எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️ - 21

NNK-34

Moderator
ஆதவன் 21
தன்னை பார்வையாலே தின்று கொண்டிருக்கும் தன்னவனை கண்ணாடியுடு பார்த்த வர்ஷாவுக்கு அவளையும் அறியாமல் அவளின் உடலெங்கும் கூசி சிவந்து விடவும், இதற்குமேல் முடியாது என்கின்ற நிலையில் சட்டென்று திரும்பியவள் அவனை பார்த்து ஏதோ பேச வாயெடுக்க,
"ஷ்" என்றபடி அவளது துடிக்கும் இதழில் விரல் வைத்தவன், அவளின் விரிந்த கண்களைப் பார்த்தபடி,
"ப்ளீஸ் வர்ஷா என்னை அப்படி பார்க்காத, என்கிட்ட எதுவும் பேசாத, ரொம்ப நேரமா நான் கண்ட்ரோல்ல இருக்க ரொம்பவே முயற்சி பண்ணிட்டு இருக்கேன். லெட் மீ ஹெல்ப் யூ" என்று தனது கரகரத்த குரலில் சொல்லவும் அவனது தவிப்பை உணர்ந்து மீண்டும் திரும்பி நின்றவள், அவனது விழிகளைப் பார்க்க இயலாது கண்ணாடியில் இருந்த தன் பார்வையை தாழ்த்தி கொண்டு, தன்னை சமன் செய்ய தான் பெரும்பாடுப்பட்டுப்போனாள்.
@@@@@@@
"என்னாச்சு வரு?" சிவந்த கண்களுடன் பார்ட்டி ஹாலில்ன் ஒரு ஓரமாக நின்றியிருந்த தன் தோழியை பார்த்து வினவினாள் ஆர்த்தி.
"என்கிட்ட எதுவும் கேட்காத, பதில் சொல்ற நிலைமையில நான் இல்லை ஆர்த்தி" எப்பொழுது வேண்டுமானாலும் வெடித்துவிடும் நிலையில் இருந்த உணர்வுகளை அடக்கிகொண்டபடி கூறினாள் வருணிக்கா.
வருணிக்காவின் குரலை வைத்தே அவளது நிலையை உணர்ந்த ஆர்த்தி அவளை ஆசுவாசப்படுத்தும் எண்ணத்தில் அவள் அருந்த ஜூசை மட்டும் கொடுத்தவள், அவளிடம் வேறு எதுவும் கேட்டுக்கொள்ளவில் லை.
@@@@@@
ஏற்கனவே ஆதித்தின் அருகாமையும், தன் வெற்று தோள் வளைவை அடிக்கடி தீண்டிகொண்டிருக்கும் அவனின் சூடான மூச்சு காற்றும் தன்னுள் சத்தமில்லாத யுத்தம் ஒன்றை நடத்தி கொண்டிருந்ததில் தனக்குள் கிளர்ந்தெழுந்த புதுவித உணர்வுகளை கையாள வழி தெரியாது தவித்து கொண்டிருந்த வர்ஷா, திடிரென்று தன் வெற்று இடையை உரசிய அவனது கரம் தன் மேல் இருந்த புடவையை நகற்றி, சரியாக மடிப்பெடுக்காது பாதி கலைந்திருந்த கொசுவத்தை தன் கையில் எடுத்த கணம், அவன் கரம் மீது தன் கரம் வைத்து தடுத்தவள்,
"இதை மட்டும் நானே பார்த்துகிறேனே" என்க, அவளின் காற்றுக்குரல் அவனது காதை உரசி காற்றில் கரைந்து போக, நிமிர்ந்து வர்ஷாவின் முகம் பார்த்தவன் இன்னும் அவளை நெருங்கி அவளது செவியை நோக்கி குனிந்து,
"எதை மட்டும்??" பட்டும்படாமல் தன் இதழ்களால் அவளின் காதுமடலை உரசியப்படி வினவ, மொத்தமாக உருகியே விட்டாள் பெண்ணவள்.
