எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

தீராத காதல் தேனாக மோத

santhinagaraj

Well-known member
தீராத காதல் தேனாக மோத

விமர்சனம்

தலைப்பிலேயே தெரிந்திருக்கும் இது எப்படிப்பட்ட கதைன்னு ஆமா இது ஒரு அழகான காதல் கதை.

இதயச் சந்திர வர்மன் போலீஸ் மிருணாளினி டாக்டர்.

இனி வேலை செய்ற ஹாஸ்பிடல்ல இதய் பேஷண்டாக வந்து சேருகிறான் இதய்க்கு கூட யாரும் இல்லாத காரணத்தால் இனியே அவனை கூட இருந்து பாத்துக்கிறா ரெண்டு பேருக்கும் இடையில காதல் மலர்கிறது

காதல் வந்தாலே ஒரு எதிர்ப்பு இருக்கத்தான் செய்யும் அப்படி ஒரு எதிர்ப்பு தான் இனியோட அப்பா மூலமா வருது. ஆனா அவன் அவளோட அப்பா பிரிக்கிறதுக்கு பதிலா அவளே தான் அப்பாவுக்கு சத்தியம் பண்ணி கொடுத்து இருக்கேன்னு மனம் முழுக்க இதய் மீது காதலை வைத்துக் கொண்டு அவனை விட்டு பிரிந்து சொல்கிறாள்.

இனி ஓட அப்பா ரத்னா அவளுக்கு கல்யாணம் பண்ணி செய்ய வேற ஒரு மாப்பிள்ளையை பார்க்கிறார் அவன் ஒரு கே*டு*கெட்ட பொ**று*க்கி . தான் அப்பாவுக்காக இனி அந்த கல்யாணத்துக்கு சம்மதித்தாலும் மனசுக்குள்ளே அந்த கல்யாணம் பிடிக்காம எப்படியாவது இந்த கல்யாணம் நின்று விடாதா என்று நினைத்து அழுகுறா.

இனி இப்படி கல்யாணத்தை நினைச்சு மன வருத்தத்தோடு இருக்க மனமாற்றத்திற்காக மெடிக்கல் கேம்பிற்காக வெளியூர் செல்ல அங்கே அவளுக்கு ஆக்சிடென்ட் ஆகிறது. ஹாஸ்பிடலில் இருந்து வரும் இனி அவளுக்கே தெரியாமல் கர்ப்பம் ஆகிறாள். அதேசமயம் தன்னுடைய வேலை காரணமாக வெளியூர் செல்லும் இதையும் ஒரு இக்கட்டான சூழ்நிலையில் மாட்டிக் கொள்கிறான்.

இனி தன் அப்பாவிற்கு என்ன சத்தியம் பண்ணி கொடுக்கிறாள்? அவளுக்கு பிடிக்காத அந்த கல்யாணம் என்ன ஆகிறது? இனி அவளுக்கே தெரியாமல் எப்படி கர்ப்பம் ஆகிறாள்?அவளோட குழந்தைக்கு யார் காரணம்? இதய் எப்படி அவனுடைய இக்கட்டான சூழ்நிலையில் இருந்து எப்படி தப்பித்து வருகிறான்? இப்படி பல கேள்விகளோடு கதை ரொம்ப சுவாரசியமாக நகர்கிறது.

ஸ்வேதா இனிக்கு ஒரு நல்ல தோழி அவளோட இக்கட்டான சூழ்நிலைகளில் ஒரு அம்மாவா அவளை தாங்கும் விதம் அருமை 👌👌

இதை என்னோட காதல் வேற லெவல் 😍😍😍

நல்ல ஒரு அருமையான காதல் கதை.நிறைவான முடிவு சூப்பர் 👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Top