எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அமுத விஷமடா நீ எனக்கு

santhinagaraj

Well-known member
அமுத விஷமடா நீ எனக்கு

விமர்சனம்

ஆழமான காதல், நட்பு கலந்த கதை.

அதிதி ரித்விக் ரெண்டு பேரும் கட்டாய கல்யாணத்துல இணைகிறார்கள். அதிதியோட நண்பர்களான சிவா அர்ஜுன் சத்யா எல்லாரும் சேர்ந்து அவளுக்கு கட்டாய கல்யாணம் நடத்தி வைக்கிறாங்க.

பிடிக்காத கல்யாணம் என்றாலும் அதிதி ரித்விக் கூட வாழ முயற்சிக்கிறாள். ஆனால் ரித்திக் அவரின் அம்மாவின் ஆசைக்காக அவளிடம் அன்பாக இருப்பது போல நடித்து அவளை காயப்படுத்துகிறான்.

ரித்விக் அதிதீரும் அன்பாக நடித்து அவளை ஓட்டலுக்கு அழைத்துச் சென்று அவளை காயப்படுத்தி அங்கேயே விட்டுட்டு வர அவளும் தன்னுடைய வாழ்க்கையை எண்ணி அழுது கொண்டே ரோட்டில் நடக்க திவ்யா வந்து அவளை அவளோட வீட்டுக்கு அழைத்துச் சென்று அச்சு உனக்கு கால் பண்ணி வர சொல்றா.

அர்ஜுன் திவ்யா ரெண்டு பேரும் அதிதி தெரியாமல் பேசி அவளை அங்கிருந்து அவசரமா கூட்டிட்டு போறாங்க..

ரித்விக்கு அதிதி மேல ஏன் அவ்வளவு வன்மம்? அர்ஜுன் டிவிக்கு இரண்டு பேரு இடையில் எப்படி பழக்கம்? அர்ஜுன் திடீர் ரெண்டு பேரும் அதிதி கிட்ட என்ன மறைக்கிறாங்க? அதுவே ரிக்வின் வாழ்க்கை என்ன ஆகிறது? என்ற கேள்விகளோட கதை நகர்கிறது.

அதிதி அர்ஜுன் சத்யா எல்லாரும் அவங்களோட ஒரு தலை காதலை மறைத்து நண்பர்களாக ஒருத்தருக்கு ஒருத்தர் ஆறுதலாக இருப்பது அருமை 👏👏

திவியோட காதல நினைக்கிறப்போ ரொம்ப வியப்பா இருக்கிறது. என்னதான் சுயநலமாக நடந்துகிட்டலும் எல்லாரோட வாழ்க்கையை அவளே சரி செய்து விதம் சூப்பர் 👌👌

குழந்தை வளர்ப்பு முறையை பற்றி அறிவு சொன்ன விளக்கம் அருமையாக இருந்தது👏👏

நிறைவான முடிவு வாழ்த்துக்கள்
 
Top