எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அகத்திரை திறவாயோ - பாகம் 19

NNK-41

Moderator

அகம் 19​

எந்த வேகத்தில் கொடைக்கானலுக்கு சென்றேனோ அதே வேகத்துடன் திரும்பி வந்தேன். மனம் உலைக்களனாக கொதித்து கொண்டிருந்தது. என்னை அவள் விட்டு சென்றதை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை.​

எதற்கெடுத்தாலும் பயப்படுவாளே! இப்பொழுது மட்டும் எங்கிருந்து தைரியம் வந்தது.. அப்பொழுது பயந்ததுகூட நடிப்புத்தானோ? தன்னை அப்பாவியாய் காட்டி எல்லோரையும் ஏமாற்றியிருக்காளா!! ஷிட்!! என் இயலாமையை அறையிலிருக்கும் சுவற்றிடம் காட்டினேன்.​

அவள் இல்லாத நாட்கள் நத்தையைவிட மெதுவாக நகர அவள் மேல் இருந்த கோபம் பன்மடங்காக அதிகரித்துக்கொண்டு போனது. ஆனால் அவை மாதங்களை தாண்டி வருடத்தை தொட… நான் நானாக இல்லாமல் போனேன். வீட்டினரின் கவலை தோய்ந்த முகம் என்னை வாட்டியது. இறுகியிருந்த என்னை நெருங்க பயந்தனர். அவர்களின் சாதாரண பார்வை கூட என்னை குற்றம் சாட்டுவதுபோல் தோன்றியது.​

எங்கும் அவள் பிம்பம். தூங்கமுடியவில்லை. கண்ணுக்குள் குடியிருந்திருந்தவள் அவளோடு என் தூக்கத்தையும் நிம்மதியையும் தூக்கிட்டு போய்ட்டா.​

பகல் முழுக்க தொழிலில் மூழ்கி போக முடிந்த என்னால் இரவின் தனிமையை கடக்க முடியவில்லை. அறைக்குள் நுழைந்ததும் நான் சுவாசிக்கும் மூச்சு எல்லாம் அவள் விட்டு சென்ற காற்றாகி போக… என்னில் நீக்கமற இணைந்தவளின் பிம்பம் என் பார்வையானது.​

கனவில் அவள் வந்து அணைத்துக்கொண்டாள். இருபத்தைந்து வருட ராஜ்ஜியத்தை மூன்றே மாதங்களில் உடைத்தெரிந்திருந்தாள் என் இனியாழ். மனதை கட்டிபோட நினைத்தாலும் எதற்கும் அடங்காமல் பறந்துவிடுகிறது அவள் பின்னாலே. ச்ச!! மானம்கெட்ட மனது!!​

ஓர் நாள் மழை நாளன்று அவளின் நினைவின் வெக்கை தாங்க முடியாமல் மழைதூரலை தேடி நான் போக.. அவளை போலவே அவை விலகி போனது. இயற்கைகூட எனக்கு ஆறுதல்தர மறுக்க… முதன் முதலாக அவள் நிலையில் என்னை நிற்க வைத்து பார்த்தேன். அவளின் காலடி தடங்களில் நடந்து சிந்தித்தேன்.​

அன்று தன்னிடம் எதையோ சொல்ல வந்தாளே? பாதி புரிந்தும் புரியாமல் போயின. எனக்கு சில தெளிவுகள் தேவைப்பட்டன. யாரிடம் விசாரிப்பது என்று தெரியாமல் குழம்பிய சமயம் கைகொடுத்து உதவினான் கார்த்திக். அப்பொழுது அவள் என்னை விட்டு சென்று மூன்றாவது வருடத்தை தொட்டுக்கொண்டிருந்த காலம்.​

“எப்படி இருக்க ஆதித்யா?”​

“ம்ம்… இலக்கியா எப்படி இருக்கா?”​

“என் லக்கியை பத்தி அவகிட்டயே கேட்கலாமே ஆதி”​

“நான் என்ன மாட்டேனா சொல்லுறேன்? அவதான் என் நம்பரை பார்த்ததும் கட் பண்ணிடுறாளே!!”​

