எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் -10

10

கதிரின் அடிமனம் என்ன எச்சரித்ததோ அதுதான் நடந்திருக்கிறது.

எவ்வளவு முடியுமோ அவ்வளவு சீக்கிமாக அந்த இடத்திற்கு சென்றான்.

அது பிரபல நடசத்திர விடுதி.. கடற்கரையை‌ ஓட்டி இருந்தது.

கதிர் சென்றவுடன் இவனுக்காகவே காத்திருந்தது போல ஒருவன் ஓடிவந்தான்.

எதும் பிரச்சனை இல்லையே ரகு.

இல்லை கதிர் நீ கால் பண்ணின உடனே இங்க வந்துட்டேன் இப்போ சிஸ்டர் ஷேப்.

அவன்..?

பக்கத்துல இருக்கற நர்சிங் ஹோம்ல‌ பஸ்ட் எய்ட் கொடுக்க சேர்த்திருக்கேன் நாம போற வரைக்கும் பத்திரமா பாத்துப்பாங்க.

இங்க ஹோட்டல்ல‌ ஏதும் பிரச்சனை வராதுல்ல..

நாமளா சொன்னாதான் நியூஸ் வெளியே வரும் ஒருத்தனும் நம்மளை மீறி வாய் திறக்க மாட்டான் என்று ரகு சொல்லும் பொழுது ஹோட்டலுக்குள் நுழைந்திருந்தனர்.

இவர்கள் உள் நுழையுமே மேனேஜர் எதிரில் வந்தார்..அவரைக்கண்டதுமே
கோபமான கதிர் என்ன மேனேஜர் சார் ரூம் அதிகமா காலியா இருக்கறதால வேற மாதிரியெல்லாம் வேலை பாக்கறீங்க போல.. இதெல்லாம் உங்க முதலாளிக்கு தெரிந்து நடக்குதா இல்ல தெரியாம நடக்குதா..?

அய்யய்யோ சார்.. இது பாரம்பரியத்துக்கு பேர் வாங்கின ஹோட்டல் இங்க இதுவரைக்கும் இந்த மாதிரி பிரச்சனை வந்ததே இல்லை.

இதுதான் ஃபர்ஸ்ட் டைம் அதனால தான் போலீசுக்கு போகாம நேரா உங்களுக்கு தகவல் கொடுத்தோம் எங்களை மன்னிச்சிடுங்க..பிரச்சனையை பெருசு படுத்தாதீங்க இனிமே இது போல என்னைக்குமே இங்க நடக்காது என உறுதி கொடுத்தார்.

சரி எங்க இருக்காங்க..என மொட்டையாக கேட்கவும் ஒரு சாவியை கையில் திணித்தவர் கடைசி அறையை காண்பித்தார்.

சற்று முறைப்புடனே வாங்கிக் கொண்ட கதிர் ரகுவை பார்த்து நான் பின்வாசல் வழியாக வர்றேன் நீ காரை ரெடியா வை என்று கூறியபடி அறையைத் திறந்தான்.

அவன் பயந்தது போலவே தான் அறை கர்ண கொடுரமாக இருந்தது.

பொருட்கள் எல்லாம் அடித்து நொறுக்கப்பட்டு பெட் கிழக்கப்பட்டு பஞ்சு அறை முழுவதும் பறந்து கொண்டிருந்தது.

அதற்கு நடுவே உமையாள் எங்கே எனத் தேடினான் அறை மூளையில் வேர்த்து கொட்ட பயந்து நடுங்கிக் கொண்டிருந்தாள்.

அறைக்கதவை திறக்கவும் முதல் நாள் அவளை தனது வீட்டில் எந்த கோலத்தில் கண்டானோ அதேபோல கண்களில் மிரட்சியுடன் அங்கிருந்து தப்பித்துவிடும் நோக்குடன் அவனைத் தாண்டி ஓடினாள்.

இம்முறையும் அதேபோலத்தான் அவளை பிடித்து நிறுத்தியவனின் பிடியில் இருந்து முழு பலத்தையும் காண்பித்து திமிறினாள்.

