எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - 18 Final

admin

Administrator
Staff member

அத்தியாயம் 18 (இறுதி அத்தியாயம்)​

"என் பார்வையில தெரியாத என்னோட காதல் இனி எப்பவும் உனக்கு தெரிய வாய்ப்பில்லை... இனி அதை உங்கிட்ட நான் சொல்ல போறதும் இல்லை... புரிஞ்சுக்க முடியாத இடத்தில காதல் தோத்து போறது தப்பில்லை... என்னோட லவ் தோத்து தான் போயிடுச்சு..." என்றவன் வார்த்தைகள் ரீங்காரம் போல் காதில் கேட்டுக் கொண்டே இருந்தது.​

இப்பொழுது மட்டுமல்ல கடந்த நான்கு அந்து நாட்களாக இதுதான் மனதில் ஓடிக் கொண்டே இருக்கிறது. அவன் வாய் மொழியாக கூறிய செய்தியை விட அவன் கண்களில் தெரிந்த வலி இவளின் இதயத்தை நேரடியாக தாக்கிக் கொண்டிருக்கிறது.​

நெஞ்சம் விம்மித் துடிக்கிறது. அதையும் மீறி அவனை ஏற்றுக் கொள்ள ஏதோ ஒன்று தடுக்கிறது.. அவளாகவே சென்று அவனை ஏற்றுக் கொள்ள முடியவில்லை அவனது பேச்சு அவளை இன்னும் அவனிடமிருந்து விலகி நிறுத்தி கொண்டே இருக்கிறது.​

சிலைப் போல் அமர்ந்திருந்தவளின் காதில் "அக்கா... உங்களை வர சொல்றாங்க..." குட்டி பெண்ணின் கத்தலில் தன் நினைவிற்கு வந்தவள்​

வரவழைக்கப்பட்ட புன்னகையோடு அனைவரின் முன் வந்து நின்றாள். அக்கணம் அவளது காதில் "அண்ணா எங்க போற..." அரவிந்த்தின் குரல் கேட்டது.​

'அவனும் வந்திருக்கிறான்...' என்று பெரியதாக ஆர்ப்பாட்டம் செய்த மனதை அடக்கியப்படி குரல் வந்த திசையைப் பார்த்தாள்.​

கண்களுக்குள் விழுந்தான் அகரன். பட்டு வேஷ்டி சட்டையில் ஆண்மையின் கம்பீரத்துடன் இருந்தான். நான்கு நாட்களாக அவனது நினைப்பில் இருந்ததாலோ என்னவோ அகரனது முகத்தில் தெரிந்த கலக்கமும், பரிதவிப்பும் இவளுக்கு நன்றாகவே தெரிந்தது...​

அதே நேரம் ராஜ தோரணையில் வளம் வரும் அகரன் மனக்கண்ணில் வந்து மறைந்தான். பட்டென கண்களில் நீர் சூழ்ந்தது. இமைகளை தட்டி தட்டி திறந்தவளின் காதில் "மாப்பிள்ளையும் வர சொல்லுங்க...' என்ற பெரிய தலையின் குரல் கேட்டது...​

உள்ளம் நடுங்க, கண்களை சூழ்ந்த கண்ணீரோடு தாயை தேடினாள். அவளது தேடலை புரிந்து கொண்டவர் போல அவளின் கண்முன் வந்து நின்றார் கங்கா.​

கலங்கிய கண்களுடன், உதடு துடிக்க "எனக்கு அவர் தான் வேணுமா, அவர் மட்டும் தான் வேணும்..." என்றாள்.​

"சரி போ, கூட்டிட்டு வா..." என்ற கங்காவை விழிகளை விரித்துப் பார்த்தாள். அவள் விழிகளை விரித்ததும் இதுதான் நேரமென்று அவளது கண்களை தாண்டி வெளியில் வந்தது கண்ணீரும்.​

அவளது கண்ணீரை துடித்துக் கொண்டே "மாப்பிள்ளையை கூப்பிடாறங்க வாங்க மிஸ்டர் அகரன்னு சொல்லி உன்னோட அவரைக் கூட்டிட்டு வா..." கங்கா கூறியதும் விம்மித் துடித்தது நெஞ்சம் அக்னிக்கு.​

