எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

வானம் இடிந்து வீழ்வதில்லை- அத்தியாயம் 14

Status
Not open for further replies.

அத்தியாயம் 14

மாலை ஐந்து மணி வாக்கில் வெளியேறியவன் மறுநாள் காலை ஏழு மணிக்கு தான் வீடு திரும்பியிருந்தான்.​

அவன் அறைக்குள் நுழைந்த சமயம் அதிஷா தூங்கி கொண்டிருக்க அவள் கன்னத்தில் மென்முத்தம் பதித்தவன் குளித்து ஆயத்தமாகியிருந்தான்.​

துயில் கலைந்து எழுந்தவளின் பார்வை அவன் மீது ஆச்சரியமாக படிந்தது. அடர்ந்து வளர்ந்திருந்த தாடி, பரட்டை தலை என்று எதுவுமே இல்லை. ஒட்ட வெட்டப்பட்டிருந்த சிகையுடன் முழு காவல் சீருடையில் ஆயுத்தமாகியிருந்தான்.​

"வாவ்" என்று சொல்லியபடி கட்டிலில் இருந்து எழுந்துக்கொண்டவளை கண்ணாடி வழியாக பார்த்தவன் "என்னடி சைட் அடிக்குறியா?" என்று கேட்டான்.​

"ஆமா" என்று சொல்லியபடி அவன் அருகே சென்றவள் அவன் மீசையை முறுக்கி விட்டாள்.​

"பெர்ஃபெக்ட்" என்று புன்னகையுடன் ஒற்றை கண் சிமிட்டி சொன்னவளின் கன்னக்குழியில் அழுந்த முத்தமிட்டவன் "போய்ட்டு வரேன் திஷா. பிரேக்கிங் நியூஸ் பார்க்க மருந்துறாத" என்றபடி கிளம்பி விட்டான்.​

சீருடையில் ஆயுத்தமாகியிருந்த கதிர் மற்றும் செல்வாவையும் அழைத்துக்கொண்டு அவன் ஜீப்பில் ஏறுவதை பெருமிதமாக பார்த்துக்கொண்டே நின்றாள் அவள்.​

குளித்து ஆயுத்தமாகி தனது வேலைகளை எல்லாம் செய்து முடித்துவிட்டு டிவியை போட அதில் தலைப்பு செய்திகளில் எல்லாம் யாஷின் போதைபொருள் சிண்டிகேட் பற்றிய செய்திகள் தான் போய்க்கொண்டிருந்தன.​

ஆதிஷின் தலைமையில் காவல் துறையினரால் யாஷின் மருத்துவமனை மற்றும் வீடு என்று அதிரடி சோதனைகள் செய்யப்படுவதும், சில பல அரசியல் பிரமுகர்கள் உற்பட சமுதாயத்தில் உயர்ந்த அந்தஸ்து வகிக்கும் வியாபாரிகள் என்று கைது செய்யப்படும் காட்சிகளும் தொலைக்காட்சியின் திரையை நிறைத்திருக்க "ஆத்தி...இவங்க எல்லாம் போலீசா?" என்று வந்து நின்றாள் கண்ணம்மா.​

அவளின் அதிர்ச்சியை பார்த்து வாய்விட்டே சிரித்துக்கொண்டாள் அதிஷா. அதனை தொடர்ந்து பத்திரிகையாளர் கூட்டத்தில் ஆதிஷ் பேசினான்.​

தலைநகரில் அதிகரித்து வந்த போதைப்பொருள் புழக்கத்திற்கு முக்கிய காரணமாக இருந்த பெரும்புள்ளிகள் ஆதார பூர்வமாக கைது செய்ய பட்டிருப்பதாகவும் அவர்களின் சொத்துக்கள் அரசாங்கத்தால் பறிமுதல் செய்யப்படுமென்றும் சொன்னான். இதற்கெல்லாம் முக்கிய தலையாக இருந்து செயல் பட்ட டாக்டர் யாஷ் மற்றும் அவன் தம்பி ரோஷனும் தலைமறைவாகி விட்டதாகவும் காவல் துறை அவர்களை வலைவீசி தேடிவருவதாகவும் தெரிவித்தான்.​

