எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 17

NNK-54

Moderator
வர்ணங்கள் 17

சுபாவை தனது காரியதர்சியாய் வேலை செய்ய ஜெயந்தன் கேட்டது சதீஷின் மனதில் ஒரு நெருடலை உண்டு பண்ணி இருக்கிறது.

அந்தப் பெண் ஆண் துணை எதுவும் இல்லாமல் தனியாக இருக்கும் பொழுது, வேறு எதுவும் சிக்கல்களில் மாட்டிக் கொள்ளாமல் இருக்க வேண்டும் என்று சதீஷ்க்கு மனம் அடித்துக் கொண்டது.

இந்த விஷயத்தில் அவன் செய்வதற்கு எதுவும் இல்லை தான். ஜெயந்தனின் நிலைக்கு சதீஷ் ஒன்றும் இல்லை. மிகவும் பெரிய இடம். உண்டு -இல்லை என்றெல்லாம் சதீஷால் சொல்ல முடியாது. நிர்வாக தலைமைக்கும் அவன் தன் மனோ நிலைமையை எல்லாம் சொல்லிக் கொண்டிருக்க முடியாது.
விதி இட்ட வழி என்று அமைதியாக இருப்பதற்கும் அவனால் இயலவில்லை.

என்ன செய்வது என்ற மிக தீவிரமாக யோசித்தவன், அந்தப் பெண் ஜெயந்தனிடம் வேலை செய்ய தொடங்குவதற்கு முன்பாக, உன்னால் முடிந்த அளவிற்கு அவளுக்கு எச்சரிக்கை வேண்டுமானால் சொல்லலாம் என்று முடிவெடுத்துக் கொண்டான்.

பிரணவ் தீவிரமாக சுபாவை தேடுவதையும், சதீஷ் கண்டிருக்கிறான். அதனால்தான் வேலைத்தளத்தில் அவன் வேலை செய்ய வேண்டாம் என்று முடிவெடுத்து இருந்தான். மேலிடம் தன்னிடம் வேலைக்கு புதிதாக சிங்கப்பூரிலிருந்து வரும் ஒரு நபரை சேர்த்துக் கொள்ள முடியுமா என்று அபிப்ராயம் கேட்டபோது, ‘நிலைமையை ஆராய்ந்து சொல்கிறேன்’ என்று சொன்ன சதீஷ், என்று பிரணவ் சென்னை அலுவலகத்தில் சேர்ந்தானோ, அப்போதே அவனையும் அவனது தேடலையும் கண்டு கொண்டு விட்டான்.

பிரணவ் வேலையில் சேரும் சமயம், சுபா கட்டிடம் கட்டப்பட இருக்கும், மகாபலிபுரம் சாலையில் இருந்தாள்.

சுபாவுக்கு அதிகமாக சிட்டிக்குள் இருக்கும் அலுவலகம் வருவதற்கு வாய்ப்பு கிடையாது.
கட்டிடப் பணி நடக்கும் தளங்களில் தான் அவளை பார்க்க முடியும்.

அங்கே இருக்கும் அலுவலகத்தில் அமர்ந்துதான் வேலைகளை பார்ப்பாள். வேலைக்கு சேர்ந்த நிமிஷத்திலிருந்து அந்த பெண்ணை பற்றிய விசாரிப்புகளில் மூழ்கி இருந்த பிரணவ் மீது நல்ல அபிப்ராயம் சதீசுக்கு உண்டாகவில்லை. தலைமையகத்திற்கும் புதியதாக வந்திருக்கும் நபர் வேலை நடக்கும் இடத்தில் அவசியம் இல்லை என்று மெயில் அனுப்பிவிட்டு அமைதியாகி விட்டான்.

‘தன்னால் முடிந்ததை செய்தாயிற்று. இதற்கு மேல் என்ன நடக்குமோ’ என்ற எண்ணம் தான்.

