எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

#அகத்திரை_திறவாயோ…

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#அகத்திரை_திறவாயோ….

அழுத்தமான காதல் கதை….

மலர், ஆட்டிசம் உள்ளதால் எதை கிரகிக்கவும் சிறிது நேரம் எடுக்கும்….அதை வைத்து குடும்பமே தள்ளி வைக்கிறது அவளை…..

எது செய்தாலும் குற்றம்…..

அம்மா அப்பா அண்ணன் அக்கா இப்படி பெரிய குடும்பம் இருந்தும் அனாதை போல தான் வாழ்க்கை…..

எதையும் பகிர்ந்து கொள்ள அவளின் டைரி மட்டுமே……

பெரும் முயற்சிக்கு பின், கல்லூரியில் படிக்க வர இலக்கியா தோழியா வரா…

எங்கே இவளும் தனக்கிருக்கும் குறை பாடு தெரிந்தால் விலகி சென்று விடுவாளோ அப்படிக்கர பயம் அவளை அதை பத்தி பகிர விடவில்லை….

இயல்பிலேயே கொஞ்சம் சுட்டி பெண் தான் மலர், இந்த பயந்த சுபாவம் அவள் குடும்பம் தந்த பரிசு…..

நட்பு இறுக, இலக்கியாவின் அண்ணன் ஆதிக்கு மலரை பார்த்த மாத்திரத்தில் காதல் …..

காதல் தானா?????

இலக்கியாவின் நட்பு, அவள் அம்மாவின் பாசம், வாசுவின் தோழமை இதை எல்லாம் இழக்க விரும்பாமல் கல்யாணத்திற்கு சம்மதிக்க…..

கல்யாணமும் நடக்குது…..

ஆன அதன் பிறகு…..தெகிட்ட தெகிட்ட காதல் வாழ்வு இருவருக்கும்…..

இல்ல இல்ல ஆதிக்கு அப்படினு சொல்லனுமோ?????

அவளின் குறை பாடு அவள் வீடினரின் மூலமாகவே ஆதிக்கு தெரிய வர…..

அவனின் முடிவு??????

மலர், ரொம்ப கஷ்டப்பட்டா….சொந்த வீட்டில் கூட அனாதையாய்…..

பொற்காலம் அப்படினா அது இலக்கியா கூட இருந்த வருடங்கள் தான்……

ஆதி, இவன் காதலில் களங்கம் இல்லை தான், அந்த காதலை கொஞ்சம் லேட்டா உணர்ந்துட்டான்…..

டைரி, நிழல் காலம் அப்படி மாத்தி மாத்தி தந்தது ரொம்ப நல்லா இருந்தது…..

முக்கியமா “Way of narrating the story” is simply awesome writer 👏👏👏👏👏

எனக்கு ரொம்ப பிடிச்சது……

போட்டியில் வெற்றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐
 
Top