எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 23

NNK-01

Active member
இதயக்கனி 23

“இவளை‌ எனக்கு கட்டி வைப்பீங்களா இல்லையா??” என நடுஹாலில் நின்று நாட்டாமை பண்ணிக் கொண்டிருந்தவனை கண்டு கடுகடுவென வந்தது வீட்டினருக்கு.

என்னவோ அவர்கள் இதயாவை அவனிற்கு திருமணம் செய்து வைக்காமல் இருப்பது போல் அல்லவா பேசுகிறான். இந்த பேச்சினை ஆரம்பித்ததும் அவனே விடாப்பிடியாய் நிச்சயத்தை நடத்தியவனும் அவனே பின் விட்டு விலகியதும் அவன் தானே!!!

“நாங்களா ராணிம்மாவ கட்டி தரமாட்டோம்னு சொன்னோம் விட்டது நீதானே?” வீரவேல் அவனின் அலப்பறை தாங்காது கேட்டு விட,

“விலகி தான் மாமா இருந்தேன்!!விட்டுடலா அது இந்த ஜென்மத்துல நடக்காது?” என அவரை திருத்தம் செய்ய என்ன பேசுவதென்று தெரியாது அமைதியாகினர் குடுமப்த்தினர்.

அவர்களின் மனநிலை அறிந்தவன்,
“தப்பு தான்‌ மாமா வெற்றி விஷயத்துல நாங்க பண்ணது ரொம்ப பெரிய தப்புன்னு எனக்கு நல்லாவே புரிச்சுடுச்சு.என்ன நெனைச்சு என் வீட்டுல அந்த கல்யாணப் பேச்சை எடுத்தாங்கன்னு தெரியலை.

அந்த நேரத்துல நானாச்சும் கொஞ்சம் நிதானமா இருந்து சூழ்நிலையை கையாண்டு இருக்கணும். ஆனா..ப்ச் அன்னைக்கு யாரும் அவ்வளவு நிதானத்துல இல்லை.

நடந்த அத்தனை தப்புக்கு வெற்றி தான் பாதிக்கப்பட்டுருக்கான் அதுக்கு நான் மன்னிப்பு கேட்டுகிறேன் அதுல எனக்கு எந்த தயக்கமும் இல்லை.” என்றவன்,

“வெற்றி!!! எங்களை..” என அவன் பேசும் போது கனி மன்னிப்பு தான்‌ கேட்கப் போகிறான் என்பதை உணர்ந்த வெற்றி,

“போதும் நீங்க எதுவும் பேச வேண்டாம். நடந்தது நடந்திடுச்சு உங்க பக்கம் மட்டுமே தப்பில்லை. அந்த பேச்சை அப்டியே விட்டுடுங்க. இப்போ பேச்சு உங்களுக்கும் இதயாவுக்கும் என்ன தான் தீர்வு? இப்புடியே இன்னும் எத்தனை வருஷத்துக்கு ரெண்டு பேரும் தனியா இருப்பீங்க?” என கனி மன்னிப்பு கேட்க விடாது நடந்து விட்டான் . வெற்றி. இன்று அவன் குற்றவுணர்ச்சியில மன்னிப்பு கேட்டு விட்டாலும் அவன்‌ அனைவரின் முன்பும் மன்னிப்பு கேட்ட விடயம் காலத்திற்கும் நெருஞ்சி முள்ளாய் மனதை தைக்கும் அதனை அவனிற்கு கொடுக்க விரும்பாது கனியரசனை தடுத்திருந்தான்.


“ஆனா…..ராஜி…அவ வாழ்க்கை எக்கேடோ போகட்டும்னு என்னால விட முடியாதில்லையா?? தெரிஞ்சோ தெரியாமையோ அவ நெலைமைக்கு நானுமே ஒரு காரணமாகிட்டேனோன்னு குற்றவுணர்ச்சி இருக்கு!! இதுக்கு மேல என் நிலையை எப்புரி புரிய வைக்க?” என்ற அவன் தலையை கோதிட,

மகனின் தவிப்பு தாங்காது,
“அண்ணே!!! என் மருமவளே எப்போ என் வீட்டுக்கு அனுப்ப போறீங்க?? போதும் இத்தனை வருஷம் என் மகன் அவே மனசுக்கு பிடிச்சவளை விலகியிருந்தது போதும்?? வெற்றிக்கு ஈடா அவனும் தான் இத்தனை வருஷம் நிச்சயம் பண்ணவளை பிரிஞ்சிருந்திருக்கான்!” என்றார் சிவகாமி.

