எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் 25

NNK-01

Active member
இதயக்கனி 25

அன்று விடிந்த விடியல் யாருக்கும் நல்லதாக விடியவில்லை முக்கியமாக ராஜிக்கு.

இரவு கனி வந்தவன் நேராக தனதறைக்கு சென்றவன் தான் இன்னும் கதவு திறந்தப்பாடில்லை.

ராஜியின் நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. நேற்று நடந்தவை எல்லாம் அவள் நினைவுகளில் அங்காங்கே எழ திடுக்கிட்டுப் போனாள். ஏதோ கத்துகிறாள் கனியை அடிக்கிறாள் இந்தக் காட்சி எல்லாம் அவள்‌ மனக்கண்ணில் எழ திகைத்து தான் போனாள்.

ஒன்றும் நினைவு வரவில்லை. யோசித்து யோசித்து பார்க்கிறாள். நேற்றைய இரவில் கோபம் கண்ணை மறைக்க அவள் கத்தியது நினைவிருக்க என்ன பேசினால் யாரை பேசினால் என சுத்தமாக நினைவில்லை.

சிறுது நேரம் கண் மூடி மனதினை‌ அமைதி படுத்தியவளுக்கு நேற்று நடந்த நிகழ்வுகளை மனதில் நினைவு கொண்டு வர முயல அவளின் யுக்தி பலித்தது மனமும் மூளையும் அமைதி அடைந்ததும் நேற்றைய நிகழ்வுகள் எல்லாம் அவன் மனக்கணின் வரிசையாக அடுத்தடுத்து வர திகைத்து தான் போனாள் அதிலும் கடைசியாக செல்வ பாண்டி அவளை பார்த்த பார்வை இப்பொழுதும் அவளுக்கு நினைவிருக்க கண்களில் குளம் கட்டி விட்டது.

அவளாலே நம்ப முடியவில்லை தானா நேற்று‌ அப்படி நடந்துக் கொண்டது என அதிலும் கனியை அடிக்க வேறு செய்திருக்கிறாள் என்பதை அவளால் ஜீரணிக்கவே முடியவில்லை.

கதவை திறந்து வெளியே செல்லவே அவளிற்கு பயமாக இருந்தது.குடும்பத்தினரை பார்க்க அச்சம் எழுந்தது மனதில்.

தன்னை நினைத்தே அவள் குன்றிப்போயிருந்த நொடி,

அவள் கதவு படபடவென தட்டப்பட அதன் சத்தத்தில் பயந்து தான் போனாள்.

“ராஜி!!!! ஹேய் ராஜி வெளிய வா??” என்ற இதயாவின் கோபம் குரல் அறையின் கதவினையும் மீறி அவள் காதினில் வந்து அறைய திகைத்துப் போனாள்.

இரவெல்லாம் ராஜி மீதான ஆத்திரத்தால் இருந்த இதயாவிற்கு அவளை நான்கு கேள்விகள் கேட்டால் தான்‌ மனம் ஆறும் என்ற நிலையில் விடிந்ததும் வீட்டினரிடம் கூட சொல்லாது இங்கே வந்து விட்டாள்.

இந்த காலை நேரத்தில் அவளை எதிர்பார்த்திராத துரை வீட்டில் அனைவரும் திகைத்து தான் போயினர்.

“என்னம்மா இதயா?? இந்நேரத்துல” சிவகாமி கேட்டிட,

“எங்கத்தை அவ??”

“யாரு?”

“ராஜி எங்கத்தை??”

“இதயா விடுத்தா நடந்து முடிச்சதை பேச வேண்டாம்” அவள்‌ கோபத்தினை தணிக்க முயல,

“அத்தை நேத்து உங்க பையன் என்னை எந்த நெலைமையில பாக்க வந்தாருன்னு தெரியுமா??” என்றவளின் குரலில் கோபம் தெறிக்க விழிகளில் நீர்ப்படலம்.

