எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 12

NNK-106

Moderator

காதல் Not Out - 12​

சஞ்சீவின் கைகள் தானாகவே காரை கவிதாவின் வீட்டின் முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருந்தது. மனதில் இப்போது உறுதி மட்டுமே மேலோங்கியிருந்தது. என்ன நடந்தாலும் பார்த்துக்கொள்ளலாம் யார் எதிர்த்தாலும் கவிதாவை அழைத்துச்செல்வது தான் என்று. அவனுக்கே தெரியவில்லை இது சரிதானா என்றும் ஆனால் ஒன்றில் மட்டும் உறுதியாய் இருந்தான். கவிதாவிற்கு இந்த கல்யாணத்தில் ஈடுபாடு இருக்கவில்லை என்பது. அவளது வீட்டினர் கட்டாயப்படுத்தியிருக்கலாம் அவனே பார்த்தானே அன்று ஒரு சாப்பாட்டிற்கே வீதி என்றும் பாராமல் அவளை எப்படி எல்லாம் பேசினார்கள் என்று. எப்படியும் அவளும் தன்னுடன் வந்து விடுவாள் என்ற நம்பிக்கையில் இவன் காரை ஓரமாய் நிறுத்திவிட்டு இறங்கினான். இறங்கினவன் காதில் யாரோ அழும் குரல் அதாவது தெளிவாக கூறப்போனால் யாரோ ஒப்பாரி வைக்கும் சத்தம் தெளிவாக ஒலிக்க குழப்பமாய் அந்த திசைக்கு திரும்பினான்.​

அங்கு சஞ்சீவ் கண்டது அன்றைக்கு இவன் கவிதாவுடன் பார்த்த அந்த பெண் தான் அவளது வீட்டு வாசலில் அமர்ந்து அழுது கொண்டிருந்தாள். அருகில் கவிதா அறிமுகம் செய்து வைத்த அவளது அத்தை பையன் தயாளன் நின்றிருந்தான். வீட்டை சுற்றியும் அந்த பெண்ணை சுற்றியும் பலர் நின்றிருக்க பலரது முகத்திலும் பல பாவனைகள். சிலர் ஆறுதல் போல் அவளை சுற்றி நின்று ஏதோ பேசிக்கொண்டிருந்தனர். சஞ்சீவிற்கு பயம் ஒரு பக்கம் ஏதேதோ கற்பனையின் பலனாய் விரிய மனதை குழப்பிடாமல் அங்கிருந்த ஒரு பெரியவர் அருகில் நடந்து சென்றான்.​

"அங்கிள்..இங்க என்ன கூட்டமா இருக்கு ?"​

அவனை ஒரு முறை ஏற இறங்க பார்த்த அவர்.. "அது தம்பி இந்த வீட்டுப்பொண்ணுக்கு நாளைக்கு கல்யாணம் செய்யுறதா இருந்தாங்க.. இப்ப பார்த்தா பொண்ண காணோம்.. கடிதம் எழுதி வச்சிருக்க அவளுக்கு இந்த கல்யாணத்தில விருப்பம் இல்ல.. தன்னோட காதலனோட போறேன்னும்.. சில பேர் அவ போறதை பார்த்திருக்காங்க.. ஆனாலும் இத்துன வருஷம் வளர்த்த அத்தைய இப்படி தலைகுனிய வச்சிருக்க கூடாது அவ.." அந்த பெரியவர் பேசிக்கொண்டே போக சஞ்சீவிற்கு கையை கட்டுப்படுத்துவது பெரும் கஷ்டமாக இருந்தது. கவிதாவை பற்றி என்ன பேச்சு பௌசுகிறார்கள்..எங்கே அடித்து விடுவோமோ என்று தோன்ற இவன் அங்கிருந்து நகர்ந்திட திரும்பினான்.​

"இல்ல சகாயம் இதை என்னால ஏத்துக்க முடியாது.. அந்த பொண்ண நமக்கு இன்னைக்கு நேத்தா தெரியும் சொல்லு.. அவ அப்படி செய்யுற பொண்ணில்ல.. இந்த பொம்பள எவ்வளோ கவிதா பொண்ண செஞ்சிருக்கும் இருந்தாலும் ஒரு வார்த்த எதிர்த்து பேச மாட்டாளே.. " யாரோ பேசவும்..​

