எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை- அத்தியாயம் 12

Status
Not open for further replies.

அத்தியாயம் 12

எல்லாவற்றையும் நினைத்து பார்த்தவன் ஒரு ஆழ்ந்த மூச்செடுத்து தன்னை நிலைப்படுத்திக்கொண்டே மீண்டும் நிமிர்ந்து அந்த ஜன்னலை பார்த்தான்.​

திரைசீலையின் மறைவிலிருந்து இன்னமும் அவனை தான் நோட்டம் விட்டு கொண்டிருந்தாள் அவள். அவன் இதழ்களில் கீற்று போன்ற ஒரு மெல்லிய புன்னகை. அவளது சங்கடமும் வெட்கமும் அவனுக்கு பரவசமாய் இருந்தது.​

நேற்று அவள் அவனிடத்தில் பேசிய வார்த்தைகள் மீண்டும் மீண்டும் செவிகளை நிறைத்துக்கொண்டே இருந்தன. 'ப்ளீஸ் ப்ரொடெக்ட் மீ' என்றாள். அவளின் நிலையறிந்தும் அவனிடத்தில் அடைக்கலம் கேட்டு நின்றாள். அதுவே அவள் அவன் மீது வைத்திருந்த நம்பிக்கையை உணர்த்தியது.​

ஊரை பொறுத்தவரை அவன் ஒரு கடைந்தெடுத்த அயோக்கியன், பெண் பித்தன். ஆனால், அவன் உருவாக்கி வைத்திருந்த அந்த பிம்பத்திலிருந்து அவனை மாறுபட்ட கண்ணோட்டத்தில் பார்த்தது அவள் மட்டும் தான். ஏன் என்றும் அவனுக்கு புரியவில்லை?​

யோசித்துக்கொண்டே வீட்டிற்குள் நுழைந்தான்.​

கண்ணம்மா தான் வரவேற்பறையில் இருந்தாள்.​

"நீ தான் புதுசா வேலைக்கு வந்த பொண்ணா?" என்று கேட்டான்.​

"ஆமா சார்" என்றாள்.​

"அதிஷா எங்க?" அவனது அடுத்தக் கேள்விக்கு "ரூம்ல இருகாங்க" என்று பதிலளித்தாள்.​

"ஏதும் சாப்பிட கொடுத்தியா?" என்று கேட்டுக்கொண்டே அவன் மாடிப்படியை நோக்கி நடக்க "பால் மட்டும் குடிச்சாங்க சார்" என்றாள் கண்ணம்மா.​

"சரி நீ போ" என்றபடி அவன் இரண்டிரண்டு படிகளாக தாவி ஏறியிருக்க அவனை வியந்து பார்த்துக்கொண்டிருந்த கண்ணம்மா "அப்போ நாம நினைச்சது சரிதான் போல... அந்த அக்கா இந்த சாரை தான் காதலிக்குறாங்களா இருக்கும். இங்க இருக்குற தடி தாண்டவராயங்களிலேயே இவர் தான் பாக்க லட்சணமா இருக்காரு" என்று வாய்விட்டே சொல்லிக்கொண்டாள்.​

அவள் அருகே வந்து நின்ற செல்வா " அப்படியா தெரியுது?" என்று கேட்க அதிர்ந்தவள் "ஆத்தி...நானில்லை" என்றபடி சமயலறைக்குள் ஓடி மறைந்து விட்டாள்.​

அதே சமயம் அதிஷாவின் அலைபேசி அலறியது. எடுத்து பார்த்தாள்.​

ராகவனிடமிருந்து ஒரு புலன செய்தி.​

"ஷல் வீ மீட்" என்று அனுப்பியிருந்தான்.​

"எப்போ.. எங்க?" என்று அவள் பதிலனுப்ப "நாளைக்கு ஈவினிங் முடியுமா? இடம் நாளைக்கு சொல்லுறேன்" என்று பதில் வந்திருந்தது.​

"ஒகே... என்னை மீட் பண்ண ரெடியாகிட்டீங்களா?" என்று அதிஷா கேட்க "மோர் தென் எவர்" என்று பதில் அனுப்பினான் அவன்.​

அவள் இதழ்கள் மெலிதாய் விரிய அதையே இமோஜியாக அவனுக்கு அனுப்பிவிட்டு நிமிர்ந்த சமயம் அவளின் அறையை அடைந்திருந்த ஆதிஷ் கதவை திறந்துக்கொண்டு உள்ளே நுழைந்தான்.​

