன். என்னவோ பண்றீங்க இரண்டு பேரும். உங்களுக்குள்ள அப்படி என்ன ஓடுது..." எனக் கேட்டவனை பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்தவன்​

"ஒரு மண்ணும் ஓடல வழியை விடு..." என்றுவிட்டு அங்கிருந்து நகர்ந்தவனை இடுப்பில் கைவைத்து பார்த்தான் அரவிந்த்.​

இங்கு அரவிந்தை விட்டு விலகி நடந்தவன் நினைவுகள் முழுவதும் பின்னோக்கி நகர்ந்தது.​

****​

அதிகாலை குளிருக்கு இதமாக சூடான மூச்சுக் காற்றும் பெண்மையை தீண்டி சென்றது...​

"புவி..." என்ற அழைப்பு அவளின் உறக்கத்தை களைக்கவில்லை போல முகத்தை தலையணையில் புரட்டி மறுபக்கம் தலையை திரும்பினாள்.​

பஞ்சு தலையணையில் உரோமங்கள் இருக்குமா என்ன? அவளது ஆழ் மனம் கேள்வி எழுப்பியது அதற்கு அவள் விடைத் தேடும் முன்பே​

"புவி, ம்ம் மட்டும் சொல்லேன். இப்பவே உனக்குள்ள என்னை புதைச்சுக்கிறேன்..." என்ற கேள்வியை தொடர்ந்து பாவையின் இதழின் கடையோரத்தில் அழுத்தமாக பதிந்து மீண்டது சூடான ஈர இதழ்கள்.​

"ம்ம்..." என்றவள் கன்னத்தை தலையணையில் அழுத்தினாள். ஆனால் அது? ஆழ் மனதின் கேள்விக்கு பதில் கிடைத்தது போல... சட்டென உறக்கம் களைய விழிகளை மலர்த்தினாள். மங்கையின் விழிகளை நிறைத்தது ஆடவனின் நெற்றியில் படர்ந்த கேசம்.​

"ஐயோ..." என்று மனம் பதறய நொடியில் இரவில் நடந்த அனைத்தும் தாமதமாக கண் முன் விரிந்தது.​

அவசரமாக அவனைவிட்டு பிரிந்து விலகியவளுக்கு இன்னும் இன்னும் அதிர்ச்சி தரும் விதமாக இரவு களைக்கப்பட்ட உடைகளை அவள் உடுத்தி இருந்தது தான்.​

கண்களை அகல விரித்து "என்னை என்ன பண்ண நீ..." தற்பொழுது ஆடவன் செய்த காரியத்தை மறந்தவளாய் கேட்டாள்.​

"என்ன? என்ன பண்ணேன்..." இரவு கேட்ட அதே தோரணை அவனிடத்தில். அவனது குறும்பு பேச்சில் பல்லைக் கடித்தவள் அவனுக்கு பதில் சொல்லாமல் திரும்பிக் கொண்டாள்.​

"புவி..." உறக்கத்தில் கேட்ட அதே மென்மையான குரல் அவளது காதில் ஒலித்தது. சட்டென திரும்பி ஆடவனைப் பார்த்தாள். அவனோ புருவத்தை ஏற்றியிறக்கி என்ன என்பதைப் போல் பார்த்தான்.​

"என்ன..." எனக் கேட்டாள்.​

"என்ன? என்ன? என்னடி?..." என்றான் அத்தனை குறும்பு அவனது குரலில்.​

"மிஸ்டர் அகரன் திஸ் அ லிமிட், டி சொல்ற வேலையெல்லாம் வைச்சுக்காதீங்க... அந்த உரிமையை நான் உங்களுக்கு தரவே இல்லை..." வெடுக்கென கூறினாள்.​

' நான் உங்களுக்கு அந்த உரிமையை தரவே இல்லை...' என்ற வார்த்தை இவனது கோபத்தை தூண்டி விட போதுமானதாக இருந்தது.​

"ஏன் புதுசா வந்தவனுக்கு எல்லாத்தையும் கொடுத்திட்டியா..." என நக்கலாக கேட்டான். அவன் கேட்ட விதம் இவளுக்கு அத்தனை கோபத்தை கொடுத்தது.​

"ஆமா எல்லாத்தையும் கொடுக்க முடிவு பண்ணிட்டேன்..." திமிராக கூறிவிட்டு திரும்பிக் கொள்ள பல்லைக் கடித்தான்.​

"எல்லாத்தையும்ன்னா?..." அவளை மேலிருந்து கீழாக பார்த்தபடி புருவத்தை உயர்த்தி கேட்டான். அவனது பார்வையில் கூசி போனது பெண்ணின் தேகம் அதை அவனிடம் காட்டிக் கொண்டால் அவள் அக்னி இல்லையே...​

