எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மாலையிட்ட பந்தம்

santhinagaraj

Well-known member
மாலையிட்ட பந்தம்

விமர்சனம்

குடும்பம், பாசம், காதல் கலந்த ஒரு ஒரு அழகான குடும்ப கதை.

சத்தியமூர்த்தி வாஞ்சிநாதன் இருவருக்கும் அப்பா அம்மா இல்லை வாஞ்சிநாதன் அண்ணனுக்கு கல்யாணம் பண்ணி வைக்க ஆசைப்பட்டு கல்யாணம் ஏற்பாடு எல்லாம் செய்து ஒழிக்க தாலி கட்டும் நேரத்தில் கல்யாண பொண்ணு காணாமல் போய்விட
கல்யாண பொண்ணின் சித்தப்பா மகளான சத்தியவாணியை சத்தியமூர்த்திக்கு அவசரமாக கல்யாணம் பண்ணி வச்சிடுறாங்க.

சத்தியமூர்த்திக்கு கல்யாணத்தில் இருக்கும் இல்லை என்றாலும் தம்பிக்காக அந்த கல்யாணத்தை ஏற்றுக் கொள்கிறாள் ஆனால் சாத்தியவானிக்கு அந்த கல்யாணத்தில் விருப்பம் இல்லை அவளுக்கு படிக்க வேண்டும் என்று ஆசை.

படிக்க வேண்டும் என்ற ஆசை அதிகம் இருந்தாலும் அக்காவுக்காக பார்த்த மாப்பிள்ளை வசதி படைத்தவர்கள் இவங்க நமக்கு செட்டாக மாட்டாங்க என்ற ஒரு எண்ணமோ அவள் மனதில் ஏற்படுது. அதனால் அவள் அந்த கல்யாணத்தை முழுமனதாக ஏற்க முடியாமல் தவிக்க.
அண்ணன் தம்பி இருவரும் அவளுக்கான கால அவகாசத்தை கொடுக்க முடிவு பண்ணி அவளை படிக்கவும் வைக்கிறார்கள்.

வாணியின் மனம் எவ்வாறு மாறுகிறது அவள் எப்படி அந்த குடும்பத்துடன் பொருந்துகிறாள் என்பதை கதையின் போக்கில் அழகாக காட்டி காட்சிப்படுத்திய விதம் அருமை 👏👏👏

சத்தியமூர்த்தி ரொம்ப பொறுமையானவன். இவனோட மனைவி மீதான புரிதலான காதல் ரொம்ப அருமை 👌👌

வாஞ்சிநாதன் இவளோட கேரக்டரை எப்படி சொல்றதுன்னு தெரியல அப்படி ஒரு அருமையான கேரக்டர். அண்ணி அம்மா என்று சொல்லி அவளுக்காக அவன் பார்த்து பார்த்து செய்யும் ஒவ்வொரு செயல்களும் அவ்வளவு அருமை 👏👏👏 இப்படி ஒருவன் வாழ்க்கையில் கிடைத்ததெல்லாம் பொக்கிஷம். மாதிரி.

ஒருத்தன் நல்லவனா இருந்தா தான் யாருக்கும் பிடிக்காதே அப்படி பொக்கிஷமான வஞ்சிக்கு ஒரு சுயநல பிசாசை ஜோடி சேர்த்து விடுறாங்க அந்த சுயநல பிசாசு வேற யாரும் இல்ல வானியோட தங்கச்சி ஆதிரை தான்.

அவ சுயநலத்துக்காக அவ பேசும் பேச்சும் செய்கிற செயலும் அப்படியே நாள் அப்பு அப்பினா என்னன்னு தோணுது.😡😡😡😡

அண்ணிய அம்மாவா நினைக்கும் வாஞ்சி,மச்சினிச்சிய மகளா நினைக்கும் சத்தியமூர்த்தி இவங்க ரெண்டு பேரோட பொறுமையும் பாசமும் நெகிழ்ச்சியா இருக்கு.

சத்தியமூர்த்தி வாஞ்சிநாதரைக்கு செய்யும் அறிவுரைகள் ஒவ்வொன்றோ ரொம்ப அருமையா இருந்தது.

ஒரு குடும்பத்தில் திடீர் கல்யாணத்தில் ஏற்படும் நிகழ்வுகளை ரொம்ப எதார்த்தமாக சொன்ன விதம் சூப்பர்👌👌

அருமையான எழுத்து நிலை நிறைவான முடிவு

வாழ்த்துக்கள் 💐💐💐
 

NNK-100

Moderator
ரொம்ப ரொம்ப நன்றி டியர்

அழகா விமர்சனம் செய்து இருக்கீங்க போட்டி தளம் இரண்டுமே எனக்கு புதுசு ரொம்ப பயத்தோட தான் எழுத ஆரம்பிச்சேன் பிரஷா அக்கா நான் தடுமாறின சமயம் ஊக்கம் தந்து தொடர்ந்து எழுத வச்சாங்க உங்களை மாதிரி வாசகர்களோட கருத்துகள் தந்த ஊக்கம் கதையை முடிச்சுட்டேன் கதையை முடிச்ச கையோட ஜூரமே வந்துட்டுங்க 🤣🤣 அத்தனை அழுத்தம் பயம் இப்போ கருத்துகளை எல்லாம் பாக்கும் போது மனசுக்கு சந்தோஷமா இருக்கு தொடர்ந்து எழுத ஆசையும் வருது ரொம்ப நன்றி 🙏🙏❤❤🥰🥰💐💐
 
Top