உமையாள்....உமையாள்.. நான் தான் கதிர்..என்னைப்பாரு என கத்திச் சொல்லவும் நிதானத்திற்கு வந்தவள் அவன் தான் என உணர்ந்ததும் அவனது நெஞ்சில் சாய்ந்து அழத்தொடங்கினாள்.

நான் எதுவுமே பண்ணல அத்தான் எல்லாம் அவன் தான்..என் பர்மிஷன் இல்லாம இங்கலாம் தொடறான்..அப்புறம்..அப்புறம் என மேலே சொல்ல முடியாமல் கதற ஆரம்பித்தாள்.

கண்களை மூடி அந்த தருணத்தை கடக்க முடிந்தவன் இட்ஸ் ஓகே அதான் எதுவும் ஆகலல்ல காம் டவுன்..காம் டவுன் என அவளின் தலையை வருடி சாந்தப்படுத்த முயற்சித்தான்.

சற்று நேரம் அமைதியாக இருந்தவள் சட்டென்று அவனை பிடித்து தள்ளி விட்டு.. என்னை பார்த்தா உங்களுக்கெல்லாம் எப்படி தெரியுது நான் தான் வேணாம்னு சொல்லறேன்ல.. யார் என்னை தொட்டாலும் எனக்கு பிடிக்கலை தானே அப்பறம் ஏன் தொடனும்..என அவனிடமே கேள்வி கேட்டாள்.

அவனால் இங்கு வரும் பொழுதே இது தான் நடந்திருக்கும் என ஓரளவிற்கு யூகித்து இருந்தான்.அதை அவள் வாயால் கேட்கும் பொழுது மிகவும் வலித்தது.

வீட்டுக்கு போய் பேசிக்கலாம் வா இங்கிருந்து போகலாம் என அவளை அழைக்க..இல்ல நான் வரலை..அம்மா அடிப்பாங்க..அத்தை திட்டுவாங்க..என அழுதாள்.

யாரும் எதுவும் சொல்ல மாட்டாங்க.
என சமாதானப்படுத்தி வெளியே அழைத்து வந்தான்.

ரகு காருடன் பின்வாசலில் காத்திருக்க அதில் உமையாளை அமர்த்தி விட்டு ரகுவிடம் வந்த கதிர் நா இவங்களை வீட்ல விட்டுட்டு வரேன் நீ ஹோட்டல் பில் மொத்தமும் செட்டில் பண்ணிடு.. உமையாள் இங்க வந்ததோ பிரச்சனை நடந்ததோ வெளியே யாருக்கும் எப்போவும் தெரிய கூடாது மனசுல வச்சுக்கோ .

டேமேஜ் ஆன பொருட்களின் விலையை விட அதிகமா கூட வாங்கிக்க சொல்லு ஆனா யாரும் வாய் திறக்க கூடாது என்று உறுதியாக கூறியவன் இந்த வேலையை முடிச்சிட்டு ஷ்யாமுக்கு துணையா இரு நான் வந்து அவனை கொஞ்சம் கவனிக்கணும்.. வார்த்தைகளில் உக்கிரம் நிறைந்து கிடந்தது.


அதேபோல உமையாளை வீட்டில் விட்டவன், கௌரியிடமும் வள்ளியிடமும் அவளை தொந்தரவு செய்யாதீர்கள் என கண்டிப்புடன் கூறிவிட்டு அடுத்து ஷ்யாமை தேடி வந்தான்.

அந்த சிறிய மருத்துவமனையில் இருந்த நான்கு அறையிலேயுமே தேடியவன் ரகுவிடம் கோபத்தை காண்பித்தான் எங்கு அந்த நாய்.

டேய் மச்சான் கோவப்படாதடா அவன் பாவம் டா இன்னோசென்ட்..
ரொம்ப பயந்துட்டான், அதான் வீட்டுக்கு போன்னு அனுப்பிட்டேன்.
சத்தியமா இங்க நடந்த விஷயத்தை யார்கிட்டயும் சொல்ல மாட்டான் அதுக்கு நான் கேரண்டி என ரகு உறுதி அளிக்கவும்.