நடப்பதை பார்த்த அம்புஜத்திற்கு மனம் அடித்தக் கொண்டது.அவர் செய்த சிறு தவறு ராஜியின் வாழ்க்கையை கேள்விகுறியாக்கியது பத்தாது என்று இப்போது கனியின் வாழ்க்கையும் அல்லவா அல்லாடிக் கொண்டிருக்கிறது.

வெற்றி - ராஜி திருமணப் பேச்சு வார்த்தை நடக்காது என தெளிவாக அவருக்கு புரிந்திருந்தது. கனி ஆசைப்பட்ட திருமணமாவது நடக்க வேண்டும்' என நினைத்தவர்,

“நான் கொஞ்சம் பேசவா??” என அனுமதி கேட்க அனைவருக்கும் அவரின் பேச்சு சங்கடத்தை தந்தது.

“என்ன ஆத்தா இது பேசட்டுமான்னு அனுமதி எல்லாம் கேட்குறீங்க?? இதுவும் உங்க வீடு தான் ஆத்தா வீட்டு பெரியவங்க நீங்க இப்புடி அனுமதி கேட்டு எல்லாம் எங்களை சங்கடப்படுத்தாதீங்க” வள்ளி கூறிட,

கனியரசன் வீட்டினருக்கு அவர் பேச்சில் நிம்மதி எற்பட்டது.

“இல்லத்தா வள்ளி எப்பவும் பொண்ணு கொடுத்த இடத்துல நாட்டாமை பண்ணக் கூடாது. ஆனா போதாதக்காலம் என் மூளைய பேய் பிடிச்சு ஆட்டப் போயி என்னன்னவோ பண்ணிப்புட்டேன். ராஜிய மட்டுமே சுயநலமா யோசிச்ச நான் வெற்றிய அவன்‌‌ மனசை யோசிக்காது தவறிட்டேன்.

என்னோட அவசரப்புத்தி இரண்டு குடும்பமும் பிரிய காரணமாகிடுச்சு. நான்‌ செஞ்சது தப்பு தான் அந்த தப்பு ராஜி வாழ்க்கை நிலைகுலைய வச்சிடுச்சு எம்பேத்தி வாழ்க்கை தான் சரியில்லாம போயிடுச்சு. என் பேரன் வாழ்க்கையாச்சும் நல்லபடியா அமையணும்.

நான் செஞ்ச தப்பை எல்லாம் மனசுல வச்சுக்காம இதயாவை என்‌‌ பேரனுக்கு கட்டிக் கொடுங்க.‌” என்றவர்‌ நோராக எழுந்து வெற்றியின்‌ அருகே செல்ல,

அவன் என்ன‌வென்று உணரும் முன்பே,
“என்ன மன்னிச்சுடுப்பா!!” என‌ கைகைப்பி விட அனைவரும் அதிரந்து விட்டனர்.

“ஆச்சி!! அத்தை!!! ஆத்தா!!” என்ற கனியின் குடும்ப ஆட்கள் குரலில் தெரிந்த அதிர்ச்சியே அவர்கள் இதனை எதிர்பார்க்கவில்லை என்பதை உணர்த்தியது.

என்னதான் தவறு‌ தங்கள் பக்கம் என்றாலும் அவர் மன்னிப்பு கேட்டதை அவர்களால் ஜீரணகிக்க முடியவில்லை.

அவர்கள் நிலைமையே இப்புடி என்றால் வீரவேல் குடும்பத்தினரின் நிலைமை? அதைவிட வெற்றியின் நிலைமை இன்னும் மோசம்!!!

“ஏன் ஆச்சி இப்புடி எல்லாம் பண்றீங்க??” என்றபடி வெற்றி அவர் கைகளை பிடித்து கீழிறங்கினான்.

“இப்புடி வீட்டுப் பெரியவங்களை என்கிட்ட மன்னிப்பு கேட்க வைக்கிற‌ அளவுக்கு நான் என்ன அவ்வளவு கொடுமைக்காரானா?” என்ற வெற்றிக்கு அவர்‌ மன்னிப்பு கேட்டதே தாங்கவே முடியவில்லை‌. அவர் மேல் கோபமும் ஆதங்கமும் இருக்கிறது தான் அதற்காக அவர் தன்னிடம் மன்னிப்பு கேட்க வேண்டும் என நினைக்கும் அளவிற்கு அவன் தரமற்றவன் அல்லவே?

