எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை- அத்தியாயம் 10

Status
Not open for further replies.

_6749524b-0c1b-4d6c-8a5a-f12100c694c1.jpgWhatsApp Image 2024-04-02 at 10.40.14 PM.jpeg

அத்தியாயம் 10

அழகிய பெரிய வீடு அது.​

வீட்டிற்குள் நுழைந்தவளிடம் "சாரி அதிஷா. இங்க பூஜை அறையெல்லாம் இல்லை. எனக்கும் அதுல எல்லாம் பெருசா நம்பிக்கையில்லை. பெரியவங்க யாரும் இருந்திருந்தா ஏற்பாடு பண்ணிருப்பாங்க பட் இங்க நானும் ரோஷனும் மட்டும் தான்.இனி நீயும்" என்றான்.​

"இட்ஸ் ஓகே..." எவானம் இடிந்து வீழ்வதில்லைன்றபடி அவனுடன் நடந்தாள்.​

அவர்களுடனே வந்த ரோஷனும் அவர்களுக்கு தனிமை கொடுத்து தனது அறைக்குச் சென்று விட்டான்.​

அவளை ஒரு அறைக்குள் கொண்டு விட்டவன் "இது தான் என் ரூ... சாரி நம்ம ரூம். ஃபிரெஷ் அப் பண்ணிட்டு ரெஸ்ட் எடு எனக்கு கொஞ்சம் வேலை இருக்கு முடிச்சிட்டு வரேன்.எதுவும் தேவைன்னா ரோஷனை கூப்பிடு. அவன் ரூம்ல தான் இருப்பான்" என்றான்.​

உடலும் உள்ளமும் களைத்து போயிருந்தவளுக்கு அந்த தனிமை தேவையாகவே இருக்க 'சரி' என்னும் தோரணையில் தலையாட்டியவளின் கன்னத்தில் மென்மையாக தட்டியவன் தனது உடைகளை எடுத்து கொண்டு அடுத்த அறைக்குள் புகுந்து தயாராகி வெளியில் கிளம்பிவிட்டான்.​

கண்ணாடி முன் நின்று உடுத்தியிருந்த திருமண பட்டை அகற்றுவதற்காக மாராப்பில் கை வைத்த தருணம் ஆதிஷின் நினைவுகள். அந்தப் புடவையே அவன் தேர்ந்தெடுத்தது தானே.'பிடிக்கலைன்னா சொல்லிடு, புடவையா இருந்தாலும் சரி புருஷனா இருந்தாலும் சரி' என்று அவன் அன்று சொன்னது காதில் எதிரொலித்தது. இன்று மணக்கோலத்தில் அவளை பார்த்ததும் அவன் கண்களில் தோன்றிய கோபமும் மனதை கலங்கடிக்க தன்னையறியாமலே கண்களில் கண்ணீர்.​

எதனால் வருகின்றது என்றும் புரியவில்லை, அவளுக்கும் அவனுக்கும் இடையிலான உறவுக்கு என்ன பெயர் என்றும் விளங்கவில்லை. இனியும் அவனை நினைத்தால் அது பாவம், யாஷிற்கு செய்யும் துரோகம் என்று புத்திக்கு உரைத்தாலும் மனம் அழுது புலம்புகிறதே என்செய்வாள்.​

"சொன்னேன்...சொன்னேன்...பிடிக்கலன்னு சொன்னேன். ஆனால், எதுவும் மாறலையே" என்று புலம்பியபடி வேக வேகமாக புடவையை களைந்தாள். மனதில் இருந்த கோபம் ஆற்றாமை அனைத்தையும் அதில் காட்டினாள்.​

அவள் பிடித்து இழுத்த வேகத்தில் புடவையில் இருந்த சேஃப்டி பின் குத்தி புடவை கிழிந்தே விட்டது. அதையெல்லாம் கண்டுக்கொள்ளாமல் தன் மேனியை தழுவி நின்ற புடவையை முற்றாக அகற்றியிருந்தவள் அதனை அப்படியே வாரி சுருட்டி தனக்கு முன்னே இருந்த நிலைக்கண்ணாடியில் விட்டெறிந்தாள். கைகளை நிலைக்கண்ணாடி மேசையின் மீது ஊன்றி நின்று தனது முகத்தையே ஆழ்ந்து பார்த்தவளுக்கு அழுகை.​

