எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

இதழோரமாய் சிறு புன்னகை - எபிலாக்

admin

Administrator
Staff member

(இந்த எபி கொஞ்சம் அப்படி இப்படி தான் இருக்கும்.. பிடிக்காதவங்க தயவு செஞ்சு படிக்காதீங்க... என்னடா இப்படி சொல்றான்னு நினைக்காதீங்க.பொங்கல் வாங்க விருப்பம் இல்லை )​

எபிலாக்...​

"வாவ் கேர்ள்..." சத்தமாக அழைத்தவனை சட்டெனத் திரும்பி முறைத்தான் அகரன். ,​

"ப்பே,..." என்று விட்டு மீண்டும் அக்னியை "வாவ் கேர்ள்... பசிக்குது..." வயிற்றை தடவிக் கொண்டே சிணுங்களாக அழைத்தான்.​

"டூ மினிட்ஸ் வந்துட்டேன்..." என்றவள் சொன்னது போலவே வந்தாள்​

தம்பியின் அழைப்பில்​

"அடேய்..." என்று பல்லைக் கடித்தவன் அவனை அடிக்க கையோங்கும் முன் "தம்பி..." என்று வந்தார் ஆதி.​

ஓங்கிய கையை இறக்கியவன்​

"சொல்லுங்கப்பா..." என்றான் அவனிடம் சிலதை கூறிவிட்டு உடனே எழுந்து சென்றுவிட்டார் ஆதி.​

தன் பெரியப்பாவிடம் நல்ல பிள்ளை போல் பேசும் அண்ணனை குறும்பாக பார்த்தவன்​

"மிஸ் வாவ் கேர்ள் இன்னைக்கு நிலா வந்து இருக்கான்னு கொஞ்சம் எட்டிப் பாருங்களேன்..." எனக் கூறினான்.​

அவனை புருவம் சுருங்க பார்த்தாலும் ஜன்னல் வழியே எக்கிப் பார்த்தாள். "அடடே அண்ணி..ஒரு நிலவே நிலாவை தேடுதே..." அபிநயத்தோடு கூறினான். அக்கணம் அக்னியின் இதழில் பட்டென மலர்ந்தது சிறு புன்னகை என்றால் அகரனின் இதழ்களில் பற்பல வார்த்தைகள் வெளிவந்தது... அரவிந்தை திட்டிக் கொண்டே, ஓங்கி அரவிந்தின் காலை மிதித்தான்.​

"ஐயோ..." காலை பிடித்துக் கொண்டப்படி"அண்ணி... உங்களை நிலான்னு சொன்னதுக்கு என்னை மிதிக்கிறான்..." சத்தமாக அக்னியிடம் கூறியவன் அகரனை பழித்துக் காட்டிவிட்டு கிச்சனை நோக்கி ஓடினாள்.​

"ஏங்க மாமா...அவன் நமக்கு குழந்தை போல.. அவன்ட என்ன சண்டை உங்களுக்கு..." இடுப்பில் கை வைத்து முறைப்பாக கேட்டாள்.​

அவளது தேவையே இல்லாத கேள்விnஅனைத்தையும் ஸ்கிப் செய்துவிட்டு "தயவு செஞ்சு மாமா, சோமான்னு கூப்பிடாத டி அகரான்னு பேர் சொல்லி கூப்பிடு..." என்றான் கடுப்பாக..​

அவனை நக்கலாக பார்த்தவள் "கல்யாணமாகி மூணே நாள்ல பேர் சொல்லி கூப்டறானு நாலு பேர் நாலு விதமா சொன்னா நல்லாவா இருக்கும்ங்க மாமா.. அதான் மாமான்னு கூப்டறேன்ங்க..." என்றாள்.​

இருவரின் நிச்சயதார்த்திலேயே அவளது அழைப்பை பார்த்து விட்டு கங்கா கண்டிப்போடு கூறிவிட்டார் அகரனை பேர் சொல்லியோ இல்லை ஒத்த வார்த்தையிலயோ அழைக்க கூடாது ' மாமா...' என்று தான் அழைக்க வேண்டும் என கூறிவிட்டார்... அவளுக்கும் அப்படி அழைத்தால் தான் என்னவென்று தோன்றியது.​

அப்போதில் இருந்தே அகரனை மாமா என்று அழைக்க பழகி கொண்டாள். ஆனால் அவனோ அவள் மாமா என்று அழைத்தால் தெறித்து ஓடினான். அவனுக்கு மாமா என்று அழைப்பது பிடிக்கவில்லையென தெரிந்ததில் இருந்தே அவனை சீண்டவே மாமா என்று அழைத்துக் கொண்டிருக்கிறாள்.​

