எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

காதல் Not Out ! - 16

NNK-106

Moderator

காதல் Not Out - 16​

இன்று..​

கார்த்தி அந்த வீட்டின் முன் வந்து நின்று பதினைந்து நிமிடங்கள். இருந்தும் இதோ வருகிறேன் என்று சொல்லிக்கொண்டு இருப்பவளோ வந்தபாடில்லை. மீண்டும் அழைப்பை ஏற்படுத்தி காதில் வைத்தான். ரிங் போக அழைப்பு ஏற்கப்படவில்லை. சென்றே பார்க்கலாம் என்று தைரியத்தை வரவழைத்துக்கொண்டு இறங்கிச்சென்றான். காவலாளி இவனை பொலிஸ் உடையில் கண்டதும் வெடவெடப்பதை பார்த்தவன் பின் தான் அவன் யுனிபர்மில் இருப்பது நினைவு வர.. ஒன்னுமில்ல என்று சைகை மூலம் கூறிவிட்டு சிரிப்போடு உள்ளே நடந்தான். கதவு திறந்தே இருக்க சற்றே எட்டி பார்த்துவிட்டு பெல்லை அழுத்த..​

"அடடே தம்பியா.. வாங்க வாங்க.." என்று ஒரு பெண் அழைக்க தூக்கிவாரிப்போட திரும்பினான். இவனை யாருக்கு தெரியும் எப்படி என்று குழம்பி நின்றான்.​

"அட உள்ள வாங்கன்றேன்.. அவ மேல இருக்கா போய் பாருங்க.." என்றுவிட்டு அவர் சிரிப்போடு நகர வீட்டில யாருக்கும் தெரியாது சொன்னாலே என்று எண்ணியவண்ணம் அவளை தேடி மேலே சென்றான்.​

முதல் அறைக்கதவை "சது.." என்று இவன் தட்ட.."ஆஹ் உள்ள வா கார்த்தி.." என்று உள்ளிருந்து கேட்டது குரல். உள்ளே சென்றவன்.."நீ இன்னும் குளிக்கிறயா.. ஏதோ ரெடியாகிட்ட போல இதோ வாரேன் வாரேன்னு நிக்க வச்ச என்னய ? நான் போறேன்.." கார்த்தி அறையிலிருந்த குளியலறை வெளியே நின்று சத்தமிட்டான்.​

"சாரி கார்த்தி..உன் கோல்க்கு தான் நான் எழுந்தேன்.. பைவ் மினிட்ஸ் ப்ளீஸ்.." உள்ளிருந்து குரல் கொடுத்தாள் அவள்.​

"எத்தனாவது பைவ் மினிட்ஸ்.. முடியாது போ.."​

"இந்த தடவை உண்மையா வைப் மினிட்ஸ்.. நான் வரும் வரை அங்க இருக்க மேசையில நல்ல புக்ஸ் இருக்கும் எடுத்து படி வந்துடறேன்.."​

"ஆமா நான் புக்ஸ் படிக்க தான் வந்தேன் பாரு.. ஆமா உன்கிட்ட ஒன்னு கேட்கனும் நீ வெளில வா கேட்குறன்.." என்று விட்டு கண்களால் அந்த அறையை நோட்டமிட்டவண்ணம் நடந்தான்.​

சது கூறியது போலவே மேசையில் பல புத்தகங்கள் இருக்க.. அதில் ஒன்றை எடுத்தவன் அவற்றிற்கு இடையில் இருந்து ஏதோ கீழே விழவும் என்ன என்று பார்த்தான். அது ஒரு கடித உறை. இருந்த இடத்தில் வைக்கப்போனவன் கண்களில் பட்டது அந்த பெயர் "ஹர்ஷித்". அதிர்ச்சியாய் கண்கள் விரிய அதன் உள்ளே பார்த்தான் ஆனால் கடிதம் இருக்கவில்லை. அதே நேரம் அவனுக்கு பின்னால்.. "வந்துட்டேன் பாத்தியா.." என்று சதுவின் குரல் ஒலித்தது.​

