எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 14

NNK-54

Moderator
வர்ணங்கள் 14

ஜெயந்தன் குழந்தையிடம் பிரச்சனை செய்தவர்களை அடிப்பது போன்ற புகைப்படங்கள் அடுத்த நாள் பத்திரிக்கைகளில் வெளிவந்தது.அதோடு நிற்கவில்லை, பெரும்பாலான சானல்களில் இவனது வீரதீர சாகசமும்,புஜபராக்ரமமும் ஒளிபரப்பானது.இவனது சொந்த செய்தி நிறுவனமும் கூட விதிவிலக்கல்ல. தியாவின் புகைப்படம் வெளிவரவில்லை , ஏனோ குழந்தையை சேர்த்து படம் எடுக்கும் எண்ணம் ஏனோ யாருக்கும் இல்லை.நல்லதாக போயிற்று.

இரவு இருவரும் வேறு எந்த வாகனமும் பிடித்து சென்று வேறு எந்த பிரச்சனையிலும் சிக்க வேண்டாம் என்று ஜெயந்தன் சுபாவிடம் தெளிவாக கூறிவிட்டான். மறுத்துப் பேசும் அளவுக்கு கூட சுபாவுக்கு மூளை வேலை செய்யவில்லை. குழந்தை ஏனோ முதன்முறையாக பார்த்த அந்த அங்கிளுடன் நன்றாகவே ஒட்டிக்கொண்டாள். அவனும் குழந்தையும் முன் சீட்டில் அமர்ந்துகொள்ள சுபா பின்சீட்டில் அமர்ந்துகொண்டாள்.

ஜெயந்தனுக்கு இது புது அனுபவமாக இருந்தது.இதுவரை எவ்வளவு மனிதர்களை சந்தித்து இருக்கிறான். ஆனால், குழந்தை ..அவன் இவ்வளவு வருஷங்களில் குழந்தையுடன் பேசிப் பழகியதில்லை . அதுவே அவனுக்கு சந்தோஷத்தை கொடுத்தது. ஆழ்மனதில் தான் விரும்பும் பெண்ணுக்கு திருமணம் முடிந்து இவ்வளவு பெரிய பெண்குழந்தை இருக்கிறாள் என்பதை அவனால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. சுபா தனது முகவரியை சொல்ல ஜெயந்தனது கார் அவளது அடுக்ககம் நோக்கி சென்றது.

சுபாவின் அம்மா ,தனது மகளும் பேத்தியும் இவ்வளவு நேரமாகியும் வராதது கண்டு பயங்கர கலவரம் கொண்டார். அனுப்பிவைத்திருக்கக் கூடாது என்று திரும்ப திரும்ப தனக்கு தானே சொல்லிக்கொண்டார். மணி இரவு பன்னிரண்டை நெருங்க அவருக்கு அழுகையே வந்துவிடும் போல இருக்க,ஹாலில் சோபாவில் அமர்ந்துகொண்டு திறந்திருந்த கதவுகளின் வழியாக வாசலையே பார்த்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.

அடுக்ககத்தின் உள்ளே ஜெயந்தனின் கார் நுழைந்தது. சீட் பெல்ட் அணிந்திருந்த குழந்தை அமர்ந்த வாக்கிலே தூங்கிவிட்டாள். பின்னால் அமர்ந்திருந்த சுபாவும் நன்றாக தூங்கியிருந்தாள் .அவள் கன்னங்களில் அவள் கண்ணீரின் தடமாக லேசாக உப்பு பூத்திருந்தது அந்த அரைவெளிச்சத்திலும் அவனுக்கு தெரிந்தது. இப்போது யாரிடம் கேட்பது இவர்களின் வீடு எத்தனையாவது பிளோரில் இருக்கிறது என்று என லேசாக அவனுக்கு அலுப்பு.

