எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 24

NNK-01

Active member
இதயக்கனி 24

இரவு நேரம் ஆகியும் வீட்டிற்கு வாராத மகனை எண்ணி பதட்டத்தில் இருந்தார் சிவகாமி.

நிறைய முறை அழைப்பு விடுத்தும் அவன்‌ எடுக்கவில்லை என‌ பயந்த சிவாகாமியை,
“சும்மா சும்மா போனப் போடாத சிவகாமி! அவனை அவன் போக்குல விடு” என துரைப்பாண்டி கூறியிருக்க,

“எப்புடிங்க விடுறது எம்பிள்ளை மனசொடிஞ்சு போய்ருக்கான்!!”

“விடு சிவகாமி அவன் தனியா இருக்கனும்னு நெனைச்சுதான் போய்ருக்கான் அவ மனசு சரியாகிற‌ வரை இருக்கட்டும் அப்றம் அவனே வந்திடுவான் நீ வெசனப்படாத ஆத்தா இன்னும் சாப்பிடலைப் போல போய் என்னன்னு பாருத்தா நான் செல்வாகிட்ட போறேன்‌ பய‌ மொகமே சரியில்லை” என்றுவிட்டு அவர் தம்பியிடம் சொல்ல‌ இவர் அம்புஜத்திடம் சென்றார்.

“அத்தை வாங்கத்தை ஒரு வாய் சாப்பிட்டு படுப்பீங்களாம்?”

“வேண்டாம்த்தா எனக்கு நெஞ்சுவரைக்கும் இருக்குது ராஜி பேசுனதே! கனி வரட்டும் எம்பேரன் மொகத்த ஒருதாட்டி பாத்திடுறேன் பிள்ளை கண்ணுல தண்ணியோட போனான்” என்றபடி அம்புஜம் எழுந்து வெளியே சென்றவர் திண்ணையில் அமர்ந்துக் கொள்ள சிவகாமியும அவரின் அருகே.

பரிமளமோ இன்னும் கணவர் அடித்து விட்டார் என்பதிலேயே நின்று விட்டார். ராஜிக்கோ சுயநினைவின்றி எங்கேயே வெறித்த வண்ணம் அமரந்திருந்தவளின் கண்களில் மட்டும் கண்ணீர்.

அதிலும் தகப்பனின் பார்வையில் இருந்த விலகலும் பேச்சும் அவள் மனதை தைத்திருக்க அதிலேயே ஒடுங்கி அமர்ந்து விட்டாள்.

ஆத்திரம்!! ஆத்திரம்!! கண்முன் தெரியாத ஆத்திரம்!! கோபத்தில் வார்த்தைகளை தாறுமாறாக கனியரசனை‌ நோக்கி வீசியிருந்தவளுக்கு இன்னமும் தான் கனியரசனை பேசிய பேச்சுகளில் அர்த்தங்களை அவள் அறிந்திருக்கவில்லை.

தகப்பனின் பார்வை தந்த அதிர்ச்சியில் கனியரசனை பேசியதை கவனிக்க தவறியிருந்தாள்.

காவேரிக்கோ நடந்த அனைத்தையும் ஜீரணிக்கவே முடியவில்லை அதிலும் தங்கை சற்றே‌ முன் நடந்து கொண்டதை நினைத்துப் பாரக்கையில் உடல் அதிர்ந்து அடங்கியது.

ஆக அக்குடும்பத்தில் ஒருவரும் நிம்மதியாக இல்லை!!!

இவர்களை எல்லாம் தவிக்க விட்டு அவர்களின் வாழைத்தோட்டத்தில் படுத்திருந்த கனியின் கண்களில் கண்ணீர் வழிந்தோடி கன்னம் தொட்டிருந்தது.

“நீ‌ என் அண்ணே இல்லை? உன் சொந்த தங்கச்சிய இருந்தா விட்டுருப்பியா?? இதயாவ கல்யாணம் கட்டிக்க கூடாது நீ??” என்ற ராஜியின் வார்த்தைகளும் அவளின் ஆவேசமும் அவன் கண்முன் வந்து செல்ல நெஞ்சை இறுக்கி பிடித்தது.

