எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீக்கமற நிறைந்தாய் உயிரே 7

NNK 75

Moderator
நீக்கமற நிறைந்தாய் உயிரே 7


கற்பகா புட்வேர் நிறுவனர் தான் விசுவநாதன்.. அவரின் அன்பு மனைவி தான் கற்பகம்.. அந்த காலத்திலே கலப்பு காதல் திருமணம்.. இருவரின் குடும்பமும் இருவரையும் ஏற்காததால் சொந்த ஊரை விட்டு பிழைக்க வந்தவர்களுக்கு வந்தாரை வாழ வைக்கும் சென்னை இடம் கொடுத்து வரவேற்றது.

முதலில் ஒரு காலணி தயாரிக்கும் கம்பெனியில் பணியாற்றியவர் அதன் தொழில் நுட்பங்களை கற்றுக் கொண்டு சிறிது சேமித்து வைத்த சேமிப்பை வைத்து சிறியதாய் ஒரு கடை ஆரம்பித்தார்.. கணவன் மனைவி இருவரும் இரவு பகல் என்றும் பாராமல் உழைத்ததன் பலனாக ஒரு பெரிய கடையை ஆரம்பித்தார் விசுவநாதன்.

தங்களின் முழு உழைப்பையும் போட்டு தொழிலை கவனிக்க சொந்தமாகவே காலணி தைக்கும் கம்பெனியை ஆரம்பித்தார்.

கம்பெனி என்று ஆன பின்பு வீட்டையும் மனைவியையும் கவனிக்கும் நேரம் குறைந்தது.. அந்த நேரம் தான் கற்பகம் கருவுற்றிருந்தார்.. என்ன தான் கணவனின் முன்னேற்றத்திற்கு பக்கபலமாக நின்றிருந்தாலும் இயல்பான பெண்களின் குணம் கருவுற்றிருக்கும் நேரத்தில் கணவனின் அன்பை எதிர்பார்ப்பது.

அதுவும் திருமணம் ஆகி மூன்று வருடம் கழித்து கரு உருவானதால் இன்னும் கவனமாய் பார்த்துக் கொள்ள மருத்துவர் உத்தரவிட அதை காதிலும் வாங்காமல் தன் கம்பெனியை விரிவுபடுத்துவதில் சென்றுவிட்டார் விசுவநாதன்.

ஒரு அளவிற்கு மேல் தாண்ட குடும்பத்தையும் மீறி கம்பெனியும் அதனால் கிடைக்க கூடிய லாபமும் மட்டுமே அவருக்கு பிரதானமாய் போனது.

பணமும் புகழும் சேர சேர அதன் மேல் மோகம் அதிகமாக அதிகமாக மனைவி பிள்ளை இரண்டாம் பட்சமாக போயினார்கள்.. அதன் விளைவு வீட்டை மறந்து பணம் புகழ் இதன் பின்னால் செல்ல வேண்டாத பழக்கங்கள் வந்து சேர்ந்தது.

மது மாது எதுவும் தவறில்லை என்ற வழி மாறினார்.. தன் கணவனின் மாற்றத்தை அறிந்த கற்பகம் மனதால் நொருங்கி தான் போனார்.. மனதால் இணைந்த காதல் பந்தம் உடைந்து போன பின்பு தன் உடல்நிலையில் கவனம் செலுத்தாமல் போனார்.

முன்பே கருப்பை பலவீனமாக இருக்க இப்பொழுது மனநிலையும் சேர்ந்து உடலை பாதிக்க குழந்தை பிறப்பதில் சிக்கல் அதிகமாய் போனது.

கணவனின் வழி மாறலும் அவரின் உடல்நிலையும் மனநிலையும் சேர்ந்து உலக வாழ்வை வெறுக்க வைத்தது போலும் பிரசவத்தில் ஒரு பெண் குழந்தையை ஈன்று விட்டு கற்பகம் உயிரை இழந்தார்.

மனைவியின் இழப்பிலும் நிதர்சனத்தை உணராத விசுவநாதன் அதன் பின்பு தான் முழுதாய் மாறிப் போனார்.

குழந்தையை கவனிக்க ஆளை நியமித்து விட்டு தன் உல்லாச வாழ்க்கையை வாழ துவங்கினார்.

பிறந்த பிஞ்சு குழந்தையை பாசத்திற்கும் அன்பிற்கும் ஏங்க விட்டு இவர் பணத்தின் பின்னே ஓடி தன் வாழ்க்கையை உல்லாசமாய் வாழத்துவங்கினார்.

அதன் விளைவு அச்சிறு மலர் பணக்கார ஏழையாய் வளர்ந்தாள் நன்விழி.