காலையிலிருந்து அவன் இன்னும் கொஞ்சநேரம் கூட நிதானமாக உட்காரவில்லை.கழுத்தும்,தோள்பட்டையும் வலித்தது. சுபா திருமணம் ஆனவள் என்ற மன வலியை விட இது ஒன்றும் பெரியதில்லை என நினைத்துக்கொண்டான். உள்ளே நுழைந்ததும் செக்யூரிட்டியிடம் சுபாவின் வீடு பற்றி விசாரித்தவனின் காரில் அம்மாவும் குழந்தையும் தெரிய அவனும் தேவையான விவரங்கள் கொடுத்தான்.அவனது பார்வையில் ஏதோ விவரம் தெரிந்து கொள்ளும் ஆர்வம அப்பட்டமாக தெரிய, ஜெயந்தன் எரிச்சலுடன் காரின் ஜன்னல் கதவை மூடிவிட்டான் .


அந்த அடுக்ககத்தில் கார் பார்க்கிங் அண்டர் கிரௌண்ட்டில் இருந்தது.வாகனங்கள் தளத்தில் பயணம் செய்ய முடியாது.வேறு வழியின்றி கீழே காரை கொண்டுபோய் நிறுத்திவிட்டு இருவரையும் எழுப்பினான் ஜெயந்தன். குழந்தை எழுவதாக இல்லை எனவும் அவளை தன் கைகளில் தூக்கிக்கொண்டவன் சுபாவை எழுப்பி பார்க்க அவளாலும் கண்களை திறந்து பார்க்க முடியாத அளவுக்கு தூக்கம் அவளை அழுத்தியது.காலையில் பிரயாணம் செய்துவந்தவள் அதிகமாக ஓய்வே எடுத்திருக்கவில்லை.மதியம் ஒரு அரைமணி நேரம் தூங்கியிருந்திருப்பாள் .

லேசாக கண்ணைத் திறந்து பார்த்தவள் தனது கணவன் தன் அருகே நிற்கிறான் என்று தைரியம் வர பெற்றவளாக அவனது தோள்வளைவில் சாய்ந்து தனது தூக்கத்தை தொடர்ந்தாள் . லேசாக கோவம் துளிர்த்தாலும் அவளது இந்த தோள் சாய்தலில் அவன் மீண்டும் எதையோ உணர்ந்தான். அவனது நினைவுப் பெட்டகம் அவனுக்கு எதையோ நினைவில் கொண்டுவர முயன்று தோற்றுக் கொண்டிருந்தது.

பார்க்கிங்கில் இருக்கும் லிப்ட் மூலமாக அவளது வீடு இருக்கும் தளத்தை அடைந்தவனுக்கு அவள் வீட்டை கண்டுபிடிப்பது கஷ்டமாக இல்லை .வீட்டுக்கதவுதான் திறந்தே இருந்ததே! மனைவி மகள் இருவரையும் ஒருவாறாக வீட்டுக்கு கொண்டுபோய் விட்டவன் காலிங் பெல்லை மரியாதை நிமித்தமாக அழுத்தினான்.

அவசரமாக வந்த அந்த நடுத்தர வயது பெண்ணுக்கு இவனை பார்தததும் அதிர்ச்சி,ஆனந்தம் என்று கலந்த புது உனர்வு . ஆனால்,எதிரில் நின்றுகொண்டிருந்தவனுக்கோ சற்றும் அவளை தெரிந்திருக்கவில்லை. சட்டென சுதாரித்துக்கொண்டவள் மனதில் தன் மகள்,கணவன் குழந்தையுடன் வாழ எவ்வளவு ஆசை பட்டேன் என்று ஆற்றாமையாக இருந்தது.

