எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கள்வனின் கனவுகள்

santhinagaraj

Well-known member
கள்வனின் கனவுகள்

விமர்சனம்

ஒரு திருடனோட கனவுகள் பற்றிய கதை இது.

அனந்தஜித் திருடன் கதையோட நாயகன்.

ஆனந்தஜித் திடீர்னு ஒரு ஹாஸ்பிடலுக்கு முகத்துல காயங்களோட வர்றான் சரி ஏதோ திருடிட்டு அடி வாங்கி காயத்தோட ட்ரீட்மென்ட் வந்து இருக்கான்னு பார்த்தா அதுதான் இல்ல. அங்கிருந்த டாக்டரும் கண் தொந்தரவும் என்னாச்சு தம்பி அப்படினு கேட்டா இவன் என்ன பிரச்சனை என்று சொல்லாமல் கம்பவுண்டர் அடித்து சாய்த்து தலையில் துப்பாக்கி வைத்து என் கதையை கேளுங்க நான் ஒன்னும் பண்ண மாட்டேன்னு சொல்லி பர்ஸில் இருந்து 30 ஆயிரம் ரூபாய் எடுத்து டேபிளில் வைக்க.

கம்பவுண்டர் ஒரு கதை கேட்பதற்கு 30 ஆயிரம் ரூபாயான்னு சொல்லி எல்லாரும் வெளில எடுத்து அவனோட கதையை கேட்டு ஆரம்பிக்கிறாங்க.

ஆனந்த் டாக்டரை பார்த்து இப்போ ஒரு அடி நீங்க பின்னாடி போனா உங்க உயிர் போயிடும் சொல்லிய உடனே மேல இருந்து ஃபேன் கீழே விழுகிறது. அதை பார்த்து டாக்டரும் கம்பவுண்டரும் ஆச்சரியமாக அவனைப் பார்க்கிறாங்க.

அனந்துக்கு வரும் கனவுகள் அப்படியே நடக்கிறது

அனந்தோட அப்பா அம்மா இரண்டு பேரும் சின்ன வயசுலயே ஒரு ஆக்சன்ல இறந்துடுறாங்க. அந்த ஆக்சிடென்ட் பத்தி அவனுக்கு முன்னாடியே ஒரு கனவு வந்திருக்கு ஆனா அந்த வயசுல அவனுக்கு அது பத்தி என்னன்னு தெரியல.

அந்த ஆக்சிடெண்ட் இலிருந்து தப்பி வந்த ஆனந்த யசோதாவும் விஷ்ணுவும் காப்பாற்றி அவங்க கூட வச்சு வளர்க்கறாங்க.

ஆனந்த் இப்படி விஷ்ணு யசோதா கூட வளந்துட்டு இருக்க விஷ்ணுவுக்கு வேணி மீது காதல் வருகிறது. அந்த காதலை வேணி மறுக்கிறாள்.
ஆனந்துக்கும் திருட போற இடத்துல சுவாதி என்ற பொண்ணு மேல காதல் வருகிறது?

இன்னொரு பக்கம் ஒரு புது வைரஸ் உருவாகி புதுசா ஒரு நோயை ஊருக்குள்ள பரப்பி பெரும் பரபரப்பை ஏற்படுத்துகிறது

அனந்தின் கனவுகள் அவனுக்கு என்ன விதமான தாக்கத்தை கொடுக்கிறது?
விஷ்ணு ஆனந்தின் காதல் என்ன ஆகிறது? ஊருக்குள் பரபரப்பு ஏற்படுத்திய புது நோய்க்கு என்ன தீர்வு என்ற கேள்விகளோடு கதை நகர்கிறது

ஆனந்துக்கு விஷ்ணு,யசோதா ஸ்ருதி, வருண் நிறைய பேர் இருந்தும் அவன் ஏன் டாக்டரிடம் வந்து கதை சொல்லிட்டு இருக்கான்னு சொல்லவே இல்ல.

கதையில நிறைய குழப்பங்கள் இருந்தது.இதுல திடீர்னு ஜாம்பிகள் வேற கிளம்பி வந்துட்டு பரபரப்போடவே கதையை முடித்துவிட்டாங்க ரைட்டர்.

இன்னும் கொஞ்சம் தெளிவா கொடுத்திருந்தா கதை ரொம்ப நல்லா இருந்திருக்கும் நிறைய எழுத்து பிழைகள் இருந்தது அதை எல்லாம் கொஞ்சம் சரி பண்ணிக்கோங்க

வாழ்த்துக்கள் 💐💐
 

NNK-80

Moderator
பாகம் இரண்டின் தொடர்தலுக்காக சில அத்தியாயங்களை குறைக்க வேண்டியதாகிற்று, அதில்தான் சற்று விளக்கங்கள் இருந்தது.

இதில் மேலோட்டமாகவே அதை விமர்சித்து இருப்பேன். உதாரணமாக யசோதாவிற்கு உண்மை தெரிந்ததால் அனந்த் அவளிடம் அவனது கதையை சொல்லவில்லை அதுபோல்.

ஆனால் உங்களது கருத்தை ஏற்றுக் கொள்கிறேன், எழுத்துப் பிழைகளை இனி வரும் காலங்களில் சரி செய்து கொள்கிறேன்.

நன்றி உங்களது விமர்சனத்திற்கு 😍🥰
 
Top