எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கனாவில் கண்ட முகம் -14 இறுதி அத்தியாயம்

14

முதல் முதல்ல நீ என் கனவில் வந்தப்போ நான் ரொம்பவே பயந்து போயிட்டேன்..?

ஏன்.. கேள்வி எழுப்பினாள் உமையாள்.

ஏன்னா நீ வந்தது அப்படி.

அதான் எப்படி..?

அதை இப்போ சொல்ல முடியாது கண்டிப்பா ஒரு நாள் நிஜத்தில் நடக்கும் அன்னைக்கு சொல்லறேன் என்ற விஷமமாக கூறியவன் இப்போ நான் மேல சொல்லவா..இல்ல…?! அவளை பிச்சித் தின்னும் பார்வையில் கேட்கவும்
வாயில் மீது விரல் வைத்து பேசமாட்டேன் என்பது போல தலையசைக்கவும்..ம்ம் குட் என பாராட்டியபடி தொடர்ந்தான்.

உன்னை கனவுல பார்த்ததும் ஏன் பயந்தேன்னா அந்த சமயத்துல எனக்கும் நிவேதாவுக்கும் திருமண நிச்சயம் முடிந்து கல்யாணத்துக்கு சில நாட்களே இருந்தது.

நீ சொன்ன மாதிரி ஊரெல்லாம் உன்னை மாதிரி பொண்ணு இருக்கான்னு தேடல நிவேதாவுக்குள்ள உன் முகம் தெரியுதானு தான் தேடினேன்.

அப்போ தான் திடீர்னு நீ என் வீட்டுக்கு வந்த அன்னைக்கு நான் உன்னை சரியா கவனிக்கல அதன் பிறகு உன்னை சரியா பார்த்ததுமே எனக்கு பயம் வந்துருச்சு.

என்னடா இது கனவுல வந்த பொண்ணு நேர்ல வந்திருக்கு..கனவுல நடந்தது போல ஏதாவது நடந்திடும்மோன்னு பயந்து போய் ஏதாவது ஓரு சாக்குபோக்கு சொல்லி என் அப்பா மூலமா உன்னை ஊருக்கு அனுப்பி வைக்கலாம்னு நினைச்சா அங்க தான் எனக்கு ஒரு ட்விஸ்ட்..
நீ என் அத்தை மகள்னு தெரிந்தது.

என் அப்பாவோட சுயநலத்தால உன் உன் வாழ்க்கையும் அத்தையோட வாழ்க்கையும் சீரழிந்த விஷயம் தெரிந்தது.

அதை சரி பண்ணியே ஆகணும் அப்படிங்கற கட்டாயமும் கடமையும் எனக்குள்ள வந்தது.

அப்புறம்தான் உனக்கு என்ன நடந்தது என்பதை பற்றி முழுசா தெரிஞ்சுக்க பத்திரிகை கொடுப்பதை சாக்கா வைத்து ஊருக்கு போனேன் அங்க போன பிறகுதான் உனக்கு நடந்த விஷயங்கள் எல்லாமே முழுசா தெரிஞ்சது.

ரொம்ப அதிர்ச்சி அடைந்தேன் கூடவே உனக்கா இந்த நிலைமைன்னு ரொம்பவும் வருத்தமும் பட்டேன் .

அப்புறம் உன் கிட்ட தப்பா நடந்தவர்களை அடித்து உதைத்து போலீஸ்ல‌பிடித்து கொடுத்துட்டு அத்தையோட இங்க வந்தேன்.

உன்னை மருத்துவமனை கூட்டிட்டு போனேன் நீ கொஞ்சம் கொஞ்சமா பழைய நிலைமைக்கு வந்துடுவேன்னு ரொம்ப சந்தோஷப்பட்டேன் அந்த சமயத்துல நான் உன்னோடு அதிகமா டைம் ஸ்பென்ட் பண்றதா தவறாக புரிந்துகொண்ட நிவேதா கல்யாணம் வேணாம்னு போயிட்டா.

அதுக்கப்புறம் என் அம்மாவோட கோபம் அத்தையை இங்கிருந்து விரட்டி விட்டது.

அந்த சமயத்துல தான் உனக்கு பழைய
ஞாபகம் வந்ததா என்கிட்ட சொன்ன..நானும் ஊர்ல இருந்த ரவுடிகளோட புகைப்படங்களை உன்கிட்ட காமிச்சேன்.

அப்போ நீ உன்னையும் அறியாமல் சந்தோஷத்துல என் கன்னத்துல முத்தமிட்டாய்.

முதல்முதலா‌ எனக்குள்ள இருந்த உன் மீதான என் காதலை உணர்ந்தேன்.

அதேசங நீ ரொம்ப சின்ன பொண்ணு உன் கிட்ட எப்படி என் காதலை சொல்ல முடியும் அதனால நீ கொஞ்ச நாள் கழிச்சு சொல்ல நினைச்சேன்.