இன்னும் நேற்றைய அவனின் கலங்கிய தோற்றம் அவள் கண்முன் எழ துடித்து தான் போனாள்.

சிவாகாமிக்கு தெரியாதா மகனின் நிலை.
“தெரியும் இதயா!” என்வரின்‌ குரலில் அழுகையின் சாயல்.

“அப்புடி தெரிஞ்சுருந்துமா என்னை தடுக்குறீங்க?” என அவள் ஆத்திரம் கொள்ள மெளனமாக ராஜியின் அறைக் கதவினை காட்டி விட்டு விலகி கொள்ள இவள்‌ நேரே அவள் அறை வாசலில்.

இதயாவின் கோபக் குரல் அங்கிருப்பவர்களை அச்சப்படுத்த சிவகாமி வேகமாக மகனின் அறைக்கு சென்றார்.

பரிமளம் இரவெல்லாம் தூங்காது விழித்திருந்தவர் கொஞ்சம் விடிந்ததும் நேராக கணவரை தேடி செல்ல அவரோ பரிமளம் எழும் முன்பே தோட்டத்திற்கு சென்றிருந்தார் இவர் வருவார் என அறிந்து.

பரிமளத்திற்கு கணவனின் நேற்றைய கோபம் அடிவயிற்றில் பயத்தை ஏற்படுத்தியது. அதுவம் நேற்று அவரின் பார்வையில் இருந்த விலகலில் துடித்துப் போனவர் அவரிடம் பேசிட வேண்டும் என எண்ணி அவரை தேடி தோட்டத்திற்கு சென்றிருக்க இங்கே காவேரி மட்டுமே‌ ராஜியுடன் அறையினில் இருந்தாள்.

“ப்ச் யாராது இப்படி கதவை தட்டுறது. ஹே!! ராஜி நீ முழிச்சு தானே இருக்க போய் கதவை திறக்க வேண்டியது தானே” தூக்கம் கலைந்த எரிச்சலில் காவிரி பேச அடுத்த நிமிடம் ராஜி எழுந்து சென்று கதவினை திறந்திட.,

அவள் வெளியே வந்த நிமிடம் அவளது கன்னங்களில் ஓங்கி ஒரு அறை வைத்திருந்தாள் இதயா.

இதயா வந்திருப்பதாக சிவகாமி கூறிய நொடி அடித்து பிடித்து எழுந்த கனியின் செவிகளில் அவள் கோபக் குரல் மோதிட வேகமாக அவன் கீழிறங்க அதே நிமிடம் தோட்டத்திற்கு சென்றிருந்த செல்வபாண்டியும் வர பின்னோடு பரமிளமும் என அங்கே வந்தவர்கள் அனைவரும் கண்டது இதயா ராஜியை அறைவதை தான்.

அனைவரும் இதனை எதிர்பார்க்காது அதிர்ந்து நிற்க வலித்த கன்னத்தினை பொத்தியபடி நின்றிருந்த ராஜியின் விழிகள் அவளை வெறிக்க,

“இதயா!!!!” என்று கோபத்தில் குரலை உயர்த்தியப்படி அவள் அருகினில் வந்தவனிற்கு ராஜியை அடித்ததை அவனால் தாங்க முடியவில்லை.

அவன் கோபமாய் பேசவதற்கு முன்பே,
“மூச்!! எதாவது வாய் திறந்தீங்க தொலைச்சிடுவேன்!!! நேத்து நைட்டு என்னை நெலைமைல இருந்தீங்கன்றது மறந்துடுச்சா? ஆனா நான் மறக்கலை! நான் பேசுறப்போ இடையில பேசுனீங்க அவ்வளவு தான்!!” என்றவள்,

“ஏய்!! என்ன தைரியம் என் பொண்ணை அடிக்கிறவ?” என பரிமளம் வீரவேசம் கொண்டு வர,

“உங்களுக்கும் அதே தான் நான் பேசுற வரை யாரும் இடையில பேசக் கூடாது? பதிலுக்கு எனக்கு பேச தெரியும்” என அவரை அடக்கிட,

