எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வர்ணங்கள் 18 nnk 54

NNK-54

Moderator
வர்ணங்கள் 18

பிரணவ் சுபாவை விடும் எண்ணத்தில் இல்லை.மதிய உணவு நேரத்தில் அவளை தன்னுடன் உணவருந்த வற்புறுத்தி அழைத்தவன், அவளது மறுப்பை பெரியதாக லட்சியம் செய்யவில்லை. பிடித்தமே இல்லாமல் அவனுடன் சாப்பிடச் சென்றாள் . அருகே பெரிய ஹோட்டல்கள் எதுவும் இல்லை.அவளிடம் தனது லன்ச் பாக்ஸ் இருக்கிறது.அதை எடுத்துக்கொள்ளக் கூட விடாமல் அவளை கிட்டத்தட்ட வேகமாக இழுத்து சென்றான் பிரணவ்.

தான் சிங்கப்பூரில் பார்த்துப் பழகிய பிரணவ் இவனில்லை.இவனிடம் நிறையவே வேறுபாடு தெரிகிறது என்று மனதுள் நினைத்துக் கொண்டாள் பெண். அந்த நேரத்தில் சதீஷ் இருந்திருந்தால் எவ்வளவு நன்றாக இருந்திருக்கும் என்று அவளுக்கு தோன்றாது இல்லை.அதேபோல் இங்கே இன்று அதிக வேலை இல்லையே!பின்னர் எதற்காக இவ்வளவு தூரம் வந்திருக்கிறான் என்ற கேள்வி தோன்றவே,உணவு சாப்பிடும் நேரத்தில் அவனிடமே கேட்டுவிட்டாள் .

"இன்னிக்கு சதிஷ் கூட லீவுல இருக்குறாரு.உங்களுக்கும் அதிகம் ஏதும் இங்கே வேலையில்லை .ஐ மீன், நீங்க தேவையான டீடெயில்ஸ் கேட்டிருந்தா நானே அவற்றை மெயில் பண்ணியிருந்திருப்பேன்.எதுக்காக இவ்ளோ கஷ்டப்பட்டு ட்ராவல் பண்ணி வந்திருக்கீங்க? அதோட எனக்கு இன்னொன்னும் தெரியணும். உங்களுக்கு மலேசியாதானே சொந்த நாடு. சிங்கப்பூரிலிருந்து அங்கே டிரான்ஸ்பெர் கேக்காம இங்கே இந்தியாவுக்கு வர ரீசன் என்ன? இங்கே ப்ரொஜெக்ட்ல நீங்க ஒர்க் பண்ண முடியாதுன்னு தெரிஞ்சுதான் வந்தீங்களா?"

அவளது கேள்வி அவனை சந்தோஷம் அடையச் செய்தது. இந்த வாய்பிற்க்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டு இங்கே வந்ததே! வாய்ப்பை நழுவ விடாமல்," ம்ம்..தெரிஞ்சுதான் இங்கே வந்தேன் . இன்பாக்ட் , உனக்காகத்தான்..சாரி ,உங்களுக்காகத்தான் இங்கே வந்தேன் சுபா. உங்கள மறக்க முடியல. தியாவையும் ஏத்துக்க நான் தயாரா இருந்தேன். நீங்க ஏன் எனக்கு நியாயமான பதில் சொல்லிட்டு வரல?"

அவனது பழியில் சட்டென்று அவனை நிமிர்ந்து பார்த்தவள் ,"நா என்னிக்குமே உங்கள கல்யாணம் செஞ்சுக்குறேன்னு சொல்லல.எந்த உறுதியும் கொடுக்கல. உங்களுக்கு பதில் சொல்லாம இருந்ததிலேயே புரிஞ்சுப்பீங்கன்னு நினச்சேன். அண்ட் எந்த உறுதியும் குடுக்கமாத்தானே நா சென்னை வந்தேன்.
அப்போவும் என்னோட மனசுல என்ன இருக்குன்னு உங்களுக்கு புரியலையா?"என்று சற்றே கோவமும் ஆதங்கமும் கலந்து கேட்டாள் .

