எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதயங்கள் ஓன்றாகுமோ - கதை திரி

1

ப்ளீஸ் என்னை விட்டுட்டு போகாத அர்ஜூ நீ இல்லாம என்னால வாழ முடியாது என்று கையில் பேக்குடன் செல்பவனை வழிமறித்தபடி கெஞ்சினாள்.

வழி விடு வேதா..நமக்குள்ள இனி எதுவும் இல்லை..லெட்ஸ் பிரேக் அப் என இலகுவாக கூறினான்.

நோ..நீ அப்படி சொல்லக்கூடாது.. நான் இனிமேல் உன்னை கல்யாணம் பண்ணிக்க சொல்லி கட்டாயப்படுத்த மாட்டேன்.

உனக்கு பிடிக்காதது போல டிரஸ் பண்ண மாட்டேன். இனி யார் கூடவும் போன்ல பேச மாட்டேன் சாட் பண்ண மாட்டேன் உன் மேல ப்ராமிஸ் இல்லல்ல என் மேல ப்ரோமிஸ் என்ன விட்டுட்டு போயிடாத எனக்கு ஒரு சான்ஸ் கொடு என்று அவனது கையில் இருந்த பேக்கை பிடிங்கினாள் .

சுலபமாக அவளது கையை தட்டிவிட்டவன் ப்ளீஸ் வேதா என்னை என் பாதையில் போக விடு கடுமையான சொற்களை பேச வைக்காதே.

அர்ஜூ..நீ இல்லனா செத்துப் போயிடுவேன்டா கைகளை பிடித்துக்கொண்டு கதறினாள்.

வெறுமையாக அவளைப் பார்த்தவன் அஸ் யூ விஷ்..என்று சொல்லவும்

நொடியில் அவனது கைகளை விட்டவள் அசையாமல் அவனையே பார்த்தான்.அவளுக்கு பேரதிர்ச்சி போலும் வாய் பேச முடியவில்லை,நாக்கு ஈரப்பதத்தை இழந்து மேலண்ணத்தில் ஒட்டிக்கொண்டது.

எவ்வளவோ முயன்றும் கூட எச்சில் கூட சுரக்க வில்லை.

கண்களில் நீர் வற்றி விட்டதைப் போல இதுவரை வழிந்து கொண்டிருந்த கண்ணீர் கூட வேலை நிறுத்தம் செய்தது.

உணர்ச்சிகளற்று அவனைப் பார்த்தவள் அப்படியே அசையாமல் நிற்க ஒரு முறை அவளைப் பார்த்து தலையை உலுக்கிக் கொண்டவன் எதுவுமே கூறாமல் அவளை விட்டு நகர்ந்து வாசலுக்கு சென்றான்.

சில நொடிகளில் கதவு அறைந்து சாத்தப்படும் சத்தம் அவள் காதுகளில் ஒலித்த பிறகுதான் அவன் சென்ற உண்மை உரைத்தது.

தொய்ந்து போய் தரையில் மடிந்து அமர்ந்தவளுக்கு இரட்டை படுக்கையறை கொண்ட ப்ளாட் பயத்தைக்கொடுத்தது.
முகத்தை மூடிக்கொண்டு குலுக்கி குலுக்கி அழுதாள்..இனி எங்கே செல்வது எப்படி வாழ்வது அவளுள் ஆயிரமாயிரம் கேள்விகள் வரிசை கட்டி நின்றது.

அவன் ஏற்கனவே அவளுடன் உறவு கொள்வதற்கு முன்பு கேட்டது தான்.

இந்த வாழ்க்கையில் சமபங்கு உனக்கும் இருக்கிறது நாளை ஏதாவது ஒரு கட்டத்தில் பிரிய நேர்ந்தால் இதைக் காரணம் காட்டி என்னை கார்னர் செய்யக்கூடாது.

அப்பொழுதெல்லாம் அவனுடன் நேரத்தை செலவிட்டால் போதும் என்றிருந்ததால் தலையை மட்டும் ஆட்டினாள் பின்விளைவுகள் பற்றி சிறிதும் கவலைப்படவில்லை இன்று எல்லாமே பூதாகரமாக கண்முன் நின்றது.

அவளும் அவனுமாக கடந்த இரண்டு ஆண்டுகளாக கூடிக் களித்த வீடு இது இன்று வெறுமையை பறைசாற்றியது.

தனியார் கல்லூரியில் கடைசி ஆண்டில் படித்துக் கொண்டிருப்பவள் வேதவல்லி அர்ஜூன் தனியார் கணினி நிறுவனத்தில் நல்ல சம்பளத்தில் வேலை பார்த்துக் கொண்டிருப்பவன்.

படிப்பதற்காக சென்னை வந்தவள் ஹாஸ்டல் வாசம்..ஒரு முறை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் அர்ஜூனை பார்த்து மயங்கியவள் தானாகவே அவன் பின் சுற்றத்தொடங்கினாள்.

ஓரு கட்டத்தில் இவனுக்கும் அவனைப் பிடித்து விட இருவருக்கும் தனியாக வீட்டை வாடகைக்கு எடுத்து திருமணம் தாண்டிய உறவில் இருந்தார்கள்.

அதைத்தான் இப்பொழுது அர்ஜுன் முறித்துக் கொண்டு செல்கிறான்.

ஆரம்பத்தில் அவளுடன் படித்த தோழி யாமினி அவளை கண்டித்து இருக்கிறாள்.

ஒழுங்கா படிக்கிற வேலையை மட்டும் பாரு ஊரு விட்டு ஊரு வந்து ஹாஸ்டல்ல தங்கி படிச்சுட்டு இருக்கேன்னு உங்க அம்மா அப்பா நினைச்சுட்டு இருக்காங்க நீ இப்படி எவனோ ஒருத்தனோட தங்கியிப்பது கொஞ்சம் கூட சரியில்லை.

அப்பொழுதெல்லாம் அவளின் உபதேசங்களை வேதா காதில் போட்டுக்கொண்டதே கிடையாது.

உனக்கு பொறாமை ஆர்ஜூ மாதிரி பாய்பிரண்ட் உனக்கு இல்லன்னு என்று மட்டம் தட்டுவதாக நினைத்துக்கொண்டாள்.

இன்று தான் அதன் பிரதிபலன் தெரிகிறது.. இவ்வளவு நாட்கள் வீட்டின் வாடகை முதல் அவளின் தேவைகள் வரை பார்த்து பார்த்து செய்தான் இனி தனக்கான தேவையை அவளே தேடிக்கொள்ள வேண்டும்.