“என்னங்க இவ நம்ம பிள்ளைய அடிக்கிற பாத்துட்டு சும்மா இருக்கீங்க?” பரிமளம் கணவனை தூண்டி விட,

“இதை நான் நேத்து நைட்டே செஞ்சிருக்கணும். என்னால செய்ய முடியலை இதயா செஞ்சிட்டா” என்ற செல்வபாண்டியின் பேச்சினில் இருந்த வெறுப்பில் ராஜி உச்சகட்டமாய் அதிர்ந்துவிட்டாள்.

அப்போது தான் எழுந்து வந்த காவோரியும் தந்தையின் குரலில் இருந்த வெறுப்பில் அவரை திகைத்து பார்க்க பரிமளமோ கணவனின் முகத்தை தவிர வேறு எங்கும் பார்க்கவில்லை.

“ஏய்!!! உனக்கென்ன பிரச்சினை?” இதயா அழுத்தமாக ராஜியை கேட்க வாயே திறக்கவில்லை அவள்.

“சொல்லு?? உனக்கு வெற்றிய கல்யாணம் பண்ணி வைக்கலை அதானே பிரச்சனை?

கொஞ்சமாச்சும் உனக்கு சுயபுத்தின்றது இருக்கா?? உன்னை வேண்டாம் விருப்பம் இல்லைன்ற ஒருத்தனை திரும்ப திரும்ப நீ வேணும்னே சொல்றியே அப்புடி என்ன அவனை நீ விரும்புற?

உன்னோட காதல் என்ன பத்து வருஷமா உயிருக்குயிரா காதலிச்ச காதல்?? வெறும் மூணு மாசம்!! பெரியவங்க பேசறது வச்சு நீயே உன் மனசுல ஆசைய வளந்துக்கிட்டா அதுக்கு வெற்றி எப்புடி பொறுப்பாவான்??

அப்புடி என்ன உன்னோடது ஆத்மார்த்தமான காதல் உன்னை வேண்டாம்னு சொல்றவன சரிதான் போடான்னு தூக்கிப் போடாமா உன் மனசுல இன்னமும் சொமந்துக்கிட்டு இருக்கியோ கொஞ்சம் கூட ரோசம் இல்லையா உனக்கு??

சரி விடு வெற்றிய இப்போ கட்டாயப்படுத்தி கல்யாணம் பண்ணி வச்சிடுறோம்.அதுக்கப்பறம் உன்னோட வாழ்க்கை சொல்லு அதையும் அவனை கட்டாயப்படுத்தி உன்னோட வாழ வச்சிடலாமா?? ச்சீ அசிங்கமா இல்லை?? அப்புடி கட்டாயப்படுத்தி வாழுற வாழ்க்கையில வெற்றிக்கு உன்மேல லவ் இருக்கும்னு நெனைக்கிறியா??? நிச்சயம் இருக்காது வெறும் கடமையா உணர்ச்சி இல்லாத ஜடமா தான் உன்னோட வாழ்வான்!!?

சொல்லு அப்படிப்பட்ட வாழ்க்கை தான் உனக்கு வேணுமா?? அப்புடி எதுக்கு நீ வாழணும் அந்த மாதிரி வாழ்க்கை வாழ நீ ஒன்னும் தரம் தாழந்து போய்டலை தானே??

அப்புடி வாழ்ந்தே உன்னைபத்தின நெனைப்பு வெற்றி மனசுல என்னவா இருக்கும்?? நான் சொல்லவா??” என்றவளின்‌ பேச்சில் நிச்சயம் ஏதோ வில்லங்கமாக கூறப் போகிறாள் என்பதை உணர்ந்த கனி அவளை தடுக்கும் முன்,

“நிச்சயம் கேவலமான பொண்ணா தான் உன்னை பத்தின நெனைப்பு அவன் மனசுல இருக்கும். விருப்பம் இல்லைன்னு சொல்லியும் என்னை இப்புடி கார்னர் பண்ணி கல்யாணம் பண்ணிருக்காளே இவ எப்படிப்பட்ட பொண்ணாயிருப்பான்னு தான் அவனோட எண்ணம் இருக்கும்.