நான் என்ன சொன்னேன் ..நீ என்ன பண்ணி வச்சிருக்க டேமிட்.. என ரகுவின் சட்டையை கொத்தாக பிடித்தவன் அவன் யார் மேல கை வச்சிருக்கான் தெரியுமா என் வீட்டு பொண்ணு மேல என்று சொல்லவும்.

அப்படின்னு நாமளா ஒரு முடிவுக்கு வரக்கூடாது கதிர் என்ன நடந்ததுன்னு தெரியாம நீயா ஏதாவது கற்பனை பண்ணிக்காத..முதல்ல உமையாளை‌ விசாரி..பிறகு என் மேல கோபத்தை காட்டு..எனக்கு தெரிந்தவரை அவன் மேல பெருசா தப்பு எதுவுமே இல்லடா.

ஒரு பொண்ணை தனியா ரூமுக்கு கூட்டிட்டு வந்திருக்கான் அவ கிட்ட தப்பா நடந்துக்க முயற்சி பண்ணி இருக்கான் இது உனக்கு பெருசா தெரியலையா எனக் கேட்கவும்.

டேய் உமையாளை கூட்டிட்டு வந்ததும் உண்மைதான் தனியா ரூம் எடுத்ததும் உண்மைதான் ஆனால் தப்பான நோக்கத்தோடு இல்லையாம்.. அடிச்சு கூட கேட்டுட்டேன்டா கால்ல விழுந்து கெஞ்சுறான் சத்தியமா நான் எதுவுமே பண்ணல கொஞ்சம் உணர்ச்சி வசப்பட்டு அவளை லைட்டா தான் டச் பண்ணினேன் பைத்தியம் மாதிரி கத்த ஆரம்பிச்சிட்டா அங்கிருந்து கண்ணாடியை உடைச்சி கிளாஸ் பீஸ் எடுத்து என்னை குத்த வந்துட்டா பயந்து போய் வெளியே வந்துட்டேன்னு அழறான்டா..என்ன பண்ண சொல்லற.. அதான் அனுப்பி விட்டுட்டேன்.

சரி நீ போ ரகு இந்த விஷயத்தை எப்படி கேன்டில் பண்ணறதுன்னு எனக்கு தெரியும்..என்றவன் சற்று தயங்கிவிட்டு சாரிடா நான் உன்கிட்ட போன் பண்ணி சொன்னதும் அஞ்சு நிமிஷத்துல வந்து ரொம்ப சப்போர்ட் பண்ணியிருக்க அதை புரிஞ்சிக்காம நான் வேற..சாரிடா மாப்பிள்ளை எதையும் மனசுல வச்சுக்காத என நண்பனிடம் மனதரா மன்னிப்பை வேண்டினான்.

விடுடா மச்சி நீ என்ன வேணும்னா‌ செஞ்ச ..நட்புக்குள்ள சாரி தேங்க்ஸ்லாம் வேணாம்டா..நான் எல்லாத்தையும் மறந்துட்டேன் நீ சிஸ்டரை விசாரிச்சிட்டு எதுனாலும் பண்ணு நண்பனுக்கு அறிவுறுத்தி விட்டு சென்றான் ரகு.

அதன் பிறகு உமையாளை சென்று பார்த்தவன் என்ன நடந்தது என விசாரிக்க ஆரம்பித்தான் வழக்கம் போல நான் எந்த தப்பும் பண்ணல அவன் தான் என ஆரம்பித்தவள் நடந்தவற்றை சொல்ல ஆரம்பித்தாள்.

