எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

ஆலியில் நனையும் ஆதவன் !! 🌦️ - 22

NNK-34

Moderator
ஆதவன் 22
download (1) (2).jpeg
ஆதித் மற்றும் வர்ஷா இருவருக்குமே அதுவரை இருந்த மொத்த மகிழ்ச்சியும் வடிந்திருக்க,
"இவன் வருவான்னு நான் யோசிக்கல, நீ ஒர்ரி பண்ணிக்காத கிளம்பிடலாம்" என்று ஆதித் வர்ஷாவிடம் கூறி கொண்டுருக்கும் பொழுதே, அங்கு வந்த பிரபு,
"இங்க என்ன பண்றீங்க? உள்ள வாங்க" என இருவரையும் அழைத்தான்.
அப்பொழுது ஆதித்,
"சாரி பிரபு நாங்க கிளம்பலாம்னு இருக்கோம்" என்றான்.
அதைக் கேட்ட பிரபுவோ,
"என்னாச்சுடா இனிமே தான் கேக் கட்டிங் இருக்கு, அதுக்குள்ள கிளம்புறேன்னு சொல்றீங்க" என்று சொல்ல,
அதற்கு, "இல்லடா கொஞ்சம் முக்கியமான வேலை இருக்கு, அதான் போயாகணும்" என்றான் ஆதித்.
அதைக் கேட்டு ஆதித்தை ஒரு கணம் பார்த்த பிரபு,
"ஏன் அந்த முக்கியமான வேலை விநாயக்கை பார்த்ததும் தான் ஞாபகத்துக்கு வருமோ?" என்று கேட்டவன், ஆதித் முறைக்கவும்,
"முறைக்காதடா, உங்களுக்குள்ள என்ன பிரச்சனைன்னு எனக்கு தெரியல, அதுக்காக இப்படி பொது இடத்தில் முறைச்சிட்டு இருக்கிறது நல்லாவா இருக்கு. நாம எல்லாரும் ஒரே ஃபீல்டுல வேலை பார்க்கிறோம், இதுபோல அடிக்கடி சந்திக்க வேண்டியிருக்கும், பார்க்கும்போதெல்லாம் அங்கிருந்து கிளம்பி போயிட்டு இருக்க முடியாதுல, பாரு நீ தான் இப்ப டென்ஷன் ஆயிட்டு இருக்க அவன் ரொம்ப கூழா இருக்கான்.
உள்ள வா அடுத்தது கேக் கட்டிங் தான் அதை முடிச்சுட்டு டின்னரையும் முடிச்சுட்டு கிளம்பிக்கோ" என்று விடாப்பிடியாக கூறியவன், வர்ஷாவை பார்த்து, "அவனை கொஞ்சம் அழிச்சிட்டு வாமா" என்று சொல்லிவிட்டு அங்கிருந்து சென்றுவிட, வர்ஷாவை பார்த்த ஆதித்தோ,
"அவனுக்கு எதுவும் தெரியாதுல அதான் அப்படி சொல்லிட்டு போறான், நீ வா நாம வீட்டுக்கு கிளம்பலாம்" என்று சொல்லி அவள் கரத்தை பற்றினான்.
அவளோ தன் கரத்தைப் பற்றி இருந்து அவனது கை விரல்களுக்குள் தன் விரல்களை ஆழமாக கோர்த்துக் கொண்டவள்,
"எனக்காக யோசிக்காதிங், அவங்க இவ்ளோ சொல்றாங்கல நாம் அட்டென்ட் பண்ணிட்டே போலாம். ஒன்னும் பிரச்சனை இல்ல பார்த்துக்கலாம். எப்பவும் ஓடிட்டே இருக்க முடியாதுல, என்னைக்காவது ஒரு நாள் ஃபேஸ் பண்ணி தானே ஆகணும். தப்பு செஞ்சது அவன், ஆனா அவனே எந்த ஒரு நெருடலும் இல்லாம இருக்கும் போது நான் ஏன் போகணும்? அதான் என் கூட நீங்க இருக்கீங்களே அப்புறம் என்ன?" என்று அவனது விழிகளுடன் தன் விழிகளை கலக்க விட்டபடி திடமாக கூற,
"தட்ஸ் குட் இந்த போல்ட்னஸ் தான் நான் உன்கிட்ட எதிர்பார்க்கிறேன், அவன பார்த்து ஓடாம ஃபேஸ் பண்றேன்னு சொன்ன பார்த்தியா, புடிச்சிருக்கு. இதுக்கே கோடி முத்தம் கொடுக்கலாம், கணக்கு வச்சிக்கோ மொத்தமா கொடுக்குறேன்" என்று கண் சிமிட்டிய ஆதித் தன் விரல்களுடன் பிண்ணிக்கிடந்த அவளின் விரல்களில் இதழ் பதித்து, காதில் இன்னும் பல ரகசியம் பேசி, தன்னவளின் முகத்தில் சற்று முன் தொலைந்து போன வெட்க்க புன்னகையை மீண்டும் மீட்டெடுத்துவிட்டே அவளை உள்ளே அழைத்து சென்றான்.
@@@@@
"எல்லாம் ரெடியா இருக்குல்ல" சிரித்த முகத்துடன் உள்ளே நுழைந்த, ஆதித் மற்றும் வர்ஷா மீது அழுத்தமான பார்வை பதித்தபடி, அப்பொழுது தான் தன் அருகே வந்து நின்ற ரகுவிடம் வினவினான் விநாயக்.
"அந்த டிஜேவ டைவெர்ட் பண்ணிட்டு, பென்றைவை மாத்தி வச்சிட்டு வந்துட்டேன்" என்ற ரகு தான் எடுத்து வந்த பென்றைவை காட்ட அதை ஒருகணம் பார்த்துவிட்டு ஆதித்தை வன்மத்துடன் பார்த்தான் விநாயக்.