இன்னமும் ஜன்னலுக்கருகே தான் நின்றுக்கொண்டிருந்தாள்.​

கதவு திறக்கும் சத்தம் கேட்டதும் அவனை நிமிர்ந்து பார்த்தாள்.​

அவனை பார்த்ததும் அவளுக்குள் ஒரு படபடப்பு. நேற்று நிகழ்ந்தவை அனைத்தும் நினைவுக்கு வந்து இம்சித்தது. சுய உணர்வுடன் அவள் நடந்துக்கொள்ளவில்லை என்றாலும் அவளாக அவனை முத்தமிட்டிருக்கிறாள். அதுவும் இதழ்களின் சங்கமம்.​

நினைக்கும் போதே இப்பொழுதும் அவளது இதழ்கள் குறுகுறுத்தன. கன்னங்கள் செம்மையேற அவன் விழிகளை பார்க்க முடியாமல் தலை தாழ்த்திக்கொண்டாள்.​

அவளை பார்த்துக்கொண்டே அடிமேல் அடி வைத்து சென்றவன் அவளை நெருங்கி நிற்க அவளும் அவளுக்கு பின்னாலிருந்த சுவரோடு ஒன்றிப்போய் நின்றுவிட்டாள். கரங்கள் இரண்டும் பின்னாலிருந்த சுவரில் அழுந்த பதிந்திருந்தது.​

எப்பொழுதும் அவன் விழிகளை நேருக்கு நேர் சந்திப்பவள் அவள். இன்று நிமிர்ந்தும் பார்க்கவில்லை. அது அவனுக்கு சுவாரசியத்தை கூட்ட மெலிதாக சிரித்துக்கொண்டான்.​

அவள் நாடியை பற்றி நிமிர்த்தி அவன் விழிகளை பார்க்கச்செய்தான்.​

அதே கரத்தால் அவள் கன்னம் வருடி "ஆர் யூ ஓகே திஷா?" என்று கேட்டான்.​

நேற்று முழுவதும் அதிஷா என்ற அவளது பெயர் அவனது அழைப்பில் திஷா என்று மாறியிருந்தது. அப்பொழுது அவள் தான் அதை கவனிக்கும் மனநிலையில் இல்லை. இப்பொழுது அவன் அழைப்பில் இருந்த வேற்றுமையை கவனித்தாள்.​

யாருமே அவளை அப்படி அழைத்ததில்லை ஆதிஷ் தான் முதல் முறை அழைக்கின்றான். அவளிடம் கேட்காமலே அவள் மீது உரிமை எடுத்துக்கொள்கின்றான்.​

ஏனோ பிடித்திருந்தது.​

உள்ளுக்குள் ரசித்துக்கொண்டாள்.​

"இம்ம்...இப்போ பரவால்ல" என்றாள்.​

"இன்னமும் போதை மருந்து எஃபெக்ட் இருக்கா?" என்று கேட்டான்.​

"இல்லை..." என்று தலையாட்டியவளை இன்னும் நெருங்கி நின்றவன் "நல்லா யோசிச்சு சொல்லு... நிஜமா இல்லையா?" மறுபடியும் உறுதிப்படுத்திக்கொள்ள கேட்டான்.​

"இல்லை... இப்போ ஓகே தான்" என்று சொல்லியவளை ஆழ்ந்து பார்த்துக்கொண்டே இருந்தவன் "குட்... எனக்கு உன்னோட உண்மையான ஃபீலிங்ஸ் பார்க்கணும் " என்று சொல்லியபடி அவள் அதரங்களில் தனது இதழ்களை பொருத்திக்கொண்டான்.​

அதிர்ந்து விரிந்த அவளது விழிகளை பார்த்துக்கொண்டே முத்தமிட்டவன் சுவற்றில் சாய்ந்திருந்தவளை இழுத்து தன்னுடன் நெருக்கி கொண்டான்.​

அவனது இதழணைப்பின் வேகம் கூட அவளது கரங்கள் தானாக மேலெழுந்து அவனது சிகைக்குள் கோர்த்துக்கொண்டன.​

அவனது அதிரடியில் சற்றே அரண்ட அவளது விழிகள் அங்கும் இங்குமாக அலைபாய்ந்த நேரம் ஜன்னலினூடே தெளிந்திருந்த வானமும் அதை அலங்கரித்திருந்த நிலவும் தான் கண்ணில் பட்டது.​