தினம் தினம் உன்னை வாய்ததையால நோகடிப்பான். உனக்கு எந்த வித சந்தோஷமும் இருக்காது வெற்றியோட கல்யாண வாழ்க்கைல. இது ஏன் உன் மரமண்டைக்கு புரியலை இது தான் நிதர்சனம்.

வெற்ஙளிக்கு பூமிய தான்‌ பிடிச்சிருங்குகிறது அப்பட்டமான உண்மை. அவளை விட்டுட்டு உன்னை எப்புடி அவன் கல்யாணம் பண்ணுவான்னு கொஞ்சமாச்சு யோசிச்சியா??

அப்புடி என்ன உன் மூளைய மலங்கடிக்கிற அளவுக்கு அவன்‌ மேல உனக்கு காதல்‌.” என வார்த்தைகளால் அவளை விலாசி தள்ள,

“இந்த இதயா போதும்‌? இதோட நிறுத்திக்கோ ரொம்ப பேசுற‌‌ நீ?” என பரிமளம் வர,

“இவளுக்கு நான் கொடுத்த அடியை நீங்க கொடுத்திருந்தா இவளுக்கு இந்த மாதிரி நெலைமை வந்திருக்காது. இவளுக்கு அம்மா தானோ நீங்க உங்க பொண்ணுக்கு விருப்பம் இல்லாத ஒருத்தனை அவன் உங்க சொந்தமாவே இருந்தாலும் நீங்க கட்டி வைபீபங்களா??” என்க

அமைதியானார் பரிமளம்.

“மாட்டிங்க தானே அப்போ உங்க பொண்ணுனா அது அநியாயாம் இதே வெற்றிக்குன்னா அது நியாயம். அப்புடி என்னங்க விருப்பம் இல்லாத வெற்றியை இவளுக்கு கட்டிவச்சு நீங்க சாதிச்சிடப் போறீங்க? அந்த கல்யாணம் இவளுக்கு வரமா இருக்காது வாழ்நாள் முழைமைக்கும் சாபமா தான் இருக்கும்னு உங்களுக்கு ஏன் புரிய மாட்டிங்குது‌.

இப்புடி உங்க பொண்ணுன்னு கூட பாக்காமா அவ வாழ்க்கைய குழி தோண்டி புதைக்க போறடுறீங்க? வெற்றி விருப்பம் இல்லைன்னு சொன்னப்பறம் இவ மனசு மாறாம இருந்தப்பயே செவுல்ல ஒண்ணு விட்டிருந்தா இன்னேரம் இப்புடி நிப்பாளா??”
என அவரை வாயடைக்க செய்தவள்,

“எவ்வளவு தைரியம் இருந்தா நீ இவரை அப்புடி பேசிருப்பா?? உன் மண்டைக்குள்ள 300 கிராம்ல ஒரு பொருள் இருக்கே அதை என்னைக்குத் தான் நீ யூஸ் பண்ணப் போறா?? என்னை கல்யாணம் பண்ணக் கூடாதுன்னு சொல்றதுக்கு உனக்கு என்ன ரைட்ஷ் இருக்கு??

அப்புடி அவர் நீ சொல்றதை கேட்கலைன்னா உடனே அவரை அடிச்சு அவர் மனசை நோகடிப்பியா நீயி?? ச்சீ என்ன ஜென்மம் நீயி உனக்காக எதுவும் அவர் செஞ்தில்லையா?. உன்னை எப்பவும் அவர் ஓருபடி மேல தான் வச்சிருப்பாரு எல்லாரையும் விட, ஏன் என்னையும் விட தான்!!

