எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 16

admin

Administrator
Staff member

அத்தியாயம் 16​

முதலில் அவன் கேட்டது புரியாமல் விழித்தவளை அது புரிந்ததும் தோளைக் குலுக்கி "எல்லா பொண்ணுங்களுக்கும் இருக்கறது தானே... புதுசா சொல்ல என்ன இருக்கு..." எனக் கேட்டாள்.​

அவளின் அலட்சிய பதிலில் அத்தனைக் கோபம் வந்தது அகரனுக்கு. பல்லைக் கடித்துக் கொண்டுப் பார்த்தவன் "அப்ப மேடம் கல்யாணதுக்கு ரெடி ஆயிட்டு தான் என்னோட கொழஞ்சுட்டு இருந்தீங்களா?..." எனக் கேட்டதும் அவனை அழுத்தமாகப் பார்த்தாள்.​

அந்த பார்வையே இதற்கு மேல்வேறு பேசிவிடாதே என்று எச்சரிக்கை செய்தது. அவளின் பார்வையில் தெரிஞ்ச எச்சரிக்கையில் இன்னும் இன்னும் கோபம் வந்தது.​

அதே கோபத்தோடு "ஓ... என் கிட்ட கத்துக்கிட்ட எல்லாத்தையும் உன்னைக் கட்டிக்கப் போறனவன் கிட்ட காட்டத்தான் என் கிட்ட தாரளமா பழகனீங்களா மேடம். ஒருத்தனை எங்க தட்டினா எங்க விழுவான்னு பார்த்து சரியா தான் அடிச்சு இருக்கீங்க. எனக்கு தான் அது புரியல.பட் குட் வொர்க் மிஸ் அக்னிதா மாதேஷ்..." இரண்டு விரல்களை மடக்கி மூன்று விரல்களை காட்டி சூப்பர் என்றான்.​

அவனது சொல் அம்புகளால் அதீதமாக காயப்பட்டு போனாள் பெண். அதுகூட நொடி நேரம் மட்டுமே... அடுத்த நொடியில் தன்னை காயப்படுத்த பேசும் அவனது சொல் அம்புகளை வேரோடு பிடிங்கி எறிந்தாள். அக்கணம் அசால்டாக வந்து ஒட்டிக் கொண்ட அலட்சிய பாவனையோடு​

"அதுல உங்களுக்கு தானே நிறைய பெனிபிட் மிஸ்டர் அகரன்..." என்றாள். அவளை புரியாமல் பார்த்தான் அகரன். அவனது பார்வையை கோணல் சிரிப்போடு பார்த்தவள் மேலும் தொடர்ந்தாள்.​

"புரியலையா? நீங்க, என்னை யூஸ் பண்ணிக்கிட்டத சொன்னேன்... என்னை ஹக் பண்ணதுல இருந்து என்னை கிஸ் பண்ண வரைக்கும் நீங்களும் தானே என்ஜாய் பண்ணீங்க. என்னவோ எனக்கு மட்டும் பெனிபிட் மாதிரி பேசறீங்க. எனக்கு ஈகுவலா உங்களுக்கும் கிடைச்சு இருக்கும்னு சொல்றேன்..." என்றதும் பல்லைக் கடித்துக்கொண்டு பார்த்தான். தான் பேசியதற்கு எதிர்வினை தான் இது என்று நன்றாகவே அவனுக்கு புரிந்தது.​

