எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 22

NNK-01

Active member
இதயக்கனி 22:

வெற்றியின் திருமணப் பேச்சு அண்ணாமலையின் காதிற்கு எட்டியிருக்க தனது மனைவியை‌ அழைத்துக் கெண்டு வீரவேல் வீட்டிற்கு வந்து விட்டிருந்தார்.

ஏற்கனவே அங்கே பூமிகாவின் வீட்டில் இதயாவை பேசியதில் அனைவருக்கும் மனதில் கலக்கம் இருந்தது ஆனால் அதனை வெளி காட்டாது பெண்பார்க்கும் படலத்தினை நல்லபடியாக முடித்துவிட்டு வீடு திரும்ப இங்கே அண்ணாமலை அமர்ந்திருந்தார் அடுத்து பிரச்சினையோடு.

“வாங்க வாங்க மச்சான் க்கா வாங்க எப்போ வந்தீங்க?” வீரவேல் அவரை வரவேற்க,

எடுதத இடுப்பிலேயே “எங்களையெல்லாம் உனக்கு ஞாபகம் இருக்கா? இருந்திருந்தா இப்படி ஒரு விசேஷத்திற்கு எங்களை கூப்பிடாம விட்ருப்பியா நீ” அண்ணாமலை எகிற,

“ மச்சான் யாரையும் அவ்ளவா அழைக்கல சும்மா நம்ம குடும்பம் கூட இரண்டு சொந்தத்தை மட்டும் தான் கூட்டிட்டு போனோம். அதுவும் பொண்ணு பாக்கறதுக்கு மட்டும் தான் ஆனா அங்க பொண்ணோட தாய் மாமா உறுதி பண்ணனும்னு கட்டாயமா சொல்லிட்டதால எங்களால மறக்க முடியல.அப்படி இருந்தும் நான் வள்ளி கிட்ட சொல்லிட்டு தான் இருந்தேன் வீட்டுக்கு பெரிய மனுஷன் எங்க மச்சான் இல்லாம இப்படி விசேஷம் நடக்குதேன்னு வருதப்பட்டேன் இல்லையா வள்ளி” கணவனின் தகடுதத்தத்தில் சில நிமிடங்கள் புரியாமல் விழித்த வள்ளி,

“ஆமா ஆமா இவரு சொன்னாரு ஆனா அங்க நிலைமை இப்படி ஆகி போச்சு இப்ப கூட வந்ததும் உங்க வீட்டுக்கு வரலாம்னு தான் இருந்தோம் அதுக்குள்ள நீங்களே வந்துட்டீங்க” என்க வீட்டின் பெரிய தலை என்றதில் அவர் மனம் சற்று குளிர்ந்து விட்டது.

“இருந்தாலும் என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லிருக்கலாம் வீரா நீ? நான் நம்ம சொந்தத்துல வெற்றிக்கு ஒரு வரனை பாத்து வச்சிருந்தேன்” என அவர் சடைக்க,

“அதுக்கென்னங்க மச்சான் பண்றது வெற்றி‌ ஆசைப்பட்டுடான்”

“என்னத்த ஆசையோ போ நாலாஞ்சு வருஷத்துக்கு முன்னுக்கவே இதயாவ கேட்டேன் இப்போதைக்கு இல்லைன்ன, அப்பறம் திடீர்னு ஒரு நாள் நிச்சயம்னு சொல்லிட்ட கேட்டா பொண்ணு ஆசைப்பட்டுட்டான்னு சொன்ன, இப்போ வெற்றிக்கு அதையே தான் சொல்ற?

அதுசரி ஆண்டவ கணக்கு எதுவோ அது தானே நடக்கும் இப்போ பாரு இதயா எங்க வீட்டுக்கு தான்‌ மருமகளா வரணும்னு விதி இருக்கும் போல” என்க அனைவரும் அவரை புரியாமல் பார்த்தனர்.