பெரியதாக எதுவும் நடக்கவில்லை நண்பர்களுக்கு பத்திரிக்கை கொடுத்தவர்கள் மதிய வேளையில் சாப்பிடுவதற்காக கடற்கரையை ஒட்டிய ரெஸ்டாரண்ட்க்கு சென்றிருக்கிறார்கள்.. சாப்பிட்டு முடித்தவர்கள் கடலை சற்று நேரம் வேடிக்கை பார்க்கலாம் என கரையோரம் அமர்ந்திருக்கிறார்கள்.

கடலையும் அதன் அலைகளையும் கண்ட உமையாள் யோசிக்காமல் கடலில் இறங்கி விட்டாள்.

ஆடை ஈரமாகிவிட அதன் பிறகு தான் என்ன செய்வது என ஷ்யாமை பார்த்தாள் .

முகம் முழுவதும் புன்னகையுடன் அவளின் குழந்தை தனத்தை ரசித்தவன் நான்தான் உன்கிட்ட கடல்ல இறங்குவதற்கு முன்னாடியே வேணான்னு சொன்னேன்ல கேட்டியா இப்போ என்ன பண்றது இன்னும் நாலு பேருக்கு பத்திரிக்கை கொடுக்கணும் என்று பொய் கோபத்தோடு கேட்டான்.

இப்போ என்ன பண்றது ட்ரெஸ் வேற ஈரம் ஆயிடுச்சு மண்ணு வேற என ஆடையில் ஒட்டி இருந்த மணலை தட்டி விட்டபடி பாவமாக கேட்டாள்.

என்ன பண்ணலாம் நீயே சொல்லு ஆனா என்னால ஒரு ஹெல்ப் பண்ண முடியும் என்றவன் அவளது ஆடை மீது ஒட்டி இருந்த மணலை தட்டி விட சென்றான் சற்றென்று பின்வாங்கி நின்றவர் ஷாம் இதெல்லாம் தப்பு என்று விரல் நீட்டி எச்சரித்தாள்.

ஓகே தப்பு என அவளைப்போலவே பேசி காட்டியவன் இரு உன் சைஸ்க்கு இங்க டிரஸ் கிடைக்கிறதான்னு பார்க்கறேன் என்ற படி அருகில் அமைந்திருந்த ஷாப்பிங் காம்ப்ளக்ஸ்க்குள் சென்றான்.

ஐந்தே நிமிடத்தில் வெளிவந்தவன் இந்தா என அவள் கையில் கவரை திணிக்கவும் முறைத்துப் பார்த்தவள்
எப்படி டிரஸ் மாற்றுவது..?கலவரத்துடன் கேட்டாள்.

ஹே ஜஸ்ட் கூல் யா.. ரெஸ்டாரன்ட் பேக் சைடு ஹோட்டல் இருக்கு அங்க மாத்திக்கலாம்.. சரி என அவன் பின் சென்றவள் அங்கிருக்கும் வாஷ்ரூமை உபயோகப்படுத்திக் கொள்ளலாம் என நினைத்தபடி சென்றாள்.

ஆனால் ஷ்யாம் ஒரு மணி நேரத்திற்கு மட்டும் ஒரு அறையை புக் செய்தான்.

எதுக்காக ரூம் புக் பண்ற ..பெண்ணிற்கே உண்டான எச்சரிக்கையுடன் உமையாள் கேட்டாள்..

ஹேய் ஹோட்டல் காமன் பாத்ரூம்ல உன்னால குளிச்சிட்டு எப்படி டிரஸ் சேஞ்ச் பண்ண முடியும் இப்போ நீ ஃப்ரீயா டைம் எடுத்துக்கிட்டு ரிலாக்ஸா குளிச்சிட்டு கிளம்பலாம் என்று சொன்னவன்.

ஒன் ஹவர் நானும் ரெஸ்ட் எடுத்த மாதிரி இருக்கும் இதையெல்லாம் பெருசா ஆராய்ச்சி பண்ண கூடாது புரியுதா என கூறியபடி அறைக்குள் அழைத்துச் சென்றான்.