அவளது கேள்வியில் இருந்த நியாயம் அவனுக்கு எரிச்சலை கொடுத்தது. "ப்ச்.. என்ன புரிஞ்சுக்கணும்? ஆண் துணையும் ஆதரவும் இல்லாம தனியா அழகா ஒரு பொண்ணு இருந்தா,அவளுக்கு பாதுகாப்பா , கண்ணியமா கல்யாணம் செஞ்சு வாழ்க்கை கொடுக்கணும்னு ஒரு ஆம்பிளை மெனக்கெட்டா அதுல என்ன தப்பு? இல்லீகல் ரிலேஷன்ஷிப்ல ஒரு குழந்தை பெத்துக்கிட்டிங்க. லீகலா உங்கள அம்மாவாக்கணும்னு ஆசைப் பட்டேன் .அதான், சென்னை வந்தேன் "என்றவனது பதிலை கேட்டவளுக்கு ஆத்திரம் பொங்கியது.

தனது உணவை சாப்பிட்டு முடித்தவள் அதற்கான பில் தொகையை மட்டும் செலுத்திவிட்டு அங்கிருந்து கிளம்பிவிட்டாள்.அவனிடம் வீணாக எதுவும் பேசி அசிங்கப்பட அவள் தயாராக இல்லை. அவள் மூளையோ,சமயம் பார்த்து அவளுக்கு சொல்லிக் காட்டியது."நல்லவேளை,அவனிடம் கல்யாணத்துக்கு எஸ் சொல்லாம எஸ்கேப் ஆகிட்ட சுபா” என்று. அந்த நிலைமையிலும் ஆஸ்வாசமாக உணர்ந்தாள்.

இந்த விஷயத்தை எப்படியாவது சதீஷிடம் சொல்லிவிட வேண்டும் என்று முடிவும் செய்துக்கொண்டாள். மதியம் உணவு நேரத்தின்பொழுது அலுவலகம் வந்த ஜெயந்தனின் பார்வை பாவையை தேடியது.அவளைக்காணாது கோபமுற்றவன் அங்கிருந்த பியூனிடம் சுபா உணவருந்தவென பிராணாவுடன் சென்றிருப்பதை கேட்டறிந்து கொண்டான்.

ஏற்கனவே, புதியதாக இந்த ப்ராஜெக்ட் சம்மந்தப்பட்ட விஷயங்களில் பிரணவ் புதியதாக சேர்ந்திருப்பது ஜயனுக்கு பிடிக்கவில்லை. ஆனால் ,இது அவர்களது பார்ட்னர் நிறுவன ஏற்பாடு. இதிலெல்லாம் மூக்கை நுழைக்க இவ்வளவு நாட்களாய் இவனுக்கு விருப்பம் இல்லாமல் இருந்தது. ஆனால் ,இப்போது கைப்பொருளை பற்ற வந்த கள்வனாக பிரணவை யோசித்தான். தனது அந்தஸ்துக்கு இவனெல்லாம் ஒரு ஆளா என்று யோசித்தவன் சுபா வரவும் வேலைகளைத் தொடங்கிவிட்டான்.

சதீஷ் வராதது அவனுக்கு கொஞ்சம் கஷ்டமாக இருந்தது. அவன் இருந்திருந்தால் இன்னுமே வேலைகளை எளிமையாக்கி இருப்பான். சைட் விசிட் செல்லும் சமயங்களில் அவன் உடனிருப்பது நன்றாக இருக்கும். ஆனால்,அவனுக்கும் தனிப்பட்ட வாழ்க்கை உண்டே! பிள்ளை பெற்று அவன் மனைவி இன்று வீட்டுக்கு குழந்தையுடன் திரும்ப வருகிறாள்.அதுவும் ஐந்து மாதங்கள் கழித்து.இன்னும் இரண்டு நாட்களுக்கு அவன் அலுவலகம் வரப்போவது இல்லை என்று நினைத்துக்கொண்டான் ஜெயந்தன்.


இறந்து நாட்களுக்கு விடுப்பில் இருக்கும் சதீஷுக்கு அழைத்து தொந்திரவு செய்யவேண்டாம் என்று மிக கண்டிப்பாகவே ஜெயந்தன் சொல்லியிருந்தான். அதனால் அவனுக்கு அடுத்த நிலையில் இருக்கும் சுபாவின் தலையில் அனைத்து பொறுப்புகளும் விழுந்தது. சீக்கிரமாக வீட்டுக்கு செல்ல முடியவில்லை.

இந்த அழகில்தான் அவள் ஏறத்தாழ நாற்பத்தைந்து நிமிஷங்களாக அலுவலத்தில் இல்லாது போனாள் . வேளையில் கவனமாக இருந்த பொழுதும் சுபாவை கோவப் பார்வை பார்த்துக்கொண்டிருந்தான் ஜெயந்தன்."இவருக்கு என்ன ஆச்சு?வந்ததிலிருந்தே சரியா இல்லையே! நம்மள வேற பாக்குற பார்வையே சரியா இல்ல. இன்னிக்கி உனக்கு எல்லாமே பிரச்சனையா இருக்கேடி சுபா"என்று மனதுடன் பேசிக்கொண்டாள் பெண்.