சுபாவை அவனிடமிருந்து எழுப்பி நகர்த்தாமல், "குழந்தையை என் கைல குடுங்க", என்று குழந்தையை வாங்கிகொண்டவள்,ஜயனே சுபாவை உள்ளே கூட்டிக்கொண்டு வர வழிவிட்டு நகர்ந்தாள். அவனுக்கு ஏதோ வித்தியாசமாய் இருந்தபொழுதும் எதையம் காட்டிக்கொள்ளவில்லை. சுபாவை அவனே அவர்களது படுக்கை அறையில் கொண்டுபோய் விட்டான். குழந்தையை ஏற்கனவே சுபாவின் அம்மா கட்டிலில் படுக்க விட்டிருந்தார்.

இருவரும் அறைக்குள்ளிருந்து வெளியே வந்தார்கள். "என்னாச்சு..ரெண்டு பேரையும் நீங்க கூட்டிட்டு வந்திருக்கீங்க?" என்று கேட்டவளுக்கு சுருக்கமாக மாலில் நடந்தவற்றை ஜயன் சொல்ல கேட்டுக்கொண்டிருந்தவருக்கோ மனம் அடைத்தது.

அதை காண்பிக்காமல் இருக்க.,"ஓஹ் .. ரொம்ப பெரிய ஹெல்ப். தேங்க்ஸ். காலைல தான் பெங்களூரிலிருந்து வந்தா. பொண்ணை பார்த்ததும் கிளம்பிட்டா. ரெஸ்ட் எடுக்காம எப்பவும் இப்படித்தான் என்று அலுத்துக்கொண்டவளிடம்,சுபாவின் கணவர் பற்றி விசாரிக்கலாமா?என்று ஒருமுறை யோசித்தவன் தனது முடிவை மாற்றிக்கொண்டான்.

அவனது ஒப்புதலுடன் இருவருக்கும் பூஸ்ட் கலந்து கொண்டுவந்தால் சுபாவின் அம்மா. அதைக்குடித்தவன் "ரொம்பவே லேட் ஆகிடுச்சு ஆன்டி.நா கிளம்பறேன் மோர்னிக் ஆஃபீஸ் போகணும் " என்று விடை பெற்றுக்கொண்டு கிளம்பினான். ஒரு யோசனையுடன் அவனை பார்த்துக்கொண்டிருந்த பெரியவள்,"ஹான்..சரி . உங்க போன் நம்பர் கிடைக்குமா..என்று"கேட்டுவிட்டாள் . ஜெயன் மறுக்காமல் தனது அந்தரங்க அலைபேசி என்னை அவர்களிடம் கொடுத்துவிட்டு, அவர்கள் இருவரது எண்ணையும் வாங்கிக்கொண்டான்.

அங்கிருந்து கிளம்பி வெளியே வந்து அருகே இருக்கும் ஒரு பெரிய ஹோட்டலில் அறை எடுத்துக்கொண்டு தங்கினான்.இதற்கு மேல் தன் வீடு செல்லும் எண்ணம் அவனுக்கு இல்லை. அசதியும்,தூக்கமுமாக அவனால் கார் ஓட்ட முடியவில்லை. அறைக்குள் வந்து படுக்கையில் விழுந்தவனுக்கு இரண்டு விஷயங்கள் தோன்றியது.

ஒன்று சுபாவின் வீட்டில் ஆண்கள் யாரும் கண்ணில் படவில்லை.அவள் அப்பா,அண்ணன் ,கணவன் என்று. ஆண்கள் இல்லாத வீடு என்று எளிதாக சொல்லிவிடலாம். அப்படி என்றால் தியாவின் அப்பா எங்கே? இரண்டாவது வீட்டின் பெரியவள் தன் மகளை அந்நிய ஆணுடன் பார்க்கும் பொழுது எந்த பதட்டமும் படவில்லை.அவனை பற்றியும் எதுவும் அறிய முற்படவில்லை. மாறாக அவரது பேச்சு வெகு இயல்பாகவும் பழகியவர்கள் போலவும் இருந்ததே! அப்படியென்றால் நான் அவர்களுக்கு ஏற்கனவே அறிமுகம் ஆனவனா?