சுபாவை பார்க்கும் பொழுது திருமணம் முடித்து வெளிநாட்டில் வாழும் தனது சகோதரியின் நினைவு அவனுக்குள் எழுகிறது. அவனும்தான் என்ன செய்வான்?

பிரணவ் விஷயத்தில் அவனால் ஏதோ செய்ய முடிந்தது. ஆனால், ஜெயந்தன் விஷயத்தில் இவனிடம் அலுவலகம் கருத்து எதுவும் கேக்காதே! எண்டு பெருமூச்சுடன் தனது மடிக்கணினியை மூடிவிட்டு வீட்டுக்கு கிளம்பினான்.

சுபா ஏற்கனவே நேரடியாக ஜெயத்தனை பார்த்ததில்லை என்று நினைத்து கொண்டிருக்கிறான் சதிஷ்.

பெங்களூரு அனுப்பிவிடுவார்களோ என்ற அச்சத்தில் பிரணவ் இரவு பத்து மணிக்கு சதீஷுக்கு போன் செய்து கொண்டிருந்தான். காரை ஓட்டிக்கொண்டு வீட்டுக்கு சென்று கொண்டிருந்த சதீஷு க்கு அலைபேசியின் திரையில் பிரணவின் பெயரை பார்த்ததும் கோவம், எரிச்சல் இரண்டும் சேர்ந்து வந்து தொலைத்தது.

ஏதாவது முக்கிய விஷயமாக இருக்க கூடுமோ என்று அழைப்பை ஏற்றவனிடம் பிரணவ் சென்னையில் வேலை செய்ய அவன் விருப்பம் பற்றி புலம்பி தீர்த்தான்.

எதிராளியின் நிலை பற்றிய எண்ணமே இல்லாமல் அவன் பேசியது சதீஷுக்கு அவன் மீது வெறுப்பை கூட்டியது.

அழைப்பை துண்டித்தவன் காரில் சற்று நேரம் அமர்ந்தவாறே பிரணவை அழகிய தமிழாங்கில வார்த்தைகள் கொண்டு திட்டி தீர்த்தான்.
மனம் கொஞ்சம் ஆஸ்வாசப்பட்டதும் வீடு நோக்கி சென்றான்.

அடுத்த நாள் காலையில் ஸுபா வந்து சேரவும், அங்கே ஜெயந்தனின் அலுவலகத்திலிருந்து அழைப்பு இவர்களது அலுவலக தொலைபேசி எண்ணிற்கு வரவும் சரியாக இருந்தது. சதீஷ் இன்னமும் வந்திருக்கவில்லை. ஒரு நொடிக்கும் குறைவாக யோசித்தவள் பிறகு அழைப்பை ஏற்றுக் பேசினாள் . ஜெயந்தனின் அந்தரங்க காரியதரிசிதான் பேணினார். அந்த பெண்மணி, சுபாவைப் பற்றி விசாரித்துவிட்டு,"இன்னிலேந்து அங்கே சைடில் நீங்கதான் சாரோட பி.ஏ வா வேலை செய்ய அப்பொய்ண்ட் ஆகியிருக்கீங்க. சொ , உங்களுக்குக்கும் சதீஷ் சாருக்கும் உங்களோட கமிட்மெண்ட்ஸ் என்னன்னு மெயில் பண்ணியிருக்கேன். ரெபர் பண்ணிட்டு ஏதாச்சும் சந்தேகம் இருந்தா கூப்பிடுங்க.ஹெல்ப் பண்றேன் ."என்றுவிட்டு தனது அலைபேசியெண்ணையும் கொடுத்துவிட்டு அழைப்பை துண்டித்தாள்.

