எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் -9

9

அத்தான் உள்ள வரலாமா..? கதிரின் அறைவாசலில் தயங்கி நின்ற உண்மையாளை உள்ள வா என கதிர் வரவேற்றான்.

உள்ளே வந்தவள் அறையை சுற்றிப் பார்ப்பது போல நேரத்தை கடத்தினாள்.

லேப்டாப்பில் வேலை செய்து கொண்டிருந்தவன்..உமையாள் எதுவும் பேசாமல் வேடிக்கை பார்ப்பதைக் கண்டு
யோசனையாக லேப்டாப்பை மூடி வைத்தான்.

தினமும் அந்த அறையை சுத்தப்படுத்தி பொருட்களை அடுக்கி வைப்பது அவள்தான் புதிதாக இன்றுதான் பார்ப்பது போல நடந்து கொள்ளவும். அவளை வித்யாசமாக பார்த்தவன் என்னாச்சு ஏதாவது பிரச்சனையா என நேரடியாக விஷயத்துக்கு வந்தான்.

ம்ம் ஆமாம் என தலையசைத்தவள் அடுத்த நொடி இல்லை என்பது போல் தலையசைத்தாள்.

முதல்ல இப்படி வந்து உட்காரு என அதட்டல் போடவும் அவனை விட்டு சற்று தள்ளி அமர்ந்தாள்.

ம்ம்..இப்போ சொல்லு எது உன்னை டிஸ்டர்ப் செய்யுது.

அது..அது.. அத்தான்.. என்னை தப்பா நினைச்சுக்கலைன்னா நான் ஒரு விஷயம் சொல்லட்டுமா என பீடிகை போட்டாள்.

முதல்ல விஷயம் என்னன்னு சொல்லு தப்பா எடுத்துக்கலாமா வேண்டாமா என்பதை அதுக்கப்புறம் முடிவு பண்ணலாம் என்று கறாராக உரைத்தான்.

சில சமயங்களில் உமையாள் கல்லூரியிலிருந்து வித்தியாசமான பிரச்சனைகளை எல்லாம் அவனிடம் கொண்டு வருவாள்.

பரீட்சை எழுதும் போழுது அவளது ஆன்சர் பேப்பரை மற்றவர்களுக்கு கொடுத்து மாட்டிக் கொள்வது.. தோழிகளை நம்பி வெளியே சென்று விட்டு அங்கே சாப்பிட்டபின் பணம் இல்லை என விழித்துக் கொண்டிருப்பது எல்லாவற்றுக்கும் கதிர் தான்
ஓட வேண்டும்.

அதேபோன்ற சமயங்களில் இப்படித்தான் பேச்சை ஆரம்பிப்பாள் என்னை தவறாக எடுத்துக் கொள்ளாதீர்கள் நான் எதும் பண்ணவில்லை என்று.

இன்றும் ஏதோ செய்து வைத்திருக்கிறார் என நினைத்துக் கொண்டுதான் அவளை மிரட்டிக் கொண்டிருக்கிறான்.


தயங்கி தயங்கி வாய்க்குள் ஏதோ கூற..
எதுவும் கேட்கலை சத்தமா பேசு என கதிர் எரிந்து விழவும்.

பட்டென்று அவளது மொபைலை அவனது கையில் தினித்தாள்.
சத்தியமா என் மேல எந்த தப்பும் கிடையாது.. எல்லாம் அவன் தான் என்றபடி.

குழப்பமாக மொபைலையும் அவனையும் மாறி மாறி பார்த்தவன் இப்போ எதுக்கு உன்னோட மொபைலை என்கிட்ட கொடுக்கிற என்று கேட்கவும்.

வாட்ஸ் அப் பாருங்க என்றாள்.

வாட்ஸ் அப் சென்றவன் இதுல யாருடையதை பாக்கனும் என மொபைலை அவள் பக்கமாக திருப்பி கேட்கவும் முதலாக இருந்த மெசேஜ் போல்டரை தொட்டு அவனை பார்க்க வைத்தாள்.