“இல்லையா?? நீ என்னைக்கும் சரியாத்தான் இருந்திருக்க! உன்னை புரிஞ்சுக்காம விட்டது நான் தான்ய்யா செஞ்சது தப்புன்றப்போ உன்கிட்ட மன்னிப்பு கேட்குறதுல எனக்கு எந்த அவமானமும் இல்லை வெற்றி? வீட்டுக்கு பெரியவன்னா அப்போ இரண்டு பேர் மனசையும் தானே நான் ரோசனை‌ பண்ணிருக்கனும். நான் அப்புடி பண்ணலையே அப்போ நான் சுயநலவாதி தானே ராஜிய மட்டும் தானே நெனைச்சிட்டு உன்னை விட்டுடேன். அப்புடி இருக்கையில நான் மன்னிப்பு கேட்டா ஒன்னும் கொறைஞ்சிட மாட்டேன்.சொல்லப்போனா மன்னிப்பு கேட்டாதான் என் ஆத்மா நிம்மதியாகும். உன்கிட்ட மன்னிப்பு கேட்காமா விட்டேன்னா நான் செத்தாலும் நிம்மதியா சாக மாட்டேன்!!!” என்றிட,

“போதும் ஆத்தா நீங்க பேசுனது எல்லாம் போதும் இதுக்கு மேல எதையும் பேசிபுடாதீக அதை தாங்குற சக்தி இங்கன யாருக்கும் இல்லை!” என் வீரவேல் அவரை கையோடு அழைத்து வந்து ஷோபாவில் அமர வைத்து விட பின்னோடு வந்த வெற்றி அவரின் காலடியில் அமர்ந்து விட்டான்.

அவனின் இந்த நிலையே “நான் எப்பவும் உங்களுக்கு கீழே தான்” என அவன் மனதினை உணர்த்திட,

‘இந்த பயலை போயி நான் பாடாப்படுத்திட்டேனே’ என உள்ளம் கலங்கியவர் அவன் தலையினை வருட அடுத்த நொடி அவர் காலில் லஙன் முகத்தினை புதைத்துக் கொண்ட வெற்றியின் கண்களில் கண்ணீர்.

அவர்கள் இருவரின் உருக்க நிலையும் மற்றவர்களை கலங்க செய்தது.

“அண்ணே? மச்சான்!அந்த ஜோசியருக்கு மொத போனைப் போடுங்க வீட்டுல இருந்தாருன்னா ஒரு எட்டுப் போய்ட்டு வருவோம். இனியும் யாரையும் பாத்துட்டு இவுங்களை பிரிச்சு வைக்க வேணாம். கல்யாணத்துக்கு தேதி குறிச்சிட்டு தான் மறுவேலை” செல்வபாண்டி கூறிட அதுவே சரியேன்று பட்டது அனைவருக்கும்.

“செல்வா மாமா!!” என்றழைத்த வெற்றயின் குரலில் அவர் திரும்ப,

“என்ன மேல தப்பில்லாட்டியும் ராஜி இப்புடி இருக்க நானும் ஒரு காரணமாகிட்டேன்.என்னை மன்னிச்சிடுங்க ஆனா இதுதான் மாமா ராஜி வாழ்க்கைக்கு நல்லது இப்போதைக்கு கொஞ்சம் மறசு கஷ்டம் இருக்கும் ஆனா இதுக்கப்பறம் அவ வாழ்க்கை நல்லா இருக்கும்” என்க,

“விடுய்யா வெற்றி இந்த கல்யாண பேச்சு நடந்திருந்தா என் பொண்ணு நிச்சயம் சந்தோஷத்தை தொலைச்சிருப்பா நீ எடுத்த முடிவு சரிதேன். நிச்சயம் அவ நல்லா வாழ்வா?” என்றுவிட குடும்பத்தினருக்கு நிம்மதி.

பெரியவர்கள் ஜோசியர் வீட்டுக்கு செல்ல,

“இந்த தடவையாச்சும் கொஞ்சம் மூகூர்த்தம் கிட்டக்க இருக்குற மாதிரி பாத்துட்டு வாங்க ப்பா. திரும்பவும் மொதல்ல இருந்து என்னால ஆரம்பிக்க முடியாது” என‌ கனியரசன் வேகமாக கூறிவிட அங்கிருந்த அனைவரும் சிரித்து விட்டனர் அவனின் பதட்டத்தில்.