அனைவரின் கைத்தட்டலில் கேக் கட்டிங் சிறப்பாக முடிந்திருக்க, அதை தொடர்ந்து வர போகும் பிரபு மற்றும் பவித்ராவின் அழகிய நடனத்தை அனைவரும் எதிர்பார்த்து மேடையை பார்த்துக்கொண்டிருக்க, ப்ரோஜெக்டர் வழியாக மேடைக்கு அருகே இருந்த ஸ்க்ரீனில் ஒளிபரப்பாகிய காணொளியை கண்டு வருணிக்கா, ஆர்த்தி உட்பட அதிர்ச்சியடைந்த அனைவரும் தங்களுக்குள் சலசலக்க துவங்கினர்.
அதை பார்த்த வர்ஷாவுகோ கண்கள் இரண்டும் கலங்கிவிட, வருணிக்காவுக்கு என்ன சொல்வதென்றே தெரியலை.
ஆதித்தின் முகமோ கோபத்தில் கன்றி சிவந்துவிட்டது.

என்ன செய்வதென்று தெரியாமல் சில நொடிகள் தன் கரங்களை பிசைந்துகொண்டு நின்றிருந்த வர்ஷாவுக்கு குற்ற உணர்வு வாட்டி வதைத்தது. 'இப்பொழுது தான் அனைத்தையும் மறந்து கொஞ்சம் நிம்மதியாக இருந்தான். மறுபடியும் இதென்ன? அவன் உணர்வுகளை சோதிப்பது போல பழைய விடயங்களை கிளறி கொண்டு.. யாருடைய வேலையாக இருக்கும்?' என்கிற சிந்தனையில் உழன்று கொண்டிருந்தவளுக்கு ஆதித்தை பார்க்கவே சங்கடமாக இருக்க தயக்கத்துடன் அவன் முகம் பார்த்தாள் வர்ஷா.