ஆனால், கட்டுப்படுத்திக்கொண்டாள். கண்ணீர் விழவே கூடாது என்று முடிவெடுத்துவிட்டாள். தெரிந்தோ தெரியாமலோ இந்த வாழ்க்கைக்குள் நுழைந்துவிட்டாள். அவளின் சுயநினைவோடு நுழைந்திருக்கிறாள். இனி வாழ்ந்து பார்க்கவேண்டியதும் அவளது பொறுப்பு தானே.​

ஆழ்ந்த மூச்சை எடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டவள் குளியலறைக்குள் நுழைந்திருந்தாள். குளித்து முடித்து காட்டன் புடவை ஒன்றை எடுத்து உடுத்தியவள் அப்படியே கட்டிலில் சாய்ந்தமர்ந்தாள்.​

மனம் சோர்வாக இருக்க தூங்கி எழுந்தால் தேவலாம் என்று தோன்ற விட்டத்தை பார்த்துக்கொண்டே படுத்தாள். ஆதிஷின் நினைவுகள், யாஷுடன் திருமணம் என்பதை எல்லாம் தாண்டி இன்னமும் அவளது உள்ளுணர்வு எதையோ அவளிடம் சொல்லிக்கொண்டே இருந்தது. முன்பை விட இன்னமும் அழுத்தமாக சொல்லியது.​

யோசித்தாள்.​

யாஷிடம் என்ன தவறாக இருக்க முடியும் என்று யோசித்தாள். மீண்டும் மீண்டும் மீராவின் இறப்பும் அவள் கழுத்தில் இருந்த சங்கிலி அவன் அறையில் இருந்ததுமே நினைவுக்கு வந்தன. அதற்கான விளக்கம் அவன் கொடுத்திருந்தாலும் அவளுக்குள் ஏதோ நெருடல்.​

யோசித்து யோசித்தே களைத்து போனவள் எப்பொழுது தூங்கினாள் என்றே அவளுக்கு தெரியவில்லை ஆழ்ந்து உறங்கிப்போயிருந்தாள்.​

***​

அந்த பெரிய வீட்டின் இரும்பு கேட்டை திறந்து கொண்டே வெளியே ஓடி வந்தாள் அதிஷா.​

உடல் முழுவதும் வியர்த்து அதன் உபாயத்தால் அவளது பின்னலுக்கு அடங்காமல் சிலிர்ப்பி கொண்டு வந்திருந்த கூந்தல் திரள்கள் அவளது முகத்திலும் கழுத்திலும் ஒட்டிக்கொண்டிருந்தன.​

கசங்கிய புடவையும் கண்ணில் மரண பயத்துடனும் மூச்சிரைக்க அந்த வீட்டை விட்டு வீதிக்கு ஓடி வந்தவளுக்கு கண்ணில் புலப்பட்டது எல்லாம் காரிருளில் வெறிச்சோடி இருந்த சாலை மட்டுமே.​

தப்பித்து சென்றுவிட வேண்டும் என்கின்ற எண்ணத்தில் ஓட்டமெடுத்தவள் ஒரு கட்டத்தில் முச்சந்தியில் வந்து நின்றாள்.​

அவசரமாக இடமும் வலமுமாக தலையை திருப்பி பார்வையை சுழலவிட்டாள்.​

எந்த பாதையை தேர்ந்தெடுப்பது என்று நொடியில் முடிவு செய்தாக வேண்டிய நிலை. தாமதிக்கும் ஒவ்வொரு நொடியும் மரணம் நெருங்கி கொண்டிருந்தது.​

இடது புறம் திரும்பினால் காவல் நிலையம் சென்றுவிடலாம்.​

அவளுக்கு தெரியும். அவள் நன்கு அறிந்த இடம் தான் அது. காவல் நிலையம் சென்றால் தப்பித்துவிட வாய்ப்புகள் இருக்கின்றன.​

