எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 14

admin

Administrator
Staff member

அத்தியாயம் 14​

பூமியின் ஒவ்வொரு பாகத்தையும் தொட்டு தொட்டு ரசிக்கவே அதிகாலை பொழுதில் அழகாய் உதித்தான் பகலவன்..​

"அகா... அகா..." தாயின் பதட்டமான குரலில் கண் விழித்தான் அகரன். இரவு தூங்காமல் இருந்ததன் விளைவு அவனது கண்கள் இரண்டும் செக்க சிவந்திருந்தது.​

"என்னங்கம்மா..." கண்களை தேய்த்து கொண்டே கேட்டான்.​

"புவிக்கு உடம்பு கொதியா கொதிக்குது டா தம்பி, அனத்திட்டே படுத்திட்டு இருக்கா... எழவே மாட்றா..." பதட்டமாகக் கூறினார்.​

"அச்சோ நேத்து நைட்டு என்கிட்ட பேசும் போது கூட நல்லா தானே மா இருந்தாங்க. இப்ப என்னாச்சு மா..." அவசரமாக கேட்டது வேறு எவருமில்லை நம் அரவிந்த் தான்.​

அகரனை அழைத்ததுமே அவனும் விழித்து விட்டான். அண்ணனுக்கு முன் தான் எழுந்தால் தன்னை காய்கறி வாங்க மார்கெட்டிற்கு அழைத்து சென்று விடுவார் என எண்ணியவன் கண்களை இறுக மூடி படுத்திருப்பது போல் பாவ்லா காட்டினான். ஆனால் அக்னிக்கு உடம்பு முடியவில்லை என்றதும் அவனையும் அறியாமல் எழுந்து விட்டான்.​

"அதான் டா வாண்டு எனக்கும் புரியல. நைட் நல்லா தான் இருந்தா தீடிர்னு எப்படி காய்ச்சல் வந்துதுன்னு தெரியல..." இளையவனுக்கு பதில் அளித்துவிட்டு திரும்பியவர் அகரனை பார்க்க, அவன் எப்போதோ அங்கிருந்து சென்றிருந்தான்.​

"அவன் நீங்க சொன்னதுமே போயிட்டான்.நீங்க தான் என்கிட்ட பேசி டைம் வேஸ்ட் பண்ணிட்டு இருக்கீங்க.தள்ளிக்கோங்க..." போர்த்தியிருந்த போர்வையை விலக்கிவிட்டு அகரனின் அறையை நோக்கி ஓடினான் அரவிந்த்.​

' இவனை...' என்று பல்லை கடித்தவர் அகரனின் அறையை நோக்கி நடந்தார்.​

****​

இங்கு தனது அறைக்குள் நுழைந்த அகரனோ "புவி..." பதட்டமாக அழைத்து அணங்கியவளை நெருங்கினான்.​

அகரனின் குரலில் "ம்ம்..." மெல்லிய குரலில் முனகினாள். பதட்டமாக அவளது நெற்றியில் கை வைத்து பார்த்தான். கொதியாய் கொதித்தது மென்மையாளின் மேனி. தன்னால் தான் அவளுக்கு இப்படியொரு நிலை என எண்ணியவனுக்கு தன்னை நினைத்தே வெறுப்பாக இருந்தது.​

குரலை செருமிக் கொண்டே "புவி... புவி... எழு ஹாஸ்பிடல் போலாம்..." என்று மங்கையின் கன்னத்தை மெல்லத் தட்டினான்.​

"ம்ம்..." என்றவள் அவனது உள்ளங்கையில் முகம் புதைத்தாள்.​

"கண்ணை முழிச்சு பாரு டா...வா ஹாஸ்பிடல் போலாம்..." என அழைக்க அழைக்கவே அரவிந்தனும், ராஜியும் உள்ளே நுழைந்தனர்.​

"முன்னமே எழுப்பிட்டேன் ப்பா. எழ மாட்றா, அப்பா வேற வாக்கிங் போயிட்டு இன்னும் வரல. அதான் உன்னைக் கூப்பிட்டேன். சிரமம் பார்க்காமல் கார் வரைக்கும் தூக்கிட்டு போ தம்பி..." என ராஜி சொல்லவும் "அண்ணா நான் வேணா தூக்கவா..." எனக் கேட்டு அரவிந்த் முன்னால் வந்தான்.​