எதுக்காக உன் பர்சனலை என்னை பாக்க சொல்லற என குறைபட்டுக் கொண்டே மேற்பார்வையாக அந்த மெசேஜ்களை பார்வையிட்டான்.

பார்த்த அடுத்த நொடியே கோபத்தில் எழுது நின்று விட்டான்.

ஏன் இதை என்கிட்ட முதல்லேயே சொல்லல அவளிடம் கேட்க.

சொன்னா நீங்க இப்படி கோபப்படுவீங்கன்னு தான் என பயந்தபடி கூறினாள்.

நான் கோபப்பட்டா பெருசா உன்னை என்ன பண்ணிடப் போறேன் ரெண்டு திட்டு திட்டுவேன் வேற என்ன பண்ணிடுவேன்.

அதுக்காக இத்தனை நாள் இந்த விஷயத்தை என்கிட்ட சொல்லாம மறைச்சியா ..தினமும் ஐ லவ் யூ சொல்லி இருக்கிறான் உனக்கே தெரியாம உன்னோட நின்னு செல்பி எடுத்து இருக்கான்.

உன்னை கண்டமேனிக்கு போட்டோ எடுத்து அதை உனக்கே அனுப்பி வச்சிருக்கான் பத்தாதுக்கு நாளைக்கு சாயந்தரத்துக்குள்ள உன் லவ்வை சொல்லலனா சாவுக்கு யாரும் காரணம் இல்லைனு எழுதி வச்சிட்டு செத்துப் போவேன் மிரட்டி இருக்கான்..எப்போ வந்து என்கிட்ட சொல்லிட்டு இருக்க.

ஆறு மாசமா இது நடக்குது..ஒரு நாள் கூட என்கிட்ட சொல்லணும்னு தோணலையா உனக்கு..? என கோபத்தில் கொந்தளித்தான்.

சாரி என தலைகுனிந்து முணுமுணுத்தவள்.. ரொம்ப பயமா இருக்கு நான் என்ன செய்யறது எனக் கண்களின் நீருடன் அவனிடம் யோசனை கேட்டாள்.

இப்போ வந்து கேளு..ஆரம்பத்திலேயே சொல்லியிருந்தா அவனை என்னனு விசாரிக்கலாம்..இப்போ அவன் எந்த அளவிற்கு மனசுல ஆசையை வளர்த்து வச்சிருக்கான்னு தெரியலையே என கடுகடுத்தவன்.

சரி போனதை விடு அவளுக்கு சமாதானம் சொல்வது போல அவனுக்கும் சமாதானம் கூறிக்கொண்டவன் இவனை பத்தின விவரங்களை குடு நான் டீல் பண்ணிக்கறேன் என்றான்.

என் காலேஜ்ல பிஜி ஃபைனல் இயர் பண்ணறாங்க..எனக்கு சீனியர்..மூனு வருஷமா என்னை லவ் பண்ணறதா சொல்லறாங்க.

பற்களை நறநறத்தவன்..அவன் காதல் கதையை கேட்கல..அவன் பேரு,ஊரு இதைபத்தி கேட்கறேன்.

ஓஓ.. சாரி அத்தான் பெயர் ஷ்யாம் வெஸ்ட் மாம்பலத்துல வீடு..அவங்க அப்பா இன்டீரியர் டிசைனர்,அம்மா ஹவுஸ் ஃவொய்ப்
ஒரு தம்பி மட்டும் இவருக்கு இருக்காங்க.

நீ சொல்லறதை பார்த்தா உனக்கும் பிடிச்சிருக்கும் போல.?

******
பதில் சொல்லு உமையாள்..அவனை பற்றி எல்லாமே விஷயமும் தெரிஞ்சி வச்சிருக்க.

அப்படியெல்லாம் எதுவும் இல்லை இதெல்லாம் ஷ்யாம் வந்து என்கிட்ட சொன்னது.

