எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 14

NNK-106

Moderator

காதல் Not Out - 14​

துளிர்விட்டிருந்த நம்பிக்கையும் மடிந்துவிடும் போல முன்னெடுத்திருந்த எந்த செயலிலும் எந்த முன்னேற்றமும் இருக்கவில்லை. ஊரில் ஒரு இடம் விடாமல் விசாரித்தும் தேடியும் பார்த்துவிட்டான் சஞ்சீவ். இதில் இடையில் தயாளன் ஒரு முறை வந்து.. "எங்க வீட்டு பொண்ண நாங்களே தேடல உனக்கு எதுக்குடா.. " என்று கை வைக்க இருந்த கோபத்தில் இவன் அடித்ததில் ஒரு வாரம் வைத்திசாலை டுவர் சென்றிருந்தான். அதிலிருந்து இவன் வழியில் வரவில்லை. அவனையும் இவன் மறந்துவிட்டு கவிதாவே மூச்சென மாறியிருந்தான். இருந்த கோபத்திற்கு அன்றே அவனை உலகத்தை விட்டே அனுப்பியிருப்பான் ஆனால் என்ன இருந்தாலும் சரியல்ல என்று அடியோடு நிறுத்திக்கொண்டான்.​

தாமரைக்கு நாளாக நாளாக சஞ்சீவை பார்க்க பயமாக இருந்தது. அறிவரசனிடம் இதைபற்றிகூற அவரும் அதையே தான் ஆமோதித்தார். சஞ்சீவ் முன் போல் இருக்கவில்லை. நிறையவே மாற்றம் தோற்றம் முதல் அனைத்திலுமே தெரிந்தது. விடிந்தால் கவிதாவை தேட என்று வெளியை செல்பவன் நள்ளிரவில் தான் வீடு திரும்பினான். எங்கு செல்கிறான் என்ன நடக்கிறது என்பது சில நேரம் அவனுக்கே கேள்விக்குறி தான். அதில்லாமல் தேடுகிறேன் என்று போகும் பல இடங்களில் சண்டை தான். அதுவும் காரணம் இருப்பதாக தெரியவில்லை. சிலர் அறிவரசனிடமே கூறினார்கள் இதுபற்றி. வீட்டினரிடமும் பேசி பல நாட்கள் கடந்திருந்தது. எல்லோரிடமும் கோபம் மட்டுமே பதில் என உரைத்தான். இவ்வாறே நாட்கள் மாதங்களாகி இன்றோடு மூன்று மாதங்கள் என்றாகியிருந்தது.​

வழமை போல் காலையிலே போக வந்தவனை நிறுத்திய தாமரை..​

"சாப்பிட்டுட்டு போகலாம்பா.. வா.." எப்படியும் மறுப்பான் என்று தெரிந்தும் அழைத்தார்.​

"இல்ல சித்தி.. பக்கத்து ஊர் வரை போகனும்" என்றான்.​

"அந்த ஊர் போக ஒரு மணி நேரம் ஆகுமே.. அங்க எதுக்கு ?" கேட்டவண்ணம் அறிவரசன் கையில் அன்றைய கடிதங்களை எடுத்துக்கொண்டு வர.. அவர் கேட்டதில் மனம் பதியாமல் கையிலிருந்ததில் பதிந்தது.​

"எனக்கு கடிதம் வந்திருக்காப்பா ?"​

"ம்ம்..இல்லப்பா..ஏன் ?" என்றார் அறிவரசன்.​

"இல்ல.. சரி நான் போய்ட்டு வாரேன்.." பொதுவாக கூறிக்கொண்டு அங்கிருந்த சென்றவனை பெருமூச்சோடு பார்த்தார் அறிவரசன். எப்படி இருந்தவன்.. அவரும் அவரால் முடிந்ததை கவிதாவை தேட அவன் அறியாமல் செய்து வருகிறார். ஆனால் பலன் தான் பூச்சியம். ஊரில் கவிதா பற்றி யாரும் அந்த அளவு நல்லதாக பேசவில்லை. இதுபற்றி ரமணிடம் கேட்க அவர் அவளது பின்னனி பற்றி கூறி.. "அந்த பொண்ணு அப்படியில்ல அறிவு..ஏதோ பிரச்சனையா இருக்கும் தோணுது.. கண்டதும் பேசுறாங்க.. அவளுக்கு அப்படி எந்த தப்பான தொடர்பும் யார்கூடயும் இருக்கல்ல.. இப்படி ஊர் பேசுறப்போ அது பொய்ன்னு சொல்ல கூட அவளுக்கு யாருமில்ல.. கஷ்டமா தான் இருக்கு.." என்றிருந்தார். எதாவது நல்லது நடக்க வேண்டும் அந்த பெண்ணிற்கும் அதே நேரம் தன் மகனிற்கும் அது தான் நல்லது என்று எண்ணிக்கொண்டார் அறிவரசன்.​

