chitrasaraswathi
Member
நறுமுகை தளத்தின் போட்டிக் கதை NNK 01 ன் வெய்யோனை அயரிய வெண்பனியே எனது பார்வையில். மருத்துவரான இதய நிலா மற்றும் கனியரசன் இருவருக்கும் திருமணம் நிச்சயம் செய்த நிலையில் அவன் அண்ணன் வெற்றி கனியின் சித்தப்பா பெண் ராஜியை திருமணம் செய்து கொள்ள மறுத்து பேசி விடுவதால் இருவருக்கும் இடையில் விலகல் ஏற்பட்டுவிடுகிறது.
கனியரசனின் அக்கா இரண்டு பேரும் இதயாவின் மூத்த இரண்டு அண்ணன்களைத் திருமணம் செய்திருப்பதால் இந்த பிரச்சினை இரண்டு குடும்பத்தையும் ஆட்டி வைக்கிறது. மற்றும் இதயாவின் மூன்றாவது அண்ணன் வெற்றி சில வருடங்கள் ஊருக்கு வராமல் இருக்கிறான். எல்லோரையும் சந்திக்க வைக்கிறது இதயாவின் அண்ணன் பெண் பெரியவளாகும் நிகழ்வு.
வீட்டில் நடக்கும் சுப நிகழ்ச்சியில் சந்தர்ப்ப சூழ்நிலையால் வெற்றி தனது காதலியான பூமிகாவுடன் வருகை தர மீண்டும் பிரச்சினை உருவாகிறது. திருமணம் நிச்சயம் செய்து வருடங்கள் கடந்தாலும் இருவரும் ஒருவரையொருவர் விட்டுக் கொடுக்காமல் காத்திருக்கும் அவர்களின் வாழ்க்கையில் மாற்றம் ஏற்பட்டதா என்பதை விறுவிறுப்பாகவும் சுவாரசியமாகவும் தந்திருக்கிறார்.
அம்புஜம் பாட்டி போல ஒருவரின் மனதை அறியாமல் போடும் திருமண முடிச்சு எத்தனை சிக்கல்களை உருவாக்குகிறது. எல்லா கதாபாத்திரங்களும் இயல்பாகவும் கச்சிதமாகவும் இருக்கிறது. நல்ல ஒரு மண் மணத்துடன் வட்டார வழக்கில் யதார்த்தமான குடும்பக் கதை. வாழ்த்துகள் மா.

Last edited: