எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வெய்யோனை அயறிய வெண்பனியே

santhinagaraj

Well-known member
வெய்யோனை அயறிய வெண்பனியே

விமர்சனம்

அழகான கிராமத்து காதல் கலந்த குடும்ப கதை.

நாயகன் கனியரசன் நாயகி இதயராணி ரெண்டு பேருமே சண்டக்கோழி ஆரம்பமே ரெண்டு பேரோட மொதல்ல தான் ஆரம்பிக்குது.

இதயாவோட அண்ணன்கள் இருவருக்கும் கனியோட இருஅக்காக்களையும் கல்யாணம் பண்ணி கொடுத்திருக்க அதன் மூலம் வரும் உறவான முறை பயன் முறை பொண்ணு என்ற முறையில் இருவருக்கும் வரும் ஈர்ப்பு காதலாகி இரு குடும்பத்து சம்மதத்துடன் நிச்சயம் வரை வரும் கல்யாணம் குடும்பத்தில் ஏற்படும் சிறு பிரச்சனையால் இரு குடும்பத்துக்கும் மனக்கஷ்டம் ஏற்பட்டு இதயா கனி ரெண்டு பேரோட கல்யாணம் நிச்சயத்தோட அடுத்த கட்டத்தை நோக்கி நகராமல் நிற்கிறது.

அப்படி என்ன பிரச்சனை வந்தது? கல்யாணம் ஏன் நிச்சயதோடு நிற்கிறது? அந்த பிரச்சனையை எவ்வாறு சரி செய்து இதயா கனி ரெண்டு பேரும் வாழ்க்கையில் இணைகிறார்கள் என்பதை கதையின் போக்கில் சுவாரஸ்யமாக கொண்டு போன விதம் சூப்பர் 👌👌👌

இதயா கனி ரெண்டு பேரும் ராங்கி, சிலுப்பி,மல்லுவேட்டி மைனர்ன்னு செல்ல பேர் வச்சு அடிச்சுகிட்டு முறைச்சிகிட்டு திரிஞ்சாலும் அவங்களுக்குள்ள இருக்கும் புரிதலான காதல் அருமை 👏👏

இதயா கலங்கி நிற்கும்போது கனி வருவதும் கனி கலங்கி நிற்கும் போது இதயா வருவதும் என அவர்களுக்கான புரிதலையும் காதலையும் ரொம்ப அருமையா எடுத்துச் சொல்லி இருக்காங்க.👌👌

ராஜி பேசின பேச்சுக்கு அவளை யாராவது அடிக்க மாட்டாங்களான்னு நினைச்சுக்கிட்டு இருக்கும்போது இதயா கொடுக்கும் அந்த ஒரு அடி செம்மையா இருந்தது 👏👏

விசேசத்துக்கு வந்தமா விருந்து சாப்டு போனமான்னு இல்லாம நாலு பெருசுங்க சேர்ந்து கொளுத்தி போடுற விஷயம். ஒரு குடும்பத்துக்குள்ள எவ்வளவு பெரிய தாக்கத்தை உண்டு பண்ணும்னு ரொம்ப அருமையா சொல்லி இருக்காங்க ரைட்டர் 👏👏

இதயா கனி ரெண்டு பேரும் ஆரம்பம் முதல் இறுதி வரை முட்டிக்கிட்டே இருந்தாலும் அவங்க காதல் சண்டை ரொம்ப அழகா இருந்தது 😍😍😍

மதுரை பாஷையில் ரொம்ப அழகான குடும்ப கதை ரொம்ப நிறைவான முடிவு சூப்பரா இருந்தது👌👌
வாழ்த்துக்கள் 💐💐

( அங்கங்க கொஞ்சம் எழுத்து பிழைகள் இருக்கு அதை கொஞ்சம் திருத்திக்கோங்க)
 
Top