ம்ம்..சரி அவனுக்கு கார் ஓட்ட பிடிக்குமா இல்லை டூவீலரா..?

அவங்க அப்பாக்காக சிலசமயம் கார்ல வருவாங்க..ஆனா அவருக்கு டூ வீலர் தான் ரொம்ப பிடிக்கும் அதும் ராயல் என்ஃபீல்டு அவருக்கு ரோம்பவே ஸ்பெஷல்.

இதுவும் அவனே வந்து உன்கிட்ட சொன்னாதா..?

நாக்கை கடித்து மௌனம் கொண்டவளை சில வினாடிகள் பார்த்தவன்..அவனை அப்பாகிட்ட வந்து பேச சொல்லு.

கண்கள் பிரகாசமாக அவனை பார்த்தவள்..மாமா ஓத்துக்கலன்னா..?

காதலிக்க தெரியுதுல்ல.. பிரச்சனை வந்தா பேஸ் பண்ணவும் தெரியனும் புரியாதா..என கேட்டவன்..உனக்கு பிடிச்சிருக்குன்னு சொன்னா அப்பா மறுப்பு சொல்ல மாட்டாங்க தைரியமா அந்த பையனோட அம்மா அப்பாவை வந்து பேச சொல்லு என் அவளுக்கு தைரியம் கொடுத்தான்.

என்னங்க சொல்லறீங்க..?கணவர் சொன்ன செய்தி கேட்டு கௌரி அதிர்ச்சியில் எழுந்து நின்னார்.

இதில் அதிர்ச்சி அடைய ஒன்னுமே இல்ல கௌரி உமையாள் காலேஜ்க்கு போன இடத்துல அந்த பையனை பார்த்திருக்கா.. பிடிச்சிருக்கு.. நம்ம கதிர்கிட்ட சொல்லியிருக்கா, அவளோட அப்பா ஸ்தானத்திலிருந்து இந்த கல்யாணத்தை பேசி முடிங்கன்னு மகன் ஆர்டர் போட்டிருக்கான் நான் என்ன செய்யறது என மனைவியை திருப்பிக் கேட்டார்.

அப்படியெல்லாம் பேச முடியாதுன்னு கதிர் கிட்ட சொல்லுங்க.. ஏன்னு காரணம் கேட்டால் நானும் அம்மாவும் உமையாளை உனக்காக பார்த்து வைத்திருக்கோம்னு நல்லா புத்தியில் உரைக்கிற மாதிரி எடுத்துச் சொல்லுங்க என்று படபடத்தார்.

பைத்தியம் மாதிரி உளராதே கௌரி. கதிருக்கு அப்படி ஒரு எண்ணம் இருந்தால் இவ்வளவு நாள் நம்ம கிட்ட சொல்லாம இருப்பானா.

உமையாள் மனதிலேயேயும் அப்படி ஒரு எண்ணம் இல்ல நாமளா தேவையில்லாமல் கற்பனை வளர்த்துக்கிட்டா அவங்க என்ன செய்வாங்க பாவம்.

அவளுக்கு பிடிச்ச மாதிரியான வாழ்க்கையை‌ நாமளே அமைச்சு கொடுத்துடுவோமே இத்தனை நாள் நம்ம வீட்ல இருந்துட்டா பொண்ணு மாதிரி வளந்துட்டா சந்தோசமா தாரை பார்த்து கொடுக்கலாம் கௌரி.


அப்போ என் பையனோட வாழ்க்கை..?

அவனுக்கு வேறு பொண்ணு பார்க்கலாம்.

என்னவோ போங்க..இந்த உமையாள் பொண்ணை கதிருக்கு கல்யாணம் பண்ணி வைக்கலாம்னு எவ்ளோ ஆசையா இருந்தேன் கடைசில இப்படி ஆயிடுச்சு.. ஏமாற்றத்தை மறைத்துக் கொண்டு பேசினார்.