அவனது முக பாவங்களை கண்டு கொள்ளாமல் மேலும் தொடர்ந்தாள்.​

"அண்ட் நீங்க ரொம்ப லக்கி தெரியுமா? என்கிட்ட நடந்துக்கிட்டது மாதிரி வேற பொண்ணுக்கிட்ட நடந்திருந்தால் அவ கண்ணைக் கசக்கிருப்பா. நீங்க தான் வேணும்ன்னு அழுது, ஆர்ப்பாட்டம் பண்ணிருப்பா, ஆனா நான் அப்படியில்லை மிஸ்டர் அகரன் நீங்க வேண்டாம்னு ஒதுங்கி போயிட்டேன். உண்மையை சொல்லப்போனால் உங்களோட அக்கறையான பேச்சுக்கும், நீங்க நடந்துகிற விதத்துக்கும் யாரா இருந்தாலும் அது லவ்வுன்னு சொல்லிடுவாங்க... ஆனா எனக்கு தெளிவா புரிஞ்சுது இது லவ்வு இல்லை ல.." அவள் அந்த சொல்லை முடிக்க கூட வில்லை அவள் சங்கு கழுத்தை அழுந்த பற்றியிருந்தது காளையவனின் வன்கரங்கள்.​

எதை அவள் வாயால் கூறவே கூடாது என நினைத்தானோ ஆயிரம் முறை லட்சம் முறை மனதிற்குள் உருப்போட்டு வந்தானோ இதோ அதை அவள் கூற முயன்ற நேரம் கோபம் அவன் உச்சியில் ஏறி நின்றது... அதன் விளைவு அதோ இவன் பிடியில் அணங்கவள்... எரிமலையாய் தீ பிழம்பாக தன் உள்ளுக்குள் அடக்கிக் கொண்டிருக்கும் தணலுடன் அவளை பார்த்தவன்,​

"எங்க மறுபடியும் சொல்லு. என்னோட லவ்வை லஸ்ட்ன்னு சொல்லு..." என்றவன் கைகள் நொடிக்கு ஒருமுறை அழுத்தத்தை கூட்டியது. அவன் கழுத்தை அழுத்தி பிடித்ததில் கண்களில் கண்ணீர் தேங்கி நின்றது அவளுக்கு. அவளது கண்ணீரை பார்த்தவன் பட்டென அவளை விட்டு திரும்பிக் கொண்டான்.​

மங்களையவளின் விழிகள் ஆடவனை அழுத்தமாய் ஏறிட்டது. "என்ன லவ்வா..." இருமிக் கொண்டே கிண்டலாக நக்கலா என இனம் காண முடியாத த்வனியில் கேட்டவள் "எப்ப இருந்து லவ் பண்றீங்க மிஸ்டர் அகரன்..." அதையும் இருமி கொண்டே தான் கேட்டாள்.​

அவள் மேல் கட்டுக்கடங்காத கோபம் இருப்பினும் பாவையவள் இருமிக் கொண்டிருப்பதை பார்க்க முடியாதவனாய் மேசையில் வைத்திருந்த வாட்டர் பாட்டிலை அவளை நோக்கி நீட்டினான்.​

வேண்டாமென மறுத்தவள் "நான் சொல்லவா மிஸ்டர் அகரன் எப்ப இருந்து என்னை லவ் பண்றீங்கண்ணு நான் சொல்லவா..." அவன் புருவங்கள் உயர்ந்தது.​

அவளோ அவனது ஊடுருவும் பார்வையை கண்டுகொள்ளாமல் "ஊட்டியில என்னை அந்த நிலைமையில் பார்த்ததுல இருந்து உங்களுக்கு என்மேல ஒரு இது வந்து இருக்கும் அகரன்.சாரி அதுக்கு பேர் லவ் இல்லை ல..." என அவள் சொல்ல வர அவளை தீயாய் முறைத்திட அவன் பார்வையை அலட்சியம் செய்யும் திடமிருந்தாலும் . தன் தொண்டையை கரம் கொண்டு வருடிக்கொண்டவள். "ஒரு பொண்ணை அந்த நிலையில பார்க்கற எல்லாருக்கும் தோன்றது தான் இது..." என்றவள் மீண்டும் அவனை கோவப்படுத்தும் சொல்லுடன்,​