சட்டென அவளருகில் வந்த கார்த்தி.. "சது இது யாரு ??" என்றான்.​

"எது.." என்று அதை எடுத்து பார்த்தவள்..​

"ஓஹ் இது.. இது எங்க அண்ணாவோட ப்ர்ன்ட்.." என்றாள்.​

"அது யாரு.. எங்க இருக்கா ?"​

இதன் பதட்டத்தை ஒரு விதமாய் பார்த்தவண்ணம்.. "எனக்கு தெரியாது.. அண்ணாவோட பென் ப்ரன்ட் இது.. அவங்க மீட் பன்னதில்ல நினைக்கிறேன்..ஆமா என்னாச்சு ?" என்றாள்.​

"நான் சொல்லுறேன்.. உங்க அண்ணா எங்க இப்போ ?"​

"அண்ணா ஒரு மீடிங் போயிருக்கு.. கடார்ல நடக்குறதா சொன்னான்.. வர மூனு நாள் ஆகும் போல.."​

"சரி இந்த ப்ரன்ட் பத்தி அண்ணா வேற என்ன எல்லாம் சொல்லிருக்காங்க ?"​

"என்ன நீ என்னைய ஏதோ கொலை கேஸ்ல பிடிச்ச போல விசாரிக்கிற.. அண்ணா எதுவும் என்கிட்ட சொல்லல.. சித்தி..இல்ல ரமண் அங்கிள்ட்ட பேசுவான் நினைக்கிறேன்.. " அவள் கூறிய மறுநிமிடம்..​

"சீக்கிரம் வா.." என்று அவள் கைபற்றி இழுத்துக்கொண்டு படியிறங்கினான் கார்த்தி.​

இவர்கள் அவசரமாய் வருவதை பார்த்த தாமரை..​

"என்னாச்சு சந்தனா ? " என்று கேட்டவண்ணம் முன்னே வர..​

"சாரி ஆன்ட்டி.. இப்போ டைம் இல்ல.. நாங்க சீக்கிரமா வந்துடறோம்.." என்று சந்தனாவுடன் வேகமாய் அங்கிருந்து சென்றான் அவன்.​

சந்தனா வழி காட்ட ரமண் வீட்டிற்கு வந்தவன் தான் சந்திக்க வந்த பொலிஸ் அதிகாரியும் அவர் தான் என்பது தெரிய சற்று தன்னை ஆசுவாசப்படுத்திக்கொண்டு அமர்ந்தான். உள்ளிருந்து வந்த ரமண்.. "நீங்க.." என்று இழுக்க..​

"சார் ஐம் டெப்யூட்டி கமிஷ்னர் கார்த்தி.. நீங்க கூட அந்த மிஸ்ஸிங் கேஸ் பத்தி பேசியிருந்தீங்க நேத்து.." எழுந்து நின்று தன்னை அறிமுகப்படுத்திக்கொண்டான்.​

"ஓஹ் கார்த்தி ஓகே ஓகே.. ஆமா சந்தனா நீ எங்க இவர்கூட ?" அப்போதுதான் பக்கத்தில் இருந்தவளை கவனித்தவர் கேட்க.. அவள் "அங்கிள் அது..." என்று இழுத்த இழுப்பிலே தெரிந்தது.​

"சரி சரி.. வீட்டுல சொல்லிட்ட போல அதுதான் அறிவு ஏதோ பேசனும் சொல்லிட்டு இருந்தானோ" என்றார் ரமண்.​

"ஆமா அங்கிள் நேத்து தான்.."​

"அடிப்பாவி என்கிட்ட சொல்லல" என்று கார்த்தி இடம் மறந்து வாய்விட்டே கேட்டு விட ரமண் சத்தமாக சிரித்தார்.​