இருவருக்குமே அப்படி ஒரு எண்ணம் இல்லன்னு தெரிந்த பிறகு எப்படி நாம கல்யாண பேச்சு எடுக்க முடியும்..?

அவளை காலேஜ்ல சேர்த்தது நான் தப்பு படிக்க அனுப்பினா புத்தகத்தில் இருக்கும் பாடத்தை படிக்காமல் காதல் பாடம் படிச்சிருகா .. கரித்துக்கொட்டினார்‌.

ஏன் இப்படி கரித்துக்கொட்டற ..நீயும் நானும் கூட காதல் திருமணம் தான் ஞாபகம் இருக்குல்ல..அப்படியிருந்தும் காதலுக்கு எதிரா பேசற.

யாருக்கோ நடந்திருந்தால் நானும் காதலுக்கு தான் சப்போர்ட் பண்ணி இருப்பேன் ஆனா என் பையனுக்குல்ல அநியாயம் நடக்குது.எனக்கு தானே ஏமாற்றமும் கிடைக்குது..ஆதங்கமாக கௌரி பேசினார்.

நாம நினைக்கிறதுல என்ன இருக்கு கௌரி..கடவுள் யார் யாருக்கு எங்கன்னு முடி போட்டு இருக்காரோ அது தானே நடக்கும்..மனைவியை சமாளிக்க படாத பாடு பட்டார்.

நீங்க ஒரு முடிவு எடுத்துட்டீங்க இனி நான் சொல்லியா கேக்க போறீங்க..ஏதோ காதலிச்சிட்டா அதனால அவனுக்கே உமையாளை கல்யாணம் பண்ணி தரனும்னு சங்கல்பம் எடுக்காம வர்ற பையன் குடும்பத்தை பற்றி தீர விசாரித்து ஆர அமர உட்கார்ந்து முடிவெடுங்க..


எடுத்தோம் கவுத்தோம்னு அவசரப்பட்டு கல்யாணம் செஞ்சு கொடுத்துட்டு கல்யாணத்துக்கு அப்புறம் கண்ணை கசக்கிக்கிட்டு இங்க வந்து நிற்கிற மாதிரி இருக்க கூடாது என்று கண்டிப்புடன் கூறிவிட்டு நகர்ந்தார்.

இதுதான் கௌரியின் குணம் தனக்கு கிடைக்கவில்லை என்பதற்காக யாருக்கும் கிடைக்கக்கூடாது என்று நினைப்பவரும் கிடையாது அதே சமயம் நன்றாக இருக்கக் கூடாது என சபிப்பவரும் கிடையாது.

தன் மகனுக்கு உமையாளை திருமணம் செய்து வைக்க முடியவில்லையே என்று நினைக்கும் பொழுது மனது வலிக்கத்தான் செய்தது.

அவரின் இயல்பான குணமும் உமையாள் மீது கொண்ட பாசமும்அவள் எங்கு சென்றாலும் நன்றாக இருக்கட்டும் என மனதார வாழ்த்தினார்.

மறுநாளே ஷ்யாமின் பெற்றோர்கள் கதிரின் வீட்டிற்கு வந்து விட்டார்கள்..
பரஸ்பரம் அறிமுகப்படுத்திக் கொண்டு பொதுவான விஷயங்கள் சில நிமிடங்கள் பேசிவிட்டு நேரடியாக திருமணம் பற்றி பேசினார்கள்.

ஷ்யாம் திருமணத்திற்கு உறுதியாக இருந்ததால் மறுத்து பேச வழியில்லாமல் திருமண தேதியை குறித்தனர்.

ஷாமின் பெற்றோர்களுக்கு உமையாளின் பின்புலம் கொஞ்சமும் பிடிக்கவில்லை இவள் ரத்தினத்தின் நேரடியாக மகளாக இருந்திருந்தால் அவர்களின் சந்தோஷத்திற்கு எல்லையே கிடையாது. வளர்ப்பு மகள் போல என்று ரத்தினம் கூறவும் மகனுக்காக தலையசைத்தார் .

