எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 20

NNK-01

Active member
இதயக்கனி 20:

கடந்துக்காலத்தை கடந்து வந்த பின்னும் மனதினில் சில கசப்புகள் இருக்கத்தான் செய்கின்றன.

அன்றைய பின்னான சண்டையில் கனியரசனின் குடும்பம் வெளியேறிய அடுத்த நொடி மீண்டும் இங்கே ஒரு சண்டை வெடித்தது.

வாணியும் வசந்தியும் தங்கள் பிறந்த வீடு அவமானப்பட்டு சென்றதற்கு நியாயம் கேட்க அதற்கு அவரது கணவன்கள் ஒத்து ஊத பதிலுக்கு வெற்றியும் இதயாவும் அவர்களுக்கு நிதர்சனத்தை புரியவைக்க என மேலும் மேலும் சண்டைகள் வர ஆரம்பிக்க வீரவேலிற்கும் வள்ளியம்மையும் தங்களுக்குள் அடித்துக் கொள்ளும் மகன்களை கண்டு மனமுடைந்து தான் போயினர்.

அதன் பின் அண்ணன்கள் வெற்றியையும் அவர்களது மனைவிகள் இதயாவையும் தள்ளி வைக்க முற்றிலும் அவர்களிடம் இருந்து தள்ளி நின்றனர் வெற்றியும் இதயாவும்.

வெற்றி அடுத்த நாள் பெங்களூர் கிளம்பி சென்றவன் தான் அதன்பிறுகு வருடங்கள் கடந்தும் அவன் மதுரைக்கு வரவில்லை.

ஆரம்பத்தில் வீம்புடன் இருந்த அண்ணற்கள்ஸ இருவருக்கும் வருடங்கள் கடக்க கடக்க மனம் உடன்பிறந்தவனை தேட ஆரம்பித்தது. இதில் இதயா வேறு அவர்களை தள்ளி நிறுத்த‌ அவர்கள் செய்த தவறு புத்தியில் உரைக்க செய்த தப்பிற்கு தண்டணை அனுபவித்தனர்.

விடியல் அழகாய் விடிந்தது அவரவர் எண்ணங்களை பொறுத்து.

விடிந்ததும் முதல் வேலையாக பூமிகாவை வண்டி எற்றி விட்டிருந்தனர்.

“பூமி!!!” அவள்‌ கிளம்பும்‌‌ முன் வெற்றி அவனை அழைத்து நிறுத்த,

“இங்க நடந்த எதையும்….” என அவன் முடிக்காமல் இழுக்க,

“இங்க நடந்த எதையும் நான் தப்பா எடுத்துக்கலை வெற்றி! எனக்கு தெரியும் இது எல்லாம் அவுங்க பொண்ணு நிராகரிக்கப்பட்டுட்டான்ற கோபமும் ஆதங்கமும் தான்.

நீ இன்னுமே அன்னைக்கு சூழ்நிலைய இன்னும் கொஞ்சம் அமைதியா கையாண்டுருக்கலாம். நீ நெனைச்சிருந்தா இவ்வளவு பெரிய பிரச்சனை நடக்காம தடுத்திருக்கலாம்” என்க,

“பூமி ஐ வாஸ் டிரைட்! உனக்கு தெரியுமா அன்னைக்கு நான் எவ்வளவு பொறுமையா இருந்தேன்னு அப்போ கூட என்னோட மறுப்பு ராஜியோட வாழ்க்கைக்கு எந்த வித பாதிப்பையும் ஏற்படுத்திடக் கூடாதுன்னே அவ்வளவு யோசிச்சேன்.

ஆனா நானும் சராசரி மனுஷன் தானோடா! என்னால எவ்வளவு தான் அமைதியா இருக்க முடியும்? என்னோட அமைதியையும் பொறுமையையும் உடைச்சு எறியிற மாதிரி தான் இருந்தது அவுங்க பேச்சு”

“புரியுது வெற்றி ஆனா அந்த குடும்பத்தோட சம்பந்தமே வேண்டாம்னு உன்னால வெட்டி விட முடியுமா? முக்கியமா இதயாவுக்காக நீ அவுங்களை பொறுத்துப் போய் தான் ஆகணும்.