நீ படிக்க ஆசைப்பட்ட காலேஜ் செர்த்துட்டேன்.. படிப்பு முடியற சமயம் இதுதான் சரியான சந்தர்ப்பம் உன்கிட்ட என் காதலை சொல்லலாம்னு காத்துட்டு இருக்கும்போது திடீர்னு ஷ்யாமை காதலிக்கிறதா வந்து நின்ன.

அப்படியே என் இதயம் நொறுங்கிடுச்சி..வலியோடவே உனக்காக வீட்ல பேசி ஓகே பண்ண வச்சேன்.

என் காதலியோட மனசுல நான் இல்லை இருந்தாலும் அவ ஆசைப்பட்டவனோட நல்லா இருக்கட்டும்னு நினைச்சேன்.

ஆனாலும் உன்னை அவனோட தனியா அனுப்பும் போதெல்லாம் மனசுக்குள்ள ஓரு பயம் இருக்கும் ஏன்னு தெரியல.. உனக்குள்ளே பழைய நிகழ்வுகளோட பாதிப்பு இருக்கும்னு‌ என் மனசு சொல்லிகிட்டே இருந்தது.

கிஷோர் தவிர்த்து வேறொரு மருத்துவர்கிட்ட அது பத்தி கேட்டேன்.

ஒருவேளை வெளிப்பார்வைக்கு நீ குணமான மாதிரியான தோற்றம் இருந்தாலும் உள்ளுக்குள்ள நீ குணமாகாமல் பழைய நிகழ்வுகள் உனக்குள்ள உழன்று கொண்டு இருந்தால் அதோட பக்கவிளைவுகள் எப்படி இருக்கும்னு தெளிவா புரியவச்சாரு..என்று கூறிவனையை
கண்சிமிட்டாமல் பார்த்தாள்.

அவளின் கன்னங்களை கைகளில் தாங்கியவன்

உன் விருப்பம் இல்லாம பக்கம் வந்தாலே இல்லை உன்னை தொட நினைச்சாலோ நீ மீண்டும் பழைய நிலைமைக்கே போயிடுவன்னு சொன்னாங்க.

அதே போலத்தான் ஷ்யாம் தெரியாம உன் பக்கத்துல வந்து பெரிய பிரச்சனை ஆயிடுச்சு அந்த சமயத்தில் என் மைண்ட் ஃபுல்லா பிளாங்க் ஆயிடுச்சு.

எப்படி இவளை மீட்டு பழைய நிலைக்கு கொண்டு வருவதுன்னு துடித்து போய்விட்டேன்.

விடுதியில் என்னைப்பார்த்ததும் ஓடி வந்து என்னை கட்டி அணைத்தாய் இல்லையா அப்போ தான் தெரிஞ்சது உன் மனசுக்குள்ளேயும் நான் இருக்கிற விஷயம்.

உன்னால இயல்பா எனக்கு முத்தம் கொடுக்க முடியுது என்ன அணைச்சுக்க முடியுதுன்னா என்ன அர்த்தம் என்று அவளிடம் கேள்வி கேட்க.

அப்படின்னா என் மனசுலயும் நீங்க இருக்கற விஷயம் தெரிஞ்சிருக்கு
அப்படி இருந்தும் கிஷோருக்கு என்னை பேசி முடிச்சிருக்கீங்க என கோபப்பட்டாள்.

ஹேய் திட்டம் போட்டு எதுவும் நடக்கல..அந்த திருமணம் ஓரு ஆக்ஸிடென்ட்..கிஷோர் உன்னை பற்றி விசாரித்தார் மேம்போக்கா சொன்னேன்..

அவர் என்னடான்னா அதை சாதகமா மாத்திக்கிட்டு உன்னை திருமணம் செய்து கொள்வதா என்கிட்ட அனுமதி கேட்டார்.

யோசிக்கும் போது தோணுச்சு என்ன இருந்தாலும் கிஷோர் மனநல மருத்துவர் என்னை நீ கல்யாணம் பண்ணிக்கறதை விட அவரை கல்யாணம் பண்ணிக்கிறது பெட்டர் சாய்ஸ்னு தோன்றியதால சரின்னு தலையாட்டினேன் .

இந்த பக்கம் நிவேதா எனக்கே எனக்காகன்னு திரும்பி வந்தா அந்த பக்கம் உனக்காக கிஷோர் இருந்தாரு.

நமக்கானவங்களுக்கு எது சரியென்று பார்த்து அதை அவர்களுக்கு விட்டுக் கொடுத்து போறதும் தான வாழ்க்கை அப்படிதான் உனக்கானர் கிஷோர்னு நினைத்து அவருக்காக உன்னை விட்டுக்கொடுத்தேன் என பேசி முடித்தான்.

