எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 12

admin

Administrator
Staff member

அத்தியாயம் 12​

நாணத்தால் சிவந்திருந்த பெண்ணின் முகத்தை பார்த்தவனுக்கு அத்தனை கோபம் வந்தது. அக்கணம் தங்களின் தனிமையை பெரிதும் எதிர்பார்த்தான் அகரன். அவன் நினைத்தது போலவே ராஜியும், அரவிந்தும் அங்கிருந்து நகர. அவளை நோக்கி வேகமாக நடந்தான்.​

இதழில் மலர்ந்த சிறு புன்னகையோடு இருவரையும் பார்த்தபடி நின்றவள் தன் அருகில் அரவம் உணர்ந்து திரும்பவும் அவளது கன்னங்களை அகரன் பிடிக்கவும் சரியாக இருந்தது.​

மங்கையின் இரு கன்னங்களையும் பெரு விரலாலும், நடு விரலாலும் அழுத்திப் பிடித்தவன் அக்னியை நெருங்கி நின்று "அது என்னடி அவனோட பேர் சொன்னாலே இந்த கன்னம் இரண்டும் கோவப்பழம் மாதிரி சிவக்குது..." எனக் கேட்டான்.​

அதற்கு அணங்கியவள் பதில் சொல்லாமல் அகரனின் கையை எடுத்து விட முயன்றாள். பாவையின் முயற்சிகள் வீண் என்பது போல கன்னத்தில் இன்னும் அழுத்தத்தைக் கூட்டியவன் அவளது குவிந்த இதழ்களை பார்த்துக் கொண்டே​

"அதென்ன அவனைப் பத்தி பேசும் போதெல்லாம் இந்த குட்டி லிப்ல வெட்கச் சிரிப்பு வந்து ஒட்டிக்குது..." எனக் கேட்டு அவளது சிவந்த இதழ்களை சுண்டி விட்டு அதனை அழுத்தி வருடினான்.​

மறவோனது எதிர்பாராத செயலில் அதிர்ந்து விழித்தவள் பின் தன்னை நிலைப்படுத்தி கொண்டு " விடு..." என்றாள் கண்களில் அனல் பறக்க...​

வஞ்சனியின் இதழ் அசைவைப் பார்த்தவனுக்கு ஊட்டியில் அக்னியின் இதழ்களை வன்மையாக தன் இதழ்களுக்குள் அதக்கிக் கொண்டது நினைவு வந்து தொலைத்தது... கோபத்தில் ஜொலித்த கண்கள் நிமிடத்தில் ரசனையாக மாறியது.​

"விடவா பிடிச்சேன்..." புருவத்தை உயர்த்தி கேட்டான். அகரரனை கண்களால் எரித்தாள் அக்னி.​

அவளது கண்களை கண் எடுக்காமல் "என்னைப் எப்ப பார்த்தாலும் எரிக்கிற இந்த கண்ணுக்கு தண்டணை கடைசியாக தான் தரணும்...இப்ப இந்த நிமிசம்..." என்றவனது பார்வை மெல்ல கீழ் இறங்கி மங்கையின் குவிந்த இதழ்களில் பதிந்தது .​

"என்னைப் பார்த்து ஒரு தடவைக் கூட சிரிக்காத இந்த லிப்புக்கு தான் தண்டணைக் கொடுக்கணும். என்ன தண்டனை தெரியுமா? ..." புருவத்தை உயர்த்தி கேள்வியாக கேட்டான். பார்வையை வேறு புறம் திரும்பிக் கொண்டாள்.​

"என்னை பாரு டி..." என்றவன்​

கன்னங்களில் மேலும் அழுத்தத்தை கூட்டினான். அதன் விளைவு பாவையின் செம்பருத்தி இதழ்கள் பூ குவியல் போல் மேலும் குவிந்தது...​

