எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 06

NNK-106

Moderator

காதல் Not Out - 06​


கையில் ஏதோ பெட்டியுடன் திரும்பிய சஞ்சீவை என்ன என்பது போல் பின்னால் நின்று பார்த்திருந்தாள் கவிதா. கவிதாவை பார்த்ததும் இப்போது என்ன பேசுவது என்பது போல் இவனும் நிற்க அப்போது தான் கேக் டெலிவரிக்கு வந்தவன் தன் வீட்டு மதில் அருகே யாரோ சந்தேகத்திற்கிடமாய் நிற்பதாக கூறியது நினைவு வர.. சரிதான் என்று ஒரு சிரிப்போடு.. "உன்னோட வேற யாராவது வந்தாங்களா ?" என்றான்.​

"அட ஆமா.. நிப்பு வந்தான்.." என்றுவிட்டு அவன் புரியாமல் என்ன என்க இவனுக்கு எப்படி தெரியும் இப்படி சொன்னால் என்று புரிய.. "ஹீ.. அதான் என்னோட ப்ரன்ட் நிதன்.." என்றாள்.​

"ஓஹ்..சரி உள்ள வர சொல்லு.." என்றான் சஞ்சீவ்.​

"சரி இதோ கூட்டிட்டு வாரன்.." என்று விட்டு கதவை திறந்து வெளியில் ஓடினாள்.​

இவளை என்னவென்று சொல்வது.. என்பது போல் பார்த்திருந்தான் அவன். உள்ளிருந்து இவள் கேட்டை திறக்க முயல்வதை கண்ட காவலாளி.. "இந்தம்மா யாரு நீ.. நீ உள்ள போறத பார்க்கவே இல்லையே.." குழப்பமாய் அவன் இழுக்க.. "சாரி அங்கிள்.. நீங்க தூங்கிட்டு இருந்தீங்க..எதுக்கு தொந்தரவு பன்னன்னு நானே போய்ட்டேன்.." கூறிவிட்டு நிற்காமல் வெளியில் சென்றவள் நிதனை கைபற்றி இழுக்க..​

"ஏ.. எங்க இழுக்குற..விடு.."​

"உள்ள வாடா.."​

"என்ன.." பெரிதாய் வியந்தவன்.. " நீ மாட்டிட்டு.. இப்போ நானும் கூட தான் வந்தேன்னு என்னையும் மாட்டி விடலாம் பார்க்கிறயா.. முடியாது விடு.. " என்று கையை உறுவிக்கொண்டான் நிதன்.​

"ஏஹ் அதெல்லாம் இல்ல.. உன் மாம்ஸ் தான் கூட்டிட்டு வர சொன்னாரு.. சீன் போடாம வா.."​

"ஆள விடு அவர்கூடவே வீட்டுக்கு போ.. நான் போறேன்.. வந்துடாதே அக்கா.." இவள் தடுக்கும் முன்னே அவன் சைக்கிளோடு பறந்து விட.. நிதானமாய் யோசித்தவள்.. "இதுவும் நல்லது தான்.." என்றவாரு உள்ளே சென்றாள்.​