சட்டென முடிவு செய்தவள் இடப்புறமாக திரும்பி இரண்டு எட்டுக்கள் வைத்திருப்பாள். அவளது மூளையில் பதிந்த காட்சிகள் வலது புறத்தில் நின்றிருந்த ஜீப்பும் அதன் பின் பகுதியில் ஒட்டியிருந்த " Keep calm… the sky is not falling" (அமைதிகொள் மனமே! வானம் இடிந்து வீழ்வதில்லை) என்ற வாசகமும் கண்ணில் பட்டதாக நினைவூட்ட சட்டென்று திரும்பி பார்த்தாள்.​

ஆம் அதே வாசகம் தான்.​

அவளுக்கு பரிட்சயமான வாசகம்.​

அவளுக்கு தேவையான வாசகமும் கூட.​

வாசகம் மட்டும் அல்ல வண்டிக்காரனும் கூட பரிச்சயமானவன் தானே.​

இடது புற சாலையை தேர்ந்தெடுத்த அவளது பாதங்கள் அடுத்த நொடி திசை திரும்பியிருந்தது.​

காவல் நிலையம் சென்றால் தப்பிக்க வாய்ப்பு இருக்கலாம். ஆனால், அதில் அவளுக்கு நம்பிக்கை இல்லை. அவனிடம் சென்றால் நிச்சயம் தப்பித்துவிடுவாள்.​

அவளுக்கு காவலனாக நிச்சயம் அவன் இருப்பான்.​

அந்த ஜீப்பை நோக்கி அடி எடுத்து வைத்த அவள் கால்கள் இரண்டும் மெல்ல வேகத்தை கூட்ட ஓடி சென்று அந்த ஜீப்பின் பின் புறத்தில் இருக்கரங்களையும் அடித்து ஊன்றினாள்.​

வண்டியை சாலை ஓரத்தில் நிறுத்தி விட்டு அதன் பானெட்டின் மீது ஏறி சாய்ந்து அமர்ந்து கால் மேல் கால் போட்டுக்கொண்டு ஒரு கரத்தை தலைக்கு கொடுத்து மறு கரத்தில் பீர் பாட்டிலை வைத்து குடித்துக்கொண்டிருந்தான் அவன்.​

ஜீப்பினுள்ளிருக்கும் வானொலியில் மெல்லிய பாடல் கசிந்துகொண்டிருந்தது.​

அவள் ஓடி வந்து மோதி நின்றதில் வண்டியில் ஏற்பட்ட அதிர்வில் பாடலில் இலயித்திருந்தவனின் ரசனை கலைய கடுப்பானவன் "அடிங், எவன்டா அது என் வண்டிமேல வந்து மோதுறது" என்று கேட்டுக்கொண்டே பானெட்டின் மீதிருந்து பாய்ந்திறங்கினான் ஆதீஷ்.​

வேகமாக அவளை நோக்கி வந்தவனுக்கு களைப்பின் மிகுதியில் வண்டியின் மீது சாய்ந்து நின்றிருந்த பெண்ணின் முதுகுப்பகுதியே தெரிந்தது.​

பெண் என்றதும் அவளை பார்த்து ராகம் போல விசிலடித்தவன் "ஹேய் பாப்பா... என்ன நீயும் சரக்கடிச்சிருக்கியா... நடந்து வரும் போதே வண்டி மேல வந்து மோதுற" என்றான்.​

அவன் குரல் செவிகளில் விழுந்ததும் சட்டென்று திரும்பி பார்த்தாள் அதிஷா.​

"ஹேய்...டாக்டர் பேபி?" என்று சொன்னவனின் விழிகள் அவளை ஆராய்ச்சியாக பார்த்தது.​

முகமெல்லாம் வியர்த்து வடிய கலைந்த கூந்தலும், கசங்கிய புடவையும் கழுத்தில் தொங்கிய புது தாலியும் கை, முகம், கழுத்து என்று தாலியிலும் தெறித்திருந்த இரத்தக் கறையுமாக நின்றிருந்தாள் பெண்ணவள்.​