“நீ சொல்லாட்டியும் நாங்களும் அந்த முடிவுல தான் இருந்தோம்” என துரைப்பாண்டி கூறிவிட்டு கிளம்பிவிட,

“ஏத்தா மருமவள்களா வாங்க சமையல ஆரம்பிப்போம். இன்னைக்கு இங்கன விருந்து தான். வெற்றி நீ கொஞ்சம் கடை வரைக்கும் போய்ட்டு வா? ஆத்தா நீங்க செத்த நேரம் ஒறங்கி எழுங்க” என்ற வள்ளி அடுத்தடுத்து வேலைகளை ஆரம்பிக்க சிவகாமியும் அவருடன் இணைந்துக் கொண்டார்.

கதிர், சக்தி, வெற்றி மூவரும் வள்ளி சொன்னவைகளை வாங்க சென்றிருக்க தனித்து விடப்பட்டனர் இதயாவும் கனியும்.

“ஏண்டி ராங்கி நான் ஒத்தையாள அம்புட்டு பேசுறேன். நீ ஏதாச்சும் பேசுனியா?? எனக்கென்னன்னு நிக்கிற கொழுப்பெடுத்தவளே!” என அவன் பல்லைக் கடிக்க அவனை முறைத்தாள்‌ அவள்.


“என்னத்துக்கு நான் பேசணும்? எல்லாத்தையும் ஆரம்பிச்சது நீ தானே? அத்தனை பேரு முன்னுக்கயும் பொண்ணு கேட்டு நிச்சயம் பண்ண தெரிச்சவருக்கு என்னிய கல்யாணம் பண்ண தெரியாதா?? இதுக்கு மட்டும் என் உதவி வேணுமோ மைனருக்கு?” என பதிலுக்கு அவள் கடுகடுக்க,

“நீ எதுவும் பேசவே வேண்டாம்டி‌ மண்டங்கனம் பிடிச்சவ!!எப்ப மனுஷன் கிட்டக்க வந்தாலும் கடுவன் பூனைதான்!! ஆசையா சிரிச்சு பேசுறதில்லை மல்லுக்கு தான் நிக்குறது” என அவள் கடுப்பில் இவனும்‌ எகிற,

“ம்ம்ம் மல்லு வேட்டி மைனருகிட்ட மல்லுக்கட்ட தான் முடியும்” என்றுவிட்டு அவள் அங்கிருத்து நகர ஒரே இழுவையில் இழுத்து இறுக்கியிருந்தான் கனி.

“எங்க இப்போ மல்லுக்கட்டு டி ராங்கி பாப்போம்?” என அவன் சிரிப்புடன் புருவம் உயரத்த,

அவன் அணைப்பில் திகைத்து பின் அவன் பேச்சில் சிவந்தவள்,
“விடுங்க! யாராச்சும் வந்துடுவாங்க” என அவள் நெளிய,

சமையலறையில் இருப்பவர்கள் எப்போது வேண்டுமானாலும் வெளிவரும் அபாயம் உள்ளதால் ஒருமுறை தன் நெஞ்சோடு அவளின் நெஞ்சம் பசை போட்டு ஓட்டுவது போல் வலு கொடுத்து இறுக்கியவன் தன் பிடியை இலகுவாக்க,

“போயா மைனரு!!” என அவனை தள்ளிவிட்டு ஒரு ஓட்டமாக ஓடிவிட்டாள்.

தன்னை விட்டு விலகி ஓடியவளை கண்டவன் இனியும் அவளை எந்த விதத்திலும் கஷ்டப்படுத்தி விடக் கூடாது என அந்த நொடியில் இருந்து கவனமாக இருக்க ஆரம்பித்தான்.

************************

“ஏம்மா என்ன விஷயமா?? இவுங்க எல்லாம் போயி எவ்ளோ நேரமாச்சு? என்ன விஷயம்னு தெரியலையே??” காவேரி கூற,

“யாருக்கு தெரியும் இந்த வீட்டுல என்னைய எல்லாம் யாரு மதிக்கிற??”

“ஆனாலும்மா ராஜி பத்தி இங்கன‌ யாருக்கும் கொஞ்சம் ‌கூட கவலை இல்லை?? அந்த வெற்றிக்கு பொண்ணு பாக்க போறங்கனதும் நம்ம வீட்டுல இருந்து கிளம்பி போய்ருக்காங்க??ம்ம்ம் என்னத்தை சொல்ல??”