"என்ன தண்டனை தெரியுமா?..." முற்றிலும் குரல் மாறியிருந்தது அகரனுக்கு.​

அவனது குரலில் தெரிந்த மாற்றத்தை நன்றாகவே உணர்ந்தவள் தன் எதிர்ப்பை காட்டும் விதமாக "என்னை விடு...விடு..." என்று வேகமாக அவனது முதுகில் அடித்தாள்.​

அவளது அடிகளை எல்லாம் தூசிப் போல் தட்டி விட்டவன் மங்கையின் இடையை அழுத்தி தன்னை நோக்கி வேகமாக இழுத்தான். அவன் மீது மொத்தமாய் மோதி நின்றாள். அக்கணம் அவனது செயலில். அக்னியின் கைகள் அந்தரத்தில் நிற்க, விழிகளோ அதிர்ச்சியில் இன்னுமின்னும் விரிந்து கொண்டது.​

மாயோளின் விரிந்த விழிகளை பார்த்துக் கொண்டே அவனது உயரத்திற்கு அவளைத் தூக்கியவன் பாவையின் செம்பருத்தி இதழ்களை பற்கள் கொண்டு காயம் செய்தான்...​

நிமிடங்களுக்கு மேல்​

காயம் மட்டுமே கொடுத்துக் கொண்டிருந்தவன் என்ன நினைத்தானோ தன் இதழ்கள் கொண்டு காயத்திற்கு மருந்திட்டான்.​

அவன் கொடுத்த காயத்தால் அந்தரத்தில் நின்ற கைகள் மருந்திடும் நேரம் அகரனின் முதுகில் அழுத்தமாக பதிந்தது. முதலில் அதிர்ச்சியில் விரிந்த கண்களும் பின் தாமதமாக மூடிக் கொண்டது. அச்சமயம் பட்டென அவளை விட்டு விலகியவன்​

"அவனை நினைச்சு சிரிக்கும் போது மட்டுமில்ல அவனோட *** இந்த காயம் தான் டி உனக்கு ஞாபகம் வரணும்..." என்று மங்கையின் கன்னத்தைத் தட்டியவன் திரும்பி நடந்தான்.​

தன்னை காயப்படுத்த அவன் எடுத்த ஆயுதம் மனதின் ஒரு மூலையில் வலியை ஏற்படுத்தியது. அந்த வலிக் கூட தன்னை செதுக்கும் உளி தான் என்று உறுதியாக எண்ணியவள் நிமிர்ந்து நின்றாள்.​

கால்களை தரையில் ஊன்றி தன்னை நிலைப்படுத்தி கொண்டவள் அவன் காயம் செய்த இதழ்களை அழுத்தித் துடைத்தப்படி முன்னால் செல்பவனை சொடுக்கிட்டு அழைத்தாள்.​

தான் செய்த செயலுக்கு தரையில் மடிந்து அழுவாள் என்று நினைக்கவில்லையென்றாலும் தனது முரண்பாடான செயலில் குழம்பி தவிப்பாள் என்று நினைத்தான்.​

ஆனால் அவளது முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாது​

நிமிர்ந்து நின்று சொடக்கிட்டு அழைத்தது அத்தனை எரிச்சலைக் கொடுத்தது அகரனுக்கு. அந்த எரிச்சலை முகத்தில் காட்டியப்படி திரும்பிப் பெண்ணைப் பார்த்தான்.​

"ஒரு பொண்ணோட உடம்புல காயத்தைக் கொடுக்கிறதை தவிர, வேற என்ன உங்களை மாதிரி ஆம்பளைங்க கிட்ட எதிர்ப் பார்க்க முடியும் மிஸ்டர் அகரன் ஆதித்தன்.​

இந்த முத்தம் எனக்கு தண்டனையா? ஹாஹா எனக்கு தண்டனை தர அளவுக்கு நீங்க வொர்த் இல்லை மிஸ்டர் அகரன்.உங்க மனசு சுத்தமா இருக்கணும் அதுவே சுத்தமா இல்லை...' என்று இதழ்களை அழுத்தித் துடைத்தவள் "அன்னைக்கு மாதிரியே இன்னைக்கும் சகதி (சாக்கடை) என்மேல தெளிச்சுடுச்சுன்னு நினைச்சிக்கிறேன்..." என்றாள்.​