சட்டென திரும்பி தம்பியை பார்த்தவன் அவன் கேட்டதற்கு பதில் சொல்லாமல் மங்கையை தன் கைகளில் அள்ளிக் கொண்டான். அடுத்த சில நிமிடங்களில் ஈரோடு குமாரசாமி மருத்துவமனையில் இருந்தனர் மூவரும்.​

காய்ச்சலுக்கான மருந்து மாத்திரைகளை வாங்கி கொண்டு மீண்டும் இல்லம் திரும்ப அரை மணி நேரத்திற்கும் மேலாகியது.​

அதற்குள் கங்காவும் அகரன் வீட்டிற்கு வந்திருந்தார். "வாங்க அண்ணி..." ஹாலில் அமர்ந்திருந்த கங்காவை பார்த்ததும் வரவேற்றார் ராஜி.​

"வரேன் அண்ணி..." என்றவரின் பார்வை முழுவதும் போர்ட்டிகோவில் தான் பதிந்தது... அரவிந்துடன் வந்துக் கொண்டிருந்தாள் அவரது மகள்.​

பாவையின் கோலத்தை ஏறயிறங்க பார்த்தவர் "என்ன டிரஸ் டி இது, இதை போட்டுட்டா ஹாஸ்பிடல் வரைக்கும் போயிட்டு வந்த..." எனக் கேட்டார்.​

அகரனின் டீ ஷர்ட்டும்,சாட்ஸ்ஷும் அணிந்திருந்தாள். அவளது தொடையைத் தொட்டு செல்லும் கேசத்தை ஒற்றை கிளிப்பில் அடக்கி இருந்தாள். அவ்வளவு தான் மற்றபடி எவ்வித ஒப்பனையும் இல்லாமல் தான் மருத்துவமனை வரைக்கும் சென்று வந்திருந்தாள்.​

உண்மையாகவே அவளது தேன் நிறத்திற்கு ஒப்பனை இல்லாமலேயே அத்தனை அழகாய் இருந்தாள். காய்ச்சலில் சோர்ந்திருந்த முகம் கொஞ்சம் தெளிவாக இருந்திருந்தால் இன்னும் அவளது அழகுக் கூடி இருக்குமோ என்னவோ...​

கங்கா அவளது உடையை பற்றிக் கேட்கவும் தான் மற்ற மூவரும் அக்னியின் உடையை கவனித்தனர்.​

கணவன், மனைவி இருவரும் ஒருவருக்கொருவர் மாறி மாறி பார்த்துக் கொள்ள, அரவிந்தோ 'இது என்னோட டீ ஷர்ட்டா இல்லை இவனோடதா...' என்ற தீவிர ஆராய்ச்சியில் இருந்தான்.​

தாயின் கேள்விக்கு என்ன பதில் கூறுவது என்று தெரியாமல் அவள் முழித்த கணம் அரவிந்தையும், அக்னியையும் கடந்து உள்ளே நுழைந்தான் அகரன்.​

ஹாலில் அமர்ந்திருந்த கங்காவை பார்த்து புன்னகைப் பூத்தவன்​

"எப்படி இருக்கீங்க அத்தை..." எனக் கேட்டான்.​

இத்தனை வருடத்தில் அவனாக வந்து பேசியது இப்போது தான் என்பதால் விழிகளை விரித்து தன் ஆச்சரியத்தைக் காட்டினார். பாவம் அவருக்கு தெரியாதல்லவா வெளியில் அகரன் காட்டும் முகம் வேறு, வீட்டில் அகரன் காட்டும் முகம் வேறு என்று...​

"நல்லா இருக்கேன் தம்பி, நீங்க எப்படி இருக்கீங்க..." எனக் கேட்டார்.​

"நல்லா இருக்கேன் அத்தை, பேக்கரி பிசினஸ் எப்படி போகுது.." என்று அவன் அடுத்தடுத்த கேள்விக்கு தாவ,​