“ப்ச் உங்க அப்பாவுக்கே பொண்ணை பத்தின கவலை இல்லையாம்??”

“அப்புடி என்ன அந்த பூமிகாவை விட ராஜி கொறைஞ்சிப் போய்ட்டா சீமையில இல்லாதவளா போய்‌ தேடிப்பிடிச்சிருக்கான். இந்த வீட்டு பெரிம மனுஷங்க அவனை என்னன்னு கேட்காம அவனுக்கு ஏந்துக்கிட்டு போறாங்க”

“விடு காவேரி முடிஞ்சதை பேசி ஒன்னும் ஆகப் போறதில்லை. எம் பொண்ணு அப்புடி ஒண்ணும் கீழறங்கி போய்டல அவளுக்கு வெற்றிய விட நல்ல மாப்பிள்ளையா நான் கல்யாணம் பண்ணி வைப்பேன்”

“இருந்தாலும்மா!!!” என காவேரி சொல்லும் போதே வெளியே வண்டி நிற்கும் சத்தம் கேட்க அமைதியானாள்.

வீரவேல் வீட்டில் உணவினை முடித்து விட்டு வீடு திரும்பியிருந்தனர். வரும் வழி எங்கும் பரிமளத்திடம் விஷயத்தினை கூறினால் என்ன‌ ஆகுமோ என்ற பயம் உள்ளுக்குள் அனைவருக்கும் எழுந்திருந்தது.

வீட்டினுள் வந்த பின்னும் அவர்களுக்கு அந்த பதட்டம் விட்டுப் போகவில்லை.

யார் முதலில் பேச்சை ஆரம்பிப்பது என அனைவரும் தவித்திருக்க,

“என்னாச்சு ப்பா எதுக்கு அம்புட்டு அவசரமா கெளம்பி போனீங்க??” என காவேரி வாய் விட,

அதனை பற்றி கொண்டு பேச தொடங்கினார் செல்வபாண்டி.

“அதும்மா நம்ம இதயாவை அண்ணாமலை திரும்பவும் பொண்ணு கேட்டு வந்து பிரச்சனை பண்ணிட்டாரு” என்க,

“அதுக்கு எதுக்கு நீங்க போனீங்க?? அது அவுங்க குடும்ப விஷயம்னு விட வேண்டியது தானே?” காவேரி கேட்க,

“என்ன காவேரி பேசுற? கனிக்கும் இதயாவுக்கும் நடந்து நிச்சயம் உனக்கு தெரியும்தானே?” என சிவகாமி கூறிவிட,

“ அந்த பேச்சு வார்த்தை தான் எப்பயோ முடிச்சுப் போச்சே” பரிமளம் சிவகாமியை பார்த்தவாறே கூற,

“இல்லையே?? யாரு யாரு அப்பிடி சொன்னது?? எல்லாரும் இதையே சொல்றீங்க என் பையன் கல்யாண பேச்சு வார்த்தே நின்னுப்போச்சுன்னு நாங்க யாரும் சொல்லலையே??” சிவகாமி பதட்டத்தில் பேச,

“ஹாங் அப்புடி சொல்லுங்க இதான் கதையா?? ஆக அந்த இதயாவ இன்னும் மருமகளா ஆக்கிக்கணும்னு உங்களுக்கு இன்னமும் நெனைப்பு இருக்கா??” என்க,

“என்னைக்கு நான் அந்த நெனைப்பு இல்லைன்னு உன்கிட்ட சொன்னேன்??”

“இத்தனை நடந்த அப்பறமும் எப்புடி அவ இந்ந வீட்டுக்கு வர முடியும்??”

“ஏன் வர முடியாது?? அவ என்ன தப்பு பண்ணா?? இது எம்பிள்ளை ஆசைப்பட்ட வாழ்க்கை நிச்சயம் இதயா தான் அவே பொஞ்சாதி!”

“ஓஹோ அப்போ உங்க பிள்ளை ஆசைப்பட்ட வாழ்க்கைக்காக இவ்வளுவ பேசுறவங்க? எம் பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கைக்கு ஏன் எதுவுமே பேசாம இருந்தீங்க??

“எங்க உன் மனசை தொட்டு சொல்லு இந்தப் பேச்சு வார்த்தை ஆரம்பிக்கும் போதே நான் வேண்டாம்னு‌தானே சொன்னேன் யாராச்சும் அப்போ நான் சொன்னதை கேட்டீங்களா??”