ஏற்கனவே ஆண்களை கண்டால் பயப்படுபவள்.. கதிர் ரத்தினத்தை தவிர்த்து புதிதாக அவளை ஈர்த்தது ஷ்யாம் மட்டுமே அவனுடன் பொதுவான இடங்களுக்குச் செல்லும் பொழுது பயம் கிடையாது ஆனால் இதுபோல தனிமை என்னும் பொழுது தானாகவே பயம் தொற்றிக் கொண்டது .

ஒரு முறைக்கு இருமுறை பாலியல் சீண்டலுக்கு ஆளாக்கப்பட்டவள் அதிலிருந்தே இன்னும் முழுதாக மீளவில்லை அதற்குள் ஒரு ஆடவனுடன் தனியறை அதுவே அவளது அடி மனதில் கிலியை ஏற்படுத்தியது.


ஷியாம் நான் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணும் நீ அதுவரைக்கும் வெளியே போறியா என தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கூறிவிட்டாள்.

அவளை ஆச்சரியமாக பார்த்தவன் என்ன பண்ணிட போறேன் நான் உன்னை அதுவும் ஒரு மணி நேரத்துல என்று கோபப்பட்டு கொண்டு நான் இங்கதான் இருக்க போறேன் நீ பாத்ரூமில் போய் குளிச்சிட்டு டிரஸ் சேஞ்ச் பண்ணிட்டு வா என சற்று அதிகாரமாக சொல்லவும் அவளது பயம் மேலும் அதிகரித்தது .

ஷ்யாம் அந்த அறையில் இருப்பது உமையாளுக்கு அசௌகரியத்தை கொடுக்க வேறு வழியின்றி பாத்ரூம் சென்று பயத்துடனே தண்ணீரை வேகவேகமாக மேல ஊற்றிக்கொண்டு ஆடையையும் மாற்றிக் கொண்டாள்.

பிறகு வெளியே வர அவன் எடுத்துக் கொடுத்த சிவப்பு நிற லாங்க் ஸ்கர்ட் மஞ்சள் நிற கிராப் டாப்ஸ்.. ,ஈரம் சொட்டும் கூந்தல்.. மருண்ட பார்வை, துடிக்கும் இதழ்கள்,பயந்த தோற்றம் அவனை பித்தம் கொள்ள வைத்தது.

கட்டுபாடுகளை உடைத்து அவள் பக்கம் நெருங்கிவிட்டான்.

ஏற்கனவே பயந்து இருந்தவள் அவனது நெருக்கம் மேலும் அவளது இதயத் துடிப்பை எகிற செய்தது ப்ளீஸ் ஷ்யாம் வேணாம்.. பின்னாடி போ பக்கத்துல வராதே என அவளுக்கே கேட்காத குரலில் எச்சரிக்கையாக அவனை நகர்ந்து போகச் சொன்னாள்.

அவளின் பயம் அவனுக்கு சுவாரசியத்தை ஏற்படுத்த மேலும் அவளை நெருங்கியபடியே பக்கத்துல வந்தா என்ன செய்வ என சரசமாக கேட்டபடியே சென்றான்.

அவனிடம் இருந்து தப்பிப்பதாக நினைத்து பின்னால் நடந்தவள் சுவர் தடுத்து அப்படியே நிற்க அவளது இரு பக்கமும் கைகள் கொடுத்து சிறை பிடித்தவன் இப்போ‌ என்ன பண்ண போற என கேலி செய்தான் .

கண்களை மூடிக்கொண்டு ப்ளீஸ் போயிடு.. வாய்க்குள் முணுமுணுத்தாள்.

அவளின் கடந்த காலத்தை பற்றி அறியாதவன் அவள் போய்விடு என்று சொல்வதை பெண்களின் பாஷையில் நெருங்கி வா என அர்த்தம் என்று தவறாக புரிந்து கொண்டு நீ போய்விடுன்னு சொல்லும்போது எனக்கு வேற மாதிரி கேட்கிறது என அவளின் நெற்றியோட நெற்றி முட்டியவன்.
அவளின் கன்னத்தில் கிடந்த கத்தை கூந்தலை காதோரத்தில் தள்ளிவிட்டான்.