"சார்.." என்று அசடு வழிந்தான் கார்த்தி.​

"நீயும் அங்கிள்னே கூப்பிடுப்பா..சரி கேஸ் விஷயமா ஏதோ பேசனும் சொன்ன ?" எடுத்துக்கொடுத்தார் ரமண்.​

"யெஸ் அங்கிள்.." என்று கார்த்தி ஆரம்பிக்க அவர்களுக்கு தனிமை கொடுத்துவிட்டு உள்ளே சென்றாள் சந்தனா.​

கார்த்தி அந்த கடிதம் பற்றி கூறிவிட்டு அதிலிருந்த பெயரையும் கடைசியாய் மணியை கடத்திய இடம் அதாவது ஹோட்டலில் அவனது அறைக்கு பக்கத்து அறையை பதிவு செய்திருந்த பெயர் இரண்டும் பொருந்துவதாகவும் கூறினான்.​

"அதுல போன் நம்பர் அட்ரஸ் எதுவும் இல்லையா ?"​

"இல்ல அங்கிள்..பெயர் மட்டும் தான்.. அந்த ஹோட்டல் அவ்வளவு எதுவும் பெயர் போன இடமில்ல.. அதால அதெல்லாம் அவங்க கவனிக்கிறதில்ல..அப்புறம் இந்த ஹர்ஷித் தான் கொலையாளின்னு தெரில.. அவன் க்ராஸ் ஆகும் போது ப்ளைன்ட் ஆன சிசிடிவி அப்புறம் நம்பர் அட்ரஸ் இல்லாத பதிவு.. மணியோட ரூம்க்கு பக்கத்து ரூம் இதெல்லாம் பார்த்தா வாய்ப்பு இருக்குன்னு இதை லீடா வச்சி மூவ் ஆக ஆரம்பிச்சிருக்கோம் அங்கிள்.."​

"இதை எல்லாம் கொடுக்காதவன் எதுக்கு அவன் பெயர கொடுக்கனும் நினைக்கிற ?"​

"தெரில அங்கிள்.. பட் இந்த ஹர்ஷித் பத்தி தெரிஞ்சிக்கனும்.." கார்த்தி அந்த கடித உறையை காட்டி கூறவும்..​

"ஹ்ம்.. ஆனா இந்த ஹர்ஷித் நீ நினைக்கிற ஹர்ஷிதா இருக்க வாய்ப்பில்ல.." என்றார் ரமண் யோசனையாய்.​

"ஏன்.. ?"​

"ஏன்னா அவ பையனே இல்ல.. அவ பொண்ணு.. அவ பேர் கவிதா.." அமைதியாய் ரமண் கூற..​

"என்ன ??" என்று ஒரே கேள்வி இரு குரலில் வெவ்வேறு நிலையான அதிர்ச்சியில் ஒலித்தது. ஒன்று கார்த்தி மற்றையது சந்தனா.​

திரும்பி பார்த்த ரமண் காபி ட்ரேயுடன் நின்றிருந்த சந்தனாவையும் கூப்பிட்டு அங்கு அமர் வைத்தார்.​

அப்போது சஞ்சீவிற்கு பதிமூன்று வயது.. அம்மாவின் நினைவு வரும் போதெல்லாம் ரமண் வீட்டிற்கு ஓடி வந்துவிடுவான். ரமணின் மனைவி பானு அவனுக்கு பிடித்தது என பார்த்து செய்து எப்படியோ அவன் மனதை சற்று அந்த நினைவுகளிலிருந்து தூரமாய் அழைத்து வருவார். அதுவே அவனை கவலை என்று வந்தால் தானாகவே ரமண் வீட்டிற்கு அழைத்து வந்தது. கவிதாவிற்கு எட்டு வயது.. அவளுக்கும் பானு என்றாள் அளாதிப்பிரியம்.. பானுவிற்கும் தான். ஆனால் விதியோ என்னவோ இருவரும் சந்தித்ததே இல்லை. ஒரே வீட்டிற்கு இருவரும் ஆறுதல் தேடி வந்தாலும் இருவரையும் அறியாமல் இருவரும் அந்த வீட்டில் இருப்பது தான் அப்போது ஒருவருக்கொருவர் ஆறுதலாக இருந்ததோ என்று இப்போது ரமண் யோசிப்பது உண்டு.​