அவனை பார்த்ததும் மனதிற்குள் ஒருவகை நிம்மதி பரவியதை உணர்ந்தவளுக்கு ஒற்றை கண்ணில் தேக்கி வைத்திருந்த விழிநீர் உருண்டோட "ஹெல்ப் பண்ணுங்க ப்ளீஸ்" என்று நலிந்த குரலில் சொல்லிக்கொண்டே அவனை தாவி அணைத்துக்கொண்டாள் பெண்ணவள்.​

அவளது அணைப்பில் இருந்த இறுக்கமே அவளுக்கு இப்பொழுது ஆதரவும் அரவணைப்பும் தேவை என்று அவனுக்கு எடுத்து கூறினாலும் அதெல்லாம் அவனை அசைத்து பார்க்க முடியுமா என்ன.​

"ஏய் ஏய் ஏய் ....தள்ளு…தள்ளு" என்று சொல்லிக்கொண்டே அவளை தன்னிடம் இருந்து விலக்கி நிறுத்தியவன் "உனக்கெதுக்கு நான் ஹெல்ப் பண்ணனும்... நீ என்ன என் பொண்டாட்டியா…அதெல்லாம் முடியாது...அது தான் அவனை கட்டிக்கிட்டு போயிட்டல்ல… மரியாதையா கிளம்பு" என்று அதட்டி விட்டு திரும்பி நடக்க ஆயுத்தமானவனின் கரத்தை பிடித்து நிறுத்தியிருந்தாள் பேதையவள்.​

இப்பொழுது அவன் மட்டுமே அவளுக்கு அடைக்கலமளிக்க முடியும்.​

"எனக்கு சம்மதம்" என்றாள்.​

அவன் கையை பற்றியிருந்த அவள் கரத்தை திரும்பி பார்த்தவன் "கையை எடு... என்ன சம்மதம்...உளறாம கிளம்பு" என்று சொல்லிவிட்டு ஜீப்பின் ஓட்டுனர் பகுதியின் கதவை திறந்து உள்ளே ஏற சென்ற சமயம் "உங்க கூட ஒரு நைட் இருக்க சம்மதம்..." என்றாள் வேகமாக.​

அவள் சொல்லில் அதிர்ந்தவன் அவளை திரும்பி பார்க்க "அன்னிக்கு கேட்டிங்களே ஒரு நைட்டுக்கு வரியான்னு... வரேன் கூட்டிட்டு போங்க" என்றாள்.​

அவள் குரல் நலிந்து ஒலித்தது. அதிகமாக மூச்சு வாங்கியது. பிடிமானத்திற்காக ஜீப்பின் மீது ஒற்றை கையை ஊன்றி கொண்டு தான் நின்றிருந்தாள்.​

எப்பொழுது வேண்டுமானாலும் மயங்கி விழும் நிலையில் தான் இருந்தாள்.​

அவள் முன்னே வந்து கையை கட்டிக்கொண்டு நின்றவன் "என்னாச்சு?" என்று கேட்டு முடிக்கவில்லை நிலைக்கொள்ள முடியாமல் அப்படியே சரிந்து விழ போனவளை அவன் தாங்கி பிடித்திருந்த நேரம் துப்பாக்கி சத்தம் செவிகளை துளைத்தது.​

அவளை நோக்கி பாய்ந்து வந்த தோட்டா நல்லவேளையாக அவள் சரிந்து விழுந்ததில் அவளுக்கு பதில் அவன் ஜீப்பை துளைத்திருந்தது.​

"ஏய்" என்றபடி அதிர்ந்து பார்த்தவன் துப்பாக்கி சத்தம் வந்த திசையை நோக்கி பார்க்க அங்கே சில முகமூடி அணிந்தவர்கள் துப்பாக்கியுடன் நின்றிருந்தார்கள்.​