அடிவயிற்றில் பட்டாம்பூச்சி பறக்க, உச்சி முடி துவக்கம் அடிப்பாதம் வரை மொத்த உடலும் கூசிச் சிலிர்க்க, அதற்கு மேல் மறுக்க முடியாது, அவனது கரம் மேல் இருந்த தன் கரத்தை மட்டும் விலகிக்கொண்டவள் கண்களை இறுக்கமாக மூடிக்கொள்ள,
அவளையே பார்த்தபடி புடவைக்கு மடிப்பெடுத்தவன் மெல்ல அதை அவளின் நாபிக்கு கீழே உள்ள வயிற்று பகுதியில் சொருக, விழிவிரித்தவளுள் அதிர்வலைகள்!
உரிமையானவின் தீண்டளை பெண்ணவளால் தாங்கிக்கொள்ள முடியவில்லை, உணர்வை அடக்க வழி தெரியாது திண்டாடிவள். அவன் விழிகளை பார்க்க இயலாது குனிந்து கொள்ள, அவளை அப்படியே திருப்பிய ஆதித், ரெண்டு பக்கமும் சிறிதளவில் முடி எடுத்து மிகச் சிறிய கேட்ச் கிளிப்பில் அடக்கி இருந்த அவளது சிகையை மொத்தமாக விடுவித்து, "ஃப்ரீ ஹர்ல இன்னும் அழகா இருக்க" என்று ரசனையுடன் கூறி, அவளை அழைத்துக் கொண்டு கிளம்பினான்.
@@@@@@@
இருவரும் காட்டிக்கொள்ளவில்லையே தவிர, தங்கள் இணையுடனான இந்த தனிமையான கார் பயணம் இருவருக்குமே ஒருவித பரவசத்தை கொடுத்திருந்தது.
இது ஒன்றும் முதல் முறை இல்லை, ஏற்கனவே ரெண்டு மூன்று முறை இருவரும் ஒன்றாக பயணித்திருக்கிறார்கள் தான், இருந்தாலும் சில மணித்துளிகளுக்கு முன்பு இருவருக்கும் இடையே நடந்த நெருக்கமான நிமிடங்களை எண்ணியபடியே அமர்ந்திருந்தவர்களுக்கு இந்த பயணம் புதுவிதமாக இருந்தது.
அதுவும் ஆதித் ஒரு வார்த்தை பேசவில்லை என்றாலும் செல்லும் வழி முழுவதும் அவளைப் பார்த்தே திணறடித்துக் கொண்டிருக்க, பெண்ணவளோ எங்கு சென்று ஒளிந்து கொள்வது என்று தெரியாமல் தவிப்புடனே அமர்ந்திருந்தாள்.
பத்து நிமிட பயணம் எப்படி போனதென்றே தெரியவில்லை, பார்ட்டி நடக்கும் வளாகத்துக்குள் நுழைந்தவன் காரை பார்க்கிங் ஏரியாவில் நிறுத்தியதும், வர்ஷா இறங்குவதற்காக தன் கரத்தை கதவில் வைத்த நேரம்,
"ஷுகர் சிரப்" என்ற அவனது புதுவித விழிப்பில்,
முதலில், "ஹாங்" என அவள் புரியாமல் அவனை பார்த்த பொழுது அவன் பார்வை போன இடத்தை கண்டவளுக்கு மறுக்கணமே அவனது இந்த புதுவிதமான விழிப்புக்கான அர்த்தம் புரிந்து விட, குளுமையான உணர்வொன்று அவளுள் வேகமாக பரவ, பெண்ணவளின் கரங்கள் இரண்டும் சில்லிட்டது.
"ஷுகர் சிரப்" மீண்டும் அழைத்தான். அவளால் நிமிர்ந்து பார்க்க முடியவில்லை,