ஆனால் ஆதித்தோ யாரையுமே பார்க்கவில்லை. கோபத்தில் உடல் மொத்தமும் வியர்வையில் குளிர்த்திருக்க, வெளியே தெறித்துவிடும் அளவுக்கு விரிந்திருந்த அவனது ரெண்டு விழிகளும், ஸ்கிரீனிலே தான் நிலை குத்தியிருக்க, முதலில் சுதாரித்த பிரபு தான் ஓடி சென்று ஓடிக்கொண்டிருந்த வீடியோவை அணைத்துவிட்டு ஆதித்திடம் வந்தவன்,
"சாரி மச்சான் இது எப்படின்னு எனக்கு சத்தியமா தெரியல" தன் பக்கம் எந்த தவறும் இல்லை என்பதை புரிய வைக்கும் நோக்கில் பதற்றத்துடன் விளக்கம் அளித்தான்.
"இட்ஸ் ஓகே" என்று பிரபுவின் முகத்தை கூட பார்க்காது கூறிய ஆதித் வேகமாக அங்கிருந்து செல்ல, அப்பொழுது ஆதித்தை மறித்தபடி அவன் முன்னால் வந்து நின்ற வந்த விநாயக்,
"என்ன அவசரம் பார்ட்டிய முடிச்சுட்டு போலாமே ஆம்பள சார்" என்று நக்கல் பொதிந்த குரலில் கூறியவன், வர்ஷாவை பார்த்து கண்ணடித்து விட்டு மீண்டும் ஆதித்திடம், "என்னை, அன்னைக்கு ஆம்பளயான்னு கேட்ட, முதல்ல நீ ஆம்பளையாடா? வாங்கினத திருப்பி கொடுப்பதற்கான நேரம் வந்துருச்சு, நூறு மடங்கா திருப்பி தரேன், ரெண்டு பேரும் ரெடியா இருங்க" என்று ஆக்ரோஷமான குரலில் சிரித்த முகமாக கூற, ஆதித் விநாயக்கை ஒரு பார்வை பார்த்தானே தவிர வேறு எதுவும் பேசவில்லை, ஆனால் அழுகையோடு கூடிய ஒருவகையான ஆரோஷத்துடன் விநாயக்கை ஏறிட்ட வர்ஷா,
"நீ என்ன தர்றது, நான் தரேன் வாங்கிக்கோ" என்று ஆத்திரத்துடன் கூறியவள், யாரும் எதிர்பார்ப்பதற்குள் அதே ஆத்திரத்துடன் தன் கையில் இருந்த குளிர்பானத்தை விநாயகின் முகத்திற்கு நேராக வீசிவிட்டு,
"அவரை கேக்கற நீ முதல்ல ஆம்பளையா டா? பொறுக்கி, சிரிக்கிற ம்ம், அன்னைக்கு நான் மட்டும் நினைச்சிருந்தேனா இப்போ உன் பொழப்பு சிரிப்பா சிரிச்சிட்டு இருந்திருக்கும்" என்று பல்லை கடித்த படி சிறியவள்,
அனைவரையும் ஒரு கணம் பார்த்துவிட்டு விநாயக்கை பார்த்து
"அவர் யாரு என்னங்கற விஷயத்தை எவனுக்கும் சொல்லி எதையும் நிரூபிக்க வேண்டிய அவசியம் எங்களுக்கு இல்லை." என்று சொல்ல ஆதித் வருணிக்கா என அங்கிருந்த அனைவரும் வர்ஷாவின் இந்த அவதாரத்தை அதிர்ச்சியுடன் பார்த்துக்கொண்டிருக்க,
அனைவரின் மத்தியிலும் தன்னை அவமானப்படுத்தியதால் வர்ஷாவை பார்த்து, "ஏய்" என்று வெறி பிடித்தவன் போல கத்திய விநாயக், வர்ஷாவின் கன்னத்தை நோக்கி தன் கரத்தை உயர்த்திய கணம், விநாயகின் உயர்ந்த வலக்கரம் ஆதித்தின் இடது கரத்திற்குள் சிறைப்பட்டிருக்க, ஆதித்தின் வலகரமோ விநாயகின் கன்னத்தில் அழுத்தமாக தன் தடத்தை பதித்திருந்தது.
"நனைச்சு கூட பார்த்திடாத இல்லாம பண்ணிடுவேன்." என தன் விரல் நீட்டி விநாயக்கை எச்சரித்த ஆதித்தின் சிவந்த விழிகள் தனலை கொட்டியது. அதுவரை வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த அனைவரும் விநாயக், வர்ஷாவை நோக்கி கை நீட்டவுமே பதறியவர்கள், ஆதித் விநாயக்கை தாக்கியதில் இன்னும் பதறிவிட, ஆனால் ஆதித்தோ, யாரையும் கருத்தில் கொள்ளாது, வர்ஷாவின் கரத்தை மற்றும் இறுக்கமாக பற்றிக் கொண்டவன், வேகமாக அங்கிருந்து சென்றிருந்தான்.