எப்படி? எனக்கு ஏதும் அவர்களை சந்தித்த ஞாபகம் இல்லையே..என்று யோசித்தவாறே தூங்கியவனை அடுத்தநாள் காலை அலைபேசி அழைப்பு எழுப்பி விட்டது. அவனது அப்பாதான் எழுப்பி இருந்தார். பத்திரிக்கை செய்திகள் பார்த்து அவருக்கு ரத்த கொதிப்பு ஏறியது.

தங்களது அந்தஸ்து எவ்வளவு பெரியது. இவன் இவ்வளவு கீழே இறங்கி சமூக சேவை செய்யவில்லை என்று யார் கண்ணீர் விட்டது என்று கொதித்துக் கொண்டிருந்தார். மாலில் வேலை செய்யும் தங்கள் நிறுவன ஊழியர்கள் மூலம் சி ஸி டிவி வழியாக நடந்தவற்றை பார்த்தவர் உறைந்து போனார். சுபாவை என்றாவது அவரால் மறக்கவோ மறுக்கவோ முடியுமா என்ன?

அவர்களைப்பற்றிய விவரங்களை சேகரிக்க சொன்னவருக்கு குழந்தையும் முகம் மீண்டும் மனக் கண்ணில் நிழலாடியது. தியாவின் முகம் ,அவள் யாருடைய மகள் என்று அப்பட்டமாய் சொன்னது. அப்படியெனில் இத்தனை வருஷங்களாக தனக்கு மகள் பிறந்திருப்பதையே எங்களிடம் சொல்லாமல் விடுத்தார்களா'என்ற கேள்வி ஜயனின் அப்பாவை உலுக்கியது.

மகனுக்கு இன்னமும் தனது சுபாவுடனான திருமணம் பற்றிய ஞாபகங்கள் சுத்தமாக இல்லை என்று அவருக்குத் தெரியும்.ஆனாலும் நம்ப முடியாது. பெரியவருக்கு தியாவை பார்த்தவுடன் மனம் துடித்தது.என்ன சொன்னாலும் தியா அவரது பேத்தி ஆயிற்றே. குழந்தைக்காக அவளை நிச்சயம் ஏற்க முடியாது.

சென்னை வந்தவள் இதுவரை தங்கள் மகனை தேடி வரவில்லை.அப்படியென்றால் அவளுக்கு அவனுடன் வாழ இஷ்டம் இல்லை என்று தானே பொருள் என தனக்குத் தானே சப்பைக்கட்டு கட்டவும் அவர் தவறவில்லை.

தங்களது பேத்தியை பற்றிய விபரங்களையும் சுபா இங்கே இந்தியாவில் இருப்பதையும் தனது மனைவியுடன் பகிர்ந்து கொண்டவருக்கு அடுத்து என்ன என்பது பூதகாரமாக மனதை அழுத்தியது.

இப்போது சிக்கல் என்னவென்றால் தியாவை தங்களுடன் அழைத்துவர ஜெயந்தனது பெற்றோருக்கு முழு விருப்பம் உண்டு. என்னதான் சுபாவை மிரட்டி கணவனுடன் இழையக் கூடாது. சேதாரம் ஏற்பட்டால் இவர்கள் பொறுப்பு ஏற்க முடியாது என்றெல்லாம் மிரட்டி வைத்திருந்தாலும் கணவன் மனைவி உறவு பற்றி அறியாதவர்கள் அல்லவே அவர்கள்.

ஆணையும் பெண்ணையும் ஒன்றாக பழகவிட்டு, காட்டுப்பாட்டுடன் இருக்க வேண்டும் என்று கூறுவதும், மனம் நிலையில் இல்லாத சமயத்தில் தங்கள் மகன் எப்படி நடந்து கொள்ளக் கூடும் என்றெல்லாம் யோசிக்காமலா அந்த பெண்ணை திருமணம் செய்து வைத்தார்கள்?