அவளது சீண்டலைக் கண்டு கொண்டவன் அவளுக்கு மட்டுமே கேட்கும் குரலில் "மாமா மாமான்னு சொல்ற இந்த வாயை அகரா அகரான்னு சொல்ல வைக்கவா..." புருவத்தை உயர்த்தி கேட்டான்.​

அவனை புருவம் உயர்த்தி பார்த்தவள் இல்லாத காலரை தூக்கி விட்டபடி "பார்க்கலாம், கண்டிப்பா என் வாயால உங்க பேர் வராதுங்க மாமா..." என்றாள். அவளை குறும்பாக பார்த்தவன் "அதையும் பார்க்க தானே போறேன் ..." என்றவன் அவளது கன்னத்தை தட்டிவிட்டு அங்கிருந்து நக்ர்ந்தான். அடுத்த சில நிமிடங்களிலேயே​

"வாவ் கேர்ள், நான், அம்மா, அப்பா எல்லாம் மூவி பார்க்க போறோம் நைட் சோ..." ஆர்ப்பாட்டமாக கூறியவனை பார்த்து புன்னகை பூத்தாள்.​

இருவர் மட்டுமே தனிமையில் உறங்க வேண்டுமா? என்ற பயம் துளியும் அவளிடத்தில் இல்லை அதற்கு காரணம் அவளது கணவன் அல்லவா... திருமணம் முடிந்து இதோடு மூன்று நாட்கள் கடந்திறுந்தது.. இம்மூன்று நாட்களும் இருவருக்கும் பலமுறை தனிமை கிடைத்திருக்கிறது. இரவு சாங்கியத்திற்கு கூட ஏற்பாடு செய்திருந்தனர் அதெல்லாம் நடக்கும் போது நடக்கட்டும்.. இப்போதைக்கு எதுவும் வேண்டாம்..." என்று விட்டான்.​

ஒரே படுக்கையில், ஒரே தலையணையில், ஏன் ஒரே போர்வைக்கு மாறியும் அத்தனை கண்ணியம் காத்தான் அவளது கணவன். அதனாலேயே தங்கள் மட்டும் தான் என்ற எண்ணம் அவளுக்கு பயத்தையும் பதற்றத்தையும் துளியும் கொடுக்கவில்லை...​

"ம்மா, புவனு, எங்க கிட்ட ஒரு சாவி இருக்கு..சோ நீங்க வெயிட் பண்ணிட்டு இருக்காம ரூமுக்கு போயிடுங்க..." என்ற ராஜியிடம் சரியென்று தலையாட்டியவள் அனைத்து மின் விளக்குகளையும் அணைத்து விட்டு கார்டனுக்கு செல்லும் பின் கதவையும் அடைத்து விட்டு தங்களின்அறைக்குள் நுழைந்தாள். அவளது கணவன் நல்ல உறக்கத்தில்..​

அவனை பார்த்து கேலியாக சிரித்து வைத்தவள் "இவங்க என்னமோ எங்களுக்கு தனிமை கொடுக்கிறதா நினைச்சுட்டு படத்துக்கு போயிருக்காங்க... எனக்கு தானே தெரியும் நான் கட்டிகிட்டது மட்டி, ஒன்னுக்கும் தேறாதுன்னு..." மெல்லிய கூறியவள் டிரெஸ்ஸிங் ரூமிற்குள் நுழைந்து கொண்டாள்.​

இரவு உடையை கையில் எடுத்து வைத்துவிட்டு திரும்ப அகரன் மீது பலமாக மோதி நின்றாள். சற்றே தடுமாறியவள் நன்றாக நின்று "என்னங்க..." எனக் கேட்டாள்.​

"என்னமோ சொன்ன மாதிரி இருந்தது...சரியா கேட்கலை அதான் என்னனு கேட்க வந்தேன்..." நெருக்கமாக நின்று கேட்டவனை படபடக்கும் இதயத்தோடு பார்த்தாள்.​

தனது தடுமாற்றத்தை வெளிக் காட்டிக் கொள்ளாமல் "அது சும்மா தான்... நீங்க முதல்ல வெளிய போங்க..." அதட்டினாள்.​

"இல்லையே...ஏதோ மட்டி, இது தேறாதுன்னு சொன்ன மாதிரி இருந்துச்சே..." எனக் கேட்டவன் அவளை நெருங்கி நின்றான். இருவருக்கும் இடையே உள்ள தூரத்தைப் பார்த்தவள் "மாமா..." வார்த்தை வரவில்லை அவளுக்கு...​