"அம்மா, நிஜமாவா..." நம்ப முடியாமல் கேட்டாள்.​

ஆமென்று கண்களை மூடித் திறந்தவர் மகளின் தலையில் கை வைத்து "உன்னோட அவர் வீட்டுக்கு வந்து, கண்ணீரோட போனதையும் பார்த்தேன். ரூம்ல நீ அழுதுட்டு இருந்ததையும் பார்த்தேன். அப்பவே புரிஞ்சுது இரண்டு பேருக்கும் ஒருத்தருக்கு ஒருத்தர் பிடிச்சு இருக்குன்னு. சரி நிச்சியம் உங்களுக்கு தான்னு சொல்லாம செஞ்சேன். நான் நினைச்சது போல இப்பவே அவர் வேணும்னு சொல்லிட்ட, இல்லனா கல்யாணம் வரைக்கும் டிராமா பண்ணிருக்கணும்..." சலிப்பாக கூறியவரை… கண்களில் கண்ணீருடன், இதழ்களின் சிறு புன்னகையுடன் முறைக்க முயன்று தோற்றாள் காரிகை.​

'நல்ல நேரம் முடிகிறதுக்குள்ள போய் அவரைக் கூட்டிட்டு வா..." என்றதும் இதழ்களில் மலர்ந்த சிறு புன்னகையோடு வீட்டிற்கு பின்னால் சென்றாள்.​

புறங்கையால் கன்னத்தைத் துடைத்துக் கொண்டிருந்தவனை பின்னாலிருந்து அணைக்க பரபரத்தது மனது.​

அதனை ஒரே அதட்டாக அதட்டிவிட்டு​

"இங்க என்ன பண்ணிட்டு இருக்கீங்க..." எனக் கேட்டாள்.​

அவளது குரலைக் கேட்டும் கேட்காதவன் போல் நின்றவனை கண்டு, இவளது புருவங்கள் யோசனையாக வளைந்தது.அதே கணம் அகரனின் மனதிலோ தன் பின்னால் கேட்கும் குரல் அவளுடதாக இருக்க வாய்ப்பே இல்லை என்று தான் நினைத்தான்..​

ஊர் பெரியவர்கள் பலரும் இருக்க, சபை நடுவே அமர்த்தி வைக்கப் பட்டவள் இங்கு தன்னைத் தேடி வருவதெல்லாம் நடக்கும் காரியமா...? என நினைத்து திரும்பாமலே நின்றான்.​

இப்படியும் நடக்கலாம் என்பது போல் அவன் முன் வந்து நின்றாள் பாவை. தன் முன் வந்து நின்றவளை கண்டதும் கண்கள் இரண்டும் அதிர்ச்சியில் விரிய, "நீ இங்க என்ன பண்ற..' எனக் கேட்டான்.​

அவனில் தெரிந்த கம்பீரம் அவனது குரலில் இல்ல, குரல் கரகரத்து தான் ஒலித்தது. பதில் சொல்லாமல் நின்றவளை புருவங்கள் சுருங்க பார்த்தவன் " என்னமா என்ன ஆச்சு…” எனக் கேட்டான்.​

அவனை நேரடியாக முறைத்தவள் "மாமா, உங்களை வர சொன்னார். நான் மட்டும் தான் ஃப்ரீயா இருக்கேன்னு என்னை போயி கூட்டிட்டு வர சொன்னாரு..." அவளது குரலில் இருந்த கேலியை அகரன் சாதரணமாக இருந்திருந்தால் கண்டு கொண்டிருப்பான். அவன் தான் தன்னையே மறந்த நிலையில் உள்ளானே… பேதையின் முகத்தில் தெரிந்த சிறு புன்னகையை கண் வாங்காமல் பார்த்தான்.​

"வாங்க போலாம் எல்லாரும் நமக்காக தான் வெயிட்டிங்..." வீட்டை கைகாட்டி கூறினாள். அக்கணம் அவளது பேச்சை அகரன் உள் வாங்கவே இல்லை..​

தற்பொழுது அகரனது பார்வை முழுவதும் அவளது கைகளில் மோதிரத்தில் மட்டுமே நிலைத்தது. அவனது பார்வை செல்லும் இடத்தை பார்த்தவளுக்கு அத்தனை சிரிப்பு.​

