எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை- அத்தியாயம் 11

Status
Not open for further replies.

_7ede43d3-aa50-4ae9-b702-dc427b10d67f.jpg

அத்தியாயம் 11

கட்டிலில் படுத்துக்கொண்டே வாழ்க்கையின் கடந்த​

பக்கங்களை புரட்டிக்கொண்டிருந்தவளின் செவிகளில் வீட்டு வாசலில் வண்டி வந்து நிற்கும் சத்தம் கேட்க சட்டென்று எழுந்தமர்ந்தாள் அதிஷா.​

கட்டிலிலிருந்து இறங்கியவள் ஜன்னலுக்கருகே சென்று எட்டி பார்க்க ஆதிஷ் தான் வந்திருந்தான்.​

ஜீப்பில் அமர்ந்துக்கொண்டே நிமிர்ந்து அவள் அறையின் ஜன்னலை பார்த்தான். சட்டென்று அவன் பார்வையிலிருந்து மறைந்து நின்றுகொண்டாள். நேற்று அவள் அவனிடம் நடந்துகொண்ட விதத்தை நினைத்து ஒரு மாதிரி இருக்க இவ்வளவு நேரம் அவனுக்காக காத்திருந்தவளுக்கு இப்பொழுது அவனை பார்க்கவே சங்கடமாக இருந்தது.​

தன்னை பார்த்ததும் அவள் சட்டென்று மறைந்துகொள்வது அவன் கண்ணிலும் பட அவளின் உணர்வுகள் அவனுக்கும் புரிந்தது. அவனையும் மீறி அவனது கரங்கள் அவள் மேனியில் ஊர்வலம் நடத்தியது நினைவுக்கு வர வண்டியின் ஸ்டீரிங்கை அழுந்த பற்றி தனது உணர்வுகளை கட்டுப்படுத்திக்கொண்டான்.​

அப்படியே வண்டியில் சாய்ந்தமர்ந்தவனின் எண்ணங்களில் நேற்றைய நிகழ்வுகள் நிழலாடின.​

மோட்டார் சைக்கிள் என்பதால் உயர்வேகத்தில் அவன் ரெக்கை கட்டிக்கொண்டு பறக்க அவனது இடையை இறுக்கமாக கட்டிக்கொண்டாள் அதிஷா.​

ஜீப்பை விட மோட்டார் சைக்கிள் அவர்களை துரத்தி வரும் யாஷின் ஆட்களிடமிருந்து தப்பித்துக்கொள்ள வசதியாக அமைந்து விட கிடைக்கும் சந்துகளில் எல்லாம் புகுந்து வண்டியை செலுத்தியவன் ஒருவழியாக அவர்கள் கண்ணில் மண்ணை தூவிவிட்டு தப்பித்தும் விட்டான்.​

அந்த தனித்து இருந்த இரண்டு மாடி வீட்டின் வாசலில் வண்டியை நிறுத்திவிட்டு அதிஷாவுடன் இறங்கி கொண்டவன் அவளை உள்ளே அழைத்துச்சென்றான்.​

அது ஆதிஷ் தற்சமயம் குடியிருக்கும் வீடு அல்ல. அவனது ரகசிய மறைவிடம். யாருக்கும் தெரியாமல் நகரத்தை தாண்டி சற்று தனித்து இருக்கும் வீடு அது. அவனுடன் இருப்பதுதான் இப்போதைக்கு அவளுக்கு பாதுகாப்பு என்று நினைத்தவன் அவளை தன்னுடனே வைத்துக்கொள்ள எண்ணி அங்கே அழைத்து வந்திருந்தான்.​

அங்கே அவனை தவிர கதிர், செல்வாவோடு இன்னும் இரு ஆண்களும் இருந்தனர். உள்ளே நுழைந்தவனுக்கு விறைப்பாக அவர்கள் நால்வரும் சல்யூட் அடிக்க சிறு தலையசைப்புடன் ஏற்றான்.​

ஆதிஷ் அதிஷாவை அங்கே அழைத்துக்கொண்டு நுழைந்ததை அவர்கள் அனைவரும் ஒரு மார்க்கமாக பார்க்க "வாட்" என்றான்.​

அவன் கேட்ட தொனியிலேயே 'ஒன்றும் இல்லை' என்ற தோரணையில் தலையாட்டியவர்கள் அவரவர் வேலையைப் பார்க்க கலைந்து சென்று விட்டனர்.​