சற்று நேரத்திற்கு முன் அவள் பார்த்த போது மேகங்கள் சூழ ஒளிமங்கி தெரிந்த நிலவு இப்பொழுது பிரகாசமாய் ஜொலித்துக்கொண்டிருக்க அவளது மனமும் கூட அவனது அருகாமையில் அதே தெளிவையும் பிரகாசத்தையும் உள்வாங்கி கொண்டதை போல் உணர்ந்தாள்.​

அவளது விழிகள் தானாக மூடிக்கொண்டன. இதழ்கள் அவன் இதழ்களுக்கு வழிவிட்டு இசைந்து கொடுக்க அவள் உடலும் அவன் தொடுகைக்கு வாகாக உருகி நெகிழ்ந்தது.​

அவள் மனதை வென்றவன் அவனுக்கு அவளை மொத்தமாக ஆட்கொண்டு நெகிழ செய்ய எந்த போதை வஸ்துவும் தேவைப்படவில்லை.​

காதல் வார்த்தை வடிவம் பெறவில்லையென்றாலும் அவர்களின் கூடலில் காமம் தாண்டிய காதலே நிறைந்திருந்தது.​

அவன் காயங்களை ஆற்றும் மருந்தாக அவளும் அவள் ரணங்களுக்கு ஆறுதலாக அவனும்.​

மோகம் தீர அவளிடமிருந்து விலகிக்கொண்டவன் அவளை அணைத்துக்கொண்டு படுத்திருந்தான்.​

"திஷா உனக்கு நான் சில விஷயம் சொல்லணும்" என்றான்.​

அவள் அவனை கேள்வியாக பார்க்க "அதுக்கு முதல் யாஷ் வீட்டுல என்ன நடந்ததுன்னு சொல்லு" என்றான்.​

அந்த கேள்வியில் அவளது உடல் சற்றே இறுகுவதை உணர்ந்தான்.அந்த சம்பவம் கொடுத்த பாதிப்பின் வெளிப்பாடு என்று புரிந்தது. அவன் அணைப்பில் இறுக்கத்தை கூட்டியிருந்தான்.​

"அன்னிக்கு என்னை வீட்டுல விட்டுட்டு யாஷ் வெளியே கிளம்பிட்டான். எனக்கு ரொம்ப சோர்வா இருக்க எப்போ தூங்குனேன்னே தெரியல...அப்போ" என்று அன்றைய நிகழ்வுகளை சொல்ல ஆரம்பித்தாள் அதிஷா.​

திருமண நாள் இரவு...​

யாஷின் இல்லம்...​

அன்று களைப்பு மிகுதியில் அயர்ந்து உறங்கிக்கொண்டிருந்தாள். எத்தனை மணிநேரம் தூங்கினாளோ தெரியவில்லை. மாலை மங்கி இருளும் கவிழ்ந்து விட்டது.​

அப்பொழுது அவளின் மேனியில் ஏதோ ஊர்வது போன்று இருக்க சட்டென்று கண்களை திறந்தவளுக்கு அப்படி ஒரு அதிர்ச்சி.​

அவளது மெத்தையில் அவளுக்கருகே படுத்துக்கொண்டு தனது கரங்களால் அவள் மேனியை தடவி பார்த்துக்கொண்டிருந்தான் ரோஷன்.​

அவனை பார்த்ததும் அவளுக்கு தூக்கி வாரி போட சட்டென்று மெத்தையிலிருந்து கீழே இறங்கியவள் புடவையை சரி செய்துகொண்டே "ரோஷன் என்ன பண்ணுற...ஜஸ்ட் கெட் அவுட்" என்று கத்தினாள்.​

அவன் கொஞ்சமும் அசையவில்லை. கட்டிலிலிருந்து எழுந்து வந்தவன் அவளை அணைக்க முற்பட அறையின் மூலைக்கு ஓடியவளுக்கு அவன் நிலையை பார்த்ததுமே புரிந்துவிட்டது அவன் அவனாக இல்லையென்று. போதையில் இருக்கின்றான் என்று புரிந்துக்கொண்டாள்.​

