எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அத்தியாயம் - 06

admin

Administrator
Staff member

மைனரு மனசுல மச்சினி 06​

சோழா கிராமத்திற்குச் சென்ற பின் அவனைத் தொடர்புக் கொள்ள முடியவில்லை.​

ஆனால் சிவமணி இறந்துவிட்டதாக செய்தி மட்டும் கவிக்கு கிடைத்தது.​

அவளால் அதை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை, ஆயிரமாயினும் தாய்மாமன் முறை, சோழாவிற்கு அப்பா வேண்டும்.​

அரும்புவிடம் தான் வருவதாக கூறினாள், அவரோ"நீ வரதுக்குள்ள தூக்கிடுவாங்க, அதுவும் நாங்களே மூணாவது ஆள் மாதிரி தான் போய் நிக்கிறோம், நீ என்னதுக்கு வந்து அவமானப்படனும். அங்கயே இருடி அப்பாக்கு தெரிஞ்சா நீ ஏன் வரேனு கத்துவார்" என்றார்.​

"அம்மா! என்ன இருந்தாலும் அவர் எனக்கு தாய்மாமா, அப்புறம்..." என நிறுத்தியவள், மேலும் பேச முடியாமல் தடுமாறினாள்.​

"கவி! சொன்னா கேளு, ஃபோனை வை" என கட் பண்ணிவிட்டார்.​

கவிக்கு உடனே சோழாவிடம் பேச வேண்டும் என்றுத் தோன்ற, அவன் எண்ணிற்கு அழைத்தாள். ஆனால் ஸ்விட்ச் ஆப் என மட்டுமே வந்தது.​

அடுத்து தாத்தா எண்ணிற்கு அழைக்க, அவர் அட்டென்ட் செய்து"கவிகுட்டி!" என அழுதார். அவளும் அழுதவாறே அவரைச் சமாதானம் செய்துவிட்டு, சோழாவிடம் பேசவேண்டும் தாத்தா என்றாள்.​

"அவன் பேசுற நெலமையில இல்லடா குட்டி, நீ அப்புறம் பேசலாம்" என்றார்.​

"ம்ம்ம்! நான் கெளம்பி வரவா தாத்தா, அம்மா கிட்ட கேட்டா வேணானு சொல்லுது, அதான் அவர் கிட்ட பேசலாமுனு பாத்தேன், எனக்கு எந்த உரிமையில் வரதுனு தெரியல" எனக் கேட்டாள்.​

"இனி நீ கெளம்பி வந்தாலும் பயனில்லை, அதுக்குள்ள சுடுகாடு எடுத்துட்டுப் போயிடுவாங்க, சோழா புரிஞ்சுப்பான், இருந்தாலும் அவனுட்ட பேசிட்டு சொல்றேன்" என ஃபோனை வைத்தார்.​

அதன் பின் தாத்தா ஃபோன் செய்யவே இல்லை, கவிக்குப் பொழுதே போகவில்லை, அந்த நாளும் முடிந்தது.​

அடுத்த நாள் தாத்தா பேசும் போது, முதல் நாள் திரும்பி அழைக்கிறேனு சொன்னதையே மறந்ததாக கூறினார்.​

அடுத்து வந்த நாள்களில் அம்மா, தாத்தா மூலம் மட்டுமே அங்கு நிகழ்பவைகளைக் கேட்டறிந்தாள்.​

சோழாவிடம் பேசவே முடியவில்லை. தாத்தாவிடம் பேசவேண்டும் எனக் கூறினாலும் ஏதாவதுக் காரணம் கூறினாரே தவிர சோழாவிடம் ஃபோனை தரவில்லை.​

கவிக்கு அலுத்துப் போனது, பேசாமல் கிராமத்திற்கே போகலாம் என்றாலும் இனிப் போய் பிரயோஜனம் இல்லை, அங்குச் செல்ல சோழாவின் அனுமதி வேண்டும், என்ன நிலை என்று தெரியாமல் போய் என்னவென்று நிற்பாள். மாமா எனக் கூறிக் கொண்டு போகவும் முடியாத நிலையில் அவர்களின் குடும்ப உறவு இருக்கிறது.​

தாத்தா மட்டுமே ஆறுதலாக பேசினார், அவரும் முன்பு போல் இல்லாமல் எதனையோ மென்று முழுங்குவதுப் போல் தெரிந்தது. அவரிடம் கேட்டாலும் சொல்லவில்லை.​

பதினாறு நாள்கள் காரியம் முடிந்தே சோழா சென்னைத் திரும்பினான்.​

அன்றுக் காலையில் சோழா வருகைக்காகவே காத்திருந்தாள் கவி.​

அவன் வீட்டிற்குள் வரவும், ஓடிச் சென்றுக் கட்டிப்பிடித்து அழுதாள். அப்படியே சிலையாக நின்றவனை உணராமல்,​