அவன் குரலில் இருந்த குழைவும், அவன் பார்வையில் இருந்த கிறக்கமும் அவளையும் குழைய செய்து, மொத்தமாய் கிறங்கடித்திருக்க, உணர்வை அடக்கும் போராட்டத்தில் தன் இதழ்களை பற்கள் கொண்டு சிறைசெய்தவள்,
"ம்" என்றாளே தவிர அவளால் அவன் விழிகளை சந்திக்கவும் முடியவில்லை, வேறு எதுவும் பேசவும் முடியவில்லை. ஆனால் அவளையே இமை அகற்றாது பார்த்துக்கொண்டிரு ந்த ஆணவனுக்கோ பெண்ணவளின் ஒவ்வொரு செய்கையும் ஒருவித மயக்கத்தை கொடுக்க,
"நோ இட்ஸ் மை ஜாப்" என்றவன் அவளது பற்களுக்குள் சிறைப்படிருந்த அவளின் இதழை நீதானமாக விடுவித்து, அதை மென்மையாக வருடியபடி, கழுத்தடியில் முகம் புதைத்து, அவளது வாசத்தை சுவாசித்துக்கொண்டே,
"கிஸ் பண்ணிக்கட்டுமா ஷுகர்?" கிறக்கமாக வினவினான். அவளால் பதில் சொல்ல முடியவில்லை, சொல்லப்போனால் சொல்லும் நிலையில் அவள் இல்லை. கழுத்தடியில் அவன் செய்த சாகசம் அவளை வேறு ஒரு உலகத்திற்கு அழைத்து சென்றிருக்க, இம்மை மறந்தவளின் கரங்கள் கூச்சம் மிகுதியில் தானாக அவனது சட்டையின் காலரை இறுக்கமாக பற்றிக்கொண்டதில், மெதுவாக வர்ஷாவிடம் இருந்து விலகி அவள் முகம் பார்த்தான் ஆதித்.
இமைகள் இரண்டும் மூடிய நிலையில், மினிமினுக்கும் ஈர இதழ்கள் துடிதுடிக்க அமர்ந்திருந்தாள்.
இதற்குமேல் ஆணவனுக்கு தன்னவளை வெறுமையாக பார்த்துக் கொண்டு மட்டும் இருக்க முடியும் என்று தோன்றவில்லை, ஒரு கரம் அவளது இடையை வளைத்திருக்க, மறுக்கரம் அவளின் பின்னந்தலையை தாங்க, அவளவனின் இதழ்கள் அவளது இதழில் கவிப்படி.. உறவாடி.. கொஞ்சி தீர்த்தது, மிகவும் நீதானமாக.. மிக மிக மென்மையாக..
இப்பொழுது அவளது இதழை விடுவித்த அவனது இதழ்கள், அவளின் கழுத்தடியில் முட்டிமோதவும், அவனது இதழ்களை விட அவனின் மீசையின் ரோமம் அவளை மிகவும் இம்சிக்க, இதற்குமேல் முடியாது என்கிற நிலையில்,
"சீக்கரம் போகணும்ன்னு சொன்னீங்களே" தவிப்புடன் கேட்டாள்.
"நீ அப்போ சொன்னது போலவே எனக்கும் இப்போ போகணுமான்னு தோணுது" கழுத்தில் இருந்து மெல்ல மெல்ல நகர்ந்து காதுமடலை உரசி அவளது நாடியில் முத்தம் பதித்தப்படி கூறினான்.
மூச்சு முட்டிக்கொண்டுவர,
"ஆனா எனக்கு போகணும்ன்னு தோணுதே" தடுமாற்றத்துடன் திக்கித் திணறி கூறினாள்.
அதில் பொதிந்து கிடந்த அர்த்தத்தை உணர்ந்து மெலிதாக புன்னகைத்தவன், மெல்ல தன்னவளை விட்டு பிரிந்து அவள் வதனத்தை பார்த்தான்.
உணர்வின் பிடியில் சிக்கிக்கொண்டு செய்வதரியாது, அச்சம் கலந்த தவிப்புடன் அமர்ந்திருந்தாள்.