அங்கு சஞ்சீவ் யாருடனோ போனில் கதைத்துக்கொண்டிருக்க..அமைதியாய் சென்று மேசையில் அமர்ந்து கொண்டாள். அப்போது தான் அந்த மேசை மேல் இருந்த அந்த கேக்கை பார்த்தாள். அழகாய் இருதட்டுக்களாக வடிவமைக்கப்பட்டிருந்தது. அழகாய் வட்ட வடிவில் வெள்ளை நிற ஐசிங் மேலாக இருக்க சுற்றி வர சாக்லெட்டில் குளித்திருந்தது. மேலாக செரிப்பழங்களை சுற்றியும் வைத்து அதில் நடுவே சஞ்சீவின் பெயர் குறிப்பிட்டிருந்தது. "வெயிட்.. இந்த கேக்.. ப்ளாக் ஃபரஸ்ட்ல.." கண்டுபிடித்த குஷியில் மீண்டும் சுற்றிவர வந்து பார்த்தாள் கவிதா. இதை கடைகளில் கண்ணாடிப்பெட்டியினுள் பார்த்ததோடு சரி.. அருகில் சென்றால் ஏன் வாங்க வேண்டும் என்ற ஆசை மனதில் உதித்தால் கூட எப்படியே அவள் வீட்டில் இருக்கும் ஸ்பீக்கரிற்கு எட்டி அது குரைக்க ஆரம்பித்து விடும். அது பற்றி ஏன் இப்போது என்று அந்த எண்ணத்தை ஒதுக்கிவிட்டு மீண்டும் கேக்கை பார்க்க அப்போது தான் அதன் அருகில் இருந்த மற்றைய பேப்பரில் சுற்றியிருந்த கேக் துண்டு கண்ணில் பட்டது. அதாவது அவள் அவளது அவனுக்காய் கொண்டு வந்திருந்த கேக் தான் அது. ஒருவர் சாப்பிடும் அளவு கேக் துண்டு, ஐசிங் ஆங்காங்கே ஒட்டியிருந்தது என்று தான் சொல்ல வேண்டும். அதன் மேலே இருந்த மெழுகுவர்த்தி கொஞ்சமாய் எரிந்த அடையாளத்தோடு இன்னும் கேக் மேலே தான் வீற்றிருந்தது. அந்த கேக் துண்டை பார்க்க இவளுக்கே இப்போது ஒருமாதிரியாக இருந்தது. அவன் பார்த்தால் ???​

ஆனால் இவளால் முடிந்தது இது தான்.. அதுவும் சைக்கிள் பஞ்சர் இல்லை பஸ் செலவுக்கு அதுவும் இல்லை என்றால் எப்போதாவது மாதத்திற்கு ஒரு முறை வாங்கி சாப்பிடும் இவளுக்கு பிடித்தமான ஐஸ் க்ரீம் இவற்றை இந்த மாதம் தியாகம் செய்து வாங்கியது. எதுவோ இப்போது இதை அவன் அதுவும் இந்த கேக் அருகில் பார்த்தால்..எண்ணங்களுக்கு விடுப்பு அளித்து விட்டு சட்டென அதனை தாளால் மூடினாள் கவிதா. அதே நேரம் இவள் பின்னால் இருந்து.. "என்ன.. ?" என்று சஞ்சீவ் கேட்க.. "எ..ன்ன என்ன ?" என்றவண்ணம் அதனை பின்னால் மறைத்தவண்ணம் இவள் திரும்பி நின்றாள்.​

ஒரு சிரிப்போடு இவள் அருகில் வந்தவன் இன்னும் நெருங்கி வர பதட்டமாய் அவன் முகம் பார்த்தவண்ணம் பின்னே நகரப்போனவளை தட்டி நிறுத்தியது அங்கிருந்த மேசை. அதற்குள் அவன் மூச்சுகாற்று இவள் முகத்தை உரசும்வகையில் நெருங்கி நின்றிருந்தான்.​

"என்ன.. என்ன என்ன ?" அவன் சிரிப்போடு கேட்டுக்கொண்டே குனியவும் சட்டென கண்களை இறுக்கமாய் மூடிக்கொண்டாள் கவிதா. தன் பின்னால் இருந்த கையில் இருந்து கேக்கை அவன் எடுத்தது புரிய சட்டென கண்களை திறந்தாள். அதற்குள் அவன் விலகியிருக்க நாக்கை கடித்து தலையில் அவள் தட்டிக்கொள்ளவுள் சற்றே தலையசைத்து சிரித்தவண்ணம் அந்த கேக்கை மேசையில் வைத்தான் சஞ்சீவ்.​

"வா கேக் வெட்டலாம்.."​

"சஞ்..சார்.. இது.. அது வந்து..என்கிட்ட இருந்த பணம்.."​

"ஷ்ஷ் கவிதா.. பணத்துல என்ன இருக்கு.. எல்லாம் அன்பு மட்டும் தான்.. வா.." அவன் கூறிவிட்டு அவள் கொண்டு வந்திருந்த அந்த கேக் துண்டை இரண்டாக வெட்டி ஒன்றை அங்கிருந்த தட்டில் வைத்து இவள் பக்கம் நீட்டினான். அவளுக்கு அவன் பேச்சு மற்றும் செய்கை மனதிற்கு இதமாக இருந்தது.​

சந்தோஷமாய் சிறுபிள்ளையென கைதட்டிக்கொண்டிருந்தவளை பார்க்க இவனுக்கும் சந்தோஷமாய் தான் இருந்தது. கேக்கை வாங்கிக்கொண்டவள்.. "ஊட்டி விட்டிருக்கலாம்.." என முணுமுணுக்க...​