அக்னியின் சுடும் வார்த்தைகளில் உடல் விரைக்க, கண்களில் சினம் துளிர்க்க 'சகதியா? நான் உனக்கு சகதியா...இந்த அகரன் சகதியா? உன்னை எந்த கதிக்கு கொண்டு வரேன்னு பாருடி...' அகம்பாவி வஞ்சகத்தைக் கக்கினான். அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் மங்கையை முறைத்து விட்டு அங்கிருந்து நகர்ந்தான்.​

ஆடவன் அங்கிருந்து நகர்ந்ததும் விழிகளில் இருந்து சாராலென்று இறங்கியது கண்ணீர்.​

கண்களை தாண்டிய கண்ணீரைத் துடைக்க மனமில்லாமல் நின்றவளின் பார்வை நிலவிற்கு அருகில் மின்னிக் கொண்டிருந்த நட்சத்திரத்தை வெறித்தது.​

"அமாவாசை நிலவுக்கு கலங்கம் வரது அதிசயமா இருந்துச்சு சோ கேட்க சொன்னேன்..." கல்லூரியில் அகரன் பேசிய வார்த்தைகள் இப்போதும் காதில் கேட்டது.​

அதே நேரம் "அப்பா அந்த வானம் நீங்கன்னா அதுல இருக்கிற குட்டி நிலா நான் தானே ப்பா, அம்மா இல்ல தானே..."தாயைப் பார்த்து குறும்பாக சிரித்துவிட்டு வானத்தில் சுற்றி திரிந்த நிலவை கைகாட்டி கேட்டாள் அக்னி.​

இதழில் மலர்ந்த சிறு புன்னகையோடு மகளைப் பார்த்தவர் "என்னோட புகனு குட்டி எப்பவும் அந்த நிலவுக்கு பக்கத்துல இருக்கிற நட்சத்திரம் தான்..."​

"ஏன் தெரியுமா? அந்த நிலவு கூட மாசத்துல இரண்டு நாள் வானத்துல இருந்து மறைஞ்சு போயிடும்.ஆனால் அந்த நட்சத்திரம் எப்பவும் வானத்தை விட்டு மறைஞ்சு போகாது..." ஆழ்ந்த குரலில் கூறினார் மாதேஷ்.​

அவரது பேச்சில் அக்னியின் முகம் பூவாய் மலர்ந்தது என்றால் கங்காவின் முகம் கோபத்தில் சிவந்து தான் போனது.​

மனைவியின் கோப முகத்தில் பதறியவராய் 'உன்னை தான் நிலான்னு சொல்லிட்டேனே..' என்பது போல் பார்த்துவிட்டு அவசரமாக அங்கிருந்து கிளம்பி விட்டார். இப்போதும் தந்தையின் பதறிய முகமும், தாயின் கோப முகம் மனக்கண்ணில் வந்து மறைந்தது.​

தந்தையிக்கு இளவரசியாக இருந்தவள் என்பதாலோ என்னவோ யார் என்னக் கூறினாலும் அதை பெரியதாக கண்டு கொண்டதில்லை. அதையும் மீறி அவளது மனம் சில நேரங்களில் புண்படும்... அப்பொழுதெல்லாம் ஒரு தந்தையாய், தோழனாய் அவளுடன் இருப்பார் மாதேஷ்...​

ஆனால் இப்போது?​

இக்கணம் தந்தையை வெகுவாய் தேடினாள். காற்றாய் வந்து தலைக் கோதி விடமாட்டாரா? அவரது கைகளில் ஸ்பரிசத்தை இப்போதும் உணர மாட்டோமா? என்று மனம் ஏங்கியது. கண்களை மூடிக் கொண்டாள். கண்களுக்குள் விழுந்தான் அகரன். அவளது உச்சந்தலையில் அழுத்தமாகப் பதிந்த அவனது கைகளின் ஸ்பரிசம் இப்போதும் உணர்வது போல் தோன்றவும் பட்டென கண்களைத் திறந்தாள்.​

