எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தேன்மிட்டாய் காதலி

santhinagaraj

Well-known member
#தேன்மிட்டாய்_காதலி

#விமர்சனம்

சுதா ராணி தனது காதலனை தேடி போக இரவு நேரத்தில் பஸ் ஸ்டாப்பில் நிற்க அப்போது அங்கு வரும் போலீசார் அவளை சந்தேகத்தில் அழைத்துச் செல்லகின்றனர்.

போலீசாரிடம் தனது காதலனை தேடி கோயம்புத்தூர் போவதாகவும் தான் அங்கு நின்றதற்கான காரணத்தையும் ரொம்ப தைரியமாக சொல்ல..போலீஸார் நாங்களும் அங்க தான் ஒரு மாநாட்டிற்கு பந்தோபஸ்திற்கு செல்கிறோம். உன்னையும் நாங்களே அங்க கூட்டிட்டு போறோம் வா என்று கூட்டிட்டு போறாங்க.

போலீசார் காவலுக்கு போகிற அந்த மாநாட்டில் சில ம*த**வெ*றி பிடித்தவர்கள் வெ**டிகு**ண்டு வைக்க பிளான் பண்றாங்க.

சுதா அவளோட கோவமும் அவசரமும் தான் அவளுக்கு பிரச்சனையே.ஒரு பொருள் இருக்கும்போது அதன் அருமை தெரியாது அது போல தான் திவாகர் பின்னாடியே சுத்தும்போது அவளுக்கு அவனோட காதல் புரியவில்லை.

திவாகர் ஆரம்பத்தில் கோவத்தில் செய்தது தப்பா இருந்தாலும் சுதா மீது அவனின் ஆழமான காதல் அதை மறக்க வைக்கிறது.

சுதா ராணி அவளின் காதலனை கண்டுபிடித்தாளா?குண்டுவெடிப்பு என்ன ஆனது? திவாகருக்கு என்ன ஆச்சு என்று கதை ரொம்ப விறுவிறுப்பாக இருந்தது.

ஒரு நாள் பழக்கம் என்றாலும் ஜான்சியுடன் நட்பு சூப்பர்.

வாழ்த்துக்கள் 💐💐

(எழுத்துப் பிழைகளை தவிர்த்து இருந்தால் கதை இன்னும் அருமையாக இருந்திருக்கும்
நிறைய எழுத்து பிழைகள் இருக்கு அதை சரி பண்ணுங்க )
 
Top