எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல்- எபிலாக்

NNK-70

Moderator
தீராத காதல் தேனாக மோத-NNK70
எபிலாக்:

சில வருடங்களுக்குப் பிறகு…

“இந்த டைய நீங்கக் கட்டினா ஆவாதா? நான் தான் கட்டிவிடுனுமா, வர வரப் பசங்களுக்கு மேல நீங்கத் தான் ரொம்ப பிடிவாதம் பிடிக்கிறீங்க இதய்” எனச் செல்லக் கோபம் கொண்ட மனைவியைத் தன் ஒற்றைக் கண் சிமிட்டலில் வெட்கமடைய செய்திருந்தான் இதய்.

தன் மனைவி அணிவித்த டையை சரி செய்தப்படியே ஹாலில் உள்ள சோபாவில் அமர்ந்தான் இதய். அருகிலிருந்த தன் மாமனாரை புன்னகையுடன் ஏறிட்டிருந்தான். அவரும் அவனையே தான் சிரித்தபடி பார்த்துக்கொண்டிருந்தார்.

அத்தனை நாட்களில் அவனைப் பற்றி நன்கு அறிந்து வைத்திருந்தார் ரத்தினம்.

தன் மகளின் மீதும் பேரக் குழந்தைகளின் மீதும் கொள்ளை கொள்ளையாய் அன்பு வைத்திருக்கும் அவனை ஒரு அதிசியப்பிறவியாகத் தான் பார்த்தார்.

என் நேரமும் மிரு! மிரு ! என உருகி வழிந்திடும் அவனின் காதல் மீது அவருக்கே ஒருவித பிரம்மிப்பு தான்.
சின்ன சின்ன விஷயங்களைக் கூடத் தன் மனைவியைக் கேட்காமல் முடிவு எடுக்கமாட்டான் இதய். இதைக் கவனித்த ரத்தினம் ஒரு முறை கேட்டே விட்டார்.

“ ஏன் மாப்ள, எல்லா விஷயத்தையும் நீங்க இனிகிட்ட கேட்டுத் தான் செய்யனுமா என்ன?, நீங்க முடிவு பண்ணினா போதாதா?” என்றவரிடம் ஒரு புன்னகை சிந்தியவன், “உங்க பொண்ணுகிட்ட நீங்க வேணா கேட்காம எல்லா முடிவும் எடுத்திருக்கலாம் மாமா, ஆனா நான் என் பொண்டாட்டிகிட்ட கேட்காம எந்த ஒரு முடிவும் எடுக்கமாட்டேன், அவளுக்குப் பிடிக்காத எதையும் நான் செய்ய மாட்டேன்” என்றான் உறுதியாக.

அவன் சொன்ன சாராம்சத்தில், தான் செய்த தவறை மெல்ல உணரத் தொடங்கினார் ரத்தினம்.

“மிரு என் சாக்ஸ் எங்க, மிரு கார் சாவி, மிரு என்னோட ஃபைல் என விடாமல் அவளைக் ஆனந்த தொல்லை செய்துக் கொண்டே இருந்தான் இதய்.

அவனின் செல்ல இம்சைகளில் விரும்பியே சிக்கிக் கொண்டாள் இனி. கல்லூரி ஒன்றில் ஒரு முக்கிய நிகழ்விற்கு சிறப்புரை ஆற்ற அவனை அழைத்திருக்க, கோட் சூட் சகிதமாகக் கிளம்பிவிட்டிருந்தான்.

அந்நேரம் மருத்துவமனைக்குப் புடவையில் கிளிம்பிவந்த இனியை வைத்த கண்வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் இதய்.

அவனின் இந்தப் பார்வையில் தவித்துப் போனதென்னவோ அவள் தான்.

‘சரியான கேடி, எப்படி பாக்குறான் பாரு’ என்று முனுமுனுத்தபடி, மிகுந்த சிரமப்பட்டு அவனை முறைத்தபடி பிள்ளைகள் இருக்கும் அறை கதவைத் திறந்தாள்.

அங்கு மூன்று வயது நிரம்பிய அவர்களின் மழலைகளான மகிழன் மற்றும் மஹதி உறங்கிக் கொண்டிருக்க, அவர்களைப் பார்த்தபடி நின்றிருந்த இனியை பின்னால் இருந்து அணைத்திருந்தான் இதய்.

உறங்கும் மகளையும் மகனையும் பார்த்தவனுக்கு உள்ளம் குளிர்ந்து போனது. வெளியில் எவ்வளவு இறுக்கம் இருந்தாலும், மனைவி குழந்தையென வரும்போது மெழுகாய் உருகி கரைந்திடுவான்.

“ இதி, உன் கொஞ்சல நைட்டுக்கு மிச்சம் வை, இப்போ நான் டியூட்டி போகனும்” என்று மெதுவாக அவளின் அணைப்பிலிருந்து தன்னை விடுவித்துக் கொண்டவள்,

மேகலாவிடமும் ரத்தினத்திடமும் சொல்லிவிட்டு கிளம்ப முற்பட, சட்டெனக் கீழே குனிந்தவன் , அவளின் புடவை மடிப்பினை சரி செய்துவிட்டு, அவளை அணைத்து நெற்றியில் முத்தமிட்டு சென்றான்.