கன்னக் கதுப்புகளை கடித்து கொண்டே " மிஸ்டர் அகரன், போலாமா? இல்ல இங்கேயே நிற்போமா..." எனக் கேட்க அவனிடம் பதில் இல்லை...​

"சரி நான் போறேன்..." என்றவள் திரும்பி நடக்க பட்டென அவளது கைகளை எட்டிப் பிடித்தான்.​

திரும்பி நின்று "என்ன.." என்று புருவத்தை உயர்த்திக் கேட்டாள்.​

என்னவென்று ஒரு பார்வை பார் பெண்ணே… என நினைத்தவனுக்கு அவள் என்ன? என வாய் மொழியாக கேட்டதே பெரியதாக இருந்தது.​

அக்கணம் எதை பற்றியும் யோசிக்காது அவளது முன்னால் மண்டியிட்டான். அகரன் அகம்பாவி மொத்தமாய் அவளிடத்தில் தோற்று மண்டியிட்ட தருணம் அது.​

"என்ன பண்றீங்க மிஸ்டர் அகரன்..." அதிர்ச்சியாகக் கேட்டு பின்னால் நகர்ந்தவளின் கையை விடாது இன்னும் விடாது இறுக்கமாக பற்றிக் கொண்டான்.​

"எனக்காக ஒரே ஒரு ஐஞ்சு நிமிஷம் நில்லு ப்ளீஸ். எங்க என்னோட காதலை கடைசி வரைக்கும் சொல்லாம போயிடுவனோன்னு பயமா இருக்கு..." என்றவனை இமைக்காமல் பார்த்தாள்.​

முகம் முழுக்க சிவந்து, கலங்கி அமர்ந்திருந்த தன்னவனை வயிற்றோடு அணைத்துக் கொள்ள கைகள் பரபரத்தது. பரபரத்த கைகளை இறுக மூடி அவனையே பார்த்தாள். அவனோ அவளது விழிகளை பார்த்தபடி தன் பேச்சை தொடர்ந்தான்.​

"கண்டதும் காதல் கிடையாதுன்னு நம்பர ஆள் நான். எஸ் உன்னை பார்த்ததும் எனக்கு லவ்வெல்லாம் வரல. இவ என் முன்னாடி எப்படி நிமிர்ந்து நின்னு பதில் சொல்லலாம்ன்னு ஒரு கோபம். அது தான் உன்கிட்ட என்னை ஃபோர்ஸ்ஸா நடந்துக்க வைச்சது. அப்ப கூட நீயும் வேண்டாம் உன் வேலையும் வேண்டாம்னு சொல்லிட்டு போன பாரு... ஐ ரியலி இம்ப்ரஸ்ட் டி.ஆனால் அதை நான் வெளிய காமிக்கல, எனக்குள்ள இருந்த ஈகோ தடுத்தது..."​

"அதுக்கு அப்பறம் ஹாஸ்பிடல் நடந்த தீடிர் திருமணம் நிஜமாவே எனக்கு கோபம் என்னைக் கேட்காம என் வாழ்க்கையை முடிவெடுத்தக் கோபம். அந்த கோபத்தை தான் உன்கிட்ட காட்டிடேன்.நான் பேசன பேச்சுக்கு வேற யாராவது இருந்தா அழுது கரைஞ்சு இருப்பாங்க ஆனா நீ நிமிர்ந்து நின்ன தெரியுமா... சத்தியமா சொல்றேன் என்ன பொண்ணுடான்னு அதிசயமாக பார்க்க தோணுச்சு..."​

அவன் உதிர்த்த வார்த்தைகளையே மங்கையவள் அதிசயமாக பார்த்தாள். எப்போதும் தன் பக்க தவறை உணர்ந்து பேசாதவன் இப்போது தவறு மொத்தம் தன் மீதே என தன் முன்னால் மண்டியிட்டு பேசும் அகரன் அவளுக்கு புதியவனாக தெரிந்தான். அதுவும் தன்னையும் தன் கம்பீரத்தையும் ரசித்திருக்கிறான் என்ற வார்த்தைகளை கேட்டதும், ஜிவ்வென்றிருந்தது.​