அதிஷாவை அழைத்துக்கொண்டு தனது அறைக்குள் நுழைந்தான்.​

அப்படியே நடந்து சென்று அங்கிருந்த சோபாவில் அமர்ந்தாள் அவள்.​

அவளை பார்த்துக்கொண்டே அலமாரியை திறந்தவன் உள்ளேயிருந்து பூந்துவாலையும் ஒரு கருப்பு ஷர்ட்டையும் எடுத்து வந்து அவளுக்கு அருகே வைத்தான்.​

"உடம்பெல்லாம் ரத்தமா இருக்கு திஷா. குளிச்சிட்டு வா, இங்க லேடீஸ் ட்ரெஸ் எல்லாம் இல்லை. இந்த ஷர்ட் தான் இருக்கு. இன்னிக்கு ஒருநாள் அட்ஜஸ்ட் பண்ணிக்கோ " என்றான்.​

அவள் பதில் பேசாமல் அப்படியே அமர்ந்திருக்க அவளை ஆழ்ந்து பார்த்தான். அவள் கரங்கள் நடுங்கிக் கொண்டிருந்தன. நெற்றியில் வியர்வை அளவுக்கதிகமாக வழிவது போன்று தோன்றியது. அறையில் குளிரூட்டி வேலை செய்கிறதா என்று பார்த்தான்.​

நன்றாகத்தான் வேலை செய்துக் கொண்டிருந்தது. ஒருவேளை அதிகப்படி அழுத்தத்தினால் அவ்வாறான மாற்றம் இருக்குமோ என்று யோசித்துக்கொண்டே அறை கதவை நோக்கி நடந்தவன் ஒருமுறை மீண்டும் திரும்பி பார்த்தான்.​

தனது நடுங்கிக்கொண்டிருக்கும் கரங்களை முகத்திற்கு முன் வைத்து வெறித்து பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்தாள் அதிஷா.​

விழிகளை மூடித் திறந்து தன்னை ஏதோ ஒரு அசௌகரியமான உணர்விலிருந்து கட்டுப்படுத்திக்கொள்ள முயல்வது போன்று இருந்தது. இவ்வளவு நேரம் புரிந்த சாகசத்தில் அவன் அவளது உடலில் தோன்றிய மாறுதல்களை கவனிக்கவில்லை.​

ஆனால், இப்பொழுது கவனித்தான். இரு கைகளாலும் தலையை ஏந்தியபடி அமர்ந்துவிட்டாள். அவள் சோர்வாக இருக்கிறாளோ என்று யூகித்தவனுக்கு குருதி படிய அமர்ந்திருந்தவளை அப்படியே விட்டு செல்லவும் மனமில்லை. அவளுக்கு உதவி செய்ய அந்த வீட்டில் பெண்களுமில்லை.​

அவளருகே சென்று அவள் கரத்தை பற்றி எழும்ப செய்தவன் குளியலறைக்குள் அழைத்துச் சென்றான். துாவாலைக்குழாயை திறந்து விட்டவன் அதற்கு அடியில் அவளை புடவையோடு நிருத்தியிருந்தான்.​

குருதி தோய்ந்த அவள் கரங்களை பற்றி அவனே தேய்த்து கழுவி விட்ட சமயம் "ஆதிஷ்" என்று அழைத்தாள் அதிஷா. அவளை ஏறிட்டு பார்த்தான்.​

சட்டென்று அவனை கட்டியணைத்திருந்தாள்.​

"அதிஷா" என்று அழுத்தமாக அழைத்தவன் தன்னிலிருந்து அவளை பிரித்தெடுக்க முயன்ற சமயம் அவனை இன்னும் இறுக்கமாக அணைத்திருந்தாள் நங்கையவள். மென்மையே உருவான அவளின் தொடுகையில் அப்படி ஒரு வன்மையை அவன் எதிர்பார்க்கவில்லை.​

அவள் உயரத்திற்கு அவனை கட்டியணைத்ததில் அவன் மார்பில் பதிந்திருந்த அவளது இதழ்கள் மெல்ல பயணம் செய்து அவன் கழுத்தில் முத்தமிட்டு பின் அவன் இதழ்களில் இளைப்பாறியிருந்தன.​