மேலிடத்திலிருந்து சதீஷுக்கும்,சுபாவுக்கும் கூட சுபாவின் பணி தொடர்பான மெயில் வந்திருந்தது.காலையில் வீட்டிலிருந்தே லொகின் செய்திருந்த சதீஷும் அதைப் பார்த்துவிட்டு நெற்றியை தேய்த்து விட்டுக்கொண்டான். இவ்வளவு காலையில் இந்த மெயில் வரும் என்று அவன் எதிர்பார்க்கவில்லை. பெருமூச்சு ஒன்று எழுந்தது. பணமும்,அதிகாரமும் ஒன்றசக சேரும்பொழுது எவ்வளவு சு;சுலபமாகவும் வேகமாகவும் வேலைகள் நடந்து முடிந்துவிடுகிறது என்று ஆச்சர்யம். சுபா மீண்டும் பெங்களூருவிலிருந்து சென்னை வருவதற்குள் எவ்வளவு பாடுபட்டாள் என்று சதீஷுக்கும் தெரியும்.

வெறும் திறமையை அடிப்படையாக வைத்து சுபாவை ஜெயந்தன் அணுகுவதாக சதீஷ் நம்பவில்லை.வேறெதுவும் காரணம் இருக்குமா..அப்படியென்றால் சுபாவுக்கு அது ஆபத்தாக முடியக்கூடுமா?என்ற கவலைதான்.

யோசனைகளுடன் வேலைக்கு கிளம்பிச் சென்றவன் சுபாவைக் கண்டதும் லேசாக முறுவலித்தான் . தனது இருக்கையில் அமர்ந்தவன், "நீங்களும் மெயில் பார்த்தீங்க தானே சுபா? இன்னிலேந்து நீங்க புது ஒர்க்கோட சார்ஜ்ஜையும் சேர்த்து பார்க்கணும்.ஒர்க் டைம் மாறும். ஜெயந்தன் சார் எப்போது சொன்னாலும் அவருக்கு சப்போர்ட் பண்ணனும். அதுக்கு நீங்க புல் எனர்ஜியோட ,கம்ப்ளீட் அடென்க்ஷனோட ஒர்க் பண்ணனும். உங்க செண்ட் பர்ஸன்ட் எபோர்ட் போட்டு வேலை செய்யுங்க. நல்ல சாலேஞ்சான என்விரோன்மெண்ட். நிறைய கத்துக்க சான்ஸ்" . என்றுவிட்டு அவளது முகம் பார்த்தான்.அதில் வேலை செய்யும் பாவம் தவிர வேறொரு உணர்வை அவனால் படிக்க முடியவில்லை.

அவள் மனம் தவித்தது. அவனை காண்பதற்காக ஆசையாக இங்கே வந்தாள் .அதுவும் அவனது கூட்டில் உருவாகும் ப்ரொஜெக்ட்டில் வேலை செய்யப்போகிறேன் என்ற எண்ணமே அவளுக்கு உற்சாகத்தைக் கொடுத்தது. அவனைப் பார்க்கவே முடியாது.அதற்கான தகுதி தனக்கு கிடையாது என்று முடிவு செய்திருந்த நிலையில் அவனை மாலில் சந்தித்தாள் .

இதோ இப்போதும் அவனையெல்லாம் பார்க்க முடியாது.தூரத்திலிருந்து வேண்டுமானால் பார்க்க வாய்ப்புண்டு என்று ஏக்கத்துடன் நினைத்திருந்தவள் இப்போது அவனுடனேயே வேலை செய்யும் ,அதுவும் அவனுக்கு உதவியாளராக வேலை செய்ய நேரம் அமையும்போது , அவனது பெற்றோரைப் பற்றி நன்கு அறிந்தவளுக்கு உடம்பு உதறியது.

'ஜெயந்தன் பிடிவாதமாக தனக்குக் கீழே என்னை வேலை செய்யக் கொண்டுவந்துள்ளார் என்பதை நான் அறிவேன்.என்னைவிட தகுதியும் திறமையும் உள்ளவர்கள் இங்கே உண்டு. பின்னர் எப்படி அவர் என்னை தெரிவு செய்தார்? நான் இங்கே வேலை செய்வதை அவர் எப்படி கண்டுகொண்டார்?போன்ற எண்ணங்கள் வேறு அவளை அலைப்புறச் செய்தது.