அவள் கைகளை நெஞ்சோடு சேர்த்து அணைத்துக் கொண்டவன் "அதுக்கு அப்பறம் உன் மேல எப்ப லவ் வந்ததுன்னு எல்லாம் தெரியாது டி... இதோ இந்த இடத்துல உன்னை நான் அத்தனை அசிங்கமா பேசியும் அலட்சியாம ஒரு பார்வை பார்த்திட்டு கம்பீரமா நடந்து போனயே அப்பவா?​

இல்லை போன போகுதுன்னு உன்னை ஏத்துக்கிற மைண்ட் செட்டோட வந்த என்கிட்ட​

நீயும் வேண்டாம் உன் தாலியும் வேண்டான்னு சொல்லிட்டு கர்வமா ஒரு சிரிப்பை உதிர்த்திட்டு போனயே அப்பவா ?..."​

"தெரியல டி? எப்ப?எந்த நேரத்துல உனக்குள்ள நான் விழுந்தேன்னு எனக்கு தெரியல, ஆனா மொத்தமா விழுந்துட்டேன் உன்னோட திமிருல, உன்னோட நிமிர்வுல, உன்னோட கம்பீர சிரிப்புல மொத்தமா விழுந்துட்டேன்..." என்றான்​

அக்கணம் பெண்ணவளை அணைத்து ஆறுதலைத் தேடத் துடித்த மனதை அடக்கொண்டு கண்களை அழுந்த மூடித்திறந்தவன், "எப்பவும் நினைப்பேன், உன்னை பார்க்கவே கூடாது, பேசவே கூடாதுன்னு. அப்ப எல்லாம் நீ கழட்டி குடுத்திட்டு போன தாலி என்னை பார்த்து சிரிக்கும். ஒருத்தன் தாலியை கட்டிட்டா அவன் தான் என் வாழ்க்கை அவன் என்ன பண்ணாலும் பொறுத்து போவன்னு சொல்ற பொண்ணுங்க மத்தியில... 'இது வெறும் கயிறு தான் ஜஸ்ட் மூவ் ஆன் மிஸ்டர் அகரன்...' என்கிட்டே சொல்லிட்டு போனப் பாரு. நிஜமா சொல்றேன் இவள்ட வாழ்க்கை முழுக்க தோத்துக்கிட்டே இருந்தாலும் தாப்பில்லைன்னு தோணுச்சு..." விழிகளில் தவிப்போடு காளையவனின் வார்த்தைகளை மனதிற்குள் சிறுக சிறுக சேமித்துக்கொண்டிருக்க கைகளோ அவன் இதயத்தில் இளப்பாறிக் கொண்டிருந்தது.​

"அது அப்ப மட்டுமில்ல உன்னை​

ஒவ்வொரு முறையும் பார்க்கும் போது, பேசும் போது, உன்னோட கம்பீரத்துல வீழும் போதெல்லாம் விழ்ந்தே கிடைக்க ஆசைப்பட்டு இருக்கேன் டி... அப்ப எல்லாம் எனக்குள்ள இருக்கிற ஈகோ அதை சொல்ல விடாது.​

'என்னை வேண்டான்னு சொன்னவ கிட்ட காதல்ல விழுந்து கிடைக்கிறது அவமானமா இருந்தது. அப்ப அந்த நேரம் உன்கிட்ட போர்ஸ்ஷா பேசி இருக்கேன். அப்பவும் உன்கிட்ட இருந்து அசால்டா பதில் வரும்..."​

அந்த சமயம் 'என்னையும் மீறி ரசிச்சு இருக்கேன்...' என்றவன் இப்போதும் அந்த ரசனையை உள்வாங்கியவன் போல் கண்களை மூடி திறந்தான். தன்னவனின் செயல்களில் மனதில் மத்தாப்பூக்கள் பூக்க விழிகள் பளப்பளத்த நீரோடு இப்போது அவனை ரசித்துக் கொண்டிருந்தாள் அவனின் தாரகை.​

"இப்படி ஆயிரம் ஆயிரம் ரசிப்பை கடந்து வந்தததுக்கு அப்பறம் தான் ஊட்டில நமக்குள்ள நடந்தது..." இந்த வார்த்தைகளில் ஏனோ மடந்தையின் கன்னங்களில் செம்மை குடியேற உதட்டை பற்களால் கடித்து வெறும் முகத்தில் குடியேறிய நாணத்தை தடுத்தவள் அழன் வார்த்தைகளை கிரகிக்க முயன்றாள்.​