அவனை தாண்டி அறையை விட்டு வெளியே போக முயன்றவளை இழுத்து கட்டிலில் தள்ளியவன் அவளின் மீது படர அவனுடன் போராடிய பெண்ணவளோ "விடு டா... உங்கண்ணாவுக்கு தெரிஞ்சா உன்னை சும்மா விட மாட்டார்” என்று அவள் கதற அவளை பார்த்து வக்ரமாக சிரித்தவன் "வேணும்னா அவன் கிட்ட சொல்லு. என்ன பண்ணுறான்னு பார்க்கலாம்" என்றான். அவன் கரங்கள் அவள் மேனியை தீண்டுவதை நிறுத்தவேயில்லை.​

சுயநினைவே இல்லாமல் போதையின் பிடியில் இருப்பவனிடம் என்ன கத்தியும் பயனில்லை என்பதை உணர்ந்தவள் "யாஷ்...யாஷ் இருக்கீங்களா" என்று கணவனை உதவிக்கு அழைத்தாள். வெளியில் சென்றிருந்தவன் வீடு திரும்பி விட்டானா என்றும் அவளுக்குத் தெரியவில்லை.​

அவன் உதவிக்கு வரும் அரவமே கேட்கவில்லை. அதற்கு மத்தியில் அவள் மீது படர்ந்த ரோஷன் அவள் புடவையை தளர்த்த முயன்ற கணம் இதற்குமேல் தாமதிக்க முடியாது என்று எண்ணியபடி உடம்பில் இருந்த மொத்த சக்தியையும் பயன்படுத்தி அவன் உயிர் நாடியில் உதைத்திருந்தாள். அவன் "ஆஆஹ்" என்று வலியில் அலறிக்கொண்டே அப்படியே சுருண்டு விழ மெத்தையிலிருந்து வேகமாக எழுந்துக் கொண்டவள் சற்றே தளர்ந்திருந்த புடவையை கைக்கு வந்த வாட்டத்திற்கு இழுத்து சொருகிக்கொண்டு அறையை விட்டு வெளியில் வந்தவள் ரோஷனை உள்ளே வைத்து வெளிப்புறமாக தாளிட்டுவிட்டு திரும்பிய கணம் அடுத்த இடி அவள் தலையில் இறங்கியது.​

அவளை தொட்டு தாலி கட்டிய கணவன் யாஷ் அங்கே முன்னறையில் தான் அமர்ந்து மடிக்கணினியில் வேலை செய்துக்கொண்டிருந்தான்.​

அவள் அவ்வளவு சத்தம் போட்டும் அவன் வரவில்லையே என்கின்ற ஆதங்கம் மேலெழும்ப "யாஷ்" என்று கத்தினாள்.​

அவளை நிமிர்ந்து பார்த்தவன் "என்னாச்சு?" என்றான் சாவகாசமாக.​

"என்னாச்சா? உங்க தம்பி...உங்க தம்பி அங்க நம்ம ரூம்ல வந்து... நான் அவளோ கத்துறேன் உங்களுக்கு கேட்கலையா?" என்று சீறியவளை மேலிருந்து கீழ் பார்த்தவன் "அப்போ அவன் இன்னும் மேட்டர் முடிக்கவே இல்லையா? அதுக்குள்ள தப்பிச்சு வந்துட்டியா?" அவன் கேட்ட பதில் கேள்வியில் அவள் இருதயத்தில் யாரோ ஈட்டியால் குத்தியது போன்ற உணர்வு.​

அவனை விழி விரித்து பார்த்தவள் "யாஷ்... என்ன பேசிட்டிருக்கிங்க?" என்று கத்தினாள்.​

"ஷ்ஷ்ஷ்ஷ்..இப்போ எதுக்கு கத்தி ட்ராமா பண்ணுற. நான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டது எனக்காகன்னு நினைச்சியா. உன்னை நான் நிறைய முறை ஹாஸ்பிடல்ல பார்த்திருக்கேன். உன்னை பிடிச்சு போய் கல்யாணம் பண்ணனும்னா அப்போவே கேட்டிருப்பேன்ல. திடிர்னு வந்து கேட்குறானேன்னு சந்தேகம் வரலையா உனக்கு? உன் அப்பா அம்மாவுக்கு தான் பணத்தேவை. அதையெல்லாம் யோசிக்குற அளவுக்கு மூளை வேலை செய்யல. உனக்குமா வேலை செய்யல? உன்னை போய் நான் புத்திசாலின்னு நினைசிட்டிருந்தேனே..." நக்கலாக சிரித்தான்.​