இங்கு இராஜியோ "தம்பி, அக்னியை ரூம்ல கொண்டு போயி விடுப்பா, அவளால நிக்க முடியல பாரு...' என மெல்லிய குரலில் அரவிந்திடம் கூறினார்.​

"சரிம்மா..." என்றவன் அக்னியோடு​

அகரனின் அறைக்குள் நுழைந்தான்​

என்னதான் வளைத்து வளைத்து பேசினாலும் பத்து நிமிடத்திற்கு மேல் என்ன பேசுவதென்று அவனுக்கும் தெரியவில்லை, கங்காவிற்கும் தெரியவில்லை...​

அதற்குள் ராஜி அனைவருக்கும் தேநீர், குக்கீகளை கொண்டு வந்திருந்தார். தேநீரைக் கையில் எடுத்துக் கொண்டவன்​

"சரிங்கத்தை பாருங்க..." என்றபடி எழுந்து கொண்டான்.​

"சரிங்க தம்பி..." என்று புன்னகைத்தவாறே தலையாட்டினார் கங்கா​

******​

இங்கு அகரனின் அறையில் தனது அதிமுக்கியமான சந்தேகத்தை அக்னியிடம் கேட்டுக் கொண்டிருந்தான் அரவிந்த்.​

"இந்த மாதிரி மொக்க டிரஸ்ல கூட நீங்க ஏஞ்சல் மாதிரி இருக்கீங்க மிஸ்... உங்களோட எக்ஸ்சஸ் அழகுக்கு என்ன காரணம்னு தெரிஞ்சிக்கலாமா?..." எனக் கேட்டான். அவனுக்கு பதில் சொல்லாமல் சோபையாக சிரித்தாள்.​

" எப்ப பாரு சிரிச்சு சிரிச்சு பதில் சொல்லாம டிமிக்கிக் கொடுத்தடறீங்க, இப்ப நம்ம வீட்டுல தானே இருக்கோம் பதில் சொல்லுங்க, நீங்க சொல்ற பதில வச்சு தான் என்னோட க்ரஸ் லிஸ்ட்ல இருக்கிற கேர்ள்ஸ்கெல்லாம் டிப்ஸ் கொடுக்கணும்..." எனக் கேட்டுக் கொண்டிருந்தவனின் பின்னந்தலையை தட்டினான் அகரன்.​

அவன் தட்டிய தட்டில் முன்னால் சென்று மீண்டும் பழைய நிலைக்கு திரும்பியது அரவிந்தின் சிரம்.​

"ஷ்ஷ்... எருமை, ஏண்டா அடிச்ச..." அகரனிடம் சண்டைக்கு கிளம்பினான் இளையவன்.​

தன்னுக்கு முன் நிமிர்ந்து நின்று கோபமாக கேட்டவனை ஏறயிறங்க பார்த்தவன் "எருமையை தானே அடிச்சேன்..." என்றதும் முறைத்தான் அரவிந்த்.​

அவனது முறைப்பை கண்களில் சிரிப்போடு பார்த்தவன் கையில் வைத்திருந்த தேநீரை ஒரு சிப் குடித்துவிட்டுப் படுக்கையில் அமர்ந்திருந்தவளிடம் நீட்டினான்.​

அரவிந்தின் கோபத்தை சிரிப்போடு பார்த்துக் கொண்டிருந்தவள் அகரன் தேநீரைக் குடித்துக் கொடுத்ததைக் கவனிக்காது உடனே வாங்கிப் பருகினாள்.​

கண்களை அகல விரித்து அக்னியை பார்த்தான் அரவிந்த்... அகரனோ கன்னக் கதுப்புகளை கடித்து சிரிப்பை அடக்கியப்படி அவளைப் பார்த்தான்.​

முகத்தை உர்ரென்று வைத்து "அது அவன் குடிச்சிட்டு உங்ககிட்ட குடுத்தான்..." என்றான் அரவிந்த்.​

"என்ன..." என்று விலுக்கென நிமிர்ந்தவளுக்கு புரையேறியது...​

"அடேய் ஏண்டா..." என்றவன் அவசரமாக இருமிக் கொண்டிருந்தவளின் தலையில் தட்டினான்.​

அரவிந்தோ "அண்ணா டேய், நான் போயி தண்ணி எடுத்துட்டு வரவா..." என அவசரக் குரலில் கேட்டான்.​