"என்ன.. ?" என்றான் சஞ்சீவ் சரியாக கேட்காதது போல்..​

"ஒன்னுமில்லையே.. சாப்பிட்டு பாருங்க.. மைனா அங்கிள் கடை கேக்..நல்லா இருக்கும்.."​

"மைனா அங்கிளா ??"​

"அது அவர் பெயர் என்னா தெரியல.. நாங்க அப்படிதான் சொல்லுவோம்.." கிளுக் என்ற சிரிப்போடு அவள் கூறினாள்.​

அடுத்ததாய் அவன் மற்றைய கேக்கை வெட்டினான். "அம்மா அப்பா தங்கச்சி எல்லாம் இப்போ கனடால இருக்காங்க.. அதான் இந்த ஏற்பாடு.. " என்றான்.​

"ஓஹ்.." என்றவண்ணம் சாப்பிட்டு பார்த்தவள் வாயில் அமிர்தமாய் கரைந்தது அந்த கேக்..​

"சார் இது ரொம்ப நல்லா இருக்கு.. ரொம்ப நாளா சாப்பிட்டு பார்க்கனும் ஆசை.."​

"நீ சாப்பிட்டதில்லையா ?" ஆச்சரியமாய் கேட்டான் சஞ்சீவ்.​

"இல்லையே.. வாங்க போனா எங்க வீட்டுல நல்லா திட்டிடுவாங்க.." பாதியை சாப்பிட்டு விட்டு மீதியை தாளில் சுற்றினாள். அவள் கூறியதிலே குழம்பியிருந்தவன் அவள் செய்கையில் மேலும் குழம்பிட..​

"நிப்புக்கு சார்.." என்றாள்.​

"நான்.." சஞ்சீவ் ஆரம்பிக்கும் போதே கணித்தவள்.. "வேணவே வேணாம்.. இன்னொரு நாள் ட்ரீட் கொடுத்துடுங்க டன்.." என்றுவிட்டு நேரமும் ஒன்றை தொட்டு விடும் போல் இருக்க.. "என்னை வீடு வரைக்கும் விட்டுட முடியுமா ப்ளீஸ்.." கேட்டாள்.​

"ஷ்யூர்.. இரு கீ எடுத்துட்டு வாரேன்.." இன்னும் அவள் கூறியதை அவனால் சாதாரணமாக எடுக்க முடியவில்லை. வீட்டில் திட்டுவது அதுவும் கேக் கேட்டால் எல்லாமா என்று இருந்தது.​

"சார்.. உங்க வீடு சூப்பரா இருக்கு தெரியுமா.. நான் இது போல வீடு படத்துல தான் பார்த்திருக்கேன்.."​

"ஹாஹா தாங்ஸ்.. வா.." சஞ்சீவ் முன்னே சென்று வீட்டை பூட்டி விட்டு காரில் ஏற இவளும் பின்னோடு வந்து ஏறிக்கொண்டாள். சற்று தூரம் சென்ற கார் ஓர் இடத்தில் பாதை ஓரமாய் நின்றது. கவிதா என்ன என்பது போல் பார்க்க..​

"உன்கிட்ட கொஞ்சம் பேசனும்.."என்றான் சஞ்சீவ்.​

"சாரி சார்.. நீங்க கவிதா மேடம்கிட்ட பேசனும்னா அப்பாய்ன்மன்ட் எடுக்கனுமே.." என்ன என்பது போல் இவன் திரும்ப இவள் கையை காதில் வைத்து கால் பேசுவது போன்ற பாவனையில் இவனை பார்த்து பேசிக்கொண்டிருந்தாள். இவன் விழிப்பதை பார்த்து விட்டு அவள் கண்களாளே இவன் கையையும் காதையும் காட்ட புரிந்தது போல் இவனும் காதில் தன் கையை வைத்து..​

"ப்ளீஸ் கொஞ்சம் அவசரம்ங்க.. உங்க மேடம்கிட்ட கேட்டு நீங்கதான் பேச எனக்கு டைம் எடுத்து தரனும்.." என்றான் சஞ்சீவ்.​