மீண்டும் அவளை நோக்கி சரமாரியாக சுட சட்டென்று சுதாரித்துக்கொண்டவன் அதிஷாவை இழுத்துக்கொண்டே ஜீப்பிற்கு பின்னால் மறைந்துக்கொண்டான்.​

"அவங்க வந்துட்டாங்க…நீங்க போய்டுங்க ப்ளீஸ்" என்று கெஞ்சியவளை துளைத்தெடுக்கும் பார்வை பார்த்தவன் முதுகிற்கு பின்னால் சொருகியிருந்த துப்பாக்கியை கையில் எடுத்தபடி"ஷட் அப்... என் உயிர் போகாமல் உன் உயிர் போகாது திஷா " என்று சொல்லிக்கொண்டே அவர்களை நோக்கி சரமாரியாக சுடத் தொடங்கியிருந்தான்.​

அவனது எதிர்பாராத பதில் தாக்குதலில் அவர்களும் சற்றே தடுமாறி போக அந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்தி அதிஷாவை ஜீப்பிற்குள் ஏறச் சொன்னவன் அவர்களை நோக்கி துப்பாக்கி தாக்குதல் நடத்தியபடி சுற்றி வந்து வண்டிக்குள் ஏறிக்கொண்டான்.​

அவனது வண்டி சீறிப்பாய்ந்து செல்ல அந்த கயவர்களும் விடாமல் அவர்களின் பின்னால் காரிலும் ஜீப்பிலும் துரத்திக்கொண்டே சென்றனர்.​

"திஷா யாரு அவனுங்க எல்லாம், உன் மேல எல்லாம் ரத்தமா வேற இருக்கு… என்னாச்சு?" என்று கேட்டான்.​

"அவனுங்க... யாஷோட ஆளுங்க... அவனும் அவன் தம்பியும்... நான் அவனை அடிச்சு போட்டுட்டு..." என்று தட்டு தடுமாறி அவள் சொல்ல ஆரம்பிக்கும் போதே அவர்களை துரத்திக்கொண்டு வந்த வண்டி ஒன்று அவர்களின் வண்டியின் பின்னால் மோதியிருக்க "****" என்று ஆங்கில கெட்ட வார்த்தையில் திட்டியபடி வண்டியின் கியரை மாற்றி வேகத்தை கூட்டியிருந்தான் ஆதிஷ்.​

அவர்களிடமிருந்து தப்பிக்கும் பொருட்டு பிரதான சாலைக்குள் வண்டியை விட்டிருந்தான். இரவு நேரமென்றாலும் பிரதான சாலை என்பதால் வாகனங்கள் இன்னமும் குறையாமல் சென்றுக்கொண்டிருக்க அதற்கு மத்தியில் சீறி பாய்ந்தது அவனது ஜீப்.​

தனது வண்டியை வளைத்து, ஒடித்து, சென்றுக்கொண்டிருந்த வாகனங்களுக்கு மத்தியில் இடைபுகுந்து என்று இலாவகமாக செலுத்தினான் ஆதிஷ்.​

அவனின் வேகத்திற்கு ஈடுகொடுக்க முடியாத மற்றவர்களின் வாகனங்கள் சற்றே பின் தங்கி போவதை ரியர் வியூ கண்ணாடியில் பார்த்தவன் "'சிரி கால் கதிர்" என்று அலைபேசிக்கு உத்தரவிட்டான்.​

கதிர் தொடர்ப்பில் வந்ததும் "கதிர் எங்க இருக்க? நான் சொல்லுற இடத்துக்கு வந்துரு" என்றபடி வரவேண்டிய இடத்தையும் சொல்லிவிட்டு வைத்தவன் வேறு சில புலன செய்திகளையும் அனுப்பிவிட்டு அருகில் அமர்ந்திருந்த அதிஷாவை திரும்பி பார்த்தான்.​

அவளோ சோர்வாக இருக்கையில் சாய்ந்தமர்ந்திருந்தவள் பின்னால் திரும்பி பார்த்துக்கொண்டே "அவங்களை எல்லாம் காணோம்... போய்ட்டாங்களா?" என்று கேட்டபடி அவனை பார்த்தாள்.​