அவனின் இந்தச் செய்கை வாடிக்கையானது தான். இருந்தும் புதிதாக நடப்பது போல வெட்கிச் சிவந்தாள் இனி.

அன்றிரவு ஜெய் மற்றும் நளினி விடுமுறைக்காக அங்கு வந்து விடவே, வீடே கலகலப்பாக மாறியது. ஜெய் அதிகம் பேசாவிட்டாலும் இதய்யின் பேச்சில் கலகலத்து சிரிப்பான்.

அவர்கள் அடிக்கடி இதய்யின் வீட்டுக்கு வருவதற்கு மற்றொரு காரணம் தேனிதழ் தான். இனியை அவள் சித்தி என்றழைத்தாலும், இதய்யை ‘சின்ன டாடி’ ‘சின்ன டாடி’ என அழைத்து அவன் பின்னாலே சுற்றி வருவாள்.

அவனும் ‘தேனு’ ‘ தேனு’ எனச் சக்கரை பாகாய் அவளிடம் உருகிப் போவான். விடுமுறைக்கு வரும் ஒரிரு நாட்களில் ஒரு நிமிடம் கூட அவனை விட்டுப் பிரிந்திருக்க மாட்டாள் அந்தச் சின்னஞ்சிட்டு.

அனைவரும் உணவு உண்டு விட்டு உறங்கச் செல்ல, இதய்யின் அறையில் மகிழன் மஹதி மற்றும் தேனிதழ் மூவரும் இதய்யின் மேல் ஏறி விளையாடிக் கொண்டிருந்தனர்.

அவர்களை ரசித்தபடியே பால்கனியில் நின்றுக் கொண்டிருந்தாள் இனி.

ஈரக்காற்று மேனியில் பட்டுத் தேகம் சிலிர்க்க அந்தக் காரிருள் வேளையை அனுபவித்து கொண்டிருந்தவளை இழுத்து தன் மடியில் அமர்த்தியிருந்தான் இதய்.

அவன்மேல் வாகா சாய்ந்தவளோ, “நீங்க என் மேல வச்சிருக்க இந்தத் தீராத காதல் கிடைக்க நான் குடுத்து வச்சிருக்கனும் இதி, என் வாழ்க்கையையே மொத்தமாக மாத்திட்டீங்க, ஐ லவ் யூ சோ மச்” என அவனின் கன்னங்களில் முத்தம் பதித்தாள் இனி.

அவன் ஏதோ பேச முற்பட, சட்டென உறக்கதிலிருந்து எழுந்து வந்த தேனிதழ் அவன்மேல் மோதிக் கழுத்தைக் கட்டிக் கொண்டு நின்றிருந்தாள்.

“ சின்ன டாடி, கத சொல்லுங்க டாடி அப்பதான் நான் தூந்துவேன் (தூங்குவேன்)” மழலை மொழியில் மொழிய, அதில் சிரித்தவன் மெல்ல அவளைத் தூக்கிகொண்டு நடந்துக் கொண்டே கதை சொன்னான். சிறு பிஞ்சு அவனின் அணைப்பில் உறங்கிட, மெல்ல அவளைக் கட்டிலில் கிடத்தி தட்டிக் கொடுத்தான்.

அவன் அருகே இனி வந்து அமர்ந்திட, “இந்தத் தேன் (தேனிதழ்) நம்ம வாழ்க்கை வந்ததால தான் நம்ம காதலும் வாழ்க்கையும் இன்னும் அழகா மாறிடுச்சு” என்றவனின் தோள் சாய்ந்து, அவனின் காதலை மேலும் மேலும் அனுபவிக்க தொடங்கியிருந்தாள் இதயனின் இனியவள்.


*** முற்றும்***
 
Last edited:

santhinagaraj

Well-known member
இதய் காதல் செம்ம 😍😍
அருமையான காதல் கதை.ரொம்ப நிறைவான முடிவு சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 

NNK-70

Moderator
இதய் காதல் செம்ம 😍😍
அருமையான காதல் கதை.ரொம்ப நிறைவான முடிவு சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐
கதை ஆரம்பித்ததிலிருந்து தொடர்ந்து படித்து என்னை ஊக்குவித்ததமைக்கு மிக்க நன்றி சிஸ்😍
 

NNK-70

Moderator
இதன அசத்திட்டான்!!... ரொம்ப ரொம்ப நிறைவான கதை!!... வாழ்த்துகள்!!.
ரொம்ப நன்றி சிஸ் ... தொடர்ந்து படித்து ஆதரவு தெரிவித்தமைக்கு மிக்க நன்றி😍
 

Shamugasree

Well-known member
Lovely story. Idhai unconditional love towards ini is mesmerising. Antha karthick and solai ku. Antha nagaraj karthick ku enna achu nu solliruntha konjam santhosha patturupom.
All the best dear
 

NNK-70

Moderator
Lovely story. Idhai unconditional love towards ini is mesmerising. Antha karthick and solai ku. Antha nagaraj karthick ku enna achu nu solliruntha konjam santhosha patturupom.
All the best dear
Thanks for reading sis😍😍😍
Next part la kathir&swetha story la avanga rendu perukum ena aachunu theriyum sis 😍😍😍
 
Top