இரண்டு எழுத்து தான் நொடிகள் தாண்டியும் திக்கியது அவளுக்கு.​

"பாருடா அக்னி பொண்ணுக்கு பேச்சே வரல..." அத்தனை மென்மையாக கேட்டான். அவனது குரலில் இருந்த ஏதோ ஒன்று இவளின் உள்ளங்கையை வியர்க்க செய்திருந்தது...​

"ம்... பேசு டி...என்னவோ முனகிட்டே இருந்த பேசு..." என்றதும் பதில் பேசாது அவனையே பார்த்தாள். இவனும் அவளையே இமைக்காது பார்த்தான். அவனது பார்வையில் உள்ளுக்குள் ஏதோ செய்தது.. அடிவயிற்றில் ஏதோ ஒன்று பறக்க, பெரு விரலை அழுத்தமாக தரையில் ஊன்றி கொண்டாள்.​

அவளின் உணர்வுகளை படித்தவனுக்கு மெல்லிய புன்னகையும், ரகசிய சிரிப்பும் வெளிவர அவளுக்கு தான் உணர்வுகள் எரிமலையாகி இருந்தது..​

அவளது உணர்வுகளை படித்தவனாய் வா என்பதை போல் கை விரிக்க மாட்டேன் என்பது போல் தலையாட்டி திரும்பி நின்று கொண்டாள். மெல்ல எட்டு வைத்து நடந்தவன் அவளை இழுத்து இடையோடு இறுக அணைத்து கொண்டான்.​

"அகரா சொல்லு புவி..." என்றதும் மாட்டேன் என்பது போல் தலையாட்டினாள். ஆண் மகனின் கையின் தீண்டலும், அதன் வேகமும் பெண்ணின் மேனியை நடுங்க செய்தது.​

"புவி..." என்று அழைத்து அழைத்தே அவளை அவன் வசத்திற்கு கொண்டு வந்திருந்தான்.​

"பிளீஸ்..." என்றவளுக்கு தன் இதழ் முத்தத்தை மட்டுமே பதிலாக கொடுத்தான்... அவனது வேகம் தாளாது திரும்பி அவனது மார்பில் முகம் புதைத்தவளை எப்பொழுது தூக்கினான். எப்பொழுது அவ்வறையிலிருந்து வெளிவந்தான், எப்பொழுது அவளை படுக்கையில் கிடத்தினான் என்பது அவனுக்கே வெளிச்சம்.​

மெல்லிய விளக்கின் வெளிச்சத்தில் பெண்ணின் முகத்தை பார்த்துக் கொண்டே, அவளை தன் மென்மையான ஆளுகையால் ஆக்கிரமித்தான். கூச்சத்தில் விலகிய பெண்மையை "விலகாத அக்னி பொண்ணே...' என்று பல ரகசிய பேச்சுகளை பேசியே அவளை சிவக்க வைத்தான்.​

மொட்டுக்களை திறக்கும் தென்றலை போல, மென்மையை காட்டிட இதோ அவன் எதிர்பார்த்தது "அகரா..." என்று அழைக்க வைத்து விட்டான்.​

"வாவ் கேர்ள்... ம்ம் என் பேரை சொல்லிட்டே இரு டி..." என்றவன் பல முறை அவளை அழைக்க வைத்துவிட்டே ஓய்ந்தான்...​

மெல்லிய சிணுங்களும், இருவரின் பிரத்யேக அழைப்பும், தவிப்பும் முத்த சத்தத்தோடு போர் புரிந்தது.​

காதலினால் மானுடர்க்குக் கலவி யுண்டாம்​

கலவியிலே மானுடர்க்குக் கவலை தீரும்;​

காதலினால் மானுடர்க்குக் கவிதை யுண்டாம்;​

கானமுண்டாம் சிற்பமுதற் கலைக ளுண்டாம்;​

ஆதலினால் காதல்செய்வீர்....​

********​

காலையில் கண் விழித்ததும்... உடலில் இருந்த அயர்வு அப்படியே இருக்க, தன்னை பூ போல் தாங்கிய ஆடவனை பார்த்தாள். அவனோ அங்கில்லாமல் இருக்க பார்வையை சுழல விட்டாள். அவன் அங்கில்லை என்றதும் பால்கனியை நாடிப் போனாள்...குளிர்ந்த காற்று அவளது மேனியை ஜில்லென்று மாற்ற அதனை அனுபவித்தப்படி நின்றவளின் பின்னால் வந்து நின்றான் அகரன்..​