@@@@@

காரின் கதவை திறந்து வர்ஷாவை அமர வைத்து, கதவடைத்து, மறுப்பக்கம் வந்து ஏறிக்கொண்ட ஆதித், வர்ஷாவை நெருங்கி சீட் பெல்ட் அணிவித்தபொழுது கூட வர்ஷா அவனை பார்க்கவுமில்லை அவனிடன் எதுவும் பேசவுமில்லை, ஓரமாக காரின் கதவில் தலை சாய்த்தபடி மௌனமாகவே அவள் அமர்ந்திருக்க, ஆதித்தும் எதுவும் பேசாமல் மௌனமாகவே அமர்ந்திருந்தவன், அவள் மீது அடிக்கடி பார்வையை மட்டும் பதித்தபடி காரை ஒட்டினான்.

சில நிமிடங்களில் கார் ஆதித்தின் கெஸ்ட் ஹவுசில் வந்து நிற்க, காரில் இருந்து இறங்கிய ஆதித், மறுபக்கம் வந்து கதவை திறக்கவும் இறங்கிகொண்ட வர்ஷா, அவன் வீட்டின் கதவை திறந்ததும் உள்ளே நுழைய, அப்பொழுது வேகமாக அவளை நெருங்கி அவள் கரத்தை ஆதித் பற்றிக்கொண்ட மறுகணம், அத்தனை நேரம் அடக்கி வைத்திருந்த மொத்த கண்ணீரும் கரை புரண்டு ஓட, தன் உதடு துடிக்க ஆதித்தை பார்த்த வர்ஷா,
"ஐயம் சாரி, ஐயம் வெறி.." என்று அடுத்த வார்த்தை அவள் பேச வரவும், "ஐ லவ் யூ" என்றான் ஆதித் ஆத்மாத்தமாக.
அவன் அவ்வாறு சொல்லவும் தன் விழிகள் விரிய அவனை வர்ஷா ஆச்சரியத்துடன் பார்த்த நொடி, அவனது உதடுகள் வேகமாக அவளது துடிக்கும் இதழில் பதிய, பெண்ணவளின் கண்கள் இன்னுமே விரிந்துகொண்டது.

ஒரு நொடி முத்தம் தான், பதித்ததும் விலகியவன், சட்டென்று வர்ஷாவின் கன்னம் பற்றி அவளது விழிகளுடன் தன் விழிகள் கலக்கவிட்டு,
"ஐ லவ் யூ சோ மச்" என்றவன் மீண்டும் அவள் இதழுடன் தன் இதழை சேர்த்தான்.
இந்த முறை நொடி பொழுதில் எல்லாம் விலகவில்லை. நீடித்த இதழ் அணைப்பில் ஒரு கட்டத்தில் அவள் கண்கள் மெல்ல மூடி கொள்ள, முத்தமிட்டபடியே தன்னவளை தன் கரங்களில் ஏந்திகொண்டவன், மாடிப்படிகளில் ஏறி தன் அறைக்கு செல்லும் பொழுது கூட அவள் இதழை விடவில்லை, இத்தனை மென்மையாக கூட முத்தமிட முடியுமா என்பது அவளது மலரிதழை அத்தனை மென்மையாக கொஞ்சி தீர்த்துக்கொண்டிருந்தான்.

நீண்ட நேர இதழணைப்பின் முடிவில் தன்னவளை அப்படியே மஞ்சத்தில் கிடத்தியவனின் உதடுகள் இப்பொழுது அவளது கழுத்துவளைவில் முத்தம் பதிக்க துவங்க, துவண்டு போன பெண்ணவள், அவனது பின்னந்தலையின் கேசத்தை பற்றி நிமிர்த்தவும் நிமிர்ந்து அவளை பார்த்தவனை, பெண்ணவள் பார்க்கவில்லை.
உணர்வின் பிடியில் கண்களை மட்டும் இறுக்கமாக மூடிக்கொண்டு, தன் ஈர இதழ்கள் தந்தியடிக்க, தன்னவன் கரம் பட்டு விலகிய ஆடையுடன் ஓவியம் போல படுத்திருந்தாள்.