உனக்காகவே ஒண்ணொன்னையும் பாத்து பாத்து செஞ்ச மனசுன எப்புடி நோகடிச்சிருக்க நீயி?? உனக்காக தான டி!! உனக்காக நீ மனசு கஷ்டப்படக் கூடாதுன்னு தானே என்னை இத்தனை வருஷமா அவரு ஒதுக்கி வச்சிருந்தாரு அந்த எண்ணம் கூட இல்லை உனக்கு??

அவர் உன் மேல வச்சிருக்குற பாசத்தை தூக்கி எறியிற அளவுக்கா உன் மூளை மழுங்கியிருக்கு இல்லை அப்படிப்பட்ட காதலா உன்னோடது??

உன்மேல உசுரையே வச்சிருந்தவரை எவ்வளவு அசிகங்கப்படுத்த முடியுமோ அவ்வளவு பண்ணி அவரை அழ வச்சிட்டா??” என்க ராஜி அதிர்ந்துப் போய் கனியை பார்க்க அவளின் பார்வையினை சந்திக்காத கனி முகம் திருப்பிக் கொள்ள அவனின் முகத்திருப்பலில் முகத்தில் அறை‌வாங்கினாள் ராஜி.

“இங்கப் பாரு இந்த வீட்டுக்கு இந்த ஜென்மத்துல நான் தான் மருமக அதை யாரலயும் மாத்த முடியாது?? புரிஞ்சுதா?? இனியொரு தடவை கனியை பத்தி ஏதும் பேசி அவரை நோகடிச்ச!! வாயை ஒடைச்சிடுவேன்??” என ஒரு விரல் நீட்டி அவளை எச்சரிக்க இதற்கு மேலும் அவளை விட்டால் சரிவராது என நினைத்த கனி,

“இதயா!!! போதும் இதோட நிறுத்திக்க இதுக்கு மேல தயவு சொஞ்சு எதுவும் பேசிடாதா ராஜி தாங்க மாட்டா?” என அவளை கைப்பிடித்து இழுத்துக் கொண்டு வெளியேர,

அவனின் கையை உதறியவள்,
“இப்போ கூட உன்னை பத்தி தானேடி அவரு யோசிக்கிறாரு! அவர் மனசை நோகடிக்க எப்புடி மனசு வந்தது உனக்கு!” என மீண்டும் ராஜியிடம் செல்ல முயன்றவளை இழுத்துக் கொண்டு அவன் செல்ல,

“கொஞ்மாச்சும் சுயபுத்தி உள்ளவளா இரு! தூங்கி கிடக்குற உன் மூளையை தட்டி எழுப்பி அதுக்கு யோசிக்கிற சிந்தனையை கொடு” என இதயா விடாது பேசிக் கொண்டே செல்ல அவளின் ஒவ்வொரு வார்த்தைக்கும் அவளை வெறித்த வண்ணம் இருந்தாள் ராஜி.

வண்டியில் ஏறுவதற்கு தகராறு செய்த இதயாவை ஒரு தூக்காக தூக்கி ஜீப்பினுள் எறிந்து கதவை மூடியவன் மறுபக்கம் அமர்ந்து ஜீப்பினை கிளப்பியிருந்தான்.
 

Mathykarthy

Well-known member
ப்பா... அடைமழை அடிச்சு ஓய்ஞ்ச மாதிரி இருக்கு...
படபட ன்னு பட்டாசு மாதிரி பொரிஞ்சு தள்ளிட்டா இதயா.... ஸுப்பரு... 🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩🤩

இனியாவது ராஜீ மரமண்டைக்கு புரியுமா.....😒
 

santhinagaraj

Well-known member
இதயாவோட ஒவ்வொரு கேள்வியும் அதிரடி சரவெடியா இருந்துச்சு செம்ம.👌👌
 
Top