பார்த்ததும் கட்டியணைத்து முத்தமிட்டு மொத்தமாக கொள்ளையிட ஆசையாக தான் இருந்தது. ஆனாலும் அவளின் நிலையை கருத்தில் கொண்டு, ஏதேதோ செய்ய சொல்லி கட்டளையிட்ட தன் இளமை உணர்வுகளை மிகவும் சிரமப்பட்டு கட்டுப்படுத்திய ஆதித், வர்ஷாவின் சில்லிட்டிருந்த கரங்களை பற்றி தனது சூடான கரங்களுக்குள் பாத்துக்கப்பாக வைத்துக்கொண்டவன், அவளது நெற்றியில் இதழ் பதித்துவிட்டு, "போகலாமா?" என்று கேட்க, "ம்" மெதுவாக தலையை மட்டும் அசைத்தாள்.
@@@@@@@
"நான் விசாரிக்க சொன்னது என்னாச்சு? விசாரிச்சிட்டியா?" சிவப்பு நிற திரவத்தை தன் வாயில் சரித்தபடி வினவினான் விநாயக்.
"இப்போ தான் தகவல் கிடைச்சுது, ஆதித் மட்டும் இல்லை வர்ஷாவும் வந்திருக்காளாம்" என்றான் அவனது காரியதரிசி ரகு.
"வாவ்!! ஏக் கல் தோ மாங்கா" என்று வன்மமாக புன்னகைத்த விநாயக் தன் மேல் கோட்டை எடுத்து அணிந்துகொண்டு ஆயத்தமாக, அவனை யோசனையாக பார்த்த ரகு,
"என்ன பாஸ் உங்களுக்கு கொஞ்சம் கூட பிடிக்காதவங்கள பார்க்க இவ்வளவு ஆர்வமா கிளம்புறீங்க?" என்று குழப்பம் தாங்காமல் கேட்டுவிட, "பிடிக்காது தான் ஆனாலும் புது மண தம்பத்திகளுக்கு வாழ்த்துக்கள் சொல்லலைனா நல்லா இருக்காதுல" ரகுவை பார்க்காமலே வாட்சை எடுத்து தன் கரத்தில் அணிந்தபடி அவனுக்கு பதில் கூறினான் விநாயக்.
விநாயக்கின் பதிலில் இன்னுமே குழம்பிய ரகு,
"என்னவோ பாஸ் அன்னைக்கு நிரோஷாவெல்லாம் வச்சு பிளான் எல்லாம் போட்டு, ஆதித்துக்கு பெரிய சம்பவம் பண்ணினதும். இப்பவும் அவங்களை ஏதாவது பண்ணுவீங்கன்னு நினைச்சேன், ஆனா நீங்க ரொம்ப கூலா வாழ்த்து சொல்ல போறேன்னு சொல்றீங்க. உங்களை புரிஞ்சிக்கவே முடியல பாஸ்" என்று கூறவும், சத்தமாக சிரித்த விநாயக்,
"என்னை புரிஞ்சிக்க முடியாதனால தான், நான் சொல்ற இடத்தில இருக்கேன், நீ கேட்கிற இடத்தில இருக்க, சோ இல்லாத மூளைய ரொம்ப போட்டு கசக்காம நான் சொல்றத மட்டும் சொதப்பாம செய்" என்க, சரி என்ற ரகு அதன் பிறகு வாயே திறக்கவில்லை.
@@@@@@
வர்ஷாவின் கரத்தை பற்றியப்படி பார்ட்டி ஹாளுக்குள் நுழைந்தவனை பிரபுவும் பவித்ராவும் இன்முகத்துடன் வரவேற, அவர்களை தொடர்ந்து வந்த தன் நண்பர்களை புன்னகையுடன் அணைத்து விடுவித்தான் ஆதித். ஏற்கனவே ரிசெப்ஷனில் வர்ஷாவுக்கு அவர்களில் சிலருடன் அறிமுகம் இருந்ததால் அவர்களுடன் பழகுவது கொஞ்சம் எளிதாக இருந்தது.
