எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 11

admin

Administrator
Staff member

அத்தியாயம் 11​

"ஏன் மா... தூக்கம் வரலையா?..." கடிகாரத்தை பார்த்தபடி கேட்ட கணவரை நிமிர்ந்து பார்த்தார் ராஜி.​

"சின்னவனுக்காக வெயிட்டிங்க, அப்பவே பசிக்குது மம்மி, முட்டை தோசை வேணும்னு கால் பண்ணி சொன்னான். இன்னும் காணோம்..." கவலையாக கூறினார் ராஜி.​

"பெரியவன் கூட தானே போயிருக்கான். அவன் வயித்தை காயப் போட்டாலும் சின்னவன் வயித்தை காயப் போட மாட்டான். ஏதாவது வாங்கி குடுத்து தான் கூட்டிட்டு வருவான். நீ ஒன்னும் கவலைப்படாதே..." பெரிய மகனின் குணம் அறிந்தவராக கூறினார் ஆதி.​

"வாங்கி குடுப்பான் தான் இருந்தாலும் இளையவன் வாயை சப்பிட்டே சொன்னானா அதான் மனசேக் கேட்கல, வந்ததும் இரண்டு முட்டை தோசையைப் போட்டுக் கொடுத்தா தான் மனசாரும்..." என்றவரின் பார்வை ஜன்னலின் வழியே தெரிந்த வீட்டின் கேட்டில் பதியவும் வெளியில் ஹாரன் சத்தம் கேட்கவும் சரியாக இருந்தது.​

"உன் பசங்க வந்துட்டாங்க பாரு..." மெல்லிய புன்னையுடன் கூறினார் ஆதி.​

கணவரைப் பார்த்து சிரித்தவர் " நூறு ஆயுசு எம் பசங்களுக்கு..." என்று கேட்டை நோக்கி நடந்தார்.​

அவர் செல்வதற்குள் இரண்டு,மூன்று முறை ஹாரன் சத்தம் கேட்டுவிட "வந்துட்டேன் வந்துட்டேன்..." சத்தமாக கூறியப்படிக் கேட்டைத் திறந்து விட்டார்.​

கார் போர்டிகோவில் நின்ற அடுத்த நிமிடமே "மாம்..." பின் சீட்டின் கதவை அவசரமாக திறந்து விட்டப்படி தாயை அழைத்தான் அரவிந்த்.​

அவனது குரலில் இருந்த பதற்றம் இவரையும் தொற்றிக் கொள்ள அவரசமாகக் கேட்டை பூட்டிவிட்டு​

"என்னாச்சு வாண்டு.." எனக் கேட்டுக் கொண்டே காரை நோக்கி ஓடினார்.​

அவர் காரை நெருங்கவும் அகரன் இறங்கி அக்னியை தூக்கவும் சரியாக இருந்தது. அக்னியின் முகத்தை பார்த்ததும் மேலும் பதறி தான் போனார் ராஜி.​

"ஐயோ, என்னாச்சு..." என பதட்டமாக கேட்டவரிடம்​

"தெரியல மா, பாத்ரூம்ல மயங்கி கிடந்தாள். ஹாஸ்பிடல் போலாம்னு சொன்னா வேண்டாம்னு சொல்றா. ஆனா அடிவயித்த பிடிச்சிட்டே இருக்கா ஐ திங்க் பீரியட்ஸ்ன்னு நினைக்கிறேன்..." என்று அவசரமாக பதில் கூறியது வேறு எவருமில்லை அகரன் தான்.​

"சரி உன் ரூமுக்குக் கூட்டிட்டு போ..." என்றார். உடனே சரியென்று தலையாட்டியவன் தன் அறையை நோக்கி நடந்தான்.​

ஹாலில் அமர்ந்திருந்த ஆதி அக்னியைப் பார்த்ததும் "பாப்பாக்கு என்னாச்சு அகா..." பதட்டத்தைக் குரலில் காட்டாது கேட்டார்.​