ஏன் உங்களுக்கு தோணாம போச்சு அத்தான் என் விஷயத்தில் ஷ்யாம் கிஷோர் இரண்டு பேருக்குமே ஓரே இடம் தான் என்று..?

ஷ்யாம் என்னை ஒரு வகையில் காதலிக்க சொல்லி கட்டாயப் படுத்தினாள், தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டினான், எனக்கு விருப்பமே இல்லைன்னு தெரிஞ்சும் கூட அவனை என் மனசுக்குள்ள திணிக்க முயற்சி செய்தான்.

அதோட பலன் தான் விடுதியில் நடந்தது கிஷோருக்கும் அதேதான் நடந்திருக்கும் என்ன அவர் மருத்துவர் என்கிறதால அவரோட அணுகுமுறையை என்னால ஏத்துக்க முடிஞ்சுது அதை தாண்டி இருந்தா கண்டிப்பா அவரும் என்னோட சுய ரூபத்தை பார்த்து இருப்பார்.

ஆமா உமையாள் அதைப்பற்றி இப்போ நினைச்சாலும் என் உடம்பு உதறுது.

எவ்வளவு பெரிய தப்பு செய்ய இருந்தேன் உனக்கும் கிஷோருக்கும் திருமணம் நடந்திருந்தால் உன் வாழ்க்கையும் அவரோட வாழ்க்கையும் நரகமாகி இருக்கும்.

இந்த பக்கம் நானும் நிவேதாவோடு கடனே என்று வாழ்ந்திருப்பேன் அந்த பக்கம் உன்னை திருமணம் செய்யதால கிஷோருடைய வாழ்க்கை போராட்டம் ஆகிருக்கும்.

நீ மனநீதியா ரொம்ப மோசமான நிலைமைக்கு தள்ளப்பட்டிருப்பாய். என்னை மன்னித்துவிடு என்னோட சின்ன தவறு நான்கு பேரோட வாழ்க்கையே புரட்டிப்போட இருந்தது.

நல்ல சமயத்தில் நீ டைரியை படிச்சு எல்லா பிரச்சினைகளையும் தீர்த்து வைத்து விட்டாய்.

இப்போ நிறைவா உன்னோட பேசிகிட்டு இருக்கேன்,அந்த பக்கம் கிஷோர்,நிவேதா அவங்களோட வாழ்க்கையை பற்றி யோசிக்க ஆரம்பிச்சிருக்காங்க என்று சந்தோஷம் கொண்டவன் மென்மையாக அவளது உச்சந்தலையில் முத்தமிட்டான்.

சரி அதெல்லாம் இருக்கட்டும் முதல்முதல்ல உங்க கனவுல வந்தேனே அதை பற்றி சொல்லுங்க..?

ம்ம் ..என்ன சொல்லறது அழகான கனவு,கனவுன்னு சொல்லறதை விட அது ஓரு கவிதை தினம் தினம் தூங்கவிடாம பாடாய் படுத்தின பாதிப்பு.
என்றபடி டைரியின் முதல் பக்கத்தை காட்டியவன்.

இதுபோல தான் வெளிர் மஞ்சள் கலர்ல புடவை அணிஞ்சுக்கிட்டு பாத்ரூமில் இருந்து என்னை பார்த்து வந்த.

யார்ரா இது இவ்வளவு அழகான பொண்ணுன்னு நான் கண் சிமிட்டாமல் பார்த்தேன் என்று சொல்லவும்.

அப்புறம் என ஆர்வமாக கேட்டாள்.

தன் நெஞ்சில் இருந்தவனை சட்டென்று படுக்கையில் தள்ளி அவள் பக்கவாட்டில் சரிந்தவன் அதன் பிறகு என்ன பண்ணினன்னு தெரியுமா என கேள்வி எழுப்பியவன்.

தயக்கத்துடன் என் அருகாமை உன்னை பதட்டப்பட ழைக்கவில்லை தானே..?

அதெல்லாம் ஒன்னும்மில்லை..நீங்க மேல சொல்லுங்க என்று அவனை தன்பக்கமாக இழுத்தாள்.

அப்புறம் என சரசமாக இழுத்தவன் கனவை விவரிக்க தொடங்கினான்.

பிறகு இப்படித்தான் என்னை முத்தமிட்டாய் என் நெற்றி,கன்னம்,கண்,மூக்கு என முத்தமிட்டுக்கொண்டே வந்தவனிடம்.

அத்தான் இது செல்லாது நீங்க பொய் சொல்லறீங்க..என அவள் முடிக்கும் முன்னே அவனது இதழால் அவளது இதழை மூடி அந்த வா
ர்த்தைகளை அவனுள் வாங்கிக்கொள்ள ஆரம்பித்தான்.

முற்றும்.
நன்றி.
அகிலா வைகுண்டம்.
 
Top