இரண்டு ஆண்டுகள் அவளை மகாராணி போல பார்த்துக்கொண்டவன் இன்று நிமிடத்தில் தூக்கி வீசிவிட்டாள்.

எதைப்பற்றியும் யோசிக்க முடியவில்லை. ஒரு வாரம் முன்பே ஒரு கேண்டில் லைட் டின்னர் ஏற்பாடு செய்தவன் வேதாவிற்கு பிடித்த உணவுகளை மட்டுமே ஆர்டர் செய்தான்.

அவள் பொறுமையாக உண்டு முடியும் வரை அமைதி காத்து விட்டு அதன் பிறகு தான் தனக்கு இந்த உறவில் தற்போதைக்கு நாட்டம் இல்லை என்றும் நாம் இருவரும் பரஸ்பரம் பிரிந்து விடலாம் என இடியை அவளது நெஞ்சில் இறக்கினான்.

அவன் ஏதோ விளையாட்டாக பேசுகிறான் என்றுதான் முதலில் வேதா நினைத்தாள் அதன் பிறகு தான் அவனின் தீவிரம் புரிந்தது.

முதலில் அவனது வேலையை பெங்களூருக்கு மாற்றினான் அடுத்ததாக அவன் உபயோகிக்கும் கார் மற்றும் இருசக்கர வாகனத்தை நண்பர்கள் வந்து எடுத்துச்சென்றனர்.

ஓருவாரம் அழுதே கரைந்தாள் தினமும் இரவில் அவனுக்காக காத்திருந்தாள்.ஆனால் அர்ஜூன் மற்றொரு அறையில் புகுந்து கொண்டான்..ஏன் என்றும் கூட இவளை வந்து பார்க்கவில்லை. எப்பொழுது எழுந்து சமைப்பான் என்றே தெரியவில்லை காலையில் இவள் எழும் பொழுது டேபிள் மீது பிரேக்ஃபாஸ்ட் மட்டும் லஞ்ச் ரெடியாக இருக்கும்.

இரவு வேளையில் நெடுநேரம் வரமாட்டான் இவளுக்கு மட்டும் எட்டு மணி போல ஆன்லைனில் ஆர்டர் செய்யப்பட்ட உணவு தேடி வரும்..எல்லாமே அவள் விரும்பி உண்பது.

அவனது கரிசனம் அவளது கண்களை
கரிக்கும் ஒருவாய் கூட உண்ணமுடியாது..இரவில் வருபவன் உணவு தொடப்படாமல் இருப்பதை கண்டு விட்டு மறுநாள் குறிப்பெழுதி வைத்து விட்டு செல்வான்.

பட்டினி கிடப்பதால் எதுவும் மாறாது என்று..கசக்கி குப்பையில் எறிபவள் மீண்டும் அழ ஆரம்பித்து விடுவாள்.

என்ன செய்தேன்,ஏன் விளங்குகிறான் என தேடித்தேடி சலித்து விட்டாள்.

விளையாட்டாக ஒருமுறை அவர்களின் உறவைப்பற்றி கொச்சையாக பேசியிருக்கிறாள்.. ஒருவேளை அதற்காகத்தான் இந்த பிரிவா..?

இல்லை அடிக்கடி இவள் அணியும் ஆடையை விமர்சனம் செய்வான் இவள் பதிலுக்கு சண்டையிடுவாள் அதனாலா..?

இல்லை திருமண வாழ்க்கை பற்றி சமீபகாலமாக அதிகம் பேசினாள்..அதனாலா..?அதற்கு அவளிடம் வலுவான காரணம் இருக்கிறதே.

இப்பொழுது விட்டுச் செல்லப் போகிறான் எனத்தெரியவும்.
எதுவும் வேண்டாம் நீ மட்டும் போதும் என தனியாக பேசி புலம்பினாள்.

இதோ அவன் கொடுத்த காலக்கெடு முடிந்துவிட்டது.காலையில் அவள் எழும்வரை டைனிங் ஹாலில் அமர்ந்திருந்தவன் இவளின் ப்ரேக் பாஸ்ட்டை கையில் திணிந்து முதலில் சாப்பிடு என்றான்.

மலங்க மலங்க விழித்தவளை
சீக்கிரம் எனக்கு நிறையா வேலையிருக்கு என்றான்.

கண்களில் நீருடன் அர்ஜூ.

ஷ்ஷ்..பேசாம சாப்பிடு என அவளது கையிலிருந்து வாங்கியவன் அவளுக்கு ஊட்டத் தொடங்கினான்.

இனி தனக்கு இதுபோல் சலுகைகள் கிடைக்காது.. நினைக்கும் பொழுதே மீண்டும் கண்கள் குளம் கட்டியது.

சலிக்காமல் ஒரு கையால் ஊட்டிவிட்டவன் மறுகையால் கண்ணீரை துடைத்தும் விட்டான்.

முகத்தில் துளி வேதனை கிடையாது.. எப்படி முடிகிறது இவனால்‌.

உணர்ச்சி துடைத்த குரலில் அவளெதிரில் அமர்ந்தவன்
உன் படிப்பு முடியற வரைக்கும் தாராளமா இங்க தங்கிக்கலாம் வாடகை அட்வான்ஸ் எல்லாமே அதிகமாவே ஹவுஸ் ஓனர் கிட்ட இருக்கு அக்ரிமெண்ட் பேப்பர் உள்ள என் கபோர்ட்ல இருக்கு தகவலாக இதைச்சொன்னவன்.

அர்ஜூ என அழப்போனவளை வேதா என அழுத்திக் சொல்லவும் அடங்கினாள்.

நாம ஒரே வீட்டில் சேர்ந்து வாழலாம்னு முடிவு செஞ்சப்போ என்ன பேசிக்கிட்டோம் ஞாபகம் இருக்கா இல்ல ஞாபகப்படுத்தணுமா என்று கேட்கவும் மௌனமாக ஞாபகம் இருக்கிறது என்பது போல தலையசைத்தான்.

அன்னைக்கே நான் தெளிவா சொன்னேன் இது சரி வருமான்னு பலமுறை யோசிச்சிக்கோன்னு..நீ என் கண்டிஷன் எல்லாத்துக்கும் சம்மதித்தாய்.. அதான் நானும் என் லீவ் இன் வாழ்க்கையை தொடங்கினேன்.

விலகி போகணும் யார் முதலில் முடிவு எடுத்தாலும் மற்றொருவர் சந்தோஷமாக அனுப்பி வைக்க வேண்டும் என்று சொன்னதற்கும் சரி என்றாய் இப்பொழுது பிடிவாதமா போகாதேன்னு சொன்னா எப்படி..?