“தன் தங்கையா அது??” என இன்னமும் அவனால் நம்ப முடியவில்லை.

“எப்படி?? எப்படி?? அவளால் என் மீது நெருப்பு துண்டுக்களய் கொட்ட முடிந்தது. அவளை பற்றின கவலை இல்லையா எனக்கு அனுதினமும் அவளை‌ நினைத்து தானே நான் இதயாவை விலக்கி வைத்தது” என‌ யோசிக்க யோசிக்க அவன் விழிகளில் நீர் பெருக்கெடுக்க மூச்சு விட முடியாமல் தவித்துப் போனவன் பட்டென எழுந்து விட்டான்.

அவன் மனதில் இருக்கும் அழுத்தங்களை யாரிடமாவது கூறி ஆறுதல் தேட சொல்லி அவன் மனம் துடிக்க யாரிடம் அடைக்கலமாவது என புரியாது திகைத்து நின்றவனுக்கு வீட்டினரிடம் அவனது அழுத்தங்களை கொட்ட மனம் வரவில்லை‌.

இன்னும்‌ சில நொடிகள் அங்கிருந்திருந்தால் நிச்சயம் அவன்‌‌ கண்ணீரை அவன் குடும்பத்தினர் பார்த்து விடுவார்கள் என பயந்தே அவன் தப்பித்து இங்கு வந்தது.

அவனது கண்ணீரை அவன் குடும்பத்தினரிடம் காட்ட அவனிற்கு மனம் வரவில்லை ராஜி பேசியதை எல்லாம் கூறி தோள் சாய்ந்து ஆறுதல் தேட ஒருவரை மனம் தேட‌ அவனின் அலைப்பேசி அழைக்கும் சத்தம்.

எடுத்துப் பார்க்க அவன் இதயம். ‘இவளை வைத்துக் கொண்டா நீ ஆறுதல் தேட ஆள் தேடினாய்‌’ என்ற மனசாட்சியின் குரலில் தெளிவடைந்தவன் அடுத்த நொடி‌ ஜீப்பினை வீரவேல் வீட்டிற்கு விட்டிருந்தான்.

அவன் எடுக்காததும் ஏதோ வேலையாக இருப்பான் என‌ எண்ணியவள் கீழறிங்க செல்ல அடுத்த பதினைந்து நிமிடங்களில் இவனிடம் இருந்து அழைப்பு அவளிற்கு.

எடுத்தவளிற்கு
“ராங்கி!!” என்றழைத்தவனின் குரலில் கரகரப்பு அவள் புருவங்கள் சுருங்கின.

“கனி??” என்றவளின் ஒற்றை அழைப்பு அவனை உடைக்க போதுமாக இருக்க,

“இதயா!!! எனக்கு உன்னை இப்பவே பாக்கணும் டி வெளிய வா ப்ளீஷ்”

“என்ன?? வெளியவா இருக்கீங்க என்னாச்சு ஏன்‌? உங்க வாய்ஸ் சரியில்லை உள்ள வாங்க நீங்க, இருங்க அப்பா அண்ணாங்ககிட்ட சொல்றேன்!!”

“இதயா!! இதயா !! ப்ளீஷ் ஒரு பத்து நிமிஷம் நீ மட்டும் வெளிய வாடி அவுங்க யார் முன்னாடியும் எனக்கு அழ விருப்பம் இல்லை” என்றவனின் குரல் தேய்ந்து ஒலிக்க,

அதிரந்து விட்டாள்‌! அவன்‌ கனி அழுகிறானா??

“இருங்க நான் வரேன்!!” என போனை துண்டித்தவள் அடுத்த நொடி அவளின்‌ தந்தையினை அழைக்க மகளின் சத்தத்தில் திரும்பியவர்,

“என்ன ராணிம்மா” என்க,

“ப்பா உடனே துரை மாமாக்கு போனப் போட்டு அங்க எதுவும் பிரச்சனையான்னு கேளுங்க??”

“ஏன் என்னாச்சு ராணி எதுக்கு திடீர்னு?”