அவள் தாய் ஆசைப்பட்டு வைக்க நினைத்த பெயர்.. ஏதோ அந்த வரையிலாவது தன் மனைவியை மறக்காமல் தன் மகளுக்கு அவள் வைக்க நினைத்த பெயரை வைத்தார்.

அதில் இன்னுமுமாய் மறுமணம் என்னும் பெயரில் நன்விழிக்கு சித்தியை கொண்டு வராமல் இருந்தது மற்றும் ஒரு நன்மையாய் போனது.. இல்லை என்றால் சித்தி கொடுமையும் அச்சிறு மலர் அனுபவித்திருக்க நேர்ந்திருக்கும்.. ஏதோ அந்த வகையில் விசுவநாதன் தந்தையாய் இருந்திருக்கிறார்.

வேலையாட்களின் கையில் வளர்ந்தவளுக்கு அன்பும் பாசமும் தெரியவில்லை என்பதை விட அதை அவளிடம் காட்ட ஒருவரும் இல்லை.

அந்த பளிங்கு மாளிகையில் வாழும் ஏழை மகள் அவள்.. இதுவரை யாரிடமும் அதிகமாக அவள் பேசியதில்லை.. அன்பை எதிர்பார்த்து எதிர்பார்த்து ஏமாந்த பைங்கிளிக்கு அன்பாய் யாராவது பேசினால் உடனே அவர்களை நம்பிவிடுவாள்.

ஆனால் அதுவே அவளின் வாழ்நாள் கண்ணீருக்கும் காரணமாகி போகும் என ஒரு நிமிடமும் நினைத்து பார்த்திருக்கமாட்டாள்.

யாருமில்லாத தனிமையில் வளர்ந்தவளுக்கு பள்ளிக்கு சென்ற பிறகு அவளுக்கென நண்பர்கள் வட்டம் உருவாக ஆரம்பித்தது.

ஆனால் அதையும் ஒரு கட்டத்திற்குள் நிறுத்திவிடுவாள்.. மற்ற பிள்ளைகள் தங்களின் தாய் சமைத்ததை எடுத்து வருவதை பார்த்தவளுக்கு இறந்து போன தன் தாயின் நினைவு வந்து வாட்டும்.. அந்த சமயங்களில் எல்லாம் தன் நண்பர்களை விட்டு விலகி விடுவாள்.

ஒரு கட்டத்தில் நண்பர்களின் கேலிப் பொருளாய் மாறிப்போனாள் அவளின் தனிமை கண்டு.. அதை உணர்ந்தவள் தன்னை சுற்றி ஒரு வட்டத்தை போட்டு அமர்ந்து கொண்டாள்.

மீண்டும் தனிமையே அவளுக்கு பரிசாய் அமைந்து விட அதை துணையாய் கொண்டு படிப்பை மட்டும் கையில் கொண்டாள்.

அவள் பருவம் அடைந்த பொழுது தாயின் அரவணைப்பு இல்லாது தவித்து போனவளை அந்த வீட்டின் வேலைக்கார பெண் வசந்தி நன்றாக கவனித்து கொண்டார்.

அந்த நேரத்தில் தான் விசுவநாதனின் பிஸ்னஸ் சற்று சரிய ஆரம்பிக்க அதை தாங்க முடியாதவருக்கு ஹார்ட் அட்டாக் வந்தது.

என்ன தான் மகளை பார்த்துக் கொள்ள முடியாத பொறுப்பற்ற தந்தையாக இருந்த போதும் அவளுக்கு பாதுகாப்பாய் இத்தனை வருடங்கள் இருந்ததாலும் மகளின் மனதில் இருந்த தந்தை பாசத்தாலும் தனக்கென்று இருக்கும் ஒரே உறவு அவரையும் இழந்து அனாதையாய் வாழ முடியாது என்பதை உணர்ந்தவள் மிகவும் கஷ்டப்பட்டு அந்த வயதில் தன் தந்தையை காப்பாற்றினாள்.

உடல்நிலை சரியில்லாத நேரத்தில் தான் மகளின் பாசமும் மனைவி இல்லாத வெறுமையும் உணர்ந்த விசுவநாதன் அதன் பின்பு சுத்தமாய் மாறிப் போனார்.

இடையில் வந்த மது மாதுவை கைவிட்டவர் மீண்டும் தன் மகளுக்காக வாழ துவங்கினார்.

தந்தை மகளுக்கான வாழ்க்கை அந்த இடத்தில் இருந்து மீண்டும் துவங்கியது.

எத்தனை தான் தந்தை பாசம் கிடைத்தாலும் தாயின் அரவணைப்பு கிடைக்காமல் ஏங்கி போனாள் அச்சிறு மலர்.