பயத்தில் கண்களை இறுக்க முட்டிக்கொண்டு இதழ்கள் துடிக்க நின்று கொண்டிருந்தளை பார்க்கவும்.. முத்தமிட தோன்றியது ஷ்யாமிற்கு.

தன்னுடைய காதலிக்கு முதல்முறையாக முத்தம் கொடுக்கப் போகிறான் அதுவும் யாருக்கும் தெரியாமல் தனி அறையில் வைத்து அதை நினைக்கும் பொழுதே அவனுக்குள் கிளர்ச்சி தோன்றியது.

எப்படி இருந்தாலும் இன்னும் சில நாட்களில் திருமணம் ஆகப்போகிறது ..அதற்குள் அவளை ஒரு முறையேனும் முத்தமிட வேண்டும் என ஆசை கொண்டிருந்தவனுக்கு இன்று எல்லாம் கை கூடி வந்தது போல தோன்றவும் யோசிக்காமல் அவளின் கன்னங்களை இருகைகளால் தாங்கியவன் துடிக்கும் இதழ்களை அவனது இதழ்களால் சிறை பிடிக்க அவள் முகம் நோக்கி குனிந்தான்.

அதிர்ச்சியில் கண்களை விரித்து பார்த்தவளுக்கு ஷ்யாமின் முகம் நெருக்கத்தில் கொடுரமாக காட்சியளித்தது.

அவன் காதலன் என்பதை மறந்தாள் எதிர்கால கணவன் என்பதை மறந்தாள்…தான் பள்ளி முடித்து வெளியே வரும் பொழுது தன்னை பாலியல் பலாத்காரம் செய்வதற்காக தூக்கிச்சென்ற அந்த மனிதர்கள் அவளது எண்ண அலைகளுக்குள் வந்தார்கள்.

இவனையும் அவர்களோடு ஒப்பிட்டால் தன்னைக் காத்துக் கொள்ள போராடத் தொடங்கி விட்டாள்.

தன்னுடைய முழு பலத்தைக் கொண்டு அவனை தள்ளிவிட்டவள் அருகில் இருந்த கண்ணாடியை உடைத்து அதிலிருந்து சிறு துண்டை எடுத்து அவனை தாக்க தொடங்கினாள்.

அது மட்டும் இன்றி தன்னை ஷ்யாமிடமிருந்து தற்காத்துக் கொள்வதாக எண்ணி அங்கிருந்து பொருட்களை எல்லாம் போட்டு உடைக்க ஆரம்பித்தாள்..இச்செயவை கண்டு அவன் பயந்து வெளியேற வேண்டும் அதுதான் உமையாளின் அப்போதைய திட்டம்.

கட்டில் சோபா என அனைத்தையும் கண்ணாடி துண்டைக் கொண்டு கிழிக்க ஆரம்பித்தாள்.

அவள் நினைத்தது போலவே உமையாளின் செயலைக் கண்டு பயந்தவன் வேகமாக வெளியே சென்று கதவை வெளிப்பக்கமாக தாள் போட்டான் பிறகு நேராக ஹோட்டல் வரவேற்பறைக்கு வந்து தன்னுடன் வந்தபின் திடீரென பைத்தியம் போல் நடந்து கொள்கிறாள் உள்ளே இருக்கும் பொருட்களை எல்லாம் அடித்து உடைக்கிறாள் என்று கூறவும்.


அவர்கள் அறையை புக் செய்தது நீங்கள் தானே.. அப்படியென்றால் உடைந்த பொருட்களுக்கு நீங்கள்தான் நஷ்ட ஈடு தரவேண்டும் என அவனை பிடித்து வைத்துக் கொண்டார்கள்.

அது மட்டுமின்றி உமையாளின் உறவினர்களுக்கு தகவல் சொல்ல வேண்டும் என வற்புறுத்த வேறு வழியில்லாமல் கதிரின் நம்பரை கொடுக்கும்படி ஆயிற்று.