"இல்லை... ஜஸ்ட் மிஸ் பண்ணியிருக்காங்க. இன்னும் கொஞ்ச நேரத்துல மறுபடியும் நெருங்கிடுவாங்க. அதுக்குள்ள நாம எஸ்கேப் ஆகணும்" என்றான்.​

"எப்படி...என்ன பண்ணுறது?" கேட்டவளின் குரலில் பதட்டம்.​

"வண்டியை மாத்தணும்" என்றவன் முன்னே வந்த திருப்பத்தில் வண்டியை ஒடித்து திருப்பியிருந்தான்.​

ஆள் அரவமற்று இருந்தது அந்த சாலை. அந்த சாலையிலேயே சற்று தூரம் சென்றவன் வண்டியை ஒரு அடர்ந்த மரத்திற்கு கீழ் நிறுத்தியிருக்க அங்கே ஏற்கனவே கவாசாக்கி நிஞ்ஜா 650 ரக பைக்குடன் நின்றிருந்தான் கதிர்.​

அந்த வண்டியையும் புடவை அணிந்திருந்த அதிஷாவையும் அவனையும் ஆதிஷ் மாறி மாறிப் பார்க்க அவனது பார்வையின் அர்த்தம் புரிந்தக்கொண்ட கதிர் "நீங்க தானே உடனே வர சொன்னிங்க. நான் இந்த வண்டிய எடுத்துட்டு தான் வெளிய போயிருந்தேன். நீங்க கால் பண்ணதும் அப்படியே வந்துட்டேன்" என்றான்.​

"சரி தள்ளு" என்றபடி பைக்கில் ஏறி அமர்ந்தவன் "ஏற முடியுமா?" அதிஷாவிடம் கேட்டான்.​

"ம்ம்..." என்றபடி அதிஷா அவனை நெருங்கி வந்த சமயம் அவள் கழுத்தில் தொங்கி கொண்டிருந்த தாலி தான் அவன் கண்களில் பட்டது. அதைப் பார்த்து விட்டு அவள் விழிகளை நிமிர்ந்து பார்த்தான்.​

"இன்னும் இதுக்கு வேல்யூ இருக்கா?" கேட்டான் அவன்.​

அவள் பதில் ஏதும் பேசாமல் கழுத்தில் இருந்த மாங்கல்யத்தை தலைக்கு மேலாக கழட்டி எடுத்தவள் அங்கே மண்டிக் கிடந்த முட்புதரின் மீது தூக்கி எரிந்திருந்தாள். காலையில் அவள் கழுத்தில் ஏறியிருந்த தாலி முழுதாக ஒரு நாள் கூட முடியாமல் இறங்கிவிட்டது. அதற்காக அவளுக்கு துளியும் வருத்தமில்லை.​

கதிர் அவளை அதிர்ந்துப் பார்த்துக்கொண்டு நின்றிருக்க ஆதிஷின் இதழ்களில் இருக்கின்றதா என்றும் சொல்ல முடியாத மெல்லியப் புன்னகை.​

"ஏறு" என்று கண்களால் தனக்கு பின்னால் இருந்த இருக்கையை காட்ட ஒரு கரத்தால் புடவையை கால் முஷ்டிவரை ஏற்றி பிடித்தவள் மறுக்கரத்தை அவன் தோளில் வைத்து அழுத்தியபடி பைக்கில் ஏறி அமர்ந்தாள்.​

"ஓகே தானே" என்று அவளிடம் உறுதி படுத்திக்கொண்டவன் "கதிர் நீ ஜீப்பை எடுத்துட்டு கிளம்பு... ஜீப்பை பார்த்துட்டா அவனுங்க உன்னை துரத்தவும் வாய்ப்பிருக்கு... ஜாக்கிரதையா போ. துப்பாக்கி இருக்குதானே?" என்று கேட்டான்.​