அதன் விளைவு மற்ற குழந்தைகளை அவர்களின் தாய் கொஞ்சும் போது அவளறியாமல் அவளின் மனதில் தோன்றும் ஏக்கத்தை அவளால் தடுக்க முடியவில்லை.

ஒரு நாள் பள்ளி முடிந்து தனது வண்டிக்காக காத்திருக்கும் நொடியில் பள்ளியின் முன்னே ரோட்டில் ஒரு வாலிபன் சென்று கொண்டிருக்க அவனின் பின்னே வேகமாக வந்த லாரி ஒன்று அவனை மோத வரும் சமயம் அதை கவனித்தவள் தன் கையில் இருந்த பேக்கை அங்கேயே போட்டு விட்டு அவனை காப்பாற்ற சென்றவள் அவனின் கையை பிடித்து இழுத்து ஓரமாய் தள்ளியவளின் கால்கள் தடுக்கி கீழே விழுந்தவளின் தலையில் ஓரமாய் கிடந்த கல்பட்டு உதிரம் வழிய மயங்கி விழுந்தாள்.

அவள் காப்பாற்றியவன் சுதாரித்து என்ன நடந்தது என்று யூகிக்கும் முன்னே தன் முன்னே ஒரு சிறு முல்லை மயங்கி கிடந்ததை கண்டவன் வேகமாய் அவளருகில் சென்றான்.

அதற்குள்ளாகவே அங்கு சிறு கும்பல் கூடிவிட்டது.. அப்பொழுது அங்கிருந்த பெரியவர் ஒருவர்,

"நல்லவேளை தம்பி அந்த பொண்ணு உன்னை காப்பாத்துச்சி.. இல்லேன்னா இந்நேரம் உன் உயிர் இருக்காது.. உன்னை காப்பாத்திட்டு இந்த பொண்ணு இப்போ உயிருக்கு போராடிட்டு இருக்குதேப்பா.." என்றவரின் புலம்பல் ஆடவனின் காதுகளில் ஏற தன்னை காப்பாற்றியவளை கண் சிமிட்டாமல் பார்த்தான் ஒரு நொடி தான்.. அடுத்த நொடியே அவளின் நிலை அவனின் உடலில் அதிர்வு ஏற்படுத்த அதை உணர்ந்தவன் தன் கைகளில் அவளை அள்ளி எடுத்துக் கொண்டு அருகிலிருந்த ஆட்டோவில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனை சென்றான்.

உள்ளே அவளுக்கு சிகிச்சை அளித்துக் கொண்டிருக்க வெளியே ஆடவன் தன் கரங்களில் அவளின் உதிர துளிகளை தான் பார்த்து கொண்டிருந்தான்.

யார் அவள்..? எங்கிருந்து வந்தாள்..? தன்னை காக்க வந்த தேவதையா..? ஏன் என் உடல் இப்படி தவிக்கிறது..? ஏன் அவளுக்காக இப்படி துடிக்கிறேன்..? என்று நினைத்தவனின் நினைவில் வந்து போனது அவளின் நிலை.

ஏனோ உள்ளம் அறியாமல் ஆடவனின் உடலும் மனமும் அவளுக்காய் துடியாய் துடித்தது.

அவளின் உதிரம் நிறைந்த கரங்கள் கண்டவனின் மனம் நடுங்கி போனது.

இதுவரை எதற்காகவும் யாருக்காகவும் துடிக்காத அவனின் இதயம் யாரென்று தெரியாத பெண்ணவளுக்காக துடித்தது.

அச்சிறு மலருக்காக துடித்த அவன் வசீகரன்.. அப்பொழுது தான் தொழில் துறையில் கால்பதித்த இளம் தொழிலதிபன்.. இருபத்தி இரண்டு வயது வாலிபன்.

வாழ்வில் பட்ட துயரங்களை நினைத்து தன்னை தானே வடிவமைத்துக் கொண்ட சிற்பி அவன்.

துயரங்களை மட்டுமே தாங்கிய இரு உயிரும் ஒருவருகொருவர் ஆறுதலாய் மடி தாங்குமா..? இல்லை பிரிவு தான் நேருமா..? கதையின் போக்கில் தெரிந்து கொள்வோம் மக்களே.

ஹாய் மக்களே வணக்கம்.. இது போட்டிக் கதை.. இன்னையோட போட்டி கெடு தேதி முடியுது.. ஆனாலும் அதிகமான வேலைப்பளு காரணமா என்னால கதையை முடிக்க முடியலை.. ஆனா கதை தொடரும் மக்களே.
 
Top