எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 13

NNK-106

Moderator

காதல் Not Out - 13​

அன்றும் தாமதமாய் வீடு வந்தவனை அழைத்து கஷ்டப்பட்டு சாப்பிட வைத்துக்கொண்டிருந்தார் தாமரை. இத்தனை நாட்களாக பார்த்துக்கொண்டு தான் இருந்தார். தாமதமாய் அவன் வருவதும் சாப்பாடே மறந்திருப்பதும் அவன் எதிலோ உழன்று கொண்டிருப்பதை தெளிவாக காட்டியது. கொஞ்சமாய் சாப்பிட்டு விட்டு எழப்போனவனை மீண்டும் அமர வைத்து அவர் சாப்பிட வைக்க முயலவும்..​

"சித்தி ப்ளீஸ் எனக்கு முடியும்னா நான் சாப்பிடுவேன்.. போதும்.. " என்றவண்ணம் எழுந்து விட்டான். மேலே சென்றவன் குளித்து உடை மாற்றும் வரை நேரம் கொடுத்தவர் இனி பேச வேண்டும் என்பது போல் எழுந்து சென்று அவன் அறைக்கதவை தட்ட..​

"வாங்க சித்தி.." என்றவாரு அவன் சட்டென முகத்தை மறைத்து மறுபக்கம் திரும்பிட.. அவன் அழுதிருக்கிறான் என்று புரிந்தது. அதோடு என்றுமில்லாமல் அதே உடையில் கட்டிலில் படுத்திருந்தான். இவனது இந்த மாற்றம் பல வருடங்கள் முன் அவன் உடைந்திருந்த வேளை கண்டதை நினைவுபடுத்தியது தாமரைக்கு. அவன் பக்கமாய் சென்று அமர்ந்து கொண்டார் தாமரை.​

"சஞ்சீவ்.. நீ என்கிட்ட மறைக்க நினைச்சாலும் உன்னோட முகம் எல்லாம் காட்டிரும்.. அதே தான் இப்பவும்; எனக்கு சரியா உனக்கு என்ன ப்ராப்ளம் தெரிலபா ஆனா எதுவா இருந்தாலும் அதுக்கு தீர்வ தராம கடவுள் கொடுக்குறது இல்ல.. நாம தான் கண்டுபிடிக்கனும்.. " அவன் தலையை பாசமாய் கோதிக்கொண்டே பேசினார் தாமரை.​

"சித்தி.. யார்கூடயோ ஓடிப்போய்ட்டதா பேசிக்கிறாங்க.. நான் நம்பல.. என் கவிதா அப்படி இல்ல.. ஆனா அவள நான் எங்கன்னு போய் தேட ? அவ நம்பர் கூட என்கிட்ட இல்ல.. ஆனா அதை தேடி எடுத்து டயல் பன்னேன்.. போன் ஓப் சித்தி.. உண்மைய சொல்ல போனா அவ என்கூட இருந்தப்போ அவளை நான் விரும்புறேன்னு கூட ஏத்துக்காம இருந்தேன்.. " உடைந்த குரலில் பேசினான் சஞ்சீவ்.​

ஓரளவு இது எதுவும் கவிதா பற்றியதாக தான் இருக்கும் என்று ஊகித்திருந்த தாமரைக்கு அவளை காணவில்லை என்பது சற்றும் எதிர்பார்க்காதது தான். திக் என்று இருந்தாலும் அப்போதைக்கு அதை காட்டிக்கொல்லாமல்..​

"சஞ்சீவ் இங்க பாரு.. அவளே தான் உன்னை தேடி வந்தா.. அப்படின்னா உனக்கு முன்னவே நீ இல்லாம அவளால இருக்க முடியாதுன்னு தெரியும்.. அப்படி இருக்கப்போ உன்னை விட்டுட்டு அவளால இப்போ மட்டும் இருக்க முடியுமா.. கண்டிப்பா முடியாது.. உன்னை தேடி திரும்ப வருவா.. நீயும் தேடிட்டே இரு.. அவளுக்கு முன்ன உனக்கு அவளை தேட முடியுமா இருக்கலாம்.. "​

"ஆனா சித்தி அவளுக்கு எதாவது ஆபத்து அப்படி எதுவும் ?? " முழுதாக முடிக்க முடியாமல் அவன் இழுக்கவும்..​

