எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

nnk 54 episode 20 (final)வர்ணங்கள் 20 இறுதிபதிவு.

NNK-54

Moderator
வர்ணங்கள் 20 இறுதிபதிவு.


திருமண நாளின் காலை வெகு அழகாக விடிந்தது மணமகன்கள் இருவருக்கும். சாயாவின் கணவன் அவனது குடும்பத்துடன் வந்தவுடனேயே ஜெட்லாக் பார்க்காமல் தனது மனைவிக்காக அவர்கள் குடும்ப வழக்கப்படி கூரைப் புடவையும் திருமாங்கல்யமும் எடுத்தான்.

முதல்முறை திருமணம் செய்துகொள்ளும்பொழுது அவன் மனதில் மட்டும் காதல் எனும் உணர்வு இருந்தது. அவள் திருமணத்திற்கு சம்மதம் கொண்டாளே தவிர ,அது ஏன் என்று அவனால் இன்னமும் புரிந்துகொள்ள முடியவில்லை.அவள் மறுத்து இருந்திருக்கலாம் என்று கூட பலமுறை யோசித்திருக்கிறான் .இதோ இப்போது மனம் நிறைந்த காதலுடன் இருவருக்கும் திருமணம். அவர்களது மகனுக்கோ அம்மா இனி எப்போதும் தங்களுடன் இருப்பாள் எனும் எண்ணமே அதிகமாய் உற்சாகம் கொள்ள சொல்லியது.


மறந்தும் அவர்கள் இந்தியா வந்திருப்பதை பற்றி ஜெயன் சாயாவிடம் சொல்லவில்லை. இன்னொருபுறம், தியாவும் கூட புரிந்து கொண்டாள் . தன் அம்மாவுக்கு திருமணம் என்று. அவள் பாட்டியின் மூலம் தெரிந்துகொண்டவள்,பெரியவரின் அனுமதியின் பேரில் ஜெயனை அப்பா என்று அழைக்கவும் தொடங்கியிருந்தாள்.

அப்பா -பாட்டி இருவருடனும் சேர்ந்து அம்மாவுக்கு தெரியாமல் திட்டமிடுவது அவளுக்கு பயங்கர த்ரில்லிங்க்காக இருக்க, அம்மாவிடம் வாயை திறக்கவில்லை.

சாயா ஜெயன் சொன்னபடிக்கு காலையில் ஏழுமணிக்கே வந்துவிட்டாள் அவன் வாங்கி கொடுத்திருந்த புடவை நகைகளுடன். அப்போதுதான் அவளுக்கு தோன்றியது யாரின் திருமணத்திற்கு இவ்வளவு தூரம் அலங்கரித்துக்கொண்டு வந்திருக்கிறோம் என்று.

அங்கே திருமணம் ஏற்பாடாகியிருந்த இடத்தில சம்மந்தப்பட்டவன் இல்லை .சற்றே பதட்டம் கொண்டாள் சாயா . அவள்மட்டும் தனியாக இருக்கும் நேரத்தில் அவளை நோக்கி வந்தவன் வேறு யாருமல்ல,மணமகன் அலங்காரத்தில் அவள் அருகே அவள் கணவன். சாயாவின் இதயம் நின்றது போல உணர்ந்தாள்.

அவள் அருகே மோதிரத்துடன் வந்தவன்,திருமணத்திற்காக மண்டியிட்டு அவளிடம் சம்மதம் கேட்டான். அவளது கண்கள் கலங்கியது. லேசாக திரையிட்ட கண்ணீருடன் சம்மதம் என்று தலையை அசைத்தாள். அந்த நொடி அவர்களின் மொத்த குடும்பமும் கைகளை தட்டிக்கொண்டு சிரிப்பும் சப்தமுமாக அங்கே வந்து சேர, மோதிரத்தை அணிவித்தான்.

சாயாவின் மாமியார் மெல்ல அவளை மணமகள் அறைக்கு கூட்டிச் சென்றார். அழகான சிவப்பு வர்ணத்தில் தங்கத்தில் ஜரிகை வைத்து இவளுக்காகவே தயார் செய்யப்பட்ட கூரைப்புடவையில் காதல் நிரம்பி வழியும் விழிகளுடன் மணமேடை நோக்கி நடந்து வந்தாள் சாயா.