“ஹான் சொன்னீங்க நல்லா சொன்னீங்க?? ஆரம்பத்துல இருந்தே உங்க பொண்ணுங்க வாழுற வீட்டீல எம் பொண்ணு வாழுறதுல உங்களுக்கு இஷ்டமில்லை அதான் தட்டி கழிச்சிங்க”

“உன் நெனைப்புக்கு எல்லாம் என்னால பதில் சொல்ல முடியாது ஆரம்பத்துலயே வெற்றி ராஜிக்கு ஒத்து வராதுன்னு நான் தெளிவா சொன்னேன்‌.அப்போ யாரும் கேட்கலை நான்‌ நல்லது நெனைச்சு தான் சொன்னேன்‌ அது என் மனசுக்கு தெரியும்.ஏன் இத்தனை வருஷமா ராஜிக்காக தானே எம் பிள்ளை இதயாவ ஒதுக்கி வச்சிருந்தான்!!”

“அதான் நானும் கேட்கிறேன். இத்தனை வருஷம் ஒதுக்கி தானே வச்சுருந்தீங்க அப்புடியே தலைமுழுகிட்டு போகமா இப்போ எதுக்கு புதுசா ஆரம்பிக்கிறீங்க??”

“ஏன்?? எதுக்கு தலைமுழுகனும் எம் பிள்ளையும் இதயாவும் என்ன தப்பு பண்ணாங்க?? ராஜி அவ மனசுல வளந்த ஆசைக்கு எம் பையன்‌ பலியா?” என சிவகாமி கோபத்தில் வார்த்தைகளை விட்டு விட,

பட்டென்று கதவினை திறந்து கொண்டு வெளியே வந்தாள் ராஜி.

வெற்றிக்கு பெண் உறுதி செய்து விட்டதை கேட்டதில் இருந்து கிட்டதட்ட பித்து பிடித்தது போல் இருந்தாள். அழுகையில் கரைந்து கரைந்து அவளது கண்ணீர் சுரப்பிகள் கூட வற்றி விட்டன.

அவனை‌ மறக்கவும் முடியாமல் கட்டாயப்படுத்தி திருமணமும் செய்ய முடியாமல் ஒரு வித அமைதி இல்லா மனதுடன் தவித்தவளிற்கு ஒரு கட்டத்தில் காவேரியின் பேச்சுகள் யாவும் அவளை வெறியேற்ற அழுகை எல்லாம் கோபமாகவும் விருப்பு எல்லாம் வெறுப்பாகவும் மாற ஆரம்பித்திருந்தது.

கோபம்!! கோபம்!! அப்படி ஒரு கோபம் மூளையை மலங்கடிக்கும் அளவிற்கு அர்த்தமில்லா கோபம். அக்கோபம் அனைவரும் மீது திரும்பிற்று.

இதோ அவர்கள் வந்ததில் இருந்து அனைத்தையும் கேட்டு கொண்டிருந்தவளுக்கு வெறி ஏற ஆரம்பித்தது. அதுவும் இதயா பெயரினை கேட்டாலே அவளிற்கு பற்றிக் கொண்டு வந்தது. நடந்த அத்தனை பிரச்சனைக்கும் அவளை தான் காரணமாக்கியது அவள் அறிவற்ற மனம்.

சிவகாமி இதயா - கனி திருமண பேச்சை ஆரம்பிக்க இங்கே இவளிற்கு விபரீதமான எண்ணம் தோன்ற ஆரம்பித்லது. என்னை அழ வைத்தவர்தளை பதிலுக்கு நானும் மனம் நோகடிக்க வேண்டும் என்ற எண்ணம் எழு பட்டென வெளியே வந்தாள்.

“என்ன‌ பெரியம்மா சொன்னீங்க நானா வளத்துக்கிட்டா ஆசையா?? சொல்லுங்க நானாவா என்‌ மனசுல நெனைப்ப வளந்துக்கிட்டேன். இல்லை! இதுகெல்லாம் காரணம் ஆச்சி தான்.‌ அவுங்க தான் வெற்றி பத்தின நெனைப்பை என்மேல விதைச்சது இப்போ என்னம்மோ நான் வளத்துகிட்டேன் சொல்றீங்க?” என்க,

“ராஜி நான் அப்புடி சொல்லலைடா!!!”