அவனிடம் சரியென்று தலையாட்டியவன் மெல்லிய குரலில் "என்னோட எச்சியே சாப்பிடாத மாதிரி எதுக்குடி இப்படி ஷாக் ஆகற, இப்ப பாரு எப்படி புரைப் போகுதுன்னு..."சற்று காரமாக கேட்டான்.​

அவனது பேச்சில் கண்களை அகல விரித்து ஆடவனைப் பார்த்தாள்.​

அவளின் அதிர்ந்த முகத்தை பார்த்தவனுக்கு அந்த பொய் கோபம் கூட விலகி சென்றது.​

மங்கையின் செவியோரத்தில் இதழ்கள் உரச "இப்பவே இதெல்லாம் பழகிக்க..." எனக் கூறியதும் பட்டெனக் குனிந்து கொண்டாள்.​

இதழில் மலர்ந்த சிறு புன்னகையோடு பாவையை பார்த்தவன் "இப்படி எல்லாம் வெட்கப்பட்டு டெம்ப்ட் பண்ணாதடி, எங்கேயும் விடாம இங்கேயே பிடிச்சு வைச்சுக்க போறேன்..." என்றுவிட்டு நிமிரவும் பெரியவர்கள் மூவரும் அறைக்குள் நுழையவும் சரியாக இருந்தது.​

"சரிங்க தம்பி நாங்க கிளம்பரோங்க..."அகரனிடம் கூறியவர் மகளை பார்த்தார் கங்கா.​

"போலாம்..." என்பதைப் போல் தலையாட்டியவள் எழுந்து நின்றாள்.​

' இப்படியே வரப் போறியா...' என்பதைப் போல் அவளை மேலிருந்து கீழாக பார்த்தார்.​

அதற்கு அவள் பதில் சொல்லும் முன்பே "இரண்டு பேரும் சாப்பிட்டு போலாமில்லங்கத்தை..." எனக் கேட்டான் அகரன்.​

"இன்னொரு நாள் வரமுங்க தம்பி... எழுந்ததும் இவளை கூட்டிட்டு வர வந்துட்டனுங்க. இன்னும் கடைப் பக்கம் போகவே இல்லைங்க, ஆள பார்த்தாதான் வேலையே ஆவுங்க இல்லைன்னா ஒன்னும் பண்ண மாட்டானுங்க, தப்பா எடுத்துக்காதீங்க தம்பி, இன்னொரு நாள் வந்து சாப்பிட்டு போறனுங்க..." என்றதும் சரியென்று தலையாட்டினான்.​

கங்கா முன் செல்ல அவரின் பின்னால் சென்றவள் அகரனை திரும்பி பார்த்து புன்னகை பூத்தாள்.​

முதல் முறையாக தன்னைக் கண்டு சிரிக்கும் பெண்ணையும், அவளது இதழ்களின் ஓரத்தில் மலர்ந்த சிறு புன்னகையையும் கண்களுக்குள் நிரப்பிக் கொண்டான் அகரன்.​

****​

முகம் காட்டு நீ முழு வெண்பனி…​

ஓடாதே நீ ஏன் எல்லையே…​

இதழோரமாய் சிறு புன்னகை…​

நீ காட்டடி என் முல்லையே…​

என்ற பாடல் ஒரு பக்கம் பாடிக் கொண்டிருக்க அதனை மெல்லிய குரலில் முணுமுணுத்து கொண்டே வந்தவளை மிரர் வழியே பார்த்தார் கங்கா...​

காய்ச்சலின் சோர்வையும் மீறி அவள் முகத்தில் தெரிந்த தேஜஷை பார்த்தபடி​

"ஆதி அண்ணனும், அண்ணியும் உன்னை பார்க்க வரேன்னு சொல்றாங்க டி... உன்னை இன்னொரு வீட்டுக்கு விட்டு தர மனசே இல்லையாம். நீ சரின்னு சொன்னா அடுத்த மாசத்துலயே அகரனுக்கும் உனக்கும் கல்யாணத்தை முடிச்சு வைச்சுடலாம்னு சொல்றாங்க. நான் உன்னை கேட்டுட்டு சொல்றேன்னு சொன்னேன்.. என்ன சொல்லட்டும்..." மகளின் முகத்தைப் பார்த்தபடியே கேட்டார்..​