வெளியில் வந்தவனுக்கு இப்போது மனதில் யோசனை எல்லாம் ஹர்ஷித் பற்றியதாய் தான் இருந்தது. எப்படியும் மாதத்திற்கு இரண்டு கடிதங்கள் தவராமல் வரும் கடந்த நான்கு மாதங்களாகவே அவனிடம் இருந்து எந்த கடிதமும் வரவில்லை. இவன் இடையில் இரண்டு முறை எழுதினான் அவற்றிற்கும் பதில் இல்லை. நேராய் ரமண் வீட்டிற்கு சென்றான் சஞ்சீவ்.​

உள்ளே சென்றும் அவனை உட்காருமாறு கூறிய ரமண்.." ரொம்ப யோசிக்காத சஞ்சீவ்.. எங்களோட டீம் தேடிட்டு தான் இருக்காங்க.. ஒரு லீட் கிடைச்சா போதும் கவிதா பத்தியோ இல்லனா அந்த பையன்.. இல்ல நமக்கு எந்த பக்கம் சரின்னு இன்னும் தெரியாதுலையா பொதுவா கேஸ் கொண்டு போகும் போது இரண்டு பக்கமும் பார்ப்போம் தானே.." சமாளிக்கும் வகையில் பேசினார் ரமண்.​

"ஹ்ம் சரி அங்கிள் அதை நீங்க பாருங்க.. அப்புறம் அங்கிள்.. உங்கள்கிட்ட ஹர்ஷித் என்னோட பென் ப்ரன்ட் பத்தி சொல்லிருக்கேன் தான ?"​

"ஆ..ஆமாப்பா சொல்லிருக்க.." சற்று தயங்கினாரோ என்று மனதில் குறித்துக்கொண்டான் சஞ்சீவ்.​

"அங்கிள் அவன்கிட்ட இருந்து நாலு மாசமா எந்த கடிதமும் வரல்ல.. எதுவா இருந்தாலும் என்கிட்ட சொல்லிறுவான்.. மனசுக்கு கஷ்டமா இருக்கு.. எதாவது என் வாழ்க்கையில இப்படி நடந்திட்டே இருக்கு அங்கிள்..பிடிச்சவங்க தூரமா போறாங்க.. அம்மாக்கு அப்புறம் நான் யாரையுமே என் வாழ்க்கையில பிடிக்கும்ன்னு சொல்லாத காரணம் இதுதான்.. ஆனாலும் இந்த இரண்டு பேர் விஷயத்தில அது என்னையறியாம நடந்தது.. பயம் மறந்து அவங்களை ரொம்ப நேசிக்க ஆரம்பிச்சேன்.. அதுக்கே பயத்தை திரும்ப கொடுத்துட்டு இரண்டு பேருமே போய்ட்டாங்க.." குரல் உடைய முடித்தவன் மீண்டும் நிமிர்ந்து பதிலுக்காக ரமணை பார்க்க அவரோ வெறுமனே ஒரு தலையசைப்போடு இவனை பார்ப்பதை தவிர்த்து வேறெங்கோ பார்வையை பதித்திருந்தார்.​

"அங்கிள்.." சஞ்சீவ் அழைக்க இருந்தும் அவர் இவன் பக்கம் திரும்பவில்லை.​

எழுந்து அருகில் சென்று அமர்ந்தவன்..​

"அங்கிள்.. உங்களுக்கு என்னமோ தெரியும்..சொல்லுங்க ஹர்ஷித்க்கு என்ன ?" குரல் உறுதியாய் ஒலித்தது; இருந்தும் இதையும் அவனிடம் கூறினால் இன்னும் உடைந்து விடுவானே என்று ரமண் குனிந்து கொண்டார். அவர் எண்ணத்தை படித்தது போல்..​

"நீங்க சொல்லலன்னா தான் எனக்கு கஷ்டமா இருக்கும் அங்கிள் ப்ளீஸ்.." அவன் கெஞ்சலோடு கேட்க எப்படி இருந்தாலும் எப்போதாவது தெரிய தானே வேண்டும் என்று எண்ணிய ரமண்..​

"நீ ஹர்ஷித் பத்தி தெரியனும்னா கவிதாவ கண்டுபிடிக்கனும்பா.." என்றார்.​

இதைக்கேட்ட சஞ்சீவிற்கு மேலும் குழப்பமாக.."வாட்..? அங்கிள் தெளிவா சொல்லுங்க.." என்றான்.​

ரமண் தெளிவாய் கூற அதைக்கேட்ட சஞ்சீவிற்கு இதை நம்புவதா இல்லையா என்று அதிர்ச்சியோடு அமர்ந்திருந்தேன். அவனுக்கு எப்படியும் அதிர்ச்சியாய் தான் இருக்கும் என்று அறிந்த ரமண் அமைதியாய் அங்கிருந்து அவனுக்கு தனிமையையும் நேரத்தையும் கொடுத்துவிட்டு நகர்நதார்.​