“என்ன மச்சா சொல்றீங்க இதயா எப்புடி?” வீரவேல் கேட்க,

“ஏன் இதயாவுக்கு என்ன? வீரா‌ நாங்க இதயாவ என் பையனுக்கு கேட்டு வந்துருக்கோம். இப்பயாச்சும்‌ மறுக்காம இரு இதயாவுக்கும் என் பையனுக்கும் தான் முடிச்சு போட்டுறுக்கு அதான் என்‌ பையனுக்கும் இன்னும் கல்யாணம் அமையல இதயாவுக்கு நடந்து நிச்சயமும் முறிஞ்சிப் போயி எந்த வரனும் அமையாம தனியா இருக்கா” என்றிட‌ மற்றவர்கள் அதிர்ந்து தான் போயினர்.

“மச்சா அப்பிடி எதுவும் இல்லை..!!!”

“அட நீ ஏதும் சங்கடப்படாத வீரா நான் தான் அன்னைக்கே சொன்னேன்ல பிள்ளை டாக்டர்க்கு படிச்சிருக்கு அப்போ மாப்பிள்ளையும் டாக்கடரா இருந்தா தான் நல்லா இருக்கும்னு நான் சொன்னேனே ஆனா நீ அதை காதுலயே வாங்கல ஆனா இப்போ பாரு டாக்டர் பிள்ளைய போயி விவசாயம் பாக்குறவனுக்கு நிச்சயம் பண்ணா அந்த பிள்ளைனால ஏத்துக்க முடியுமா அதான் அந்த பேச்சே விட்டுப் போச்சு,

சரி விடு எதுக்கு பழைய கதை எல்லாம் எதுக்கு சொல்லு நம்ம பிள்ளைங்க கல்யாணத்தை எப்போ வச்சுக்கலாம் ஜாதகம் எல்லாம் பாக்க வேண்டாம். இப்பவே தட்டு மாத்திக்கலாமா? இல்லை இப்பவே உறுதி பண்ணி பூக் கூட வச்சிடலாம்” என அவர் பேசிக் கொண்டே போக இதயாவுக்கு உடல்லெல்லாம் பற்றி எரிந்தது.

“நிறுத்துங்க!!!” என கத்தியவள்,

“யாரு சொன்னா உங்களுக்கு என் கல்யாணப்பேச்சு நின்னுப் போச்சுன்னு?”

“அட இது யாரும் சொல்லனுமா என்ன? அதான் நிச்சயம் நடந்து இத்தனை வருஷம் ஆனதுலயே தெரியலையா?” என்க,

“அப்புடி எல்லாம் எதுவேம் இல்லை நீங்களா ஏதும் கற்பனை பண்ணிக்காதீங்க?” என்க,

“இதயா நீ அமைதியா இரு” என குடும்பத்தினர் அவளை அடக்க பார்க்க,

“ச்சூ இந்தா பிள்ளை பெரியவங்க நாங்க பேசிட்டு இருக்கோம்ல நீ ஏன் ஊடால வர்ற? உன் கல்யாண பேச்சு நின்னுப் போச்சுன்னு ஊருக்கே தெரியும்?” என அண்ணாமலையின்‌ மனைவி கூறினார்.

“அதெல்லாம் ஒண்ணும் இல்லை எங்களுக்குள்ள நடந்த நிச்சயம் அப்டியேதான் இருக்கு!” என விடாது இதயா பேச,

“இந்தா செத்த நேரம் சும்மா இருக்க மாட்டியா நீயி? அதெல்லாம் உனக்கும் என்‌ பையனுக்கும் தான் ஒத்து வரும். அவனும் டாக்டர் தான்‌. பெரியவங்க நாங்க முடிவெடுத்துட்டோம்” என அவர் மனைவி பேச,

“என் விஷயத்துல முடிவெடுக்க நீங்க யாருங்க?”

“என்ன வீரா இது உன் பொண்ணை பேச விட்டு வேடிக்கை பாக்குற? அது ஏதோ சின்ன பிள்ளை மாதிரி வெவரம் தெரியாம உளறிட்டு இருக்கு நீதானே எடுத்து சொல்லணும்”

“மாமா என் தங்கச்சி விருப்பம் தான் எங்க எல்லாருக்கும்” என சக்திவேல் கூற‌ அண்ணாமலை சட்டென வீரவேலை பார்த்தார்.