"இருக்கு ண்ணே" என்று கதிர் சொல்ல "சரி நீ கிளம்பு" என்றான்.​

"நீங்க எங்க போக போறீங்க?” என்று கதிர் கேட்க "இவளை பத்திரமா ஒரு இடத்துல விட்டுட்டு வரேன். அந்த யாஷ் வீட்டை செக் பண்ண சொல்லி செல்வாவுக்கு வாட்சப் பண்ணியிருந்தேன். என்னாச்சுன்னு விசாரிச்சு எனக்கு அப்டேட் பண்ணிடு" என்று வரிசையாக கட்டளையிட்டவன் பைக்கை அதிவேகத்தில் செலுத்தியிருந்தான்.​

இதற்கெல்லாம் காரணம் அந்த யாஷ் தான் என்று தெரிந்தாலும் கூட இப்போதைக்கு அதிஷாவை ஒரு பாதுகாப்பான இடத்தில் விட வேண்டுமென்று மட்டும் தான் அவன் சிந்தனையில் ஓடிக்கொண்டிருந்தது.​

அவளை அழைத்துக்கொண்டு தனக்கு தெரிந்த பெண் காவலதிகாரி வீட்டிற்கு தான் சென்றான்.​

அவருக்கு முதலிலேயே புலனம் வழியாக அவன் தகவல் அனுப்பியிருக்க அவனின் பைக் வீட்டு வளாகத்தில் நுழையும் போதே அவனுக்காக வாசலில் காத்துகொண்டு நின்றிருந்தார் இன்ஸ்பெக்டர் பிரேமா.​

அவளை அங்கே இறக்கி விட்டவன் "கொஞ்சம் கெயர்ஃபுல்லா பார்த்துக்கோங்க" என்று சொல்லிக்கொண்டிருக்கும் போதே துப்பாக்கி சத்தம் கேட்டது.எப்படியோ மோப்பம் பிடித்து அவர்களை தேடிக்கொண்டு அங்கேயும் வந்துவிட்டார்கள்.​

"ஷிட் இங்கையும் வந்துட்டானுங்க" என்று ஆதிஷ் சொல்லிக்கொண்டு இருக்கும் போதே "அஆஆ" என்று அலறியபடி தனது வலது பக்க தோள் பட்டையை பிடித்துக்கொண்டே கீழே சரிந்திருந்தார் பிரேமா.​

"ஓஹ் மை காட், பிரேமா" என்றபடி அவன் வண்டியிலிருந்து இறங்க முற்பட "சார், இவங்கள அழைச்சிட்டு கிளம்புங்க...சீக்கிரம். இங்க நான் பாத்துக்குறேன்" என்றார்.​

அதே நேரம் மற்றொரு துப்பாக்கி சத்தத்தோடு அவர்களின் வண்டியும் தங்களை நெருங்கிவிட்டதை கவனித்தவனுக்கு இதற்கு மேல் யோசிக்க அவகாசமில்லை என்று தோன்ற "ஆர் யூ ஷுவர் பிரேமா?" என்று கேட்டான்.​

"எஸ். அவனுங்க உங்களை தான் தேடிட்டு வரானுங்க" என்றார் அவர்.​

"ரைட், ஐம் லீவிங். திஷா கெட் ஒன்" என்க அதிஷாவிற்கோ பிரேமாவை அப்படியே விட்டுவிட்டு செல்ல மனம் வரவில்லை.​

"இல்லை இவங்க...ஷி இஸ் ப்ளீடிங் ஆதிஷ்" என்றாள்.​

"ஐ நோ. ஜஸ்ட் கெட் ஒன் தெ பைக் திஷா" என்று அவன் சீற அதற்குமேல் தாமதிக்க முடியாமல் பைக்கில் ஏறி அமர்ந்தாள்.​

வண்டியை கிளப்பியவன் அடுத்த கணம் நிறுத்தி பிரேமாவை திரும்பி பார்த்து "டோன்ட் டாய்...இட்ஸ் அன் ஆர்டர்" என்று சொல்லிவிட்டு உயர்வேகத்தில் பறந்துவிட்டான்.​


 
Status
Not open for further replies.
Top