அம்மா சொல்வதுபோல் இந்த சூழ்நிலையை கையாள தைரியம் அற்று இந்தமுறை புறமுதுகு காண்பித்து நான் ஓடமுடியாது. அப்போதே அவர்களிடம் போராடி அவனுடன் வாழ முயற்சி செய்திருக்க வேண்டும்.
அப்போது தவறவிட்டுவிட்டேன். இப்போது தானே ஒரு வாய்ப்பு கிடைக்கிறது.

சுபாவின் மௌனம் சதீஷை கொஞ்சம் அசைத்துப் பார்த்தது. ஆனால் ,அவன் அதற்குமேல் எதுவும் செய்ய முடியாதவனாக தனது வேலைகளில் ஆழ்ந்து போனான்.சுபாவும் கொஞ்ச நேரம் ஏதேதோ யோசனைகளில் இருந்தவர்,பின்னர் தன்னை சுதாரித்துக்கொண்டு அவள் படிப்பதற்காக என்று ஜெயந்தன் அலுவகத்திலிருந்து வந்திருந்த மெயில்களை படித்தவளுக்கு,தன்னால் சிறப்பாகவே வேலை செய்யமுடியும் என்ற நம்பிக்கை வந்துவிட்டிருந்தது.

முன்னைவிட அதிகமாக கட்டுமானப் பணிகளை பார்வையிடுவதுடன் அவற்றைப் பற்றி குறிப்புகள் எடுத்து அவற்றை வரிசைப் படுத்தி காலையிலும்,மாலையிலுமாக ஜயந்தது தனிப்பட்ட மெயில் ஐடிக்கு அனுப்பி வைப்பதுமாக அவளது நேரம் முதல்நாளே இறக்கைக் கட்டிக்கொண்டு பறக்க ஆரம்பித்தது.

அவளது குறிப்புகளை படித்த ஜெயந்தனுக்கு அவளது வேலைப் பற்றிய அபிப்பிராயம் இன்னமும் கூடிப்போனது. தகுதியான ஆளைத்தான் தெரிவு செய்திருக்கிறோம் என்ற திருப்தி அவனுக்குள். அதே சமயம் அவளை பார்க்கவேண்டும் என்ற ஆர்வமும் கூடிப்போனது.

அதை அடக்க அவனால் முடியவில்லை. இப்போதே மகாபலிபுரம் கிளம்பிச் செல்ல வேண்டும் என்று தோன்றினாலும் நடைமுறை சிக்கல்களால் அமைதியாக இருந்தான். ஆனாலும் அமைதியாக இருக்கமுடியும் என்று தோன்றாதவன் அவளையும்,சதீஷையும் மாலை வேலை முடியும் சமயம் வீடியோ கான்பிரன்சில் அழைத்து அன்றைய வேலைகளை பற்றிப் பேசினான்.

இருவரிடமும் பொதுவாக வேலைகளைப் பற்றி பேசியவன், கடைசி சில நிமிஷங்கள் சுபாவுடன் மட்டும் பேசினான்.

" இன்னிக்கு உங்க முதல் நாள் வேலை நன்றாகவே செஞ்சிருந்தீங்க. வாழ்த்துக்கள். தொடர்ந்து இதே மாதிரி வேலை செய்யுங்க.ஆல் தி பெஸ்ட்" என்றவன் இருவரிடமும் தலையசைப்புடன் முடித்துவிட்டான். சதீஷுக்கும் தொடர்ந்து இந்தப் பெண்ணுக்கு வேறு எதுவும் பிரச்சனைகள் வராமல் இருத்தால் சரி என்று நினைத்துக்கொண்டான்.