“உடல் கவர்ச்சியா இருந்தா உன்னை பார்த்ததும் வந்துருக்கு டி...​

உன்னை விடு எத்தனையோ பொண்ணுங்களை கடந்து வந்தவன் நான். அவங்களை பார்க்கும் போது வராத லஸ்ட் தான் உன்மேல வர போக்குதா சொல்லு..."​

"லவ்வா லஸ்டான்னு தெரியாத வயசா டி எனக்கு... என் பொண்டாட்டி மேல எனக்கு இருக்கறது காதல் தான்னு எனக்கு தெரியாதா... உன் கழுத்துல இருந்த தாலியை பார்த்து தான் என்னை நீ நினைச்சிட்டு இருக்கேன்னு நினைச்சேன். அப்ப காதலிக்கிற மனசு இறக்க கட்டி பறந்தது. உன்கிட்ட ஒரு கணவனா உரிமை எடுத்துக்கிட்டேன்...இதுல என்ன தப்பிருக்கு சொல்லு..." என்றதும் அகரனின் கண்களையே பார்த்தாள் அதிலிருந்த காதலை கண்டு கொண்டவளுக்கு கால்கள் தரையில் நிற்கவில்லை, கைகளோ தன்னவனை நெஞ்சோடு அணைக்க துடித்தது.​

"எப்ப உன் மனசுல நான் இல்லைன்னு தெரிஞ்சதோ அப்பவே செத்..." அடுத்து வார்த்தையை அவள் பேச விடவே இல்லை. அழன் இதழோடு தன் சிவந்த இதழை அழுத்தமாக பொருத்தி இருந்தாள். கண்கள் விரிய பெண்ணை பார்த்தவன் பின் தாமதமாக கண்களை மூடிக் கொண்டான்.​

நொடிகள் நிமிடங்கள் கடந்து அவனை விட்டவள் "உனக்காக தான் டா இன்னும் என் கழுத்துல இது இருக்கு. ஆரம்பித்துல அப்பாககான்னு போட்டவ தான் நாள் போக போக உன்மேல ஒரு ஈர்ப்பை கொடுத்தது.. மஞ்சளின் மகிமை சொல்லுவாங்களே அது போல..."​

நீ பேசின வார்த்தையை ஜீரணிக்க முடியாமல் தான் அப்பாக்காக சொன்னேன்.ஆனால் அப்ப இருந்து உனக்காக இதை சுமந்துட்டு இருக்கேன்..ஏன் எதுக்கு எப்படி சுத்தமாக எனக்கு பதில் தெரியல. ஆனால் உன்மேல எனக்கே தெரியாம ஒரு லவ். அது உன்னோட பேச்சில் அடி ஆழம் வரைக்கும் போயிரும். வெளிப்படையா உன்னோட அக்கறை ஊட்டியில இருக்கும் போது தான். உன்னோட பரிதவிப்பு, அக்கறை, ஆறுதல், அணைப்பு எல்லாமே எனக்குள்ள அடி ஆழத்தில இருந்த காதலை மேல கொண்டு வந்துச்சு..."​

"ஆனால் அடுத்த நிமிஷமே நீ பேசற பேச்சு அதை ஆழம் வரைக்கும் கொண்டு போயிடும்.எதுக்கு இப்படி பண்ற... ஏன் காயத்தை கொடுத்துட்டே மருந்தையும் கொடுக்கிறான்னு பல முறை அழுது இருக்கேன். தனியா யோசிச்சு இருக்கேன். அப்படி யோசிக்கும் போது தான் உனக்கு என்மேல லஸ்ட்ன்னு தோணுச்சு..."​

"ஆனால் அதையும் மீறி அன்னைக்கு ரூம்ல என் மேல தண்ணி ஊத்திட்டு போகும் போது... சத்தியமா என் மனசு சொல்லுச்சு நீ மறுபடியும் வருவன்னு... நீ வருவேன்னு அங்கியே நின்னேன்.. எண்ணி பத்து நிமிசத்தில என்னை தேடி வந்தது இல்லாமல் எனக்காக அழுதிட்டே எல்லாம் பண்ணப்ப எனக்குள்ள மொத்தமா வந்துட்ட டா. ஆனாலும் நீ பேசின பேச்சும்... நடந்துக்கிற முறையும் என்னால சரியா எந்த முடிவையும் எடுக்க முடியல..."​