"ஆமாப்பா.. என்ன இருந்தாலும் அந்த பொண்ணு இந்த தயாளன கல்யாணம் பன்னிட்டு இன்னும் வாழ்க்க முழுக்கவும் கஷ்டப்பட்டிருக்கும் அதுக்கு இப்படி எங்காவது தூரமா போயாவது சந்தோஷமா இருக்கட்டும்.." என முன்னே பேசியவரோடு சேர்ந்து பேசினார் இன்னொருவர்.​

சஞ்சீவிற்கு இப்போது கவிதா என்பது பல முடிச்சுக்களாக தெரிந்தாள். அத்தை.. தயாளன்.. கஷ்டம்.. கல்யாணம்.. காதலன்.. அனைத்தும் சிக்குண்டு கிடக்க தேடி அவிழ்க்க கூட வழி தெரியவில்லை. ஒரு முறை திரும்பி அந்த வீட்டை பார்த்தான். அன்று அவள் இறங்கிச்சென்ற அந்த கூரை.. ஒருவேளை.. அந்த காதலன்.. சட்டென காரில் ஏறி அந்த பள்ளத்தை நோக்கி வேகத்தை கூட்டினான். அங்கு இவன் எதிர்பார்ப்பை பொய்யாக்கவெனவே யாருமற்று இருந்தது அந்த இடம். தொடர்ந்து முயற்சியை விடாமல் அவனது ஆபிஸ், வீடு, இவர்கள் ஒரு முறை சென்ற காபி ஷாப் வரை தேடி விட்டான். களைப்புடன் திசையற்று நின்றவன் கண்முன் தோன்றினான் நிதன். அன்று அவன் வேலை செய்யும் மெக்கானிக் கடை உரிமையாளர் பற்றி கேட்டிருந்தான். அதை வைத்து அவரை தொடர்பு கொண்டு நிதனின் வீட்டு முகவரியை எடுத்து அங்கு சென்றான். கதவை தட்டி விட்டு மனதில் வேண்டுதலோடு காத்திருந்தான்.. கதவும் திறந்தது. நிதன் தான் திறந்திருந்தான். புரியாமல் ஒரு நொடி நின்றுவிட்டு.. "வாங்க சார்.. உள்ள வாங்க.. " என்றான்.​

"நிதன் கவிதா வந்தாளா..?" இதற்கு மேல் பொறுமை இல்லை என்பது போல் கேட்டான்.​

"சார்..அக்காவுக்கு நாளைக்கு.." நிதன் எப்படி சொல்வது போல் ஆரம்பிக்க..​

"அக்காவுக்கு நாளைக்கு கல்யாணம் ஆனா.." என்று தொடங்கி சஞ்சீவ் நடந்ததை கூறி முடிக்க..​

"நோ.. சார்.. இது பொய்.." என்று அலறியே விட்டான் நிதன்.​

"சார் அக்காவுக்கு அப்படி யாருமில்ல.. எனக்கு அவங்கள பற்றி நல்லா தெரியும்.. அவங்களுக்கு முதல் காதல் எப்பவும் நீங்க தான் எல்லாமே.. அவங்க நேத்து கூட எல்லாத்தையும் விட்டுட்டு உங்க கூட வந்துட நினைக்குதுன்னு சொன்னாங்க.. அப்படியே போறதுன்னா உங்களை தேடி தான் வந்திருக்கனும்.. இன்னொரு பையனோட அக்கா போறதை பார்த்ததா சொல்லுறதை நம்பாதீங்க நீங்க ப்ளீஸ்.. அக்காவ தேடி கொடுங்க.." ஆவேசமாய் தொடங்கி அவன் அழுகையில் முடிக்கவும் இவ்வளவு நேரம் அவன் வைத்திருந்த உறுதியும் உடைய கண்ணீர் கோடாய் கன்னத்தில் வழிந்தது.​

"அழாதடா.. அக்காவ கண்டுபிடிச்சிடலாம் எங்கயும் போயிருக்க மாட்டா.." நிதனை அணைத்தவண்ணம் தனக்குமே சேர்த்து ஆறுதல் கூறிக்கொண்டான் சஞ்சீவ்.​