அதே போல உறவுக்குள்ள வரச்சொல்லி நான் உன்னை கட்டாயப்படுத்தவில்லை நீ நெருங்கி வந்ததால நானும் விலகிப்போகவில்லை.

இப்போ போகனும்னு தோணுது எனக்கு என் கேரியர் முக்கியம் இங்க உக்காந்துகிட்டு உனக்கு தினமும் சேவகம் பண்ண முடியாது.

இனி என் வேலைகளை நானே செய்துக்கறேன் அர்ஜூ.

ம்ப்ச் வேதா உனக்கு எப்படி புரிய வைக்கிறது? உனக்கு தனியா ஒரு லைஃப் இருக்கு எனக்கு தனியா ஒரு லைஃப் இருக்கு நாம ரெண்டு பேரும் ஒன்னு சேர்ந்துக்கிட்டு நம்மளோட பர்சனல் லைஃப்பை கெடுத்துக்கிட்டு இருக்கோம் புரியுதா.

நீ இன்னும் படிப்பு முடிக்கல முதல்ல படிப்பை முடி ஒரு ஜாப் தேடிக்கோ சொந்த கால நில்லு அதுக்கப்புறம் யோசி என்று எங்கோ பார்த்துக் கொண்டு கூறினான்.

ஏன் இவ்ளோ நாளா உனக்கு தெரியலையா நான் படிக்கணும் ஜாப் போகனும்னு நறுக்கென கேட்டாள்.

இனி உன்கிட்ட பேசறது டைம் வேஸ்ட் எனர்ஜி வேஸ்ட் எனிவே குட் பை டேக் கேர் என்று படி அறைக்குள் சென்று பேக்கை எடுத்துக் கொண்டு வெளியே வந்தவன் நான் உன்கிட்ட சொன்னதெல்லாம் ஞாபகம் இருக்குல்ல நீ எவ்வளவு நாள் வேணாலும் இங்கே தங்கிக்கலாம்.

நோ வொரிஸ் அபௌட் தட் எப்போவும் என்னை டிஸ்டர்ப் பண்ணாத, நானும் உன்னை தொல்லை செய்ய மாட்டேன் நம்பர் மாற்றக்கூடாதுன்னு பார்க்கிறேன் போன் நம்பர் மாற்ற வைத்து விடாதே.. இது என்னோட சின்ன ரெக்வெஸ்ட் என்று கிளம்பியவனை எவ்வளவோ கெஞ்சி தடுத்துப் பார்த்தாள்.

பலனில்லை .. அவர்களுடைய இரண்டு வருட திருமணம் தாண்டிய உறவை முறித்துக் கொண்டு கிளம்பிவிட்டான்.

இவள் தனிமையில் உட்கார்ந்து வெடித்து அழுது கொண்டிருக்கிறாள்.அவனைப் போலவே இவளும் எல்லாவற்றையும் டேக் இட் ஈசியாக எடுத்திருந்தாள் இந்த அளவிற்கு அவனது பிரிவு வலித்திருந்திருக்காது.

இரண்டு நாட்கள் எதுவுமே உண்ணவில்லை,உறங்கவில்லை அழுதழுது முகம் முழுவதும் வீங்கிப் போய் பார்க்கவே பரிதாபமாக இருந்தாள்.

அப்பொழுது யாமினியிடம் இருந்து அழைப்பு வந்திருந்தது, வேதா என்ன ஆச்சு ரெண்டு நாளா காலேஜ் வரல ஆன்லைன் வரல, ஃபோன் கூடப்பண்ணல எனிதிங சீரியஸ்..?
பெரிதாக வேதாவிற்கு என்ன இருந்து விடப் போகிறது என்று தான் யாமினி கேட்டது.

ஆனால் எதிர் முனையில் இருந்த வேதா கதிரி அழுத்தப்படி யாமி ..யாமி..னி என அவள் பெயரை மட்டும் கூறிக்கொண்டு கேவிகேவி அழுதாள் .

விஷயத்தில் தீவிரத்தை புரிந்து கொண்டு யாமினி ரிலாக்ஸ் வேதா..ஜஸ்ட் ரிலாக்ஸ் எதுக்கு அழற எதா இருந்தாலும் பாத்துக்கலாம் என்று ஆறுதல் கூறினாள்.

பிறகு என்ன ஆச்சி என்று கேட்க.. அர்ஜூன் என்னை விட்டிட்டு போயிட்டான் என்று சொல்லும் பொழுதே சுயநினைவு இல்லாமல் கீழே விழுந்தாள்.


ரண்டு நாள் பட்டினி, தூக்கமின்மை,அழுததினால் உண்டான தலைவலி,உடல் சோர்வு எல்லாமும் அவளை உடனடி மயக்கத்திற்கு ஆழ்த்தியது.
 
2


திடீரென்று‌ வேதாவின் சத்தம் தடைபடவும் யாமினிக்கு பயம் தொற்றிக் கொண்டது.


வேதாவை நேரில் பார்த்தால் தான் நிம்மதி…உடனே அவளின் இருப்பிடம் சென்றுவிட்டாள்.


கடந்த இரண்டு ஆண்டுகளில் ஒரு முறை கூட யாமினி வேதாவின் இருப்பிடம் சென்றதில்லை அங்கே அர்ஜுன் இருக்கிறான் என்பதாலேயே அவளுக்கு அங்கு செல்ல பிடிக்காது எவ்வளவோ முறை வேதா தோழியை அழைத்திருக்கிறாள்.


அர்ஜுன் வருவதற்குள் திருப்பி விடலாம் என்று கூட கூறுவாள் ஆனால் யாமினிக்கு அது ஒரு மாதிரியான சங்கடத்தை கொடுக்க.


இங்க பாரு இனிமே என்னோட நட்பு வேணும்னு நினைச்சா உன் வீட்டுக்கு கூப்பிடற வேலையை வச்சுக்காத என்று முகத்தில் அடித்தது போல் கூறியவள் தான் இன்று வேதாவிற்கு ஏதோ ஒன்று சரியில்லை என்று தோன்றவும் அவளுடைய அனைத்து கட்டுப்பாடுகளையும் உடைத்து விட்டு வேதா குடியிருந்த அப்பார்ட்மெண்டுக்கு சென்றாள்.


வாசலுக்கு சென்று காலிங் பெல் அடித்தவள் பதில் இல்லாததைக் கண்டு கதவை தட்டினாள்.