"மைனரு!" என எதுவும் பேசாமலே அழுகையில் கரைந்தாள்.​

அவளிடம் அவன் எந்தவித தாக்கமும் இன்றி நிற்க, முதலில் உணராதவள் பிறகு நிமிர்ந்து அவன் முகத்தைப் பார்த்தாள்.​

"என்னங்க! ஏன் இப்டி இருக்கீங்க? மாமா எங்கையும் போகல, நம்ம கூட தான் இருக்காரு" என்றாள்.​

"நீ ஏன் என் அப்பா இறப்புக்கு வரல.?" என அழுத்தமாக கேட்டான்.​

"இல்ல! அது வந்து..." எனத் தடுமாறினாள்.​

"உன் அப்பன் செத்தாலும் வராம இருப்பீயா.?" என்றதும், அதிர்ச்சியானவள், "அப்படியில்லங்க! எனக்கு எந்த உரிமையில் வரதுனு தெரியல, அம்மா வேணானு சொன்னுச்சு, உங்கக் கூட பேச தாத்தா கிட்ட கேட்டேன், ஆனா தாத்தா நீங்கப் பேசுற நெலமையில் இல்லனு சொன்னாரு. அதான்..."​

"உன் அப்பன் செத்து இருந்தா வந்து இருப்பல.?" என மீண்டும் அதே அழுத்தமான மனநிலையில் கேட்டான்.​

"மைனரு!" எனக் கண்களில் நீர் வடித்தப்படி அவனின் கையைப் பிடிக்க,​

"ச்சீ!" என அவளை உதறினான்.​

"இனி என்னைய அப்படி கூப்புடாத" என வேகமாக கூறியவன், அறைக்குள் சென்று கதவினை ஓங்கி சாத்தினான்.​

அதன் சத்தம் கவியின் காதில், மனதில் பெரிய இடியாக விழுந்தது.​

சிறிது நேரத்தில் சோழா கிளம்பி வெளியில் வந்தான், அதுவரை ஹாலில் கண்ணீர் வடிய அமர்ந்திருந்த கவி, அவனைக் கண்டதும் ஓடிப் போய், "ஏங்க! என்னைய மன்னிச்சுடுங்க, நான் வராதது தப்பு தான், எனக்கு அடுத்து என்ன செய்றதுனு புரியல, உங்களுக்குக் கூப்புட்டா பேச முடியல, தாத்தாவும் வர வேண்டாமுனு சொன்னாரு" என அவன் கையைப் பிடித்து அழுதாள்.​

"உன் வீட்டுல வர வேண்டானு சொன்னாங்க அத சொல்லு, நாளைக்கு என்னைய வேணானு விட்டுட்டு வரச்சொல்வாங்க உடனே போயிடுவீயா.?"​

"இல்லங்க! அது எப்படி போவேன், நான் உங்க மச்சினிங்க!" என அவன் மார்பில் சாயப் போனவளை, எட்டித் தள்ளி விட்டதில் தரையில் போய் விழுந்தாள்.​

"ஆ!" என அலறியப்படி விழுந்தவளிடம்,​

"இந்த நடிப்பை எல்லாம் இனி நான் நம்ப மாட்டேன்டி, என்னைய பத்தி உனக்கு தெரியல, நான் யாருனு காட்டுறேன், உனக்கும் உன் அப்பனுக்கும்" என விரலை நீட்டி எச்சரித்தவன், அதற்கு மேல் நிற்காமல் வீட்டை விட்டு வெளியேறினாள்.​

கவிக்கு ஒன்றுமே புரியவில்லை, அழுகையை தவிர வேறெதுவும் அந்த நேரத்தில் தோன்றாமல் அப்படியே தரையில் படுத்தாள்.​

அழுது அழுது எப்பொழுது தூங்கினாள் எனத் தெரியாமல் கண்களை மூடினாள்.​

முதல் நாள் இரவு முழுவதும் சோழாவின் வருகைக்காக காத்திருந்ததால் இன்று அழுகையுடன் நேரம் போனதே தெரியாமல் தூங்கிவிட்டாள்.​

நேரம் மதியத்தைக் கடக்க, லேசான உணர்வு வர எழுந்தாள். சோழா வருவதால் ஆபிஸ் லீவ் போட்டு இருந்தாள்.​

மதியமாகியதால் சோழா வருவான் என எண்ணி சமையல் செய்து முடித்துக் காத்திருக்க, அவன் வரவில்லை, ஃபோன் செய்தாலும் எடுக்கவில்லை.​

