எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

விதிகள் பிழையானால்

Advi

Well-known member
#நிலாகாலம்2

#கௌரிவிமர்சனம்

#விதிகள்_பிழையானால்…

தலைப்பு என்னவோ பிழையான விதி , ஆன உண்மை என்னவோ தான் என்ற சுயநல எண்ணமும், அகங்காரமும் சேர்ந்த மனிதர்கள் செய்த சதி ஒரு பெண்ணின் வாழ்க்கையில் எப்படி ஊறு விளைவிக்கும் என்பதே கதை…..

இங்கே முதல் தவறே, மலையரசனிடம் இருந்து தான்….நல்லா படிக்கும் பிள்ளைகளால் தான் தனக்கு பெருமை அப்படிக்கர எண்ணமே நடந்த அனைத்து அனர்த்தங்களுக்கும் ஆரம்ப புள்ளி…..

வெற்றி….தானும், தன் அக்காவும் சுமாராக படிக்க…

தங்கை மட்டும் நல்லா படிக்க….அதை கொண்டாடும் தந்தை…..

அதை கண்டு எழும் சிறு பொறாமை…

“சிறிய தீக்குச்சி போதும் காட்டை எரிக்க”....

அப்படிக்கரா மாதிரி, அவர்களை தாழ்த்தி அவளை உயர்த்தி, படிப்பு முதல் எதிலும் சிறந்தாக கிடைக்கும் தங்கை மேல் வரும் பொறாமை…நாள் அடைவில் வன்மமாக மாற காரணம் மலையரசனே……

அந்த வன்மம் தான், சிறந்ததாக விளங்கும் தங்கை வாழ்க்கையில் கஷ்ட படனும்னு எண்ண வெச்சி அதை செயல் படவும் வைத்ததோ…..

ரகு, வெற்றி அப்படி வன்மதோடு பார்த்த மாப்பிள்ளை தான் இவன்…..அடிப்படை சுத்தம் கூட கிடையாது…..

சுத்தமா அப்படினா, எங்க கிடைக்கும், நல்லா இருக்குமா என கேட்கும் ஆசாமி.,.

அவன் விரும்பி செய்யும் வேலைகள், பெரும் தீனி, நோகாமல் அடுத்தவர் காசில் வாழ்வது, சம்பாரிக்கும் பணத்தை தனக்கென மட்டுமே செலவு செய்வது…..

இப்படியான மாப்பிள்ளை தான் அவன் தங்கைக்கு பார்த்து கட்டி வைத்தது…..

தெய்வா, இயல்பில் சுட்டியான பெண் தான், கடை குட்டி செல்லம் வேறு…..

ஆண் ஆதிக்க வீட்டில் பிறந்தாலும், இளவரசியாகவே வளர்க்க பட்டவள்…..

தான் என்றால் அத்தனை பிரியம் அப்பாவிற்கு அப்படினு நினைச்சிட்டு இருந்தவள் வாழ்வில்….

உன்னால் எனக்கு பெருமை இல்லையெனில், நீயே தேவை இல்லை அப்படிக்கற மனோ நிலை கொண்டவர் தான் தன் அப்பா என்பது தெரிந்தால்??????

இது தான் அவள் வாழ்வில் விழுந்த முதல் அடி…..

அதன் பிறகு படிப்பு, வேலை இன்மை, திருமணம் கைகூட நிலை…எல்லாம் சேர்ந்து மன அழுத்தத்தில் தள்ள…..

பிறந்த இடத்தில் தான் இப்படி, கணவனிடம் ஆவது முழு அன்பு கிடைக்கும் என எதிர்பார்த்தால்….

அங்கே கிடைத்ததோ…..?????

மயில், ரைட்டர் சொல்றத போல, தேவை இல்லா இடத்தில் எல்லாம் தோகை விரிச்சி ஆடும் ….

நியாயமாக கேள்வி கேட்டால்…..

அப்படி பட்ட பிள்ளையை பெற்ற இது, சராசரி மாமியார், என்ன மாதர் குல மாணிக்கமாவ இருக்க போகுது…..

இப்படி பட்ட உறவுகள் சூழ இருப்பவள், எங்கே தவறான முடிவு எடுத்து விடுவாளோ அப்படினு பயங்கர பயமா இருந்தது…..

ஆனால் எதிர் பாரா இடத்தில் இருந்து நீண்ட ஆதரவு கைகள்….

சொந்தங்கள் எப்பவும் கெட்டதே நினைப்பது இல்லை போல....

அவள் மன அழுத்தத்தில் இருந்து மீண்ட விதம் 👏👏👏👏👏👏

சிறந்த நெஞ்சுரம், வைராக்கியம் கொண்ட பெண்ணாக தெய்வா….இறுதியில்…..

பல தமிழ் நூல்களின் பாடல்கள், குறள் போன்றவைகளை மேற்கோள் காட்டி கதையை விளக்கிய விதம் அருமை…..

போட்டியில் வெற்
றி பெற வாழ்த்துக்கள் ரைட்டர் ஜி 💐💐💐💐💐💐💐

லிங்க்👇👇👇👇
 
Top