எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மெய் காதல் பொய்யாகுமா?

santhinagaraj

Well-known member
#மெய்காதல்_பொய்யாகுமா

#விமர்சனம்

நல்ல ஒரு ஃபீல் குட் ஸ்டோரி.

தன் உடன்பிறை வேலை செய்யும் சிவாவின் மீது காதல் கொண்டு அவனிடம் தன் காதலை செல்கிறாள் திவ்யா.

சிவா காதல்,கல்யாணத்தை வெறுத்து எனக்கு எதுவும் வேணாம் பிடிக்கல என்று சொல்ல திவ்யா விடாது கல்யாணம் பண்ண சொல்லி கேட்டுக் உனக்கு ஏன் கல்யாணம் பிடிக்கல என்ன காரணம் என்று கேட்கும் போது அவனோட பாப்புவை பற்றியும் அவனோட ஒருதலை காதலை பற்றியும் சொல்றான்.

சிவா திவ்யா காதல் பிரச்சினை இப்படி இருக்க

இந்தப் பக்கம் விவேக கல்யாணத்தின் மீது நிறைய கனவுகளோடு அப்பா அம்மா சொல்ற மதனை கல்யாணம் பண்ணிக்கிறா. ஆனா விவேகாவின் கனவில் மண்ணை அள்ளி கொட்டின போல இருக்கிறது மாதனோட குணம்.

சிவா திவ்யா காதல் பிரச்சனை என்ன ஆச்சு? விவேகாவோட வாழ்க்கை என்ன ஆகுது?என்பது மீதி கதை.

மதன் இவனோட குணமும் விவேகாவிடம் நடந்து கொள்ளும் முறையும் ரொம்ப கோபத்தை வர வைக்குது 😡😡

விவேகா மதனுக்கு கொடுக்கும் பதிலடிம் அவனுக்கு கிடைக்கும் தண்டனையும் ரொம்ப நல்லா இருந்தது.

சிவா ஒரு நண்பனா,ஒரு காதலனா, ஒரு நல்ல மகனா இவனோட கேரக்டர் ரொம்ப அருமையா இருந்தது.

ஸ்டோரி ரொம்ப நல்லா இருந்தது சின்ன சின்ன எழுத்து பிழைகள் இருந்தது அதை திருப்பிக்கோங்க

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top