“சரி அவளை விடு… அவ பெத்து வச்சிருக்கிறவளையாவது கேட்கலாம்ல?”​

“அவளை பத்தி கேட்க கூடாதுனுதானே அவளுக்கு இனியானு பேர் வச்சிருக்கா!!”​

“உனக்கு இதுல என்ன ஆதங்கம்? என் லக்கி சோ ஸ்வீட். அவ தோழியை நினைச்சு வச்சிருக்கா..”​

“அது என் பொண்டாட்டியோட பெயர் என்பதை மறந்துட்டீங்களா!!”​

“நான் மறக்கல… நீ மறக்ககூடாதுனு வச்சிருக்காபோல. என் லக்கி செம்ம ஸ்மார்ட்”​

“மறந்து போற அளவுக்கு நான் ஒன்னும் கல்நெஞ்சுக்காரன் இல்ல… இத உன் லக்கிட்ட சொல்லிடு… அவ தோழிதான் என்னை விட்டுட்டு போனா… நான் போக சொல்லல!!”​

“நீங்க போக சொல்லல என்றாலும் உங்க வார்த்தைகள் போக வச்சிருக்கலாம்ல?”​

அதுதான் உண்மை என்பதால் என்னால் பதில் சொல்ல முடியல. நெஞ்சம் பாரமேறிய உணர்வு. கண்களை தாண்டி சூடாக வழிந்தோடியது கண்ணீர். மௌனமாக இருந்தேன்.​

“ப்ச்!! ஆதி உன்னை ஹர்ட் பண்ணனும்னு சொல்லல… இதோ உன்னை பேசுனதால இவ இங்கே அழுதுக்கிட்டு இருக்கா… உனக்காக மட்டுமல்ல அவ தோழிக்காகவும் அழறா… கொஞ்சம் யோசிச்சு பாரு ஆதி… ஏதாவது ஒரு விஷயம் உன் மனசுல க்ளிக் ஆகும்…” கார்த்திக் கேட்க​

“ஒன்னு தோணுது கார்த்திக். அவ வீட்டுல நிலவன் கொஞ்சம் ஒகே டைப். மேபி அவன்கிட்ட கேட்டா ஏதாவது க்ளிக் ஆகும்னு தோணுது. ஆனா எனக்கு அவன்கிட்ட பேச பிடிக்கல. தங்கச்சி காணாம போய்ட்டாங்கிற கவலை இல்லாம கல்யாணம் பண்ணிக்கிட்டான்!!”​

“ஏன் நீயும்தான் என்ன செய்த? பொண்டாட்டி காணுமேனு தாடி வளர்த்து தேவதாஸாகிட்டியா என்ன? இல்ல உன் ஆபீஸ் பக்கம் போகாம இருந்தீயா? போன மாசம்கூட பத்து லட்சம் ரூபாய் லாபம் பார்த்தனு கேள்விபட்டேன்!! என்ன மச்சான் உங்க நியாயம்?” கேலியாக பேசுவது போல இருந்தாலும் வலித்தது எனக்கு.​

“போதும்!! என் அண்ணன் மலரை மறக்க முடியாமதான் பேய் மாதிரி பிஸ்னஸ் பிஸ்னஸ்னு ஓடுது. அவளோட வாழ்ந்த என் அண்ணனை பத்தி எனக்கு தெரியும்!!” காதின் வழியே வந்தடைந்த தங்கையின் குரலில் நெகிழ்ந்து போனேன். பட்டென அழைப்பை துண்டித்துவிட்டேன்.​

**************​

“ஆதித்யா உனக்கு ஒரு குட் நியூஸோட வந்திருக்கேன்” கார்த்திக்கின் குரலில் துள்ளல்.​

“இனியாழ் எங்கிருக்கானு தெரிஞ்சிருச்சா!!”​

“அவசரப்படாத ஆதி… நிலவனோட பேசினேன். அவன் ஒரு க்ளூ கொடுத்தான். அதை தெரிஞ்சிக்க வேணாமா?”​

“என்ன? ஓ… ஆமாவா?? சொல்லு கார்த்திக் என்ன அது?”​

“மலருக்கு சின்ன வயசுல படிச்சி கொடுத்த மல்லிகா டீச்சர். மலரோட வாழ்க்கையில் வசந்தத்தை கொண்டு வந்தவங்க. அவங்க உன் கல்யாணதுக்குகூட வந்திருந்தாங்க..”​