“என்ன வீரா இது??”

“மச்சான் தப்பா எடுத்துக்காதீங்க‌ பிளளைங்க விருப்பம் தான் முக்கியம்”

“அப்போ‌ இப்பவும் என்ன பையனுக்கு பொண்டு தர மாட்டியா நீயி?? அப்புடி என்ன உன்‌ பொண்ணு ஒசத்தி? இத்தனைக்கும் உன் பொண்ணுக்க கல்யாண‌ ராசியே இல்லன்னு நம்ம சொந்தத்துல எல்லாம் பேச்சு அதையும் மீறி நாங்க பொண்ணு கேட்டு வந்துருக்கோம்னா சொந்தம் விட்டு போக கூடாதுன்னு தான்.” என்க,

“அதானே இவ்வளவு பகுமானம் பண்றீங்க?” என அவர் மனைவியும் ஒத்து ஊத,

“நான் எப்புடி இருந்தா உங்களுக்கு என்ன? என்ன பகுமானம் பண்ணிட்டோம் நாங்க? எனக்கு இந்த பேச்சுல விருப்பமே இல்லை” இதயா எகிறிக் கொண்டு வர,

“அதெப்படி விருப்பம் இல்லாம இருக்கும். என் பையனும் டாக்டர் தான். எங்களுக்கும் பொண்ணு கேட்கிற உரிமை இருக்கு அதெப்படி நீங்க பொண்ணு தராம போறீங்கன்னு‌ நானும் பாக்குறேன்” என அவர் வாய் விட பதிலுக்கு இதயா பேச என பெரும் வாக்குவாதம் வெடித்தது. எத்தனை பேசியும் இதயா மசியவில்லை‌ என்றதும்,

“இந்ந நிலைமையில இருந்துக்கிட்டும் அடங்காம பேசுற நீ? ஊர்ல முழுக்க நீ கல்யாண‌ ராசி இல்லாதவன்னு தான் பேசிக்கிறாங்க ஏதோ போனா போகுதே சொந்தம்னு பொண்ணு கேட்டு வந்த் இப்புடி தான் பேசுவீங்களா? இப்படி ஒரு நிலைமையில இருந்துக்கிட்டு உனக்கொல்லாம் இவ்வளவு பேச்சு ஆகாது” என அவர்‌ மனைவி குறி வைத்து தாக்கிட அது தவறாது இதயாவை சென்றடைந்தது.

ஏற்கனவே வெற்றி விஷேஷத்தில் அந்த பெண்மணி பேசியதில் கலங்கி போய் இருந்தவள் இதோ இவரின் நேரடி தாக்குதத்தில் முற்றிலுமாக உடைந்துப் போய் விட்டாள்.

‘அப்படி‌ என்ன நான் ராசி இல்லாதவளாகி விட்டேன் இவர்கள்‌ எல்லாம் பேசும் படி’ என்றவளுக்கு கலிவிரக்கத்தில் விழிகள் உடைப்பெடுக்க அண்ணாமலையின்‌ மனைவியை வெறித்தவாறு நின்றிருந்தாள்.

அவளின் அழுகையை கண்ட மதினிகள் இருவரும் திகைத்து தான் போயினர். இத்தனை வருடங்களில் எதற்கும் கலங்காமல் தைரியமாய் எதிர்த்து நிற்பவள் இன்று மனம் கலங்கி நின்ற தோற்றம் அவர்களுக்கே ஏற்க முடியவில்லை.

வாணி வேகமாக சென்று அவள் தோள் பற்றிட,

“மதினி!!!”என விசும்பி விட்டாள். அவளின் அழுகை வசந்திக்கு கோபத்தை கிளம்ப அடுத்த நொடி கனியின் அலைப்பேசிக்கு அழைத்திருந்தாள்.