இருவரும் ஒன்றாகவே வீட்டுக்கு கிளம்பியதும் சதீஷ் சுபாவிடம் " நீயும் ஒர்க் முடிச்சிடீனா கிளம்பு. உன்னோட வீட்டுல விட்டுட்டு போறேன். ஒன தி வே தானே?"என்றான்.சுபா மறுக்கவில்லை. இருவரும் ஒன்றாக கிளம்பினார்கள்.


மறுநாளிலிருந்து காலையிலேயே ஜெயந்தன் வேலை நடக்கும் மகாபலிபுரத்திற்கு வரத் தொடங்கிவிட்டான். அந்த வார இறுதியில் அங்கேயே அவனுக்காக தனி அலுவலகம் அமைக்கப் பட்டது. தினமும் சீக்கிரமாகவே அனைவருக்கும் முன்பாக அலுவலகம் வரப் பழகியிருந்தான். பகல் பதினோரு மணி அளவில் அவனது மற்ற அலுவலகங்களை நோக்கி அவனது பயணம்.

மீண்டும் மாலை ஆறுமணி அளவில் இங்கே வந்துவிடுவான். பிறகு அன்றைய வேலை பற்றிய கலந்துரையாடல்கள் நடக்கும். அங்கே வேலை செய்யும் சூப்பர்வைஸரையும் கூட விடாமல் குடைந்து கேள்விகள் கேட்பான்.சிலசமயங்களில் அன்று பகல்நேரம் முழுமையும் நடந்த வேலைகளை பார்வையிடவென கிளம்பிவிடுவான் . செங்கல்,சிமெண்ட் என்று எல்லாவற்றையும் கையால் தொட்டு பார்ப்பதும், அவற்றின் தரம் பார்ப்பதும், கொத்தனாருடன் அருகே அமர்ந்து அவருடன் பேசிக்கொண்டே அவர் வேலை செய்வதை பார்வையிடுவதுமாக அவனது வேலைகள் சதீஷை பிரமிப்படைய செய்தது.
ஒருமுறை சதீஷும்,சுபாவும் அதைப்பற்றி பேசிக்கொண்டிருக்கும் பொழுது ,சுபா சொல்லிவிட்டாள் "ஜெயனுக்கு கட்டிடம் மேல ஆர்வம் அதிகம்.அதனாலேயே சிவில் எடுத்து படிச்சாரு"என்று.அவளையும் அறியாது வந்த வார்த்தைகள். ஜெயந்தனைப் பற்றி அதிகமாக சதீஷுக்கு மட்டுமல்ல,வேறு யாருக்கும் தெரியாது. அவன் ஆர்கிடெக்சர் படித்திருக்கிறானா..என்றுதான் சதீஷ் நினைத்திருந்தான்.

ஆனால் சுபாவின் வார்த்தைகள் அவனை அதிர்ச்சி கொள்ளச் செய்தது,அதோடு யோசிக்கவும் ஆரம்பித்தான். சுபாவின் நெருக்கமான ஜெயன் என்ற குறிப்பிடல் ,அவனது சிவில் படிப்பு இதைப் பற்றியெல்லாம் இவளுக்கு எப்படித் தெரியும்? இருவரும் ஏற்கனவே அறிமுகம் ஆனவர்களா?
அதனால்தான் ஜெயந்தன் இவளை தன்னுடன் வேலை செய்ய தெரிவு செய்தானா?இருவருக்குள்ளும் ஏதாவது ஏற்கனவே அறிமுகம் உண்டா?அல்லது இங்கே வேலை செய்ய ஆரம்பித்த பிறகு ஏற்பட்ட பழக்கமா என்றெல்லாம் அவனது மூளை ஆயிரம் கேள்விகள் கேட்கத் தொடங்கியது.
இதற்கெல்லாம் விடை சொல்பவர்கள் யாருமில்லை. நடுவில் எப்படியோ வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு பிரணவ் இரண்டு முறை மகாபலிபுரம் வந்துவிட்டான். சதீஷுக்கு பல்லை கடித்து கோவத்தைக் கட்டுக்குள் கொண்டுவருவதை தவிர வேறு வழி எதுவும் இருக்கவில்லை.