ஆனாலும், இவ்வளவு வருஷங்களாய் தங்கள் நிழலில் இருந்து கொண்டு எவ்வளவு சாமர்த்தியமாக இவ்வளவு பெரிய விஷயத்தை மறைத்து விட்டார்கள்? என்று அவர்களுக்கு ஆச்சர்யம் தான்!


ஏனோ சுபா தங்கள் குடும்ப வாரிசை பற்றி சொல்லாமல் விடுத்தது அவர்களுக்கு பிடிக்கவில்லை. எப்படியும் வேண்டாத மருமகள் சுபா. அவள் என்ன செய்தாலும் குற்றம் தான்.

குழந்தை உருவானால் நாங்கள் பொறுப்பு அல்ல என்று ஏற்கனவே சொன்னதை மறந்தும் விட்டார்கள். சுபா இவர்கள் மீது என்ன அபிப்ராயம் வைத்திருக்கிறாள் என்று யோசிக்கவும் இல்லை.

மகன் அந்தஸ்து பார்ப்பவன் என அந்த பெண்ணின் மனதில் அவனை பற்றிய தவறான எண்ணத்தை ஏற்கனவே கட்டமைத்து விட்டார்கள்.

எல்லாவற்றையும் மீறி தான் சுபா தன் கணவன் மீது காதலை வைத்திருக்கிறாள். அவன் எப்படிபட்டவன் என்று தெரிந்திருந்தால் ஒருவேளை அவனுடன் சேர அவள் ஏதேனும் முயற்சி செய்திருப்பாளோ?

இதோ இப்போது கூட, மகனுக்கு தன் இரண்டாவது கல்யாணம் பற்றிய விஷயங்கள் தெரியாமல் பேத்தியை தங்களுடன் கூப்பிட்டு கொண்டு வருவது எப்படி என்கிற யோசனை தான்.

மறுநாள் செய்திகளை பார்த்து தெரிந்து கொண்ட ஜெயனுக்கு அதிர்ச்சி தான். இரவு நடந்த விஷயங்கள் இவ்வளவு சீக்கிரம் காட்டுத் தீ போல பரவி, தன்னை பேசு பொருளாக்கக் கூடும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை.

அப்பாவின் அழைப்புக்கு பின், அவரது உரையாடலின் முடிவில்தான் அவன் செய்திகளை பார்த்தான். அதிர்ச்சி அதோடு கூடிய ஆயாசம்.

" என் வாழ்க்கை, இதில் நான் என்ன செய்தால் இவர்களுக்கு என்ன வந்தது? தொழிலில் உள்ள ஏற்ற இறக்கங்கள் பற்றி பேசினால் பரவாயில்லை.

இதெல்லாம் இவர்களுக்கு யார் சொல்லி புரியவைப்பது?

பத்திரிகை தொழிலில் இருந்தால் எவருடைய அந்தரங்க வாழ்விலும் நுழையலாமா.. என்றெல்லாம் யோசித்துக் கொண்டே அவர்களது நாளிதழ் எடிட்டருக்கு அழைத்தான்.

அவரோ வேறு சொன்னார் " சார், இந்த விஷயம் பிரசுரம் ஆனதுல உங்க இமேஜ் இன்னும் கூடிருச்சு சார். எவ்ளோ பெரிய விஷயம் இது.நம்ம பத்திரிகை மட்டும் இல்லை. உங்க மொத்த தொழிலுக்குமே இப்போ மக்கள்கிட்ட நல்ல பிராண்ட் வால்யூ."என்று சொல்லி இவனுக்கே மார்க்கெட்டிங் பற்றிய வகுப்பு எடுத்தார்.