அப்படியும் சத்தம் இல்லாததால் சந்தேகப்பட்டு கதவின் கைப்பிடியை திருகிப் பார்க்க அது திறந்தது.


வீட்டை கூட பூட்டாம உள்ள என்ன பண்ணறா..? என உள்ளே எட்டிப் பார்த்தாள்.


உள்ளே உணர்வற்று மயங்கிய நிலையில் வேதாவைக் கண்டதும்.. பதட்டத்துடன் அய்யோ வேதா..என வேகமாக ஓடியவள் முகத்தில் தண்ணீர் தெளித்து கன்னங்களை தட்டிப் பார்த்தாள்.


கடினப்பட்டு கண்களை திறந்தவள்..யாமி..அர்ஜூ என அழ ஆரம்பித்தாள்.


ஷ்ஷ்..அர்ஜூ,அர்ஜூ…அவனை தவிர்த்து உனக்கு வேற எதுவும் தெரியாதா..?என அதட்டியவள் சாப்பிட்டியா..?


தலைகுனிந்து இல்லை என்பது போல் தலையசைக்கவும் உன்னை வச்சுக்கிட்டு என்ன பண்றது முதல்ல எழுந்து சோபாவுல உட்காரு என மீண்டும் ஒரு அதட்டல் போட்டுவிட்டு பிரிட்ஜை திறந்து என்ன இருக்கிறது என பார்த்து துரித உணவை தயாரித்து வேதாவின் கையில் திணைத்து சாப்பிடு..என மீண்டும் ஒரு அதட்டல்.


அது சற்று வேலை செய்ய அழுகையை கட்டுப்படுத்திக் கொண்டு சாப்பிட்டு முடித்தாள்,கையோடு ஒரு டம்ளர் ஜூசை திணித்தவள் இதையும் மீதிவைக்காம குடி என்று அதே தோரணையில் கூற யாமினிக்கு கட்டுப்பட்டு குடித்து முடித்தாள்.


பசி அடங்கியது தெளிவும் பிறந்தது.அழுகை கட்டுக்குள் இருந்தாலும் சோகம் அப்படியே முகத்தில் தங்கி விட்டது.


வேதா தெளிந்த பிறகு தான் யாமினி வீட்டை சுற்றிப் பார்த்தாள்..ம்ம் நைஸ்‌ ஹவுஸ்.. இந்த வீட்டை பார்த்த பிறகு ஹாஸ்டல் உனக்கு எப்படி பிடிக்கும் என்று கேலி போல கூறினாலும் அதில் நிரம்பவே வருத்தம் இருந்தது.


ஆடம்பரத்துக்கு ஆசைப்பட்டு ஒருவனுடன் இரண்டு வருடங்கள் திருமணம் தாண்டிய உறவில் இருந்து விட்டு இப்பொழுது கதறுவானேன்.


யாமி நீ என்னை தப்பா புரிஞ்சுகிட்ட இங்க இருக்கிற சௌகரியங்களை பார்த்து தான் நான் அர்ஜுனோட ரிலேசன்ல‌ இருந்தேன்னு நினைச்சியா அது இல்லை யாமி எனக்கு அர்ஜுனை ரொம்ப புடிக்கும் ,அவனோணவே எப்போவும் இருக்கனும்னு ஆசைப்பட்டேன்.


ஐ லவ் ஹிம்..பட் அவன் தான் என மீண்டும் முகத்தை மூடிக்கொண்டு அழ‌ ஆரம்பித்தாள்.


அய்யோ வேதா..!நீ இப்படியே அழுதுட்டு இருந்தா நான் போயிடுவேன் எல்லாத்துக்கும் ஒரு லிமிட் இருக்கு அழுது என்னை இரிடேட் பண்ணாத..என்றவள் சற்று நேர அமைதிக்கு பிறகு


சரி இப்போ சொல்லு ரெண்டு பேருக்குள்ள என்ன ஆச்சு..?ஏன் தீடிர்னு பிரேக் அப்,?


நான் திருமணம் பத்தி பேசினேன்.


ஏற்கனவே எல்லாம் பேசிட்டு தானே இதுபோல என பற்களை கடித்தவள் அதற்கு மேல் பேசவில்லை.


ம்ம்.. எனத் தலையசைத்தவள் ஏற்கனவே அர்ஜுனன் ஸ்ட்ரீட்டா சொல்லியிருந்தான் .


என்னைக்குமே கல்யாணம் பற்றி பேசக்கூடாது.. உனக்கு விருப்பம் இருந்தா மட்டும் என்னோட வந்து ஸ்டே பண்ணு அப்படி இல்லன்னா இப்பவே சாரி நாட் இன்ரெஸ்ட்னு கிளம்பிக்கோன்னு சொன்னான்.


நான் தான் பிடிவாதமா ஒத்துக்கிட்டேன் அவனை அவ்ளோ லவ் பண்ணினேன் எப்படியாவது அவன் மனசை மாத்திடலாம்னு நினைத்தேன்.


புரியுது வேதா அவனை பார்த்த..உடனே பிடிச்சு போச்சு ..உன்னை அறியாமல் அவனை லவ் பண்ணிட்ட.. ஆனா அவன் உன் லவ்வை பாக்கல..ஜஸ்ட் ஒரு பொண்ண பாத்தான்.


அவனோட பிஸிக்கல் நீட்ஸ்க்கு நீ தேவைப்பட்ட உன்னை அப்ரோச் பண்ணினான் நீ ஓகே சொல்லிட்ட.


ஆனா ஒரு விஷயத்துல தப்பு பண்ணிட்டேன் அவன் கிட்ட உன் லவ்வை சொல்லியிருக்கணும்,அதை புரியவும் வச்சிருக்கணும் நீ அப்படியே விட்டது தான் தப்பா போச்சு.


சரி பரவால்ல விடு இப்போ ஏன் இவ்வளவு அவசரமா கல்யாணத்தை பத்தி பேசின.. உனக்கு இன்னும் கடைசி செமஸ்டர் முடியல எக்ஸாம் முடிஞ்சதுக்கப்புறம் சொல்லியிருக்கலாம்ல்ல.


அப்புறமா அவன் உன்னை விட்டுட்டு போயிருந்தாலும் நீ கொஞ்ச நாள் உன் பேரன்ட்ஸோட தங்கி ரிலாக்ஸ் ஆகியிருப்பாய்..


இப்போ பாரு உன்னால பேரண்ட்ஸ் கிட்டேயும் போக முடியாது இங்கேயும் இருக்க முடியாது என்ன பண்ண போற ஏன் இப்படி அவசரப்பட்ட என்று கவலையாக கேட்டாள்.