அவர்கள் தெளிவாக எதுவும் கூறாமல் எங்களது விடுதிக்கு ஷ்யாம் என்னும் நபர் உங்கள் வீட்டுப் பெண்ணை அழைத்து வந்தார்.

அறை ஒன்றை வாடகைக்கு எடுத்தார்..உள்ளே என்ன நடந்தது என்று தெரியாது.
ஷ்யாம் ரத்தக்காயங்களுடன் வெளியே நிற்கிறார் அந்தப் பெண் அறைக்குள் இருக்கிறது..நீங்கள் உடனே வாருங்கள் இல்லையென்றால் காவல் நிலையம் செல்வோம் என்று கூறி விட.

எதிரில் கேட்டுக் கொண்டிருந்த கதிர் நான் வர்ற வரைக்கும் நீங்க எதுவும் செய்யக்கூடாது என அவர்களை எச்சரித்துவிட்டு.

உடனே அவர்கள் கூறிய இடத்திற்கு மிக அருகில் இருந்த தனது கல்லூரி தோழனான ரகவிற்கு அழைத்து விஷயத்துக்கு கூறி அவர்கள் காவல் நிலையம் போகாதவாறு பார்த்துக் கொள்.. நான் வரும்வரை யாருமே உமையாளின் அருகில் செல்லக்கூடாது என்று கேட்டுக் கொண்டான்.

ரகு ஐந்தே நிமிடத்தில் ஹோட்டலுக்கு வந்தவன் ரத்த காயங்களுடன் நின்ற ஷ்யாமை அருகில் இருந்த நர்சிங் ஹோமில் சேர்த்தவன் நான் வர்ற வரைக்கும் இவரை‌ அனுப்பிடாதீங்க என அங்கிருக்கும் மருத்துவரை கேட்டுக் கொண்டு மீண்டும் ஹோட்டலுக்கு வந்தான்.

அதன் பிறகு கதிர் உமையாளை அழைத்துச் சென்றதும் மீண்டும் கோபமாக மருத்துவமனை வந்தவன் ஷ்யாமை அடித்து துவைத்து விட்டான்.

எவ்ளோ தைரியம் இருந்தா என் நண்பன் வீட்டு பெண்ணையே ஹோட்டல் ரூமுக்கு அழைச்சிட்டு வந்து தவறாக நடந்துக்குவ என்று சொல்லி சொல்லி அடித்தான்.

வலி தாங்க முடியாத ஷ்யாம்.. நீங்க எவ்வளவு வேணாலும் அடிங்க அண்ணா நான் வாங்கிக்கிறேன் ஆனா அதுக்கு முன்னாடி என்ன நடந்ததுன்னு கொஞ்சம் கேட்டுட்டு அதன் பிறகு என்னை அடிங்க என்று கெஞ்சினான்.

உள்ளங்கை புண்ணுக்கு எதுக்குடா கண்ணாடி அதான் ஹோட்டலேயே உன் லட்சணத்தை பார்த்தாச்சே.

என்ன பாத்தீங்க ஹான்..என்று தைரியத்தை வரவழைத்துக் கொண்டு கேட்ட ஷ்யாம்.

முதல்ல அந்த ரூம்மை வெறும் ஒன் ஹவருக்கு தான் புக் பண்ணி இருக்கேன் தெரியுமா உமையாளும் நானும் எப்போ உள்ள போனோம் எவ்வளவு நேரத்தில் நான் வெளியே வந்தேன் என்பதை ஹோட்டல் சிசிடிவி புட்டேஜ் பார்த்தால் உங்களுக்கே தெரியும்.

மீறிப் போனா பத்து நிமிஷம் கூட இருக்காது பத்து நிமிஷத்துல அப்படி என்ன சார் என்னால பண்ணிட முடியும் அவகிட்ட தப்பா நடந்துக்கணும்னு நினைச்சிருந்தா நான் எதுக்காக ஹாட் சிட்டிக்குள்ள இருக்கற ஸ்டார் ஹோட்டலுக்கு கூட்டிட்டு வரணும்..ஏதாவது ஒதுக்குப்புறத்துக்கு தானே கூட்டிட்டு போய் இருப்பேன்.