வெறுத்துப் போனது ஜெயந்தனுக்கு. அவன் மனமோ தியா எப்படி இருக்கிறாளோ என்று கவலை கொண்டது. அதோடு அவளின் அப்பா பற்றியும் தெரிந்துகொண்டாக வேண்டும் என்று யோசித்தவன், சீக்கிரமாக தயாராகி கிளம்பும் பொழுது மணி மாலை மூன்று.

தியா பள்ளிக்கூடம் சென்று அப்போது தான் வீடு திரும்பியிருந்தாள். பள்ளிக்கூடம் சென்றுவந்தாலே குழந்தை மனம் மாறிவிடும். மற்ற குழந்தைகளுடன் விளையாட்டு மனம் சோர்வடைவதை குறைக்கும் என்று சுபா தான் தியாவை பள்ளிக்கு அனுப்பி வைத்தாள்.

அலுவலகம் செல்ல அவளுக்கு அன்று அவளுக்கு விருப்பம் இல்லை. ஆனாலும் வேறு வழி இல்லை. கிளம்பும் முன் தன் அம்மாவுடன் பெரிய தர்க்கம். மீண்டும் சிங்கப்பூர் சென்று விடலாமா.. அங்கே இவ்ளோ பிரச்சனை நமக்கு வரல்ல.
எதிலிருந்தோ தப்பித்து ஓட முயற்சிப்பவள் போல வேகமாகப் பேசிய மகளை வித்தியாசமாய் பார்த்தார் அவளது அம்மா.அவளது மனம் அவருக்குப் புரியாது இல்லை. நேற்று ஜெயந்தனை பார்த்ததும் அவருக்கும் இமாலய அதிர்ச்சிதான். ஆனால் ,மகள்-மருமகன்-பேத்தி என்று மூவரையும் ஒன்றாகப் பார்த்துவிட்ட பிறகு,மகளது வாழ்க்கை சீராக ஏதேனும் ஒரு வாய்ப்பு இருந்தால் அதை விட்டுவிட நிச்சயம் அவர் தயாராக இல்லை.

அதோடு வளரும் பேத்திக்கு தகப்பன் என்ற உறவு நிச்சயம் தேவை. இருந்தும் இல்லாமல் இருப்பது சரி இல்லையே! வேறு யாரையாவது மகள் மணந்து கொண்டால் கூட பரவாயில்லை. அப்படி மணந்துகொண்டு வருபவனும் தன் மகளுக்கு நல்ல கணவனாக இருந்தாலும்,தியாவுக்கு நல்ல தகப்பனாய் இருக்கக்கூடுமா..தான் குழந்தையை வளர்க்கும் பொறுப்பை எடுத்துக்கொள்ள தயார் தான்.

குழந்தைக்கு அப்பா உறவுடன் அம்மா எனும் உறவும் இருந்தும் இல்லாமல் போகக்கூடும். இதையெல்லாம் சமீப காலமாக யோசித்து அவருக்கு ஒற்றைத் தலைவலியே வந்துவிட்டது.

இதற்கெல்லாம் நிரந்தரமாக ஏதாவது முடிவு வரும் என்றால் அதை முயற்சி செய்து பார்த்துவிடுவதாக முடிவெடுத்துவிட்டார்.

பெரியவர்கள் செய்த தவறுக்கு ஏற்கனவே மகள் அனுபவிக்கும் தனிமை போதும்.அதைப்பார்த்து அவர் மனம் துடிப்பதும் போதும்.இதற்கு மேல் தவறுகளை செய்து,எல்லோர் வாழ்க்கையிலும் விளையாடுவது சரியா..எனும் கேள்வி அவரை துளைக்கிறது.

அதோடு,ஜெயந்தனது பார்வை அது தனது மகளின் மீது படிந்த விதம் எதுவும் அவரது பார்வையிலிருந்து தப்பவில்லை. அப்படி இருக்கும் பொழுது அவர் எப்படி மகளின் கூற்றுக்கு சம்மதிக்க முடியும்?
 
Top