கொட்டிக்கொண்டிருந்த குளிர்ந்த நீருக்கடியில் இருவரும் ஒட்டிக்கொண்டு நின்றிருக்க அவனுக்கு இயற்கையாகவே உணர்வுகள் மேலிட தொடங்கிவிட்டது. தவிர்க்க தான் நினைத்தான். ஆனால், மனதிற்கு பிடித்த காரிகை தானாக நெருங்கும் போது விலக தோன்றவில்லை போலும்.​

அவனது கரங்கள் மெல்ல மேலெழுந்து அவளது கூந்தலில் நுழைந்து தன்னுடன் நெறுக்கிக்கொண்டன. அவள் ஆரம்பித்த இதழ் முத்தம் இப்பொழுது அவனுடைய பொறுப்பாக மாறியிருக்க அவளை ஆழ்ந்து முத்தமிட்டவன் அவளை அப்படியே அருகிலிருந்த சுவற்றில் சாற்றியிருந்தான் . அவன் கரங்கள் அவள் மேனியில் அத்து மீற ஆரம்பித்திருந்தன. வஞ்சனையே இல்லாமல் புடவை நழுவிய வெற்றிடை தொடங்கி ஆடை மூடிய பாகங்கள் வரை அவனது கரங்கள் பயணிக்க தொடிங்கிய நேரம் "ஆஹ்" என்று அலறியபடி அவனிலிருந்து விலகியிருந்தாள் பெண்ணவள்.​

அவள் தூண்டிவிட்ட மோகம் அவளாலேயே அறுபட்ட நிலையில் சற்றே எரிச்சலுற்றவன் "என்னாச்சு?" என்று கேட்க அதிஷா அவன் அழுந்த பற்றியிருந்த அவள் கரத்தை பார்த்தாள்.​

அவள் பார்வை சென்ற திசையில் அவனும் பார்க்க அப்பொழுதுதான் அவளது கரத்தில் இருந்த வீக்கத்தை கவனித்தான்.​

ஊசி குத்திய தடம் போல் இருந்தது.​

அவள் கையை பற்றி நன்கு உற்று பார்த்தவன் "கிராப்... திஷா ஆர் யூ ட்ரக்ட் (drugged)?" என்று கேட்டான்.​

"எஸ்…ஆதிஷ் என்னால என்னை கண்ட்ரோல் பண்ணவெ முடியல. எவ்வளவோ முயற்சி பண்ணுனேன். பட் நேரம் போக போக என்னால முடியல" என்று சொன்னாள். கண்கள் பணித்திருந்தன.​

ஆம். இதற்கெல்லாம் காரணம் யாஷ் தான். யாஷ் அவளுக்கு அதிகப்படியான பாலுணர்வை தூண்ட கூடிய போதை ஊசியை போட முயன்ற சமயம் அதிலிருந்து தப்பிக்க அவனுடன் போராடியிருந்தாள் பெண்ணவள். ஆஜானுபாகுவான ஆண் அவன் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் துவண்ட சமயம் அவன் வலுக்கட்டாயமாக அந்த ஊசியை அவள் கையில் செலுத்தியிருக்க மருந்து முழுவதும் உள்ளே இறங்கும் முன்னேவே அவனை தனது மொத்த சக்தியையும் திரட்டி தள்ளி விட்டவள் அந்த ஊசியையும் பிடிங்கி எரிந்திருந்தாள். அதன் விளைவாகத்தான் அவளது கரமும் வீங்கியிருந்தது.​

மொத்தமாக அந்த போதை பொருள் உடலில் இறங்காத காரணத்தினாலோ என்னவோ அவள் இவ்வளவு நேரம் ஓரளவுக்கு தெளிவாக இருந்தாள். ஆனால், நேரம் போக போக அவளது உணர்வுகள் தூண்டப்படுவதை அவளால் தடுக்கமுடியவில்லை.​

அவளுடைய மாற்றத்திற்கான காரணம் அவனுக்கு புரிந்துவிட்டது. சற்று நேரத்திற்கு முன் தன்னை காப்பாற்ற சொல்லி அவள் வந்து நின்றதிலிருந்து இப்பொழுது வரை நிகழ்ந்தவற்றை யோசித்து பார்த்தான்.​