நான் அவசரப்பட்டதற்க்கு காரணம் இருக்கு யாமினி என்று சொல்லவும்.


சந்தேகமாக அவளை பார்த்தவள் நான் கற்பனை பண்ற எதுவும் சொல்லிடாத.


நீ கற்பனை பண்ணினது உண்மை தான்..யெஸ் ஐ அம் ப்ரெக்னன்ட்…டூவெல் வீக்ஸ் கம்ப்ளீட்டட் என்று சொல்லவும் இடி விழுந்தது போல துடித்த யாமினி நெஞ்சில் கை வைத்த படி அமர்ந்து விட்டாள்.


பிறகு சற்று நேரம் கழித்து உனக்கு என்ன பைத்தியமா ஏன் இப்படி பண்ணின..உனக்கே தெரியும்ல இந்த உறவு நிரந்தரம் இல்லைன்னு, அப்படி இருக்கும் பொழுது எந்த தைரியத்தில் குழந்தை வரைக்கும் போன..?


ஊர்ல இருந்து உன் பேரண்ட்ஸ் வரும் பொழுது எதுவுமே தெரியாத மாதிரி ஹாஸ்டல்ல வந்து தங்கிட்டு அவங்க போன பிறகு மறுபடியும் அர்ஜுனோட வந்து ஸ்டே பண்ணுவியே அந்த மாதிரி சுலபமான விஷயம் கிடையாது..

இது குழந்தை.. நீ அதிக நாள் மறைத்து வைக்க முடியாது.


எப்படி இருந்தாலும் காலேஜ்ல பரவிடும்..அப்புறம் உன் பேரண்ட்ஸ்சுக்கு தெரிஞ்சிடும் இன்னும் கொஞ்ச நாள்ல கடைசி செமஸ்டர் ..! கொஞ்சமாவது யோசித்து பார்த்தியா..? எவ்ளோ பெரிய முடிவை ரொம்ப சாதாரணமா எடுத்து இருக்க.


பொறுமையாக கண்ணீர் வடித்துக் கொண்டு இருந்த வேதா..யாமி இது ஒரு ஆக்ஸிடென்ட்.. ஏங்களுக்கே தெரியாம எங்களையும் மீறி நடந்துருச்சு

என்ன பண்ணறதுன்னு தெரியல எனக்கு ரொம்ப பயமாயிருக்கு என அழுதாள்.


இப்போ அழு..பண்றதெல்லாம் பண்ணிட்டு..என திட்டி தீர்த்தவள் டாக்டரை பத்தியா எனக் கேட்டாள்.


ம்ம்..


என்ன சொன்னாங்க.


நாலு மாசம் ஆனதால எதுவும் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க என முகத்தை மூடிக்கொண்டு அழ ஆரம்பித்தாள்.


அப்போ உனக்கு முன்னமே இந்த விஷயம் தெரிஞ்சிருக்கு எதுவுமே பண்ண முடியாதுன்னு தெரிஞ்சதுக்கு அப்புறம் தான் அர்ஜீன் கிட்ட பேசியிருக்க.. அவன் போனதால என்கிட்ட சொல்ற இல்ல என்று கோபமாக அவளை பிடித்து தள்ளிவிட்டவள்.


நெற்றியில் கை வைத்துக் கொண்டு சரி இந்த விஷயத்தை அர்ஜுன் கிட்டயாவது சொன்னியா..?


இல்லை என்பது போல் தலையசைத்தாள்.


அவன்கிட்ட சொல்றதுக்கு உனக்கு என்ன தயக்கம் இதுக்கு அவனும் தானே ஈக்வல் ரெஸ்பான்சிபிலிட்டி என்று கத்தியவள்.


சரி இப்போ என்ன முடிவு எடுக்கலாம்னு நீயே சொல்லு என்று பொறுப்பை சம்பந்தப்பட்டவளிடமே ஒப்படைத்தாள்.


நான் செத்துப்போறேன்..என்னால எல்லாருக்கும் பிரச்சனை.


அறைஞ்சேனா பாரு.. ரெண்டு வருஷம் அவனோட கூத்தடிக்கும் போது தெரியலையா பின்னாடி இதெல்லாம் எல்லாருக்கும் பிரச்சினையை கொடுக்கணும்னு.. அப்போ நல்லா இருந்தது.


இப்போ உனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்ததும் சுலபமா முடிவெடுக்கிற நீ என ஆதங்கத்தை கொட்டி தீர்த்த யாமினி.


சரி அர்ஜுன் நம்பர் குடு நான் பேசுறேன்.


இல்ல அவன் என்னை டிஸ்டர்ப் பண்ண கூடாதுன்னு சொல்லிட்டு தான் போயிருக்கான்.


அப்போ உன் வயிற்றில் இருக்கிறதை என்ன பண்ண போற..? டாக்டர் அபார்ஷன் பண்ண முடியாதுன்னு சொல்லிட்டாங்க.. நீ அர்ஜுன் கிட்டேயும் பேச மாட்ட ..


அப்போ தனியா பெத்துக்க போறியா என்று கேட்கவும்.


எல்லா கதவும் அடைத்த பிறகு கடைசில அதை தானே நான் செய்தாகனும்.


பைத்தியம் மாதிரி உளறாத.. இன்னும் உனக்கு படிப்பு முடியல ஞாபகம் வச்சுக்கோ.


அர்ஜுன் கிட்ட ஒருமுறை பேசி பார்க்கலாம்.. உன் சூழ்நிலையை சொல்லலாம் கண்டிப்பா புரிஞ்சு நல்ல முடிவு எடுத்தான்.. ஒருவேளை சரி வரலைன்னா போலீஸ்ல‌ கம்ப்ளைன்ட் பண்ணிடலாம்.


காதலித்து கல்யாணம் பண்ணிக்கறேன்னு ஏமாத்தி விட்டுட்டு போய்ட்டான்னு..


எப்படியும் உன் அம்மா அப்பாவுக்கு தெரியும், கண்டிப்பா கஷ்டப்படுவாங்க,பரவால்ல..அப்போ தான் உனக்கும் இந்த குழந்தைக்கும் ஒரு நியாயம் கிடைக்கும் என தீர்க்கமாக கூறினாள் யாமினி.
 
3

வேணாம் யாமினி அப்படி எதுவும் செஞ்சுறாதே நீ அர்ஜூன் மேல கம்பளைண்ட் பண்றதையோ.. அவன் போலீஸ் ஸ்டேஷன் வர்றதையோ ஒரு காலும் என்னால அனுமதிக்க முடியாது என்று திட்டவட்டமாக கூறினாள்.