"என்ன எம்ப்பட ஊட்டு அம்மணிக்கு குளிர் எடுக்குது போல..." எனக் கேட்டவன் அவளைப் பின்னால் இருந்து அணைத்துக் கொண்டான்.​

"அதான் அணைச்சாச்சே..." என்றவளின் முகம் முழுவதும் புன்னகை தான். அவளின் புன்னகையை பார்த்தவன் இதழின் ஓரத்தில் அழுத்தமாக முத்தமிட்டு இப்படி சிரிச்சிட்டே இருடி... பேரழகியா இருக்க..." என்றவனைப் பார்த்து வெட்கப் புன்னகை பூத்தாள்... அவளைப் பார்த்தபடியே​

"நீ என்னை பார்த்து அதிகம் சிரிக்க மாட்ட. அப்பெல்லாம் ஒரு பாட்டை என் மனசு ஹம் செய்யும்...அதைப் பாடிக் காட்டவா..." என்றதும் உனக்கு பாடத் தெரியுமா என்பது போல் விழிகளை உருட்டி பார்த்தாள். அவளது பார்வையில் இமை மூடித் திறந்தவன் மெல்ல அப்பாடலை பாடினான்...​

நீ கவிதைகளா கனவுகளா கயல்விழியே…​

நான் நிகழ்வதுவா கடந்ததுவா பதில் மொழியே…​

உன்னோடு நெஞ்சம் உறவாடும் வேளை…​

தண்ணீர் கமலம்தானா…​

முகம் காட்டு நீ முழு வெண்பனி…​

ஓடாதே நீ ஏன் எல்லையே…​

இதழோரமாய் சிறு புன்னகை…​

நீ காட்டடி என் முல்லையே…​

அவன் பாடி முடித்ததும் அவனை இறுக அணைத்து கொண்டவள் "நீ என்கூட இருக்கும் போது என் இதழ் ஓரமா சிரிப்பு இருந்துட்டு தான் இருக்கும் ஐ பிரமிஸ்..." தொண்டையை பிடித்து கூறியவளின் நெற்றியில் அழுத்தமாக முத்தமிட்டான்... அவனது இதழ் ஈரத்தை கண்களை மூடி உள் வாங்கிக் கொண்டாள் பெண்ணவள்.​

முற்றும்...​

ஆதரவு அளிக்கும் அனைவருக்கும் நன்றி... மறக்காம ரிவ்யூ பண்ணுங்க.. support பண்ணுங்க.. ஓட்டிங்ல என்னோடது vote பண்ணிடுங்க...​

 

Priyakutty

Active member
பாட்டு... 😍😍

அகரன், அக்னி... 😍

ஆரம்பத்துல அவர் பேச்சு செம்ம கடுப்பை கோபத்தை கொடுத்துச்சு... பட் அதை தூசி போல தட்டிவிட்ட அவங்க நிமிர்வு பிடிச்சது... ❤

லாஸ்ட்ல தப்பு எல்லாம் உணர்ந்து சாரி கேட்டு திருந்திட்டாரு. அவங்களும் மன்னிச்சு அவர் காதலை புரிஞ்சி ஏத்துகிட்டாங்க.... ❤

அவரை இன்னும் சுத்தல்ல விட்டுருந்தாலும் நல்லதான் இருந்துருக்கும்... எனிவே சேர்ந்துட்டாங்க... 😍

அரவிந்த் கியூட் 🤩💞

அவர் அப்பா அம்மா, அவங்க அம்மா... 🥰🥰

நைஸ் ஸ்டோரி dr... 😍

All the best for the competition 🤩💞
 
பாட்டு... 😍😍

அகரன், அக்னி... 😍

ஆரம்பத்துல அவர் பேச்சு செம்ம கடுப்பை கோபத்தை கொடுத்துச்சு... பட் அதை தூசி போல தட்டிவிட்ட அவங்க நிமிர்வு பிடிச்சது... ❤

லாஸ்ட்ல தப்பு எல்லாம் உணர்ந்து சாரி கேட்டு திருந்திட்டாரு. அவங்களும் மன்னிச்சு அவர் காதலை புரிஞ்சி ஏத்துகிட்டாங்க.... ❤

அவரை இன்னும் சுத்தல்ல விட்டுருந்தாலும் நல்லதான் இருந்துருக்கும்... எனிவே சேர்ந்துட்டாங்க... 😍

