எங்கள் தளத்தில் எழுத விரும்பும் எழுத்தாளர்கள் எங்களை கீழ் உள்ள மின்னஞ்சலில் தொடர்ப்புக்கொள்ளவும் நன்றி Email ID - narumugai.ink@gmail.com

அந்திவான செந்தூரமே.

santhinagaraj

Well-known member
அந்திவான செந்தூரமே

விமர்சனம்

கலகலப்பான நட்போடு கொஞ்சும் காதல் கலந்து சஸ்பென்ஸ் நிறைந்த ஒரு ஃபீல் குட் ஸ்டோரி.

வேணுகோபாலன் அக்ஷாதீப் ரெண்டு பேரும் நெருங்கிய நண்பர்கள் இருவரும் சேர்ந்து ஒரு மசாலா கம்பெனியை தொடங்கி அதனை வெற்றிகரமாக உயர் நிலையில் நடத்தி வருகின்றனர்.

அக்ஷதீப் வேணுகோபாலன் இருவருக்கிடையே பிரச்சனை வந்து இருவரும் பிரிந்து விடுகின்றனர் அந்த கம்பெனியை அந்திரன் எடுத்து நடத்துகிறான் ஆனா கம்பெனி முன்னே போல இல்லாமல் தரம் குறைந்து சரிவடைந்து இருக்கின்றது.

அதற்கான காரணம் என்னவென்று கண்டுபிடிப்பதற்காக தனக்கு நம்பகமானவர்களை வேலைக்கு அமர்த்தி கம்பெனியின் பிரச்சினைகளை கண்டுபிடித்து கம்பெனியின் தரத்தை உயர்த்த நினைக்கிறான்.

அக்ஷாதீப் வேணுகோபால் இருவருக்கும் என்ன பிரச்சனை? ஏன் பிரிந்தார்கள்? கம்பெனியில் என்ன பிரச்சனை? அந்திரன் கம்பெனியை சரி செய்தானா என்பது மீதி கதை.

புதையல் தோண்ட பூதம் கிளம்பின மாதிரி கதையை படிக்கப் படிக்க டெஸ்ட் மேல ட்விஸ்ட் வச்சிருக்காங்க ரைட்டர்.

ரம்ம,ஜின்னு, பீருன்னு நண்பர்களுக்கான பெயர்களும் அவர்களின் நட்பும் கலகலப்பு அருமை 👏👏

செந்தூரா கேரக்டர் நிஜமா ரொம்ப வியப்பா தான் இருந்துச்சு. ஆரம்பத்துல சோகமாவும் வீட்டில் உருவக்கேலி பண்றப்போ இருந்த மனநிலையையும் . அந்திரன் கம்பெனில வேலை செய்யும்போது காட்டும் புத்திசாலித்தனதையும் பாக்குறப்ப கொஞ்சம் சந்தேகம் வந்துச்சு அதுக்கான டேஸ்டே சரியா கொடுத்திருந்தாங்க ரைட்டர் 👌👌👌

எல்லா கேரக்டரையும் நல்லா வழி நடத்தி நிறைய ட்விஸ்டோட கதை ரொம்ப நிறைவா நல்லா இருந்தது சூப்பர்👌👌👌


வாழ்த்துக்கள்💐💐💐
 
Top