அவன் பேசியதை புருவம் இடுங்க பார்த்துக்கொண்டே அமர்ந்திருந்த அதிஷாவின் இதழ்கள் 'தலைமறைவா?' என்று முணுமுணுத்துக்கொண்டன.​

அதனை தொடர்ந்து செய்ய வேண்டிய வேலைகளை எல்லாம் முடித்து விட்டு இரவில் வீடு திரும்பிய ஆதிஷிடம் "யாஷ் தலைமறைவுன்னு சொன்னிங்களே நிஜமாவா?" என்று கேட்டாள்.​

அவள் நெற்றியில் முத்தமிட்டுவிட்டு உள்ளே சென்றவன் உடை மாற்றிக்கொண்டு திரும்பி வந்தபடி "வா போகலாம்" என்று அவளையும் அழைத்து கொண்டு கிளம்பி விட்டான்.​

ஆதிஷின் ஜீப் அந்த காட்டு பகுதியில் அமைந்திருந்த பாழடைந்த கட்டிடத்தின் முன் நின்றது.​

ஜீப்பிலிருந்து இறங்கியவன் அவளை அழைத்துக்கொண்டு அந்த கட்டிடத்தின் உள்ளே நுழைந்தான். பாழடைந்த கட்டிடத்தில் இருள் சூழ்ந்திருக்க அவன் கரத்தை பற்றி கொண்டே நடந்தாள் அவள்.​

ஒரு கதவை திறந்து அதற்குள் நுழைந்தான். அங்கே கீழ் தளத்தை நோக்கி குறுகிய படிக்கட்டுகள் அமைந்திருக்க அதிஷாவையும் அழைத்துக்கொண்டு அதன் வழியே இறங்கி அங்கே இருந்த ரகசிய அறை ஒன்றுக்குள் நுழைந்தான்.​

அவனுடன் உள்ளே நுழைந்தவளின் விழிகள் அதிர்ச்சியில் விரிந்துகொண்டன.​

மங்கிய விளக்கின் ஒளி நிறைந்திருந்த அந்த அறையில் யாஷ் மற்றும் ரோஷன் வெறும் உள்ளாடை மட்டும் அணிந்திருக்க தலைகீழாக கட்டி தொங்க விடப்பட்டிருந்தனர்.ஆதிஷ் அவர்களை அடித்து துவைத்ததில் குருதி வழிய தொங்கி கொண்டிருந்தவர்களுக்கு சரியாக கீழே ஆள் உயர டிரம் இருந்தது.​

ஆதிஷை பார்த்ததும் "டேய் விடுறா என்னை... எதுக்கு டார்ச்சர் பண்ணுற" என்று பேச கூட தெம்பியில்லாமல் நலிந்து வந்தது யாஷின் குரல்.​

"டார்ச்சர் ஆஹ்? இதெல்லாம் உனக்கு கொஞ்சம் தான். உன்னால நிறைய பேர் இதைவிட மோசமா கொடுமை அனுபவிச்சிருக்காங்க" என்றவன் "அதையெல்லாம் விட நீ அதிஷாவை தொட்டிருக்க கூடாது. பட் தொட்டுட அதுக்கு உனக்கு மன்னிப்பே கிடையாது" என்று சொன்னவனை விழி விரித்து பார்த்துக்கொண்டே நின்றாள் அதிஷா.​

அவளை பார்த்துக்கொண்டே முதுகில் சொருகியிருந்த துப்பாக்கியை எடுத்தவன் அங்கே தொங்கி கொண்டிருந்த ரோஷனை குறிவைத்து சுட்டிருந்தான். ஏற்கனவே மயக்கத்தில் இருந்தவனின் உயிர் சத்தமே இல்லாமல் பிரிந்திருக்க அவன் கால்களை கட்டியிருந்த கயிற்றை குறி வைத்து சுட்டிருந்தான்.​

தோட்டா துளைக்க அந்த கயிறு அறுபட்டு அவனது உடல் அவனுக்கு கீழே ஆசிட்டால் நிரம்பியிருந்த டிரமிற்குள் விழுந்தது. ஆசிட்டில் மூழ்கிய அவனது உடல் உருகி உருத்தெரியாமல் அழிந்து விட அதை பார்த்த யாஷுக்கு ஈரக்குலையே நடுங்கி போய்விட்டது.​