“ப்பா ப்ளிஷ் போன் பண்ணுங்க அங்கே ஏதோ பிரச்சனை போல தெரியுது.‌ கனி வெளிய நிக்குறாருப்பா என்னை வர‌ சொல்லி கூப்பிடுறாரு!”

“என்ன கனியா இந்த நேரத்துலயா? நீ எதுக்கு வெளிய போறா ?கனிய உள்ளக் கூப்பிடு! இல்லை வேண்டாம் நானே போய் கூப்பிடுறேன்” என அவர் வாசலருகே விரைய,

“ப்பா ப்பா நில்லுங்க! நீங்க போகதீங்க கனி கொரலே சரியில்லைப்பா ஒரு மாதிரி உடைச்சிப் போய் கலங்கி போய் கூப்பிடுறாரு! இந்த நிலைமையில இங்க யாரு முன்னுக்கவும் வர அவருக்கு விருப்பம் இல்லை ப்ளீஷ் நீங்க போய் அவரை சங்கடப்படுத்தாதீங்க ப்பா நான் போய்ட்டு வரேன் ப்பா ப்ளீஷ் அங்கே கனி நெலைமை சரியில்லை” என அவள் கெஞ்ச,

தங்கையின் கெஞ்சல் அண்ணன்களுக்கு வேதனையை தர,

“ப்பா விடுங்க குட்டிம்மாவ போய் கனிய பாத்துட்டு வரட்டும். நம்ம மாமா வீட்டுக்கு போனப் போடுவோம் போகும் போது அத்தை மொகம் சரியில்லை எப்புடி பரிமள அத்தைக்கிட்ட விஷயத்தை சொல்றதுன்னு புலம்பிட்டு தான் போனாங்க, அவளை போக விடுங்கப்பா” கதிர்வேல் கூற,

“நீ போ குட்டிம்மா!!” என சக்திவேல் கூற வீரவேல் உடனே துரைக்கு அழைப்பு விடுத்தார்.

வீட்டில் அனுமதி கிடைத்ததும் மின்னலென அவள் வாசலை தாண்ட பின்னோடே வந்த வெற்றி “இதயா இந்த போனை கைல வச்சுக்கோ எதுனாலும் போன் பண்ணு இல்லை ஒரு சத்தம் கொடு நான் இங்கன தான் நிப்போன்” என கேட்டின் மீது அவன் சாய்ந்து நின்று கொள்ள சரியென தலையாட்டியவள் வீதியில் இறங்கி நடக்க தெருவின் மூலையில் கனியின் ஜீப் இருப்பதை கண்டு வேகமாக அங்கே சென்றாள்.

இவள் வருவதை கண்டுக் கொண்டவன் ஜீப்பின் கதவினை திறந்து விட அவள் ஏறிய நொடி “இதயா!!!” என கரகரப்புடன் அழைத்தவன் அடுத்த நிமிடம் அவளை இறுக அணைத்திருக்க அதுவரை அவன் அடக்கி வைத்திருந்த கண்ணீர் மடை திறந்த வெள்ளமாய் வர ஆரம்பித்தன.

அவனின் உடல் குலுங்கலிலும் அவள் தோள்கள் உணர்ந்த ஈரத்தையும் கண்டு அவன் அழுவதை உணர்ந்தவள்,

“மாமா!!! கனி மாமா என்னாச்சு?? ஏன் அழுறீங்க?? என்னாச்சு மாமா ப்ளீஷ் எதாவது சொல்லுங்களேன்” என அவள் கேட்டும் அவனிடம் இருந்து பதில் வராமல் போகவே அவன் கண்ணீர் நிற்கட்டும் என அவள் காத்திருக்க,

அதற்குள்‌ இங்கே வீரவேல் துரைப்பாண்டிக்கு போன் செய்து,

“மச்சான் என்ன ஆச்சு ஏதும் பிரச்சனையா கனி இங்கன வந்துருக்கான்??”

“அங்கயா மச்சான் வந்துருக்கான்?”

“இங்கன வீட்டுக்கு இல்லை மச்சான் தெருமுனையில நிக்குது போல ராணிம்மாவ மட்டும் கூப்பிட்டுருக்கான். ராணியும் போய்ருக்கு கொரலே சரியில்லைன்னு வேற சொல்லிச்சு என்னாச்சு?” என்க,

நடந்த அனைத்தையும் கொட்டி முடிந்திருந்தார் துரைப்பாண்டி.