"அதே சமயம் நீ எனக்குள்ள இல்லைன்னு எனக்கு நானே ப்ரூஃப் பண்ண நினைச்சேன்... இதோ இப்ப இந்த கல்யாணத்தை பண்ணவும் முடியாம, தாலியை கழட்டி போடவும் முடியாம, உன்னை ஏத்துக்கவும் முடியாம தவிச்சன்.. எத்தனையோ போராட்டம் எனக்குள்ள இப்ப வரைக்கும்..."​

"அப்ப தான் அரவிந்த் குரல் கேட்டுச்சு. நீயும் வந்து இருக்கேன்னு தெரிஞ்சது. டக்குன்னு உன்னை பார்த்தேன்.மனசு முழுக்க ஒரு தவிப்போட, கண்ணுல தண்ணியோட வெளிய போன உன்னை பார்க்க பார்க்க இங்க வலிச்சது அகரா..." நெஞ்சை காட்டிக் கூறினாள்.​

"அப்ப அந்த நிமிசம் நீ இல்லாம நான் இல்லைன்னு மனசும் மூளையும் ஒரே நேரத்தில சொல்லுச்சு எதுவும் வேண்டாம் என் அகாரா மட்டும் தான் எனக்கு வேணும்ன்னு சொல்லிட்டு உன்கிட்ட வந்துட்டேன் அகரா..." என்றவளை நொடியும் தமாதிக்காமல் இறுக அணைத்து கொண்டவன்​

"லவ் யு டி புவி. லவ் யு ஷோ மச் டி ஆழாக்கு.. இந்த நிமிசம் என்னோட வந்துரு டி...உன்னை என் பொண்ணு மாதிரி பாத்துக்கிறேன்..." எனக் கண்களில் கண்ணீரோடு கூறினான். அவனது உச்சந்தலையில் அழுந்த முத்தமிட்டாள் அக்னி.​

"போதும் போதும் ப்பா ரொம்ப லேந்த் தா போகுது. இரண்டு பேரும் எழுந்து வந்தா மோதிரம் மாத்திடலாம்..." அரவிந்த்தின் குரலில் இருவரும் பிரிந்து நின்றனர்.​

நேராக இருவரிடமும் வந்தவன் "இருப்பத்தி ஒரு தட்டம் மாப்பிள்ளை வீடு தானே எடுத்துட்டு போவாங்க நம்ம ஏன் பண்றோம்ன்னு அப்பவே பெரியம்மா பெரியப்பா கிட்ட கேட்டாங்க. இந்த பெரியப்பா ஏதோதோ சொல்லி சமாளிக்கும் போதே யோசிச்சேன்... இப்ப தானே தெரியுது.. என்னோட வாவ் கேர்ள்ல உனக்கு பார்த்து இருக்காங்கன்னு..." உதடு பிதுக்கி கூறியவன் கண்களில் கண்ணீரோடு நின்ற அக்னியிடம்​

"இன்னும் என்ன அழுகை வாவ் கேர்ள் இல்லை, அண்ணி. வாங்க போவோம்..." என்றவன் அகரனிடம் திரும்பி​

"அண்ணா டேய், எனக்கே தெரியாம என்னோட வாவ் கேர்ள்ல உசார் பண்ணி, நிச்சியம் வரைக்கும் கொண்டு வந்துட்ட..." என்றான் பொறாமை போல...​

அவனை குறுகுறுவென பார்த்தவன் கரகரத்தக் குரலில் "உனக்கு வாவ்வ் கேர்ள் ஆகறதுக்கு முன்னாடியே அவ என் பொண்டாட்டி டா வென்று..." என அரவிந்தின் தலையில் தட்டினான்.​

அவன் அப்படி கூறியதும் ஆவென்று வாயை பிளந்தவன் அக்னியை அப்படியா என்பது போல் பார்த்தான்.​

அவளோ சிரித்தபடி ஆமென்று தலையாட்டினாள். "மம்..என்கிட்ட ஒரு வார்த்தை சொல்லல..." என வாசலில் நின்ற ராஜியிடம் கத்தியவன் பின் அகரனிடம் திரும்பி "அதெல்லாம் முடியாது.எனக்கு தான் முதல்ல வாவ் கேர்ள். அப்பறம் தான் உனக்கு பொண்டாட்டி..." என சண்டைக்கு சொல்ல​