ஒருவாரு தன்னை சமன் செய்து கொண்டு தன் திட்டப்படியே அந்த ஊர் நோக்கி தன் பயணத்தை தொடங்கினான் சஞ்சீவ். ரமண் கூறியவை தான் மீண்டும் மீண்டும் காதில் ஓயாமல் ஓடிக்கொண்டிருந்தது. அழுவதா சிரிப்பதா என்று தெரியாத மனநிலையில் இருந்தான். ஒருமணி நேரம் எப்படி போனதென்று தெரியாமல் சிந்தனையோடே அவன் வர வேண்டிய ஊரும் வந்திருந்தது. எங்கு செல்வது என்று தெரியாமல் காரில் அங்கேயே சுற்றி வந்து கொண்டிருந்தான். கடைசியாய் பஸ் நிலையத்தில் தொலைவாய் நிறுத்திவிட்டு இறங்கி கால்போன போக்கில் நடக்க ஆரம்பித்தான் சஞ்சீவ். சட்டென அவனை மோதுவது போல் வந்து நின்றது ஒரு பஸ். தன்னிலை உணர்ந்தது போல் இவன் சற்றே நிமிர்ந்து பார்க்க..​

"கண்ணு தெரியாதா இப்படி வந்து நிக்கற.." திட்டிக்கொண்டிருந்தது பஸ் நடத்துனர் போல் தான் இருந்தது. அதை எல்லாம் கருத்தில் பதிக்கும் நிலையில் அவன் இல்லை காரணம் இவனுக்கு சரியாக முன்னால் அந்த பஸ்ஸில் இருந்து இறங்கி நடந்து வந்து கொண்டிருந்தாள் அவனது கவிதா.​

*********​

"இன்னும் கொஞ்ச நேரம் சத்தம் போடு.. கேட்கனும் போல இருக்குடா.." அதீத வலியில் மயங்கிச்சரிந்தவனை பிடித்து நிறுத்தி முகத்தில் தண்ணீரை தெளித்தான் ஹர்ஷித்.​

அவன் எழவும் மீண்டும் அவன் கையில் ப்ளேடை உள்ளே தள்ளிக்கொண்டே..​

"கவிதாவுக்கும் இப்படிதானடா வலிச்சிருக்கும்.." கேட்டான்.​

கவிதா என்ற வார்த்தையில் வலியெல்லாம் மறந்து உயிர் வந்தது போல டக்கென விழித்தவன்..​

"உ..உ..னக்கு ?" வார்த்தைகளை கோர்க்க முடியாமல் இழுத்தான்.​

"தெரியும்டா எனக்கு எல்லாம் தெரியும்..உன்னோட சேர்த்து உன் பங்காளிங்களையும் அனுப்பிட்டேன்.. உங்க மூணு பேரொட அலறல் கேட்ட அப்புறம் தான் ஏதோ மனசுக்கு இதம்மா இருக்கு.. ஆனா நீ அவங்களை விட கொடூரமா சாவனும்.. சாவ நீயா கூப்பிட்டு அழனும்.. அந்த அளவு ஒரு பயத்த உனக்கு காட்டுவேன் தயாளன்.." ஹர்ஷித்தின் கர்ஜனையில் தூக்கிவாரிப்போட..​

"ப்ளீஸ் என்னை எதுவும் பன்னிடாத.. கவிதா..க..வி.."​

"அவ பெயர் கூட உன் வாயில இருந்து வர கூடாது டா.." அவன் ஒரு காலில் முனை பளபளத்த இன்னொரு ப்ளேட் பதிந்திருந்தது. குருதி ஆறென வழிய.. இவ்வளவு நேரம் கிழித்த இடங்களை எல்லாம் தைக்க ஆரம்பித்தான் ஹர்ஷித். காயத்திற்கு மருந்து தான் போடுகிறான் ஆனால் அதிலும் இந்த அளவு வலிக்க போடும் மருந்து தான் தேவை என்று எல்லாம் கணித்தே செயற்படுத்திக்கொண்டிருந்தான் அவன்.​

ஒரு நிலைக்கு மேலே வலியில் மயங்கியவனை தண்ணீரும் எழுப்ப முடியாமல் கைவிரித்திட அவனது ப்ளட் க்ரூப்படி தயார் செய்து வைத்திருந்த அனைத்தையும் இணைத்து இரத்தம் ஏற்ற அவனை படுக்க வைத்து விட்டு வெளியில் வந்தான். அனைத்தையும் சாதித்து விட்ட ஒரு நிம்மதி அவனுள் பரவி இருந்தது. அவளது முகம் இதை அவன் சொல்லும் போது எப்படி பிரகாசிக்கும் என்பதை எண்ணிப்பார்த்தான். பார்க்க ஆசையாய் இருந்தது ஆனால் அதற்கு முன் இன்னொரு வேலை முடிக்க இருப்பதை சீக்கிரமே முடித்துவிட வேண்டும் என்பதையும் குறித்துக்கொண்டான் ஹர்ஷித்.​

 
Top