"அண்ட் தீ கிரேட் அகரன் ஆதித்தனுக்கு போயும் போயும் என் மேல லவ் வருமா... இதழ்கள் இகழ்ச்சியாய் வளைத்து உங்க ரேஞ்ச் என்ன? என் ரேஞ்ச் என்ன? நீங்களே சொன்னாலும் அதை நான் நம்ப மாட்டேன் அகரன் சார். ஏன்னா எனக்கு தெரியும் உங்களோட எதிர்பார்ப்புக்கு அப்படியே எதிரான ஆள் நான். என்மேல உங்களுக்கு லவ் இருக்கும்னு சொன்னதும் அதை நம்ப நான் என்ன பதினெட்டு வயசு பொண்ணா சொல்லுங்க… எனக்கும் அறிவு இருக்கு.. காலையில எழுந்ததும் மங்களகரமான முகத்துல முழிக்க நினைக்காமல் என்னை மாதிரி ஒரு பொண்ணு முகத்துல முழிக்க நினைப்பீங்களா?..." எனக் கேட்டவளை இமைக்காமல் பார்த்தான். அவன் பேசிய வார்த்தைகள் தான் ஆனால் இவள் பேசி அதைக் கேட்க இவனுக்கு அத்தனை கோபம் வந்தது... கோபத்தை முகத்தில் அப்படியே காட்டியபடி பார்த்தான்.​

உனது கோபமெல்லாம் எனக்கு பொருட்டே இல்லை என்பது போல​

"சோ நீங்களே சொன்னாலும் என்மேல உங்களுக்கு இருக்கிறது லவ் இல்லைன்னு எனக்கு புரியும், சோ நீங்க சீன் போடாமல் இங்கிருந்து போகலாம்..." அழுத்தம் திருத்தமாக கூறியவளை கொலைவெறியோடு பார்த்தான்.​

"என் பார்வையில தெரியாத என்னோட காதல் இனி எப்பவும் உனக்கு தெரிய வாய்ப்பில்லை... இனி அதை உங்கிட்ட நான் சொல்ல போறதும் இல்லை... புரிஞ்சுக்க முடியாத இடத்தில காதல் தோத்து போறது தப்பில்லை... என்னோட லவ் தோத்து தான் போயிடுச்சு..." என்றவன் திரும்பி நடக்க சொடக்கிட்டு அழைத்தாள்.​

"ஒரு நிமிசம் மிஸ்டர் அகரன்.. இந்த கயிறை பத்தி கேட்டுட்டே இருந்தீங்க... இதுக்கும் பதில் சொல்லிடறேன் இல்லைன்னா அதையும் கேட்பீங்க..." என்றவள் மறைத்து வைத்திருந்த கயிற்றை கையில் ஏந்தினாள்.​

"இது வெறும் கயிறு மட்டும் தான் என் அப்பா ஆசைக்காக இது என் கழுத்துல இருந்தது மத்தபடி பெருசா தாலி சென்டிமென்ட் எல்லாம் இல்லை. இனியும் இது எனக்கு வேண்டாம்...அப்ப கழட்டி கொடுத்ததுக்கு காரணமும் நீங்க தான் இப்ப கழட்டி கொடுக்க காரணமும் நீங்க தான்... இந்த கயிறு இருந்ததால் தான் நீங்க என்கிட்ட உரிமையா நடந்துக்கிட்டங்களோன்னு தோணுது சோ எனக்கு இது வேண்டாம்..." என்றவள் நொடியும் தாமதிக்காமல் அதனை கழட்டப் போகவும் பட்டென அவளது கைகளை பிடித்துக் கொண்டான் அகரன்.​

அவளது முகத்தை ஆழ்ந்து பார்த்தவன் "எனக்கு கொடுக்க வேண்டிய கயிறை தான் எப்போவோ கொடுத்துட்டியே.. இது எதுக்கு தேவை இல்லாம இது நீயே வைச்சுக்க..." என்றவன் அடுத்த நிமிடம் அங்கிருந்து நகர்ந்தான்.​

அக்கணம் அவளைவிட்டு விலகி சென்றவனின் கண்களில் கண்ணீர் உருண்டு திரண்டு நின்றது.அதனை சுண்டு விரலால் சுண்டி விட்டபடி அங்கிருந்து நகர்ந்தான்.​