"ஹேய்..ஹேய்... விட்டுரு என்னை. எவ்வளவு பணம் வேணும்னாலும் தரேன்...விட்டுரு. என்னை ஒன்னும் பண்ணிடாத" என்று கெஞ்சினான்.​

இந்த நேரத்திலும் பணம் என்று பிதற்றும் அவனது அறியாமையை நினைத்து தலையை இருபக்கமும் ஆட்டிய படி இதழ் குவித்து ஊதிய ஆதிஷ் அதிஷாவின் கையில் துப்பாக்கியை கொடுத்தான்.​

"இவனுங்க கிட்ட எல்லாம் பேசி டைம் வேஸ்ட் பண்ணக்கூடாது பேபி… ஷூட்" என்றான்.​

கைகள் நடுங்க துப்பாக்கியை தூக்கி பிடித்தவள் எச்சிலை கூட்டி விழுங்கிக்கொண்டே ஆதிஷை பார்க்க "என்ன பேபி ? பயமா இருக்கா?" என்று கேட்டான்.​

அவள் இல்லையென தலையாட்ட "பிறகென்ன... பாவமா இருக்கா? இவன் எத்தனை பொண்ணுங்க வாழ்க்கையை சீரழிச்சிருக்கான். உயிரோடு இருந்தா இன்னும் பல பொண்ணுங்களை பலி கொடுப்பான். அதை நினைச்சு பாரு. பாவம் பரிதாபம் எல்லாம் தோனாது" என்றான்.​

"அதில்ல ஆதிஷ்…" என்று அவள் இழுக்க "அப்புறம் என்னடி?" என்றான் அவன்.​

"சுட தெரியாது" என்றாள் அவள்.​

அவள் சொல்லிய தோரணையில் சிரிப்பு வந்துவிட மெலிதாய் சிரித்தவன் " அட ஆமால்ல...நான் சொல்லித் தரேன்" என்றபடி அவள் பின்னால் நெருங்கி நின்று பின்னிருந்து அவள் கரங்களை பிடித்து துப்பாக்கியை யாஷின் காலில் கட்டியிருந்த கயிற்றுக்கு குறி வைத்து பிடித்துக்கொண்டவன் அவள் காதருகே குனிந்து "புல் தி ட்ரிகர்" என்றான்.​

அவளும் அவன் சொல்லிய கணத்தில் கண்களை அழுந்த மூடியபடி சுட்டிருக்க கயிறு அறுபட்டு யாஷ் உயிருடன் அந்த ஆசிட் தொட்டிக்குள் விழுந்து துடிதுடித்து மாண்டு போனான்.​

"தலைமறைவாக இருக்கும் போதைப்பொருள் கடத்தல் மன்னன் யாஷையும் அவன் தம்பியையும் காவல் துறை தேடிட்டே இருக்கும்" என்று ஒற்றை கண் சிமிட்டி சொன்னவன் அங்கிருந்து வெளியேறியிருந்தான்.​

அவளை அழைத்துக்கொண்டு ஜீப்பில் ஏறியவன் கதிருக்கு அழைத்திருந்தான்.​

அவன் அழைப்பை ஏற்றதும் "கதிர் வேலை முடிஞ்சுது. கிளியர் பண்ணிடுங்க" என்று விட்டு வைத்தான்.​

அவன் அருகே அமர்ந்திருந்த அதிஷாவை பார்த்தவன் அவள் கரத்தை பற்றி தனது கைகளுக்குள் வைத்துக்கொண்டே "தப்பு பண்ணிட்டோம்னு தோணுதா? கொடூரமா நடந்துக்கிட்டோம்னு நினைக்குறியா?" மென்மையாக கேட்டான்.​

'இல்லை' என்று அழுத்தமாக தலையாட்டியவள் "அவன் இதை விட கொடூரமானவன்" என்றாள்.​

அவள் தைரியத்தை புருவம் உயர்த்தி ஆச்சரியமாக பார்த்தவன் அவளை தோளோடு சேர்த்தணைத்து உச்சந்தலையில் முத்தமிட்டான்.​

 
Last edited:
Status
Not open for further replies.
Top