அவனது பார்வையில் லேசாக பதட்டம் வந்து ஒட்டிக்கொண்டது. அதை மறைக்க கணினியில் பார்வையை பதித்தவள் அதிலேயே ஆழ்த்தும் போனாள் . தனது உணவுக்கு பணத்தை கொடுத்துவிட்டு வெளியே வந்த பிரணாவுக்கு கோவம் தலைக்கு ஏறியது. 'தான் என்ன தப்பாக பேசிவிட்டோம்?உடம்பு முழுவதும் குறையாத திமிர்.இவளையெல்லாம் கல்யாணம் செஞ்சுகிட்டு தான் அடக்கணும். 'என்று மனதில் கறுவிக்கொண்டான் .

ஜெயந்தன் காலையிலிருந்து அலுவலகத்தில் இல்லாததால் அவன் இப்போது வரக்கூடும் என்ற எண்ணமே இல்லாது படுநிதானமாக வந்தவன், சுபாவிடம் வெகு உரிமையாக "இப்போ நா என்ன தப்பா பேசிட்டேன்னு என்மேல இவ்ளோ கோவம்? நார்மலா பெண்களுக்கு இவ்வளவு கோவமும் ஆத்திரமும் சரி கிடையாதுன்னு எங்க பாட்டி சொல்லி கேட்டிருக்கேன்"என்றானே பார்ப்போம் .

சுபாவுக்கு நிஜமாகவே கோவம் தலைக்கேறியது.ஆனாலும் ,அலுவலகம் என்பதால் வார்த்தைகளில் நிதானத்தைக் கொண்டுவந்து,"அப்போ உங்க பாட்டி , ஆண்கள் ஒழுங்கா வேலையை பார்க்கணும்.தேவை இல்லாம பெண்களோட பேசிகிட்டு நிக்கக் கூடாது என்று உங்களுக்கு சொல்லிததரலையா மிஸ்டர்.பிரணவ்?" என்று கேட்டுவிட்டாள் .

சுபாவின் இருக்கை அருகே பிரணவ் நின்றுகொண்டு இருவரும் பேசிக்கொண்டிருப்பதை தனது அறையிலிருந்து பார்த்த ஜெயந்தனுக்கு அங்கே அமர்ந்துகொள்ள முடியவில்லை. எழுந்து அரை வாயிலில் மொபைல் போனை பார்த்துகொண்டு வந்து நின்று விட்டான். ப்ரணாவிடம் சுபா பேசியவை ஜயனுக்கு சந்தோஷத்தைக் கொடுத்தது. பெண் தைரியமானவள்தான் என்று நினைத்துக் கொண்டான்.

பிரணவ் விடுவதாக இல்லை. "ம்ம்..பெண்கள்கிட்ட அதிகம் பேச கூடாதுன்னு சொல்லி இருக்காங்க.ஆனா,நாம விரும்புற,கல்யாணம் செஞ்சுக்க ஆசைப் படுற பெண்கிட்ட பேசித் தானே ஆகணும்?'என்றான். இந்தமுறை ஜயனுக்கு பிராணாவை அடித்துவிடும் அளவுக்கு ஆத்திரம் வந்துவிட்டது.

சுபாவின் பேச்சிலிருந்தே பிரணவ் மீது அவளுக்கு எந்த ஈடுபாடும் இல்லை என்பதை ஜெயன் புரிந்துகொண்டுவிட்டான். இன்னமும் அவளிடம் இவன் இப்படி பேசுகிறானே என்று இருந்தது அவனுக்கு. சுபா இப்போது நிமிர்ந்து நின்றாள்.

"மிஸ்டர்.பிரணவ், உங்க வேலை அதாவது இருக்கிறதா சொல்லிக்கிட்டு இங்கே சைட்டுக்கு நீங்க வந்த வேலை முடிஞ்சிருச்சுன்னா கிளம்புங்க.இல்லன்னா,ஆஃபீஸ் ல உங்க ஹெட் கிட்ட பேச வேண்டியது வரும். இனி,என்கிட்ட இந்த மாதிரி தேர்ட் கிரேட் பேச்செல்லாம் வச்சுக்கிட்டா, அடுத்த மோவ் பத்தி நா யோசிப்பேன்"என்று முகத்தை கடுமையாக்கிக்கொண்டு சொல்லிவிட்டாள்.