அவனை பார்த்தவுடன் அவனை கட்டியணைத்திருந்தாள். பைக்கில் செல்லும் போது கூட அவனை இறுக்கமாக அணைத்துக்கொண்டே அமர்ந்திருந்தாள். அடிக்கடி கண்களை மூடித்திறந்து தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்ள முயன்றுக்கொண்டிருந்தாள். பயத்தினால் அரவணைப்பு தேடுகின்றாள் என்று தான் நினைத்திருந்தான். ஆனால், இப்பொழுதான் புரிந்தது அது போதை மருந்தின் தாக்கமென்று.​

ஒரு கணம் அதிர்ந்து நின்றவனுக்கு நல்லவேளையாக அவள் தன்னிடம் வந்து சேர்ந்ததை எண்ணி மனம் நிம்மதியடைந்தது. இந்த நிலையில் அவள் வேறு எங்கும் சென்றிருந்தால் அவளுக்கு என்ன வேண்டுமானாலும் நிகழ்ந்திருக்கலாம். அதை அவள் தடுக்கவும் முயன்றிருக்க மாட்டாள். அதை நினைக்கும் போதே நெஞ்சம் பதைபதைக்க அவளை இழுத்தணைத்திருந்தான்.​

அவன் அணைப்பில் இருந்தபடியே "ஆதிஷ்... என்னை என்னால கண்ட்ரோல் பண்ண முடியல பட் உங்களால முடியும். ஒரு நைட்டுக்கு சம்மதம் சொன்னேன் தான். ஆனால், அது இப்படி வேண்டாம். ப்ளீஸ் ப்ரொடெக்ட் மீ" என்றாள்.​

"ஹேய் பைத்தியம்" என்று அவளை திட்டியவன் குளியலறையிலிருந்து வெளியேறி அவளுக்கு எடுத்து வைத்திருந்த பூந்தூவாலையையும் சட்டையையும் கொண்டு வந்து கொடுத்தான்.​

அவள் குளியலறையிலேயே உடை மாற்றிக்கொண்டு வந்த சமயம் அவனும் தனது ஈர உடைகளை களைந்து வேறு உடைக்கு மாறியிருந்தான்.​

அவளை கட்டிலில் படுக்க வைத்தப்பின் "ரெஸ்ட் எடு திஷா. நான் இப்போ வந்திடுறேன்" என்றபடி அறையை விட்டு வெளியேறியவன் அடுத்து அழைத்தது என்னவோ சூர்யாவுக்கு தான்.​

"சூர்யா, ஒரு மெடிக்கல் எமெர்ஜென்சி உடனே நம்ம இடத்துக்கு கிளம்பி வா" என்று சொல்லிவிட்டு வைத்திருந்தான்.​

அடுத்த அரைமணி நேரத்தில் அங்கு வந்து சேர்ந்த சூர்யாவும் அவனை முன்னறையில் வரவேற்ற கதிரிடம் "என்னாச்சு டா...ஆதிஷ் மெடிக்கல் எமர்ஜென்சின்னு கால் பண்ணுனான்.யாருக்கு என்னாச்சு?" என்று கேட்டான்.​

கதிர் பதில் சொல்லும் முன்னரே மேலே இருந்து எட்டி பார்த்த ஆதிஷ் "சூர்யா, மேல வா" என்றான்.​

மேலே வந்தவனோடு அதிஷாவின் அறைக்குள் நுழைந்தான் ஆதிஷ்.​

அங்கே அதிஷாவை பார்த்து சூர்யாவுக்கும் அவனை பார்த்து அதிஷாவிற்கும் அதிர்ச்சி தான்.​

"அதி, நீ எப்படி இங்க..." என்று அவன் ஆரம்பிக்க "சூர்யா ஷி இஸ் ட்ரக்ட்... அவள் கண்டிஷன் என்னனு பாரு" என்று சொன்னான் ஆதிஷ்.​

"வாட்" என்று அதிர்ந்தவனுக்கு எதுவும் புரியவில்லை என்றாலும் ஆதிஷின் பேச்சுக்கு மறுபேச்சு எதுவும் பேசாமல் அவளை பரிசோதித்தான் அவன்.​

"என்ன போதை மருந்துன்னு தெரியுமா?" அதிஷாவிடம் கேட்க அவள் ஆதிஷை பார்த்தாள்.​

சூர்யாவின் மீது அவளுக்கு அவ்வளவு நல்ல அபிப்ராயம் இல்லை அல்லவா.​

"இவன் என்னோட ஆளுதான். பயப்படாம சொல்லு திஷா" என்று ஆதிஷ் சொல்லிய பின்னரே வாயை திறந்தாள்.​