அவள் அவனையே வெறித்துப் பார்த்துக்கொண்டு நிற்க அவளருகே எழுந்து வந்தவன் "வா வா... அவன் கூட சண்டை போட்டதுல ரொம்ப களைப்பா இருப்ப..இப்படி வந்து உட்காரு. மீதி கதையையும் சொல்லுறேன்" என்று அவள் கையை பற்றி அழைத்தான். அவள் அசையாமல் நின்றிருக்க "வாடின்னா..." என்று அவளை இழுத்து சென்று சோபாவில் அமர வைத்தவன் "நான் எவ்வளோ சாஃப்ட் ஆஹ் பேசுறேன். நீ எதுக்கு முரண்டு பிடிக்குற" என்று சொல்லிக்கொண்டே அவள் அருகே இருந்த சோபாவில் அமர்ந்துக்கொண்டான்.​

அவனை எரித்துவிடுவது போல் பார்த்தவளை பார்த்து சிரித்தவன் "அன்னிக்கு பர்கிங்க்ல உன்னை பார்த்துட்டு உன்னை அனுபவிச்சே ஆகணும்னு என் தம்பி தான் ஆசை பட்டான். தம்பி ஆசை பட்டா அண்ணன் நிறைவேத்தணும்ல அதுக்கு தான் உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டேன்" என்றான்.​

அவள் அவனை புருவம் இடுங்க பார்க்க "புரியுது புரியுது...தம்பி ஆசை பட்டா அவனுக்கு கட்டி வைக்க வேண்டியது தானேன்னு யோசிக்குற அதானே? சீ அதிஷா...எனக்கு பொண்ணுங்கன்னா பிடிக்காது. ஐ அம் எ கேய். இது என் அப்பாவுக்கு தெரிஞ்சு போச்சு. பிரெஸ்டிஜ் பாக்குற ஆளு அவரு. சோ என்னை டிஸ்டர்ப் பண்ணிட்டே இருந்தாரு. ஒரு கட்டத்துல கடுப்பாகி அவரை போட்டு தள்ளிட்டேன். இந்த எடத்துல நீ எப்படின்னு கேட்கணும்...அவருக்கு ஹார்ட்ல இம்பிளான்ட் பண்ணியிருந்த பேஸ்மேக்கரை ஹேக் பண்ணி ஹார்ட் அட்டேக் வர வச்சு போட்டு தள்ளிட்டேன். தொல்லை ஒழிஞ்சதுன்னு பார்த்தா இந்தாளு எனக்கு கல்யாணமாகி குழந்தை பிறந்தா தான் சொத்தெல்லாம் என் பேருக்கு வரும்னு உயில் எழுதி வச்சிருக்காரு. நான் வேற மொத்த சொத்தும் எனக்கே எனக்குன்னு வேணும்னு நினைச்சு ரோஷனை போதை பழக்கத்துக்கு அடிமையாக்கி வச்சிருந்தேன். அவன் மேல என் அப்பாவுக்கு வெறுப்பை உருவாக்கி வச்சிருந்தேன். சொத்தெல்லாம் என் பேருக்கு வர நேரம் என்னை பத்தின உண்மையெல்லாம் எப்படியோ தெரிஞ்சுக்கிட்டாரு. அதுக்குமேல அவரை விட்டு வைக்க முடியாதுண்ணு போட்டு தள்ளிட்டேன். அதுக்குப் பிறகு உயில் பிரச்சினையாகிடுச்சு. என்ன பண்ணலாம்னு யோசிச்சிட்டிருந்த நேரம் தான் ரோஷன் உன்னை பார்த்தான். ஆசைப்பட்டு கேட்டான். சரி உன்னை கல்யாணம் பண்ணிக்கிட்டா ஓரே கல்லுல மூணு மங்கா. எனக்கு கல்யாணமும் ஆச்சு, ரோஷன் உனக்கு புள்ளையும் கொடுத்திடுவான், சொத்தும் என் கைக்கு வந்துடும்" என்றான்.​

அவன் சொல்லிக்கொண்டு சென்றதை கேட்டவளுக்கு உலகமே தலை கீழாக சுழலுவது போல இருக்க "ச்சீ..இப்படி பேச உனக்கே அசிங்கமா இல்லை?" என்று கேட்டாள்.​