சுபா மறந்து ஜெயந்தனை பற்றி சதீஷுடன் பேசிக்கொண்டிருந்த விஷயங்களை எதேச்சையாக அங்கே வந்த ஜெயந்தனும் கேட்க்க நேர்ந்தது. அவனது மனம் ஆச்சர்யம் கொண்டது.அவளது பிரத்யேக அழைப்பு.வேறு அவனுக்கு ஏதோதோ ஞாபகங்கள். முழுமையாக எதுவம் புரியவில்லை. இதுவரை ஜெயன் என்று அவனை யாரும் அழைத்தது இல்லை. கன்யா..ம்ஹும் அவளும் கூட ஓவொரு முறையும் ஓவொரு மாதிரி அழைப்பாள்.அனேகமாக 'அத்தான் 'என்றுதான் குழைவாள்.

வேறு ஒரு பெண்ணின் குரல் அவன் காதுகளில் ஜெயன் என்று அழைப்பதை உணர்ந்தவன் ஒன்றும் புரியாமல் தன் இருக்கைக்கு சென்று அமர்ந்து கொண்டான். அவன் மனம் "உனக்கும் சுபாவுக்கும் முன்பே ஏதோ ஒன்று இருந்திருக்கிறது.அது என்னவென்று கண்டுபிடி"என்று கூச்சலிட்டது.

அன்று இரவு , வீட்டின் பால்கனியில் கண்மூடி அமர்ந்திருந்தவனின் நினைவுகளை ஏதோ ஒன்று தட்டி எழுப்ப அவனது உறங்கிக் கொண்டிருக்கும் ஆழ்மன உணர்வுகள் மெல்ல கண் விழிக்க ஆரம்பித்தது.பிரணவ் வந்த முதல் முறை ஜெயந்தன் தனது நந்தனம் அலுவலகத்தில் இருந்தான்.பிரணவும் மிக நல்ல பிள்ளையாக வேலை முடிந்தவுடன் கிளம்பிவிட்டான். அனாவசியமாக நின்று எதுவும் பேசிக்கொண்டு இருக்கவில்லை.அவன் வந்த பொழுது சுபாவும் தலை நிமிர நேரமின்றி வேலை செய்துகொண்டிருந்தாள். இவனிடம் தெரிந்தவர்களிடம் பேசும் அடிப்படை விசாரிப்புகள் மட்டுமே!


ஆனால் அந்த முறையே,அவளது வேலைகள் என்னென்ன, அவளது தினசரி நடவெடிக்கைகள் எப்படி ,அவள் எத்தனை மணிக்கு கிளம்பக்கூடும் என்றெல்லாம் விசாரித்துவிட்டுதான் சென்றான்.அடுத்தமுறை வேண்டுமென்றே வாய்ப்பை ஏற்படுத்திக்கொண்டு சதீஷ் அன்று அலுவலகம் வரவில்லை விடுப்பில் இருக்கிறான் என்ற தகவலுடன் வேகமாக மகாபலிபுரம் வந்து சேர்ந்தான். ஜெயந்தன் அன்று மதியம் வரை அலுவலகம் வரவில்லை.

இந்தமுறையும் கவனமாக ப்ரனவை தவிர்த்தாள் சுபா.ஆனால் ,வேண்டுமென்றே அவளிடம் பேசுவதற்கென்றே இவ்வளவு தூரம் வந்திருப்பவன் எப்படி சும்மா இருப்பான்? ஜெயந்தன் வரக்கூடும் என்றெல்லாம் நினைவில் இல்லாமல், சுபாவின் எதிர் இருக்கையில் அமர்ந்துகொண்டு அவளையே கண் இமைக்காமல் பார்த்துக்கொண்டிருந்தான் பிரணவ்.ஒருவித அசௌகரியத்தை உணர்ந்தாள் சுபா.
 
Top