னஅப்படினா எதுக்காக அர்ஜூன் விட்டுட்டு போயிட்டான்னு சொல்லற.. எப்படி மூணு மாசம் உன்னோட கர்ப்பத்தை மறச்சியோ அப்படியே அர்ஜுன் போன விஷயத்தையும் என்கிட்டே இருந்து மறைச்சிருக்க வேண்டியது தானே.. வெறுப்புடன் கேட்டாள்.

என்னோட பிரண்டுங்குற உரிமையில் கூப்பிட்டு சொல்லிட்டேன் சாரி இப்போ தான் அது தப்புன்னு தெரியுது நீ கிளம்பிக்கோ திடமாக கூறினாள்.

ஏன் பேசமாட்ட.. சாப்பிட்டுட்டு தெம்பா உட்கார்ந்து இருக்கல்ல..
நான் வந்து பார்க்கலைன்னா பட்டினி கிடந்து நீ செத்துப் போயிருப்ப..மறந்திடாத .

தேங்க்ஸ் பார் எவ்ரிதிங் எங்கோ பார்த்தபடி வேதா சொல்லவும்.

எவ்ளோ சுயநலம் வேதா நீ..சான்சே இல்ல இந்த குணத்தை பார்த்ததால தான் நீ அவ்ளோ கெஞ்சியும் அவன் உன்னை விட்டுட்டு போயிட்டான்.

கூடை நெருப்பை தூக்கி மேலே கொட்டியது போல துடித்து விட்டாள் வேதா கண்களில் நீருடன் யாமினியைப் வெளிய போ மொதல்ல ..இனி எப்போவுமே என்னை பார்க்க வராத..பேச முயற்சி செய்யாதே.. அழுதபடியே கத்தினாள்.

போறேன்.. அவனை மாதிரியே மொத்தமா உன்னை விட்டுட்டு போய்டறேன் ஆனா நீ என்ன பண்ண போற பதிலுக்கு இவளும் சளைக்காமல் கத்தினாள்.

என் விதி எப்படியோ அப்படியே இருந்துட்டு போறே உனக்கு என்ன..?

பைத்தியம் மாதிரி உளறாத வேதா ..உன் விதியை எழுதுனது நீயே தான் அந்த கடவுள் இல்லை ..அதை ஞாபகம் வச்சிக்கோ.

இப்போ என்னை என்ன பண்ண சொல்லற யாமினி..? தப்பு பண்ணிட்டேன்.. ஆமா நான் தப்புன்னு தெரிஞ்சே பண்ணிட்டேன் அதுக்கான தண்டனையும் இனி அனுபவிக்க போறேன்.. நடுவுல நீயும் உன் பங்குக்கு என்ன கஷ்டப் படுத்தாத என்று சொல்லவும் ஓடி வந்து தோழியை கட்டி அணைத்தவள்.

பிரண்ட்ஷிப்னா என்ன நினைச்சுகிட்ட நீ..?ஜாலியா ஊர் சுத்தறதுக்கும்,ஐஸ்கிரீம் வாங்கி சாப்பிடறதுக்கு மட்டும் தான்னு நினைச்சியா..?

ஒரு கஷ்டம்னு வந்தா விட்டுட்டு போகக்கூடாது.. அதுவும் இப்போ நீ இருக்கிற நிலைல இருந்து உன்னை எப்படி விடமுடியும்.

சரி போனதெல்லாம் போகட்டும் நீ என்னோட கிளம்பி ஹாஸ்டல் வந்திடு..அங்க போய் மீதி பேசிக்கலாம்.

இல்ல யாமி நான் வரலை.. ஒருவேளை அர்ஜூ மனசு மாறி இங்க வரும் போது நான் இல்லனா அவன் ஏமாந்திடுவான்.

இன்னுமா நீ அவனை நம்பற.. கருவேப்பிலை மாதிரி உன்னை யூஸ் பண்ணிகிட்டு தூக்கி வீசிட்டு போயிட்டான் அவனுக்காக மறுபடியும் தனியா இருந்து கஷ்டப்பட போறீயா என கேட்டவள்…அவன் மனசு மாற எவ்ளோ நாள் ஆகும்னு நினைக்கற.

தெரியலை..ஆனா வருவான்னு நம்பிக்கை இருக்கு.

எதை வைத்து இவ்ளோ உறுதியா சொல்லற வேதா..அவன் உன்னை மிஸ் பண்ணியிருந்தா இந்த ரெண்டு நாள் உன்னை தவிக்க விட்டிருக்க மாட்டான்..உன்னை மொத்தமா விட்டுட்டான் அதான் நிஜம் அதை ஜீரணிச்சிக்க முயற்சி செய்.

*******

இழுத்து மூச்சைவிட்ட யாமினி அப்போ முடிவா என்ன சொல்லற.

ப்ளீஸ் யாமினி என்னை கட்டாயப்படுத்தாத.

எப்படியோ போ..ஆனா ஒன்னு மட்டும் சொல்லிட்டு போறேன் நல்லா கேட்டுக்கோ.. என்னைக்காவது இந்த யாமினி ஞாபகம் வந்தா கூச்சப்படாம என்னை கூப்பிடு உன்னை மாதிரி கல் மனசு எனக்கு கிடையாது உடனே ஓடிவந்திடுவேன்..என்றபடி யாமினி அங்கிருந்து சென்றாள்.

ஆனால் அவளால் இரு நாட்கள் கூட வேதாவை காணாமல் இருக்க முடியவில்லை.

நட்பு ஒரு புறம் இருந்தாலும் கர்ப்பமாக இருக்கும் தோழி தனியாக எப்படி கஷ்டப்படுவாளோ என்ற கவலை மறுப்புறம் தேடி வரவைத்து விட்டது.

காலிங் பெல் அழுத்திவிட்டு பக்கத்து வீட்டு கதவை வேடிக்கை பார்த்தபடி நின்று கொண்டிருந்த யாமினி வேதா கதவை திறக்கவும் அவளின் முகத்தைக் கூட பார்க்காமல் நேராக உள்ளே சென்றாள்.

கிச்சனில் என்னவெல்லாம் இருக்கிறது என பார்த்து வேகமாக சமைத்தவள் அதை எடுத்து வந்து வேதா முன்பு வைத்ஊஆள் .