எதிர்காலத்தில் மருமகளின் சொத்து என்று எதுவுமே குடும்பத்திற்குள் வராது மகன் வேறு இவளை திருமணம் செய்து வைக்கவில்லை என்றால் தற்கொலை செய்து கொள்வேன் என்று மிரட்டுகிறான் .எதற்கு வம்பு என நினைத்து தான் சம்மந்தம் பேசுகிறார்.

உமையாளின் அழகு சிறு ஆறுதல் கண்டிப்பாக மகனுடன் சென்றால் ஜோடி பொருத்தம் பற்றி அனைவருமே பேசுவார்கள்..அழகிருந்து என்ன பயன்..?
இப்போதைக்கு மகனின் மிரட்டலுக்கு பயந்து எல்லாவற்றுக்கும் சரி சொல்லலாம்.

ஏதாவது ஒரு இடத்தில் சிறு காரணம் கிடைத்தால் கூட அப்பொழுது தன்னுடைய வியாபார திறமையை காண்பித்து முடிந்த அளவு இந்த குடும்பத்திலிருந்து என்ன வாங்க முடியுமா அதை உமையாளுக்கு வாங்கிக் கொள்ளலாம் என்று பிசினஸ்மேனாக கணக்கு போட்டுக் கொண்டு திருமண நாளை குறித்தார்.

இதை யார் கவனித்தார்களோ இல்லையோ கதிர் நன்றாகவே கவனித்தான்.

அதனால் தந்தை உமையாளுக்கு என ஆரம்பிக்கவும் மேற்கொண்டு பேச விடாமல் தடுத்து விட்டான்.

உமையாள் ஷ்யாம் பற்றி கூறிய உடனே அவனின் குடும்பத்தை பற்றி தீர விசாரித்து விட்டான்.

பையனைப் பற்றியோ குடும்பத்தை பற்றியோ எந்தவொரு தவறான தகவலும் கிடைக்கவில்லை ஆனால் ஷாமின் தந்தையை பற்றி கேட்டது ஒன்றும் திருப்தி இல்லை.

தொழிலில் நேர்மை கிடையாது மற்றவர்களின் பொருளுக்கு ஆசைப்படுவது வியாபாரம் என வந்துவிட்டால் எந்த எல்லைக்கு வேணாலும் சென்று அதை தன்வசம் படுத்துவது,சூது நிறைந்தவர் இப்படி பல.

சாதாரணமாக இதுபோல ஆட்களை பக்கத்தில் கூட சேர்த்துக் கொள்ள மாட்டான் கதிர் ஆனால் உமையாளுக்காக இந்த மாதிரி மனிதருடனே சம்பந்தம் வைத்தாகிவிட்டது.

மகனுக்காக எந்த அளவிற்கு சகிப்புத்தன்மையை கொண்டிருக்கிறார் என்பதை அறிய கதிர் ஆசைப்பட்டான்.

அதனால் தான் பொதுவாக பெண்களுக்கு செய்யும் சீர்வரிசை தவிர சொத்தாக எதுவும் கொடுக்கப் போவதில்லை என்பதை நேரடியாக உரைத்து விட்டான்.

அது சொல்லும் பொழுது ஷியாமின் தந்தை முகம் சொத்தென்று என்று விழுந்து விட்டது.

நொடியில் சமாளித்துக் கொண்டவர் அசட்டையாக சிரித்துவிட்டு அதனால என்ன உங்க பொண்ணு கொண்டு வந்தா என் வீடு நிறையபோகுது அங்க எல்லாமே நிறைவா இருக்கு நீங்க பொண்ணை மட்டும் அனுப்பி வச்சா போதும் பையன் ஆசைப்பட்டான் அவனுக்காக எவ்வளவோ செஞ்சிட்டோம் அதுல இதையும் செய்யலாம் என பெரிய மனுஷ‌ தன்மையாக பேசி விட்டு சென்றார்.