அடுத்த மூன்று நாட்கள் வேறு எந்த வேலையும் இல்லாமல் கவிதாவை பற்றிய தகவல்கள் கிடைக்கிறதா என்பதை தேடிக்கொண்டே இருந்தான் சஞ்சீவ். நாட்கள் மூன்று ஆகியும் எந்த ஒரு தகவலும் இல்லை என்கையில் கஷ்டமாக தான் இருந்தது ஆனாலும் நம்பிக்கை ஏதோ ஒரு வகையில் அவளை தேடி விடலாம் என்பது அதிகமாய் தான் இருந்தது. அவளை முதல் தடவை பார்த்தது அவள் அவனை சுற்றி வந்த பொழுதுகள் எல்லாம் அவனுள் இப்போது பொக்கிஷங்களாய் இருந்தன. இன்றைக்கு இவ்வளவு அவள் இன்றி அவன் தவிப்பான் என்று அறிந்திருந்தால், அன்றைக்கு அவளை கைவளைவில் வைத்து அசையக்கூட விடாமல் காத்திருப்பான். நிதன் மூலம் அவள் பற்றிய பல விடயங்களை அறிந்திருந்தான். அனைத்தும் எதிர்பாராதவை காரணம் அவளுள் அப்படி ஒரு கவலையோ கஷ்டமோ அவன் கண்டதே இல்லை இதுவரை.​

அவள் பிறக்கும் போதே இருவரில் ஒருவரை காப்பாற்றுவதே கஷ்டம் என்று டாக்டர் கூறிவிட.. அந்த ஒருவர் யாராக இருக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கும் நிலையில் கூட அவளது தந்தை இருக்கவில்லை. இரவு பகல் என்று பாராமல் போதையிலே சுற்றுபவர் கஷ்டப்பட்டு அக்கம் பக்கத்தினர் வைத்தியசாலைக்கு அழைத்து வந்திருக்க அன்று முடிவெடுத்தது கவிதாவின் அத்தை வானதி தான். கவிதாவிடம் ஒவ்வொரு முறையும் வானதி.. அம்மாவையே விழுங்கினவ தான என்று திட்டும் போதெல்லாம் இவளுக்கு கஷ்டமாக இருந்தாலும் இவள் உயிருக்காக அவரும் அவர் உயிரை அளித்துவிட்டு கண்மூடிவிட்டார் அந்த முகம் தெரியாத தாய் என்று மாறாக நினைத்துக்கொள்வாள். அவள் அன்று பெயர் பற்றி கூறியதன் பொருள் இன்று சஞ்சீவிற்கு புரிந்தது. வானதி குழந்தையுடன் வீட்டிற்கு வர முதலில் பாரமாய் இருந்தது பின் ஐந்து வயதை தாண்ட சற்றே வேலைகளை முதலில் கொடுத்து பழக்கிய வானதி பின் வீட்டில் இருக்க வேண்டும் என்றால் நீ இதை செய்து தான் ஆக வேண்டும் என்று ஆடர் போடும் நிலை வந்தது. இதெல்லாம் என்றும் போல் பார்க்கும் நிலையில் அவள் தந்தை இல்லை அதோடே கவிதாவிற்கு அவ்வளவாக அவருடன் பேசிய நியாபகம் கூட இருக்கவில்லை அதனாலோ இவளது பத்து வயதில் அவர் இறந்த போது பெரிதும் பாதிப்பு என்று இருக்கவில்லை.​

வானதி படிக்க வைத்தாள் காரணம் அப்போதே அவளை படிக்க வைத்து வேலைக்கு அனுப்பினாள் வரும் கணக்கை கணக்கிட்டு பூரித்திருந்தாள். அப்படியே வாழ்க்கையும் வானதியின் எண்ணங்கள்படியே மாறியது. இடையே அவ்வப்போது கவிதா பக்கம் பார்வை வீசிடும் தயாளனை கண்டித்து உனக்கு மகாராணி கூட்டிட்டு வாரேன்டா என்றிருந்தது இப்போது இப்படியே செய்து விட்டாள் என்ன என்று யோசித்து கவிதா மூலம் வருமானம் இன்னும் வீட்டிற்கே என செய்திடவும் சதி செய்தாள் வானதி கல்யாணம் என்ற பெயரில். சஞ்சீவ் அந்த பள்ளத்தாக்கு மற்றும் அவள் முதல் நாள் சந்தித்த போது குதித்தது பற்றி வினவ.. அதற்கு நிதன் கூறிய பதில் இன்னும் அவனை நொறுங்கச்செய்தது.​