“என்ன மச்சான் சொல்றீங்க நம்ம ராஜியா?? அதுவும் கனியவா பேசுச்சு!” அதிர்ச்சி விலாகாமல் அவர் கேட்க,

“ஆமா மச்சான் நாங்களும் யாருமே எதிர்பாக்கலை‌ ராஜியோட பேச்சை எம்பிள்ளை ராஜி போசுன போச்சுலயே மனசொடிஞ்சுப் போய்டான் மச்சான். எங்கே இங்கிருந்து ‌முழுசா உடைஞ்சிடுவானோன்னு பயந்து தான் அவே வேகமா கெளம்பி போனது. இங்க அவன் அம்மை தவியா தவிச்சிட்டு இருக்கா பிள்ளைய இன்னும் காணமேன்னு அங்கன தான் வந்துருக்கான்னு அவக்கிட்ட சொல்லுறேன் அப்பதான் வெசனப்படாம இருப்பா” என்றுவிட்டு அழைப்பு துண்டித்து விட,

இங்கே வீரவேலின் பேச்சினை கேட்டவர்களுக்கு ஒன்றும் புரியவில்லை.

“என்ன மாமா அப்பா என்ன சொன்னாங்க கனி வேற‌ வந்திருக்கு போய் பாக்கவும் இவுங்க விடமாட்டுறாங்க என்னதான் பிரச்சினை சொல்லுங்களேன் மனசு கெடந்து அடிச்சிக்கிது” என வசந்தி கேட்க அவளிற்கு குறையாத தவிப்புடன் வாணியும்.

வீரவேல் துரைப்பாண்டி கூறிய அனைத்தையும் ஒன்றுவிடாமல் கூறி முடிக்க குடும்பத்தினர் அதிர்ந்து தான் போயினர்.

அவர்கள் யாராலும் நம்ப முடியவில்லை ராஜியின் பேச்சினை அதுவும் அவள் மேல் உயிராய் இருந்த கனியை பேசி அவன்‌ மனதினை நோகடித்திருக்கிறாள் என்பதினை.

இதற்குள் இதயா இங்கு அவனை சமாதானப்படுத்தி அவனிடம் நடந்தவற்றை கேட்டு தெரிந்திருக்க கொந்தளிக்கும் மனதுடன் அமர்ந்திருந்தாள்.

“ஏன் இதயா??நான் என்ன அவ்வளவு சுயநலவாதியா?? என்னை வார்த்தையாலயே ராஜி கொன்னுடுச்சு?

அவ மேல எனக்கு அக்கறை இல்லையாம். ராஜிக்காக தானே உன்னையே விட்டு நான் விலகி நின்னேன் அவ மனசுக்கு சின்ன சங்கடம் கூட வந்திடக் கூடாதுன்னு தானே உன்னை விட்டு ஒதுங்கி அவளுக்கு துணையா நின்னேன். எல்லாத்தையும் அவளுக்காக தானோ பாத்து பாத்து செஞ்சேன்.

ஆனா கடைசியில என்னை பாத்து நான் உன் சொந்த தங்கச்சியா இருந்திருந்தா இப்புடி எல்லாம் இருந்துருப்பியான்னு கேட்டுட்டா!! என்னைக்கும் நான் அவளை பிரிச்சு பார்த்ததில்லையே சொல்லப்போன மத்த மூணு பேத்த விட இவ மேல தானே நான் உயிரா இருந்தேன். அவளை பொத்தி பொத்தி பாத்துக்கிட்டேனே அப்புடி இருந்தும் ராஜி என்னைப் பார்த்து நீ என் அண்ணனே இல்லைன்னு சொல்லிடுச்சே.

அப்போ ராஜி என்னை புரிஞ்சுக்கிட்டது இவ்வளவு தானே அதுக்கு பிடிக்காததை அதை மீறி நான் செஞ்சா என்னை வெறுத்து ஒதுக்கிடுமா என்னால தாங்க முடியலடி மனசெல்லாம் வலிக்குது” என கண்ணீருடன் புலம்பியவனை காண காண ராஜி மீது ஆத்திரம் எழுந்தது இதயாவிற்கு.