இப்பொழுது தான் புரிந்தது இத்தனை நாள்கள் அவளிடம் பேசக்கூடாதென்று அவன் பேசவில்லை, தாத்தாவிற்கும் அது தெரியும், அதான் சமாளித்தாரோ எனத் தோன்றவும், உடனே தாத்தாவிற்கு அழைத்தாள்.​

ஃபோனை அட்டென்ட் செய்த தாத்தா, அவளின் குரலில் இருந்த வருத்தத்தைப் புரிந்துக் கொண்டார். "குட்டி! என் கிட்ட கேட்டா நான் சொல்ல ஒன்னுமே இல்ல, நீ கொஞ்சம் பொறுமையா போடா!" என்றார்.​

"அவரு ரொம்ப கோபமா இருக்காரு தாத்தா, பயமா இருக்கு"​

"நான் வேணுனா ஒரு உண்மையைச் சொல்றேன், அவனுக்கு கோபம் உன் அப்பன் மேல தான், உன் மேல இல்ல, இப்ப உனக்குப் புரியாதுடா, பொறுமையா போ!'​

"ஏன் தாத்தா, அப்பா மேல என்ன கோபம்.?"​

"அது..." என இழுத்தவர், "என் கிட்ட எதுவும் கேக்காத, நான் ஃபோனை வைக்கிறேன்" என வைத்துவிட்டார்.​

கவி புரியாமல், உடனே தாயிக்கு அழைத்து அந்தப் பதினாறு நாள்களில் எதுவும் சண்டை நடந்ததா எனத் துருவி விசாரித்தும் பயனில்லை.​

இரவு...​

இரவு உணவைச் சமைத்து வைத்துக் காத்திருக்க, சோழா வரவே இல்லை.​

கவியும் காலையில் இருந்து சாப்பிடாமல் வெறும் தண்ணீரை மட்டுமே அருந்தினாள்.​

பன்னிரண்டு மணியளவில் வீட்டிற்கு வந்த சோழா, காலிங் பெல் அடிக்க அவளை அறியாமல் ஹாலில் தூங்கிக் கொண்டு இருந்த கவி அவசரமாக எழுந்துக் கதவைத் திறந்தாள்.​

சோழா அவன் மதி இழந்து, ஃபுல் போதையில் நின்றான். அவன் மது அருந்தாதவன் இல்லை, ஆனால் மதி மயங்கும் அளவிற்குத் தள்ளாட மாட்டான்.​

அவன் குடிப்பதால் கவிக்கு இதுவரை தொந்தரவு இருந்ததில்லை.​

இன்று அவனின் நிலையைக் கண்டவள், கொஞ்சம் பயந்தவாறு அவன் மேலும் தடுமாறாமல் தாங்கிப் பிடித்தாள்.​

"ஏய்! விடுடி" என உளரினான். வீட்டிற்குள் வந்ததும் கதவைத் தாழிட்டவள், அவனை அழைத்துச் சென்றுப் படுக்கையில் அமர வைத்தாள்.​

"என்னங்க இது எல்லாம்.?"​

"என்னவா.? ம்ம்ம்! என்னவா.?" என உளரியபடி சாய்ந்தவன் அப்படியே மயங்கினான்.​

கவிக்கு அழுகையைத் தவிர வேற எதுவும் செய்ய தெரியவில்லை, முடிந்தளவு அழுது தீர்த்தாள்.​

காலைப்பொழுதில் கவி முழித்தப் போது, சோழா அருகே தூக்கத்தில் இருந்தான்.​

அவளின் மைனரு முகமே வித்தியாசமாக தெரிந்தது, ஏதோ ஒரு அழுத்தம், சோகம் சூழ்ந்திருந்தது.​

'மாமா இறப்பை தாங்க முடியல போல' என அவளே சமாதானம் செய்த பின் எழுந்தவள், நேராக சென்றுக் குளித்தாள்.​

நேற்றைய பசி உடலைப் படுத்தியது, குளித்து முடித்ததும் முதலில் சென்று ஒரு காபி போட்டுக் குடித்தாள். காலை உணவிற்குத் தேவையானதை தயார்படுத்தி வைத்துவிட்டு, சோழாவிற்கு ஒரு காபியைப் போட்டுக் கொண்டு அறைக்குள் வர, அப்பொழுது தான் முழித்தப்படி படுத்திருந்தான் அவன்.​

கட்டிலின் ஒரு பக்கம் வந்தவள், "காஃபி குடிங்க!" என நீட்டினாள்.​

அவன் எதுவுமே சொல்லாமல் எழுந்துச் சென்று முகம் கழுவி, ரெப்பெரஷ் ஆகி வந்தான்.​

"காஃபி ஆறிடுச்சு, சூடு பண்ணி எடுத்துட்டு வரேன்" என எழுந்துச் சென்று அதை வைத்துவிட்டுப் புதிதாக காஃபி போட்டு எடுத்து வந்தாள்.​