யாமினி உள்ளே வந்தது முதல் என்னவெல்லாம் செய்கிறாள் என வேடிக்கை பார்த்துக் கொண்டிருந்த வேதாவிற்கு யாமினி உணவைக் கொண்டு வந்து டேபிளில் வைக்கவுமே அவளின் பாசம் கண்டு கட்டிப்பிடித்து அழுதுவிட்டாள்.

என்னை மன்னிச்சிரு யாமினி உன்னோட அன்பை புரிச்சுக்க முடியாத அளவிற்கு‌ பைத்தியம் ஆகிட்டேன்.. தனிமை என்னை ரொம்ப பலகீனப்படுத்துது தப்பு தப்பாக ஏதேதோ யோசிக்க தோணுது எனக்கு ரொம்ப பயமா இருக்குது யமினி ப்ளீஸ் என்னை உன்னோடவே அழைச்சிட்டு போயிடு.

அதுவரை கடமையாகவே வேதாவிற்கு வேலைகளை செய்தவள் கடைசி வாக்கியம் கேட்டதுமே மனது இளகி விட்டது.

முதல்ல சாப்பிடுவேதா மீதிய பிறகு பேசிக்கலாம் என்று அவள் அழுகையை சமாதானப்படுத்தி சாப்பிட வைத்தாள்.

வழக்கம் போல இந்த ரெண்டு நாளும் சாப்பிடலையா..? வேதா உணவு உண்ணும் வேகத்தை பார்த்து உணர்ச்சியற்ற குரலில் யாமினி கேட்டாள்

வாய் நிறைய உணவுடன் தோழியை பார்த்து கண்களில் நீருடன் ஆமாம் என்ற தலையசைக்க யாமினியால் அவளைத் திட்ட கூட முடியவில்லை.

அவள் சாப்பிடும் வரை பொறுமை காத்தவள் பிறகு எழுந்து ஜன்னல் அருகே சென்று தூரத்தில் தெரியும் ரோட்டை வேடிக்கை பார்த்தபடி பேச தொடங்கினாள்.

உன்னை பார்க்கக் கூடாது பேச கூடாதுன்னு நினைக்கிறேன் ஆனால் இந்த பாழாய் போன பாசம் அப்படி இருக்க விடல.

மாநிலம் விட்டு நானும் மாவட்டம் விட்டு நீயும் முதல் முறை வெளியே வந்தோம்.
எதிர்பாராதவிதமா சந்திச்சுக்கிட்டோம்.ஒரே காலேஜ்ல சேர்ந்தோம்..உனக்கு நானும் எனக்கு நீயும்னு எந்த அக்ரிமெண்ட்டும் போடாம நட்பா மாறினோம்.

ஒரு ஹாஸ்டல் ரூமை ஷேர் பண்ணிக்கிட்டோம் ஆனால் கொஞ்ச நாள்ல உன்னோட வழி வேறன்னு என்னை விட்டுட்டு போயிட்ட.

உன்னை மாதிரி என்னால சுயநலமா என்னால இருக்க முடியல..அதுவும் இந்த மாதிரி சமயத்துல.. அதான் என் தன்மானத்தை விட்டுட்டு தேடி வந்திருக்கேன்..நீ என்ன முடிவு பண்ணியிருக்க..? விருப்பப்பட்டால் சொல்லலாம் வேதா.. கட்டாயம் கிடையாது நீ சொன்னாலும் சொல்லவில்லை என்றாலும் என் நட்பு அப்படியே தான் இருக்கும் நான் உன் மேல் கொண்ட பாசமும் அப்படியே தான் இருக்கும்.

உன்னோட அலட்சியத்தால் ரெண்டு நாள் வேணா மனசு கஷ்டமாய் இருக்கும்.வருத்தத்தில் ரெண்டு நாள் வேணா
உன்னை பார்க்காம இருப்பேன் அதுக்கப்புறம் தேடி வந்துடுவேன்.
அதனால கண்டிப்பா சொல்லணும்னு கட்டாயம் கிடையாது இதை சொல்லும் பொழுது
யாமினியின் குரலில் நன்றாகவே வெறுமை தெரிந்தது
 
4


வேதாவால் யாமினி கூற்றை எதிர்த்து ஒரு வார்த்தை கூட சொல்ல முடியவில்லை அவள் தனக்கு நல்லது தானே கூறிக் கொண்டிருக்கிறாள்.


தான் தனியாக கஷ்டப்படக் கூடாது என விரும்புகிறாள் தன்னால்தான் சரியான முடிவை எடுக்க முடியவில்லை நான் யாமினியோடு சென்ற நேரத்தில் அர்ஜுன் தேடி வந்து விட்டால்..அவனை இழக்க நேரிடுமே..நட்பை விட காதல் முக்கியமல்லவா.. அதுவும் தான் இருக்கும் நிலையில் அவன் மட்டும் தானே முக்கியம்.


யாமினியால் வேதாவின் செயலை ஏற்றுக்கொள்ள முடியவில்லை..இவ்வளவு கெஞ்சியும்

கூட வேதா சிறிது கூட கண்டுகொள்ளாமல் அமர்ந்திருப்பதை பார்த்ததும் யாமினிக்கு கோபம் தொற்றிக்கொண்டது.


ஃபைன் வேதா..டேக் கேர் என்று கூறிய படி விடு விடு என வெளியே சென்று விட்டாள் மனதுக்கு கஷ்டமாகத்தான் இருந்தது அவளை அம்போவென விட்டுச் செல்வது ஆனாலும் தனது நல்லதுக்கு தானே சொல்கிறாள் எனத் தெரிந்தும் கூட கண்டுகொண்டாமல் விட்டுச் சென்றவனுக்காக ஏங்கிக் கொண்டிருப்பவளை என்ன சொல்லி திருத்துவது.


இவள் பட்டுத்திருந்த வேண்டியவள்.

எப்பொழுது புத்தி வருகிறதோ அப்பொழுதே தன்னிடம் வரட்டும் என நினைத்தபடி அங்கிருந்து சென்றாள்.


அதன் பிறகு யாமினி படிப்பில் கவனம் செலுத்தினாள் அவ்வப்போது வேதாவை நினைத்துக் கொண்டாலும் பார்க்கவோ பேசுவோ முயற்சி செய்யவில்லை கடந்த நான்கு மாதங்களாக வேதா கல்லூரிக்கு வரவில்லை என்னவாயிற்று ஏதாயிற்று என்று கூட தெரிந்து கொள்ளும் ஆர்வமும் இல்லை.


அவளது படிப்பை முடித்தவுடன் கையோடு வேலையையும் தேடிக் கொண்டாள் அதுவும் தனது சொந்த மாநிலமான கர்நாடகாவில்.