முகம் கருத்தவன் சைட்டிலிருந்து கிளம்பிவிட்டான். வழியில் நின்றுகொண்டு இவர்கள் இருவரையும் பார்த்துக்கொண்டிருந்த ஜெயந்தனை கண்டவனுக்கு வயிற்றில் புளி கரைந்தது. இவன் எப்போது இங்கே
வந்தான் என்று அபாயமணி காதுகளில் கேட்கவே அதற்குமேல் அங்கே அவன் தங்கவில்லை .

அதற்குப்பிறகு அன்று மாலை முழுவதும் ஜெயந்தனின் முகம் புன்னகையில் மலர்ந்திருக்க, இப்போது இவருக்கு என்னவாகிவிட்டது என்று மீண்டும் குழம்பினாள் பெண். அன்றைய வேலைகள் முடிந்து சுபா கிளம்பும் பொழுது மணி ஏழாகிவிட்டது.அங்கிருந்து வீடு செல்ல இன்னும் இரண்டு மணிநேரம் ஆகிவிடும் என்று களைத்துப் போனவளிடம் வெகு உரிமையாக ,"ம்ம்ம்,சீக்கிரம் கிளம்பு சுபா, தியா உனக்காக வெயிட் பண்ணுவா. நா வேற உன்னை வீட்டுல விட்டுட்டு போகணும்"என்ற ஜெயந்தனை என்னதிது..என்று பார்த்துவைத்தது பெண்.

ஜெயந்தனது மனதில் இருக்கும் ஆழ் உணர்வு,இவளுக்கும் உனக்கும் ஏதோ மிக நெருங்கிய தொடர்பு இருக்கிறது என சொல்லிக்கொண்டே இருக்கிறது.அவளிடம் இன்னமும் நெருங்கிப் பழகினால் தான் அது என்ன என்று புரிந்துகொள்ள முடியும்.எப்படியும் இவளை எனக்கு நிரம்ப பிடித்திருக்கிறது. தியாக்குட்டியை பார்த்தால் வேற்றாளாக தோன்றவில்லை. பின்னர் இவளை மணப்பதில் தடை என்ன?என்றெல்லாம் முதல் நாள் இரவிலிருந்து அவனுக்கு யோசனைகள் மண்டையில் ஓடிக்கொண்டிருக்கிறது.

அந்த யோசனையின் விளைவுதான் ,சுபா ப்ரணாவுடன் வெளியே சென்றாள் என்று தெரிந்ததும் வந்த கோவமும், இப்போதைய குளுமையும். அவளை அவளது அடுக்ககத்தில் விட்டுவிட்டு தனது பெசன்ட் நகர் பிங்கலவாய் நோக்கி அவனது வாகனம் திரும்பியது.

வீட்டில் அவனிடம் எதுவும் சொல்லாமல் அவனது பெற்றோர் திடீரென வந்திருந்தார்கள். சாயாவுடனான திருமணம் நடக்க வாய்ப்பில்லை என்று தெரிந்த பிறகு கொஞ்ச நாட்களாக அமைதியாக இருந்தவர்களுக்கு இப்போது சுப-தியாவின் இந்திய வரவு அவ்வளவு சந்தோஷத்தை தரவில்லை.அதுவும் தியாவுடன் தங்கள் மகனுக்கு அறிமுகம் உண்டு என்பதை அவர்களால் ஜீரணிக்க முடியவில்லை.

தியாவை தங்கள் பேத்தி என்று உலகுக்கு அறிவிக்க வேண்டுமென்றால்,சுபாவுடனான திருமணம் பற்றியும் சொல்லியாகவேண்டும்.

என்னதான் இவனுக்கு அந்தஸ்து மோகம் உண்டு என்ற விம்பத்தை சுபாவின் மனதில் ஏற்படுத்தி இருந்தாலும் நிஜத்தில் மகன் அப்படிப்பட்டவன் கிடையாதே! அவன் அந்த பெண்ணை தேடிச் சென்று மீண்டும் அவளுடன் வாழத் தொடங்கியும் விடுவான்.

ஏற்கனவே கன்யாவுடன் இவனது திருமணம் அவர்களது ஒப்புதல் இல்லாமல் தான் நடந்தது.நல்லவேளையாக அவள் மரித்துப்போனாள் . இப்போது சுபாவுடன் இவர்கள் முன்னிலையில் திருமணம் நடந்ததாலும் அவளும் கூட இவர்களது குடும்பத்திற்கு தகுதியானவள் இல்லையே.அதனால்தானே அவளையும் கையெழுத்த்து வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தது .