உனக்கே நல்லா தெரியும் இந்த ஜென்மத்துல உங்க தங்கச்சி கனி அண்ணாவ விட்டுட்டு வேற‌ ஒருத்தரை நிச்சயம் மனசால கூட நினைக்க மாட்டா. அப்புடி இருக்கிற பட்சத்துல உனக்கும் கனி அண்ணாவுக்குமான உறவு சுகுமா இருக்கணுமா இல்லையா? ஏன்னா இது காலத்துக்கும் தொடர்ந்து வர்ற உறவு அதை உன்னால வெட்டி விட முடியுமா?” என்க,

மறுப்பாய் தலையசைத்தான். பூமிகா கூறவது நூற்றுக்கு நூறு சரியே இத்தனை பிரச்சனை நடந்தும் ஒரு வார்த்தைக் கூட இதயாவிடம் இருந்து கனியரசனுடனான திருமணம் வேண்டாம் என அவள் இதுவரை கூறியதில்லையே அவனும் அப்படி தானே எவ்வளவு தான்‌ தன்னிடம் சண்டையிட்டாலும் இதயா வேண்டாமென இதுவரை அவனும் கூறியதில்லையே

இதிலிருந்தே தெரிகிறதல்லவா இருவரின் மனமும். எத்தனை சண்டைகள் வந்தாலும் எந்தக் காலத்திலும் அவர்கள் ஒருவரை ஒருவர் விட்டுவிட மாட்டார்கள் என்பது இதிலேயே உறதியாக தெரியும் பட்சத்தில் கனியுடனான தனது உறவு நல்லபடியாக அமைய வேண்டாமா??’ என நினைத்தவன்,

“நீ சொல்றது சரிதான் பூமி இதயாவுக்கானாலும் எனக்கும் கனிக்குமான ரிலேஷன்சிப் நல்லபடியா இருக்கணும் அப்போ தான் அவளுக்கு நிம்மதி. சரி நீ பாரு பஸ்ஸூக்கு டைம் ஆச்சு நான் அப்பா கிட்ட எல்லா விஷயமும் சொல்லிட்டேன் எதுக்கும் பயந்துக்காதே” என்க,

“அச்சோ அச்சோ இதை நோட் பண்ணி கின்னஸ் ரெக்கார்ட்ல போடணுமே” பூமி கூற,

“எதை? புரியாமல் அவன் கேட்க,

“ஹான் அதாவது முதல் முறையா நீ என்கிட்ட பயப்படாதன்னு சொல்லிருக்க. இந்த வார்த்தை எல்லாம் உன் வாய்ல இருந்து குறிச்சிப் பூக்கறதாட்டும் வந்துருக்கு அதை நோட் பண்ணி கின்னஸ்ல போட வேண்டாமா?” என வாய் அடிக்க,

“போடி வாயாடி!!!” என அவள் கன்னத்தினை இடித்தவன் அவளை பஸ் ஏற்றி விட்டு வீடு திரும்பிட இவனுக்காக காத்திருந்தனர் குடும்ப உறவுகள். பூமிகாவை பற்றி பேச தான் அனைவரும் அமர்ந்திருக்கிறார்கள் என அறிந்தவன் ஆதி முதல் அந்தம் வரை அனைத்தையும் சொல்லி முடித்திருந்தான்.

“ஆகா அந்த பொண்ணோட மாமாங்க தான் பிரச்சனை பண்றதா?” வீரவேல் கேட்க,

“பிரச்சனைன்னு இல்லப்பா அவுங்களும் தேனில நல்ல வசதி தான். திடீர்னு அவுங்க பொண்ணு லவ் பண்றேன்னு சொன்னதும் ஆளு‌ யாரு என்னன்னு தெரியாம பேசிட்டு இருக்காங்க.