"அப்படியே இருந்தாலும் யார் தேடலனாலும் நீ தேடி வருவன்னு பார்த்திட்டு இருப்பா சஞ்சீவ்.. இப்படி நீ உடைஞ்சி இருந்தா எப்படி சரியா யோசிப்ப எப்படி அவள தேட முடியும்.. ? கவிதாவ ரொம்ப காத்திருக்க வைக்காம சீக்கிரமா கூட்டிட்டு வா எங்க வீட்டுக்கு.. சரியா.." தாமரையின் பேச்சில் புது நம்பிக்கை பிறந்தது போல் இருந்தது சஞ்சீவிற்கு. அவர் கூறுவது சரிதானே இப்படி யோசித்துக்கொண்டு உடைந்திருந்தால் அவனது கவிதாவை இன்னும் தேட தாமதம் ஆகும் அவளும் காத்திருப்பாள் அல்லவா. சட்டென கண்களைத் துடைத்துக்கொண்டு.. "கண்டிப்பா சித்தி.. நான் கூட்டிட்டு வாரேன்.." என்றான்.​

"சரிப்பா.. போய் ப்ரஷ் ஆகிட்டு வா.. " என்று அவனை அனுப்பி வைத்தார் தாமரை. அவனது துறையில் யாராலும் அசைக்க முடியாத புகழும் பணமும் முதலிடமும் பிடித்தவன்; உணர்வுகள் என்று வருகையில் துவண்டு தான் போகிறான். அதே போல் அதே வேகத்தில் கொஞ்சமாய் அவனுக்கு பிடித்தவர்கள் துணையாய் நின்றாலும் எழுந்து விடுவான். இதுவும் அப்படிதான்.. சரியாகி விடும்.. இருந்தாலும் கவிதாவை நினைத்து வருத்தமாக இருந்தது தாமரைக்கு. அவள் அன்று ஒரு நாள் தான் வந்துவிட்டு போயிருந்தாலும் ஏதோ பல நாள் பழகிய ஒரு உணர்வை கொடுத்திருந்தாள். கண்டுபிடித்து விடலாம் என்ற நம்பிக்கை இருந்தது.​

தாமரை பேசிவிட்டு போனதும் புதிதாய் தீர்மானங்கள் எடுக்க முடியும் போல் ஒரு தெம்பு வந்திருந்தது. கவிதாவை காணவில்லை என்று பொலிஸில் புகார் செய்தான். அதே நேரம் தனக்கு நம்பிக்கையான சிலரை குழு அமைத்து தேடலை தொடங்கினான். அவர்கள் ஒரு பக்கம் இருக்க இவனும் மறுபக்கம் முடிந்த அளவு தேட காலையிலிருந்து தேட வேண்டும் என்று உறக்கம் தழுவிடாது என்று அறிந்திருந்தாலும் சற்றே சாய்ந்து கொள்ளலாம் என்று விளக்கை அணைத்து விட்டு வந்து படுத்துக்கொண்டான். ஜன்னல்வழி அமைதியாய் இவனை பார்த்திருந்தது நிலா.. "நிலா உனக்கு கண்டிப்பா தெரிஞ்சிருக்கும் ஏன் நீ கவிதாவ பார்த்துட்டு கூட இருப்ப..ஆனா உனக்கு பேச முடிஞ்சா என்கிட்ட சொல்லலாம்.. பரவால்ல இருந்தாலும் என் கவிதாவ மட்டும் நீ நல்லா பார்த்துக்கோ ப்ளீஸ்.. நான் சொன்னது தான்.. அவ கூட இருக்கப்போ அலட்சியமா இருந்துட்டேன்.. அதுக்கு தான் இப்போ வலி அனுபவிக்கிறேனா தெரில.. ரொம்ப வலிக்கிது.. அவளை ஒரே ஒரு தடவை பாரக்கனும் போல இருக்கு.. பேசிட்டே இருப்பா.. ரொம்ப தொல்லை கொடுப்பா.. திரும்ப.. வே..வேணு.." மனதின் பாரம் சற்றே குறைந்ததாலோ என்னவோ கண்கள் உறக்கத்தை அழைத்துக்கொண்டன.​

**********​

இடையிடையே அவனையறியாதே எதையோ பயத்தோடு எதிர்பார்த்தவண்ணம் தன் செல்லை பார்த்துக்கொண்டிருந்தது கார்த்தி தான். காரணம் இருந்தது. சுதாகர் இறந்து நான்காவது நாள் மணியை காணவில்லை என்ற புகார் வந்திருந்தது. அந்த கணக்குபடி பார்த்தால் இன்று மணி இறந்து நான்காவது நாள்.. எந்த அளவு இந்த கணக்கு சரியாக இருக்கும் தெரியாது இருந்தாலும் இருக்கலாம் என்ற ஊகம் தான் ஒரு கேஸை தொடர்ந்து கொண்டு செல்லும் என்ற நம்பிக்கையில் இருந்தான். அதன்படி ஊரில் இருந்த முக்கிய புள்ளிகளின் வீடுகளுக்கு பலத்த பாதுகாப்பும் அந்த வீட்டினரிற்கும் பாதுகாப்பு கொடுக்கப்பட்டிருந்தது. எவரேனும் சந்தேகத்திற்கிடமாய் தெரிந்தாலும் கைது செய்யவும் ஆடர் கொடுக்கப்பட்டிருந்தது. இருப்பினும் கார்த்திக்கு அந்த தொடரும் என்ற நோட் கண்ணிலே இருக்க எங்கே அழைப்பு வந்துவிடுமோ என்றே பயத்தில் இருந்தான்.​