"ஓகே சார்.. ஒன் மினிட்." தொடர்ந்து ஹால்டில் போடுவது போல் இவள் டீட் என்று வாயால் ஒலி கொடுத்து விட்டு மீண்டும் தொடர்பிற்கு வருவது போல் பாவனை செய்தாள். சஞ்சீவ் இந்த விளையாட்டை உண்மையாக இரசித்து தான் பார்த்திருந்தான்.​

"சார் மேடம் ஓகே சொல்லிட்டாங்க.. ஆனா அவங்களுக்கு நீங்க ஒன்னு தரனும் சொன்னாங்க..லஞ்சமா.."​

"லஞ்சமா ?? சரி என்ன ??"​

"அது ஒரு..."​

"ஒரு...?"​

"கி..."​

"கி...?"​

"டீட்... சொல்லுங்க மிஸ்டர். சஞ்சீவ்.. நான் கவிதா பேசுறேன்.." என்று விட்டு இவள் சிரிக்க அவனும் இணைந்து கொண்டான். நீண்ட நாள் அதாவது பல வருடங்கள் பிறகு மனம் விட்டு சிரிப்பது போல் இருந்தது அவனுக்கு. அம்மா இருக்கும் போது கடைசியாய் இது போல் எதாவது இருவரும் பேசி சிரித்துக்கொள்வார்கள். அந்த நாட்களை இன்று இந்த தருணம் அவனது நினைவில் நிழலாடச்செய்தது.​

"கவிதா.. எதுக்கு இதெல்லாம் பன்னுற ?" நேரடியாகவே கேள்வியை கேட்டான் சஞ்சீவ்.​

"சார் எனக்கு பிடிச்சவங்ளுக்காக நான் எதுவேணாலும் செய்வேன் சார்.."​

"ஆனா எதுக்கு என்னைய ?"​

"இப்படி கேட்டா..தெரியாது."​

"நான் யோசிக்கலாம்.. ஒரு வேளை என்கிட்ட இருக்க சொத்து..கம்பனி.."​

"தப்பில்ல சார்.. ஆனா உங்ககிட்ட இது எதுவும் இல்லாம இருந்திருந்தா கூட என் பதில் இது தான். அதை நிரூபிக்க இன்னொரு ஜென்மம் எல்லாம் எடுக்க முடியாதே.. இல்ல உங்ககிட்ட வழி இருந்தா சொல்லுங்க நிருபிச்சிடறேன்.." கூறிவிட்டு கவிதா பார்த்திருக்க.. அவள் சும்மா பதில் கூற வேண்டும் என்பதற்கெல்லாம் இதை சொல்லவில்லை என்பது அவள் கண்களில் தெரிந்த ஏதோ அவனை உறுதியாய் நம்ப வைத்தது.​

"சரி ஆனா எப்படி என்னை பற்றி எதுவும் தெரியாம.. முதல் தடவை பார்த்தப்போவே.."​

"அது எல்லாம் சொன்னா புரியாது மிஸ்டர். சஞ்சீவ்.. அப்புறம் இப்போ என் வீட்ல நான் இல்ல தெரிஞ்சதோ நாலு நாளைக்கு எனக்கு சாப்பாடு வீடு எதுவும் கிடையாது.. உங்க கூடவே தான் வரனும்.. சோ போகலாமே." என்றாள்.​

அதற்குமேல் எதுவும் கேட்காது அப்போதைக்கு அந்த பேச்சுக்கு முற்றுப்புள்ளி வைத்து விட்டு காரை எடுத்தான். அவள் வீட்டிற்கு முன்னால் காரை நிறுத்தி அவள் கூரை இடையே சென்று மறையும் வரை அவள் மீதே தான் பதிந்திருந்தது பார்வை. "இவ்வளோ ரிஸ்க்.. எஃபர்ட்.. அதுவும் எனக்காகவா ?" மனம் சற்றே இளக அதோடு கவிதா என்பது இப்போது முன் இருந்ததிலும் பெரியதாய் கேள்விக்குறியென எழுந்து நிற்க.. அவள் கொடுத்துவிட்டு போன "இனிய பிறந்த நாள் வாழ்த்துக்கள் தஷ்வன்த்" என்று எழுதியிருந்த அந்த சிறிய பரிசுப்பொதியையே அதுவும் அந்த எழுத்துக்களையே மேலும் குழப்பமாய் பார்த்திருந்தான் அவன்.​

 
Top