வந்தவர்கள் கையில் நிறைய பெண்களின் புகைப்படங்கள்.
சுபாவிடம் தங்கள் மகனின் மனம் ஈடுபடும் முன்னர் வேறு ஒரு பெண்ணுடன் அவனது திருமணத்தை நடத்திவிடும் அவசரம். அவர்களிடம் ஒன்றும் சொல்லாமல் அவர்கள் எடுத்துவந்த புகைப்படங்களும் பெண்ணை பற்றிய விவரங்களும் அடங்கிய கோப்பையை சந்தோஷமாகவே அவர்களிடமிருந்து வாங்கிக்கொண்டான் ஜெயந்தன்.

இரண்டு நாட்கள் அவனுடன் இருந்து வைத்து அவர்களும் "சீக்கிரம் நல்ல பதிலை சொல்லுப்பா. இந்த முறையாவது எங்க இஷ்டத்துக்கு கல்யாணம் நடக்கணும்"என்றுவிட்டு கிளம்பினார்கள்.அவர்களிடம் புன்னகை முகமாக, "கிளம்புங்க மா. எல்லாம் சரியா நடக்கும் என்று விடை கொடுத்து அனுப்பி வைத்தான்.

அன்று வெளியே ப்ரணாவுடன் சாப்பிட்ட உணவு ,இரண்டு நாட்களாக சுபாவுக்கு வயிறு தொந்திரவைக் கொடுத்துக்கொண்டிருக்கிறது. தியாவுக்கு பள்ளி விடுமுறை. சொந்தத்தில் ஏதோ திருமணம் என்று தியாவையும் கூட்டிக்கொண்டு அவளது அம்மா டெல்லி சென்றிருக்கிறார்.அலுவலகத்தில் சதீஷும் இல்லை.தானும் விடுப்பு எடுக்க முடியாது என்று தீர்மானித்தவள்,ஏதேதோ மருந்துகளை எடுத்துக்கொண்டு சமாளித்தாள். மருத்துவமனைக்கும் போகவில்லை.

வீட்டில் இருக்கவும் விருப்பம் இல்லை.தனியாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் . அலுவலகத்திற்கு விடுப்பு எடுக்காமல் வந்துவிட்டாள் . ஆனால்,அன்று மதியத்திற்கு மேல் அவளால் தாக்குப்பிடிக்க முடியவில்லை. எடுத்துக்கொண்ட மருந்துகளும் சேர்ந்து ,வாந்தியும் , தலை சுற்றலுமாக அவளை படுத்தி எடுத்தது.

இவற்றை கவனித்துக்கொண்டிருந்த ஜெயந்தன் அவளை வற்புறுத்தி மருத்துவமனைக்கு அழைத்து சென்றுவிட்டான்.அதற்குள் அவளுக்கு லூஸ் மோஷனும் ஆரம்பித்திருந்தது. தனக்கு இந்த நேரத்தில் துணைக்கு யாருமில்லை என்ற உணர்வில் பெண்ணுக்கு அழுகை வந்தது.

ஜெயன் முன்னால் அழ விருப்பம் இல்லை. கண்ணீரை உள்ளே இழுத்துக்கொண்டாள். மிகவும் பலவீனமாக உணர்ந்தாள். அவளது நிலைமையை புரிந்துகொண்டவன் அவளைவிட்டு அகலவே இல்லை. அவளுக்கு மருத்துவமனையில் ட்ரிப்ஸ் போட்டு,அன்று இரவு வீட்டுக்கு அழைத்து செல்லலாம் என்றுவிட்டார்கள்.

சுபா நான் போய்க்குவேன் என்று சொன்ன பொழுதும், அவளுக்காக இட்லியும்,தனக்காக சப்பாத்தியும் ஒரு உயர்ரக ஹோட்டலில் பார்சல் வாங்கிக்கொண்டவன் நேரே சென்றது அவளது பிளாட்டுக்குத்தான்.
அவன் வாங்கி வந்ததை கொறித்துவிட்டு சோஃபாவில் படுத்து தூங்கிவிட்டாள் சுபா. அவளை மெல்ல எழுப்பி அவளது படுக்கை அறையில் கொண்டுபோய் படுக்க வைத்தான்.

அங்கே அவனுக்காக அதிர்ச்சியும் ஆச்சர்யமும் காத்திருந்தது.
 
Top