“ஓ.. தெரியலயே… கவணிக்கல கார்த்திக். அவங்களுக்கு இப்போ என்ன?”​

“இவங்க மாதத்துக்கு ஒரு தடவை மலருக்கு கால் பண்ணிடுவாங்க. உன்னோட கல்யாணம் ஆன பிறகும் கால் பண்ணியிருக்காங்க…”​

“பட் அவளுக்குதான் ஹேண்ட்ஃபோன் இல்லையே எப்படி பேசியிருப்பாங்க?”​

“கல்யாணத்துக்கு முன்ன அவ வீட்டு லேண்ட்லைன்லயும் ஹாஸ்டல்ல வார்டன் நம்பர்லயும்… உன் வீட்டு ஃபோன்லயும் கால் பண்ணியிருக்காங்க போதுமா விளக்கம்!”​

“ஓ… ம்ம.. சரி”​

“இதுலேர்ந்து ஒன்னு மட்டும் நல்லா புரியுது ஆதி… அதான் நீ எந்த அளவுக்கு மலரை புரிஞ்சிவச்சிருக்கங்கிறது…” நான் அமைதியாக இருக்க​“இதுக்கு மேல எதுவும் கேட்டிராத ஆதி… ஏதாவது சொல்லிடப்போறேன்!! உன் தங்கச்சி வேற மங்காத்தா இங்க வந்து என்ன பாரு ஆத்தானு முறைச்சிக்கிட்டு இருக்கா. அம்மா தாயே மல இறங்கு தாயே. உன் அண்ணன் நல்லவன் வல்லவன் போதுமா!!” என்றவனின் பேச்சில் எனக்கு சிரிப்பு வந்துவிட்டது​

“போலீசுக்கே பாதுகாப்பு இல்லையா!! ஹா ஹா” மனம்விட்டு சிரித்தேன். இரண்டு வருடங்கள் கழித்து மனதார சிரித்தேன். மனதின் அழுத்தம் குறைந்தது போல் இருந்தது.​

“ஜோக்ஸ் அபார்ட்.. அந்த டீச்சரை பத்தி முழுசா சொல்லிடு கார்த்திக்”​

“ம்ம்… மலர் காணாமல் போனதிலிருந்து அவங்க உன் வீட்டுக்கும் அழைக்கல… அவ பிறந்த வீட்டுக்கும் அழைக்கல… தட் மீன்ஸ் அவங்களுக்கு மலர் இருக்கும் இடம் தெரிஞ்சிருக்கலாம்..”​

“இல்ல இனியாழ் அவங்களோட கூட இருக்கலாம் ரைட்?” என்றேன்​

“எக்ஸாக்ட்லி”​

“தென் வாட்? சீக்கிரம் வா கிளம்பலாம்..”​

“இரு மச்சான் அவசரப்படாதே!!”​

“உனக்கு பரவாயில்ல என் தங்கச்சி உன் பக்கத்துல இருக்கா. எனக்கு அப்படியா?”​

“அதுக்கு நீ என்னைப்போல உன் பொண்டாட்டிய தெய்வமா நினைச்சிருக்கனும். துரத்தியடிச்சிட்டு இப்போ வந்து​

நாட்கள் நீளுதே நீ எங்கே போனதும்

ஏன் தண்டனை நான் இங்கே வாழ்வதும்

ஒரே ஞாபகம் ஒரே ஞாபகம்

என்று கார்த்திக் பாட… என் நிலையை அப்பட்டாமாக எடுத்து பாடியவன் மேல் கோபம் வரவில்லை. அப்படித்தான் இருக்கிறேன் என்று சொல்ல முடியாமல் உண்மையை விழுங்கிக்கொண்டு கண்களை மூடிக்கொண்டேன்.​

*************​

பள்ளிக்கூட வளாகத்தில்தான் மல்லிகா டீச்சரை சந்தித்தோம். ஒடிசலான உடல்வாகுடன் கருணை ததும்பும் முகத்துடன் நின்றிருந்தார் அவர்.​

“வாங்க மிஸ்டர் ஆதித்யா நெடுமாறன் அண்ட் மிஸ்டர் கார்த்திக். வீட்டில் எல்லோரும் நலமா? என்ன விஷயமா என்னை பார்க்க வந்திருக்கீங்க?” என்று அவர் நேரடியாக விஷயத்துக்கு வந்ததும் என்ன சொல்வதென்ன தெரியாமல் விழித்தேன்.​