“நீந்க எப்புடியும் சொல்ல வேண்டும். என்னை அழ‌ வச்ச அந்த இதயாவை இந்த வீட்டு மருமகளா கொண்டு வரனும்னு நெனைக்கிறீங்க??”

“இதயா என்ன பண்ணா ராஜி?? நம்ம பண்ண தப்புக்கு??”

“அவதான் எல்லாத்துககும் காரணம் அவ மட்டும் தான் காரணம்” என வெறி பிடித்தவள் போல கத்தியவள்,

“அவ இந்த வீட்டுக்கு வர‌கூடாது நான் எப்புடி விருப்பட்டவனை கட்டிக்க முடியாம தவிக்கிறேனே அதுமாதிரி இதயாவும் தவிக்கனும்‌ எனக்கு வலிக்கிற‌ மாதிரி அவளுக்கு‌ வலிக்கணும் அப்போ தான் அந்த வெற்றிக்கும் வலிக்கும்!!!” என தன் நிலை மறந்து சுயநினைவின்றி அவள்‌ பேசிக் கொண்டே செல்ல பார்த்திருந்த அனைவருக்கும் பயம் வந்தது.

“ராஜி!!! ராஜி ம்மா என்னடா பேசுற” என‌ கனி அவளை பிடிக்க,

“ஆமாண்ணே நீ இதயாவ கல்யாணம் பண்ணிக்க கூடாது அப்போ தான் அவளுக்கு வலிக்கும் அழுவா வெற்றியும் அழுவாறு?? சொல்லு இல்லை சத்தியம் பண்ணு இதயாவை கல்யாணம் பண்ண மாட்டேன்னு என் தலையில அடிச்சு சத்தியம் பண்ணே” என அவன் கையை அவள் இழுக்க அதிர்ந்துப் போனவன் தன் கைகளை பட்டென பின் இழுத்துக் கொண்டான்.

அவள் தன்னிலை மறந்து பிதற்றுகிறாள் என‌ தெரியும் இருந்தும் அவனால் சத்தியம் செய்ய முடியுமா?? என்ன?

“ராஜி நீ செத்த நேரம் ஒறங்கி எந்திரி நம்ம அப்பறமா இதைப்பத்தி பேசலாம்”

“அது எல்லாம் நான் நல்லா தான் இருக்கேன் நீ ஏன் கைய எடுத்த அப்போ நீ சத்தியம் பண்ணா மாட்டியா?? சொல்லுண்ணே உனக்கு அவதான் முக்கியமா நான் முக்கியமில்லையா??

அப்புடி எல்லாம் நான் விட மாட்டேன் நீ சத்தியம் பண்ணி தான் ஆகணும் பண்ணு!” என அவனது கையை இழுத்து பிடித்து அவள்‌ தலைமேல் வைக்க செல்ல பதறி கையை எடுத்தவன்,

“முட்டாள் மாதிரி பண்ணாத ராஜி??” என்றிட அவ்வளவு தான் வெடித்து விட்டாள்.

“யாரு? யாரு? நான் முட்டாளா? அப்போ நீ அவளை கல்யாணம் பண்ணிப்பியா? என்னை இப்புடி அழ வச்ச குடும்பத்துல இருந்து நீ பொண்ணு எடுப்பியா?? அவதான் உனக்கு முக்கியமா நான் இல்லையா சொல்லு அவளை கல்யாணம் பண்ணிக்க கூடாது நீ??” என்க,

“ராஜி!!!!” ஒன ஓங்கி அதட்டலிட்டவன்,

“என்ன பேசுறேன்னு தெரியாம உளறிட்டு இருக்க என்னால எப்புடி இதயாவ விட முடியும் அவ என் உசுரு!!”

“ஓஹோ!! அப்போ நான் யாரு?? நான் உனக்கு முக்கியமில்லையா??”

“நீயும் தான்டா என் உசுரு உனுக்கு பாத்து தானே இத்தனை வருஷமா நான் அவளை தள்ளி வச்சேன்!”

“அப்ப இப்பவும் அவளை விட்டுடு நான் சொல்றேன் எனக்காக இதை செய்யி!!”என

“முடியாது ராஜி!!” என்ற இரண்டு வார்த்தைகளில் அவள் கோபம் முழுவதும் வெறியை மாற,

“முடியாது?? முடியாது?? அவளை விட முடியாதா உன்னால??” என அவனை நெருங்கி அவன் நெஞ்சினில் அவள் பட்பட் என்று சரமாரியாக அடிக்க,

“ராஜி சொல்றதை கேளுடா!!” என அவள் கைப்பிடித்தவனை,

“ச்சீ தொடாத என்னை!! நீயெல்லாம் ஒரு அண்ணனா உன் தங்கச்சிய ஒரு குடும்பம் அழ வசசிருக்கு ஆனா நீ அந்த குடும்பத்துலயே பொண்ணு எடுக்கிற வெட்கமா இல்லை உனக்கு??