அவன் எடுத்த நொடி,
“ஏலேய் கனி எங்கன இருக்கவேன்! இங்க யார்யாரோ எல்லாம் வந்து உன் பொஞ்சாதிய பொண்ணு கேட்டு அவளை அழ வைக்குறானுங்க எங்கன இருந்தாலும் கிளம்பி வாலே வெரசா” என்றுவிட்டு அழைப்பினை துண்டித்தவள் அடுத்து அவளது தந்தைக்கு அழைத்து உடனே குடும்பத்தினரை அழைத்துக் கொண்டு வருமாறு கூற,

வரும்வழியிலேயே தங்களது வீட்டின் அருகே இறங்கி கொண்டிருந்த துரைப்பாண்டி திகைத்து தான் போனார் மகளின் அவசரத்தில்.

வசந்தி கூறிய தகவலை கேட்ட அடுத்த நொடி கனியரசன் ஜீப்பினை எடுத்திட அது இதயா வீட்டை நோக்கி பறந்தது.

“ச்சோ எனக்குன்னே வருவானுங்க போல!!” என புலம்பியவன் விரைவாக ஜீப்பினை செலுத்த இந்த பக்கம் பரிமளம் அவர்களது மகள்களை தவிர அனைவரும் அங்கே சென்றுக் கொண்டிருந்தனர்.

இதனிடையே அந்த பெண்மணி எவ்வளவு பேச முடியுமோ அத்தனையும் பேசி இதயாவினை முடிந்தளவு நோக வைத்திருக்க கண்களில் நீர் வழிய கனியரசனின் வரவை எதிர் நோக்கி காத்திருந்தாள் ஏனெனில் வசந்தி அவளிற்கு கேட்கும் படிதானே பேசியது.

கனியரசன் உள்ளே நுழைந்த நொடி அவன் கண்களில் பட்டது அவன் இதயம் தான்.

அருகினில் நெருங்க நெருங்க அவள் விழி நீர் தெரிந்திட பதறிப் போனவன்,

“ஏய் என்னத்துக்குடி இப்போ கண்ணுல தண்ணிய விட்டுட்டு நிக்கிறவ?” என‌ அதட்டலிட தான் வாங்கும் பேச்சிற்கெல்ல்ம் இவனும் தானே காரணம் என நினைத்தவளின்‌ கோபம் முழுவதும் அவனிடம் திரும்ப அவனை‌ முறைத்துக் கொண்டிருந்தாள்.

“வாயை தொறடி!!” என்றவன் அவள் பேசாததில் வசந்தியை பார்க்க பூமிகாவின் வீட்டில் நடந்தது முதல் இங்கு இப்போது நடப்பது வரை அனைத்தையும் சொல்லி விட்டடவள்,

“என்னமோ சம்பந்தம் முறிச்சு போச்சுன்னு சொன்னீங்க இதோ மாப்பிள்ளை எந்தம்பியே வந்துருக்கான் அவனையே கேளுங்க” என அண்ணாமலையை அவள் கோர்த்து விட கொலைவெறியுடன் அவரை நோக்கினான் கனி.

அவனின் பார்வையில் அரண்டு தான் போனார் அண்ணாமலை. அவன் வருவான் என நிச்சயம் அவர் எதிர்பார்க்கவில்லை. சொந்தங்களில் இதயா திருமண பேச்சு நின்று விட்டது என கூறியிருக்க அதுவும் இல்லாமல் இத்தனை வருடம் அவளிற்கு வேறு வரனும் வராமல் போக ஒரு தைரியத்தில் பெண் கேட்டு வந்து விட்டார்.

“ஓஹோ இந்த பெரிய மனுஷரு சொன்னாரு எங்க கல்யாணப் பேச்சு நின்னுப் போச்சுன்னு! உங்களுக்கு யாரு இப்புடி சொன்னது” என்றபடி அவரை அவன் நெருங்கிட பார்த்திருந்த குடும்ப உறவுகள் பயந்து தான் போயினர் எங்கே அடித்து விடுவானோ‌ என.

“சொல்லுங்க யாரு சொன்னது அவன் வாயை கிழிச்சிடுறேன்.எவ்வளவே தைரியம் இருந்தா இப்படி சொல்லிருப்பான் அவன் கையை ஒடைச்சி மென்னிய திருகிடுறேன்?” என ஆக்ரோஷமாய் கைகளை சைகை செய்த படி அவன் பேச இங்கே அவன் முகத்தில் தெரிந்த கோபத்தில் எச்சில் கூட்டி விழுங்கினார் அண்ணாமலை.