**​

இங்கு, அவன் அறையை விட்டு வெளியேறியதும் பொத்தென படுக்கையில் அமர்ந்தாள். கையில் பிடித்திருந்த தாலியை நெஞ்சோடு அணைத்துக் கொண்டவளுக்கு கண்ணீர் நில்லாமல் வழிந்தது...​

அன்றைய தினத்தில் கூட இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை பெரியதாக எடுத்துக்கொள்ள தோன்றவில்லை. அப்பொழுதும் பாவையின் மனது கூறியது ஒன்றே ஒன்று தான் 'இதற்கு நீ மதிப்பு கொடுக்கும் வரை மட்டுமே இது தாலி மற்றவரை இது கயிறு தான் என்று...'​

தன் கழுத்தில் இதை கட்டிவிட்டு ஏதோ பெரிய குழியில் விழுந்து விட்டதாக அவன் பேசிய பேச்சை அவளால் ஜீரணிக்க முடியவில்லை. அக்கணமே முடிவு செய்துவிட்டாள் இதற்கு இதுதான் தீர்வு அவனிடம் இதை கழட்டி கொடுப்பது தான் என்று.​

அதே சமயம் பதிவு செய்யாத திருமணத்திற்கு பெரியதாக மெனக் கெட வேண்டியதில்லை. ஒரு வருடம் காத்திருக்கும் டிராமாக் கூட இதில் இல்லை...​

'தன் வாழ்க்கையே போனது போல் பேசிக் கொண்டிருப்பவனிடம் இந்தா பிடி இதுதான் வாழ்க்கை இல்லை...' என கூற வேண்டும் என மனம் கத்தியது.​

அதேநேரம் 'தந்தையின் கடைசி நொடிகளை முற்றும் முழுதாக வாங்கிக் கொண்டது இந்த கயிறு தானே... அவரின் கடைசிப் பார்வை இதில் தானே நிலைத்தது இதை எப்படி கழட்டிக் கொடுப்பது...' ஆழ் மனம் கேள்வி எழுப்பிக் கொண்டே இருந்தது.​

இவளுக்கு இந்த கயிறும் வேண்டும் அதே சமயம் ஆடவனது முகத்தில் இதனை விட்டெரியவும் வேண்டும். என்ன செய்வது? என எண்ணிக் கொண்டிருந்தவளுக்கு மனம் சரியான ஐடியாவை கொடுத்தது. அது அவர்கள் வரும் நேரம் பார்த்துப் புது கயிற்றை கட்டி அதை அகரனிடம் கொடுத்துவிடு என்றது. அதன்படி செய்தும் விட்டாள். அவளின் பேச்சிற்கு மறு பேச்சில்லாமல் பெரியவர்கள் இருந்தது அவளது அதிர்ஷ்டமே....​

அப்பொழுதில் இருந்து இரண்டு மாதங்களுக்கு முன்பு வரையிலுமே தந்தைக்காக என் தந்தையின் கடைசி நொடிகள் இதில் நிலைத்தது என்பதற்காக மட்டுமே என் கழுத்தில் இது உறவாடி கொண்டிருக்கிறது என தனக்கு தானே கூறிக் கொண்டிருந்தாள்.​

ஏன் திருமணத்தைப் பற்றி பேசும் போது கூட இதை பெரியதாக எடுத்துக் கொள்ளவில்லை உடனே சரியென்று தான் ஒப்புக் கொண்டாள். அனைத்தும் அவனை காணும் வரை மட்டுமே நிலைத்தது...​

இரண்டு வருடத்தில் தன் கண்முன்னே வராத ஒருவன் தன் கண்முன்னே வந்ததும் மனம் தடதடக்கென்று அடித்துக் கொண்டது. அவனை பற்றி நினைக்கவே இல்லை என கூறிக் கொண்டவள் தாலியை பார்க்கும் போதெல்லாம் அவனைப் பற்றி எண்ணிக் கொண்டிருக்கிறாள் என்று அன்று தான் புரிந்து கொண்டாள்.​