பிரபுவும் ஆதித்தும் கல்லூரியில் ஒன்றாக படித்தாலும், அவனும் ஆதித்தை போல சினிமா துறையில் இயக்குனறாக இருப்பதால், கல்லூரி நண்பர்கள் தாண்டி ஒரு சில நெருங்கிய சினிமா பிரபலங்களும் வருகை தந்திருக்க, வழமையான நல விசாரிப்பு, வேலை தொடர்பான பேச்சுகள், கிண்டல் கேலி என பார்ட்டி நன்றாக போய்க்கொண்டிருந்தது.
அறிமுகம் இல்லாத இடம் என்பதால் வர்ஷா தனியாக இருப்பது போல உணர்ந்து விட கூடாது என்பதற்காகவே, தன் நண்பர்களுடன் பேசும் பொழுதும் கூட வர்ஷாவை தனியே விடாது பார்ட்டி ஹால் முழுக்க அவள் கரம் பற்றியபடி வலம் வந்த ஆதித், வழமையை விட மிகவும் மகிழ்ச்சியாக காணப்பட்டான்.
சற்றுமுன் தன்னவளுடன் தான் கழித்த ஒவ்வொரு கணப்பொழுதுகளையும் தன் மனதில் பொக்கிஷமாய் சேமித்திருந்தவனை, வர்ஷாவுடனான முத்த பரிமாற்றமும் சின்ன சின்ன தீண்டல்களும் வானில் சிறகில்லாமல் பறக்க செய்திருக்க, வெளிப்படையாக அவன் எதையும் காட்டவில்லை என்றாலும்,
அவன் நண்பர்களே, "என்ன மச்சான் பயங்கரமா ஷைன் அடிக்கிற" என்று நேரடியாகவே கேட்டு கிண்டலடிக்கும் அளவிற்கு அவனது முகத்தில் இருந்த தேஜசும் அவனின் இதழோரம் இருந்த மந்தகாச புன்னகையும் அவர்களுக்கு எதையோ உணர்த்திருக்க, அவர்கள் முன்பு வெட்கப்படாமல் இருக்க கடும்பாடுப்பட்டுப்போன ஆதித்,
"என்னை விடுங்க டா, ஒரு காலத்துல கல்யாணமே பண்ணிக்கமாட்டேன், லவ் வெல்லாம் சுத்த வேஸ்டுன்னு சொல்லிட்டு, இப்போ கல்யாணம் முடிஞ்சு வர்ஷம் ஆகியும், இன்னும் லவ்சோடவே சுத்திட்டு இருக்கிற நம்ம ராம பாருங்க டா" என கூட்டத்தில் இருக்கும் தன் நண்பன் ஒருவனை கைகாட்டிவிட்டு தப்பித்துக்கொள்ள, அதை கண்டு வாய்விட்டே சிரித்து தன்னை கேலியாக பார்த்த தன்னவளின் காதருகே குனிந்த ஆதித், தன் இதழ் அவளின் செவிமடலை உரச, பேசி பேசியே தன்னிடம் இருந்த வெட்கத்தை தன்னவளிடம் இடமாற்றிருக்க, இப்பொழுது அவனது பேச்சிலும் நெருக்கத்திலும் உணர்வுகளை அடக்க சிரமப்படுவது வர்ஷாவின் முறையாகி போனது.
@@@@@
ஆதித் வர்ஷாவின் இணைந்த கரங்களையும், அவர்களின் அன்னியோனியத்தையும் தள்ளி நின்று பார்த்து கொண்டிருந்த வருணிக்காவின் முகம் கன்றி கருத்துவிட, முதல் முறை அவர்களின் நெருக்கம் அவளுக்குள் கோபத்தை தாண்டி கண்ணீரை வரவழைத்தது.
இதுபோல எத்தனை பார்ட்டிகளில் அவனுடன் ஒன்றாக கைகோர்த்து நின்றிருப்பாள், ஆனால் இன்றோ அவனும் அவளும் எதிர் எதிரே, நினைத்தாலும் நெருங்க முடியாத இடைவெளியுடன் அல்லவா இருக்கிறார்கள், அன்று தான் விட்ட வார்த்தைகளை எண்ணி இன்று மிகவும் வருந்தினாள்.