"நெவர்..." என்றான் கடுப்பாக..​

"நானும் நெவர்..." கைகட்டி கடுப்பாக கூறினான் அரவிந்த்..​

இருவரின் சண்டையையும் இதழின் ஓரத்தில் அலர்ந்த சிரிப்போடு பார்த்து நின்றாள் மாதேஷின் தேவதை பெண்.​

என்றும் அவளின் இதழ்களில் மலரட்டும் சிறு புன்னகை...​

முற்றும்...​

ஆதரவு கொடுத்த அனைவருக்கும் நன்றி... படிச்சுட்டு மட்டும் போகாம கமெண்ட் பண்ணுங்க...விமர்சனம் பண்ணுங்க... நன்றாக விமர்சனம் தரும் வாசகர்களுக்கு எனது சார்ப்பகாவும் அன்பு பரிசு காத்திருக்கிறது...ஜூன் வரைக்கும் மறக்காம இருங்க மக்கா...​

அப்பறம் நான் யாருன்னு தெரியுமா? கண்டு பிடிங்களேன்.. முதல் மூன்று ஆட்களுக்கு என்னோட எதிர்பாராத அன்பு வந்து சேரும்.​

நன்றி மக்களே...இப்படிக்கு நான் உங்களின் இதழோரமாய் மலரும் சிறு புன்னகை​

 
Last edited:

Shamugasree

Well-known member
Lovely end dear. Oru valiya rendu perum avanga Manasa purinju manasu vittu pesitanga.
Agni pola ella ponnayum thairiyama nimirva valarkanum. Body shaming ku bayanthu kootukulla adainthudama ellathayum odaichu veliya varanum Agni pola.
All the best dear
 

Jothiliya

Member
அருமை 👌👌👌👌, அகரன் ❤அக்கினி இருவரும் அவர்கள் நேசத்தை உணர்த்துவதற்காக அவர்கள் பெற்றோர்கள் செய்த முயற்சி வெற்றி பெற்று அவர்கள் இருவரது நேசமும்❤❤❤ வெற்றி பெற்று அவர்கள் வாழ்வில் இணைந்து விட்டனர் கதை நிறைவு சுபமான நிறைவு அருமை 👌👌👌👌🌺🌺🌺 🌺வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏👏👏💐💐💐💐💐🌺🌺🌺🌺
 

Priyakutty

Active member
அகரன் ரியலைஸ் பண்ணிட்டாரு தப்பை... அவங்களும் காதல் உணர்ந்துட்டாங்க

அக்னி அம்மா இப்படி நிச்சயம் ஏற்பாடு பண்ணினதால ஆச்சு இல்லனா அந்த மாப்பிளை பாவம் தான...

எப்டியோ சேர்ந்துட்டாங்க நல்லாருந்தா சரி ❤😍

அரவிந்த் கியூட் நீங்க 😍😍😍

நம்ம போகஸ் அவர்மேல தான்... 😁
 

Eswari

Active member
Kuru novel appdingrathaala agaran ah vittutteengannu thonuthu..ellainaa vachchi senjiruppeengalo writer madam.
Jokes apart 2perum purinjikkittaangaley athuvarai happy thaan. Tom and Jerry mathiri evanga life jegajothi ya erukkum 😛😛😛😛
Last but not least maathiri aravind evan ellainaa kathai konjam bore adichchirukkum. Cute lover boy 😘😘😘😘😘
Vazhthukkal dear 👍👍👍👍👍
 
Kuru novel appdingrathaala agaran ah vittutteengannu thonuthu..ellainaa vachchi senjiruppeengalo writer madam.
Jokes apart 2perum purinjikkittaangaley athuvarai happy thaan. Tom and Jerry mathiri evanga life jegajothi ya erukkum 😛😛😛😛
Last but not least maathiri aravind evan ellainaa kathai konjam bore adichchirukkum. Cute lover boy 😘😘😘😘😘
Vazhthukkal dear 👍👍👍👍👍
ஆமாம் கா... வார்த்தைகள் அளவு போல எழுதினேன்... எப்படியும் அமேசான்ல போடும் போது ஒரு நாலு எபிக்கு வைச்சு செஞ்சிட்டு தான் போடுவேன்🫣🫣
 