அவள் எதிரில் நின்றுகொண்டிருந்தான் ஜெயன். அவன் அருகில் வந்தவள் அவனை கட்டிக்கொண்டு அழுதுவிட்டாள் . " ச்சு ,சாயா உனக்கு இனிமே பிறந்த வீட்டு சொந்தம் நான்தான். ஸோ அழாதே! என்று சமாதானம் சொன்னான்.அவனது வார்த்தைகளில் சகோதர பாசம்தான் நிறைந்திருந்தது.

அப்போதுதான் உள்ளே நுழைந்த சுபாவுக்கு மனதில் இனி எல்லாமே முடிந்துவிட்டது. ஜெயனுக்கும் சாயாவுக்கும் திருமணம் என்று நொறுங்கிப்போனாள் . அவள் நுழைந்து பின்னாலேயே அவளது அம்மாவும் மகள் தியாவும் நுழைந்ததை அவள் கவனிக்கவில்லை.

மேடையில் நின்றுகொண்டிருந்த ஜெயந்தனின் பார்வை முழுவதும் சுபாவிடம் நிலைத்திருந்தது. அவளது முக பாவமே அவள் மனதை கண்ணாடி போல காட்டிவிட, நிம்மதி கொண்டான் ஜெயன். திருமணத்திற்கு கேட்கும்பொழுது மனைவி மறுத்துவிடுவாளோ என்ற பயம் அவனுக்கு இருந்தது. இப்போது நிம்மதி கொண்டான்.

ஜெயன் வேகமாக மேடையில் நகர்ந்து நின்று கொள்ள மணமகன் வந்து அமர்ந்தான்.சாயாவும் அவன் அருகில் அமர அவர்களது மகன் அவர்கள் அருகில் நின்றுகொண்டான். அய்யர் மந்திரங்களை சொல்ல தாலியின் முதல் முடிச்சை மணமகன் இட இரண்டாவது முடிச்சை போட சுபாவை அழைத்தான் ஜெயன்.

லேசாக அதிர்ந்தாள்தான். ஆனாலும் சற்றும் யோசிக்காமல் மணமேடை ஏறினாள். இரண்டாம்,மூன்றாம் முடிச்சுகளை நாத்தனாராக இருந்து சுபா போட ,அவள் நிமிர்ந்த நேரம், தனது கைகளில் இருந்த வைரத் திருமாங்கல்யம் கோர்க்கப்பட்ட தாலிச்சரடை அவள் எதிர்பார்க்காத நேரத்தில் அணிவித்துவிட்டான் ஜெயந்தன்.


அவள் திகைத்து விழிக்க ,அய்யர் இவர்களுக்காகவும் மந்திரம் சொன்னதை கவனிக்க மறந்திருந்தாள் சுபா. அங்கே இருந்தார்கள் எல்லோரும் இரண்டு ஜோடிக்கும் சேர்த்து பூ தூவ, தியா மேடைக்கு ஓடிவந்தவள் அம்மாவை கட்டிக்கொண்டு "ஹாப்பி வெட்டிங் மா" என்று சொல்லவும் தான் சுபா சுற்றி கவனித்தாள் .

அவள் அம்மாவும் கூட வந்திருக்கிறார் என்றால்,ஜெயன் எல்லாவற்றையும் தெரிந்துகொண்டுவிட்டான். என் காதலுக்காக என்னை மணந்தானா..இல்லை கடமைக்காகவா என்ற கேள்வி அவளை துளைத்தது.
அப்போது கேட்க முடியாது என்று அமைதியாக இருந்து விட்டாள் .

இரண்டு ஜோடிகளுக்கும் அன்று பெரியவர்கள் முதலிரவுக்கு ஏற்ப்பாடு செய்திருக்க, சுபா நிறைய கேள்விகளுடன் அறைக்குள் நுழைந்தாள் . தியாவை தன்னுடன் உறங்க வைத்துக்கொள்வதாக அவளது அம்மா சொல்லிவிட்டார்.