தனக்கே தனக்கான தன்னவளை தன் இதழில் புன்னகை தவிழ, விழிகளில் ரசனையுடன் பார்த்தவனின் மனதிற்குள் பொல்லாத ஆசையெல்லாம் முளைக்க, அப்படியே தன்னவளின் முன் மண்டியிட்டு அமர்ந்தவன், அவளது பாதங்களை பற்றி ஒவ்வொரு விரல்களுக்கும் முத்தம் பதித்தபடி முன்னேறியவன், தான் போகும் பாதை எங்கும் கணக்கில்லா முத்தங்களை வாரி வழங்கிக்கொண்டே செல்ல, தன்னவனின் ஈர முத்தங்கள் கொடுத்த கதகதப்பில் தனக்குள் பெரும் பூகம்பத்தையே உணர்ந்த வர்ஷாவின் இதயம் வேகமாக துடிக்க துவங்க, வேக மூச்சுகளுடன் சட்டென்று எழுந்தவள் முழங்காலை கட்டிக்கொண்டு அதில் முகம் புதைத்துக்கொண்டாள்.

நொடிகள் ஒவ்வொன்றும் யுகமாக கடந்து கொண்டிருக்க, தன்னவனின் ஸ்பரிசத்தை எதிர்பார்த்த பெண்ணவளின் காதல் உள்ளம், அது இல்லாமல் போகவும் ஏமாந்துவிட, மெதுவாக நிமிர்ந்து ஒருவித தவிப்புடன் தன்னவனை தேட, அடுத்த கணம் அவளது வெற்று முதுகில் அவனது சூடான இதழ்கள் அழுத்தமாக பதியவும் சிலிர்த்தடங்கியவள், இன்னும் இறுக்கமாக தன் முழங்காலை கட்டிக் கொள்ள,
தன் இதோழறம் புன்னகை தழுவ "வர்ஷா" என காதலோடு அழைத்தான் ஆதித்.

அவளிடம் பதில் இல்லை. உடனே அவளது விரிந்து கிடந்த கூந்தலுக்குள் முகம் புதைத்து வாசம் பிடித்தவன், அதை மென்மையாக வருடி, அவளது அடர்ந்த சிகைக்குள் தனது விரல்களை நுழைத்து மென்மையாக பற்றி, அவள் பின்னால் மண்டியிட்டு அமர்ந்தபடியே அவள் வதனத்தை தன்னை நோக்கி கீழாக இழுக்க, கண்கள் மூடி இருந்த நிலையில் அப்படியே அவன் இழுத்த வாக்கிலே சரிந்த பெண்ணவளின் பிறை நுதல் துவக்கம், மூடிய இமைகள், சிவந்த நாசி என்று பேதம் இன்றி அவன் முத்தங்களை விதைக்க, அப்படியே தன் ஒற்றைக் கரத்தால் அவன் கழுத்தை வளைத்துக் கொண்டாள் வர்ஷா.

அவனும் மெல்ல அவள் கூந்தல் ஒதுக்கி அவளின் பின்னங்கெழுத்தில் இதழ் பதிக்க, அவன் கழுத்தை வளைத்திருந்த அவளது கரங்களோ அவனது சிகையை அழுத்தமாக பற்றி கொண்டது.

இப்பொழுது மெல்ல நகர்ந்த அவனது இதழ்கள் பெண்ணவளின் காது மடலில் புதைந்து கொண்டு முத்தமிடாமல், பட்டும் படாமல் உரசி செல்ல, துடித்துடித்தவள் வலுவில்லாது அவன் மார்பின் மேல் சரியவும், அப்படியே தன் மீது சாய்ந்தவளை தாங்கி கொண்டவன், மெதுவாக தன்னவளை கீழே சரித்துவிட்டு, வர்ஷாவின் அருகே வந்தவன் அவளது விழிகளை பார்த்தபடி தனது சட்டை பொத்தான்களை ஒவ்வொன்றாக விடுவித்தான்.