அதுவும் இல்லாம நம்ம குடுமபத்தை பத்தி தெரியாது. என்னை குடும்பத்தோட பொண்ணு கேட்டு வர‌ சொன்னாங்க நான் கொஞ்சம் டைம் கேட்டேன். அது அவுங்களுக்கு என்மேல டவுட் வந்திடுச்சுப் போல அதானால திடிர்னு பூமிககு சொந்தத்துல ஒரு மாப்பிள்ளைய‌‌ பொண்ணு பாக்க வர சொல்லிட்டாங்க அதான் நேத்து நான் வரும்போது பூமியும்‌ கோச்சுகிட்டு என்னோட வந்துட்டா” என்க,

“நீ அந்த பிள்ளை‌ மாமாங்க நம்பர் கொடு நான் பேசுறேன்” என நம்பரினை வாங்கிய வீரவேல்,

அவர்களுக்கு அழைப்பு விடுக்க அநத பக்கம் எடுக்கப்பட்டதும் தன்னையும் ஊரையும் அறிமுகப்படுத்திக் கொண்டவர் அவர்கள் வீட்டுப் பெண்ணை பததிரமாக பஸ் ஏற்றி விட்டதாக கூறிவிட்டு சீக்கிரமே குடும்பத்தோடு பெண் கேட்டு வருவதாக கூற,

பூமிகாவின் மாமாக்களுக்கு வீரவேலின் பேச்சும் மற்றும் அவரை பற்றி திரட்டிய தகவல்கள் அனைத்தும் அவர்களுக்கு திருப்தியாக இருக்கவே சந்தோஷமாகவே சரி என்று வைத்தனர்.

அதுவரை வீரவேலின் பேச்சினை கேட்டுக் கொண்டிருந்த வெற்றி‌ அவர் போனை வைத்ததும்,
“அப்பா‌ இப்பவே என்ன அவசரம்ப்பா பொண்ணு பார்க்க நம்ம இதயாவுக்கு என்னன்னு தெரியாம? அதுக்குள்ள எனக்கு என்ன அவசரம்” என்க,

“வெற்றி ராணியோட வாழ்க்கை முக்கியம் தான் ஆனா‌ அதுக்காக உன்னயே நம்பிட்டு இருக்க பொண்ணை இன்னும் எத்தனை வருஷத்துக்கு காக்க வைக்க முடியும்? அந்த பிள்ளைக்கு அடுத்த தங்கச்சிங்க இருக்குறப்போ அவுங்க அவசரப்படுறதுலயும் எந்த தப்பும் இல்லை.

அப்பறம் ராணியோட வாழ்க்கையில நம்ம முடிவு எடுக்க முடியாது சம்பந்தப்பட்டவங்க ரெண்டு பேரும் அமைதியா இருக்குறப்போ நம்ம என்ன‌ பண்ண முடியும் எதுனாலும் அவுங்க வாய் தொறக்குற‌ வரைக்கும் நம்மளால இதுல ஒண்ணும்‌ பண்ண முடியாது. நீ இதைப்பத்தி எல்லாம் நினைச்சு அந்த பிள்ளை பூமி மனசை சங்கடப்படுத்தாத!

ராணி கனியோட வாழ்க்கை அவுங்க ரெண்டு பேர் கைல தான் இருக்கு அவுங்க வாழ்க்கை அவுங்க முடிவு. நம்ம அடுத்து நடக்க வேண்டிய காரியத்தை பாக்கலாம்” என்ற வீரவேல் அடுத்து சென்ற இடம் கனியின் வாழைத் தோட்டத்திற்கு.

அவர் அங்கு வருவதாக ஏற்கனவே தகவல் சொல்லிருக்க அவருக்காக கனியும் அவனின் அப்பாவும் சித்தப்பாவும் காத்திருந்தனர்.