"இதுல என்னடி ச்சீ... இதை விட இன்னொரு மேட்டர் இருக்கு அதையும் சொல்லுறேன் கேளு... அந்த பொண்ணு மீரா செத்து போய்ட்டா அதுல என்னவோ இருக்குன்னு தோண்டி துருவி விசாரிச்சிட்டிருந்தியே அதுக்கு காரணமும் நான் தான். நான் தாய்நாட்டுக்கு என் படிப்பு பயன்படட்டுங்குற நோபல் எண்ணத்துல இங்க இருக்கேன்னு தானே நினைச்ச. பட் நான் இங்க இருக்க காரணமே அமெரிக்காவுல தயாரிக்க படுற புது விதமான போதை மருந்தை இங்க கொண்டு வந்து இங்க இருக்குறவாங்க மேல டெஸ்ட் பண்ணி பார்க்க தான். அங்க அதை செய்ய முடியாது ரொம்ப கெடுபுடி. பட் இங்க ரொம்ப ஈசி. சில நேரங்கள்ல அப்படி டெஸ்ட் பண்ணும் போது என்னோட லேப் ராட்ஸ் இறந்தும் போயிடுறாங்க. லைக் மீரா. பட் பாரு வலிப்புன்னு ஒரு காரணத்தை சொன்னதும் மறுகேள்வி கேட்காமல் பாடியை வாங்கிட்டு கிளம்பிட்டாங்க, சிம்பிள். " என்று இரு கைகளையும் விரித்துக் காட்டினான்.​

நம்ம ஹாஸ்பிடல்லயே எனக்கு உதவி பண்ணுறவங்களும் இருகாங்க. நர்ஸ் சித்ரா, மெர்சி அண்ட் வார்டு பாய் சுப்பிரமணி மாதிரி ஆளுங்க. சில பேரு குடுக்குற காசுக்கு வாயை மூடிட்டு ஒழுங்கா வேலை பார்ப்பாங்க...சில பேரு இடையில பாவம் புண்ணியம்னு பேச ஆரம்பிச்சுடுவாங்க...அப்படி ஆரம்பிச்சா அவங்க கதையும் கிளோஸ்...லைக் சித்ரா அண்ட் சுப்பிரமணி" என்றான் சர்வ சாதாரணமாக.​

"யூ ஆர் சிக்...ராட்சசன் நீ" என்று திட்டினாள் அதிஷா.​

"கரெக்ட்... சரியா கண்டு பிடிச்சிட்ட" என்றபடி அருகே இருந்த பெட்டியை திறந்து அதிலிருந்து ஒரு ஊசியை எடுத்துக்கொண்டே 'இப்போ உன்கிட்ட நான் ஏன் இதெல்லாம் சொல்லிட்டிருக்கேன் தெரியுமா... என்னை பத்தின உண்மை தெரிஞ்சவங்க ஒன்னு செத்துப் போய்டணும் இல்லை போதையில் இருக்கணும். என் வேலை முடியுற வரை உன்னை போதையிலேயே வச்சிருக்க முடிவு பண்ணிட்டேன்" என்று அவன் சொல்லிக்கொண்டே இருக்க அவனது நோக்கம் புரிந்தவள் சட்டென்று தப்பித்துக்கொள்ளும் நோக்கில் எழுந்து ஓட எத்தனித்த நேரம் அவன் காலை நீட்டி அவள் கால்களை தடுக்கி விட்டிருந்தான்.​

கீழே விழுந்தவள் மீது ஏறி அமர்ந்தவன் "டோன்ட் ஒர்ரி, இது உனக்கே போக போக பிடிக்கும். செக்ஸுவல் டிரைவ் தூண்ட கூடிய ட்ரக்...ஏற்கனவே மார்க்கெட்ல நிறைய இருக்கு. பட் இது புது ரகம். இப்போ மார்க்கெட்ல கிடைக்குறதை விட ராஜ போதை. இட்ஸ் எ ஹெவன். இப்போ அடல்ட்ஸ் மூவிஸ் இண்டஸ்ட்ரில இதுக்கு தான் டிமாண்ட் அதிகம். ஏன் தெரியுமா இதை பொண்ணுங்களுக்கு கொடுத்து அவங்க கிட்ட மிருகத்தனமா நடந்துக்கிட்டா கூட அவங்க அதை என்ஜாய் தான் பண்ணுவாங்க " என்று சொன்னான்.​

ஒரு பெண்ணாக அவன் பேசுவதை எல்லாம் கேட்க கேட்க அவன் மீது அருவருப்பு அதிகரித்துக்கொண்டே போனது. எத்தனை பெண்களின் வாழ்வு இவனால் நாசமாகியிருக்கும் என்று நினைக்கும் போதே அவளுக்குள் அவனை கொல்ல வேண்டும் என்கின்ற அளவுக்கு ஆத்திரம்.​