பெண்ணவளோ ஆதீத வெட்கத்தாலும், தாங்க இயலாத கூச்சத்தாலும் முகத்தை திருப்பிக் கொள்ள, அதைக் கண்டு புன்னகைத்த ஆதித், அவள் வதனத்தை தன்னை நோக்கி திருப்பி நெற்றியில் முத்தம் பதித்து, படிப்படியாக கீழிறங்க, அந்நேரம் அவன் இதழுக்கு தடையாக இருந்த அனைத்தையும் அவனது கரங்கள் அகற்றதுவங்க, மறுக்கவும் முடியாது தன்னை மறைத்துக் கொள்ளவும் முடியாது தவித்த பெண்ணவள், தன் கரம் கொண்டு தன் மேனியை மறைத்துக் கொள்ள பார்க்க,
"ப்ளீஸ் கைய எடு ஷுகர் சிரப்" குனிந்து காதுமடலில் முத்தம் பதித்தபடி தாபத்துடன் கெஞ்சினான்.
"ம்ஹூம்" என மறுத்த செல்ல கிளியாளின் மறுப்புகளை எல்லாம் ஆணவனின் கொஞ்சல் நிறைந்த கெஞ்சல்கள் வென்று விட, கண்ட நொடி முதல் தன் மூச்சை நிறுத்த துடித்துக் கொண்டிருக்கும் தன்னவளின் மென்மைகளில் புதைந்து கொள்ளும் ஆசையில் குனிந்து, அங்கே அவள் கணக்கிட முடியாதளவு முத்தங்களை பதிவு செய்தவனுக்கு தன்னவளின் உணர்வுகளை அறிய வேண்டும் என்கிற ஆவல் தன்னுள் எழவும், அவளது கண்களைப் ஏறிட்டான். அப்பொழுது அவளது பார்வை தன் இடது பக்க மார்பை வெறித்துக்கொண்டு இருப்பதை கண்டு குனிந்து தன் மார்பை பார்த்தவனுக்கு ஒரு மாதிரி ஆகிவிட சங்கடதுடன் விலகியவன்,
"சாரி வர்ஷா இத நான் ஏற்கனவே ரிமூவ்.." என்று கூறி முடிப்பதற்குள், தன் கரங்களால் தன்னவனின் கழுத்தை வளைத்து தன்னை நோக்கி இழுத்த பெண்ணவளோ, தன்னவனின் தயக்கத்தையும், தவிப்பையும் போக்கும் பொருட்டு, அவனது நெற்றி கண், நாசி, கன்னம் என தொடர் முத்தங்களால் தன்னவனை அதிரச் செய்துவிட்டு விலகிய பொழுது, தன் சூடான மூச்சு காற்று தன்னவளின் செவி மடலை தீண்ட அவள் காதில், "அவ்வளவு தானா?" என்று தயக்கமாக கேட்டவனை நிமிர்ந்து பார்த்தாள்.

'என்னை ஏதாவது செய்துவிடேன்' என்ற அவனது பார்வையில் இருந்த தவிப்பு, பெண்ணவளை அசைத்துப் பார்க்க, தன்னவனின் தவிப்பை தீர்க்கும் பொருட்டு இன்னும் வேகமாக அவனை தன்னை நோக்கி இழுத்தவள், அவனது அதே இடது பக்க மார்பில் அழுத்தமாக முத்தம் பதித்து அவன் முகத்தை அப்படியே தன் நெஞ்சுக்குழிக்குள் புதைத்து, அவனை மொத்தமாக அணைத்துக்கொண்ட பொழுது, உயிர் வரை சென்று தன்னை உருகுலைய செய்த தன்னவளின் காதல் முத்தத்தில் மீண்டும் தன்னையே தொலைத்தான் ஆதித்.

தன்னவளாக தரும் இந்த முத்தங்கள் எல்லாம் ஆதித்துக்கு ஒருவித மயக்கத்தை ஏற்படுத்தியிருக்க, இன்னும் வேண்டும் என்று எண்ணினான் போல, மீண்டும், "அவ்வளவு தானா? எனக்கு இன்னும் வேணுமே" என்று தாபத்துடன் அவன் கேட்கவும், தயக்கத்துடன் தன் இதழை அவன் இதழில் பதித்துவிட்டு, அதற்கு மேல் என்ன செய்வதென்று தெரியாமல் அப்பாவியாக அவள் அவனைப் பார்க்க, புன்னகையுடன் தன்னவளின் நெற்றியோடு நெற்றி முட்டிய ஆதித், அவள் விழிகளில், தனக்கான அளவில்லா காதலை கண்டு எல்லையில்லா மகிழ்ச்சியடைந்தவன், அடுத்தடுத்த நிலைக்கு தயக்கமின்றி முன்னேறினான்.