அதானே நான் என்ன உன் கூடப்பொறந்தவளா?? இதேது உன் சொந்த தங்கச்சிக்கு இப்புடி நடந்திருந்தா விட்டுருப்பியா நீயி?? இத்தனை நாளா நீயி என் மேல பாசம் இருக்கிற மாதிரி நடிச்சிருக்க அந்த நடிப்பை நானும் நம்பி ஏமாந்திருக்கேன்.

நீ என் அண்ணன் இல்லை? அப்புடி இருந்திருந்தா அந்த இதயாவை கட்டிக்க போவியா நீயி??” என அவள் பேச பேச இங்கே அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் மனதளவில் மரணித்துப் போனான் கனி.

'ராஜியா இப்படி??” நெஞ்சில பலமாக அடிவாங்கினான்.

அதன் விளைவு அவன் கண்களில் மெல்லிய நீர்படலம் உருவாக அவளையே வெறித்த வண்ணம் இருந்தவனின் தோற்றம் அனைவரையும் கலங்க வைக்க சிவகாமிக்கு சொல்லவே தேவையில்லை!!!

அவருக்கு சினம் தலைக்கு ஏற ராஜியை நோக்கி அடி எடுத்து வைத்தவரை முந்திக் கொண்டு “ராஜி மூடு வாயை!!” என்றபடி செல்வா அருகே செல்ல,

தகப்பனை மீறியும் துள்ளியவளை அடக்க முடியாது அருகே நின்றிருந்த பரிமளத்தின் கன்னத்தில் ஓங்கி ஓர் அறை விட அந்த சத்தத்தில் ராஜி அதிரந்து தந்தையை பார்க்க,

“உள்ளார கூட்டிப் போ உன் பொண்ணை!!” என்றவரின் பேச்சில் இருந்த வெறுப்பு ராஜிக்கு அப்பட்டமாக புரிய திகைத்துப் போய் பார்த்தாள் தந்தையை.

“கூட்டிட்டுப் போ??” என்றவரின் வார்த்தைகளில் இருந்த அனல் பரிமளத்தை வாய் திறக்க விடவில்லை.

திகைத்து நின்ற மகளை உள்ளே இழுத்துக் கொண்டு சென்றிருந்தார்.

“கனி!!!!” என்றபடி வீட்டினர் அவனை நெருங்க விழி நீரை அவர்களுக்கு காட்டாமல் சட்டென திரும்பியவன்,

“நான்…நான் தோட்டத்துக்கு போய்ட்டு வந்துடுறேன்” என்றவன் அவர்கள்‌‌ அழைப்பை காதில் வாங்காது வெளியேறி விட்டான்.
 
Last edited:

Mathykarthy

Well-known member
அம்புஜம் பாட்டி செஞ்ச தப்பை உணர்ந்ததும் இல்லாம வயது வித்தியாசம் பார்க்காம வருந்தி மன்னிப்பு கேட்டு உயர்ந்துட்டாங்க.... 😔

இத்தனை நாள் கண்டுக்காம இருந்துட்டு இப்போ வந்து மைனருக்கு ரொமான்ஸ் கேக்குது... 😏😝


ராஜீ 🤬🤬🤬🤬🤬🤬 அம்மா குணம் இல்லாமலா போகும்... அவளுக்காக பார்த்து பார்த்து எல்லாம் செஞ்ச அண்ணன் மனசை நோகடிச்சுட்டா.... 😡😡😡😡😡😡
 

santhinagaraj

Well-known member
அவளுக்காக எல்லாத்தையும் பார்த்து பார்த்து செய்யற கனியோட மனசு ரொம்ப பேச நோகடிச்சுட்டா. ராஜீ உன்னோட ஒரு தலை காதலிக்கு ஒட்டுமொத்த குடும்பத்தையும் கலங்கடிச்சுக்கிட்டு இருக்க

நிறைய எழுத்து பிழைகள் இருக்கு சரி பண்ணுங்க
 
Top