"தெரியல ப்பா, பாத்ரூம்ல மயங்கி கிடந்தாள். இங்க தூக்கிட்டு வந்தேன்..." என்றான் தனது அறையை நோக்கி நடந்தப்படியே.​

"ஏண்டா, மயக்கம் போட்டப் புள்ளையை ஹாஸ்பிடல் தூக்கிட்டுப் போகாமல் இங்க எதுக்கு தூக்கிட்டு வந்த..." அதட்டிய தந்தையை நிதானமாக திரும்பி பார்த்து​

"உங்க மருமகள் தான் ஹாஸ்பிடல் வேண்டாம் வீட்டுக்கு போங்கன்னு சொன்னா...சோ எதுவா இருந்தாலும் அவள்ட கேட்டுக்கோங்க..." என்றவன் மூவரின் திகைத்த முகத்தைப் பார்த்தும் பார்க்காதவன் போல படுக்கையில் அவளைக் கிடத்தி விட்டு அறையிலிருந்து வெளியேறினான்.​

"ஏங்க, கங்கா அண்ணிக்கு கால் பண்ணுங்க..."அதிர்ந்து நின்ற கணவரிடம் கூறியவர் வலியில் சுருண்டுக் கிடந்தவளின் கேசத்தைக் கோதிக் கொண்டே "புவி..." என அழைத்தார்.​

"ம்ம்ம்..." என்று முனகல் வந்தது.​

"உடம்புக்கு என்ன பண்ணுது மா..." எனக் கேட்டார்.​

"அடிவயிறு இழுத்து பிடிக்குது த்தை... வலி தாங்க முடியல, தலைச் சுத்திட்டே இருக்கு..."இம்மூன்று வரிகளை கேட்கவே ராஜியின் காதுகளை அவளது உதட்டிலயே வைக்க வேண்டிய நிலை உண்டானது.​

அதற்குள் கங்கா அழைப்பெடுத்து இருக்க, "கங்கா லைன்ல இருக்கா மா..." என்று அலைபேசியை மனைவியிடம் நீட்டினார் ஆதி.​

கங்காவிடம் விவரத்தைக் கூறியவர் என்ன செய்வதென்று கேட்டார்.​

"ரொம்ப நேரம் தண்ணி குடிக்காம, பாத்ரூம் போகாம இருந்தா அவளுக்கு இப்படி பண்ணும் அண்ணி. உடம்பு சூடா தான் இருக்கும். மோர் குடுங்க, அப்புறம் அவளை தொப்புளுக்கு நல்லெண்ணெய் வைக்க சொல்லுங்க. கொஞ்ச நேரத்துல நான் கிளம்பி வந்துடறேன்..." என்றார் கங்கா.​

"இந்த நேரத்துல நீங்க எதுக்கு அண்ணி வந்துட்டு இருக்கீங்க, புவியை நான் பாத்துக்குறேன். காலையிலயும் அப்படியே இருந்தா வேணா நீங்க வாங்க..." என்று அழைப்பைத் துண்டித்தவர் கங்கா கூறியதை செய்ய சென்றார்.​

***​

இங்கு மாடியில் நின்றிருந்த அகரனை முறைத்துக் கொண்டிருந்தான் அரவிந்த்.​

நிமிடங்களுக்கு மேல் தொடர்ந்த அவனது விடாத பார்வையில் கடுப்பானவனாய் "என்னடா..." எனக் கேட்டான்.​

அகரன் பேசவே காத்திருந்தவன் போல "நீ என்னோட வாவ் கேர்ள்ல லவ் பண்றியா?..." முகத்தைத் தூக்கி வைத்தப்படிக் கேட்டான்.​

அவனது கேள்வியில் சட்டென திரும்பிப் பார்த்தவனது மனமோ "ஆம்.." என்று முந்திக் கொண்டு பதில் சொன்னது.​

மனதின் பதிலில் இத்தனை நாட்கள் அவனுள் உறங்கிக் கொண்டிருந்த அகரன் என்ற அகம்பாவி பட்டென விழித்தான்.​