அரவிந்த் கியூட் 🤩💞

அவர் அப்பா அம்மா, அவங்க அம்மா... 🥰🥰

நைஸ் ஸ்டோரி dr... 😍

All the best for the competition 🤩💞
ரொம்ப ரொம்ப நன்றி டா
 
பாட்டு... 😍😍

அகரன், அக்னி... 😍

ஆரம்பத்துல அவர் பேச்சு செம்ம கடுப்பை கோபத்தை கொடுத்துச்சு... பட் அதை தூசி போல தட்டிவிட்ட அவங்க நிமிர்வு பிடிச்சது... ❤

லாஸ்ட்ல தப்பு எல்லாம் உணர்ந்து சாரி கேட்டு திருந்திட்டாரு. அவங்களும் மன்னிச்சு அவர் காதலை புரிஞ்சி ஏத்துகிட்டாங்க.... ❤

அவரை இன்னும் சுத்தல்ல விட்டுருந்தாலும் நல்லதான் இருந்துருக்கும்... எனிவே சேர்ந்துட்டாங்க... 😍

அரவிந்த் கியூட் 🤩💞

அவர் அப்பா அம்மா, அவங்க அம்மா... 🥰🥰

நைஸ் ஸ்டோரி dr... 😍

All the best for the competition 🤩💞
❤️❤️எனக்கு அவர் வாய்ஸ் பிடிக்கும்

❤️❤️❤️

அகர முழுக்க முழுக்க nagative மட்டுமே dr... இப்படியான பொண்ணுக்கு தங்க தட்டுல தாங்கிரா புருஷன் கிடைக்க மாட்டான்.. இப்படியும் வரலாம் யோசிச்சு எழுதின கதை தான் இது
விட்ருவோம் போட்டி முடியவும் எடிட் பண்ணிடலாம்
அரவிந்த்❤️🙈
தேங்க்ஸ்
ரொம்ப நன்றி டா
 

Eswari

Active member
Agaran maathiri nadaimuraila ñeraya paakkathaan seirom
Avangalukkum feelings vanthaa yeppdi erukkumnnu padikkirappo nallaathaan erukku ❣❣❣❣❣
Manasukku aaruthalaa wow girl vanthaan lovely boy 😘😘😘😘😘
Niraivaana mudivu. Vazhthukkal dear 👍👍👍👍👍
 
Agaran maathiri nadaimuraila ñeraya paakkathaan seirom
Avangalukkum feelings vanthaa yeppdi erukkumnnu padikkirappo nallaathaan erukku ❣❣❣❣❣
Manasukku aaruthalaa wow girl vanthaan lovely boy 😘😘😘😘😘
Niraivaana mudivu. Vazhthukkal dear 👍👍👍👍👍
ஈஸ் க்கா❤️❤️❤️❤️ இப்ப வரைக்கும் எவ்வளவு பெரிய பூஸ்ட் தெய்ர்யுமா நீங்க... கொஞ்சம் சோர்ந்து போனாலும் ஏதோ ஒரு மூலமா நீங்க எனக்கு ஆறுதல் சொல்ல வந்துடரீங்க. ரொம்ப ரொம்ப ரொம்ப நன்றி கா... Love you so much 😘🥰🥰🥰🥰 என் கதையை, நான் சொல்ல வந்ததை முழுசா புறிஞ்சுகிட்ட ஆளுல நீங்களும் ஒருத்தர்
 
Nice stry sis
ரொம்ப ரொம்ப நன்றி சகி.. ஓவ்வொரு எபியா படிச்சு படிச்சு சொல்றது பெரிய விஷயம் நீங்க படிச்ச்து மட்டுமல்ல விடமா கமெண்ட்டும் பண்ணிருந்தீங் ரொம்ப நன்றி...
 
ரொம்ப ரொம்ப நன்றி சகி.. ஓவ்வொரு எபியா படிச்சு படிச்சு சொல்றது பெரிய விஷயம் நீங்க படிச்ச்து மட்டுமல்ல விடமா கமெண்ட்டும் பண்ணிருந்தீங் ரொம்ப நன்றி...
எனக்கு ரிவ்யூ குடுக்க தெரியாது சிஸ் சோ commentachu panuvom எதோ என்னால் முடிஞ்சது
 
எனக்கு ரிவ்யூ குடுக்க தெரியாது சிஸ் சோ commentachu panuvom எதோ என்னால் முடிஞ்சது
U know what அக்கா... இதுவே பூஸ்ட் த்ரியுமா... படிக்கிறது மட்டுமில்லாமல் அதை அப்படியே சொல்றதெல்லாம் வேற லெவல்... அகாரணை திட்டிட்டே படிச்சீங்களா நான் ரொம்ப enjoy பண்ணேன்
 
Top