“மலரினியாழ் விஷயமா உங்ககிட்ட பேசலாம் என்று வந்தோம்..” கார்த்திக் சொல்ல…​

“ஓ… சொல்லுங்க மலர் என்கிற என் ஸ்டூடண்டை பத்தி தெரிசிக்கனுமா இல்ல இவரோட மனைவி இனியாழை பற்றி தெரிஞ்சிக்கனுமா?” என்று அவர் கேட்க… கார்த்திக்கின் பார்வை அர்தத்துடன் என்னை பார்த்து மீண்டது​

“என் இனியாழ் இருக்குமிடம் தெரிஞ்சிட்டா… பிறகு உங்க ஸ்டூடண்டை பற்றி தெரிஞ்சிக்கிறேன்” என்றேன். மெல்லிய புன்னகை அவர் முகத்தில் வழிந்தோடியது.​

“என் இனியாழ்? ம்ம்... என்னை கண்டுபிடிக்கவே உங்களுக்கு மூன்று வருடம் ஆகியிருக்கே மிஸ்டர் ஆதித்யா. உங்கள் வேகம் கண்டு எனக்கு சிலிர்க்கிறது” முகத்தில் அதே புன்னகை. வார்த்தைகள் மட்டும் கத்தியின் கூர்மையுடன் வந்தன. வந்தவை குறி தவறாமல் என்னை குத்தி கிழித்தன.​

“நீங்களாச்சும் பரவாயில்ல மிஸ்டர் ஆதி.. மூன்று மாதம் அவளோட வாழ்ந்துட்டு மூன்று வருஷம் கழிச்சி தேடி வந்திருக்கீங்க. ஆனா மலரோட குடும்பம் தொலைஞ்சு போனவளை தலை முழுகிட்டாங்க போல. நீங்க போலீஸ் ரிப்போர்ட் பண்ணாததுக்கு உங்க குடும்பம் கௌரவம் அண்ட் உங்க குடும்பத்திலேயே ஒரு போலீஸ் ஆஃபிசர் இருப்பது காரணமா இருக்கலாம். ஆனா அவ குடும்பம்… மொத்தமா தலைமுழுகிட்டாங்க போல”​


“எனக்கு ரொம்ப கோபம் வரும். கோபத்துல என்ன பேசுறேன்னு எனக்கே தெரியாது..” என்றேன்​

“ஆமா பொண்டாட்டி வீட்டை விட்டு போனதுகூட தெரியாது…” கார்த்திக் எடுத்து கொடுக்க​

“அவ செய்த விஷயம் அப்படி டீச்சர். அவளுக்கு ஆட்டிசம் இருக்கிறதை பத்தி சொல்லாம மறைச்சிட்டா!!”​

“அந்த நேரத்துல இந்த விஷயத்தை அவ உங்ககிட்ட சொல்லியிருந்தா உங்க ரியாக்ஷன் என்னவா இருக்கும் மிஸ்டர் ஆதித்யா?” நிதானமாக அவர் கேட்க அமைதியானேன்.​

"இதே கோபம்தானே வந்திருக்கும்? கண்மன் தெரியாம கோபப்பட்டிருப்பீங்கத்தானே? இல்ல அடடா உண்மை சொல்லிட்டீயே தங்கம்னு கொஞ்சியிருப்பீங்களா?? அவளோட பயந்த சுபாவம் உங்களுக்கு தெரியும்தானே!! இல்ல அதுகூட தெரியாம அவகூட குடும்பம் நடத்தியிருக்கீங்களா?”​

சாட்டையடிகளாய் கேள்விகள் விலாச வலி தாங்க முடியாமல் தரையில் அமர்ந்துவிட்டேன்.​

“டீச்சர் ப்ளீஸ்…” கார்த்திக் வேண்ட​

“மிஸ்டர் கார்த்திக் இன்னும் நமக்கு தெரிந்த ஒரு உண்மையையும் சொல்லிடுறேன். பிறகு நீங்க அவரை மொத்தமா சமாதானப்படுத்திக்கலாம்” என்றவர் என்னை ஆழமாக பார்த்தார்.​