அகரனை இன்னும் கூட கதற விட்டுருக்கலாம்!!.. அக்னியோட நிமிர்வு சூப்பர்!!.. வாழ்த்துகள்!!..
போட்டி முடிஞ்சதும் கதற விடுவோம் sis.. இவனுக்கே இவனுக்கு எழுதுவோம்
 
Lovely end dear. Oru valiya rendu perum avanga Manasa purinju manasu vittu pesitanga.
Agni pola ella ponnayum thairiyama nimirva valarkanum. Body shaming ku bayanthu kootukulla adainthudama ellathayum odaichu veliya varanum Agni pola.
All the best dear
அக்னி❤️❤️❤️❤️
உண்மையோ உண்மை கா.. பெண்கள் முழுக்க முழுக்க கடந்து வர விஷயம் இது
 
அருமை 👌👌👌👌, அகரன் ❤அக்கினி இருவரும் அவர்கள் நேசத்தை உணர்த்துவதற்காக அவர்கள் பெற்றோர்கள் செய்த முயற்சி வெற்றி பெற்று அவர்கள் இருவரது நேசமும்❤❤❤ வெற்றி பெற்று அவர்கள் வாழ்வில் இணைந்து விட்டனர் கதை நிறைவு சுபமான நிறைவு அருமை 👌👌👌👌🌺🌺🌺 🌺வெற்றி பெற வாழ்த்துக்கள் 👏👏👏👏💐💐💐💐💐🌺🌺🌺🌺
நன்றி நன்றி கா❤️❤️❤️
 
அகரன் ரியலைஸ் பண்ணிட்டாரு தப்பை... அவங்களும் காதல் உணர்ந்துட்டாங்க

அக்னி அம்மா இப்படி நிச்சயம் ஏற்பாடு பண்ணினதால ஆச்சு இல்லனா அந்த மாப்பிளை பாவம் தான...

எப்டியோ சேர்ந்துட்டாங்க நல்லாருந்தா சரி ❤😍

அரவிந்த் கியூட் நீங்க 😍😍😍

நம்ம போகஸ் அவர்மேல தான்... 😁
Thanks a lot dr
 
அகரன் ரியலைஸ் பண்ணிட்டாரு தப்பை... அவங்களும் காதல் உணர்ந்துட்டாங்க

அக்னி அம்மா இப்படி நிச்சயம் ஏற்பாடு பண்ணினதால ஆச்சு இல்லனா அந்த மாப்பிளை பாவம் தான...

எப்டியோ சேர்ந்துட்டாங்க நல்லாருந்தா சரி ❤😍

அரவிந்த் கியூட் நீங்க 😍😍😍

நம்ம போகஸ் அவர்மேல தான்... 😁
அந்த மாப்பிள்ளைக்கு ஒரு fb வைக்க நினைச்சேன்😂😂 போட்டி முடியவும் எடிட்டிங்ல maaaaththidlaam.. நல்லா இருப்பாங்க... எதிர் எதிர் துருவங்களுக்கு ஈர்ப்பு அதிகம்.. அரவிந்த்❤️❤️❤️ ஹாஹாஹா
 

Saranyakumar

Active member
அருமை அழகான கதை பெண்களுக்கு என்ன நடந்தாலும் அதை எதிர் கொள்வதற்கு நேர்மையான திமிர் தேவை அக்னிதா பேச்சு எண்ணம் அசத்தல் பாவம் அரவிந்த் அவன இப்படி புலம்ப விட்டுட்டீங்களே 😂
 
அருமை அழகான கதை பெண்களுக்கு என்ன நடந்தாலும் அதை எதிர் கொள்வதற்கு நேர்மையான திமிர் தேவை அக்னிதா பேச்சு எண்ணம் அசத்தல் பாவம் அரவிந்த் அவன இப்படி புலம்ப விட்டுட்டீங்களே 😂
ரொம்ப ரொம்ப நன்றி சகி.. நீண்ட நாட்களுக்கு பிறகு இங்கு விமர்சனம் அத்தனை மகிழ்ச்சி எனக்கு... ஹாஹாஹா... அவன் சின்ன பையன்... அக்னி😍😍
 
Top