கட்டியணைத்த பொழுதும் சரி, இலக்கணமே இல்லாது அவள் மேனியெங்கும் முத்தங்களை விதைத்த பொழுதும் சரி, இறுதியில் மொத்தமாக கொள்ளையிட்ட பொழுதும் சரி,
ஆண்மைக்கும் மென்மை உண்டு என்பதை தனது ஒவ்வொரு செயலிலும் பெண்ணவளுக்கு உணர்த்தி, அவளை ஆராதித்துக் கொண்டாடி தீர்த்தான்.

உடையவன் கொடுத்த ஈர முத்தங்கள் தனக்குள் பற்ற வைத்த காதல் தீயில் வர்ஷா மெல்ல மெல்ல உருக, அவளுடன் தானும் உருகி ஒன்றாக கலந்து அவளின் உயிர் தீண்டி ஒய்ந்த நேரம், தன்னையே முற்றும் முழுவதுமாய் தன்னிடம் ஒப்புவித்த தன் கண்மணியின் கலைந்த சிகையை வருடி, நெற்றியில் அழுத்தமாக முத்தம் பதித்து, தான் அவள் மீது கொண்ட மொத்த காதலையும் அவளுக்குள் கடத்தியிருந்தான் ஆதித் மஹாதேவ். 

Shamugasree

Well-known member
Vinayak ku ithula pothathu. Innum semathiya koduthurukanum. Adhi Varsha mela kova paduvan partha love solran. Avanuku Vinayak mela doubt vanthurukuma. Varsha Adhi loves super.
Adei story innaiku mudinjuduma. Make it fast dear
 

NNK-34

Moderator
Vinayak ku ithula pothathu. Innum semathiya koduthurukanum. Adhi Varsha mela kova paduvan partha love solran. Avanuku Vinayak mela doubt vanthurukuma. Varsha Adhi loves super.
Adei story innaiku mudinjuduma. Make it fast dear
Thank u dr😍
Avanum vida matan da innum iruku. Erkanave lv la irunthavan Avanukukkaaga ava thunichala pesunathula avan happy yaagitan dr.
Konjam konjama therinjidum dr.
Sorry dr innum uds iruku mudinjalavu mudikiren illanalum continue pannina padipeengala dr.
 

Shamugasree

Well-known member
Thank u dr😍
Avanum vida matan da innum iruku. Erkanave lv la irunthavan Avanukukkaaga ava thunichala pesunathula avan happy yaagitan dr.
Konjam konjama therinjidum dr.
Sorry dr innum uds iruku mudinjalavu mudikiren illanalum continue pannina padipeengala dr.
Kandipa story fulla mudinga da. Padipen till the end. Innum evlo ud pogum story
 

Mathykarthy

Well-known member
ஆதித் வர்ஷா 😇💞

வர்ஷா சூப்பர்.... ஆதிக்காக விநாயக் கிட்ட பேசினது சூப்பர்... 👌👌👌

இதே சப்போர்ட் தான் அவன் பிரச்சனை நடந்தப்போ வருணி அண்ட் பேமிலிகிட்ட எதிர்பார்த்தது.... ஆனா அவங்க அவனுக்கு ஆதரவா இல்லை...

ஆதித்தும் வர்ஷாக்காக நின்னான்... both complement each other ... 🥰🥰🥰
 

NNK-34

Moderator
ஆதித் வர்ஷா 😇💞

வர்ஷா சூப்பர்.... ஆதிக்காக விநாயக் கிட்ட பேசினது சூப்பர்... 👌👌👌

இதே சப்போர்ட் தான் அவன் பிரச்சனை நடந்தப்போ வருணி அண்ட் பேமிலிகிட்ட எதிர்பார்த்தது.... ஆனா அவங்க அவனுக்கு ஆதரவா இல்லை...

ஆதித்தும் வர்ஷாக்காக நின்னான்... both complement each other ... 🥰🥰🥰
Thank u dr
Yes dear, both supports each other.
Thank u so much 💕
 
Top