ஆதித் வருணிக்காவின் பிரேக் அப் துவங்கி, சமூகவலைத்தளத்தில் வெளியான அவனது ஆபாச வீடியோ மற்றும் அவனுக்கும் வர்ஷாவுக்கும் நடந்த திடீர் திருமணம் என அனைத்தையும் கேள்விப்பட்ட அவர்களது நண்பர்களுக்கு அதிர்ச்சியாக தான் இருந்தது. ஆனாலும் நாகரிகம் கருதி அவர்கள் யாரும் எதுவும் கேட்கவில்லை என்றாலும், அவர்கள் முன்பு அழுது தன் பலவீனத்தை காட்ட விரும்பாததால் , கலங்கிய தன் கண்களை யாரும் அறியாமல் துடைத்துக்கொண்ட வருணிக்கா, குறிப்பாக தன் தோழிகள் மத்தியில் தன்னை இயல்பாக காட்டிக்கொள்ள பெரும்பாடுப்பட்டுப்போனாள்.
@@@@@@
"வேணும்ன்னா கிளம்பிடலாமா?" வருணிகாவின் முகம் மாற்றத்தை உள்வாங்கியபடி அவள் அருகே வந்த ஆர்த்தி, அவ்வாறு கேட்டாள்.
"இல்ல இன்னும் கொஞ்ச நேரம் இருக்கலாம்" என்ற வருணிகாவின் பார்வை ஆதித் வர்ஷா மீதே நிலைத்திருக்க, செல்லலாம் என்று கூறினாலும் வேண்டாம் என்று மறுப்பவளிடம் வேறு என்ன சொல்வது என்று ஆர்த்தியும் மௌனமாகிவிட்டாள்.
@@@@@
அனைத்தும் நன்றாக சென்று கொண்டிருந்த நேரம், ரெஸ்ட் ரூம் சென்றவிட்டு தன் அருகே வந்து அடிப்பகுதியில் லேசாக மடங்கி இருந்த புடவையின் மடிப்பை குனிந்த படி சரி செய்து கொண்டிருந்த வர்ஷா முன் தன் ஒரு பாதம் தரையில் ஊன்ற மண்டியிட்ட ஆதித்,
"கொஞ்சம் அப்படியே நில்லு" என்று கூறி மடங்கியிருந்த மடிப்பை நிதானமாக சரிசெய்தவன், அப்படியே மண்டியிட்டபடியே விழி உயர்த்தி தன்னையே பார்த்துக் கொண்டிருக்கும் தன்னவளின் விழிகளை பார்த்து, "பெர்ஃபெக்ட்" என்று கூறி வசீகரமாக புன்னகைக்க, "தேங்க் யூ" என்ற வர்ஷா பதிலுக்கு புன்னகைத்த பொழுது, "வாவ் வாட்ட ரொமான்டிக் சீன், அண்ணலும் நோக்கினான், அவளும் நோக்கினாள். டைரக்டர் டைரக்டர் தான்"
என்று தங்களுக்கு மிக அருகில் கேட்ட குரலில் இருவரின் புன்னகையும் தொலைந்து இருக்க, சட்டென்று ஏற்பட்ட ஒருவித நடுக்கம் வர்ஷாவின் உடல் எங்கும் ஆலகால விஷம் போல
வேகமாக பரவியது.
ஆழ்மனதில் புதைக்கப்பட்ட கோர சம்பவங்கள் எல்லாம் மீண்டும் அவள் நினைவுகளில் தோன்றி அவளை நிலைகுலைய செய்ய, நிற்க முடியாமல் தடுமாறியவளை ஆதித்தின் வலிய கரம் ஒன்று அவளின் தோள் பற்றி தன்னருகே நெருக்கமாக அணைத்து பிடித்துக் கொள்ள, பயத்துடன் ஆதித்தை பார்த்தாள் வர்ஷா.
அவனும் அவளை தான் பார்த்தான். அவளது நடுக்கமும் பயமும் அவனுக்கு தெளிவாகவே புரிந்தது, இருந்தும் ஒரு வார்த்தை பேசவில்லை.
தன்னவளை அணைத்திருந்த தன் கரத்திற்கு சிறு அழுத்தம் கொடுத்தவன், அவள் விழி பார்த்து 'நான் இருக்கிறேன்' என்பது போல இமைகளை மட்டும் மூடி திறந்து புன்னகைக்க, தான் வாய்விட்டு ஏதும் சொல்லாமலே தன் உணர்வுகளை உணர்ந்து நடந்துகொள்ளும் ஆதித் மீதும் இன்னுமே வர்ஷாவுக்கு நேசம் பொங்கியது.