எனக்குள் பயப்பந்து வந்து நெஞ்சை அடைத்தது. இன்னும் பெரிதாக எதுவோ ஒன்று இருப்பதாக மூளை சொன்னது. அதுவும் கார்த்திக்கிக்கும் தெரியும் என்றார்களே என்ற யோசனயுடன் அவன் முகம் பார்க்க… அவன் முகம் திருப்பிக்கொண்டான். என்னவாக இருக்கும் அவளுக்கு ஏதாவது?? ஐயோ!! ஒன்னும் இருகக்கூடாது… என் இனியாழுக்கு ஒன்னும் ஆகியிருக்ககூடாது…’ அவசர வேண்டுதலை போட்டுக்கொண்டே தவிப்புடன் அவர் முகம் பார்க்க… என்ன நினைத்தாரோ என் அருகில் அமர்ந்தவர்… என் கரங்களை அழுத்திக்கொடுத்தார்.​

“மலர் என்னுடன்தான் இருக்கா மிஸ்டர் ஆதி. பயப்பட தேவையில்லை. ஆனா நான் அவளை எந்த கோலத்தில் பார்த்தேன் தெரியுமா?” என்றவர் கண்களை மூடிக்கொண்டார்.​

“அன்று உங்க ஊரில் நடக்கவிருந்த ஆசிரியர் ஒன்றுகூடல் நிகழ்வுக்கு என் கணவரோட வந்துக்கொண்டிருந்தேன். அப்போ எதிர்பாரா விதமாக எங்க வண்டி ஆக்சிடண்ட் ஆகிடுச்சு. என் கணவருக்கு கார் ஓட்டமுடியாத நிலைமை. எனக்கும் கைகாலில் எல்லாம் சிராய்ப்பு. உடனடியாக எங்க காரை இடிச்சவரே ஆஸ்பிட்டலுக்கு அழைச்சிட்டு போனார். அந்த நல்ல உள்ளத்துக்கு இன்றும் நான் நன்றி சொல்லிக்கிட்டு இருக்கேன். இல்லனா அந்த ஆஸ்பிட்டல்ல நான் மலரை பார்த்திருக்க முடியாதுல..”​

இதை கேட்டதும் என் உடலில் பெரும் அதிர்வு. ஏன் எதற்காக? கேட்க நா எழவில்லை… ஆனால் என் உயிர் துடித்தது. அணைதாண்டி என்விழிநீர் வழிந்தோடி என் கைகளை நனைத்துக்கொண்டிருந்தன.​

“நாங்க… காரிடாரில் அமர்ந்திருந்த நேரம் பரபரப்பாக ஸ்டரச்சரை இழுத்து வந்துக்கொண்டிருந்தனர். யாரென்று எனக்கு முதலில் தெரியல… ஆனா அந்த குரல் என்னால் மறக்க முடியாத குரல். என் மலரின் குரல்.​

‘நான் அப்படிப்பட்டவள் இல்ல!! என்ன நம்புங்க!!’ இந்த வார்த்தைகள் மட்டும்தான் அவ உச்சரிச்சிக்கிட்டே இருந்தா. அதுக்கு மேல என்னால உட்கார முடியாம அவக்கிட்ட ஓடுனேன். உடல் முழுக்க ரத்த காயங்களோட மலரை பார்க்கிறப்போ…”​

ஒரு நிமிடம் என் உலகம் சுழல்வதை நிறுத்தி எல்லாம் ஸ்தம்பித்து நின்றது போலானது. என் வார்த்தைகளின் வீரியம் இப்பொழுது உணர்ந்தேன். என்னை நானே எண்ணி வெட்கினேன். அன்று பேசியது உயிரை இப்பொழுதும் குடித்தது. என் ஆழ்மனதில் அமிழ்ந்திருந்த அவளின் முகம் மேலெழும்பி என்னை பார்த்து குற்றம் சாட்டியது. என்ன செய்து வைத்திருக்கிறேன்!!​

“அவளை கண்ணம் தட்டி என்னை பார்க்க செய்தேன் மறுபடியும் அதையே சொன்னாள். அவ கையில துணிபோல் எதுவோ ஒன்று வச்சிருந்தா. அதை சுட்டிக்காட்டி முதல்ல சொன்னதையே சொல்லி அழுதா. மனதளவில் பாதிக்கப்படிருக்கிறாள் என்பதை உணர்ந்தேன். என் பெயரை சொல்லி அவளை என் பக்கம் திருப்ப முயற்சித்தேன். பலன் கிடைத்தது. அவ முகத்தில் சிறு மாறுதல் வந்தது.​