"பேசக் கூட ஒரு ஸ்டேட்டஸ் வேணும்னு எதிர்பார்க்கிறவன் நான். போயும் போயும் அவளை லவ் பண்ணு வேணா?...'அத்தனை அலட்சியமாகக் கூறிட அதை அப்படியே அரவீந்திடம் கூறினான் அகரன்.​

அண்ணனை ஏறயிறங்கப் பார்த்தவன் "நம்பலாமா?.." சந்தேகமாகக் கேட்டான்.​

அவனது சந்தேகப் பார்வையை அசட்டை செய்தவனாய் "நம்பறதும் நம்பாம போகறதும் உன் இஷ்டம். ஆனால் நீ நினைக்கிற மாதிரி லவ்வெல்லாம் இல்லை..." என்றான் அலைபேசியை பார்த்துக் கொண்டே​

"அப்ப, காலேஜ்ல அவங்களை காணோம்னு பதறி போயி தேடினது. கார்ல வரும் போது அவங்க வலியை பார்க்க முடியாமல் என்கிட்ட கத்தினது, பெரியப்பா கிட்ட அவங்களை உங்க மருமகள்னு சொன்னது. அப்பறம்..." அடுத்து அவன் சொல்லும் முன்பே​

" நீயா ஏதாவது கற்பனை பண்ணிட்டு என்கிட்ட கேள்வி மேல கேள்வி கேட்காத டா... அண்ட் ஒரு பொண்ணு மயங்கி கிடைக்கிறத பார்த்து சிரிக்கவா முடியும்? சோ ஹெல்ப் பண்ணேன். இதை வைச்சு அவளை நான் லவ் பண்றேன்னு யோசிக்காத, அந்தளவுக்கு அவ வொர்த் இல்லை..." எனக் கூறிக் கொண்டே நிமிர்ந்தவன் பார்வையில் ராஜியும், அக்னியும் விழுந்தனர்.​

அக்னியைக் கண்டதும் சற்று முன் பேசிய அனைத்தும் மறந்தவனாய் "ரூம்ல ரெஸ்ட் எடுக்க வேண்டியது தானே டி, இங்க எதுக்கு வந்த?.." சற்று கோபமாகவே கேட்டான்.​

அவனது கோபத்தை அலட்சியமாக பார்த்தவள் அவனுக்கு பதில் சொல்லாமல் அரவிந்தைப் பார்த்து புன்னகை பூத்தாள்.​

அவளது அலட்சிய பாவனையில் பல்லைக் கடித்தவன் அடுத்து பேசும் முன் "நான் தான் கூட்டிட்டு வந்தேன் ப்பா... வேப்பமரக் காத்துப் பட்டா சூடு தணியும்னு மேல கூட்டிட்டு வந்தேன்..." மகனின் முகத்தை ஆராய்ச்சியாக பார்த்தபடி கூறினார் ராஜி.​

"ம் சரி மா.." என்றவன் பார்வை எதிரில் அரவீந்திடம் சிரித்து பேசியப்படி நின்றவளின் மேல் விழுந்தது. அவளோ அகரன் என்ற ஒருவன் அங்கிருக்கிறானா என்பது போல் அரவிந்த்திடம் பேசிக் கொண்டிருந்தாள்.​

அவளது செய்கையில் இதழை இகழ்ச்சியாக வளைத்தவன்​

'போடி...' என்று அலைபேசியை பார்ப்பது போல் குனிந்து கொண்டான்.​

இங்கு இளைவர்களிடம் வந்த ராஜியோ "அம்மா சொன்னாங்க உனக்கு மாப்பிள்ளை பார்த்தாச்சுன்னு, அவர் என்ன பண்றார் மா?.." ஆரம்பித்திலேயே மாப்பிள்ளையை பற்றி கங்கா கூறியிருந்தாலும் அக்னியிடம் பேச டாபிக் இல்லை என்ற காரணத்தால் மாப்பிள்ளையை பற்றிக் கேட்டார் ராஜி.​