"தெரியல...ஏதோ புது போதை மருந்து. மார்க்கெட்ல இல்ல... அவனுங்க அதை வச்சு எக்ஸ்பெரிமெண்ட் பண்ணுறானுங்கன்னு நினைக்குறேன்" என்றாள்.​

"எக்பேரிமெண்ட்டா... அவனுங்கன்னா யாரு?" என்று கேட்டான்.​

"யாஷ்" என்றாள் ஒற்றை வார்த்தையாக. அவன் பெயரை உச்சரிக்கும் போதே அவள் முகத்தில் அப்படி ஒரு அருவருப்பு.​

சூர்யா ஆதிஷை பார்க்க " அதிஷா ஓகே தானே?" என்று கேட்டான் அவன்.​

"ஷி இஸ் ஓகே. அவள் தெளிவா பேசுறதை பார்த்தா மைல்டு டோஸேஜ் தான் கொடுத்திருக்கணும் . நத்திங் டு ஒர்ரி. அவள் நல்லா தூங்கி ரெஸ்ட் எடுத்துக்க இன்ஜெக்ஷன் கொடுத்திருக்கேன்" என்றான்.​

"ஒகே. அவளோட பிளட் சாம்பிள் எடுத்துக்கோ. லேப்ல கொடுத்து எனக்கு ரிப்போர்ட் அப்டேட் பண்ணிடு" என்றான்.​

சூர்யாவும் அவளின் இரத்த மாதிரியை எடுத்து கொள்ள "நீ ரெஸ்ட் எடு திஷா. நான் வந்திடுறேன்" என்று சொல்லிவிட்டு சூர்யாவுடன் வெளியேறியிருந்தான்.​

"என்னடா நடக்குது?" என்று சூர்யா ஆரம்பிக்க அவனை அழுத்தமாக பார்த்துக்கொண்டே படியிறங்கி கீழே வந்தவன் "கதிர். அதிஷா ரூம்ல இருக்கா. யாரும் அவள் ரூமுகுள்ள போக கூடாது பாத்துக்கோ. அப்படியே அவளுக்கு ஹெல்ப் பண்ண ஒரு பொண்ணை வேலைக்கு ஏற்பாடு பண்ணிடு" என்றான்.​

"எஸ் சார்" என்ற கதிர் அவன் கொடுத்த வேலையை பார்க்க சென்று விட்டான்.​

"செல்வா கம் வித் மீ" என்றபடி செல்வத்தையும் சூர்யாவையும் அழைத்துக்கொண்டு அவன் ஜீப்பிற்கு அருகே வந்த சமயம்​

அவன் தோளை பற்றி நிறுத்திய சூர்யா "ஆதிஷ், என்ன நடக்குதுன்னு கேட்குறேன்ல" என்க "நீ… என்னடா பண்ணிட்டிருக்க அந்த ஹாஸ்பிடல்ல. உன்னை எதுக்கு அங்க அனுப்பினேன்? போய் எவ்வளவு நாள் ஆச்சு. ஆனால், அந்த யாஷுக்கு எதிரா உன்னால ஒரு எவிடென்ஸ் கூட கண்டு பிடிக்க முடியல... இடியட்" என்று திட்டினான்.​

ஆம் ஆதிஷ், தற்போது தலைநகரில் இளைய தலைமுறையினர் மத்தியில் தலைவிரித்தாடும் போதை பொருள் புழக்கத்தையும் அதன் துணையோடு வளர்ந்து வந்துக்கொண்டிருந்த ஆபாச திரைபட துரையையும் அடி முதல் நுனி வரை கண்டறிந்து வேரறுக்க தமிழக காவல்துறையினரால் நியமிக்கபட்ட காவல் அதிகாரி.​

இங்கு நடக்கும் குற்றங்களை கண்டு பிடிக்கவும் குற்றவாளிகளுக்கு சந்தேகமில்லாமல் அவர்களை நெருங்கவும் அவனுக்கு ஒரு வேடம் தேவைப்பட அப்பொழுது அங்கே அராஜகம் செய்துகொண்டிருந்த ரவுடி ரங்கனை போட்டு தள்ளி அவன் இடத்தை பிடித்துக்கொண்டான்.​