‘என்னை ஏன் விட்டுப்போனீங்க… இனி என்னை விட்டு போககூடாது’ என்றாள். எனக்கு நிம்மதி வந்தது. எனக்கு தெரிந்தவற்றை மறுபடியும் சொன்னாள். அதாவது சுதீஷோடு நடக்கவிருந்த நிச்சயம் வரைக்கும் சொல்லிக்கொண்டிருந்தவள் தீடீரென மயங்கி போனாள்.​

அவளது கையில் உள்ளதை என்னிடம் ஒப்படைத்த தாதியர் அவளின் அடையாளங்களை என்னிடம் கேட்டுவிட்டு சிகிச்சை தொடர்ந்தனர். முதல்ல உங்களுக்கு இன்ஃபார்ம் பண்ணலாம் என்றுதான் இருந்தேன்… ஆனா எதுவோ எனக்கு சரியா படாததால அவ கண்விழிக்கும் வரைக்கும் காத்திருந்தேன். உங்களுக்கும் அவளுக்கும் பிரச்சினை என்று தெளிவாகவே தெரிஞ்சது.​

காத்திருக்கும் நேரம் அவ கொடுத்த துணியை திறந்து பார்த்தேன். இதோ இதுதான் அது..” என்று என் கையில் திணித்ததை எடுத்து பார்த்து அதிர்ந்தேன். சில்லு சில்லாய் உடைந்து போனேன்.​

அவளை கடைசியாக பார்த்த அன்று அவள் என் சட்டையில் கொடுத்து சென்ற காதல் சின்னம். இதையா அவள் பொக்கிஷமாக வைத்திருந்தாள்!! அதனுடன் அவளுடைய டைரியும் இருந்தது. கண்கலங்க அவரை நான் பார்க்க…​

“சட்டையில குங்குமம் பார்த்ததும் இந்த சட்டை உங்களோடதுனு புரிஞ்சிக்கிட்டேன். அதே நேரம் தாதியர் வந்து என்னிடம் கையொப்பம் கேட்டாங்க…” என்றவர் சற்று நிதானித்து என் முகம் பார்த்தார். அந்த பார்வை எனக்குள் பூகம்பத்தை கொடுத்தது. என் இதயதுடிப்பு காதில் இடிமுழக்கமாய்…​

“மலருக்கு அதிர்ச்சியில் கர்ப்பம் கலைந்துவிட்டதென சொன்னாங்க..”​

“என்ன!!! இனியாழ் கர்ப்பமாக இருந்தாளா!!” மின்னல் தாக்கிய உணர்வு… ஆனால் நான் சாகவில்லை… தாக்கிய வேகத்தில் கருகி செத்திருக்க வேண்டும்… உயிரோடுதான் இருந்தேன். செத்துவிட்டால் இந்த துன்பத்தை எல்லாம் யார் அனுபவிப்பது என்று சாவு எனக்கு சாபமிட்டுவிட்டது போல.​

எனக்கு ஒரு பிள்ளை உதித்திருந்திருக்கிறது. இந்த மூன்று வருடம் அது தெரியாமல் வேண்டாத கோபத்தை தேக்கி வைத்திருந்த என்னை எண்ணி நான் வெட்கினேன். விதைத்தவனுக்கு தெரியவில்லை முளை விட்டிருப்பது. இதைதான் அன்று சொல்ல வந்திருப்பாளோ?? முதன் முதலாக தானாக வந்து என் தோளில் சாய்ந்தாளே!! எத்தனை ஆசைகளை தேக்கி வைத்திருந்தாளோ!! தெரியவில்லையே!! நான் பாவி!! நான் பாவி!! வார்த்தைகளால் அவள் மனதை கொன்று விட்டேனே!! அந்த சட்டையை வைத்திருந்தாளாமே!!​

ஐயோ என்னை காதலிக்கிறாயா என்று கேட்டாளே!! பதில் சொன்னேனா!! நான் பாவிடி.. பாவி!!​

அன்றைய இனிய காலையுடன் தன் காலசக்கரம் நின்றிருக்ககூடாதா என்னும் ஏக்கம் நெஞ்சத்தை கவ்வி பிடித்தது.​