“வாங்க மச்சான்!!” நேற்றைய நிகழ்வு மனதின் ஓரத்தில் இருந்தாலும் அதனை காட்டிக் கொள்ளாமல் அவரை வரவேற்றனர்.

“நேத்த நடந்த சம்பவத்துக்கு நான் உங்ககிட்ட மன்னிப்பு கேட்டுகிறேன்” என்றிட,

“அய்யோ மச்சான் என்ன இது மன்னிப்புன்னு பெரிய வார்த்தை எல்லாம் பேசுறீங்க தப்பு எங்க பக்கம் அதிகமா இருக்குற பட்சத்துல நீங்க மன்னிப்பு கேட்டு எங்களை குற்றவுணர்வுல தள்ளாதீங்க” என துரை கூற,

“சத்தியமா என்னைக்கும் நானும் என் குடும்பமும் ராஜியை மட்டமா நெனைச்சதில்லை மச்சான். அந்த பிள்ளைய நாங்க கொறைச்சி பார்த்ததில்லை. ஆனா வெற்றிக்கு விருப்பம் இல்லாத பட்சத்துல என்ன பண்ண முடியும்?நம்ம கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிட்டா மட்டும் அவுங்க சந்தோஷமா வாழ்ந்திடுவாங்களா?? நிச்சயம் இல்லே வெற்றி கொணம் நிச்சயம் அப்படி எல்லாம் அவனை வாழ விடாது கல்யாணத்துக்கு அப்பறம் அவுங்க வாழ்க்கை நரகமா தான் இருக்கும்.

அப்புடி ஒரு கல்யாண வாழ்க்கை நம்ம பிள்ளைகளுக்கு தேவையா? “ என்றிட அவரின் கூற்றில் உள்ள உண்மை ஆண்களுக்கு புரியத்தான் செய்தது.

“விடுங்க மச்சான் அன்னைக்கு கோபத்துல ஒருத்தருக்கும் மூளை வேலை செய்யாம போய்டுச்சு. எல்லாம் எங்க வீட்டு பொம்பளையாளுங்க ம்ஹூம் எங்க ஆத்தாவ சொல்லணும் அவுங்க ஆரம்பிச்சது தான் என்னன்னவோ நடந்துப் போச்சு.

விருப்பம் இல்லாத ஒருத்தனை கட்டாயப்படுத்துன்னா அதோட பின்விளைவுகள் மோசமா இருக்கும்னு யோசிக்க தவறிட்டாங்க. நீங்க அதை விடுங்க இனி‌‌ இதைப் பத்தி பேசி ஒண்ணும் ஆகப் போறதில்லை” என‌ செல்வம் கூறிட,

அங்கே அமைதி நிலவியது.வருடங்கள் கடந்து நிதர்சனத்தை ஏற்றுக் கொண்டனர் துரையும் செல்வமும் அதில் ஒன்று வெற்றி ராஜிக்கு திருமண பேச்சு வார்த்தை ஒத்து வராது என்பதை.

கனிக்கும் புரியதான் செய்கிறது. இருந்தாலும் அவனால் அன்றைய நிகழ்வுகளில் இருந்து முழுவதுமாக வெளிவர முடியவில்லை.

“அந்த பிள்ளைய ஊருக்கு அனுப்பிட்டீங்களா?” துரை கேட்க,

“ம்ம்ம‌ அனுப்பியாச்சு மச்சான் அந்த பிள்ளை‌‌ மாமனுங்க தான் லேசா பிரச்சனை பண்றாங்க போல” என்றவர் என்ன பிரச்சனை என கூறியவர் தான் பூமிகாவின் மாமாக்களிடம் பேசியதையும் கூறிட,

“அதுவும் சரி தான் மச்சான். எத்தனை நாளைக்கு தான் அவுங்களும் பிள்ளைய வச்சுருப்பாங்க. அவுங்க பேசுறதுலயும் நியாயம் இருக்கு தானே” என செல்வா கூற,

