எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

கானல் நீரில் காகித ஓடம்

santhinagaraj

Well-known member
கானல் நீரில் காகித ஓடம்

விமர்சனம்

நல்ல ஒரு ஜாலியான பேண்டஸி கதை.

ஆரம்பமே அதிரடியோடு விறுவிறுப்பாக ஆரம்பிக்கிறது. கதையோட நாயகி சைதன்யா சிவனின் நெற்றிக்கண் வடிவிலான ஒரு நீல நிற கல்லுடன் உயிரை கைல புடிச்சுகிட்டு நமது ஹீரோ அகத்தியனோட கார்ல வந்து விழுந்து அவனிடம் அந்த கல்லை ஒப்படைத்துவிட்டு மயங்கிடுறா அகத்தியனும் அவளோட ஃப்ரெண்ட் கார்த்திக்கும் அவளை காப்பாத்தி அகத்தியனோட வீட்டுக்கு கூட்டிட்டு வராங்க.

சைதன்யா கொடுத்த மேலாக்கல் என்ன ஏது என்று தெரியாமலே அதை பத்திரப்படுத்தி வைக்கிறான் அகத்தியன்.
இரவு அவ்வளவு காயங்களோட காப்பாத்தி கூட்டிட்டு வரேன் அவளின் உடம்பில் காலையில் ஒரு சின்ன கீறல் கூட இல்லாமல் மறைந்து விடுகிறது.

சைதன்யாவை துரத்திகிட்டு வந்த ரவுடிங்க யாரு? அந்த நீல நிற அதிசயங்கள் சைதன்யாவிடம் எப்படி கிடைத்தது?அகத்தியனுக்கும் சைதன்யாவுக்கும் என்ன சம்பந்தம்?
சைதன்யாவின் உடம்பில் இருந்து அவ்வளவு காயங்கள் எப்படி மறைந்தது? என்று கதையை ரொம்ப சுவாரஸ்யமாகவும் விறுவிறுப்பாகவும் கொண்டு போய் இருக்காங்க ரைட்டர்.

ரொம்ப பயத்தோட திகில் ஓட கதையை படிச்சுக்கிட்டு இருக்குறப்ப கார்த்திக் பயத்தில் அழுகும் சீன்கள் ரொம்ப ரசிக்கும்படியாய் இருந்தது.😂😂


இது எப்படி நடந்துச்சு அது என்னன்னு லாஜிக் எல்லாம் தேடகூடாது
ஏன்னா இது லாஜிக் எல்லாம் மேஜிக் கதை.

மந்திரம் தந்திரம்,சித்தர்கள் முன் ஜென்மம்னு கதையை ரொம்ப நல்லா கொண்டு போய் இருக்காங்க.

நிறைய காமெடியோட கொஞ்சம் காதல், நட்பு கலந்து கதை ரொம்ப அருமையா இருந்தது சூப்பர் 👌👌

வாழ்த்துக்கள் 💐💐
 
Top