சட்டென எழுந்து அங்கிருந்து நடக்க ஆரம்பித்தேன். அதற்குமேல் எதையும் கேட்க எனக்கு துணிவில்லை. அவளுடனான என் நினைவுகள் என்னை துரத்தின. எத்தனை தூரம் நடந்தேன் என்பது எனக்கு தெரியவில்லை.​

என் கால்கள் நனைவது உணர்ந்து குனிந்து பார்த்தேன். ஆற்றங்கரையோரம் நின்றிருந்தேன். என் இனியவளுக்கு கொடுத்த வலிக்கு பேசாமல் இப்படியே நடந்து ஆற்றுக்குள் அமிழ்ந்து போய்விடலாமா?? இரண்டடி ஆற்றை நோக்கி நடந்தேன்.​

அவளை தனியே விட்டு செல்வதா… மறுபடியும் அவளை விட்டு செல்வதா!! என்னிடம் இருந்த அனைத்து கர்வங்களும் அழிந்து பின்னோக்கி செல்ல… புது மனிதனாய் என் இனியாழின் கணவனாய் நின்றேன். அவள் இப்பொழுது நலமுடன் இருக்கிறாள் என்ற செய்தி சற்று என்னை ஆசுவாசப்பட வைத்தது.​

மூளை என்ற வஸ்து வேலை செய்ய ஆரம்பித்தது. டீச்சர் சொன்னதை எல்லாம் ஒவ்வொன்றாக எண்ணிப்பார்த்து கொண்டிருந்தேன். கார்த்திக்கு இனியாழ் இருக்கும் இடம் தெரிந்திருக்கிறது. என்னிடம் மறைத்திருக்கிறான்.​

ஏன் என்னிடம் சொல்லவில்லை? யோசித்தேன்… பதிலும் கிடைத்தது. இந்த கொலைக்காரனுக்கு பொண்டாட்டி ஒன்றுதான் கேடு என்று நினைத்திருப்பான் போலும். ஒரு சின்னப்பெண்ணின் மனதை கொன்ற பாவியாக நின்றேன். அது மட்டுமா? என் வாரிசையும் அல்லவா கொன்றுவிட்டேன். எல்லாவற்றிட்கும் மூல காரணம் என் கோபம்.​

நிதானித்தேன்… அவளை ஒரு முறையேனும் பார்க்கும் அவா என்னை உந்தித்தள்ள மெல்ல திரும்பி நடந்தேன். அங்கே கார்த்திக் நின்றிருந்தான். தலை குனிந்துக்கொண்டேன்.​

“கமோன் ஆதி… தவறு செய்வது இயல்பு. அதை உணர்ந்துட்டல்ல… அது போதும்” என்றான்​

“உனக்கு என் விஷயம் தெரிஞ்சும் என்கிட்ட பேசுறதே பெருசு கார்த்திக்” தவிப்புடன் சொன்ன என்னை இறுக கட்டிக்கொண்டான்.​

“முடிஞ்சது முடிஞ்சதாகவே இருக்கட்டும் ஆதி. இனி மலர் உன் பொறுப்பு. அவளை எப்படி சரியாக்கனும் என்பதை மட்டும் யோசி”​

சட்டென அவன் அணைப்பிலிருந்து விலகி அவன் முகம் பார்த்தேன்​

“என் இனியாழுக்கு என்ன? நல்லா இருக்காத்தானே?” தவிப்புடன் நான் கேட்க​

“ஆரோக்கியத்துக்கு குறைவில்லை… ஆனா அவளோட நினைவுகள் மட்டும் சுதீஷோட நிச்சயத்தோட தங்கி நின்னுருச்சி!!”​

“வாட்!!” உலகமே ஒலியற்று போன மாதிரி ஓர் அமைதி. என்னால் தாங்கிக்கொள்ள முடியவில்லை. எல்லாம் என்னால்தானே!! என் அவசர புத்தியால் தானே!! என் கோபத்தால்தானே!!​

“உன்னை அடையாளம் தெரியுமா என்றுகூட தெரியல… ப்ச்!! எதுக்கு முகம் இப்படி கசங்குது!!” என்றவன் என் கைகளை பிடித்துக்கொண்டான்.​

“முதல்ல அவளோட டைரியை படி… அவளைப்பத்தி முழுசா தெரிஞ்சிக்கோ… அப்போதான் உனக்கு புரியும். நான் டீச்சரோட காத்திருக்கேன்”​