அவனிடம் நீட்ட, அவனோ அதை வாங்காமல் லேப் டாப்பில் எதையோ பார்த்துக் கொண்டு இருந்தான்.​

"ப்ளீஸ்! என் மேல கோபம் இருந்தா நாலு அடி அடிங்க, பேசாம இருக்காதீங்க, காஃபியைக் குடிங்க"​

"இந்த மாதிரி பேசி நடிக்காம வெளியில் போ" என அவளைப் பார்க்காமலே கூறினான்.​

"ஏங்க! நான் பண்ணது தப்பு தான், என்னைய மன்னிச்சுடுங்க"​

அவன் அமைதியாகிட, கவி எவ்வளோ கெஞ்சினாள். ஆனால் அவனிடம் பதிலே இல்லை.​

"உங்களுக்கு கோபம் என் மேலயா, இல்ல என் அப்பா மேலயா.?" எனத் தாங்க முடியாமல் கேட்டாள்.​

அவளை நிமிர்ந்துப் பார்த்தவன், "அது எப்படி சரியா சொல்ற.? அவன் பொண்ணுல நீ" என நக்கலாக சிரித்தான்.​

"ஏங்க, இப்டி பேசுறீங்க.? நான் பண்ணது தப்பு தான், என் அப்பாக்கு இதுல என்ன சம்பந்தம்.? எதுவா இருந்தாலும் என் மேல மட்டும் கோபப்படுங்க, என் அப்பாவை விட்டுருங்க" எனக் கண்கள் கலங்க கூறினாள்.​

"ஓ! உன் அப்பன் மேல அவ்வளவு பாசம்.? அப்ப சொல்லு நானா.? அவனா.?" எனக் கோபமாக கேட்டான்.​

"எனக்கு நீங்க ரெண்டுப் பேருமே தான் முக்கியமுங்க"​

"இந்த நாடகம் எல்லாம் இங்க வேணாம், ஒருத்தரைச் சொல்லு"​

அவள் பதில் சொல்ல முடியாமல் தவித்தாள். "இப்டி ஒரு கேள்வியை நீங்க கேக்க மாட்டீங்கனு நெனச்சேன்."​

"இப்ப கேட்டேன் சொல்லு!"​

"சத்தியமா பதில் இல்லைங்க!" என்றாள் கண்ணீர் வழிய.​

"ஓ! அப்ப உன் அப்பனை விட்டுத் தர முடியல, அவனை உனக்கு விட்டு தர முடியலனா, அவனுக்கு வலிக்குற மாதிரி நான் ஏதாவது செய்யனும்.? என்னச் செய்றது? என்ன.? என்ன.?" என பைத்தியம் மாதிரிக் கத்தினான்.​

"ஆ! அவன் பெத்தப் பொண்ணு நீ தானே, நீ இப்ப என் பொண்டாட்டி, நீ யாரு என் பொண்டாட்டி" என பெருங்குரலெடுத்துச் சிரித்தான்.​

கவி புரியாமல் பயந்து"சோழா!" என்றழைத்தாள்.​

"ஆமா! சோழா தான்" என அவளைத் தன்னிடம் இழுத்தான்.​

"என்ன பண்றீங்க.?"​

"சொன்னா நல்லா இருக்காது, செஞ்சுக் காட்டுறேன்." என அவளைத் தன்னுடன் அணைத்தான்.​

"விடுங்க!" எனக் கெஞ்சினாள்.​

"உன் ஆசையை நிறைவேத்தி வைக்கிறேன், உன் அப்பனுக்குத் தெரிஞ்சா ரொம்ப சந்தோஷப்படுவான்." எனக் கூறி அவளின் டிசர்டை நொடியில் கழட்டினான்.​

அன்று கொஞ்சிய அதே டிசர்ட், டிராக் பேண்ட்.​

"வேணாம்! நீங்க தப்பு பண்றீங்க"​

"நான் உன் புருசன்" என அவளை அதற்கு மேல் பேச விடாமல், ஒவ்வொரு ஆடையாக கட்டாயப்படுத்தி கழட்டி எறிந்தான்.​

அவள் முடிந்தளவு தடுக்க, உடலில் பலம் போதாமல் போனது. சோழா அவளை அணு அணுவாக எல்லாம் அனுபவிக்கவில்லை, ஆத்திரத்தைக் கொட்டினான் இல்லை கொடுக்காக கொற்றினான் எனலாம்.​