“மாமா இங்கப் பாரு!! நீ என்னத்துக்கு இப்புடி பொலம்புற உன்னோட பாசம் புரியாத ராஜி தான் வருத்தப்படணும். அவ சொல்லிட்டா நீ அவ மேல வச்சிருந்த பாசம் பொய்யின்னு ஆகிடுமா? அவ என்னத்தையோ உளறிட்டு இருக்கா நீ விடு இதை எல்லாம் நான் பாத்துக்கிறோன்.

நீ எதுக்கும் வருத்தப்படாதே நான் இருக்கேன் உனக்கு. இது எல்லாம் ஒரு பிரச்சனையே இல்ல நான் பாத்துக்கிறேன். நீ மொத வீட்டுக்கு கெளம்பு அங்கன‌ உன்னிய காணோம்னு எப்புடி தவிச்சுட்டு இருக்காங்களோ?” என அவனை தேற்றியவள்,

“இரு இந்த நெலைமைல நீ டிரைவ் பண்ண வேண்டாம்” என்றவள் வெற்றிக்கு அழைத்து அவனை வர சொல்ல,

அதை எதையும் உணராத நிலையில் இருளை வெறித்த வண்ணம் இருந்தவனின் முகவாயை பற்றி தன்புறம் திருப்பியவள்,

“எல்லாமே சரி ஆய்டும் மாமா! நான் சரி பண்ணிடுவேன்!! என்னை நம்பு” என்றவள் எம்பி அவன் கன்னத்தில் தனது இதழ்களை பதிக்க கண் மூடி அவளின் ஸ்பரிஷத்தினை உள் வாங்கியவள் அவளை தன்னுடன் இறுக அணைத்துக் கொள்ள அவனில் அடங்கினாள்.

வெற்றி வரும் அரவம் உணர்ந்து விலகியவள் கீழிறங்கி கனியையும் இந்தபுறம் மாறி அமர‌சொல்ல அவள் சொல்வதை தட்டாமல் செய்தான்.

“வெற்றி மாமாவ வீட்டுல விட்டுட்டு வா? எதுவும் அவர்கிட்ட கேட்காதே?” என்ற அவனை அனுப்பி வைத்தவளிற்கு அவனின் இந்த நிலைக்கு காரணமான ராஜி மேல் கோபம் பன்மடங்கு பெருக,

மறுநாள் காலை கனியின் வீட்டினுள் இருந்தவளின் கரம் ராஜியின் கன்னத்தினை பதம் பார்த்திருக்க கனியரசன் அதிர்ந்து தான் போனான்.
 

Mathykarthy

Well-known member
கனி 🥺🥺🥺🥺🥺🥺🥺

சூப்பர் இதயா... 👏🤩
நேத்து கனியை பேசும் போதே அந்த குடும்பத்துல யாராவது இதை செஞ்சுருக்கணும்... அவங்களுக்கு திகைச்சு நிக்குறதுக்கே நேரம் சரியா இருந்துச்சு.. 😏

இவ எல்லாம் அமைதியா சொன்னா கேட்குற ரகமா.... பயந்த பொண்ணு கடைசி பொண்ணுன்னு செல்லம் கொடுத்து கெடுத்து வச்சுருக்காங்க.... 😬😬😬😬😬😬
இவளுக்கு இதயா தான் சரி... அப்படியே அவ அம்மாவையும் காவேரியையும் கொஞ்சம் மந்திரிச்சு விட்டுட்டு போ... 🤭🤭🤭🤭🤣🤣🤣🤣🤣🤣
 

santhinagaraj

Well-known member
சூப்பர் இதுயா அவளுக்கு அந்த அடி தேவைதான் அவள் பேசும்போதே குடும்பத்துல யாராவது ஒருத்தர் இந்த அடி அவளுக்கு கொடுத்து இருந்தா இந்த அளவுக்கு பேசி இருக்க மாட்டா.
 
Top