பார்ப்பவர்களுக்கு தான் ஒரு ரவுடி, பொறுக்கி என்னும் பிம்பத்தை கண கட்சிதமாக ஏற்படுத்தி வைத்திருந்தவனுக்கு குற்றம் செய்பவர்களையும் அவர்களின் பின்னணியையும் ஆராய்வது இலகுவாக மாறியிருந்தது. அவர்களை சுலபமாக நெருங்கியும் இருந்தான்.​

அப்படியே நூல் பிடித்தாற்போல் தொடர்ந்த அவனது விசாரணையில் யாஷின் மருத்துவமனைக்கும் இந்த குற்றச்செயல்களுக்கும் தொடர்பு இருக்கின்றது என்பதை கண்டறிந்திருந்தான். ஆனால், அந்த குற்றங்களுக்கு பின்னணியில் வேலை செய்துகொண்டிருந்த யாஷ் எம காதகனாக இருக்க அவனுக்காக வேலை செய்யும் யாருடனும் அவன் நேரடி தொடர்பில் இருக்கவில்லை. அதுனாலேயே அவனை நெருங்குவதற்கு ஆதிஷிற்கு நேரம் பிடித்தது.​

அடுத்த நடவடிக்கை எடுப்பதற்கு தகுந்த ஆதாரங்களை திரட்ட வேண்டியதாகவும் இருந்தது அவனுக்கு. அதற்காகவே மருத்துவனாகயிருந்த தனது நண்பனும் கதிரின் அண்ணனுமான சூர்யாவை அங்கே வேலைக்கு அனுப்பினான்.​

சூர்யாவும் தன்னால் முடிந்தவரை அந்த மருத்துவமனையை அலசி ஆராய்ந்து பார்த்தும் அவனால் எதையுமே கண்டுபிடிக்க முடியவில்லை.அனைவரிடமும் சகஜமாக பேசி பழகி முடிந்த வரை தகவல் சேமித்தவனுக்கு யாஷின் மீது மெல்லிய சந்தேகம் எழ அதை ஆதிஷிடம் சொல்லியும் இருந்தான்.​

ஆனால், அவனால் யாஷிடம் ஓரளவிற்கு மேல் நெருங்கவும் முடியவில்லை. அவனுக்கு உதவுவதற்காக தான் அன்று ஆதிஷ் மருத்துவமனையில் ரேணுகாவுடன் பிரச்சனை பண்ணியது. அன்று யாஷ் மருத்துவமனையில் இல்லை என்பதை சூர்யா ஆதிஷிடம் தெரியப்படுத்தியிருக்க அங்கே சென்றவன் வேண்டுமென்றே ஒரு பிரச்சனையை உருவாக்கி அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் திருப்பியிருந்தான்.​

அந்த நேரத்தை பயன் படுத்திகொண்ட சூர்யா மற்றும் செல்வாவும் யாஷின் அறைக்குள் நுழைந்து எதுவும் ஆதாரம் கிடைக்குமா என்று அலசி பார்த்தார்கள். ஆனால் அவர்கள் துரதிர்ஷ்டத்திற்கு அவர்களுக்கு எதுவும் சிக்கவில்லை.​

எப்படியாவது அவனை சிக்க வைத்துவிட வேண்டுமென்கிற எண்ணத்தில் ஆதிஷ் காய்களை நகர்த்திக்கொண்டிருக்கும் போது தான் அவன் அதிஷாவை சந்தித்தான். அவளை பார்த்த நாள் அன்று அவன் சுட்டு வீழ்த்திய அந்த காவல் அதிகாரி கமலேஷ் கூட அந்த போதை பொருள் வணிகத்திற்கு துணை நின்றவன் தான்.​

ஆதிஷின் நிஜ அடையாளத்தை அவன் எப்படியோ மோப்பம் பிடித்துவிட அவன் வாயை திறக்கும் முன்னே அவனை போட்டு தள்ளியிருந்தான். பல இளைய தலைமுறையினரின் வாழ்வு நாசமாக உடந்தையாக இருந்தவனை கொன்றதில் அவனுக்கு கொஞ்சமும் வருத்தமே இல்லை.​