அதன் பிறகு பெங்களூருவில் இருக்கும் தனது குடும்பத்தினரோடு வசிக்க சென்று விட்டாள்.


யாமினியின் பூர்வீகம் தஞ்சாவூராக இருந்தாலும் அவள் பிறந்து வளர்ந்த இடம் பெங்களூர் தான்.. பள்ளிப்படிப்பை முழுவதும் பெங்களூருவில் முடித்தவள் கல்லூரியில் படிப்பதற்காக சென்னை வந்தது.


சென்னையிலுள்ள பிரபல மகளிர் கல்லூரியில் சேர்ந்தவள் அருகில் இருந்த பெண்கள் தங்கும் விடுதியில் இருந்து கல்லூரிக்கு சென்று வந்தாள்.


கல்லூரிக்குச் சென்ற முதல் நாள் தான் வேதாவை பார்த்தது ஏனோ பார்த்ததுமே இருவருக்கும் பரஸ்பரம் பிடித்து விட நெருங்கிய தோழிகள் ஆனார்கள்.


தங்கும் விடுதியில் கூட ஒரே அறையை பகிர்ந்து கொண்டனர்.


முதல் வருடம் வேதா நன்கு படிக்கும் பெண்ணாகத்தான் இருந்தாள்.


இரண்டாம் வருடம் படிக்கும் பொழுது தான் சற்று தடுமாற்றம் ஏற்பட்டது.


அர்ஜுனை டிபார்ட்மெண்ட் ஸ்டோரில் பார்த்தவள் கண்டதும் காதல் கொண்டாள்.


அவன் அந்தக் கடையின் நிரந்தர வாடிக்கையாளர் என்று தெரிந்ததுமே இவளும் அந்த கடைக்கு நிரந்தர வாடிக்கையாளர் ஆனாள்.


அவன் வரும்பொழுது எல்லாம்

கண்ணில் படுவது போல ஏதாவது செய்வது அவனை பின் தொடர்வது என படிப்பிலிருந்து கவனத்தை அவன் பக்கம் திருப்பினாள்.


அதிக நாட்கள் எல்லாம் இல்லை சரியாக ஒரு மாதத்திலேயே தனியாக அவனுடன் தங்கும் அளவிற்கு மிக வேகமாக முன்னேற்றம் அடைந்திருந்தாள்.


தோழியின் போக்கை முதலில் கண்டுகொள்ளாமல் இருந்த யாமினி அர்ஜூனுடன் தனியாக தங்கப் போகிறாள் என தெரிந்ததும் பயங்கரமாக அதிர்ச்சி அடைந்து எவ்வளவோ புத்தி கூறிப் பார்த்தாள்.


எதற்கும் அசைந்து கொடுக்கவில்லை வேதா.. அவனின் மீது அப்படியொரு காதல் பைத்தியம் அவளுக்கு.


யாமினி மிரட்டி கூட பார்த்தாள் உன் அம்மா அப்பாவிடம் சொல்வேன் என்று.


சொல்லிக்கோ அப்போ தான் என் லவ் மேட்டர் என் வீட்டுக்கு தெரியும் என்பாள்.


வேதாவிற்கு நன்கு தெரியும் எப்படியும் யாமினி தன் வீட்டில் மாட்டி விடமாட்டாள் என்று அது மட்டுமின்றி வேதாவிற்கு பெற்றோர்கள் இடத்தில் பயம் அதிகம்.. சேலத்தில் பாரம்பரிய குடும்பம் வேதாவினுடையது அங்கே அவளுடைய தந்தைக்கு என்று தனியாக பெயர் இருக்கிறது பல தொழில்கள் நடத்தி வருகிறார் இவள் ஒரே பெண் அதனால்தான் சென்னையில் படிப்பேன் என்று அடம் பிடிக்கவும் மறுப்பேதும் தெருவிக்காமல் அனுப்பி வைத்தார்.


முதலில் தனியாக வீடு பிடித்து அவளுக்கு வேலை செய்ய ஒரு பணியாளரையும் நியமித்து தான் கல்லூரியில் சேர்த்து விட்டது.


யாமினியுடைய நட்பு விடுதி அறையை பகிர்ந்து கொள்ள செய்தது அதனால் வீட்டையும் பணியாளரையும் வேண்டாம் என மறுத்துவிட்டாள்.


சிறுவயதிலிருந்தே அதீத கட்டுப்பாடுடன் வளர்ந்தவளுக்கு தலைநகரம் அதிக சுதந்திரத்தை கொடுக்க அதை தவறாக பயன்படுத்தி கொண்டாள்.


அது தெரியாத வேதாவின் பெற்றோர்கள் பெண் தனியாக இருப்பதற்கு தோழி என்று ஒருத்தியுடன் இருந்தால் அவளுக்கு தனிமை எண்ணம் இருக்காது என ஒத்துக் கொண்டார்.


அது மட்டும் இன்றி வேதாவிற்கு சிறுவயதிலேயே உறவின் வழியில் ஒருவனை பார்த்து வைத்திருக்கிறார்கள் இவள் படித்து முடித்த உடனே அவனை திருமணம் செய்து வைத்து விடுவார்கள் இதற்காகவே பயந்து கொண்டு அர்ஜுனனிடம் நெருக்கம் காண்பித்தாள் வேதா.


எப்படி இரண்டு ஆண்டுகள் போனது என்றே தெரியாத அளவிற்கு வாழ்க்கையை சந்தோஷமாக வாழ்ந்தாள்.


பெற்றோர்கள் அவளைப்பார்க்க வருகிறார்கள் என்று தெரிந்தால் எதுவுமே அறியாத பெண் போல யாமினியுடன் வந்து தங்கிக் கொள்வாள்.


அவர்கள் சென்றதும் மீண்டும் அர்ஜூனைத் தேடி ஓடி விடுவாள்.


அப்பொழுதும் சரி இப்பொழும சரி பெரியதாக அர்ஜூன் இடத்தில் வேதாவின் மீது அதீத பற்று இல்லாததைப்போல் தான் நடந்து கொண்டான்.


எதற்காகவும் வேதாவை கட்டாயப்படுத்த மாட்டான் அதே சமயம் வேதாவையும் ஒரு எல்லையிலேயே வைத்திருந்தான்.


அவளின் குடும்பத்தை பற்றியோ இல்லை அவனது குடும்பத்தை பற்றியோ என்றுமே பேசிக்கொண்டதில்லை.


அதனால் தானோ என்னவோ வேதாவிற்கு அவனை மிகமிகப் பிடித்தது.
 
Top