"நீ சீனிப் பொண்ணு தானே, அவனோட பொண்ணு" எனக் கூறியே கன்னங்களை கடித்தான், நெஞ்சில் இதழ்களால் வெறிக் கொண்டு படர்ந்து அவளை சீனிப் பெண்ணாக அருவருப்பாக நோக்கினான்.​

சோழாவின் பார்வையில் அப்பொழுது கவி மச்சினியாக, அவன் மனைவியாக தெரியவில்லை, சீனிப் பெண்.​

இருப்பக்கமும் அவளின் கைகளை அழுத்தியவன், அவளின் முன்னழகை முத்தம் என்ற பெயரில் பற்களால் வலியெடுக்க அலங்கோலம் செய்தான்.​

கவி, வலியில் கெஞ்சி கதறினாள், ஆனாலும் அவளை சீனிப்பெண் என்றே மனதில் நினைவில் ஏற்றி சித்ரவதையைத் தொடர்ந்தான்.​

உடலின் ஒவ்வொரு பகுதியையும் முத்தம் என்ற பெயரில் ரணப்படுத்திட, ஒரு கட்டத்தில் கண்களில் நீர் வழிய சிலையாகினாள். மேலும் அவனின் வெறி அடங்காமல் உணர்வுகள் இன்றி உணர்ச்சிகளை உருவாக்கி அதை ஆளுமையுடன் ஒரு தலை அரசனாக போர் மேற்கொண்டு, அத்தனை உணர்வுகளைக் கொன்று மனதின் ரத்தகளமாக மாற்றி அதில் உணர்ச்சிகளை ஏவியவாறு வெற்றிக் கொண்டான்.​

அவனின் கோபம் இன்னும் அடங்கவில்லை ஆனால் வெறி அந்த நிமிடம் அடங்கியது. அவளின் மனம் செத்துகிடந்தது, உடல் மட்டுமே அவன் போக்கில் போராடித் தோற்று ரணத்தில் மாட்டி சின்னாபின்னம் ஆனது.​

அவளிடம் இருந்து விலகியவன், "நீ எனக்கு பொண்டாட்டி" எனக் கூறிவிட்டு சென்றான்.​

கவி நீண்ட நேரம் எழ முடியாமல் கிடந்து, பின் மெல்ல எழுந்து வெந்நீரில் குளித்து முடித்து நைட்டியுடன் வந்தமர்ந்தாள்.​

உடல் எங்கும் காயங்கள் மட்டுமே அடையாளமாக வலித்தது ஆனால் மனமோ வெறுத்தது.​

அது அன்று மட்டுமில்லை. அதை தொடர்ந்து வந்த வாரமும் அதே நிலை தான் நீடித்தது. ஆம்! இரவில் கவியை அவனுக்கு இரையாக்கி கொண்டான் சோழா.​

கவிக்கு அது பழக ஒவ்வொரு இரவையும் அடமே இல்லாமல் உணர்வுகள் அற்ற பிணமாக அவனுக்கு அவளைக் கொடுத்தாள்.​

பத்து நாள்கள் கடந்திருக்கும், சோழா அன்று அறைக்குள் வந்ததும், ஏதோ வேலைப் பார்த்துக் கொண்டு இருந்தவள், எழுந்து தன் உடலில் உள்ள ஆடைகளைக் களைத்து அவன் முன் நின்றாள்.​

அவளை நிமிர்ந்துப் பார்த்தவன், புருவத்தைச் சுளித்தான்.​

"நான் ரெடி!" எனக் கைகளை விரித்து நின்றாள்.​

அவளை வினோதமாக பார்த்தவன், கட்டிலில் நகர்ந்துக் கால்களை நீட்டிப் படுத்தான்.​

அவன் அருகே சென்றுப் படுத்தவள், "நான் ரெடிங்க!" என அவன் கைகளை எடுத்து தன் மேல் போட்டுக் கொண்டாள்.​

"விடு!" என விலகினான்.​

"ஏங்க! நான் நல்லா இல்லையா.?"​

"எனக்கு தோணல!"​

"ஏன் தோணல.? நான் வேணுனா ட்ரிங்க்ஸ் ஊத்தி தரவா, அய்யோ! இல்லையே, வாங்கிட்டு வரவா"​

"ஏய்! என்ன கிண்டலா.?"​

"இல்லங்க! சரி, நான் சீனிப் பொண்ணுங்க, இப்ப தோணுதா"​

"என் கோபத்தை அதிகமாக்காம போயிடு"​

"பரவாயில்ல! கோபம் வந்தா என்னப் பண்ண போறீங்க.? இதானே!" என அவன் கைகளை எடுத்து அவள் மேல் போட்டவள், அவன் கைகளாலே அவள் உடலை இறுக்கிப் பிடிக்க வைத்தாள்.​