அவளது கேள்விகளை தானே அவள் சொல்லாமலே உணர்ந்தவன் ,"உன்னோட காதலுக்கு முன்னாடி நா தகுதி இல்லாதவன் சுபி, என்னை ஏத்துப்பியா ?' என்று கேட்டவனின் மார்பில் தஞ்சம் புகுந்தது பெண். எத்தனையோ வருஷங்களின் வலியில் அழுது தீர்த்த மனைவியை சமாதானம் செய்ய அவன் முற்படவில்லை. அவள் நெஞ்சின் பாரம் நீங்க வேண்டுமே!

லேசாக விம்மலுக்கு வந்தவுடன்,"கன்யா யாரு"என்பது அவளது கேள்வியாக இருந்தது. தனது காதல் பற்றியும், கன்யாவுடனான தனது வாழ்க்கை பற்றியும் சொன்னால் மனைவி தாங்கமாட்டாள் .அதோடு மனதையும் குழப்பிக் கொள்வாள் என்று நினைந்த ஜெயன்," என்னோட கன்யா நீதான்.என்னோட கனவுப்பெண் அவளும் நீதான் " என்று கனவில் சுபாவை பார்த்தது,தேடியது ,இப்போது திருமணம் செய்து கொண்டது வரை நிதானமாக சொல்லி அவளை சிவக்க வைத்தான்.

வேறு எதையும் பற்றி குழப்பிக்கொண்டு வாழ்க்கையை மீண்டும் பாலைவனமாக்கி கொள்ள இருவருமே தயாராக இல்லை. ஜெயந்தன் மனதில் தன் மனைவியையும் குழந்தையையும் தன் பெற்றோர் பார்க்கவேண்டாம் என்று முடிவு செய்திருக்கிறான். அவனால் வயதான பெற்றோரை விட முடியாது. அதே போல் தன் குடும்பத்தையும் விட முடியாது. தன் பெற்றோருடன் அனுசரித்து போக மனைவியை வற்புறுத்தி வதைக்கவும் உத்தேசம் இல்லை

குடும்பம் என்பது அழகான வர்ணங்களை கொண்ட வானவில்லை போன்றது.வளைந்து கொடுத்தால் நிலைக்கும்.வர்ணங்கள் மனதை கவரும். இங்கே அவர்கள் உறவை கிழித்து அலங்கோலம் செய்து வைத்திருக்கிறார்கள். என் மனைவி எனக்காக ஏங்கி இருக்கிறாள்.என் மகள் நான் இருந்தும் தனியாக வளர்ந்திருக்கிறாள்,. குழந்தையின் பிறப்பு முதல் இன்று வரையான வளர்ச்சியை என்னால் பார்க்க முடியவில்லை . காரணம் 'அவர்கள் தானே' என்ற எண்ணம் வந்துவிட்டிருந்தது.

இருவருக்கும் வெகு வருஷங்கள் கழித்து இயல்பான உறக்கம். அடுத்தநாள் காலை ஊடகத் துறையை அழைத்து தனது மனைவி,மகளை அறிமுகம் செய்தவன் தங்கள் திருமணம் முடிந்து பலவருஷங்கள் ஆகிவிட்டதையும் உறுதி செய்தான். "விதி வசத்தால் பிரிந்து வாழ்ந்தோம்.இப்போது காதலால் சேர்ந்து விட்டோம்"என்று சொன்னவனை யாராலும் கேள்வி கேட்க முடியவில்லை.தியா வேறு அவள் அப்பாவின் ஜாடையில் இருக்க கேள்விக்கு இடம் ஏது ?

ஜயந்தது பெற்றோர் பத்திரிக்கை செய்தியாக தனது மகனது திருமணம் பற்றி அறிந்து கொண்டார்கள். அவனிடம் பேச எவ்வளவு முயற்சி செய்தும் அவன் நோட் ரீச்சபிள். தன் மனைவி மகளுடன் தேன் நிலவு கொண்டாட சிம்லா சென்றுவிட்டான்.


இனி அங்கு சந்தோஷ வர்ணங்கள் மட்டும்தான் !
 
Last edited:

NNK-54

Moderator
Nice stry pranav and jey parents a vechu senjirklam
மற்றவர்களை வச்சு செய்யுறதை விட இழந்த காதல் வாழ்க்கையை மீண்டும் சுகமாய் அனுபவிப்பது இன்பம் னு தோன்றியது
 
Top