அது மட்டும் இல்லாம அவளோட வீட்டுக்கு தகவல் கொடுத்ததை நான் தான் அதை ஞாபகம் வச்சுக்கோங்க என் மேல தப்பு இருந்தா நான் எப்படி தகவல் கொடுக்க முடியும் என்று கேள்வி எழுப்பவும்..ரகு சிந்திக்க ஆரம்பித்தான்.

ஆம் அவனிடத்தில் தவறில்லை என்றால் எப்படி கதிரின் நம்பரை ஹோட்டல் நிர்வாகத்திடம் கொடுப்பான்..தப்பிப்பதற்கு அவனது தந்தையின் நம்பரை தானே கொடுத்திருப்பான்.. அப்படி என்றால்
இவனிடத்தில் தவறு இல்லை..
திருமணம் செய்து கொள்ளப்போகும் பெண் தானே என்பதால் சற்று அத்துமீற நினைத்திருக்கிறான் என்பதை உணர்ந்து கொண்ட ரகு.

சரி இந்த விஷயத்தை யார்கிட்டயும் எப்போவும் சொல்ல கூடாது எப்போவாவது உன்னை மறந்து நீ வாய் திறந்த அப்பாவி பொண்ணை ஹோட்டலுக்கு கூட்டிட்டு வந்து தப்பா நடந்துகிட்டேன்னு உன்னை காலத்துக்கும் களி திங்க வச்சிருவோம் ஜாக்கிரதை என மிரட்டி விரட்டி விட்டான்.

அதன் பிறகு அவன் கூறியது எதையுமே கதிரிடம் ரகு சொல்லவில்லை.

உன் அத்தை மகளுக்கு புத்தி பேதலித்து விட்டது போல அதனால்தான் காதலன் முத்தம் கொடுக்க வந்ததை கூட பெரிதுப்படுத்தி இருக்கிறாள்.. என்று வெளிப்படையாக ரகுவால் கூற முடியவில்லை.

தயக்கத்திற்கான காரணம் இது ஷ்யாம் உமையாள் சம்பந்தப்பட்ட அந்தரங்கம்.

அதை எப்படி கதிரிடமே சொல்ல முடியும் என்ன இருந்தாலும் உமையாள் அவன் வீட்டுப் பெண்ணாயிற்றே..

அவன் வீட்டுப் பெண்ணைப் பற்றி தவறாக எப்படி அவனிடமே கூற முடியும் ஒன்று ஷ்யாம் நடந்ததை கதிரிடம் கூற வேண்டும் இல்லை என்றால் உமையாள் கூற வேண்டும்

என்ன நடந்தது என்பதை உமையாளிடமே நண்பன் கேட்டு தெரிந்து கொள்ளட்டும் என விட்டுவிட்டான்.

இதோ கதிரும் அவளிடத்தில் கேட்டு விஷயங்களை வாங்கி விட்டான்.

இப்பொழுது தலையில் கை வைத்து யோசித்துக் கொண்டிருக்கிறான்.

முழுசா குணமாகிட்டானு நினைச்சு தானே அவளை கல்லூரியில் சேர்த்தேன் ..தெளிவா இருந்ததால தானே காதலிக்க முடிந்தது.
அதனால் தானே கல்யாணம் வரைக்கும் கொண்டு போனோம்.

திருமணம் செய்து கொள்பவனோட தொடுகையை அவருக்கு பயத்தை கொடுக்குது.. பழைய ஞாபகங்களை திரும்ப கொண்டு
வருதுன்னா எப்படி அவளுக்கு தைரியமா திருமணம் செய்து வைக்கிறது என கவலை கொண்டவன் அடுத்த வினாடியே அவளுக்கு மருத்துவம் பார்க்கும் வைத்தியரை அழைத்து இருந்தான்.
 
Top