அவரது கேள்வியில் சோர்வையும் மீறி புன்னகை மலர்ந்தது அவளது முகத்தில்.​

தாயின் கேள்வியில் அலைபேசியில் மூழ்கி இருந்தவன் சட்டென நிமிர்ந்து அக்னியை பார்த்தான்.​

அவள் முகத்தில் மலர்ந்த​

அந்த சிறு புன்னகை அந்த மாப்பிள்ளைக்கானது என நினைத்தவனுக்கு அத்தனை கோபம் வந்தது.​

அக்கணம் பூவையின் இதழோரத்தில் மலரும் சிறு புன்னகைக் கூட தன்னால் தான் இருக்க வேண்டும் தனக்காக தான் இருக்க வேண்டுமென்ற வெறியே வந்தது அது அவனது கண்களிலும் பிரதிபலித்தது.​

"கனரா பாங்க் மேனேஜர் அத்தை.." என்றாள்.​

"அப்படியா ரொம்ப சந்தோஷம் மா, பையன் பேர் என்ன? வயசு என்னாகுது..." அடுத்தக் கேள்வி ராஜியிடமிருந்து வந்தது.​

"மோகன் தாஸ் அத்தை, என்னை விட இரண்டு வருஷம் பெரியவர் அத்தை, அவருக்கு இப்ப இருபத்தி ஒன்பது வயசாகுது..." என்றாள் அதே புன்னகையோடு.​

அகரனின் பார்வை முழுவதும் காரிகையிடத்தில் மட்டுமே நிலைத்தது. மாப்பிள்ளையை பற்றி பேசும் போது அவன் ரசித்த கன்னங்கள் இரண்டும் செம்மையடைவது போல தோன்றியது.​

"பூ வைச்சுட்டாங்களா புவி?.." அடுத்த கேள்வி அகரனின் தாயிடமிருந்து வந்தது.​

"ஒன் மன்த் முன்னாடி தான் பூ வைச்சுட்டு போனாங்க அத்தை, அடுத்த வாரம் தட்டு மாத்த வராங்க..." என்றதும் "நல்லது மா, நல்லா இரு..." அவளது தலையை அழுத்தி கோதிக் கொடுத்தார்.​

அக்கணம் "மீ.." என்று கோபமாக அழைத்தான் அரவிந்த்.​

"ஸ்... காதில கத்தாதை டா..." என்று காதை தோளில் தேய்த்து கொண்டார்.​

"இன்னும் இவங்க நமக்கு என்ன உறவுன்னு சொல்லவே இல்லை..." முகத்தை தூக்கி வைத்து கேட்டான் அரவிந்த்.​

"அடடா, உங்கிட்ட சொல்லவே இல்லையா, உன் பெரியப்பா ப்ரெண்ட்டோட பொண்ணு. உனக்கு அண்ணி முறை வரும் டா..." என்றதும் முகத்தைக் கோணலாக வைத்து​

"அண்ணி முறையா? அதெல்லாம் வேண்டாம். வேணும்னா மாமா பொண்ணா இருக்கட்டும்..." என்றான்.​

"போக்கிரி..." அவனதுத் தோளைத் தட்டினார்.​

"மீ, உங்களுக்கு ஞாபகம் இருக்கா? நான் கூட அன்னைக்கு சொன்னேன்ல எனக்கு பொண்ணு பார்த்தா காலேஜ்ல ஒரு பொண்ணை பார்த்தேன் அவங்களை மாதிரியே பாருங்கன்னு சொன்னேன்ல..." அன்றைய நாளை நினைவுப் படுத்த முயன்றான்.​

"ஆமா நான் கூட யாருன்னு சொல்லு அந்த பொண்ணையே பார்க்கிறேன்னு சொன்னேனே..." எனக் கேட்டவருக்கு சட்டென ஏதோ புரிவது போல் இருந்தது.​

"அட நம்ப புவியை தான் அன்னைக்கு சொன்னாயா?..." எனக் கேட்டார். அதற்கு அவசரமாக ஆமென்று தலையாட்டினான் அரவிந்த்.​