ஒருநாள் பானுவுடன் கதை அளந்து கொண்டே சாப்பிட்டுக்கொண்டிருந்த சஞ்சீவ் சட்டென அமைதியாகிட.. என்ன என்று கேட்கவும்..​

"இன்னைக்கு ஸ்கூல்ல எல்லாரும் பிடி பீரியட் அப்போ பாட்னர் ஆக சொன்னாங்க..என்கூட யாருமே வரல்ல.. எனக்கு ப்ரன்ஸ்னு யாருமே இல்ல ஆன்ட்டி.. அம்மா இருந்தாங்க அவங்களும் இப்போ இல்ல.." கூறிவிட்டு அவன் விசும்ப அவனை அணைத்து ஆறுதல் படுத்தினார் பானு.​

அந்த வழியாய் வந்த ரமண் கதவருகில் அழுகையில் உதடு துடிக்க நின்றிருந்த கவிதாவை கண்டதும்.."அச்சோ என்னடாம்மா.." என்று கேட்க..​

"அங்கிள்.. அந்த பையன்க்கு ப்ரன்ஸ் இல்லையாம்.. அம்மாகூட இல்லையாம்.. எனக்கு அது எப்படி கவலையா இருக்கும் தெரியும்.. ஆனா எனக்கு அவன் கூட ப்ரன்ட்டா இருக்கலாம்.. என்னை அவனுக்கு ப்ரன்ட்டாகி விடுங்க.." என்றாள் கவிதா.​

சஞ்சீவ் யாரையும் அவ்வளவு சீக்கிரமாக நண்பனாக ஏற்றுக்கொள்பவன் கிடையாது அதுவும் இப்போது மிகவும் ஒதுங்கியே இருப்பவன் ஏதாவது கவிதா சிறுபிள்ளை என்றும் பாராமல் பேசி விடுவான் என்று அறிந்ததால் அப்போதைக்கு அவளை சமாளிக்க.."அது முடியாதே.. அவன் கொஞ்சம் ஷை டைப்.. பொண்ணுங்க பாப்பாகிட்ட பேச மாட்டானே.." என்றார்.​

கொஞ்ச நேரம் யோசித்த கவிதா.. " ஐடியா..இன்னைக்கு எங்க மிஸ் பென் ப்ர்ன்ட் பத்தி சொன்னாங்க.. நான் வேணும்னா அவனுக்கு லெட்டர் எழுதி நல்ல ப்ரன்டா இருக்கேனே.." என்றாள்.​

அவள் அழகாய் பேசுவதை இரசித்த ரமண்.."நல்ல ஐடியா தான்.. ஆனா பெயர்க்கு என்ன பன்னலாம் ?" என்றார் அவளைப்போலவே.​

"ஹ்ம்.." யோசித்துவிட்டு.. "ஹர்ஷித்..அது எனக்கு ரொம்ப பிடிச்ச கதையில வார ராஜகுமாரனோட பெயர்.." என்றாள். அன்று அதை விளையாட்டாய் ஆரம்பிக்க நாளடைவில் அந்த நட்பு மிகவும் ஆழமாகி இருவரும் நெருக்கமாகி ஆறுதலாகவும் மாறியிருந்தனர். இதை பற்றி சஞ்சீவிடம் கூறக்கூடாது என கவிதா கூறியிருக்க எதேர்ச்சையாக அவர்களின் சந்திப்பின் போது கண்டிப்பாக விரைவில் அவனிடம் இதை கூறுவதாகவும் ரமணிடம் கூறியிருந்தாள் கவிதா.​

 
Top