எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

மைனரு மனசுல மச்சினி

santhinagaraj

Well-known member
மைனரு மனசுல மச்சினி

விமர்சனம்

நல்ல ஒரு ஃபீல் குட் லவ் ஸ்டோரி

சோழமணி சங்கவி இரண்டு பேர் குடும்பமே குடும்ப பகை கொண்ட குடும்பம். ஆரம்பமே அடி தடியோடு இருக்கிறது

ரெண்டு குடும்பம் பகையிலை இருக்க சோழா சங்கவி இரண்டு பேரும் காதலிச்சு வீட்டுக்கு தெரியாம கல்யாணம் பண்ணி குடும்பம் நடத்தி ஏதோ ஒரு காரணத்தால பிரிஞ்சி இருக்காங்க?

சோழா சங்கவி இரண்டு குடும்பத்துக்கும் என்ன பகை ரெண்டு பேரும் ஏன் பிரிஞ்சாங்கன்றது மீதி கதை.

இரு உறவு முறை குடும்பத்துல நடக்குற சண்டையை ரொம்ப எதார்த்தமா கொண்டு போய் இருக்காங்க ரைட்டர்.

சோழா கவி காதல் ரொம்ப அருமையா இருந்தது கல்யாணமாகி ஒரே வீட்டில் குடும்பம் இருந்தாலும் தங்களோட குடும்ப சூழ்நிலையை புரிந்து இருவரும் கட்டுப்பாடோடு இருக்கும் அவங்களோட புரிதலான காதல் சூப்பர்👌👌👌

கவியோட அப்பா செய்ற தப்புக்கு அவரை தண்டிக்காம கவியிடம் சோழா நடந்து கொள்ளும் முறை கொஞ்சம் கூட ஏத்துக்க முடியல 😡😡

ஆரம்பம் அடிதடியோடு இருந்தாலும் முடிவு ரொம்ப சந்தோஷத்தோட நிறைவாய் இருந்தது.👌👌👌

வாழ்த்துக்கள் 💐💐💐
 
Last edited:
Top