அவர் சென்ற பிறகு ரத்தினம் கதிரிடம் ஏன்பா உமையாளுக்காக ஏற்கனவே சில சொத்துக்களை கொடுக்கிறதா தானே இருக்கிறோம் .. ஏன் அதைப் பற்றி நீ வாய் திறக்கல.

அப்பா பையனை பொறுத்த வரைக்கும் எனக்கு முழு திருப்தி ஆனால் இவர் அப்படி இல்லை.. மனிதர்கிட்ட வெளிப்படைதன்மை சுத்தமா இவ்லை.. நீங்க இப்பவே உமையாளுக்கு சொத்துக்களை தரேன்னு சொல்லி வச்சா அவர் திருப்தி அடைய மாட்டார்.

இன்னும் மேல என்ன தருவாங்கன்னு எதிர்பார்ப்பார் அதனால திருமண சமயத்தில் கொடுத்தா‌ அவர் மனசு நிறைவா இருக்கும் ..உமையாளையும் நல்லா பார்த்துப்பார் என்று எதார்த்தத்தை கூறினான்.

சம்பத்தத்தைப் பேசி முடித்த பிறகு தான் வள்ளிக்கு தவுகல் கொடுத்தது ஊரிலிருந்து கோபமாக வந்தவர் உமையாளை கண்டதும் அடித்து விட்டார்.

ரத்தினம் தடுத்த பிறகுதான் சமாதானமானர்.

என்னவெல்லாம் கோட்டை கட்டி வைத்தார் எல்லாவற்றையும் மகள் தவிடு பொடியாக்கி விட்டாளே.

தயக்கத்துடன் கௌரியை பார்த்து மன்னிப்பை கேட்டார் .

விடுங்க அண்ணி நாம நினைச்சதெல்லாம் நடந்தா கடவுள்னு எதுக்காக ஒருத்தர் இருக்காரு சொல்லுங்க கதிர்கானவள் உமையாள் கிடையாது என்கிறது தெரிஞ்சு போச்சு உமையாள் பெயர் பக்கத்துல ஷியாமோட பெயரை தான் கடவுள் எழுதி வச்சிருக்கார்..

அப்படி இருக்கும் பொழுது நம்மால் எப்படி மாத்த முடியும்?

இந்த வீட்டில் கல்யாண மேளச்சத்தம் கேட்காதான்னு ஏங்கிகிட்டு இருக்கேன்..அது உமையாள் மூலமா நடக்க போகுது..இந்த தருணத்தை அனுபவிக்கலாம்.. பிள்ளைக்கு திருமணம் நடந்தால் என்ன மருமகளுக்கு திருமணம் நடந்தால் என்ன சந்தோஷம் ஒன்றுதானே என்று சமாதானப்படுத்தினார் வள்ளி அறியாத கௌரியின் முகம் வெகு அழகானது என்பதை அவ்வப்போது நினைவு படுத்திக் கொண்டிருந்தார் தம்பியின் மனைவி.

அதன் பிறகு கல்யாண வேலைகள் மடமடவென நடக்கத் தொடங்கியது உமையாளுக்கும் படிப்பு முடிந்து விட அவ்வப்போது ஷியாம் வந்து அவளை வெளியில் எங்காவது அழைத்துச் சென்று விடுவான்.

கௌரிக்கும் வள்ளிக்கும் அவள் வெளியில் செல்வதில் துளியும் விருப்பம் இருக்காது ஆனால் கதிர் நம்ம பொண்ணை நாம நம்பனும் பெருசா என்ன பண்ணிட போறாங்க எங்காவது போவாங்க சாப்பிடுவாங்க பிரண்ட்ஸ் யாரையாவது மீட் பண்ணுவாங்க அவங்க லவ்வர்ஸ் புரிஞ்சுக்க முயற்சி பண்ணுங்க அப்படி இல்லையா கண்டுக்காதீங்க இப்போ நம்மளால தடுக்க முடியும் கல்யாணத்துக்கு பிறகு தடுக்க முடியுமா..?