"முரண்டு பிடிக்காமல் ஜஸ்ட் என்ஜாய் அதிஷா" என்று சொல்லியபடி அவள் கையில் அவன் ஊசியை செலுத்த முயற்சிக்க அவனை தடுக்க எவ்வளவோ போராடினாள். கண்களில் கண்ணீர் வேறு நிற்காமல் வழிந்துக்கொண்டிருந்தது.​

அவன் பலத்திற்கு ஈடுகொடுக்க முடியாமல் அவள் துவண்ட தருணத்தில் அந்த ஊசியை அவளது கரத்தில் செலுத்தியிருக்க அந்த போதைக்கு அவள் பலியாக கூடாது என்கின்ற எண்ணம் மட்டுமே அவள் சிந்தனையை நிறைத்திருந்தது.​

உடலில் இருந்த மிச்ச மீதி சக்தியெல்லாம் திரட்டி அவனை தள்ளிவிட்டவள் அந்த ஊசியை பிடிங்கி எறிந்திருந்தாள். கீழே விழுந்தவன் சுதாகரித்து கொண்டு எழுந்து கொள்ளும் முதலே வேகமாக செயல் பட்டவள் அருகே இருந்த அழகு சிலையை எடுத்து அவன் தலையில் ஓங்கி அடித்திருந்தாள். அவனது குருதி தெறித்து அவளை நனைத்திருந்த போதும் அவளால் ஆத்திரத்தை அடக்கவே முடியவில்லை அந்த சிலையால் அவனை மீண்டும் மீண்டும் சரமாரியாக தாக்கினாள்.​

அவன் அப்படியே துவண்டு விழுந்திருந்த சந்தர்ப்பத்தை பயன்படுத்திக்கொண்டவள் அங்கிருந்து தப்பித்து வந்திருந்தாள்.​

அவள் அந்த வீட்டை விட்டு வெளியேறிய சில நிமிடங்களிலேயே சிலர் அவளை பின் தொடர்வதை உணர்ந்தவள் உயிரை காப்பாற்றி கொள்ள ஓட்டமெடுத்த தருணத்தில் தான் அங்கே ஆதிஷை சந்தித்தாள்.​

நடந்ததை ஆதிஷிடம் சொல்லும் போதே அவளின் உடல் நடுங்கியது.​

கண்களில் கண்ணீர் வழிய படுத்திருந்தவளிடம் "சாரி திஷா, உனக்கு இது நடந்திருக்க கூடாது. நான் விட்டிருக்க கூடாது..." என்றான்.​

அவளை தனக்குள் புதைத்துவிடும் எண்ணம் கொண்டவன் போல அவளை இறுக்கமாக கட்டிக்கொண்டான்.​

"நீங்க எப்படி அந்த நேரத்துல அங்க?" என்று கேட்டாள்.​

"சொன்னா கேவலமா நினைப்பியா? உனக்காக தான் வந்தேன். யாஷ் வீட்குள்ள புகுந்து உன்னை தூக்கிட்டு வரலாமான்னு யோசிச்சிட்டிருந்தேன். நீயே வந்துட்ட" என்றவனை பார்த்து சிரித்தவள் "தூக்கிட்டே வந்திருக்கலாம்...இராவணன் மாதிரி" என்றாள்.​

"இராவணன் கிட்ட இருந்து தூக்கிட்டு வந்த ராமன்னு சொல்லுடி" என்றான் அவன்.​

"ஆஹான்...ராமனா நீங்க?" என்று கேட்டாள்.​

"உன்னை காதலிக்குறதுல மட்டும்...மீதி எல்லாம் இராவணன் தான்" என்று சொல்லிக்கொண்டே மீண்டும் அவள் மீது படர்ந்தவன் அவளை மொத்தமாக கொள்ளையிட தொடங்கிவிட்டான்.​

"ஆதிஷ், என் கிட்ட என்னவோ சொல்லணும்னு சொன்னிங்களே முதல்ல அதை சொல்லு..." என்று அவள் சொல்லி முடிக்கும் முன்னே அவள் வார்த்தைகளை அவள் இதழ்களில் இதழ் பொருத்தி விழுங்கியிருந்தான்.​

 
Status
Not open for further replies.
Top