"ஸ்டார்ட் பண்ணுங்க!" என்றாள்.​

"எனக்கு மூடு இல்லை, விடுடி" எனக் கைகளை உதறினான்.​

"எனக்கு வேணும்!" என்றாள் அழுத்தமாக.​

"அதுக்கு நான் ஒன்னும் பண்ண முடியாது"​

"நீங்க தானே என் புருசன், அப்ப வாங்க"​

"என்னடி உனக்கு பைத்தியமா.?"​

"ஹஹஹ! ஓ நான் கேட்டா பைத்தியம். நீங்க கேட்டா கோபத்துல செய்றீங்க, அதானே"​

"கவி! என் கோபத்தைக் கிளப்பாத, நான் அப்புறம் மிருகமா மாறிடுவேன்."​

"ஓ! நீங்க அப்படி மாறி ரொம்ப நாள் ஆச்சு மைனரு, சாரி! சாரி! அதை சொல்லக் கூடாதுல"​

"எனக்கு தூக்கம் வருது, அப்படி போய் ஓரமா உட்காந்துப் பேசு" எனத் திரும்பி படுத்தான்.​

"முடியாது! எனக்குப் பதில் சொல்லுங்க, நான் உங்க அப்பா செத்ததுக்கு வரல, அதுக்கு கொடுத்த தண்டனையா இது.?"​

"ஆமா!"​

"ஆனா இது பெரிய தண்டனையா உங்களுக்குத் தெரியல.?"​

"தெரியல! நானே ஏதோ ஒரு மூடில் இன்னைக்கு ஒதுங்கி இருக்கேன் பேசாம போயிடு"​

"அதான் ஏன் ஒதுங்கிப் போறீங்க.?"​

"எனக்கு உன்னைய புடிக்கலடி"​

"ஏங்க, ஏன்? எனக்கு உங்களை ரொம்ப புடிக்குங்க, ஆனா நீங்க என் பழைய மைனரு இல்ல, இல்லவே இல்ல, அவரு என்னைய இப்டி கொடுமை பண்ண மாட்டாரு, இப்ப இருப்பது ஏதோ ஒரு சைக்கோ, நான் விரும்பினவரு இல்ல!" என அவனைப் போட்டு உலுக்கினாள்.​

சோழா மனம் அவளின் பேச்சில் இளகிடாமல் இருக்க, அவளை அதற்கு மேல் பேசவிடவில்லை.​

"இங்கப் பாரு, நான் உன்னைய காதலிச்சது, உன்னைய கல்யாணம் பண்ணது எல்லாமே என் அப்பா சம்பாரிச்ச அந்த இடத்துக்காக தான். என் அப்பாவே போயிட்டாரு, இனி நீ, உன் அப்பன் எல்லாம் எனக்கு ஒன்னு தான், போய் தொலை, என்னைய தூங்க விடு" எனச் சீறினான்.​

"என்ன சொன்னீங்க.?" என அதிர்ந்தாள்.​

"ஆமான்டி, ஆமா! இனிமே அந்தச் சொத்து என் கைக்கு தான் வரப்போது. உன் அப்பனுக்கு ஆப்பு இருக்கு" என்றான்.​

கவி அப்படியே அசையாமல் இருந்தாள். சோழா கண்களை மூடிட, கவி கண் அசரவே இல்லை, வெற்றுடல் உணர்வே இல்லாமல் அமர்ந்திருந்தாள்.​

விடியற்காலைப் பொழுது, சோழா விழித்திட எதிரில் அசையாமல் வெற்றுடலாக அமர்ந்திருந்தவளைக் கண்டு, அவளிடம்"ஏய்! ஏய்!" என அதட்டினான்.​

அவனை நிமிர்ந்துப் பார்த்தவள், "நீங்க சொன்னது உண்மையா.?" எனக் கேட்டாள்.​

"ம்ம்ம்!" என்றான் அதற்கு மேல் பேசாமல்.​

சட்டென்று எழுந்தவள், ஆடைகளை அணிந்துக் கொண்டு, கழுத்தில் கிடந்த தாலியைக் கழட்டி அவன் மேல் போட்டாள்.​

"நீங்க நினைக்கிறது நடக்காது, அந்த இடம் உங்களுக்கு இல்லை, டைவர்ஸ் நோட்டிஸ் அனுப்புறேன். கையெழுத்துப் போட்டுக் குடுங்க" என்றாள்.​