"அடுத்த மாசத்துலயே அகரனுக்கும் உனக்கும் கல்யாணத்தை முடிச்சு வைச்சுடலாம்னு சொல்றாங்க..' என்ற கங்காவின் வார்த்தையில்​

இதுவரை இருந்த மாயாத்திரை மொத்தமாய் அவளை விட்டு விலகி நின்றது...​

அவளது அமைதியில் "சரி, வாங்கன்னு சொல்லிடவா..." எனக் கேட்டார்.. முகத்தில் எவ்வித உணர்வுகளையும் காட்டாது தாயை பார்த்தாள்.​

'தெரியாம தான் கேட்கிறேன் உன் மூஞ்சியை கண்ணாடியில் பார்த்து இருக்கியா? மனுசன் காலையில எழுந்ததும் மங்களகரமான பொண்ணு முகத்துல முழிக்க நினைப்பானா? இல்லை உன்ன மாதிரி ஒரு குட்டி சாத்தன் மூஞ்சில முழிக்க நினைப்பானா?...' இப்போதும் அவன் பேசியது ரீங்காரம் போல் காதில் கேட்டுக்கொண்டே இருந்தது.​

" இல்லம்மா வேண்டாம்.எனக்கு விருப்பம் இல்லை..." என்றவள் கண்களை இறுக மூடி அமர்ந்து கொண்டாள்.​

மூடிய விழிக்களுக்குள் அகரனின் அன்பான,அக்கறையான, ஆதரவான, ஆறுதலான அனைத்து செயல்களும் விழுந்தது...​

காயப்படுத்தி விட்டான் என்று விலக்கி வைக்கவும் முடியவில்லை, காதலாக பேசுகிறான் என்று அவனுடன் இணையவும் முடியவில்லை... ஏதோ ஒன்று அவனை ஏற்றுக் கொள்ள தடுத்தது...​

மலரட்டும் சிறு புன்னகை​

கமெண்ட் பண்ணுங்க share பண்ணுங்க... எதிர்பார்த்து காத்திருக்கிறேன்​

 

Jothiliya

Member
அருமை 👌👌👌👌👌, அகரன்னை ஒரு மனம் விரும்புது அவன் வேண்டாம் என்று நினைக்கவும் செய்து அக்கினி மனம் 🌺🌺🌺
 

Priyakutty

Active member
கல்யாணம்னு சொல்லும்போதுதான் அவர் பேச்சு ஞாபகம் வருதா அக்னி... 🙄

அவங்களுக்கு அவரை பிடிச்சிருக்கு. ஆனா அவங்கள மட்டமா பேசுறாரு அதான் விலகி போக பாக்குறாங்க.

அவருக்கும் அவங்கள பிடிச்சிருக்கு. ஆனா ஈகோ... ஒத்துக்க முடியாம சீன் போடுறார்...
 
கல்யாணம்னு சொல்லும்போதுதான் அவர் பேச்சு ஞாபகம் வருதா அக்னி... 🙄

அவங்களுக்கு அவரை பிடிச்சிருக்கு. ஆனா அவங்கள மட்டமா பேசுறாரு அதான் விலகி போக பாக்குறாங்க.

அவருக்கும் அவங்கள பிடிச்சிருக்கு. ஆனா ஈகோ... ஒத்துக்க முடியாம சீன் போடுறார்...
Ivlooo neram illama ippotha avan pesinathu niyabagam varuthama agni
கொஞ்சம் நஞ்ச பேச்சா பேசினான் அவன்... அதான் கல்யாணம் சொன்னது மொத்தமா நினைவு வந்துருச்சு.. அவனுக்கே ஈகோ இருக்கு இவளுக்கு இருந்தா தப்பில்லையா
 
அருமை 👌👌👌👌👌, அகரன்னை ஒரு மனம் விரும்புது அவன் வேண்டாம் என்று நினைக்கவும் செய்து அக்கினி மனம் 🌺🌺🌺
நடுநிலை கா.. அவன் பேசினதை மறுக்கவே முடியாதே...
 
Top