ஒருவாரு அன்றைய நாள் எந்தவித கசப்பான செய்தியையும் தராது கழிந்திட கார்த்திக்கு ஏகப்பட்ட சந்தோஷமாய் இருந்தது. பாதுகாப்பிற்கென நியமித்திருந்த பொலிஸ் காவலாளிகள் சந்தேகத்திற்கிடமாய் தெரிந்த சிலரையும் கைது செய்திருக்க அதில் இந்த கில்லர் இருக்கலாம் இல்லை அவனுடன் தொடர்புபட்ட அவனது டீம் யாராவது இருக்கலாம் என்று அனைவரையும் ஒரு அறையில் வைக்கச்சொல்லிவிட்டு புறப்பட்டுக்கொண்டிருந்தான் கார்த்தி. மனம் முழுக்க அவனை நெருங்கிவிட்டோம் என்ற நிம்மதி படர்ந்திருந்தது.​

அவனது நிம்மதியை நிலைக்கச்செய்ய விரும்பாமல் அவனது செல் சிணுங்கியது. ஏற்று காதில் வைக்க அதில் கூறியது ஒரு நபரை காணவில்லை என்பது தான். நிகழ்ந்திருந்தது அவர்கள் ஊரில் இல்லை சற்றே தொலைவாய் ஒரு மணி நேர தொலைவில் இருந்த மலைப்பிரதேசம் சூழந்த ஊர் அது. அங்கிருந்து தான் அழைப்பு வந்திருந்தது. அழைத்தது அந்த ஊர் காவல்துறை அதிகாரி ரமணிடம் இருந்து தான். இவர்களுக்கு வந்த புகார் அது. நேற்று காலையிலிருந்து காணவில்லை என்று. கார்த்தி பற்றியும் கேஸ் பற்றியும் அறிந்திருந்ததால் இதை தெரிவித்ததாகவும் இதில் அவரும் உதவுவதாகவும் கூறினார் ரமண்.​

மலையடிவாரத்தில் அமைந்திருந்த அந்த கட்டிடம் அந்த பக்கம் யாரையுமே பார்க்காமல் ஏங்கிப்போயிருந்தது போல ஹர்ஷித் கதவை காலால் ஒரு முறை இலேசாக தள்ளியதற்கே சட்டென நகர்ந்து நின்று கொண்டது. உள்ளே வந்தவன் தூக்கி வந்திருந்த சாக்குப்பையையும் கீழே போட்டான். உள்ளிருந்தவனுக்கு அப்போது தான் மயக்கம் தெளிய ஆரம்பித்திருக்கும் போல அசைவு தெரிந்தது. கதவை மூடிவிட்டு அவனுக்கு இடத்தை தயார் செய்து விட்டு சாக்குப்பையின் கட்டை அவிழ்த்து அங்கிருந்த தூணோடு சேர்த்து அவனை கட்டினான்.​

"யாரு நீ.." தெளிவின்றி ஒலித்தது அவனது குரல்.​

"எதுக்குடா கடத்தின ?" மீண்டும் அவன் கேட்க.. அவன் தலை முடியை கொத்தாய் பற்றி தூக்கிய ஹர்ஷித்..​

"எதுக்குன வேற கேட்குறயா நீ ?" கோபமாய் கேட்டுவிட்டு தலையை உதறிட அது அந்த தூணில் வேகமாய் மோதி நின்றது. வலியில் அவன் அலறுவதை கண்மூடி இரசித்தான் ஹர்ஷித். வழமை போல் தண்ணீரை வைத்து விட்டு நேரம் பார்க்க அது பன்னிரண்டை தொட இப்போது சென்றால் சரியாக இருக்கும் என்று கதவை மூடிவிட்டு தான் ஓட்டிக்கொண்டு வந்திருந்த காரை அங்கேயே வைத்தவன் அங்கு ஏற்கனவே நிறுத்தியிருந்த தன் பைக்கில் ஏறி அங்கிருந்து வேகமாய் சென்றான்.​

 
Top