எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

நீ தூரத்தில் நாணல்.

santhinagaraj

Well-known member
நீ தூரத்தில் நாணல்

விமர்சனம்.

ரொம்ப அழுத்தமான ஆழமான காதல் கதை.

கவிலயா அப்பா அம்மா தம்பி என ஏழ்மையான குடும்பத்து பெண். உன் குடும்பத்தில் ஏழை இருந்தாலும் பாசத்தில் பஞ்சம் இல்லை அப்பாவின் அன்பில் மூழ்கி இருப்பவள்.
திடீரென நிகழும் தம்பியின் இழப்பால் துவண்டு விடுகிறாள்.

தந்தையை இழந்து விடுதியில் தங்கும் படிக்கும் கவிலயா முகப்புத்தகத்தில் ஜிபு உடன் நட்பு ஏற்பட்ட அது நாளடைவில் காதலாக மாறுகிறது. ஜிபு வேறு மதத்தைச் சார்ந்தவன்.

கவியின் அம்மா அவளுக்கு கல்யாணம் ஏற்பாடு செய்ய ஜிபுவின் மீதான காதலில் வீட்டை விட்டு வந்து ஜிவு வை மதம் மாறி ஜிப் ஓட வீட்டினரின் சம்மதத்தோடு கல்யாணம் பண்ணிக்கிறாள் கவிலயா.

ஜிபு வீட்டில் கவியோட வசதியின்மையை காரணம் காட்டி அவளை ஏற்க மறுக்கின்றனர் அப்புறம் ஜீபுவோட வற்புறுத்தலால் அவளை ஏற்றுக் கொள்கின்றனர்.

ஜிபுவோட அம்மா சில்வியாவிற்கு கவியை பிடிக்கவில்லை. மகனுக்காக அவனின் முன்னாடி அவளிடம் அன்பாக நடந்து கொண்டாலும் அவன் இல்லாத சமயங்களில் கவியை ரொம்ப கொடுமைப்படுத்துகிறார். கவியிரும் ஜிபுவை பிரித்து அவளுக்கு வேறு அவங்க மதிப்பு சார்ந்த பெண்ணை கல்யாணம் பண்ண நினைக்க அவருடைய எண்ணத்திற்கு ஏற்ப ஜீபுவோட முன்னாள் காதலி யூகி வருகிறாள்.

யோகி சில்வியா இரண்டு பேரும் சேர்ந்து கவியை ரொம்ப காயப்படுத்தி அவளை ஜீபுவிடும் சொல்லாமல் வீட்டை விட்டு போக வைக்கிறார்கள்.

ஆறு மாதங்கள் கடந்த நிலையில் ஜிபு மறுபடியும் கவியை கொண்டு வந்து அதே வீட்டில் சேர்க்கிறான்.

தன்னிடம் சொல்லாமல் வீட்டை விட்டு சென்று விட்டாலே என்று கவி மீது ஜீபவிற்கு கோபம் ஒரு பக்கம். இன்னொரு பக்கம் சில்வியாவோட கொடுமைகள். இதில் கவியோட வாழ்க்கை எப்படி நகர்கிறது என்பது மீதிக்கதை.

ஜிபுக்கு என்னதான் கவி மீது காதல் இருந்தாலும் அதை அவளிடமும் கொஞ்சம் உணர்த்தி இருக்கலாம். இரவு பொழுதில் அவளிடம் அன்பாக நடந்து கொள்ளும் ஜிகி பகல் பொழுதில் அவளோட நிலை என்ன என்று கொஞ்சம் பார்த்து இருக்கலாம்.

ஆப்சனா முதலில் கவியிடம் கோபமாக நடந்து கொண்டாலும். கவி மீதான அண்ணனின் அன்பை புரிந்து கொண்டு அவள் கிட்ட காட்டும் அன்பும் அக்கறையும் சூப்பர் 👌👌

சொந்த வீட்டிலேயே தனிமைப்படுத்தப்பட்டு ரொம்ப மன உளைச்சலில் இருக்கும் கவிக்கு பாட்டியின் அன்பும் அரவணைப்பும் அவளோட கஷ்டத்திற்கு கிடைக்கும் சிறு ஆறுதல்.

கணவன் மனைவி இருவரும் மனம் விட்டு பேசிக் கொண்டாலே நிறைய பிரச்சனைகளை தவிர்க்கலாம்.

கதை ரொம்ப நல்லா இருந்தது சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐

( வார்த்தை பிழைகள், எழுத்துபிழைகளை தவிர்த்து இருந்தால் இன்னும் நல்லா இருந்திருக்கும். அங்கங்க கேரக்டர்களோட பெயர்களும் மாறி இருந்தது அதை எல்லாம் கொஞ்சம் சரி பார்த்துக்கோங்க )
 
Top