"அடப் போக்கிரி, புவி உனக்கு அஞ்சு, ஆறு வருஷத்துக்கு மூத்தவ டா..." எனக் கூறி ஆர்ப்பாட்டமாக சிரித்தார்.​

"பரவாயில்ல மாம்...எத்தனையோ லேஜெண்ட்ஸ் தன்னை விட மூத்த பொண்ணை தான் கல்யாணம் பண்ணிருக்காங்க..." என்று குறும்பாக கண்ணடித்தான்.​

"காலேஜ் முடிச்சி இன்னும் மூணு மாசம் கூட முடியல அதுக்குள்ள கல்யாணம் கேட்குதா? அதுவும் உன்னை விட மூத்த பொண்ணை கல்யாணம் பண்ண வேணுமா உனக்கு, இரு உங்கம்மாட்ட கூப்பிட்டு சொல்றேன்..." என்று அவசரமாக மாடிபடியை நோக்கி செல்ல​

"ஐயோ மீ அப்படியெல்லாம் பண்ணிடாதீங்க, சும்மா சொன்னேன்..." என்றபடி ராஜியின் பின்னாலேயே சென்றான் அரவிந்த். தற்போது அகரனும், அக்னியும் மட்டுமே அவ்விடத்தில்...​

மலரட்டும் சிறு புன்னகை...​

 

Jothiliya

Member
அகரன் புவியை லவ் பண்ணவில்லையாம் ஹெல்ப் செய்தானம் என்ன ஓரு உருட்டு அரவிந்துகிட்ட இப்ப அவ அதுக்கு மேல இருப்ப போல 🌺🌺🌺
 

Priyakutty

Active member
இந்த அகரன் பேசுறது பண்ணுறதுலாம் பாத்தா எனக்கு கடுப்பை கிளப்புது 😤😤

அவங்க யாரை கட்டிக்கிட்டா உனக்கு என்ன மேன்... 🤨

ஒர்த் இல்லன்றது, அவங்களுக்கு பதறுறது... பைத்தியம் 😬

அவங்கள பிடிச்சிருந்தாலும் ஈகோ ஒத்துக்க மாட்டராரு
 
இந்த அகரனை என்னதான் பன்றது!!... எப்பதான் அவனுக்கு புரியப்போகுதோ??
புரிந்தாலும் புரியாமல் நடிப்பவர்கள் அதிகம் அதில் இவனும் ஒரு விதம்
இந்த அகரனை என்னதான் பன்றது!!... எப்பதான் அவனுக்கு புரியப்போகுதோ??
☺️☺️புறிஞ்சுட்டாலும்
 
அகரன் புவியை லவ் பண்ணவில்லையாம் ஹெல்ப் செய்தானம் என்ன ஓரு உருட்டு அரவிந்துகிட்ட இப்ப அவ அதுக்கு மேல இருப்ப போல 🌺🌺🌺
🙈🙈🙈லவ் எல்லாம் இல்லை கா... Just சும்மா ஹெல்ப் பண்றோம்
 
இந்த அகரன் பேசுறது பண்ணுறதுலாம் பாத்தா எனக்கு கடுப்பை கிளப்புது 😤😤

அவங்க யாரை கட்டிக்கிட்டா உனக்கு என்ன மேன்... 🤨

ஒர்த் இல்லன்றது, அவங்களுக்கு பதறுறது... பைத்தியம் 😬

அவங்கள பிடிச்சிருந்தாலும் ஈகோ ஒத்துக்க மாட்டராரு
😬😬😬ரொம்ப பேசுறான் பக்கி பேயி
அதானே அவனுக்கு என்ன
😅😅😅பைத்தியமா தான்...
கொஞ்சம் அதிகமான எகோ..

நீ என்னமா மொத்தாம்மா திட்டவும் செயுற மரியாதையும தர
☺️☺️அது எப்பவும் கூட இருக்கிறது கா... போகாது
 
Top