"உன் தந்தையின் அன்பை அகரனிடம் தேடுகிறாயா?...காயம் செய்தவனிடமே மருந்தை எதிர் பார்க்கிறாயா?" மனம் கோபமாய் கேள்வி எழுப்பியது.​

பதில் சொல்லாமல் கண்களை இறுக மூடிக் கொண்டாள். மூடிய​

கண்களுக்குள் திரண்டு நின்றது கண்ணீர் துளிகள்.​

**​

இங்கு படுக்கையில் கண்மூடி படுத்திருந்தவனின் உள்ளம் கொதியாய் கொதித்தது... தன்னை சகதி என்றவளை இக்கணமே ஏதாவது செய்ய வேண்டுமென்று மனம் குதித்தது அடுத்த நிமிடமே அதற்கான திட்டத்தை யோசித்தான்.​

விதியும் அவனுடன் கூட்டு சேர்ந்து அக்னிக்கு எதிராய் சதி செய்தது போல 'நீ யோசிக்கவே வேண்டாம் உனக்கான சந்தர்ப்பத்தை நானே ஏற்படுத்தி தருகிறேன்...' என்று அவனுக்கான சந்தர்ப்பத்தை அவனே எதிர்பாராமல் ஏற்படுத்திக் கொடுத்தது.​

அக்கணம் "தம்பி..." என்று சத்தமாக அளித்தபடி அறைக்குள் நுழைந்தார் ஆதி.​

தந்தையின் குரலில் தான் பட்டென எழுந்தவன் "சொல்லுங்கப்பா..." என்றான்.​

"உன்ற ரூம்ல புகனாவை படுக்க சொல்லிருக்கேன். நீ சின்னவன் கூட போயி படுக்கிறயா?இல்லை எங்களோட வந்து படுத்துக்கிறயா?..." எனக் கேட்டார்.​

இவரது குறட்டைக்கு அவன் கால்களை தூக்கி போடுவதே பெட்டர் என நினைத்து "நான் இளையவனோட போயி படுத்துகிறேனுங்க ப்பா..." மெல்லிய குரலில் கூறிவிட்டு அரவிந்த் அறையை நோக்கி நடந்தவன் அப்பொழுது தான் தந்தைக்கு பின் நின்ற தாயையும், தாயிக்கு பின் நின்ற அக்னியையும் கண்டான்.​

இதழ்களை மடித்து சிரிப்பை அடக்கியப்படி அகரனை தான் பார்த்துக் கொண்டிருந்தாள் மாயோள்.​

இந்த அகரன் அக்னிக்கு மிகமிகப் புதிது.இதுநாள் வரையில் கோபமாக, அலட்சியமாக, ஆணவமாக, பேசிய அகரனைத் தான் பார்த்திருக்கிறாள்.​

இன்று தான் அடக்கமான அகரனைப் பார்க்கிறாள். அவனது அடக்கமான பேச்சும், நல்ல பிள்ளை போல் அனைத்திற்கும் தலையாட்டுவதும் குப்பென்ற சிரிப்பைக் கொடுத்தது அக்னிக்கு.​

அடக்கப்பட்ட சிரிப்போடு ராஜியின் பின் நின்றாள். குனிந்த தலை நிமிராமல் தன் அறையை விட்டு வெளியேறியவன் பார்வை இதழ்களை மடித்து சிரிப்பை அடக்கியப்படி நின்றவளின் மீது விழுந்தது. நுண்ணிடையாளின் சிரிப்பை பல்லைக் கடித்தப்படி பார்த்தான்.​

அகரனின் முறைப்பைப் பார்த்தவள் அவனை சீண்டும் விதமாக "மாமா..." என்று ஆதியை மெல்லிய குரலில் அழைத்தாள். ' உன்னை அப்பறம் பாத்துக்கிறேன் டி...' என எண்ணிக் கொண்டே குனிந்த தலை நிமிராமல் அங்கிருந்து நகர்ந்தான்.​