"முடியாதுனா"​

"எனக்கும் உனக்கும் நடந்த கல்யாணம் அர்த்தமே இல்லாதது, நான் போறேன். நம்ம கல்யாணத்தைப் பத்தி நீ வெளியில் சொன்ன அந்த நொடியே நான் தற்கொலைப் பண்ணிட்டுச் செத்துடுவேன். அப்புறம் நீ மொத்தமா தோத்துடுவ, எனக்கு டைவர்ஸ் வேணும்" என அவனைத் திரும்பி பாராமல் சென்று விட்டாள்.​

அதன் பின் அவர்களுக்கு இடையில் போராடிய ஒருவர் தாத்தா மட்டுமே அவரும் பிறகு படுக்கையாகிட​

இன்று எமலோகமும் சென்றுவிட்டார்.​

இன்று...​

பழைய நினைவுகளில் இருந்து இருவருமே மீண்டனர்.​

சோழா பந்தலில் அமர்ந்திருக்க, கவி அடுப்படியில் நின்றாள்.​

அடுப்படிற்குள் இருந்ததை எடுத்து தட்டில் வைத்து பசியும், கோபமும் அடங்க சாப்பிட்டு முடித்துவிட்டு சோழா அறையை நோக்கி நடந்தாள்.​

அவளைத் தடுத்த நித்யா"எங்கப் போற.?" எனக் கேட்டாள்.​

"பதில் சொல்லனுமா.?"​

"ஆமா!"​

"என் புருசன் ரூமுக்கு"​

"அவர் ஒன்னும் உனக்கு புருசன் இல்ல, அதான் தாலி கழட்டிப் போட்டல, டைவர்ஸ் அப்ளே பண்ணிட்டீயல"​

"ஆனா இன்னும் டைவர்ஸ் ஆகல, அப்படி டைவர்ஸ் ஆனா எக்ஸ் புருசனு சொல்றேன் நகரு"​

"இல்ல! நீ போகவே கூடாது" என நித்யா தடுத்தாள்.​

"ஏய் லூசு! நகரு"​

"நானா லூசு, நீ தான்டி இடையில் வந்த" எனக் கத்தினாள் நித்யா.​

லெட்சுமி அங்கு வர, "அத்தை! இவ அத்தான் ரூமுக்குப் போறா, வேணானு சொல்லு" எனக் கேவினாள்.​

சோழாவும் சத்தம் கேட்டு வர, வீரமணி, சின்னமணியும் வந்தனர்.​

"அடியேய்! அவன் ரூமுக்கு ஏன் போற? போய் ஹாலுல படுடி" என்றார் லெட்சுமி.​

"ம்ம்ம்! என்னோட இந்நாள் புருசன் அவன், அதான் அவன் ரூமுக்குப் போறேன். ஆறு மாசம் கழிச்சு வேற ஒருத்தனைக் கட்டிப்பேன் அப்ப அவன் ரூமுக்குப் போவேன். இப்ப உங்களுக்கு எதுக்கு அது எல்லாம்.?" என்றாள்.​

"அடச்சீ! மானகெட்டவ, என்னடி பேசுற.?" என லெட்சுமி முகத்தைச் சுளித்தாள்.​

நித்யா"நீ எல்லாம் ஒரு பொண்ணா?" எனக் கேட்டாள்.​

வீரமணி, சின்னமணி அருவருத்துப் பார்க்க, சோழா"கவி!" என அதட்டினான்.​

"வாங்க மைனரு! நான் சொல்றது சரி தானே!" எனச் சிரித்தப்படிக் கேட்டாள்.​

"வாயை மூடு!" என அவளை இழுத்து கொண்டு அவன் அறையை நோக்கி சென்றவன், உள்ளே போனதும் கதவைச் சாத்திக் கொண்டான்.​

நித்யா அத்தையைப் பார்க்க"அவனைப் பத்தி உனக்குத் தெரியாது, நல்லா நாலு சாத்து சாத்துவான் வா!" என அண்ணன் மகளைச் சமாதானம் செய்து அனுப்பினார்.​

*​

அறைக்குள்...​

"ஏய்! எல்லாரு முன்னாடியும் என்னடி பேசுற.?" எனச் சீறினான் சோழா.​

"ஏன்டா! அப்படி தான் பேசுவேன். உனக்கு என்னடா.?"​

"கவி!"​

"நான் மச்சினி! மறந்துட்டீயா.? ஓ! ஆமால"​

"நீ பைத்தியமாகிட்டடி"​

"ஆமாடா! ஒரு காலத்தில் பைத்தியமா இருந்தேன், இப்ப தெளிஞ்சுட்டேன்."​

"நீ ரொம்ப பேசுறடி"​

"அந்தப் பெருமை உன்னைய தான்டா சேரும்."​

"நீ என் கண்ணுக்கு அந்த சீனிப் பொண்ணாவே தெரியுறடி, இந்த ஆறு மாசமும் நீ என் பொண்டாட்டி மட்டும் தான், சீனிப் பொண்ணு இல்ல, அத மனசுல வை"​