நிச்சயம் முடிஞ்சாச்சு பத்திரிக்கை அடிச்சாச்சு மண்டபம் பிடிச்சாச்சு உறவினர்களுக்கெல்லாம் தகவல் சொல்லியாச்சு பாதி கல்யாணம் முடிஞ்ச மாதிரி தானே.. இனி தாலி ஒன்னு தான் கட்டணும் அதையும் கட்டிட்டா மொத்தமா அங்க அனுப்பிட போறோம் ஏன் ரெண்டு பேரும் தேவையில்லாம பயந்துக்கறீங்க என அறிவுறுத்தினான்.

பெண்களின் பயம் சரியானது தான் என்பது போல அந்த வாரத்திலேயே ஒரு சம்பவம் நடந்ததேறியது.

அலுவலக வேலையில் தன்னை முப்புரமாக ஈடுபடுத்திக் கொண்டிருக்கும் பொழுது கதிருக்கு கௌரியிடம் இருந்து அழைப்பு வந்தது.

என்னம்மா என்ன விஷயம் சீக்கிரம் சொல்லுங்க நிறைய வேலை இருக்கு.

காலையில உமையாள் ஷியாமோட வெளியே போனது இன்னும் வரல கொஞ்சம் பயமா இருக்கு.

உனக்கு அண்ணியை பற்றி தெரியும் தானே கிராமத்தில் வளர்ந்தவர்கள் என்னென்னமோ கற்பனை பண்ணி அழுதுகிட்டு இருக்காங்க சமாளிக்க முடியல அவ போன் வேற ரீச் ஆகல கொஞ்சம் என்னன்னு பாரு பதட்டத்துடன் கூறினார்.

எங்க போறன்னு சொல்லிட்டு போனாளா..?

பிரண்ட்ஸ்க்கு எல்லாம் பத்திரிக்கை கொடுக்க போறதா கூட்டிட்டு போனாரு என்று சொல்லவும்.

அம்மா அப்படின்னா கொஞ்சம் லேட் ஆக தானே செய்யும்.. பத்து பேருக்கு தர்றதா இருந்தாலும் ஒவ்வொருத்தரும் ஒவ்வொரு இடத்தில இருப்பாங்க..


ஒரு பத்திரிகை கொடுக்க
அரை மணி நேரத்துல இருந்து ஒரு மணி நேரம் வரை ஆகும் எப்படியும் இரவுக்குள்ள வந்துருவா நீங்க பயப்படாம இருங்க என்று போனை வைத்தவனுக்கு வேலையில் கவனம் செல்லவில்லை .


எங்கே போய் இருப்பாங்க போன் வேற நாட் ரீச்சப்பிள்..ம்ம்..என யோசனையாக இருக்கும் பொழுது அடுத்த அழைப்பு புதிய எண்ணில் இருந்து வந்தது.

ஹலோ என்று பதில் கொடுத்தவன் எதிர் முனையில் இருந்து வந்து செய்தி கேட்டதும் அதிர்ச்சியில் அப்படியே அமர்ந்து விட்டான்.

கை கால்கள் மறுத்து போய் என்ன செய்வது என தெரியாமல் திக்பிரமை பிடித்த படி இருந்தது என்னவோ சில நொடிகள் தான்.

எதிர்முனையில் ஹலோ ஹலோ என சத்தம் கொடு
க்கவும் ..நான் வர வரைக்கும் நீங்க வேற எதுவும் பண்ண கூடாது, யாருக்கும் தகவலும் சொல்லக்கூடாது ஓகே என்று கூறியவன் அடுத்த நொடி அலுவலகத்தை விட்டு வெளியேறி இருந்தான்.
 
Top