"நீங்க எந்த எல்லாத்தையும் மீன் பண்ணி சொன்னீங்களோ அந்த எல்லாத்தையும் தான்..." அழுத்தமாக கூறிவிட்டு திரும்பிக் கொண்டாள்.​

அந்த அழுத்தம் அகரனை அரக்கனாக்கியது "கழுத்துல நான் கட்டுன தாலி சுமந்துட்டு படுக்கையில் இன்னொருத்தனை சுமக்க ரெடியாகிட்ட அப்படி தானே..." அத்தனை ஏளனமாக கேட்டான்.​

' நீ அவ்வளவு தான். உங்கிட்ட இப்படியான பேச்சு வரலைன்னா தான் அதிசயம்...' என்ற அலட்சிய பார்வையை அவனுக்கு பதிலாக கொடுத்துவிட்டு திரும்பிக் கொண்டாள். அவளது அலட்சிய பாவனை அரக்கனாக இருந்தவனை அசுரனாகவே மாற்றியது.​

"சொல்றீ... அடுத்தவனை சுமக்க ரெடியானவ இன்னும் எதுக்கு நான் கட்டுன தாலியை கழுத்துல வைச்சுட்டு இருக்க... கழட்டி குடு டி..." என்றான் துளியும் இரக்கமில்லாமல்.​

"வாட்? நீ கட்டுன தாலியை நான் சுமந்துட்டு இருக்கேனா? எனக்கென்ன பைத்தியமா பிடிச்சிருக்கு நீ கட்டுன கயிறை இன்னும் என் கழுத்துல சுமந்துட்டு இருக்க?..." அத்தனை அலட்சியமாக கூறியவளை கொலைவெறியோடு பார்த்தான்.​

"அப்ப இது என்னடி..." எனக் கேட்டது மட்டுமல்லாமல் அவளது மார்ப்போடு உறவாடிக் கொண்டிருந்த தாலி கயிற்றை வெளியில் எடுத்துப் போட்டான்.​

அவனது செயலில் அதிர்ச்சியானவள் அடுத்த நொடி அவனது கன்னத்தில் அறைந்திருந்தாள். அடுத்தகணம் ஆடவனது கரங்களும் மங்கையின் கன்னத்தை பதம் பார்த்திருந்தது.​

காரிகையின் கன்னத்தை கொஞ்சம் அழுத்தினாலும் கை தடம் பதிந்து விடுமோ என்று பதறியவன் தான் இப்போது காயத்தை கொடுத்திருந்தான்.​

கேசத்தை அழுத்திக் கோதிக் கொண்டவனின் மனம் அவனை வெகுவாய் குற்றம் சாட்டியது. அக்கணம் அரக்கன், அசுரன் இருவரும் மாயமாய் மறைந்து போக நொடியும் தமாதிக்காமல் மங்கையை மார்போடு இழுத்து அணைத்து கொண்டான்.​

அவனது அணைப்பில் திமிறிக் கொண்டே "ஒரு பொண்ணை கை நீட்டி அடிக்கிற எவனையும் நான் ஆம்பளையாவே மதிக்கறது இல்லை. இனி நீயும்..." வார்த்தையில் அக்னியை வாரி வீசிக் கொண்டிருந்தவளின் இதழ்களை வன்மையாக தன் இதழ்களுக்குள் அதக்கி கொண்டது மட்டுமல்லாமல் பாவையின் அனைத்து மறுப்புகளையும் சுலபமாக தகர்க்கவும் செய்தான்.​

 

Jothiliya

Member
அகரன்னுக்கு இன்னும் அகம்பாவம் திமிரும் போகல அக்கினியை அனல் ஆக்குக்கிறான் அவன் வர்த்தயால்
 

Priyakutty

Active member
எதுக்கு அந்த தாலி போட்ருக்காங்க... இவ்ளோ மோசமா நடத்துற அவர் போட்ட தாலி அவசியமா... அதுவும் அன்னைக்கு கொடுத்துட்டாங்க தான இது என்ன... வேறையா 🤔 வேணாம் சொல்லிட்டு இது என்ன... 🙄
 
Last edited:
எதுக்கு அந்த தாலி போட்ருக்காங்க... இவ்ளோ மோசமா நடத்துற அவர் போட்ட தாலி அவசியமா... அதுவும் அன்னைக்கு கொடுத்துட்டாங்க தான இது என்ன... வேறையா 🤔 வேணாம் சொல்லிட்டு இது என்ன... 🙄
ஹாஹா அவ அப்பாக்கலக போடறேன் சொல்றா பாவம்... என்ன செய்ய
 
Top