"இங்கப் பாரு ஆறு மாசமும் உனக்கு பொண்டாட்டி, அதுக்கு அப்புறம் எவனுக்கோ பொண்டாட்டியா போவேன். ஆனா நான் சீனிப் பொண்ணுங்குறது இந்த ஜென்மத்துல மாறாதுடா!" என்றாள் அழுத்தமாக.​

"ஏய்! நீ என் கோபத்தை ரொம்ப ஏத்துற, அப்புறம் நான் மனுசனா இருக்க மாட்டேன்." எனக் கத்தினான்.​

"அதான் தெரியுமே! மிஞ்சி மிஞ்சிப் போனா என்ன பண்ணுவ, இந்தா இந்த உடம்பை மிருகமா கொத்தி கொதுறுவ,​

அதுக்கு எல்லாம் இந்த உடம்பு பழகிட்டு,​

போடா!" எனக் கட்டிலில் ஏறி கால்களை நீட்டிப் படுத்துக் கொண்டாள்.​

கோபம் மிகுந்திட கதவைத் திறந்துக் கொண்டு வேகமாக வெளியேறியவன், வாசலிற்குச் சென்றான்.​

தத்தாவை கண்ணாடிப் பேழையில் வைத்திருந்த பெஞ்ச் அங்கு கிடந்தது, அதில் சென்று கைகளை தலை மாட்டிற்கு கொடுத்துக் கண்களை மூடினான்.​

சிறிது நேரத்தில் அவனை யாரோ கூப்பிடுவது போல் இருக்க கண்களைத் திறக்க அவனால் அது முடியவில்லை.​

'பேராண்டி!' எனக் குரல் கேட்டது.​

'கெழவா!' என்றழைத்தான்.​

'நீ தப்பு பண்ணிட்டீயே! நான் தான் சொன்னேன்ல குட்டி உனக்கானவனு, நீ அவளைத் தண்டுச்சுட்டீயே! உன் கோபம் நியாயமானது தான் பேரா, ஆனா காட்டின இடம் தான் வேற. அவளை புரிஞ்சுக்கோடா' என்றார்.​

'எனக்கு இன்னும் கோபம் போகல தாத்தா'​

'அதுக்கு உன் பொண்டாட்டி என்னடா பண்ணுவா'​

'அவ அப்பனுக்கு வலிக்குதுல, இன்னைக்கு அத என் கண்ணால பாத்தேன்.'​

'ஆனா கவிகுட்டிக்கு அத விட வலிக்குதுடா நீ அதை பாக்க மறந்துட்டீயே! நீ மொதல்ல மனுசனா அவளோட புருசனா கண்ணைத் தொறந்துப் பாரு இல்லனா என் கூட வந்துடு, இதுக்கு மேல பாவத்தை சேக்காத, இல்ல நீ என் பேராண்டியா பொண்டாட்டியோட வாழு" எனக் கூறி மறைந்தார்.​

சோழா சட்டென்று முழித்திட, சுற்றிலும் எவருமில்லை. நாய் மட்டும் வாசலில் குரைத்துக் கொண்டே இருந்தது.​

"அடியேய்! அந்த விளக்கு எரியுதானு பாரு கெழம் செத்தும் இந்த வீட்டைச் சுத்திட்டே நம்மள படுத்திட்டு தான் இருப்பாரு போல" என லெட்சுமி புலம்பினார்.​

தொடரும்...​

 

Mathykarthy

Well-known member
சோழா டூ மச் 🤬🤬🤬🤬🤬🤬🤬😈😈😈😈😈😈😈
சீனி என்ன தப்பு வேணா பண்ணியிருக்கட்டும் அதுக்கு அவரை என்ன வேணா செய்.... ஆனா கவிகிட்ட நடந்துக்கிட்டது.... 😡😡😡😡 அவளுக்கு நீ பண்ணினது துரோகம்...
 

Priyakutty

Active member
கவி அப்பா என்னவோ பெருசா பண்ணிருக்காரு. அதால சோழா அப்பாக்கு எதும் ஆகிட்டா... 🥺

அப்படி இருந்தா கண்டிப்பா சோழா அந்த ஆளு மேல கோபப்படலாம்...

ஆனா கவி என்ன செய்வாங்க... 🥺

அவர் பண்ணினது ரொம்ப தப்பு 😤😤😤😤😤

இத்தனை நாள் காதல் எல்லாம் அதுல அடி பட்டு போச்சு... 💔

இதுக்கு அவருக்கு தண்டனை...
 
Top