இப்பொழுது அவளுக்குள் இருந்த நடுக்கம் மெல்ல மெல்ல குறைந்திருக்க பெண்ணவளின் இதழும் லேசாக விரிந்து கொண்டது.
"அப்புறம் ஹப்பி மேரிட் லைஃப் கைஸ்" என்ற விநாயக் வேண்டுமென்றே வர்ஷாவை பார்த்து
"எப்படி இருக்கீங்க மேடம்?" என்று நக்கலாக கேட்க்க, மரியாதை நிமித்தமாக கூட அவன் பக்கம் திரும்பாத ஆதித்
வர்ஷாவை பார்த்து, "நீ இன்னும் அந்த ஃபிஷ் டேங்க் பார்க்கலல்ல வா போலாம் செமையா இருக்கு"என்றவன், 'நீ எல்லாம் எனக்கு ஒரு பொருட்டே இல்லை' என்பது போல விநாயக்கை கொஞ்சமும் கண்டு கொள்ளாது வர்ஷாவை அழைத்துக் கொண்டு சென்று விட,

'ஓடுடா ஓடு மொத்தமா ஓட விடுறேன்' அடி வாங்கிய உணர்வில் மனதிற்குள் வன்மத்துடன் சூழரைத்தான் விநாயக்.
 
Last edited:

NNK-34

Moderator
இவனுக்கு சீக்கிரமே ஒரு எண்ட் கார்ட் போட்டு விடுங்க!!... அடிக்கடி வந்து டிஸ்டர்ப் செஞ்சுகிட்டு!!..
Inime avanai vachi konjam story pogum dear.. Avanuku end card podum poluthu storyum end aagidum dear ❤️
 

Shamugasree

Well-known member
Varu va samalicha ippo Vinayak ah. Ivan enna Panna poran. Yara target Panna poran. Adhi ya illa Varsha va. Niro nilamai Vera ennanu theriyala.
 

Mathykarthy

Well-known member
ஆதி வர்ஷா 🥰💕🤩

வருணிக்காவுக்கு இப்போ தான் அவளோட தப்பும் இழப்பும் புரியுது... 😒

விநாயக்... ஆரம்பிச்சு வச்சவனே முடிச்சு வைக்க வந்துட்டான்.... லூசுத் தனமா ஏதாவது பண்ணின ஆதித்தே உன்னை முடிச்சுடுவான்.. 😝🤣
 

NNK-34

Moderator
ஆதி வர்ஷா 🥰💕🤩

வருணிக்காவுக்கு இப்போ தான் அவளோட தப்பும் இழப்பும் புரியுது... 😒

விநாயக்... ஆரம்பிச்சு வச்சவனே முடிச்சு வைக்க வந்துட்டான்.... லூசுத் தனமா ஏதாவது பண்ணின ஆதித்தே உன்னை முடிச்சுடுவான்.. 😝🤣
Thank u dear.
Aama pa.
100 percent correct da
Thank u so much dr
 
Top