ஹாஹா என்று அக்னியின் மனம் ஆர்ப்பாட்டமாக சிரித்தது. அகம் பிடித்த அகரன், அப்பாவி அகரன் போல் இருப்பதை பார்ப்பதற்கே சுவாரஸ்யமாக இருந்தது.​

"நீ படுத்துக்க கண்ணு.ஏதாவது வேணும்னா ஒரு குரல் கொடு பெரியவன் இல்லைன்னா சின்னவன் வருவான்..." என்றார் ஆதி. 'சரிங்க மாமா...' என்பதை போல் தலையாட்டினாள்.​

"உனக்கு பயமா இருந்தா சொல்லுமா நான் தோணைக்கு (துணைக்கு) வந்து படுத்துகிறேன்..." ராஜி கூறவும்​

"எதே..." என்பதை போல் பார்த்தார் ஆதி. அவருக்கு தான் மனைவியின் அருகாமை இல்லையென்றால் உறக்கமே வராதே அதனால் இந்த பார்வை... தற்பொழுது ஆதியின் பார்வையிலும் சிரிப்பு வரும் போல் இருந்தது அக்னிக்கு...​

வெளியில் கம்பீரமாக சுற்றும் ஆண்கள் எல்லாம் மனைவியின் கைப்பாவைகள் தான் போல... என நினைத்துக் கொண்டிருக்கவே​

"சரி மா...நீ தூங்கு, ஏதாவது வேணும்னா குரல் குடு..." மீண்டுமொருமுறை கூறிவிட்டு ஆதித்தன் முன்னால் நடக்க 'வரேன் மா...' என்பதைப் போல் தலையாட்டி விட்டு கணவரின் பின்னாலேயே சென்றார் ராஜி.​

நீண்ட நெடிய பெருமூச்சுடன் அகரனின் படுக்கையில் அமர்ந்தவளுக்கு அவனுடைய வியர்வை வாசத்துடன் சேர்ந்த பிரேத்தியேக மணம் நாசியை வருடியது. சற்று முன் அவள் தேடிய அந்த ஆறுதல் தற்பொழுது கிடைப்பது போல் தோன்றியது.. மனம் தன்னாலேயே அமைதியடைந்தது. இதழோரம் மலர்ந்த சிறு புன்னகையோடு அகரனின் படுக்கையில் விழுந்தாள்.​

பாவம் அவளுக்கு தெரியவில்லை மூன்றாம் ஜாமத்தில் இப்புன்னகை இருக்குமிடம் தெரியாமல் அழிந்து விடுமென்று...​

***மலரட்டும் சிறு புன்னகை...***​

பிழைகள் இருப்பின் மன்னிக்கவும்.. இன்னும் எழுத்து பிழைகள் சரி ப்பார்க்கப்படவில்லை..​

 

Priyakutty

Active member
அவங்ககிட்ட அத்துமீறினால் அப்படி தான் பேசுவாங்க... 😤😤

அக்னிக்கு அவரை புடிச்சிருக்கா... 🙄

ஆனா புடிக்கற அளவு அவர் என்ன பண்ணிட்டாரு...
 
அவங்ககிட்ட அத்துமீறினால் அப்படி தான் பேசுவாங்க... 😤😤

அக்னிக்கு அவரை புடிச்சிருக்கா... 🙄

ஆனா புடிக்கற அளவு அவர் என்ன பண்ணிட்டாரு...
பின்ன சும்மாவா இவன் பேசுவன நம்ம சும்மா இருக்கணுமா😏😏

பிடிக்கல சொல்றா

அவர் பிடிக்கிற அளவுக்கு எதுவும் பண்ணல... ஆனா அவனோட ஒரு ஆறுதல் பேச்சு மொத்தமா கவுந்திட்டா..ஏதோ ஒரு பாசத்துக்கு ஏங்கிட்டி இருந்தவ அவனோட ஆறுதல் பெச்சிலகொஞ்சமே கொஞ்சமா விழுந்தா
 
Top