“அதான் மச்சான் நானும் குடும்பத்தோட பொண்ணு கேட்டு வர்றதா சொல்லிட்டேன்.” என,

“நல்லது மச்சான்” துரை கூறிட,

“குடும்பம்னா அதுல நீங்களும் தான் மச்சான்!” என மறைமுகமாக அவர்களும் வர‌ வேண்டும் என்ற கோரிக்கையினை வைத்திட,

“பின்ன நாங்க இல்லாமையா பெரிய சம்பந்திங்க நாங்க இல்லாம விஷேஷமா உங்க வீட்டுல” என துரையும் மறைமுகமாக அவர் சம்மதத்தினை தெரிவித்து விட மகிழ்ச்சியுடனே விடை பெற்றார் வீரவேல்.

“அப்பா!!!” என‌ கேள்வியாய் அழைத்த கனியை கண்ட துரை,

“நடக்காத ஒரு விஷயத்துக்கு இன்னமும் வீம்பு பிடிச்சுகிட்டு நிக்கிறது சரி இல்லை கனி. நம்ம பொண்ணை வேண்டாம்னு‌ தெளிவா சொல்றவன கட்டாயப்படுத்த முடியுமா? மறுக்கிற உரிமை அவனுக்கு நிறையவே இருக்கு.

நிச்சயம் நம்ம ராஜி கொணத்தை மதிச்சு அவளே கொண்டாடுற ஒருத்தன் வரதான் போறான். அப்படிப்பட்டவனை தான் நான் ராஜிக்கு மாப்பிள்ளையா கொண்டு வருவேன்.

இன்னமும் ராஜிய நெனைச்சுகிட்டே வெற்றி வாழ்க்கைய கெடுக்க எனக்கு இஷ்டமில்லே” என்றிட செல்வபாண்டிக்கு அண்ணின் பேச்சில் மாற்றுக் கருத்தே இல்லை.

ஏனோ இப்போது நினைத்தால் கூட தாங்கள் தான் கொஞ்சம் அவசரப்பட்டு விட்டோமோ என்ற எண்ணம் தான் வெற்றி ராஜியின் விஷயத்தில் அண்ணன் தம்பி இருவருக்கும்.

வெற்றிக்கு பெண் பார்க்க செல்லும் விஷயம் பரிமளத்திற்கு தெரிய வர துரைப்பாண்டி செல்வபாண்டியினை எதிர்பார்த்து காத்திருந்தவர் அடுத்த சண்டையினை துவங்கி வைத்தார்.


 
பரிமளம் அவங்களுக்கு சண்டை போட்டுகிட்டே இருக்கனும் போல!!.. இன்ட்ரஸ்டிங்!!... கனி, இதய எப்போ சேருவாங்களோ??... அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
 

santhinagaraj

Well-known member
ஆண்கள் சமாதானமாக போனாலும் இந்த கனியோட வீட்ல இருக்குற பெண்கள் சமாதானம் ஆக மாட்டாங்க போல எப்பவும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கணும்னு நினைக்கிறாங்க போல
 

NNK-01

Active member
பரிமளம் அவங்களுக்கு சண்டை போட்டுகிட்டே இருக்கனும் போல!!.. இன்ட்ரஸ்டிங்!!... கனி, இதய எப்போ சேருவாங்களோ??... அடுத்த எபிக்கு வெயிட்டிங்!!..
தாங்க் யூ க்கா
 

NNK-01

Active member
ஆண்கள் சமாதானமாக போனாலும் இந்த கனியோட வீட்ல இருக்குற பெண்கள் சமாதானம் ஆக மாட்டாங்க போல எப்பவும் சண்டை போட்டுக்கொண்டே இருக்கணும்னு நினைக்கிறாங்க போல
அதுக்கு கிரகம் அப்புடி🤪
 
Top