சட்டென அவள் டைரியை திறந்து படிச்சேன். குழந்தை பிராயத்திலிருந்து அவள் அனுபவித்த துன்பங்களை படிக்க விண்டுபோனது நெஞ்சம். இப்படிகூட பெற்றவர்கள் இருப்பார்களா என்று நீலகண்டன் சாவித்திரி மேல் கொலைவெறி வந்தது.​

பூமீகா சுதீஷ் இவங்க ரெண்டு பேரையும் சும்மா விடக்கூடாது. என் வாழ்க்கையில் விளையாண்ட இவங்களை சும்மா விடக்கூடாது. என்ன செய்யலாம்? யோசித்தேன். திட்டங்கள் வகுத்தப்பின் மல்லிகா டீச்சரையும் கார்த்திக்கையும் சென்று பார்த்தேன்.​

இனியாழை பற்றி விசாரித்தேன். அவளை பார்க்க மனம் உந்தினாலும். எனக்குள் உறுதி பூண்டுக்கொண்டேன். எல்லாவற்றையும் சரி செய்தப்பிறகே அவளை பார்க்கனும். அதற்கென அவளை பார்க்க எனக்கு விருப்பமில்லை என்பதற்கில்லை. அவளை பார்த்தால் என்னால் என் உணர்வுகளை அடக்க முடியாது.​

இப்பொழுது மல்லிகா டீச்சரின் பாதுகாப்பில் படித்துக்கொண்டிருக்கிறாள். படித்து முடிக்கட்டும். அதுதானே அவளின் ஆசை. அன்று என்னிடமும் அதைதானே வேண்டினாள். படிக்கட்டும். நிம்மதியாக படிக்கட்டும்.​

****************​

நிலவனை அழைத்தேன். வந்தான். டைரியை அவனிடம் கொடுத்தேன். படித்தான். கண்கள் கலங்கியது போலும். நான் எதுவும் சொல்லவில்லை. இருவரும் சரி பங்காக தவறு செய்திருப்பதால் அவன்மேல் பழி சொல்ல விரும்பவில்லை.​

இனியாழ் படிப்பு முடிந்ததும் அவன் வீட்டுக்கு அழைத்து போக சொன்னேன். நான் அழைத்துச்செல்ல சில காலங்கள் தேவைப்பட்டன எனக்கு. இங்கிருக்கும் வீடுபோல் கொடைக்கானலில் அவள் பெயரில் ஒரு வீடுகட்ட திட்டம் போட்டேன். எங்கள் வாழ்க்கை இனி கொடைக்கானல்தான் என்று முடிவெடுத்திருந்தேன்.​

அவளுக்கு சிறு சர்பிரைஸ் ஒன்றும் வைத்திருக்கிறேன். இதோ இன்று இலக்கியாவும் கார்த்திக்கும் வந்து விட்டனர். இனி அவர்களை பார்த்த பிறகு இனியாழின் எதிர்வினையை பொருத்திருக்கிறது என் வருங்காலம்.​

 
Last edited:

santhinagaraj

Well-known member
பாவம் மலர் வாழ்க்கைல ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா.

மல்லிகா டீச்சர் கிரேட் 👏👏
 

NNK-41

Moderator
பாவம் மலர் வாழ்க்கைல ரொம்ப கஷ்டத்தை அனுபவிச்சிருக்கா.

மல்லிகா டீச்சர் கிரேட் 👏👏
ஆமாம்... ரொம்பவே கஷ்டப்பட்டுட்டா... இனி மாறன் பார்த்துக்குவான் டியர்... யெஸ் மிக்க நன்றி டியர்:love:
 

NNK-41

Moderator
எவ்வளவு கஷ்டம்???... அவளுக்கு ஆக்ஸிடென்ட்டா???... இப்பையாவது புரிஞ்சுக்கிட்டானே!!
அவளுக்கு அனுசரனையான குடும்பமும் அமையல... கொண்டவனும் புரிஞ்சிக்கல... பாவம்தான் அவ
 

NNK-41

Moderator
பாவம் மலர் ரொம்ப கஷ்டப்பட்டு இருக்கா
உண்மை டியர். இனியாவது அவள் வாழ்வு செழிக்கனும். செழிக்க வைப்பான் அவளின் நெடுமரம்:)
 
Top