“அது இல்லை தம்பி சொந்தக்கராங்க!!!”

“அதான் எவன்னு சொல்லுங்க அவனுக்கு சங்கு ஊதிடுறேன் இன்னைக்கே?” என்க,

“இல்லை!! இல்லை தம்பி நாங்க தான் தப்பா புரிஞ்சு கிட்டோம் போல. சரி நாங்க வரோம் வீரா வெற்றி கல்யாணத்துக்கு மறக்காம சொல்லு” என படபடவென கூறியவர் மனைவியை அழைத்துக் கொண்டு ஓட்டமெடுத்திருந்தார்.

“ம்ஹூம் முதுகெழும்பு இல்லாத இந்த ஆளை தொறத்தி அடிக்காம இந்த ஆளு பேசுனான்னு நீ கண்ணீரு விடுற ராங்கி!

என்னை மட்டும் அந்த கிழி கிழிப்ப இப்போ எங்க போச்சு அந்த தைரியம் வாய்க்கு ஏதும் பேவிகால் போட்டு ஒட்டிக்கிட்டியா??” என அவளிடம் அவன் கடுகடுக்க துரைப்பாண்டி குடும்பம் உள் நுழைந்தது.

“என்னாச்சு மச்சான்?? ஏதும் பிரச்சனையா வசந்தி போன போட்டதும் பதறிட்டு ஓடி வரோம்?” என்றவருக்கு வீரவேல் நடந்த அனைத்தையும் கூற செய்வதறியது நின்று விட்டார் துரை.

இதில் அவர் சொல்வதற்கு என்ன இருக்கிறது கனியும் இதயாவும் தானே சொல்ல வேண்டும் என அவர் அமைதியாகி விட குடும்பத்தினர் பார்வை அவர்கள் மீது தான்.

“ப்பா எனக்கும் இவளுக்கும் கல்யாணம் பண்ணி வைங்க இனிமேலும் இவளை தனியா எல்லாம் விட முடியாது” என துரையின் முன் அவளை இழுத்து அவன் முன் நிறுத்திட குடும்பத்தினர் பல்லைக் கடித்தனர் அவனது அடாவடியில்.

விஷயம் ராஜியின் காதினை எட்டிட,

“உன் சொந்த தங்கச்சியா இருந்திருந்தா இப்புடி பண்ணிருப்பியா??” என்றவள் கேட்ட கேள்வியில் துடித்துப் போனான் கனியரசன்.
 

santhinagaraj

Well-known member
இவ்வளவு நடந்ததுக்கு அப்புறமும் அந்த ராஜி இன்னும் திருந்தலையா இன்னமும் வெற்றி வேண்டும் என்று தான் இருக்காளா???
 
ராஜி என்ன செய்யனும்னு நினைக்கிறா??... அவளை வேண்டாம்னு சொன்னதுனால அக்காங்களையும் வாழ விடாம வீட்ல கூப்பிட்டு வச்சுக்கனும்னு சொல்லிடுவாளா??... லூசு மாதிரி கேள்வி கேட்டுட்டு!!...
 

Mathykarthy

Well-known member
அடப்பாவிகளா... இது தான் பொண்ணு கேட்குற லட்சணமா...... 😳😳😳😳 அண்ணாமலை உங்க பொண்டாட்டி வாய்க்கு அடி வாங்காம தப்பிச்சீங்க ன்னு சந்தோசப் பட்டுக்கோங்க... 😒.

கனி இதை சொல்றதுக்கு இத்தனை நாளா.. 😏 உன்னால தான் இதயா இவ்வளவு பேச்சு வாங்குறா.... 😬

அம்மா ராஜி இப்போ உன் டர்ன் ஆ... 🤨 உனக்காக பார்த்ததுக்கு நல்ல கேள்வி கேட்ட கனிய....😡..... என்ன செய்யப் போறான் kani.....
 
Top