இப்படி தான் நினைத்தது எல்லாம் சரியாக நடந்துகொண்டிருந்த சமயத்தில் அதிஷாவின் மீது அவனுக்குள் ஒரு ஈர்ப்பு. மனம் சலனமடைய தொடங்கியிருந்தது. இதுநாள் வரை அவன் வேண்டாமென்று ஒதுக்கி வைத்த காதல் காய்ந்து சருகாகியிருந்த அவனது மனதில் மீண்டும் புதிதாய் மொட்டுவிட தொடங்கியிருந்தது.​

அதிஷாவிற்கு திருமணம் என்று அறிந்ததும் உள்ளுக்குள் தவித்தான். அதை தடுக்க வேண்டும் என்று ஒரு மனம் சொல்ல ‘அது எல்லாம் உனக்கு தேவையில்லாத ஆணி உன் வேலையை மட்டும் பாரு’ என்று இன்னொரு மனம் சொல்லியது.​

அவள் விடயத்தில் தலையிடாமல் ஒதுங்கி இருப்பது தான் தனக்கும் அவளுக்கும் நல்லது என்று நினைத்துவிட்டான். அதுனாலேயே அவள் யாரை திருமணம் செய்துக்கொள்ள போகின்றாள் என்பதை கூட அவன் தெரிந்துக்கொள்ள விரும்பவில்லை. அப்படி ஒருவேளை அவன் தெரிந்துக்கொண்டிருந்தால் முந்தைய நாள் அதிஷா அந்த வீட்டில் அனுபவித்த கொடுமைகளிலிருந்து தப்பித்திருப்பாளோ என்னவோ.​

கோவிலின் வாசலில் திருமண கோலத்தில் அவள் நிற்க அவள் அருகில் மணமகனாக யாஷ் நின்றிருந்ததை பார்த்ததும் அவனுக்கு அப்படி ஒரு ஆத்திரம். தன் மீதே ஆத்திரம். யாஷ் நல்லவன் இல்லை என்று அவனுக்கு தெரியும். தன் மனம் நேசிப்பவளை அவளுக்கு நல்லது நினைப்பதாக எண்ணி ஒரு அயோக்கியனிடம் கொடுத்துவிட்டோமே என்கின்ற ஆத்திரம்.​

"ஆதிஷ்... ஐ ட்ரைட். உனக்கும் தெரியும் தானே... ஏன் இப்படி எல்லாம் பேசுற?” என்றான் சூர்யா.​

அந்நேரம் தன்னை நினைத்தே பொங்கி வந்த கோபங்கள் அனைத்தும் சூர்யாவின் மீது திரும்பியிருக்க "அதிஷா யாஷை கல்யாணம் பண்ணிக்க போறான்னு உனக்கு தெரியும் தானே. ஏன்டா சொல்லல?" என்று அவன் ஷர்ட்டை பற்றி பிடித்தவன் பற்களுக்குள் வார்த்தையை கடித்து துப்ப " எனக்கென்னடா தெரியும்...அது என்ன அவ்வளோ முக்கியமான விஷயமா?" என்று சூர்யாவும் பதிலுக்கு சீற விழிகளை மூடித்திறந்து தன்னை கட்டுக்குள் கொண்டு வந்த ஆதிஷ் "முக்கியம் தான் டா..எனக்கு முக்கியம் தான்" என்று சொல்லும் போதே அவனது குரல் நலிந்து கேட்டது.​

"அது எப்படி இந்த கேஸுக்கு முக்கியம்..." கேட்கும் போதே அவன் மூளையில் பொறி தட்ட சற்று நிறுத்தி ஆதிஷை விழி விரித்து பார்த்த சூர்யா "டூ யூ லவ் ஹேர்?" என்று தான் கேட்டான்.​

அவனுக்கு பதில் ஏதும் சொல்லவில்லை ஆதிஷ். அவன் பற்றி பிடித்ததில் கசங்கியிருந்த சூர்யாவின் ஷர்ட்டை சரி செய்துவிட்டவன் "சாரி டா..." என்றான்.​

ஒரு ஆழ்ந்த மூச்சை எடுத்துக்கொண்ட சூர்யா "ஹாப்பி ஃபோர் யூ டா" என்றபடி அங்கிருந்து கிளம்பியிருக்க ஆதிஷும் செல்வாவை அழைத்துக்கொண்டு கிளம்பிவிட்டான்.​

அப்பொழுது சென்றவன் முழுதாக ஒரு நாள் கடந்து இப்பொழுதுதான் வீட்டிற்கு திரும்பியிருந்தான்.​


 
Status
Not open for further replies.
Top