"இல்ல சார்.. அக்கா அப்படி வாழ்க்கைய முடிச்சிக்கிற அளவு கோழையில்ல அதுவுமில்லாம அடிக்கடி சொல்லுவாங்க அவங்க அம்மா அவங்க உயிர கொடுத்து அவளுக்கு உயிர் கொடுத்திருக்காங்க அதை அர்த்தமுள்ளதா கண்டிப்பா மாத்துவேன்னு.. அவ அப்படி செய்யுறது.. அவளுக்கு ரொம்ப நல்லாவே நீச்சல் தெரியும் ஆனா குதிச்சிட்டு அப்படியே இருப்பா மூச்சுக்கு கஷ்டமா இருந்து ஒரு கட்டத்துல வாழ்க்கை முடிய போகுது தோணும் சொல்லுவா அப்போவே இல்ல இன்னும் வாழனும் அப்படின்ற ஒரு தைரியம் ஆசை வரும் சொல்லுவா.. அதுக்காக தான் ஒவ்வொரு முறையும் எப்போ வாழவே முடியாத அளவு கஷ்டமா எதாவது நடந்தாலும் அங்க போயிடுவா சார்.. இப்போ எல்லாம் அடிக்கடி போயிட்டு இருந்தா காரணம் அந்த வானதியும் அவங்க மகனும் தான்.. ரொம்பவே அக்காவ டார்ச்சர் பன்னாங்க..அக்கா பாவம் சார்.."​

நிதனின் கூற்று காதோடு மீண்டும் ஒலித்தது. இவ்வளவையும் உள்ளே வைத்துக்கொண்டு எப்படி சிரித்துக்கொண்டே இருந்தாள்.. ஒருவர் இனி இல்லை சந்திக்கவே போவதில்லை என்ற பயம் வரும் போது தான் அவர்களது அருமையும் புரியும் என்பார்கள். இப்போது சஞ்சீவிற்கும் அப்படி தான். கவிதாவை முதல் நாள் சந்தித்த நேரத்திற்கு செல்ல ஏங்கிக்கொண்டிருந்தான். அவளை இறுக்கமாய் அணைத்து.. உன்னை எனக்கு ரொம்பவே பிடிக்கும் கவிதா.. என்று ஆசையாய் கூறிட.. அவள் முகத்தில் தோன்றும் சந்தோஷத்தை பார்த்திட சஞ்சீவின் மனம் ஏங்கித்தவித்தது ஆனால் இது மிகவும் தாமதம் தான் என்பதும் புரிந்தது. அவ்வளவு தன்னை அவள் சுற்றி வந்த போதெல்லாம் அவளை காயப்படுத்தி தான் இருக்கிறான்.. இனி பேசாதே பார்க்காதே என்று. இருந்தாலும் இவனுக்கென அனைத்தும் செய்து விட்டு குறும்பாய் புன்னகைப்பாள். இன்றும் சஞ்சீவ் அறியாத ஒன்று தான் ஏன் அவனை அவளுக்கு இந்த அளவு பிடித்தது, அதுவும் முதல் பார்வையிலே பார்த்ததும் காதல்.. இதெல்லாம் ஏன் காதலே பொய் என்று வாழ்க்கையில் கண்டதில் அறிந்தவனுக்கு இந்த பார்த்ததும் காதல் கசப்பாக தான் இருக்கும். "தேவதைக்கதை" என்று பெண்கள் கூறி கேட்டிருக்கிறான் வளைத்தலங்களில் பார்த்திருக்கிறான்.. ஆனால் இன்று அவள் அருகில் இல்லாத போது அவள் அவனிடம் பொழிந்த எதிர்பார்ப்பில்லா காதலை உணர்கையில் அவனது வாழ்வும் தேவதை கதை போல தான் என்று தோன்றியது.​

 
Top