இந்த இரண்டு வருடத்தில் அவன் பேசிய பேச்சுக்கள் மாறவில்லை அவன் கொடுத்த காயம் மாறவில்லை... ஆனால் ஏதோ ஒன்று அவளுள் மாறி இருந்தது அது என்ன? அதை மேலும் யோசிக்கவில்லை யோசிக்க விடவும் இல்லை...​

அகரனைப் பற்றி பெரியதாக யோசிக்க விடாமல் தனக்கு பார்த்திருக்கும் மாப்பிள்ளையிடம் பேச வேண்டும் என நினைத்து வீட்டிற்கே வரக் கூறினாள். அந்த நேரம் பார்த்து ஊட்டி செல்ல வேண்டிய காட்டாயம் ஏற்பட்டது.​

தன்னைக் காண வீட்டிற்கு சென்றவனிடம் தன் உடமைகளை கொடுத்து அனுப்பி இருந்தார் கங்கா... பேச வேண்டும் என நினைத்தவனிடம் பேசும் எண்ணம் கூட இல்லாமல் உடைகளை மட்டும் வாங்கிக் கொண்டு டாட்டா காட்டிவிட்டாள். அதற்கு காரணம் காரில் அமர்ந்திருந்தவனின் பார்வை... அந்த பார்வை கூறிய செய்தியால் மட்டுமே...​

அதற்குப் பின் அகரனை ஊட்டியில் காண்பாள் என்று துளியும் எண்ணவில்லை. அந்நிய ஆடவன் கைகளில் துவண்டு கிடக்கிறோம் என்ற எண்ணம் துளியும் எழவில்லை. வேறு ஆடவனின் இதழ்கள் தன்னில் அத்துமீறி கொண்டிருக்கிறது என்ற எச்சரிக்கை உணர்வும் அகரனிடம் எழவில்லை... ஏன் என்ற கேள்வி மனதில் எழுந்தது "அவன் உனது கணவன்... உன் மார்பில் ஒளிந்து கொண்டிருக்கும் தாலிக்கு உரியவன் என்றது மனம்... அந்த பதிலில் திடுக்கிட்டாள் பெண்.​

வெறும் கயிறாக நினைத்தது எப்பொழுது தாலியாக மாறியது என்று அவளுக்கே தெரியவில்லை... அது இந்த இரண்டு வருடத்தில் அவளையும் அறியாமல் அவளுள் நடந்த மிகப்பெரிய மாற்றம்...​

அப்பொழுதில் இருந்து அகரனை விட்டு விலக வேண்டும் என எண்ணிக் கொண்டிருந்த ஒவ்வொரு நொடியும் அவனை நெருங்கி கொண்டே இருந்தாள். அகரன் காட்டிய மறு முகத்தில் மெல்ல கரைந்தாள். அது அவளின் தந்தையை அவனுள் தேடும் அளவிற்கு கொண்டு வந்தது...​

அதே நேரம் ஒரு நிமிடம் காயத்தை கொடுப்பவன் மறு நிமிடம் அதற்கு மருந்திட்டு செல்பவனின் குணம் என்னவென்று புரியாது தவித்தாள். இதோ அதையும் கண்டுப் பிடித்துவிட்டாள். மேலே அகரனிடம் கூறியது தான். தன்னை அவன் காதலிக்கவில்லையா அப்பொழுது அகரன் தன்னிடம் நடந்து கொள்வதற்கு என்ன பெயர்? என்ற கேள்விக்கு பதில் தான் லஸ்ட் என்றது பெண்ணின் மனம்...​

இத்தனை நாட்கள் அகரன் காட்டிய மறுமுகத்திற்கு லாஸ்ட் என்று பெயரை வைத்துவிட்டு மாற்றானை திருமணம் செய்ய தயாராகி விட்டாள்...​

நல்லதோர் வீணை செய்தே - அதை​

நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?​

சொல்லடி சிவசக்தி - எனைச்​

சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்.​

வல்லமை தாராயோ...​

****​

பிழைகள் சரி பார்க்கப்படவில்லை... சிரமத்திற்கு மன்னிக்கவும்​

 
Top